Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூசாரிகளை நோக்கி ஒரு அறைகூவல்!

Featured Replies

கடந்த சில மாதங்களிற்கு முன்பு சமஸ்கிருத "மந்திரங்கள்" பற்றி நான் எழுதியிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழர்களின் விழாக்களில் சொல்லப்படும் வடமொழி மந்திரங்கள் எவ்வளவு தூரம் ஆபாசமும் அருவருப்பும் கொண்டவை என்பதை அதில் விளக்கியிருந்தேன்.

இந்த வடமொழி மந்திரங்களை மேலும் ஆராய்ந்து அதை ஒரு தொடராகவும் (இந்து மதமும் பெண்களும்) எழுதியிருந்தேன். அண்மையில் அதை ஒரு சிறு நூலாகவும் ஜேர்மனியில் வெளியிட்டிருந்தேன். இந்த நூலினைப் படித்த சில தீவிர மதவாதிகள் என்னை ஒரு பகிரங்க விவாதத்திற்கு வரும்படி அழைத்திருந்தார்கள்.

ஜேர்மனியில் உள்ள இந்து ஆலயங்களில் பூசை செய்கின்ற பல பூசாரிகள் விவாதத்திற்கு வருவார்கள் என்றும், எனக்கு அவர்கள் விளக்கம் தருவார்கள் என்றும் அவர்கள் எனக்கு அறியத் தந்திருந்தார்கள். அவர்களுடைய சவாலை நான் ஏற்றுக் கொண்டேன். பூசாரிகள் தங்கள் "பொன்னான" நேரத்தை ஒதுக்கி விவாதத்தில் கலந்து கொள்வதற்காக விவாதத்திற்கான நாளும் இடமும் ஒரு மாதத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கடந்த 7.09.08 ஞாயிற்றுக் கிழமை அன்று ஜேர்மனியில் உள்ள டோட்முண்ட் நகரில் விவாதம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. சரியான நேரத்திற்கு நான் சென்றிருந்தேன். எந்த ஒரு பூசாரியும் அங்கு வரவில்லை. இந்து மதத்தைப் பற்றி எள்ளளவு அறிவு கூட இல்லாத சிலர் அங்கு வந்து என்னுடன் அடாவடித்தனமாக நடக்க முற்பட்டார்கள். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பூசாரிகளின் வருகைக்காக நான் காத்திருந்தேன்.

ஒரு மணித்தியாலம் தாமதமாக "ஜெயந்திநாதசர்மா" என்கின்ற ஒரே ஒரு பூசாரி மட்டும் வந்தார். ஆனால் அவரால் என்னுடன் விவாதம் செய்ய முடியவில்லை. மந்திரங்களின் அர்த்தத்தை தன்னால் விளங்கப்படுத்த முடியாது என்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்ட அவர் அதற்கு தம்மிடம் வேறு ஆட்கள் இருப்பதாகவும், அந்த "அறிஞர்கள்" அனைவரும் விரைவில் எனக்கு விளக்கத்தை தருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் அவர் தனக்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டு சென்று விட்டார்.

ஏழாம் திகதி அன்று அனைத்து ஆலய பூசாரிகளும் என்னுடன் விவாதம் செய்து மந்திரங்கள் பற்றிய "புனிதமான(?)" விளக்கத்தை எனக்கு தருவார்கள் என்று கூறியதால்தான் நான் அன்றைக்கு அங்கு சென்றிருந்தேன். ஆனால் அங்கே வந்த ஒரேயொரு பூசாரியான ஜெயந்திநாதசர்மாவோ இன்னொரு நாள் விளக்கத்தை தருவதாக சொல்லி விட்டு ஓடி விட்டார்.

