Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அக்டோபரில் கொடி ! - அரசியலுக்கு ரஜினி ரெடி ??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: ரோபோ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த கையோடு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் அனைவரையும் சந்திக்கிறார் ரஜினிகாந்த். வழக்கம் போல ஹேஷ்யமாக இல்லாமல், ரஜினி மன்றங்களின் தலைவர் சத்யநாராயணாவே இதை அறிவித்துள்ளதால் செய்திக்கு கூடுதல் முக்கியம் கிடைத்துள்ளது.

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு முதல் படியாக, தனது மன்றத்தின் அதிகாரப்பூர்வமான கொடியை அக்டோபர் சந்திப்பின்போது ரஜினி அறிவிக்க உள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஒவ்வொரு ரஜினி பட வெளியீட்டுக்கு முன்பும் பின்பும், அவை வென்றாலும் தோற்றாலும் தவறாமல் விவாதிக்கப்படும் விஷயம் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா...

வழக்கமாக இந்தக் கேள்வி படம் ரிலீசான சில வாரங்களில் கரைந்து போகும். கேள்விக்கு பதிலும் கிடைக்காது.

இந் நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் அனைவரையும் சந்திப்பதாகவும், அதற்குள் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மன்றத்தினரின் எண்ணிக்கை, குறித்த முழு விவரங்களையும் திரட்டி வைக்குமாறு ரஜினி கூறியுள்ளதாக இப்போது கிளப்பி விடுகிறார்கள்.

சினிமாவிலும் மேடைகளிலும் அரசியலுக்கு வரப் போவது மாதிரி பூடகமாகப் பேசிப் பேசியே தனது ரசிகர்களை எப்போதும் ஒரு ஆர்வத்தில் நிறுத்தி வைத்திருந்தார் ரஜினி. அவர் பேசாதபோது அவருக்கு மிக வேண்டிய சோ மாதிரியானவர்கள் ரஜினி அரசியலுக்கு வரனும், வருவார் என்று அவரைப் போலவே பேசுவதும், எழுதுவதும் வழக்கமாக இருந்து வந்தது. இதனால் இதோ வருவார்.. அதோ வருவார் என்று ரசிகர்களும் நம்பிக் கொண்டே இருந்தனர்.

ஆனால், ரஜினிக்குப் பின்னால் வந்த விஜயகாந்த் அதிகம் பேசாமல் நச்சென்று கட்சியை ஆரம்பித்து 8 சதவீத ஓட்டுகளையும் வாங்கிக் காட்ட ரஜினி ரசிகர்கள் பொறுமை இழந்தனர். அடுத்து சரத்குமாரும் அரசியலுக்கு வந்துவிட, ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நினைத்த அவரது ரசிகர்கள் மேலும் பொறுமையை இழந்தனர். அடுத்து சிரஞ்சீவியும் சொன்ன 6 மாதத்தில் அரசியலுக்கு வந்துவிட ரஜினி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் எரிச்சல்.

இந் நிலையில் குசேலன் படத்தில் தான் அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்பது போன்ற வசனங்களை வைத்திருந்தார். இது அவரது பல ஆண்டு கால தீவிர ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்ட

இப்ப இவர் மட்டும்தான் மிச்சம்... இவரும் வந்து நாறட்டும்.... சா, மன்னிக்கவும் நாத்தட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நாறுவாரா அல்லது நாத்துவாரா, கட்சி மாறுவாரா அல்லது ஆட்களை மாத்துவாரா அரசியலை விட்டு ஓடுவாரா அல்லது வேறேதாவது செய்வாரா எண்டிறதுக்குக் காலந்தான் பதில் சொல்ல வேணும்.

காசும் செல்வாக்குமிருந்தால் எல்லாரும் அடுத்த்தா என்ன செய்யலாமெண்டு யோசிக்கிறது வழக்கம். மேல் நாட்டில பில் கேட்ஸ் போல பெரிய பணக்கார ஆட்கள் சமூக சேவையில ஈடுபட்டுப் பணத்தை ஏழை எளியதுகளுக்குக் கொடுத்துப் புண்ணியம் தேடுறாங்க.

