Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலாவோடு பேசும் படங்கள்....

Featured Replies

பேசும்படம் 1 :)

peesumpadam1pz0.jpg

  • Replies 124
  • Views 24.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாவ் ...........

சண்டை போடுபவர்களாக தெரியவில்லையே ? கொஞ்ச வேண்டும் போல இருக்கு .

தூங்கும் போது கொஞ்ச கூடாது என்பார்கள் .எழும்பியதும் என்னிடம் தருவீங்களா ?

கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் .அக்கா

நாளைய குழப்பங்களுக்காக...

இன்றைய குட்டித்தூக்கம்...

அழகுப்பூக்கள் அருகருகே..

ஏ... கதிரவனே...உதிக்காதே இன்னோர் விடியல் வேண்டாம்

தூங்கும் இவரை குழப்பாதே... மீண்டும் ஒருக்கால் உதிக்காதே

நாங்கள் இவரை ரசிப்பது உனக்கு தெரியாதா? ஆனாலும்,

இங்கே வந்து பார்க்காதே, ரசிப்பதற்காய் கூட

தாங்காதே என் மனம் இவர்கள் சண்டை போட்டால்

எனவே, உதிக்காதே... இன்னோர் விடியல் வேண்டாம்

Edited by Mallikai Vaasam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீயும் நானும்

சின்ன வயதில்

சண்டை போட்டது

நீயும் நானும்

சின்ன வயதில்

எதிரும் புதிரும்

உனக்கும் எனக்கும்

சின்ன வயதில்

இடைவெளி தூரம்

ஆனால்....

தூக்கம் வந்தால்

நீயும் நானும்

என்றும்

அருகருகே

சின்ன வயதில்....

ஆத்த ஓரம் பூத்த மரம்

ஆனை அடங்கும் மரம்

கிளை எல்லாம் கூடு கட்டி

கிளி அடையும் பூங்க மரம்

பூங்க மரத்தடியில்

பூ விழுந்த மணல் வெளியில்

பேன் பார்த்த சிறு வயசு

பெண்ணே நினைவிருக்கா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிந்தவரை பிரியாதிருப்போம்.

இந்த இருண்ட உலகை திறந்து பார்த்தால்

நாம் இலகுவில் பிரிந்துவிடுவோம்

எங்கள் கனவுலகில் நுழைந்திருந்தால்

எப்போதும் இப்படியே இருந்துவிடலாம்

ஆதலால்..

அன்பே...

முடிந்தவரை கண்களை மூடியபடியே இரு...!

எப்போதும் இப்படியே இருப்போம்...

மானிட எல்லைகளைத் தாண்டி

ஒளியின் வேகத்தில் எங்கள் பயணம் தொடர்வதால்

பருவமாற்றங்கள் எங்கள் உறவை என்றும் பாதிக்காது..

நிலாவோடு பேசும் படங்களா..!!.. :D

ம்ம்..நிலாவோடு எந்த மொழியில் பேசுவது எண்டு தெரிந்திருந்தால் நானும் பேசி இருப்பன்..தொடருங்கோ நிலா அக்கா படத்திலையாவது பேசுறதை கேட்போம்..நிலாவுடன்..!!. :lol:

அது சரி இப்ப எண்ட கற்பனை கழுதை ஓட தொடங்குது..(ஏசுறதில்ல சொல்லிட்டன் அக்கா)..!! :D

nila2da2.jpg

:wub::):D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

வாவ் ...........

சண்டை போடுபவர்களாக தெரியவில்லையே ? கொஞ்ச வேண்டும் போல இருக்கு .

தூங்கும் போது கொஞ்ச கூடாது என்பார்கள் .எழும்பியதும் என்னிடம் தருவீங்களா ?

கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் .அக்கா

:D அவர்களுக்கு கொஞ்சினால் பிடிக்காதாமே. என்ன செய்யலாம்? :wub:

அதுசரி ஆன்ரி ஏன் தூங்கும் குழந்தைகளை கொஞ்சம் கூடாது?

ஆனால் பலர் குழந்தைகளை ஏன் கணவன் மனைவி உவர்கள் கூட நித்திரையாக இருக்கும் கணவனையோ / மனைவியையோ கொஞ்சிக்கொள்கின்றனர் தானே, அதாவது ஒரு அன்பான முத்தம்.

ஏன் குழந்தைகளை கொஞ்சக்கூடாது என்கின்றனர் ஏதாவது காரணங்கள் உள்ளனவா? :)

Edited by வெண்ணிலா

அது வெண்ஸ் திருமணமே ஒரு தொற்றுநோய்தானே...