ஜெயந்திநாதசர்மா சென்ற பின்பும் என்னுடன் ஒரு சிலர் அடாவடித்தனமாக நடந்து கொண்டார்கள். அடியாட்கள் போன்று அவர்களின் நடத்தை இருந்தது. என்னை பேசவிடாது தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

ஆனால் ஒரு சிலர் ஆரோக்கியமான முறையில் தமது கருத்துக்களை முன்வைத்தார்கள். அவர்களுடன் நான் நடத்திய நீண்ட உரையாடலிற்குப் பின்பு அவர்களாகவே ஒரு தீர்மானத்தை முன்வைத்தார்கள். அதன்படி ஒரு ஆண்டு கால எல்லைக்குள் ஜேர்மனியில் நடைபெறும் ஆலய வழிபாடு, திருமணங்கள் உட்பட தமிழர் நிகழ்வுகள் அனைத்தும் தமிழில் நடைபெறுவதற்கு தாம் ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள். என்னுடைய நோக்கமும் விருப்பமும் அதுவாகவே இருந்தது.

இது உண்மையில் நல்ல ஒரு திருப்பமாக அமைந்தது. இந்து மதத்திற்கு ஆதரவாக வாதாட வந்தவர்களே இந்தத் திட்டத்தை முன்வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம். இவர்களின் இந்த முயற்சிக்கு என்னால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவதாக நான் வாக்குறுதி அளித்திருக்கிறேன். ஆனால் இங்கே உள்ள பூசாரிகளை மீறி இவர்களால் வெற்றி பெற முடியுமா என்பது இதில் உள்ள மிகப் பெரிய கேள்வி.

இப்பொழுது இதை இங்கே எழுதுவதன் மூலம் இரண்டு விடயங்களை பதிவு செய்ய நினைக்கின்றேன். முதலாவது ஜேர்மனியில் டோட்முண்ட் நகரில் கூடிய தமிழர்கள் ஒரு ஆண்டுக்குள் அனைத்து ஆலயங்கள், திருமணங்கள் போன்றவற்றில் தமிழைக் கொண்டு வரவதற்கு முடிவெடுத்துள்ளார்கள் என்பது.

மற்றது ஜெயந்திநாதசர்மா எனக்கு அளித்த வாக்குறுதி. இந்து மத அறிஞர்கள் ஒன்று கூடி பொது இடத்தில் பகிரங்கமாக என்னுடன் விவாதித்து என்னுடைய மந்திரங்கள் பற்றிய நூலுக்கு பதில் தருவார்கள் என்பது. இந்த வாக்குறுதியை இவர்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக நான் இந்தப் பூசாரிகளை நோக்கி பகிரங்கமான சவாலை விடுக்கின்றேன்.

மந்திரங்கள் பற்றியும் அதன் பின்புலம் பற்றியும் நான் எழுதியவை மிகச் சரியானவை. இதை எங்கேயும் எந்த மேடையிலும் வந்து சொல்வதற்கு நான் தயார். இந்து மதம் பற்றி எந்தக் கொம்பனுடன் வேண்டுமென்றாலும் விவாதம் செய்வதற்கு நான் தயார். இது என்னுடைய பகிரங்கமான அறைகூவல்.

(குறிப்பு: இந்த அறைகூவல் பத்திரிகை, இணையத்தளங்கள், துண்டுப் பிரசுரங்கள் ஊடாக எதிர்தரப்பிற்கு அறிவிக்கப்படுகின்றது)

  • Replies 81
  • Views 10.9k
  • Created
  • Last Reply

பூசாரி என்டால் ஐயரே???? தமிழில் மந்திரம் சொன்னால் பிள்ளையாரை கும்பிடுவிங்களே????

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சபேசன் அவர்களே,

நல்லதொரு முயற்சி செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

" ஜேர்மனியில் நடைபெறும் ஆலய வழிபாடு, திருமணங்கள் உட்பட தமிழர் நிகழ்வுகள் அனைத்தும் தமிழில் நடைபெறுவதற்கு தாம் ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்"

பார்ப்பம் இதற்கு ஐயர்மார்கள் உடன்படாவிட்டால் வாக்குறுதி தந்தவர்கள் என்ன செய்கிறார்களென்று?

இந்து மதம் பற்றி எந்தக் கொம்பனுடன் வேண்டுமென்றாலும் விவாதம் செய்வதற்கு நான் தயார். இது என்னுடைய பகிரங்கமான அறைகூவல்.

முன்னுதாரணமாக இருக்கும் உங்களுக்கு இப்படியான வசனம் அழகில்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பூசாரி என்டால் ஐயரே???? தமிழில் மந்திரம் சொன்னால் பிள்ளையாரை கும்பிடுவிங்களே????