நம்மட நாட்டில சொந்தக் காசை அப்பிடியெல்லாம் செலவழிக்க ஏலாது. அரசியல் ஒண்டுதான் நம்மளயும் காப்பாத்திக் கொண்டு பிரச்சனையில்லாமப் போகக்கூடிய ஒரே பாதை.

அதை அவர் தெரிவு செய்திருக்கிறார். தமிழன்ர தலைவிதியை யாரால மாற்ற ஏலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் !

தமிழன் விடுதலை, விடுதலை என்கின்றான். ஆனால், தமிழன் என்றும் அந்நியனுக்குத்தான் அடிமை. தன்னைத்தானே ஆளும் திறமை அற்றவன். உன்னிப்பாக ஆராய்ந்தால், தமிழன், பிற மாநிலத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்குத்தான் ஆளும் பதவியைக் கொடுத்திருக்கின்றார்கள்.

அதிலும், ரஜனிகாந்த், கர்நாடகாவில் தமிழருக்கு எதிரான கட்சியில் அங்கம் வகித்து, தமிழரைத் துன்புறுத்தியவன். தனது தாய் மொழியில் கர்நாடகா மக்களிடம் மன்னிப்புக் கேட்டான். சினிமாவை நம்பி வாழும் தமிழக மக்களுக்கு யார் ஆண்டாலென்ன. இனத்துவேஷம் பிடித்தவனை ஆட்சிக்குக் கொண்டுவருவது தமிழனின் அதி முக்கிய முட்டாள்தனம். படிப்பறிவில்லாத ஒரு கூலி இன்று தமிழ் மக்களால் பல கோடிகளுக்கு அதிபதி.

இறுதியில், ரஜனிகாந்த்தின் ஆர்வப் பற்று எந்த மாநில மக்களுக்கு என்பது தமிழக மக்களுக்கு என்றுமே தெரியாமல் போய் விடும்.

“” சிந்தனை அற்ற செயல்கள் முட்டாள்தனம் !

செயலற்ற சிந்தனைகள் சோம்பேறித்தனம் ! “” அறிவுடையோர் கூற்று !

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

Edited by Sandilyan

அரசியலுக்கு ரஜினி வாரது லேட்.

இதை வச்சுதான் உழைத்த தன் பணத்தை காப்பாற்ற வேணும்.

அதுதான் இனி படத்தில நடிக்க முடியாத நேரத்தில் , மேடையிலாவது நடிக்க வர நினைக்கிறாரோ தெரியாது.

உழைத்த பணத்தை காக்க அரசியல் பலருக்கு ஒரு காவல் தெய்வம்.

அதைத் தவிர இவர் ஒன்றையும் செய்யப் போவதில்லை.

ஒரு காலத்தில் இவர் மேல் நம்பிக்கை இருந்தது. அது இல்லாமல் போய் விட்டது.

இனி வராது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மக்களே சிந்தயுங்கள்

1) உங்கள் தலையில் நீங்களே மண்ணைவாரி கொட்டப்போகிறீர்களா?

2) பிறமொழி தலைவன் ஒருவன் ஆறு கோடி தமிழ் மக்களுக்கு தேவையா ?

3) ரஜினி தலைவர் பதவிக்கு வந்தாலும்நீங்கள் கர்நாடகத்தோடு நெஞ்சை நிமிர்த்தி உங்கள் உரிமைகளை கேட்கமுடியுமா? அதற்கு பதவியில் இருக்கும் ரஜினி அனுமதிப்பாரா ?

4) தமிழர்களின் மேலும் தமிழ் மொழியிலும் ரஜினி பற்று உள்ளவரா?

5) ஈழத்தமிழர் பற்றியும் ஈழத்தமிழர் போராட்டம் பற்றியும் ஒரு கருத்தும் தெரிவிக்காத ஒருவர் நீங்கள் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் போது அதனை ஆதரிப்பாரா அல்லது உங்களை அடக்குவாரா ?

6) இவர் அரசியலுக்கு வருவதற்கு உண்மையான காரணம் மக்கள் நலன் மீது கொண்ட அக்கறையா ?