அதற்கு பிறகு கணவன் மனைவிக்கு என்ன பெரிசா வியாதி வந்துவிடப்போகிறது...

குழந்தைகளளுக்கு மென்மையான சரீரம்..ஏதாவது வியாதி...தோல் ஒவ்வாமை வந்துவிடும் என்றுதானாக்கும்...அலர்ஜி

  • தொடங்கியவர்

நிலாவோடு பேசும் படங்களாஇ பார்த்து பேசிய விகடகவி, மல்லிகை வாசம், சாரணி, பொன்னி, காயத்ரி ஆகியோருக்கு நன்றிகள்.

ஜம்முத்தம்பிக்கு எப்பவும் என் கூட லொள்ளு தான். அச்சோ நிலாவோடு பேச மொழி தெரியா? மெளனம் தான் நிலாவுக்கு புரியுமாம். ஒருக்கா முயற்சித்து பாருங்கோவன்.

அச்சோ தம்பி அக்கா அக்கா அந்த படத்தை தாங்கோ என கேட்ட போதே நினைச்சேன் என்னமோ மாட்டிவிட போறீங்க என.

பரவால்லை நிலாக்காவின் நினைப்பை உங்கள் கற்பனை குதிரை நன்னாகவே புரிஞ்சு வைச்சிருக்கு.

  • தொடங்கியவர்

அது வெண்ஸ் திருமணமே ஒரு தொற்றுநோய்தானே...

அதற்கு பிறகு கணவன் மனைவிக்கு என்ன பெரிசா வியாதி வந்துவிடப்போகிறது...

குழந்தைகளளுக்கு மென்மையான சரீரம்..ஏதாவது வியாதி...தோல் ஒவ்வாமை வந்துவிடும் என்றுதானாக்கும்...அலர்ஜி

முதலில் விகடகவி உங்கள் அவதாரை மாற்றிவிடுங்கோ :D

அட தொற்றுவியாதியா? நீங்கள் சொல்வதும் சரிதான் விகடகவி. ஆனால் நான் கேட்டது அது இல்லையே.

குழந்தைகளின் மென்மையான சரீரத்தில் முத்தமிட தோல் ஒவ்வாமை என்றால்...................அது ஏன் தூங்கும் குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்க கூடாது என்கிறார்கள்.? :)

நான் அறிந்தேன்................ தூங்கும் குழந்தையை முத்தமிட்டால் குழந்தை ஊமாஇயாகிப் போக வாய்ப்புள்ளது என. உது உண்மையா?

யாராவது தெரிந்த ஆட்கள்...............சொல்லுங்களன். :wub:

போர்வைக்குள்

தூங்கும்

இரு மலர்கள்

இங்கே கண்டேன்

போரோடு வேரோடு

அறுபடும் மலர்கள்

அங்கே கண்டேன்!

படைத்தவன்

விடையளிப்பானா?

பகுத்தறிவுக்கு விளங்கா

இவ் முரண்பாட்டுக்கு!

  • தொடங்கியவர்

கவிதைப்பகிர்வுக்க்கு நன்றிகள் கவிரூபன் :wub:

  • தொடங்கியவர்

பேசும்படம் 2 :wub:

pesumpadam2wo7.jpg

பசும் புல்வெளி இருந்தென்ன...

வீசும் தென்றல் இதம் தந்தென்ன...

வெண்புறாக்கள் சிறகடிக்கும் இசையென்ன...

பெண்புறாவே, பேரழகே... நீ இங்கிருக்கயிலே

இயற்கையின் எழிலை நயக்கத் தோன்றிடுமா? இந்தப்

பயலின் கண்கள் உன்னை விட்டு விலகிடுமா?? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் ....தாயகத்தில் இருந்து வீசிய காற்றுக்கு அவுசில் இருந்து பதில் வருகிறது , கவனம் .....கிளையை சொன்னேன் . விழுந்து விடாதீங்க .

காவலுடைத்து..

களவாடி வந்தவனே...

இளைய காதலனே...

இரவாகிறதே...

முதன்முறை பசி

உணர்கிறேனே...

அழைத்து வந்த முதல் நாளே

அழவிடுவாயாடா அன்பே...

பஞ்சணை தூங்கிய இளவரசி..

உனக்காய் பட்டமரத்தை

பாயாக்கி...உன்

அழகியைப் பார்க்கவேனும்...

வந்துவிடமாட்டாயா சீக்கிரமாய்?