பூசாரி = ஐயர் = அந்தணன்

தமிழில் சொன்னால், என்ன செல்கிறார்களென எல்லோருக்கும் விளங்கும். அதன்பிறகு அதில் சொல்வது சரியெனப்பட்டவர்கள் கும்பிடுவார்களென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சவாலை ஏற்க ஆறுமுக நாவலரை யாழ் கள மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

சபேசன் வாழ்த்துக்கள். பிரபா சொன்னது போல் கொம்பன் போன்ற சொல்லாடலை தவிருங்கள். அத்தோடு அவை தேவை அற்ற திசை திருப்பலுக்கும் துணை போகும்.

முடிந்தால் விவாதங்கள் பங்குபற்றுபவர்களின் உடன்பாட்டுடன் ஒளிப்பதிவு செய்ய முடியாவிட்டாலும் ஒலிப்பதிவாகுதல் செய்ய முயற்சியுங்கள் ஆதாரத்திற்காக.

நன்றி

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூசாரி = ஐயர் = அந்தணன்

தமிழில் சொன்னால், என்ன செல்கிறார்களென எல்லோருக்கும் விளங்கும். அதன்பிறகு அதில் சொல்வது சரியெனப்பட்டவர்கள் கும்பிடுவார்களென நினைக்கிறேன்.

தமிழ் நன்றாக வாழுது.... "பூசாரி = ஐயர்= அந்தணன்" எப்ப தொடக்கம் மூன்றும் ஒன்றானது?

எனக்கு தெரிந்து பூசாரி அந்தனராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றும் அவர்கள் எந்த ஆலயத்திலும் மந்திரம் சொல்லியும் கண்டததில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த சில மாதங்களிற்கு முன்பு சமஸ்கிருத "மந்திரங்கள்" பற்றி நான் எழுதியிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழர்களின் விழாக்களில் சொல்லப்படும் வடமொழி மந்திரங்கள் எவ்வளவு தூரம் ஆபாசமும் அருவருப்பும் கொண்டவை என்பதை அதில் விளக்கியிருந்தேன்.

இந்த வடமொழி மந்திரங்களை மேலும் ஆராய்ந்து அதை ஒரு தொடராகவும் (இந்து மதமும் பெண்களும்) எழுதியிருந்தேன். அண்மையில் அதை ஒரு சிறு நூலாகவும் ஜேர்மனியில் வெளியிட்டிருந்தேன். இந்த நூலினைப் படித்த சில தீவிர மதவாதிகள் என்னை ஒரு பகிரங்க விவாதத்திற்கு வரும்படி அழைத்திருந்தார்கள்.

ஜேர்மனியில் உள்ள இந்து ஆலயங்களில் பூசை செய்கின்ற பல பூசாரிகள் விவாதத்திற்கு வருவார்கள் என்றும், எனக்கு அவர்கள் விளக்கம் தருவார்கள் என்றும் அவர்கள் எனக்கு அறியத் தந்திருந்தார்கள். அவர்களுடைய சவாலை நான் ஏற்றுக் கொண்டேன். பூசாரிகள் தங்கள் "பொன்னான" நேரத்தை ஒதுக்கி விவாதத்தில் கலந்து கொள்வதற்காக விவாதத்திற்கான நாளும் இடமும் ஒரு மாதத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கடந்த 7.09.08 ஞாயிற்றுக் கிழமை அன்று ஜேர்மனியில் உள்ள டோட்முண்ட் நகரில் விவாதம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. சரியான நேரத்திற்கு நான் சென்றிருந்தேன். எந்த ஒரு பூசாரியும் அங்கு வரவில்லை. இந்து மதத்தைப் பற்றி எள்ளளவு அறிவு கூட இல்லாத சிலர் அங்கு வந்து என்னுடன் அடாவடித்தனமாக நடக்க முற்பட்டார்கள். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பூசாரிகளின் வருகைக்காக நான் காத்திருந்தேன்.