7) நீங்கள் அல்லல் படும் போது உங்கள் துயர் துடைக்க முன்வந்தவரா ?

8) கோடி கோடியாக பணத்தை உங்களிடம் இருந்து சம்பாதித்தாரே அதில் ஏழை மக்களுக்கு ஏதாவது உதவி செய்தாரா அப்படி செய்திருந்தால் அது எத்தனை விழுக்காடு அவரின் மொத்த சொத்தில்?

9) சினிமாவில் தலைவனாக இருக்கும் ஒருவரை தமிழகத்துக்கும் தலைவனாக அப்படியே ஏற்றுக்கொள்வது சரியானதா?

10) இன்னும் சினிமாவே உங்கள் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்றதா?

தமிழக மக்களே நீங்கள் ஒவ்வொருவரும் இந்த கேள்விகளை உங்கள் மனச்சாட்சியிடம் கேளுங்கள் சரியான விடை உங்களுக்கு கிடைக்கும்.மீண்டும் மீணடும் முட்டாள் ஆகாதீர்கள் சகோதரர்களே

சகோதரர்களே இந்த வள்ளுவனின் குறளையும் ஜாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

" தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால்

உயிர் வாழாமையும் மானம் எனப்படும் "

" தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால்

உயிர் வாழாமையும் மானம் எனப்படும் "

சும்மா போங்க சுப்பண்ணா :lol:

" ஒரு தரம் சொன்னா

நூறு தரம் சொன்ன மாதிரி"

வள்ளுவர் சொன்னது விளங்குதா? நடிகன் சொன்னது விளங்குதா?

பாமர மக்கள் விளங்கிற மாதிரி தமிழை இலகுவா கதைக்க நம்முடையவர்களும் முயல்வதில்லை.

வள்ளுவனையும் மிஞ்சியவர்கள் :o

உலககெல்லாம் வாழும் மக்களுக்கு விளங்க வேணும்

அதை யோசிப்பார்களா? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வள்ளுவர் சொன்னது விளங்குதா? நடிகன் சொன்னது விளங்குதா?

பாமர மக்கள் விளங்கிற மாதிரி தமிழை இலகுவா கதைக்க நம்முடையவர்களும் முயல்வதில்லை.

வள்ளுவனையும் மிஞ்சியவர்கள் :lol:

உலககெல்லாம் வாழும் மக்களுக்கு விளங்க வேணும்

அதை யோசிப்பார்களா? :o

இது விளங்கவில்லை என்றால் தற்போது வாழும் மக்கள் வெட்கப்படவேண்டும் ஏனேன்றால் வள்ளுவர் வாழ்ந்த காலத்திலே இருந்த மக்களுக்கு இந்த தமிழ் விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன் அக்காலத்தில் மொழியில் பெரிய அளவிலான கலப்படம் இருக்கவில்லை ஆனால் இக்காலத்தில் நாகரிகம் என்று மக்கள் எமது தமிழ் மொழியிலே பிறமொழிகளை கலந்து கதைப்பதால் இந்த வள்ளுவனின் தமிழ் இவர்களுக்கு புரியாமல் இருக்கலாம்.அதற்காக தூய தமிழில் எழுதியது வள்ளுவனின் தப்பு எனக்கொள்ளமுடியாது.

உண்மைதான். தப்பில்லை. நமது வயிற்று வலியை நமக்குள்ளே பேசிக் கொண்டோம்.அடுத்தவனுக்கு விளங்கவில்லை.

படித்தவர்களை விட படியாதவர்கள் உலகத்தில் அதிகம். இது ஒரு புறம்

புலம் பெயர்ந்த பிள்ளைகளிடம் ,உன் வயதென்ன என்று கேட்டால் பதில் வரும்.உன் அகவை என்ன என்று கேட்டால்? :o

ஊடகங்கள் கூட சில இலகு சொற்களை,கடுமையாக்கி அவர்கள் ஏதோ வள்ளுவன் என காட்ட முனைகிறார்கள்.

