Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது சரியோ..??..தவறோ..??

ஜம்முபேபியின் சந்தேகம்.!! 14 members have voted

  1. 1. இது சரியோ..??..தவறோ..??

    • சரி
      8
    • தவறு
      6
  2. 2. உங்களுக்கு இவ்வித அனுபவம் உண்டா..??

    • ஆம்.
      5
    • இல்லை.
      9

Please sign in or register to vote in this poll.

Featured Replies

இது சரியோ..??..தவறோ..??

recchatimdi3.gif

எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) :lol: ..மறுபடியும் வந்திட்டானே எண்டு கனக்க நீங்க யோசிக்கிறது விளங்குது கனக்க யோசிக்காதையுங்கோ என்ன..சரி நாங்கள் விசயதிகுள்ள போவோம் என்ன...!!

அது பெரிசா ஒண்டுமில்ல பாருங்கோ இப்ப இணைய வழி மூலம் அரட்டை அது தான் "சட்" எண்டு வேற சொல்லுவீனம் பாருங்கோ இப்ப கந்தப்பு தாத்தா போன்ற பெரிசுகளிள இருந்து சுண்டல் அண்ணா போன்ற இளையவர்கள் முதல் ஒரு தொற்று வியாதி.. :rolleyes:

இதுக்கா நான் என்னவோ "சட்" பண்ணுறதில்ல எண்டு நீங்க நெனைக்க கூடாது..அதுக்கா இணைய வழி மூல அரட்டையை நான் தவறு எண்டு சொல்லவில்லை ஏன் எனில்..குறிப்பாக பொழுதுபோக மற்றும் நண்பர்களுடன் தொடர்பு வைத்திருப்பதிற்கு ஏன் சில வேளை படிப்பு சம்பந்தமான விடயங்களை கூற பரிமாறி கொள்வதிற்கு பயன்படுத்த தான் செய்கிறோம்.

அப்படி பார்கையில் அது பிரயோசனமாக தான் இருக்கிறது..ஆனால்...ல் இதன் மூலம் சில பிரச்சினைகளும் தோற்றம் பெருகின்றன..அதை பத்தி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்ன.. :o

சரி அதை எல்லாம் விடுவோம்..!!

அன்னைக்கு இப்படி தான் எனக்கு பொழுது போகல்ல யார் கூடவும் கடலை போடுவோம் எண்டு உள் நுழைந்தால் யாரும் என் கூட கடலை போடுற மாதிரி இல்ல என்ன செய்யிறது எண்டு யோசிக்கக்க ஒரு நண்பன் வந்தான் அப்பாடா ஒருத்தன் கிடைத்திட்டான் இவனோடையாவது கடலை போடுவோம் எண்டு "எப்படி மச்சி" எண்டு அவனிட்ட கேட்க அவர் சொல்லுறார் "பிசியாம்"..

எனக்கு சரியான கோபம் என்ன செய்யிறது எண்டு போட்டு..என்ன "பிசி" இங்க இருந்து ஏதாச்சும் "பிசினஸ் டீலா" பண்ண போறாய்..கடலை தானே போட போறாய் இதில என்ன "பிசி" வேண்டி கிடக்கும் :( எண்டு நான் கேட்க அவனுக்கு கோபம் வந்திட்டு அல்லோ..

உடன அவன் இருடா கொஞ்ச நேரம் வாரன் எண்டு போயிட்டான்..எனக்கும் அன்னைக்கு பொழுது போகாதபடியா படிக்கிற புத்தகத்தை தூக்கி பார்த்தனான் நன்னா தான் இருந்தது புத்தகம். கொஞ்சத்தால் அந்த நண்பன் வந்து கூப்பிட்டான்.உடன நான் யோசித்தன் நான் கூப்பிடக்க உவர் வரல்ல இப்ப நான் போகனுமோ எண்டு யோசித்திட்டு பிறகு வெளியாள வேற மழையா இருக்கு ஒண்டும் செய்ய ஏலாது தானே எண்டிட்டு பதிலிற்கு நானும் பதில் அனுப்பினென் உடனே அவர் "சொறிடா" எண்டான்.

நானும் பரவால்ல என்ன செய்தனீங்க எண்டு கேட்க அவன் சொன்னான் ஒருவா கூட கதைத்து கொண்டு இருந்தனான் அது தான் எண்டு இழுத்தான்..உடன நான் சொன்னன் சரி போய் கதைத்திட்டு வா பிறகு இதில இருந்து என்னை திட்டி திட்டி கதைக்காதே எண்டு..

பரவால்ல அவா போயிட்டா பிள்ளை அழுததாம் எண்டு எனி பெறகு தான் வருவா எண்டு சொல்ல..நானும் "ஓ அப்படியா" உங்களின்ட சொந்தகார ஆட்களா எண்டு விசாரிக்க..(விடுப்பு கேட்கிறது எண்டா எனக்கு சரியான விருப்பம் கேட்டிட்டு யாழில வந்து எழுதுறது எண்டா அதை விட விருப்பம் எனக்கு).. :rolleyes:

சா..சா இப்படி தான் அரட்டையில சந்தித்தது இவாவிற்கு காலையில வேலையாம் புருசனிற்கு இரவில வேலையாம் அப்ப இரவில பொழுதுபோகாட்டி இங்க வந்து அரட்டை அடிக்கிறவா எண்டு அவன் சொல்ல..

என்னடா இது புது கதையா இருக்கு..(அவ்வளவு நேரமும் சோர்வா இருந்தா நம்ம மனசு உடன பழையபடி உசார் நிலைக்கு வந்திட்டு எண்டா பாருங்கோவன்)..

நானும் "ஓ அப்படியா"..இப்படி தெரியாத ஆட்களோட அதுவும் கல்யாணம் கட்டினவா கூட எல்லாம் கடலை போடுறது தப்பில்லையா :lol: எண்டு கேட்க அவன் என்னை ஏச தொடங்கிட்டான்..உங்க மாதிரி ஆட்களுக்கு எப்பவுமே எல்லாம் தப்பா தான் படும் எண்டு எல்லாம்..

அவன் ஏசிட்டான் எண்டு நான் வருத்தபட எல்லாம் இல்ல நாம வாழ்க்கையில வாங்காத ஏச்சா என்ன இது எல்லாம் எங்களுக்கு சகஜம்.

ஆனாலும் எனக்குள் பல கேள்விகள் இவ்வாறு செய்கிறது சரியா..??..இல்லாட்டி தவறா..??..மேலைதேய கலாச்சார ஆட்களும் இது சரியாக இருக்கும் ஆனால் எங்க கலாச்சாரதிற்கு சரிபடுமா எண்டு யோசித்தாலும் பிறகு எங்கன்ட சாந்தி அக்கா வந்து என்னை ஏசிட்டாலும் எண்டு.. :D (சாந்தி அக்கா சும்மா பகிடிக்கு)..

மற்ற கோணத்தையும் யோசித்து பார்த்தன்..!!

அந்த கோணத்தில் இருந்து உற்று நோக்கும் போது..எப்பவுமே அடுப்பங்கரையில் பெண்கள் இருக்க கூடாது எண்டு "சட் அறை பக்கம்" வந்தீட்டீனமோ எண்டு யோசிகக்க அதுவும் எனக்கு சரியா இருந்தது..இப்படியே நானே குழம்பிட்டன் மற்ற நாட்களிள் நான் தான் மற்றவைய குழப்புவேன் இது "சிட்னிக்கே வந்த சோதனையா போச்சு"..

உடன என் நண்பனிட்ட இருந்து விடை பெற்று கொண்டு..லோகத்தில இப்படி எல்லாம் நடக்குமா..??..இதில பிழை சொல்ல கூடிய மாதிரியும் இல்லை ஆனா பிழையாகவும் தெரிகிற மாதிரி ஒரு தோற்றம்..அப்படியே யோசித்து கொண்டு நித்திரையா போயிட்டன்..