ஒரு மணித்தியாலம் தாமதமாக "ஜெயந்திநாதசர்மா" என்கின்ற ஒரே ஒரு பூசாரி மட்டும் வந்தார். ஆனால் அவரால் என்னுடன் விவாதம் செய்ய முடியவில்லை. மந்திரங்களின் அர்த்தத்தை தன்னால் விளங்கப்படுத்த முடியாது என்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்ட அவர் அதற்கு தம்மிடம் வேறு ஆட்கள் இருப்பதாகவும், அந்த "அறிஞர்கள்" அனைவரும் விரைவில் எனக்கு விளக்கத்தை தருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் அவர் தனக்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டு சென்று விட்டார்.

ஏழாம் திகதி அன்று அனைத்து ஆலய பூசாரிகளும் என்னுடன் விவாதம் செய்து மந்திரங்கள் பற்றிய "புனிதமான(?)" விளக்கத்தை எனக்கு தருவார்கள் என்று கூறியதால்தான் நான் அன்றைக்கு அங்கு சென்றிருந்தேன். ஆனால் அங்கே வந்த ஒரேயொரு பூசாரியான ஜெயந்திநாதசர்மாவோ இன்னொரு நாள் விளக்கத்தை தருவதாக சொல்லி விட்டு ஓடி விட்டார்.

ஜெயந்திநாதசர்மா சென்ற பின்பும் என்னுடன் ஒரு சிலர் அடாவடித்தனமாக நடந்து கொண்டார்கள். அடியாட்கள் போன்று அவர்களின் நடத்தை இருந்தது. என்னை பேசவிடாது தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

ஆனால் ஒரு சிலர் ஆரோக்கியமான முறையில் தமது கருத்துக்களை முன்வைத்தார்கள். அவர்களுடன் நான் நடத்திய நீண்ட உரையாடலிற்குப் பின்பு அவர்களாகவே ஒரு தீர்மானத்தை முன்வைத்தார்கள். அதன்படி ஒரு ஆண்டு கால எல்லைக்குள் ஜேர்மனியில் நடைபெறும் ஆலய வழிபாடு, திருமணங்கள் உட்பட தமிழர் நிகழ்வுகள் அனைத்தும் தமிழில் நடைபெறுவதற்கு தாம் ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள். என்னுடைய நோக்கமும் விருப்பமும் அதுவாகவே இருந்தது.

இது உண்மையில் நல்ல ஒரு திருப்பமாக அமைந்தது. இந்து மதத்திற்கு ஆதரவாக வாதாட வந்தவர்களே இந்தத் திட்டத்தை முன்வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம். இவர்களின் இந்த முயற்சிக்கு என்னால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவதாக நான் வாக்குறுதி அளித்திருக்கிறேன். ஆனால் இங்கே உள்ள பூசாரிகளை மீறி இவர்களால் வெற்றி பெற முடியுமா என்பது இதில் உள்ள மிகப் பெரிய கேள்வி.

இப்பொழுது இதை இங்கே எழுதுவதன் மூலம் இரண்டு விடயங்களை பதிவு செய்ய நினைக்கின்றேன். முதலாவது ஜேர்மனியில் டோட்முண்ட் நகரில் கூடிய தமிழர்கள் ஒரு ஆண்டுக்குள் அனைத்து ஆலயங்கள், திருமணங்கள் போன்றவற்றில் தமிழைக் கொண்டு வரவதற்கு முடிவெடுத்துள்ளார்கள் என்பது.

மற்றது ஜெயந்திநாதசர்மா எனக்கு அளித்த வாக்குறுதி. இந்து மத அறிஞர்கள் ஒன்று கூடி பொது இடத்தில் பகிரங்கமாக என்னுடன் விவாதித்து என்னுடைய மந்திரங்கள் பற்றிய நூலுக்கு பதில் தருவார்கள் என்பது. இந்த வாக்குறுதியை இவர்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக நான் இந்தப் பூசாரிகளை நோக்கி பகிரங்கமான சவாலை விடுக்கின்றேன்.

மந்திரங்கள் பற்றியும் அதன் பின்புலம் பற்றியும் நான் எழுதியவை மிகச் சரியானவை. இதை எங்கேயும் எந்த மேடையிலும் வந்து சொல்வதற்கு நான் தயார். இந்து மதம் பற்றி எந்தக் கொம்பனுடன் வேண்டுமென்றாலும் விவாதம் செய்வதற்கு நான் தயார். இது என்னுடைய பகிரங்கமான அறைகூவல்.