சிறுக்கி மக பாவாடை சீக்கிரமா அவிருதேன்னு,

இறுக்கி முடி போட்டு எங்காத்த கட்டிவிட

பட்டு சிறு கயிறு பட்ட இடம் புண்ணாக

இடுப்பு தடத்தில் நீ எண்ணை வச்சா நினைவீருக்கா?

மருதாணி வைச்ச விரல் மடங்கமால் நான் இருக்க

நாசமான போன நடு முதுகு தான் அரிக்க

சுருக்காய் நீ ஓடி வந்து சொறிந்த கதை நினைவீருக்கா?

வைரமுத்துவின் தோழிமார் கதையிலிருந்து......

கவனம் ....தாயகத்தில் இருந்து வீசிய காற்றுக்கு அவுசில் இருந்து பதில் வருகிறது , கவனம் .....கிளையை சொன்னேன் . விழுந்து விடாதீங்க .

!!!!!!!!!!! :huh::(:D:mellow:

ஓ..மறுபடி நிலவு பேசி விட்டதோ..??.. :huh:

ஓ..எனக்கு தெரியுமே சொல்லட்டே நிலா..அக்கா..கா..(சரி சொல்லிட்டு போறன் பிறகு ஏசுறதில்ல அத்தோட நான் படம் போட்டு உங்க கவிதையை குழப்புறன் எண்டா சொல்லனும் என்ன அக்கா..கா..!!).. :mellow:

pesumpadam2bg3.jpg

அப்ப நான் வரட்டா!!

பெண்ணில உயிரே இல்லை போலிருக்கு....அதை முதலில்ல உறுதி செயுங்கோ.....பிறகு பாட்டு எழுதுவம்.

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் உள்ளங்கையில்

உறங்கிட நினைக்கிறேன்

உன்னைதேடி

பசுமையான புல்வெளியும்

அடர்ந்த காடும்

மனதுக்கு இதமளிக்க

என் மொனத்தை

இந்த புறாக்கூட்டம் கலைக்க

மரத்தில் சாய்கிறேன்

என் மன்னவனை தேடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் அவனுக்கே வெளிச்சம்….!

பல இளைஞர்களின் தூக்கம் கலைத்து

உன் இனம் செய்யும் பாவத்திற்கெல்லாம்

நீ மட்டும் ஏனிந்த

தூக்கத் தண்டனையை அனுபவிக்கின்றாய்?

தெரியலையே…..?

ஒரு வேளை முற்பிறப்பிலும் நீ

என்னைப் போல்

பெண்ணாய் தான் பிறந்திருந்தாயோ?

  • தொடங்கியவர்

கவனம் ....தாயகத்தில் இருந்து வீசிய காற்றுக்கு அவுசில் இருந்து பதில் வருகிறது , கவனம் .....கிளையை சொன்னேன் . விழுந்து விடாதீங்க .

என்ன கவனம்......?

நிலாமதி ஆன்ரி நீங்கள் தேவையற்ற விடயங்களுக்கு முடிச்சு போட்டு கதைக்க்கிறீங்க? தாயகத்தில் இருந்து வீசிய காற்றுக்கு அவுசில் இருந்து பதில் வருகிறது என்று சொன்ன உங்கள் வசனத்தை விளங்கிக்கொள்ளாமல் இருக்க நான் பேபி இல்லை ஓகே.

நீங்கள் எழுதுஇம் ஒரு பதிவுக்கு வேறோர் நாட்டில் இருந்து பதில் எழுதினால் உடனே தப்பாக நினைப்பியளா? ஏன் தான் இப்படி எல்லாம் சிந்திக்கிறியளோ புரியலை :mellow:

நிலாமதி ஆன்ரி நானும் எழுத வெளிக்கிட்டால் நிறைய எழுதுவேன். உங்களுக்கு மட்டும் தான் கதைக்க தெரியும் என்றூ நினைக்காதீங்க. நீங்கள் இப்படி கதைப்பதால் எனக்கும் பிரச்சினை வரலாம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் பிரச்சினை வரலாம். என்னை சார்ந்தோருக்கும் பிரச்சினை வரலாம். ஓகே

காமெடியாக பதில் எழுதுவது என்று நினைச்சு இப்படி எழுதுவது வீண்விவாதங்களுக்கு வழிகோலும் என்பதை தெரியப்படுத்துகின்றேன்....

கிளை முறியும் கவனம் என்று சொன்ன உங்கள் நக்கலுக்கு நன்றிகள் :huh:

Edited by வெண்ணிலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.