இந்த சம்பவதிற்கு விடை என்னும் எனக்கு தெரியவில்லை..அது தான் இந்த கேள்விக்கான விடையை நீங்களே சொல்லுங்கோவன் அதுக்காக ஆண்கள் எல்லாரும் நல்லவை எண்டு சொல்லல்ல உவையள் வேலைக்கு போய் அங்க இருந்து கடலை போடுறதும் எனக்கு தெரியும்..ம்..!! :)

ஆனபடியா ஜம்மு பேபிக்கு ஏற்பட்டிருக்கு இந்த சந்தேக பசியை நீங்க தான் தீர்த்து வைக்கனும்..பிறகு ஒருத்தரும் என்னை திட்டி தீர்த்து வைக்கிறதில்ல சொல்லிட்டன்..உங்களுக்கு இப்படியான அனுபவங்கள் நிகழ்ந்திருக்கலாம் ஆனா எனக்கு இப்படியான அனுபவங்கள் நிகழவில்லை..அது தான் இந்த அனுபவத்தை கேட்டதும் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் ஆனா இப்படியான அனுபவங்கள் சுண்டல் அண்ணாவிற்கு ஏற்பட்டிருக்கலாம் பாருங்கோ.. :o

சரி..எண்ட ஆள் கடலை போட காத்திட்டு இருப்பா அப்ப நானும் போயிற்றுவரட்டே..நீங்களும் உங்க ஆட்களோட கடலை போட்டிட்டு எண்ட சந்தேகத்தையும் தீர்த்து வையுங்கோ என்ன..! :D !

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

:lol::o:rolleyes::rolleyes::lol::o இதை வாசித்ததும் என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியலை.

இப்ப சிரிக்கிறன் ஆறுதலா கருத்தோடு வாறன் என. (இப்ப கடலை போடணும்) :)

  • கருத்துக்கள உறவுகள்

இதில சில விசயங்களை நாங்க ஆராய்வது நல்லம்.

அண்மையில் கூட ஒரு ஆய்வில்.. ஆண் - பெண் இனக்கவர்ச்சி என்பது.. கண்ணால் பார்ப்பதிலும்.. அவர்களிடையேயான நெருக்கத்தின் போதும் அதிகம் உருவாவதாகவும்.. கடலை போடுவதால் இல்லை என்றும் அமைகிறது.

முதலில் நான் பெட்டைகள் கூட கலியாணம் கட்டின பொண்டுகள் கூட எல்லாம் கடலைக்கு போறதில்லை என்றதைச் சொல்லிட்டு.. (பெட்டைகள் கூட சட் பண்ணி இருக்கன்.. ஆனால் தினமும் கடலை போடுறது என்றது கிடையா..! நானா போய் ஐடி வாங்கி.. கதைக்கிற பழக்கம் எல்லாம் கிடையா. அவையா அட் பண்ணினா.. பொதுவா எல்லா மனிசரோடும் கதைக்கிறது போல கதைப்பன்.)

பெண்களோட, ஆண்களோட சாட் என்று வரும் போது அதில இரண்டு விதமான வகைகள் இருக்குது..

1. பொதுவான நாகரிமான சாட்.

2. ஆபாசமான.. பாலியல் குரோதம்.. காதல் போன்ற பாலியல் சம்பந்தப்பட்ட சாட்.

இதில் இரு பாலாரும் ஈடுபடுகின்றனர்.ஒப்பீட்டு ரீதியில் வகை இரண்டில் ஈடுபடுபவர்களே இணைய உலகில் அதிகம்.

எனவே சாட் பண்ணினம் என்றதை வைச்சு சந்தேகிக்கினம்.. என்ற பார்வை தவறு. ஏனெனில் அங்க சந்தேகிக்க போதிய இடமிருக்குது.அந்த இடத்தில் சந்தேகித்தே ஆக வேண்டும். அதில் தவறில்லை. சந்தேகம் என்று சொல்லிக் கொள்வதிலும்.. சந்தேகிக்கப்படும் விடயத்தை தாமே முன் வந்து தெளிவுபடுத்திக் கொள்வது சிறப்பு..!

அண்மையில் எனக்கு நடந்த அனுபவத்தைச் சொல்லுறன்..

நான் ஒருவருடன் பொதுவாக கதைத்துக் கொண்டிருக்கும் போது.. திடீர் என்று அவர் "ஓவ் லைன்" என்றிட்டுப் போயிட்டார். சரி அவன் போயிட்டான் என்றிட்டு.. நான் மெயில் செக் பண்ண இன்னொரு எக்கவுண்டுக்குப் போனன். அங்க பார்த்தால் அந்தப் படுபாவி ஒன் லைன் என்று காட்டுது. என்னடா செய்யுறா.. ஏன் என்னை புளக் பண்ணினி என்று கேட்க அப்படி செய்யல்லையே.. அது தானா நின்றிருக்கும்.. ஏதோ பிழை போல என்று சொன்னான். எனக்கு பிழையோ புளக்கோ என்று தெரியல்ல.

சாட்டில ஆக்களை நம்பி பலர் ஏமாந்திருக்கினம். ஏன் ஏமாற்றிறதுக்கு ஒரு நல்ல மார்க்கம் சாட் என்று இருக்கும் போது.. சந்தேகப்படுவது தவிர்க்க முடியாதது. ஒரு வகையில் அது நம்பிக்கையை வளர்ப்பதற்கு.. உங்களைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்றே கொள்ள வேண்டும்.

கலியாணம் கட்டினா என்ன கட்டா விட்டால் என்ன மனிசருக்கு உணர்ச்சி என்பது இருக்கும் வரை.. பாதகமான காரியங்கள் நடக்கலாம். அதற்கு இடமளிக்காத வகையில எல்லோரும் நடந்துக்குவினம் என்றில்லை. தேவையைப் பொறுத்து அவர்களின் அணுகுமுறைகள் இருக்கும். மாறுபடும். எனவே நாம் தான் அவதானமாக இருக்க வேண்டும். ஜம்மு பேபியின் சந்தேகம் நியாயமானதே. சந்தேகிப்பது தவறல்ல. இந்தச் சூழ்நிலையில் அது அவசியம். ஏமாற்றங்களை தவிர்ப்பதற்கு.. மிக முக்கியம்..! அதை புரிந்து கொள்ளத் தவறுபவர்கள்.. ஏதோ தவறு செய்ய முற்படுகிறார்கள் என்பதே அர்த்தமாக்கப்படும்.. என்பதை தெரிந்து கொள்வது நல்லம்..! :lol:

Edited by nedukkalapoovan

இது சரியோ..??..தவறோ..??

ஆம்.

இல்லை

என்ன கேள்வி??? விடை ஆம் என்றால்....சரிக்கோ..?? தவறுக்கோ..??

லொயிக் இல்லாத கேள்வி..

Edited by Kuddi thampi

உலகத்தில எது சரி, எது தவறு என்று பொதுவான ஒரு கருத்தை எட்டுவது கடினம் தான். ஒருவருக்கு சரி என படுவது மற்றவருக்கு பிழை என தோன்றும். அல்லது, ஒரு காலத்தில் சரி என கருதப்பட்ட கருத்துகள், பின்னர் ஒரு காலத்தில் பிழையாக கருதப்படும் அல்லது பிழை என முடக்கி வைத்திருக்கப்பட்டவை எல்லாம், பின்னர் தலை நிமிர்ந்து நடமாடும்.

அது போலவே கலாசாரத்துக்கு கலாசாரமும் ஒரு நடத்தையின் சரி பிழைத்தன்மை மாறுபடும். எனவே காலத்துக்கும், இடத்துக்கும் தகுந்த, மற்றவர்களை புண்படுத்தாத அல்லது மற்றவரின் சுதந்திரத்தில் தலையிடாத எந்த ஒரு நடத்தை / கருத்து தான் சரியான கருத்து என எண்ணத்த் தோன்றுகிறது. அதைத்தான் நாங்கள் நாகரீகம் / கலாசாரம் என்று வரையறுப்பது நல்லது.