(குறிப்பு: இந்த அறைகூவல் பத்திரிகை, இணையத்தளங்கள், துண்டுப் பிரசுரங்கள் ஊடாக எதிர்தரப்பிற்கு அறிவிக்கப்படுகின்றது)

வாழ்த்துக்கள் சபேசன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு எழுத்தாளர் வரைந்தார்......

கருங்கல்தனில் சிலை வடித்து

புரியாத மொழிதனில் தீபம் காட்டி

வயிற்றைக் கழுவிடும் கூட்டமன்றோ

பார்ப்பனர் கூட்டம்!

இப்புரியாத மொழியை வணங்குவது

இத்தமிழ் இனமன்றோ

சாபம் தரித்த எம் தமிழினத்தில்

ஏன் இம்மூடத்தனம்.!

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் அய்யா அவர்களின் அறிவுப்பிரச்சாரம் தொடர வாழ்த்துக்கள்!

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்லிவிட்டு, வடஇந்தியாவில் முருகனை வழிபட கோவில் எழுப்பினால் இவர் சூத்திரக்கடவுள் என்று வழிபட மறுக்கின்றனர். ஆனால், 8-ஆம் நூற்றாண்டில் இறக்குமதியான பார்ப்பன பண்பாட்டு படைப்பின் ஒரு நுழைவான விநாயகனுக்கு சங்கத்தமிழ் இலக்கியங்களில் வழிப்பாட்டு கடவுளாக இல்லாத விநாயகனை தோப்புகரணம் போட்டு, தமிழனின் மூளையில் ஏற்றிக்கொண்டான். சரி, இந்து மத வேதம் எது? அதை சூத்திரர்களான நாம் தொடவும், பாராயணம் செய்யவும் மற்ற மதங்களைப் போல் உரிமை உண்டா? இப்படி ஆயிரக்கணக்கான கேள்வி உண்டு. ஆனால், அதற்கு இந்து மதத்தலைவர்களிடம் விடை இல்லை. காரணம், பதில் சொன்னால், பார்ப்பனத்தலைமைக்கு வேட்டு வைத்ததாகி விடும். ஆகவே, பார்ப்பன அடிவருடிகள் அந்த இடத்திற்கு போக மாட்டார்கள். பார்ப்பனர்கள் சொல்லும் சமஸ்கிருதத்தால் கடவுள் புனிதம் காப்பாற்றபடுமென்றால், சங்கத்தமிழுக்கு (9990 ஆண்டுகள் சங்கம் கட்டி வளர்த்த தமிழுக்கு) அருகதை இல்லையா? தமிழர்களின் அறிவையும், மானத்தையும் காவு கேட்கும் சர்மாக்கள் உள்ளவரை இந்த சூழ்ச்சி இருந்து கொண்டேதான்இருக்கும். தமிழகத்தில் "கீதை" என்ற பார்ப்பன நூலை அம்பலப்படுத்தி விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்கள் எழுதிய "கீதையின் மறுபக்கம்" என்ற நூலுக்கு வழக்கு தொடருவோம் என்று 3-ஆண்டுகளுக்கு முன்பு வசனம் பேசிய இராம.கோபால அய்யரும், சோ.இராமசாமியும் இன்றுவரை வழக்கு தொடர முடியாமல் முனகிக்கொண்டு இருப்பதின் காரணம் என்ன என்பதையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிந்திக்க வெண்டும்.

பெரியார் குயிலுக்கு வாழ்த்துக்கள்.

ஆரியன், நாம் தமிழரை, ஆரியக்கடவுளுக்கு தோப்புக்கரணம் போடவைத்தானே. இச்சூட்சுமத்தை விளங்காத தமிழனை என்ன சொல்வது. ஆனால் முருகனைச் சூத்திரக்கடவுள் என்கிறார்கள்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்ச்சி சபேசன் வாழ்த்துக்கள்

அடிக்குமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.ஆனானப்பட்ட.............................