புலம் பெயர்ந்துள்ள குழந்தைகள் மூலமாவது ,எமது எண்ணங்கள் உலகத்துக்கு போய் சேர வேண்டும்.

சற்று மென்மையாகலாம். அவ்வளவுதான்.அதை தமிழ் மாநாட்டில் வைத்துக்கொள்ளலாம்?

இரு தமிழர்கள் , சிங்களவரிடம் தேசத்தை கொடுத்து பல்லக்கில் போனது போல,நாம் அதை செய்யக் கூடாது?

உங்கள் கருத்தை தவறென சொல்ல மாட்டேன். சரி. வள்ளுவர் சொல்வது பாமரனுக்கு புரியாது.

அது தெரிஞ்சா தமிழ் நாட்டு தமிழன்,வள்ளுவர் தலையில காக்கை உட்காரவிடமாட்டான்.ரஜினி தலையில உட்காரவைப்பான்.

நான் எப்ப வருவேன் . எப்படி வருவேன்.லேட்டா வந்தாலும் லேட்டசா வருவேனுக்கு ,கைதட்டி பால் அபிசேகம் செய்யிறானே? :lol:

கொடுமை ஐயா

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொன்னது சரி படித்தவர்களை விட படியாதவர்கள் உலகத்தில் அதிகம் ஆனால் தாய்மொழி என்பது படிப்பதால் (நான் படிப்பது என்று குறிப்பிடுவது குறித்த ஒரு உயர் கல்வித்தகமை ) மட்டும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது

பிறரோடு தூய தமிழில் உரையாடுவதன் மூலமே மொழியை வளர்த்துக்கொள்ளலாம் ஆனால் எம்மில் எத்தனைபேர் தூய தமிழ் வேண்டாம் ஆகக்குறைந்தது தமிழ் மொழியில் மட்டும் உரையாடுகிறோம்.?இல்லை மிகக்குறைவு எனலாம்.ஆனால் வைரமுத்து தூய தமிழில் உரையாடினால் அவரது தமிழையும் பேச்சு நடையை வைத்தும் நகைச்சுவை செய்வோம் தமிழன் எங்கே போகிறான் ? ஏன் இந்த மொழி புறக்கணிப்பு? இந்தியாவில் 80 விழுக்காடு (அண்ணளவாக ) மக்களும் இலங்கையில் 90 விழுக்காடு (அண்ணளவாக ) மக்களும் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் திறனை கொண்டுள்ளார்கள் ஆகவே அவர்களால் அவர்களது தாய்மொழியை அறிந்துகொள்ளமுடியும் ஆனால் பாமரன் கூட பிறமொழியை அறிவதில் ஆர்வமாக இருக்கின்றானே தவிர தாய்மொழியை அறிய விரும்பவில்லை.இன்று ஆங்கிலத்தில் கதைத்தால் தான் மரியாதையை அதை தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்துங்கள் தமிழர்களோடு உரையாடும் போது பிறமொழி சொற்களை தவிர்த்தோ அல்லது பிறமொழியிலோ உரையாடுவதை தவிருங்கள் அதற்காக மற்றவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை நீங்கள் உங்கள் தமிழ் மொழியில் உரையாடினீர்கள் என்று நினைத்து பெருமை கொள்ளுங்கள் சந்தோசப்படுங்கள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டிலே இன்று நடிகர்களுக்கு சங்கம் வைப்பது கேவலமானது உங்களால் தமிழுக்கு நல்ல பெயர் வரவிட்டாலும் எங்களுக்கு மூதாதையர் தந்த பாரம்பரியத்தையும் தமிழையும் அழித்துவிடாதீர்கள். எமக்கு இருக்கும் ஒரே ஒரு விலைமதிக்கமுடியாத சொத்து எமது தமிழ் மொழிதான் அது இல்லையேல் நாம் எல்லாம் நிர்வாணமாக நிற்பதற்கு சமனானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களே சிந்தயுங்கள்

1) உங்கள் தலையில் நீங்களே மண்ணைவாரி கொட்டப்போகிறீர்களா?

2) பிறமொழி தலைவன் ஒருவன் ஆறு கோடி தமிழ் மக்களுக்கு தேவையா ?