என்னை பொறுத்தவரை, Chat ல் சில நண்பிகளுடன் பழகும் போது உண்மையான ஆண் - பெண் நட்பை பற்றி, அதன் உன்னதம் பற்றி உணர்ந்துகொண்டேன். இவ்வாறே இந்த தூய்மையான நட்பு திருமணத்தின் பின்பும் தூய்மையாக தொடர்ந்தால் தவறில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

தவறு செய்யவேண்டும் என்ற என்னத்துடன் சாட் பண்ணுபவர்களை தடுக்க முடியாது.

தவறகெப் போகமாட்டம் என்ற நம்பிக்கையில் எதிர்பாலருடன் சாட்பண்ண ஆரம்பித்து பின்சந்தர்ப்பம் நேரும்போது அல்லது சந்தர்ப்பம் உண்டாக்கித் தவறு செய்பவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் அல்லது அதிர்ஸ்டசாலிகள்.

தவறு செய்யாதவர்கள்? இதுவரை , இதுவரை சாட் பண்ணாதவர்கள் அல்லது தப்பின் ஆரம்ப அறிகுறியை அனுமானித்து அதிலிருந்து எஸ்கேப் ஆகிறவர்கள் (ஜம்மு மாதிரி). அல்லது சாட்பண்ணத் தெரியாதவர்கள்(என்னைமாதிரி). :lol::o

சாட் பண்ணுவது சரியோ தப்போ என்ற கேள்விக்கு முன் சாட் பண்ணுபவர்கள் எத்தனை பேர் உண்மையான ஐடியுடன் செல்கின்றீர்கள். சாட் பண்ணுபவர்கள் எல்லோரும் அதை தவறாக பயன்படுத்துகின்றார்கள் என்பதல்ல, பலர் அதை தவறாக பயன்படுத்தகின்றார்கள் என்பதே உண்மை. இதனால் அடைந்த நன்மைகளை விட தீமைகளே அதிகம். தினசரி ஊடகங்களில் வரும் செய்திகளே அதற்குச் சாட்சி.

சில வருடங்களுக்கு முன் எனக்குத் தெரிந்த பிரித்தானியாவிலுள்ள ஒரு வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஒருவருக்கு சட்டில் கிடைத்த பெண் நண்பியொருவருடன் நட்பாகி நட்பு காதலாகி இருவரும் கல்யாணம் செய்வதென்ற முடிவிற்கு வந்து விட்டார்கள். அறிவிப்பாளருக்கோ தனது நண்பியை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆவல். நண்பியாரும் ஒருவாறு ஒருநாள் தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். அங்கு சென்ற நண்பருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அறிவிப்பாளர் பேரானந்தத்துடன் அன்று சீக்கிரமே கிளம்பி ஆவலாக நண்பியின் வீட்டையும் கண்டுபிடித்து அங்கு அழைப்பு மணியை அழுத்தினார். ஒரு இளைஞர் ஒருவர் கையில் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருந்தபடியும், மற்றொரு கையால் இன்னொரு குழந்தையையும் பிடித்தபடி கதவைத் திறந்தார். அறிவிப்பாளரும் இவர் தனது நண்பியின் தமையனாராக இருப்பார் என்று யோசித்தவாறு நிற்க, கதவைத் திறந்த இளைஞர் கேட்டார் என்ன விடயமாக வந்துள்ளீர்களென்று. அதற்கு அறிவிப்பாளர் தனது நண்பியின் பெயரைச் சொல்லி அவரைக் காண வந்திருப்பதாகச் சொன்னார். அதற்கு அந்த இளைஞர் ஓ அவ எனது மனைவிதான் உள்ளே வந்திருங்கள் கூப்பிடுகின்றேன் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, அறிவிப்பாளரின் நண்பியும் அந்த இடத்திற்கு வந்து விட்டா. அறிவிப்பாளர் பேய் அறைந்தது மாதிரி நின்று கொண்டிருக்க, அதைப் பார்த்த நண்பியார் சொன்னா ஏன் நீங்கள் எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்றா யோசிக்கின்றீர்கள். நான் இப்போது கூட இவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு உங்களுடன் வரத் தயார் என்று. நண்பியை சந்திக்கச் சென்ற அறிவிப்பாளரோ, அந்த நண்பியின் கணவரிடம் நடந்தவற்றிற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு வீடு திரும்பிவிட்டார். ஆனால் இந்தப் பிரைச்சினையிலிருந்து அறிவிப்பாளர் சகஜ நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் பிடித்தது.

ஜம்மு

இது சரியோ..??..தவறோ..??

ஆம்.

இல்லை.

நீங்கள் இப்படிக் கேட்டிருப்பது தவறு. இப்படிக் கேட்டால் எப்படி பதிலளிப்பது. விடையளிப்பதற்கு சரி, தவறு என்றல்லவா போட்டிருக்க வேண்டும்

Edited by Vasampu

முன்னொரு காலத்தில் 1998-2003 பெரும்பாலும் tamilworld.com(tamilchatworld.com) பெரும் கடலை போட்ட ஆக்களில் நானும் ஓருத்தன். நான் எத்தினையோ பேருக்கு ஆப்பு கொடுத்திருப்பன்.... ஆனா எனக்கே ஆப்பு வைச்சது "சிட்னி" யில் இருந்து ஒரு சிங்காரி. வழமை போல நான் சிக்கல என்டாலும் நான் கவலைப்பட்டுட்டன்.

chat என்பது பூக்கள் மாதிரி குரங்கிடம் கொடுத்தால் பிச்சு போட்டும் பூசாரியிடம் அல்லது அரசியல்வாதியிடம் கொடுத்தால் சிலைக்கு போட்டு வாட பண்ணிடுவார்.

தேனியிடம் அகப்பட்ட பூக்கள் தேனோடு மகரந்தங்களையும் கொடுத்்தே அனுப்புகின்றன.... பூக்களை பெண்களாக மட்டும் கற்பனை செய்ய வேண்டாம்.

அதுசரி ஜம்முவின் கேள்விக்கு என்ன பதில்? இரண்டாவதுக்கு ஆம்

  • தொடங்கியவர்

இதை வாசித்ததும் என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியலை.

இப்ப சிரிக்கிறன் ஆறுதலா கருத்தோடு வாறன் என. (இப்ப கடலை போடணும்)

அட..நிலா அக்கா..!!

சரி ஆறுதலா கடலை போட்டிட்டு யார் கூட கடலை போட்டீங்க எண்டு சா..சா இப்படி செய்வது சரியா அல்லாட்டிக்கு தவறா எண்டு ஒருக்கா சொல்லுங்கோ கேட்போம்..ம்.. :D

அவிக்கிற கடலையை சொல்லுறதில்ல சொல்லிட்டன்..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

கலியாணம் கட்டினா என்ன கட்டா விட்டால் என்ன மனிசருக்கு உணர்ச்சி என்பது இருக்கும் வரை.. பாதகமான காரியங்கள் நடக்கலாம். அதற்கு இடமளிக்காத வகையில எல்லோரும் நடந்துக்குவினம் என்றில்லை. தேவையைப் பொறுத்து அவர்களின் அணுகுமுறைகள் இருக்கும். மாறுபடும். எனவே நாம் தான் அவதானமாக இருக்க வேண்டும். ஜம்மு பேபியின் சந்தேகம் நியாயமானதே. சந்தேகிப்பது தவறல்ல. இந்தச் சூழ்நிலையில் அது அவசியம். ஏமாற்றங்களை தவிர்ப்பதற்கு.. மிக முக்கியம்..! அதை புரிந்து கொள்ளத் தவறுபவர்கள்.. ஏதோ தவறு செய்ய முற்படுகிறார்கள் என்பதே அர்த்தமாக்கப்படும்.. என்பதை தெரிந்து கொள்வது நல்லம்..!