நாம் ஒன்றும் கொம்பு முளைத்தவர்களும் அல்ல,

கொம்பு முளைத்தவையோடு முட்டி மோதுவது அறிவுடைய மனிதர்கள் செய்வதும் அல்ல என்றாலும்,

ஏதோ எமது பாமர அறிவு வாசித்து அறிந்து கொண்டதை யாழ்களத்தின் அறிஞர் பெருமக்களும்

என் போன்ற பாமர வாசகர்களும் வாசித்து பயன் பெறட்டும் என்கிற எண்ணத்தால் கீழ்கண்ட தகவல்களை இணைக்கின்றேன். .

இது போல எமது சிற்றறிவுக்கு எட்டிய தகவல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பரிமாறிக்கொள்ள எண்ணம் கொண்டுள்ளோம் - நன்றி

Message of the Vedas

By J.G. Arora

Innumerable mantras of the Vedas emphasise oneness, universal brotherhood, harmony, happiness, affection, unity and commonality of entire humanity. A few illustrations are given here.

As per the Atharva Veda, “Devasya pashya kavyam na mamaar na jiryati”, (See the divine scripture. It neither grows old, nor ends). Vedas are ancient Bharat’s timeless and divine scriptures to guide humans in their day-to-day life as also in their pursuit of self-realisation.

Written in Sanskrit, the Vedas are the proud possession and earliest books of mankind. They are the foundation of Sanatan Dharma commonly known as Hinduism. Vedas contain sublime thoughts in sublime language and represent the world’s ancient-most literature.

First mantra of the Rig Veda is the first known poem in the world.

Four Vedas viz. Rig Veda, Yajur Veda, Sama Veda and Atharva Veda, contain altogether 20416 mantras. Rig Veda is the oldest and has maximum number of mantras. Each Vedic mantra has its Devata; and the Rishi (sage) to whom the mantra was revealed and its Chhanda (metre). And all Vedas have got their respective Mantra Samhitas, braahmana, aaranyaka and Upanishad books.

You are ‘Supreme’

While addressing humanity, Atharva Veda informs every seeker,

Shukro-asi, bhrajo-asi, swar-asi, jyotir-asi(You are pure, you are radiant, you are blissful and you are enlightened).

Carrying this message further, various Upanishads proclaim,

1. aham brahmasmi (I am the Supreme: Brihad Aaranyak Upanishad);

2. tat tvam asi (you are the same: Chhandogya Upanishad);

3. pragyanam brahmam (know the Supreme: Aitreya Upanishad)

4. ayam atma Brahmam (this Atma is Supreme: Mandukya Upanishad).

These four maxims are called four Maha Vakyas (great maxims).

Casteless and classless society

Vedas are all-embracing and stipulate a casteless and classless society. Vedas treat all humans with the same affection.

Vedas speak of nobility and one-ness of entire humanity (krinvanto vishvam aryam).

Mantra number 10-13-1 of Rig Veda addresses entire humanity as divine children (Shrunvantu vishve amrutsya putraha)

Innumerable mantras of Vedas emphasise oneness, universal brotherhood, harmony, happiness, affection, unity and commonality of entire humanity. A few illustrations are given here.

1.Vide Mantra number 5-60-5 of Rig Veda, the Divine Poet declares, All men are brothers; no one is big, no one is small, all are equal.

2. Mantra number 16.15 of Yajur Veda reiterates that all men are brothers; no one is superior or inferior.

3. Mantra number 3-30-1 of Atharva Veda wants all humans to be affectionate and to love one another as the cow loves her newly born calf.

Underlining harmony still further,

mantra number 3-30-6 of Atharva Veda commands humankind to dine together, and be as firmly united as the spokes attached to the hub of chariot wheel.

Last mantra of Rig Veda further emphasises unity and harmony of entire humanity,

Samani Vha Aakuti, Samana Hrudyani Vha, Samanam Astu Vo Mano, Yatha Vha Su Saha Asti.

(Let your aims be one, let your hearts be one, let your minds be one, and let your unity go from strength to strength

Mother Earth and harmony

Though ecology is claimed to be a modern concept, the best tribute ever paid to environment is found in Vedas. 63 mantras of Atharva Veda (12.1.1. to 12.1.63) pertain to Prithvi-sukta (Hymn to Earth), which glorifies Mother Earth. Vedic sages regarded Earth as sacred and inviolable.