3) ரஜினி தலைவர் பதவிக்கு வந்தாலும்நீங்கள் கர்நாடகத்தோடு நெஞ்சை நிமிர்த்தி உங்கள் உரிமைகளை கேட்கமுடியுமா? அதற்கு பதவியில் இருக்கும் ரஜினி அனுமதிப்பாரா ?

4) தமிழர்களின் மேலும் தமிழ் மொழியிலும் ரஜினி பற்று உள்ளவரா?

5) ஈழத்தமிழர் பற்றியும் ஈழத்தமிழர் போராட்டம் பற்றியும் ஒரு கருத்தும் தெரிவிக்காத ஒருவர் நீங்கள் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் போது அதனை ஆதரிப்பாரா அல்லது உங்களை அடக்குவாரா ?

6) இவர் அரசியலுக்கு வருவதற்கு உண்மையான காரணம் மக்கள் நலன் மீது கொண்ட அக்கறையா ?

7) நீங்கள் அல்லல் படும் போது உங்கள் துயர் துடைக்க முன்வந்தவரா ?

8) கோடி கோடியாக பணத்தை உங்களிடம் இருந்து சம்பாதித்தாரே அதில் ஏழை மக்களுக்கு ஏதாவது உதவி செய்தாரா அப்படி செய்திருந்தால் அது எத்தனை விழுக்காடு அவரின் மொத்த சொத்தில்?

9) சினிமாவில் தலைவனாக இருக்கும் ஒருவரை தமிழகத்துக்கும் தலைவனாக அப்படியே ஏற்றுக்கொள்வது சரியானதா?

10) இன்னும் சினிமாவே உங்கள் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்றதா?

தமிழக மக்களே நீங்கள் ஒவ்வொருவரும் இந்த கேள்விகளை உங்கள் மனச்சாட்சியிடம் கேளுங்கள் சரியான விடை உங்களுக்கு கிடைக்கும்.மீண்டும் மீணடும் முட்டாள் ஆகாதீர்கள் சகோதரர்களே

சகோதரர்களே இந்த வள்ளுவனின் குறளையும் ஜாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

" தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால்

உயிர் வாழாமையும் மானம் எனப்படும் "

அருமையான , சிந்திக்க வேண்டிய கேள்விகள் சுப்பண்ணை . தமிழக மக்கள் சினிமா கவர்ச்சியிலிருந்து விடுபட்டால் தான் தமிழகத்துக்கு விடிவு .

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனியா? அரசியலுக்கா!!!

இன்னும் சிறிது நேரத்தில் கீரியுடன் பாம்பு சன்டை போடப் போகுது!!!!!! :lol::o

தமிழக மக்களே சிந்தயுங்கள்

1) உங்கள் தலையில் நீங்களே மண்ணைவாரி கொட்டப்போகிறீர்களா?

2) பிறமொழி தலைவன் ஒருவன் ஆறு கோடி தமிழ் மக்களுக்கு தேவையா ?

3) ரஜினி தலைவர் பதவிக்கு வந்தாலும்நீங்கள் கர்நாடகத்தோடு நெஞ்சை நிமிர்த்தி உங்கள் உரிமைகளை கேட்கமுடியுமா? அதற்கு பதவியில் இருக்கும் ரஜினி அனுமதிப்பாரா ?

4) தமிழர்களின் மேலும் தமிழ் மொழியிலும் ரஜினி பற்று உள்ளவரா?

5) ஈழத்தமிழர் பற்றியும் ஈழத்தமிழர் போராட்டம் பற்றியும் ஒரு கருத்தும் தெரிவிக்காத ஒருவர் நீங்கள் ஈழத்தமிழAர்களுக்காக குரல் கொடுக்கும் போது அதனை ஆதரிப்பாரா அல்லது உங்களை அடக்குவாரா ?

6) இவர் அரசியலுக்கு வருவதற்கு உண்மையான காரணம் மக்கள் நலன் மீது கொண்ட அக்கறையா ?

7) நீங்கள் அல்லல் படும் போது உங்கள் துயர் துடைக்க முன்வந்தவரா ?