ம்ம் தாத்தா..!!

வாங்கோ கடலை பற்றி ஆராய்வோம்... :lol:

ஆண்,பெண் இனகவர்ச்சி கண்ணால் பார்க்கும் போதோ ஏற்படும் இல்ல ஏன் கேட்கிறன் எண்டா சில உரையாடல்களின் போது இவ்வாறன இனகவர்ச்சி உருவாக கூடிய சாத்தியம் இருக்க தானே செய்கிறது.இதை பத்திய தங்களின் கருத்துக்கள் என்ன..?? :D

தாத்தாவும் நல்ல ஒரு கொள்கையோட தான் கடலை போட்டிருக்கிறார்..ர் அவ்வாறு திருமணம் ஆன பொண்ணுங்க கூட கடலை போடுறதில் ஏதாவது பாதிப்பு உண்டா??இல்லையா??

ஏனெனில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட கூடிய சாத்தியகூறுகள் அதிகம்..இவ்வாறு கடலை போட்டு ஓடுறவர்களும் உள்ளார்கள் அவ்வாறு பார்த்தால் இவ் செயற்பாடு முற்றுமுழுதாக தவறாக தான் தெரிகின்றது..ஆனால் முற்று முழுதாக பிழை எண்டும் என்னால் ஏற்று கொள்ள முடியாமல் இருக்கின்றது..

மற்றது நீங்கள் குறிப்பிட இரு வகை சட்டுகளிள் முதலாவது அது தான் நாகரீகமான சாட்டில் ஆரம்பித்தாலும் இறுதியில் அவர்கள் எம்.எஸ்.ன் போன்ற சாட்டுகளிள் ஒன்று சேர்வது தான் அதிகமாக காணகூடியதாக இருக்கிறது.நாகரீக சாட்டிற்கு செல்வதே யாரையும் பிடிப்பதிற்காக என்ற தோற்றபாடு இருக்கிறது.. :lol:

இது பத்தி எனக்கு அவ்வளவாக தெரியாது..என் சக நண்பருடன் உரையாடும் போது அவன் இவ்வாறான் விசயங்களை அடுக்க தொடங்கினான்..

ஆகவே இரண்டு வகை "சாட்டும்" ஏதோ ஒரு வகையில் பிரச்சினையாக முடிய கூடிய வாய்புகள் அதிகமாகவே தென்படுகிறது என்பது என் கருத்து..!! :o

நன்றி தாத்தா உங்களின் "சட்" பத்திய அனுபவபகிர்விற்கும் விளக்கமான கருத்துகளிற்கும்..வேண்டும் எண்டா ஒருக்கா நானும் தாத்தாவும் "சட்" பண்ணுவோமோ.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

என்ன கேள்வி??? விடை ஆம் என்றால்....சரிக்கோ..?? தவறுக்கோ..??

லொயிக் இல்லாத கேள்வி..

அட குட்டி மாமா..!!

என்ன மாமா கடலை போட்டு முடித்தி இப்ப தான் இங்க வர நேரம் கிடைத்ததோ..(எப்படி சுகம் மாமா).. :D அது என்னவெண்டா மாமா நேத்தைக்கு நாம வேலையில இருக்கக்க கடலை போட யாரும் கிடைக்கல அப்ப இந்த பதிவை எழுதி கொண்டு இருக்கும் போது..து.. :wub:

நம்ம "டீம் லீடர்" வந்திட்டார் அல்லோ அதில நாம குழம்பி போய் "ஆம்..இல்லை" எண்டு போட்டிட்டன்..தற்போது திருத்தம் செய்யபட்டுள்ளது..து.. :)

நன்றி மாமா சுட்டிகாட்டியமைக்கு..அது சரி கடலை போடுறதில "லொஜிக்" இருகோ அதையும் சொல்லிட்டு போங்கோவன் குட்டி மாமா..மா..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

உலகத்தில எது சரி, எது தவறு என்று பொதுவான ஒரு கருத்தை எட்டுவது கடினம் தான். ஒருவருக்கு சரி என படுவது மற்றவருக்கு பிழை என தோன்றும். அல்லது, ஒரு காலத்தில் சரி என கருதப்பட்ட கருத்துகள், பின்னர் ஒரு காலத்தில் பிழையாக கருதப்படும் அல்லது பிழை என முடக்கி வைத்திருக்கப்பட்டவை எல்லாம், பின்னர் தலை நிமிர்ந்து நடமாடும்.

அது போலவே கலாசாரத்துக்கு கலாசாரமும் ஒரு நடத்தையின் சரி பிழைத்தன்மை மாறுபடும். எனவே காலத்துக்கும், இடத்துக்கும் தகுந்த, மற்றவர்களை புண்படுத்தாத அல்லது மற்றவரின் சுதந்திரத்தில் தலையிடாத எந்த ஒரு நடத்தை / கருத்து தான் சரியான கருத்து என எண்ணத்த் தோன்றுகிறது. அதைத்தான் நாங்கள் நாகரீகம் / கலாசாரம் என்று வரையறுப்பது நல்லது.

என்னை பொறுத்தவரை, Chat ல் சில நண்பிகளுடன் பழகும் போது உண்மையான ஆண் - பெண் நட்பை பற்றி, அதன் உன்னதம் பற்றி உணர்ந்துகொண்டேன். இவ்வாறே இந்த தூய்மையான நட்பு திருமணத்தின் பின்பும் தூய்மையாக தொடர்ந்தால் தவறில்லையே.

மல்லிகை வாசம் அண்ணா,

ம்ம்..உலகில் சரி,பிழை என ஒரு கருத்தை ஏய்வது கடினம் என்றாலும் அதன் விளைவுகள் பற்றி சிந்திப்பது எவ்வகையிலும் தவறில்ல தானே மல்லிகை வாசம் அண்ணா..ணா..!! :wub:

மற்றவர்களை புண்படுத்தாத வகையில் நாம் என்னவும் செய்யலாம் என்பது இல்லையே அது எப்படி ஏற்று கொள்ள முடியும் இப்ப நான் குறிப்பிட சம்பவத்தில் என் சக நண்பருடன் யாரோ ஒருவா கதைக்கிறா அவா புருசனிற்கு தெரியாம புண்படுத்தாம கதைக்கிறா எண்டு வைத்து கொள்ளுங்கோவன்..

இதில் பாதிப்பு இல்லை எண்டு நினைக்கிறியளா..?? :(

ஒம் அண்ணா எனக்கு இந்த ஆண்,பெண் நட்பில இருக்கிற தூய்மை எல்லாத்தையும் கண்டு பிடிக்க தெரியவில்லை அது தான் இங்க கேட்டனான் ஒருக்கா எப்படி அந்த தூய்மையை கண்டு பிடிக்கிறது எண்டு ஒருக்கா சொல்லுங்கோ அதுக்கு பிறகு நானும் கடலை போட சுலபமாக இருக்கும்..ம்..!! :lol:

திருமணத்திற்கு பின் தூய்மையான நட்பு தொடர்வது தப்பில்லை புருசனுக்கு தெரிந்து இல்லாட்டி தப்பு தான் என்னை பொறுத்தவரைக்கும் மற்றவைய பற்றி தெரியாது அப்படி பெரிய மனசும் எனக்கும் இல்ல பாருங்கோ.. :(

நன்றி அண்ணா தங்களின் கருத்து பகிர்விற்கு..!! :)

  • தொடங்கியவர்

தவறு செய்யவேண்டும் என்ற என்னத்துடன் சாட் பண்ணுபவர்களை தடுக்க முடியாது.

தவறகெப் போகமாட்டம் என்ற நம்பிக்கையில் எதிர்பாலருடன் சாட்பண்ண ஆரம்பித்து பின்சந்தர்ப்பம் நேரும்போது அல்லது சந்தர்ப்பம் உண்டாக்கித் தவறு செய்பவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் அல்லது அதிர்ஸ்டசாலிகள்.

தவறு செய்யாதவர்கள்? இதுவரை , இதுவரை சாட் பண்ணாதவர்கள் அல்லது தப்பின் ஆரம்ப அறிகுறியை அனுமானித்து அதிலிருந்து எஸ்கேப் ஆகிறவர்கள் (ஜம்மு மாதிரி). அல்லது சாட்பண்ணத் தெரியாதவர்கள்(என்னைமாதிரி).

சுவி பெரியப்பா,

கடலை எண்டவுடன் நம்ம பெரியப்பாவும் வந்திட்டார்..(ஆனா உது கோயிலில கொடுக்கிற கடலை இல்லை பெரியப்பா விளங்கிச்சோ நான் பகிடிக்கு).. :)

ம்ம்..சரியா சொன்னீங்கள் தவறே விடமாட்டோம் எண்டு சென்று தவறு விடுபவர்கள் தான் அதிகம்..ம் ஏன் எண்டா நேரா பழகிற ஆட்களையே இந்த காலத்தில நம்ம ஏலாம இருக்கு இதில மறைமுகமாக வாறவைய எப்படி நம்புறதாக்கும் பெரியப்பா..!! :)

அட என்னை பார்த்து தப்பின் ஆரம்பகுறியை அனுமானித்து தப்பிக்கிற ஆட்களிள சேர்த்திட்டியளே என்னால முடியல பெரியப்பா நாம எல்லாம் பட்டு திருந்துற ஆட்களாக்கும்..அது சரி உங்களுக்கு கடலை போட தெரியாதோ எனக்கும் வடிவா போட தெரியாது அல்லோ.. :wub:

வேண்டும் எண்டா யாழில இதற்கு ஏற்பாடு செய்யட்டோ இதை பத்தி என்ன நெனைக்கிறியள்..!!

நன்றி பெரியப்பா தங்களின் கருத்திற்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

சாட் பண்ணுவது சரியோ தப்போ என்ற கேள்விக்கு முன் சாட் பண்ணுபவர்கள் எத்தனை பேர் உண்மையான ஐடியுடன் செல்கின்றீர்கள். சாட் பண்ணுபவர்கள் எல்லோரும் அதை தவறாக பயன்படுத்துகின்றார்கள் என்பதல்ல, பலர் அதை தவறாக பயன்படுத்தகின்றார்கள் என்பதே உண்மை. இதனால் அடைந்த நன்மைகளை விட தீமைகளே அதிகம். தினசரி ஊடகங்களில் வரும் செய்திகளே அதற்குச் சாட்சி.

வசபண்ணா,

ம்ம்..சாட் பண்ண போகக்க நாம நம்ம ஜடியில போறதில்லையாக்கும் போனாலும் யாரும் வாறாங்க இல்ல என்னோட கடலை போட கடலை போடுறது கூட ஒரு கலை போல தான் இருக்கு.. :(

நமக்கு அந்த கலை தெரியல்ல அது தான் பிரச்சினை..மற்றது ஒரே ஆளே பல ஜடிகளிள் வந்து கதைப்பார்கள் அல்லோ இப்படியான சம்பவங்களையும் கேள்விபட்டிருக்கிறன்..அதனாடி நானும் கடலை போட இறங்கி இவ்வாறான விசயங்களை ஆராய்வோம் எண்டு இறங்கியாச்சு..

வசபண்ணா நீங்களும் வாறியளே..?? :wub:

வசபண்ணா தாங்கள் கூறிய சம்பவத்தை வாசித்தேன் இதற்கு பெறகு எனக்கு கடலை போடுற ஆசையே போச்சுது பாருங்கோ..இவ்வாறான சிக்கல்கள் ஏற்பட கூடிய சாத்தியங்கள் தற்போது அதிகரிக்கிறது அதனால் தான் எனக்கு ஏற்பட இவ் சந்தேகத்தை இங்கே உள்ளவர்களின்ட கேட்டேன்..

தற்போது தெளிந்தேன்..நன்றி வசபண்ணா தங்களுடைய நண்பருக்கு ஏற்பட்ட சுவாரசிய சம்பவத்தை எங்களுடன் பகிந்தமைக்கும்..ம்..உங்களின் கருத்திற்கும்.. :lol:

மற்றது வசபண்ணா சரியா??..இல்லாட்டி தவறா எண்டு வாக்குபதிவில் திருத்தம் செய்துவிட்டேன் சுட்டியகாட்டியமைக்கு மிக்க நன்றி..!! :(

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

முன்னொரு காலத்தில் 1998-2003 பெரும்பாலும் tamilworld.com(tamilchatworld.com) பெரும் கடலை போட்ட ஆக்களில் நானும் ஓருத்தன். நான் எத்தினையோ பேருக்கு ஆப்பு கொடுத்திருப்பன்.... ஆனா எனக்கே ஆப்பு வைச்சது "சிட்னி" யில் இருந்து ஒரு சிங்காரி. வழமை போல நான் சிக்கல என்டாலும் நான் கவலைப்பட்டுட்டன்.

chat என்பது பூக்கள் மாதிரி குரங்கிடம் கொடுத்தால் பிச்சு போட்டும் பூசாரியிடம் அல்லது அரசியல்வாதியிடம் கொடுத்தால் சிலைக்கு போட்டு வாட பண்ணிடுவார்.

தேனியிடம் அகப்பட்ட பூக்கள் தேனோடு மகரந்தங்களையும் கொடுத்்தே அனுப்புகின்றன.... பூக்களை பெண்களாக மட்டும் கற்பனை செய்ய வேண்டாம்.

அதுசரி ஜம்முவின் கேள்விக்கு என்ன பதில்? இரண்டாவதுக்கு ஆம்

வாசகன் அண்ணா,

அட அப்ப நீங்களும் முந்தி ஒரு காலத்தில கடலை மன்னன் எண்டு சொல்லுங்கோ..!!..அந்த சிட்னி சிங்காரி பத்தி கொஞ்சம் சொல்லுங்கோவன் வாசகன் அண்ணா..ணா.. :lol:

அப்ப தான் நானும் இப்படியான சிங்காரிகளிடம் இருந்து தப்பித்துகலாம்..!!

நீங்கள் கூறிய கருத்து 100% உண்மை "தேனீயிடம் அகபட்ட பூக்கள் தேனுடன் மகரந்தத்தையும் கொடுத்தே அனுப்புகின்றன" எண்ட கருத்துடன் நானும் ஒத்து போகின்றேன் ஆனால் பூக்களிள் அகப்படுவது தான் கடினம் அப்படி மாட்டுபட்டாலும்.. :lol:

எந்த பூ விச பூ எந்த பூ தேன் நிறைந்த பூ எண்டு இணையபூங்காவில் தேடுவது கடினம் அல்லவா தங்களின் கருத்துகளிற்கும் அனுபபகிர்விற்கு நன்றிகள்..ள்..!! :wub:

முதலாவது வாக்கு பதிவில் இருந்த பிழையும் தற்போது திருத்தம் செய்யபட்டுள்ளது வாசகன் அண்ணா..!! :wub:

அப்ப நான் வரட்டா!!

மற்றவர்களை புண்படுத்தாத வகையில் நாம் என்னவும் செய்யலாம் என்பது இல்லையே அது எப்படி ஏற்று கொள்ள முடியும் இப்ப நான் குறிப்பிட சம்பவத்தில் என் சக நண்பருடன் யாரோ ஒருவா கதைக்கிறா அவா புருசனிற்கு தெரியாம புண்படுத்தாம கதைக்கிறா எண்டு வைத்து கொள்ளுங்கோவன்..