8) கோடி கோடியாக பணத்தை உங்களிடம் இருந்து சம்பாதித்தாரே அதில் ஏழை மக்களுக்கு ஏதாவது உதவி செய்தாரா அப்படி செய்திருந்தால் அது எத்தனை விழுக்காடு அவரின் மொத்த சொத்தில்?

9) சினிமாவில் தலைவனாக இருக்கும் ஒருவரை தமிழகத்துக்கும் தலைவனாக அப்படியே ஏற்றுக்கொள்வது சரியானதா?

10) இன்னும் சினிமாவே உங்கள் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்றதா?

தமிழக மக்களே நீங்கள் ஒவ்வொருவரும் இந்த கேள்விகளை உங்கள் மனச்சாட்சியிடம் கேளுங்கள் சரியான விடை உங்களுக்கு கிடைக்கும்.மீண்டும் மீணடும் முட்டாள் ஆகாதீர்கள் சகோதரர்களே

சகோதரர்களே இந்த வள்ளுவனின் குறளையும் ஜாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

" தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால்

உயிர் வாழாமையும் மானம் எனப்படும் "

தமிழக மக்கள் சிந்திக்க வேண்டிய விடயங்கள்... இதை Poster அடிச்சு தமிழ் நாட்டின் தெருக்கு தெரு, மூலைக்கு மூலை ஒட்ட வேண்டும். முழு தமிழ் நாடே ரஜினி / சினிமா மாயையால் நாறிப்போய் இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்கள் சிந்திக்க வேண்டிய விடயங்கள்... இதை Poster அடிச்சு தமிழ் நாட்டின் தெருக்கு தெரு, மூலைக்கு மூலை ஒட்ட வேண்டும். முழு தமிழ் நாடே ரஜினி / சினிமா மாயையால் நாறிப்போய் இருக்கு...

திருந்தும் என்கிறீர்களா மல்லிகை வாசம் , திருந்தவே மாட்டாதுகள் :lol:

திரும்பவும் சொல்கிறேன் தோல் காட்டும் சினிமாவும் ,நாத்தம் புடிச்ச அரசியலும் இல்லாட்டி

காக்கா கொத்தி இழுக்கும் ................................ :o:D

எங்க சிலை வைக்கலாம் எங்க பால் வாக்கலாம் என்று திரியிற கூட்டத்திற்கு விளங்குமா என்ன? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சினிமா அரசியல் வாதிகளை வளர்த்துக் கொண்டே போகிறதே

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சினிமா அரசியல் வாதிகளை வளர்த்துக் கொண்டே போகிறதே

சின்ன திருத்தம் கறுப்பி இந்திய அரசியல் ....சினிமாக் காரர்களை வளர்த்துக்கொண்டே போகிறார் :lol::o

ஆட்டையே காணோம் எதுக்கு அவசரப்பட்டு ........ அறுக்கிறீங்கள். :lol:

ஆட்டையே காணோம் எதுக்கு அவசரப்பட்டு ........ அறுக்கிறீங்கள். :lol:

ஆட்டையே கானேலையோ?...

ஆடுவந்து அதை முன்னமே அறுத்துக்குகொண்டும் போட்டாங்கள்.... இப்ப நடக்கிற சண்டை தோலுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மக்களே சிந்தயுங்கள்

1) உங்கள் தலையில் நீங்களே மண்ணைவாரி கொட்டப்போகிறீர்களா?

2) பிறமொழி தலைவன் ஒருவன் ஆறு கோடி தமிழ் மக்களுக்கு தேவையா ?

3) ரஜினி தலைவர் பதவிக்கு வந்தாலும்நீங்கள் கர்நாடகத்தோடு நெஞ்சை நிமிர்த்தி உங்கள் உரிமைகளை கேட்கமுடியுமா? அதற்கு பதவியில் இருக்கும் ரஜினி அனுமதிப்பாரா ?

4) தமிழர்களின் மேலும் தமிழ் மொழியிலும் ரஜினி பற்று உள்ளவரா?