திருமணத்திற்கு பின் தூய்மையான நட்பு தொடர்வது தப்பில்லை புருசனுக்கு தெரிந்து இல்லாட்டி தப்பு தான் என்னை பொறுத்தவரைக்கும் மற்றவைய பற்றி தெரியாது அப்படி பெரிய மனசும் எனக்கும் இல்ல பாருங்கோ.. :D

புருஷன் / மனைவியின் அனுமதியுடன் பண்ணுவது தான் நல்லது... நாகரீகமும் கூட. அனுமதி இல்லை என்றால் வேண்டாமே.

வாழ்த்து சொல்லிப்போட்டு தொடர்பை துண்டிக்க வேண்டியது தான். :(

ஒம் அண்ணா எனக்கு இந்த ஆண்,பெண் நட்பில இருக்கிற தூய்மை எல்லாத்தையும் கண்டு பிடிக்க தெரியவில்லை அது தான் இங்க கேட்டனான் ஒருக்கா எப்படி அந்த தூய்மையை கண்டு பிடிக்கிறது எண்டு ஒருக்கா சொல்லுங்கோ அதுக்கு பிறகு நானும் கடலை போட சுலபமாக இருக்கும்..ம்..!! :wub:

இது லொள்ளு தானே?? ஜம்முக்கு கூட தெரியாதா ஆண் - பெண் நட்பில இருக்கிற தூய்மை பற்றி (அண்ணன் - தங்கை உறவு மாதிரி தான்.)

இது மசாலா போடாத தூய கடலை ... :(

Beach ல Girl Friend கூட போடுறது மசாலா போட்ட கடலை. :wub: அதை தான் symbolicஆ உணர்த்துறதுக்கு மசாலா போட்ட சுண்டல் விற்கிறவங்களாக்கும்!! :lol: எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்குல்ல... :lol::) :)

  • தொடங்கியவர்

புருஷன் / மனைவியின் அனுமதியுடன் பண்ணுவது தான் நல்லது... நாகரீகமும் கூட. அனுமதி இல்லை என்றால் வேண்டாமே.

வாழ்த்து சொல்லிப்போட்டு தொடர்பை துண்டிக்க வேண்டியது தான்.

ம்ம்..ஆனா இப்ப எல்லாம் இதை எல்லாம் சொல்லி கொண்டோ எங்களோட கடலை போட வருவீனம் பாருங்கோ அண்ணா அப்படி பார்கையில்.. :wub:

என்ன செய்வது..??

இல்லை எனக்கு தெரியும் ஆனால் இப்ப ஆண்,பெண் நட்பு தூய்மை எண்ட போர்வையை பயன்படுத்தி எல்லா விதமான விடயங்களும் நடக்கிறபடியால..ல என்னால எதையும் இலகுவகா எடுத்து கொள்ளமுடியாமல் இருக்கிறது எப்பவுமே ஜம்மு 6 அடி முன்னுக்கு வைக்க போகுது எண்டா பின்னால 2 அடி போகும் விளங்கிச்சோ..!! :lol:

இப்ப பாருங்கோ சாப்பிடுற கடலையில கூட மசலா எல்லாம் போட்டா தான் ருசியா இருக்கு யாரும் வெறுமனே கடலை சாப்பிடமாட்டீனம் தானே அண்ணா..?? :)

இது லொள்ளு தானே?? ஜம்முக்கு கூட தெரியாதா ஆண் - பெண் நட்பில இருக்கிற தூய்மை பற்றி (அண்ணன் - தங்கை உறவு மாதிரி தான்.)

இது மசாலா போடாத தூய கடலை ...

Beach ல Girl Friend கூட போடுறது மசாலா போட்ட கடலை. :wub: அதை தான் symbolicஆ உணர்த்துறதுக்கு மசாலா போட்ட சுண்டல் விற்கிறவங்களாக்கும்!! எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்குல்ல...

மற்றது பீச்சில போட்ட மசலா கடலை வந்து கடலை தீர்ந்து போனவுடன போயிடலாம் ஆனா இணைய உலகில போடுற கடலை அப்படி இல்லையே அண்ணா.. :)

நாமளும் ஒவ்வொன்றிற்கும் காரணம் வைத்திருபோமல..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

அட..நிலா அக்கா..!!

சரி ஆறுதலா கடலை போட்டிட்டு யார் கூட கடலை போட்டீங்க எண்டு சா..சா இப்படி செய்வது சரியா அல்லாட்டிக்கு தவறா எண்டு ஒருக்கா சொல்லுங்கோ கேட்போம்..ம்..

அவிக்கிற கடலையை சொல்லுறதில்ல சொல்லிட்டன்..!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு தம்பி உங்கள் சாட் சந்தேகம் சட் பக்கம் போக என்ன விசேசம்? நீங்களும் சட்டிங் செய்து டேட்டிங் :lol: போக விரும்புறியளோ?

திருமணமாகாதவர்கள் கொஞ்சம் கொஞ்சம் சட்டிங் செய்யலாம் இல்லையா தம்பி. அவரவர் இருக்கும் நாடுகள் பற்றி அறியலாம்.. ஒவ்வொரு மனிதர்கள் பற்றியும் தெரிஞ்சுக்கலாம் ல

சரி சரி இப்ப எல்லாம், தம்பி திருமணமானவர்கள் அதிலும் பொண்ணுக பகலில் தான் வேலைக்கு போவாங்க ஏனென்றால் பகலில் வீட்டில் இருந்தால் பிள்ளையை பராமரிக்கணுமே என்ற ஒரு கள்ள எண்ணத்தில்... அதே பெண்கள் இரவில் வீட்டுக்கு வந்ததும் ஆண்கள் பகல் பிள்ளையை கவனித்து அக்குழந்தையை தூங்க வைத்துவிட்டு வேலைக்கு கிளம்பிடுவான். பொண்ணுக சட்டிங் இல் சிட் பண்ணிடுவாங்க :lol: கணவன் வேலை விட்டு வரும்போது மனைவி கதவு திறந்துவிடுவா. ஏன்னா அவ்வளவு பாசம். ஆனால் அவருக்கு தெரியாது சட் பண்ணினதில் தூக்கமில்லாமல் :) அவா விழித்திருந்தது... இப்படி ஏமாற்றும் பேர்வழி..... :wub:

நானும் ஒரு சட் தளத்திற்கு அட்மின் ஆக இருந்தேன் ல. யார் யார் எப்படி எப்படி எல்லாம் பிரைவேட் ல சட்டிங் செய்யுறார்கள் என்று போய் செக் பண்ணுறதில் எனக்கு அப்படி ஒரு விருப்பம். ரொம்ப ரொம்ப சுவாரசியமாக இருக்கும் ல.

ம்ம் அதை விடுங்கோ, அபப்டி அத்தளத்தில் நான் அட்மின் ஆக இருந்தப்போ ஒருத்தனை பேட்டி எடுத்தேன் அண்ணை நீங்கள் ஏன் அடிக்கடி சட்டிங்வாறனியள் என்று அதற்கு அவன் சொன்ன பதில்.....................

விடிய எழும்பி வேலைக்கு போறேன் வேலை முடிச்சு வீட்டுக்கு வந்து சட்டிங் பண்ணுவதால் வெளியில் போவதில்லை. அபப்டி வெளியில் போகாமல் இருப்பதனால் காசு செலவழிக்காமல் சேமிக்கப்படுகின்றன.

வெளியில் குளிர்.

தொலைக்காட்சி பார்க்கலாம் எனில் தெரிஞ்ச பாட்டுதான் மாறி மாறி ஒலிபரப்புறாங்க

புத்தகம் படிக்கலாம் எனில் நித்திரை வருகுது

நித்திரை கொள்ளலாம் எனில் தொப்பை வைக்குது

தொப்பையைக் குறைக்க ஜிம் செண்டர் போகலாம் எனில் அதுக்கும் காசு.................

அதனால் சட்டிங்ச் எய்ய வந்தால் நிறைய பொண்ணுக கூட கடலை போடலாம். அவங்க கூட கதைச்சால் பொழுது போவதே தெரியலை மன நிறைவாக இருக்குது............... இப்படி பல சொன்னான் பா.

சரி இப்ப என்ன கேட்கிறீங்க என்றால் அக்கா இப்ப அந்த தளத்தில் நீங்கள் அட்மின் ஆக இல்லையோ என்று தானே.

ம்ம்ம்ம் இப்ப இல்லை ஏன்னா நானும் ஒரு குட்டி தம்பியோடை பாசமாக இருந்தேன்.. அவன் ஒருநாள் அக்கா அக்கா அக்கா உன் பாவனைபெயரையும் க்டவுச்சொல்லையும் தாங்கோ நான் உங்கட பெயரில் ஒருக்கா நுழையுறன் என்று கெஞ்சிக்கேட்க நானும் சரி சின்னப்படியன் தானே என்றிட்டு அதை கொடுக்க, அதை அந்த லூசுபெடியன் என் கடவுச்சொல்லை மாத்தி பிறகு என்னாலை நுழைய முடியலை. என்னைவிட இன்னொரு அட்மின் இருந்திச்சு. அவர் என் ஐபி தடை செய்துட்டார் ல. அதுக்கப்புறம் உந்த சட்டிங் எல்லாம் விட்டாச்சு

:) கடலை போடுறதா? அச்சோ போட எங்கப்பா விடுறாங்க. எனக்கொரு தம்பி இருக்கிறான் தெரியும் தானே :( யாரோடும் கடலை போட விடுறான் இல்லை என்ன செய்யலாம்? சரி அவன் தூங்கினாப்பிறகு போடலாம் என்றால்............ :wub: அவன் தூங்கும்போதே நிலாக்கா வா வா வா வா கணணியை ஓவ்" செய்..... ரெலிபோனை ஓவ்" செய்....... இப்படி சொல்லிடுறான் என்னத்தை கடலை போட்டு :D

ரொம்ப பாசமான தம்பியாகிட்டானே னு நானும் சரி கடலை என்ன கடலை என்றிட்டு கடலை போடுறதை 2 வருடமாக நிறுத்திட்டேன் :(

ஆனால் அந்த தம்பிகூட கதைச்சிட்டு இருப்பதே மற்றவர்களோடு கடலை போட்டாலும் கிடைக்காத ஒரு சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்புக்கு பொருத்தமான கதை ஒன்று இங்கு இடப்பட்டுள்ளது..! :wub:

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry445196

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எல்லாம் கடலையாக உள்ளது ஜம்மு என்ன கொடுமை

:wub::wub::lol::lol::):):(

நானும் ஒரு சட் தளத்திற்கு அட்மின் ஆக இருந்தேன் ல. யார் யார் எப்படி எப்படி எல்லாம் பிரைவேட் ல சட்டிங் செய்யுறார்கள் என்று போய் செக் பண்ணுறதில் எனக்கு அப்படி ஒரு விருப்பம். ரொம்ப ரொம்ப சுவாரசியமாக இருக்கும் ல.

அதேமாதிரி உங்க பிரைவேட் சட்டிங்கையும் வேறயாராச்சும் செக் பண்ணி பார்த்தால் சுவாரசியமா இருக்குமா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கோணத்தில் இருந்து உற்று நோக்கும் போது..எப்பவுமே அடுப்பங்கரையில் பெண்கள் இருக்க கூடாது எண்டு "சட் அறை பக்கம்" வந்தீட்டீனமோ எண்டு யோசிகக்க அதுவும் எனக்கு சரியா இருந்தது..இப்படியே நானே குழம்பிட்டன் மற்ற நாட்களிள் நான் தான் மற்றவைய குழப்புவேன் இது "சிட்னிக்கே வந்த சோதனையா போச்சு"..

அடுப்பங்கரையில் பொண்ணுங்க எப்பவுமே இருப்பது அந்தக் காலமுங்க.

நானும் செட் பக்கம் போனேனே..........ஆனால் பார்வையாளாராக மட்டுமே.........ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ........

...சிலசமயம் முடியல முடியல..........நம்ம யமுனா ஸ்டைல்ல சொல்லனும்

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி ,

நானும் வாக்க்ளித்துவிட்டேன் ,

  • தொடங்கியவர்

ஜம்மு தம்பி உங்கள் சாட் சந்தேகம் சட் பக்கம் போக என்ன விசேசம்? நீங்களும் சட்டிங் செய்து டேட்டிங் :) போக விரும்புறியளோ?

ம்ம்..நிலா அக்கா..கா,

சா..சா இவ்வளவு நாளும் இங்க சரியான குளிர் இப்ப வெக்கை தொடங்கிட்டு..டு அப்ப எண்ட மூள எனி இப்படி எல்லாம் குறுக்கால யோசிக்க தொடங்கிடும் அது தான் பாருங்கோ..மற்றம்படி நம்மளிற்கும் கடலை போடுறதிற்கும் ரொம்ப தூரம் அல்லோ..லோ..(உது தெரியாதா என்ன).. :lol:

அதுக்காக எனக்கு கடலை போட விருப்பமில்லை எண்டு சொல்லல்ல ஆனா கடலை போட யாரும் மாடுபடனுமே பாருங்கோ அது தான் பெரிய பிரச்சினையே..!!.. :(

நான் திருமணமானவை "சட்டிங்" பண்ணுறது தவறு எண்டு சொல்ல வரவில்லை அக்கா..கா ஆனாலும் இணைய உலகில் பரிமாறபடும் தகவல்களிள் 80% பொய்யான தகவல்களாகவே இருக்கின்றன..ன அப்படி பார்கும் போது யாருக்கு உண்மையில் திருமணம் ஆகினது என்பதை கண்டு கொள்வதே கடினமான விடயம் என்பது என் கருத்து..இது பற்றிய தங்களின் கருத்து என்ன..ன..?? :)

ம்ம்..நீங்க மேலே குறிப்பிட உதாரணம் அது தான் கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு இங்கே "சட்டில்" இன்னொருவன் கூட உரையாடுவது ஒரு நாகரீகமாக எனக்கு படவில்லை அது தான் என்னுடைய சந்தேகமும் இது உங்களின் பார்வையிலும் தவறு எண்டு தான் படுகிறது போல் தெரிகிறது..!!

இதற்காக ஒரு சாரல் மீது மீண்டும்..மீண்டும் குற்றம் சுமத்தவில்லை இரு பாலாரும் இந்த தவறை விடுகிறார்கள் இதனால் ஏற்படும் பாரதூரமான விடயங்களை இவர்கள் சிந்திக்காமையே இதற்கு பிரதான காரணம் எண்டு நான் நெனைக்கிறன் தாங்கள் இதை பத்தி என்ன கருதுகிறீர்கள்..?? :wub:

அட மற்றவை "சட்" பண்ணுறதை பார்க்கிறது தப்பில்லையோ..??..ஆனாலும் மற்றவை கதைக்கிறதை உற்று நோக்கிற சுகம் இருக்கிறதே அது தனி சுகம் என்ன..ன நிலா அக்கா..கா..ஆனா எனக்கு இன்னொரு சந்தேகம் விடிய விடிய அப்படி என்னத்தை தான் கதைப்பார்களோ..??

உங்களுக்கு தெரியுமா அக்கா..கா..!!

நீங்கள் மேலே ஒருவரை பேட்டி எடுத்ததாக கூறி சில விடயங்களை எங்களுடன் பகிர்ந்திருந்தீர்கள் அவரின் கருத்துகளை என்னால் ஏற்று கொள்ளமுடியாது.இப்படியே அவர் வெளியாள் போகாம இருந்தால் காலபோக்கில் அவருக்கு வெளிஉலகில் என்ன நடக்கிறது எண்டு தெரியாம..ம..