5) ஈழத்தமிழர் பற்றியும் ஈழத்தமிழர் போராட்டம் பற்றியும் ஒரு கருத்தும் தெரிவிக்காத ஒருவர் நீங்கள் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் போது அதனை ஆதரிப்பாரா அல்லது உங்களை அடக்குவாரா ?

6) இவர் அரசியலுக்கு வருவதற்கு உண்மையான காரணம் மக்கள் நலன் மீது கொண்ட அக்கறையா ?

7) நீங்கள் அல்லல் படும் போது உங்கள் துயர் துடைக்க முன்வந்தவரா ?

8) கோடி கோடியாக பணத்தை உங்களிடம் இருந்து சம்பாதித்தாரே அதில் ஏழை மக்களுக்கு ஏதாவது உதவி செய்தாரா அப்படி செய்திருந்தால் அது எத்தனை விழுக்காடு அவரின் மொத்த சொத்தில்?

9) சினிமாவில் தலைவனாக இருக்கும் ஒருவரை தமிழகத்துக்கும் தலைவனாக அப்படியே ஏற்றுக்கொள்வது சரியானதா?

10) இன்னும் சினிமாவே உங்கள் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்றதா?

தமிழக மக்களே நீங்கள் ஒவ்வொருவரும் இந்த கேள்விகளை உங்கள் மனச்சாட்சியிடம் கேளுங்கள் சரியான விடை உங்களுக்கு கிடைக்கும்.மீண்டும் மீணடும் முட்டாள் ஆகாதீர்கள் சகோதரர்களே

சகோதரர்களே இந்த வள்ளுவனின் குறளையும் ஜாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

" தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால்

உயிர் வாழாமையும் மானம் எனப்படும் "

வணக்கம் சுப்பண்ணை

தங்களைபோல தமிழக மக்கள் சிந்தித்தால், இன்று ஈழத்து தமிழர் அல்லப்படுவார்களா?. இல்லையெனில் வாரத்துக்கு வாரம் தமிழகத்தினில் சாலைப்போரட்டங்களும், உண்ணா விரதங்களும், மற்றய போராட்டங்களும் நடக்குமா?. பாமர மக்கள் உழைக்கின்றார்களோ தெரியவில்லை, ஆனால், போராட்டங்களில் கலந்து பணம் சம்பாதிக்கின்றார்கள்.

தங்களுடைய பத்துக் கேள்விகளையும் பத்து வேத வாக்குகளென்று கூறலாம். தமிழக மக்கள் சினிமாவைப் பார்த்து உண்மையென்று நம்புகின்ற மந்தைக்கூட்டம். தங்களுடைய கேள்விகளுக்கு விடை தேடிய பாதையில் தமிழக மக்கள் சிந்திக்கட்டும்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

  • கருத்துக்கள உறவுகள்

களுதை கெட்டா குட்டிச்சுவர் ரஜினி என்ன விதி விலக்கா? சினிமா சரியாவராவிட்டால் இருக்கவே இருக்கு அரசியல், சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அவர் சுப்பர் ஸ்டார் தான் எப்பிடி எண்டு கேக்கிறியளா?

தமிழக அரசியலில் சேடப்பட்டி முத்தையா எண்டு ஒருத்தர் காலில் விழுந்து பேரெடுத்தவர் இவர் அதில சாதனை படைப்பார் பாருங்கோ,

" நக்கிற மாடுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன?"

பாவம் தமிழர்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் ஒரு அழுகிய சாக்கடை. அதில் நல்லவர் நுழைந்தாலும் இறுதியில் நாறடித்து விடுவார்கள். ரஜனியை போல் தலைமத்துவம் அற்றவர்களும் கொள்கையில் உறுதியற்றவர்களும் மற்றவர்களின் பேச்சுக்கு தலையசைக்கும் சுய அறிவு இல்லாதவர்களும் அரசியலில் முன்னேற முடியாது.ரஜனி பேசாமல் படம் நடிப்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது. ஆயினும் தமிழக மக்கள் ரஜனி அரசியலுக்கு வருவதை தான் விரும்புகிறார்கள் போலுள்ளது. திருந்த மாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.