தனித்து அல்லவா விடபட்டு விடுவார்..இவற்றை பற்றி ஏன் இவர்கள் சிந்திப்பதி கிடையாது..??..கடலை போடுவதால மன நிறைவா இது என்னடா புது கதையா இருக்கு சாமி கும்பிடுறதால மன நிறைவு எண்டு சொல்லீச்சீனம் இப்ப கடலை போடுறது மன நிம்மதியாம்..(முடியல)... :(

ம்ம்..நன்றி அக்கா தங்களின் "சட்" பற்றிய அனுபபகிர்வை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு தங்களின் விளக்கமான கருத்துகளிற்கும்.. :)

அது சரி உங்களுக்கு கிடைத்த தம்பி கொடுத்து வைத்தவர் தான் போல.."நெட் கனக்சன் கட் ஆகினாலும்" உங்கள் பாசம் தொடரட்டும் என்ன..ன..!! :D

அப்ப நான் வரட்டா!!

இந்த தலைப்புக்கு பொருத்தமான கதை ஒன்று இங்கு இடப்பட்டுள்ளது..! :)

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry445196

நன்றி நெடுக்ஸ் தாத்தா..தா..(கடலை போட்டு முடித்ததும் அந்த பக்கம் கடலை போட வாறன் என்ன)..!! :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

என்ன எல்லாம் கடலையாக உள்ளது ஜம்மு என்ன கொடுமை

முனி மாமு..மு..,

என்ன இப்படி சொல்லிட்டியள்..ஆச்சிரமத்தில நீங்க போடாத கடலையா என்ன..??..கடலை போடாத ஆம்பிளையும் கடலிற்கு போகாத நதியும் இருந்ததா சரித்திரமே இல்ல..ல.. :wub:

எப்படி இருக்கு மாமு..மு..!! :(

அப்ப நான் வரட்டா!!

அதேமாதிரி உங்க பிரைவேட் சட்டிங்கையும் வேறயாராச்சும் செக் பண்ணி பார்த்தால் சுவாரசியமா இருக்குமா?

எங்களுக்கு அந்த விசயம் தெரியாம இருக்கும் வரைக்கும் சுவாரசியமா தான் இருக்கும்..ம் குருவே :) ..மீண்டும் உங்களை கடலையுடன் சந்திபதில் மகிழ்ச்சி..சி.. :lol:

அப்ப நான் வரட்டா!!

அடுப்பங்கரையில் பொண்ணுங்க எப்பவுமே இருப்பது அந்தக் காலமுங்க.

நானும் செட் பக்கம் போனேனே..........ஆனால் பார்வையாளாராக மட்டுமே.........ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ........

...சிலசமயம் முடியல முடியல..........நம்ம யமுனா ஸ்டைல்ல சொல்லனும்

அட நம்ம கறுப்பி அக்கா,

ம்ம்..அடுப்பங்கரையில இருந்தும் "சட்" பண்ணுறது இந்த காலம் எண்டு சொல்ல வாறியளோ கறுப்பி அக்கா..கா..கறுப்பி அக்கா எந்த காலம் ஆகினாலும் பொண்ணுக பொண்ணுக தானே.. :)

அதில மாத்தமில்ல தானே..!! :)

ஏன் முடியல கறுப்பி அக்கா என்ன அங்க நடக்கிறது எண்டு கொஞ்சம் சொல்லுங்கோவன் நானும் கேட்க எனக்கு அந்த பக்கம் போக பயமா இருக்கு இல்லாட்டி..டி அங்க போயே ஆராச்சி பண்ணிடுவன் அல்லோ.. :(

நன்றி கறுப்பி அக்கா..!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி ,

நானும் வாக்க்ளித்துவிட்டேன் ,

தமிழ் சிறி அண்ணா,

நன்றி அண்ணா வாக்களித்தமைக்கு என்னத்திற்கு வாக்களித்தனியள் எண்டு சொல்லுங்கோவன்..ன்..??..சொன்னா நாம கடலை போட பிரயோசனமா இருக்கு அல்லோ..!! :D

யாராச்சும் கடலை போட்ட ஆளையே காதலித்தும் இருக்கிறீங்களோ இருந்தா அந்த அனுபவத்தையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கோவன்..ன்.. :)

அப்ப நான் வரட்டா!!

நன்றி அண்ணா வாக்களித்தமைக்கு என்னத்திற்கு வாக்களித்தனியள் எண்டு சொல்லுங்கோவன்..ன்..??..சொன்னா நாம கடலை போட பிரயோசனமா இருக்கு அல்லோ..!! :wub:

ஜனநாயக தேர்தல் முறையில் வாக்களித்தவர், தான் யாருக்கு / எதுக்கு வாக்களித்தேன் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது அழகல்ல என்று எங்கேயோ படித்த ஞாபகம்... :) :)

ம்ம்..நிலா அக்கா..கா,

அது சரி உங்களுக்கு கிடைத்த தம்பி கொடுத்து வைத்தவர் தான் போல.."நெட் கனக்சன் கட் ஆகினாலும்" உங்கள் பாசம் தொடரட்டும் என்ன..ன..!! :)

அப்ப நான் வரட்டா!!

:wub: ஜம்மு தம்பி வணக்கம் ... :lol:

ஜம்மு நீங்கள் கேட்டதுக்கெல்லாம் பதில் எழுதலாம் தான். அதற்கிடையில் நெட் கட் ஆகிடும் போல இருக்கு :)

அட அட என் தம்பி என்னத்தை எங்கே கொடுத்து வைத்தான்னோ எனக்கு என்ன தெரியும்? ஆனால் அவன் மீதான எனது பாசம் நெட் கட் ஆகினாலும் :) தொடரும் ல.

இன்னும் சொற்ப நேரத்தில் நம்ம இடத்தில் மின்சாரத்தடை. அப்போ நெட் கட் ஆகும். :) மீண்டும் சந்திப்போம்

  • தொடங்கியவர்

ஜனநாயக தேர்தல் முறையில் வாக்களித்தவர், தான் யாருக்கு / எதுக்கு வாக்களித்தேன் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது அழகல்ல என்று எங்கேயோ படித்த ஞாபகம்...

ஓ..அப்படியோ..!!

சா...சா ஜனநாயக முறையில இங்க நடந்து கொண்டிருக்கும் தேர்தலில ஒரு வன்முறையை தூண்டி விடுவோம் எண்டா விடமாட்டியள் எண்டுறியள்.. :D

சரி..ரி அப்ப நீங்க எதுக்கு வாக்கு போட்டியள் எண்டு சொல்லுங்கோவன்..அதையாவது கேட்போம்..!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு தம்பி வணக்கம் ...

ஜம்மு நீங்கள் கேட்டதுக்கெல்லாம் பதில் எழுதலாம் தான். அதற்கிடையில் நெட் கட் ஆகிடும் போல இருக்கு

அட அட என் தம்பி என்னத்தை எங்கே கொடுத்து வைத்தான்னோ எனக்கு என்ன தெரியும்? ஆனால் அவன் மீதான எனது பாசம் நெட் கட் ஆகினாலும் தொடரும் ல.

இன்னும் சொற்ப நேரத்தில் நம்ம இடத்தில் மின்சாரத்தடை. அப்போ நெட் கட் ஆகும். மீண்டும் சந்திப்போம்

வணக்(கம்) நிலா அக்கா..கா,

ம்ம்...அப்படியா பிரச்சினையில்ல "மின்சார தடை" நீங்கியதன் பின் அந்த கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நிலா அக்கா..கா.. :lol: இணைய வழியில் துண்டிப்பு ஏற்பட்ட பிறகும் தங்களின் பாசம் தொடர்வதையினை இட்டு மகிழ்ச்சியே தங்களின் தம்பியும் இந்த பக்கம் வாறவறோ..??

வந்தா அவரை நான் காண வேண்டும்..ம்..!! :icon_mrgreen:

சரி..அக்கா மின்சாரம் மறுபடி வந்தா பிறகு என் கூட கடலை போட வாங்கோ சா..சா இங்க வந்து கடலை பத்தி சொல்லுங்கோ என்ன..ன.. :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.