Mantra number 12.1.12 of Atharva Veda calls Earth as the mother and humanity as its children (Mata bhumih putro aham prithivyaha). Prithvi Sukta proclaims Earth as the mother of all creatures, and solicits its blessings.

According to Prithvi Sukta, Mother Earth is adorned with heights, slopes, plains, hills, mountains, forests, plants, herbs and treasures; and She takes care of every creature that breathes and stirs. May She give us joy, wealth, prosperity, good fortune and glory!

Universal peace and harmony are integral to the Vedas. Famous Shanti Mantra (Hymn of Peace) in Yajur Veda for peace and harmony to pervade the entire universe is as follows:-

I pray for peace to pervade all the worlds; I pray for peace in the Sky and Earth; peace in waters; peace in herbs, vegetation and forests; peace among all people and rulers of the world; peace in entire universe; peace for everyone everywhere. Peace, real peace. I pray for that very peace!

Vedas propagate universal harmony and well-being of entire humanity.

Vedic sentiment is Sarve janah sukhino bhavantu (may every one be happy)!

Many Vedic mantras direct humans to share their wealth with others.

1. Rig Veda (1-15-8) stipulates, Let us become God’s instruments and distribute fortune to the poor and needy.

2. Rig Veda (10.117.6) further declares that not sharing your wealth with others is sinful, and any one who eats alone incurs sin.

3. Similarly, Atharva Veda (3-30-7) commands humans to share their comforts with others.

Constant efforts made for propagating the Vedic heritage and Sanskrit will certainly save Vedic echoes and ethos in the land of Vedas as Atharva Veda proclaims, Effort is in my right hand, and victory in my left (kritam may dakhshine haste, jayo may savya aahitah).

(The writer is former Chief Commisioner of Income Tax and can be contacted at 71, Shanti Niketan, Prabhat Colony, Santa Cruz (East), Mumbai-400 055)

http://www.organiser.org/dynamic/modules.p...228&page=29

இத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும் ஈழவிடுதலை போராட்டத்தின் சளைக்காத ஆதரவாளனாக என்னை மாற்றியது நான் கற்ற வேதமும், கீதையும் அதனால் தர்மத்தின் பால் வைத்த பற்றுதலும் தான் என்றால் அது மிகையாகாது.

வேதங்களையும் கீதையையும் சரிவர புரிந்து கொண்டவர்கள் ஈழவிடுதலைக்கு எதிராக செயல்பட முடியாது. அப்படி செயல்படும் போலி வேதிகளையும் போலி பார்ப்பனர்களையும் போலியாக கீதோபதேசம் செய்பவர்களையும் நோக்கியதாக உங்கள் போர்வாள் நீட்டப்படுகிறது என்றால் அதற்கு எமது ஆதரவும் நிச்சயம் உண்டு.

ஆனால் வேதங்களும் கீதையும் சொல்லிய தர்மத்தை சுயநலத்திற்காக துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கும் கும்பலை விட்டு விட்டு, வேதங்களையும் கீதையையும் கற்று தெளிவடையாமலே அவற்றை பழிக்க நினைப்பது, எய்தவனை விட்டு விட்டு அம்பை முறிக்க நினைப்பது போல் ஆகும்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னாள் வருமானவரி கமிசனர் யாராக இருப்பார் என்பது அறியாது அப்பாவி தமிழன் "அட்டாச்மெண்ட்" செய்வது அபத்தம். அவாள் என்றுமே மலத்தில் சிதறி இருக்கும் அரிசியின் பெருமையை மட்டுமே பேசுவாள். மலத்தை அருகில் போய் பாரும் ஓய்... அப்போது புரியும் நாற்றமா? மணமா?? என்பது.

ஒருசமயம் பார்ப்பனர் யாரேனும் இவ்வினைப்பைச் செய்திருந்தால், நக்கீரன் வாரப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள "எங்கே செல்கிறது இந்துமதம்?" என்ற நூலை வாங்கி படிக்கவும். மேலும், வேதம் பயி;ன்று, இந்து மதத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவன் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சாமிகளிடமும் திருச்சி உஷா, நடிகை சொர்ணமால்யா ஆகியோரைப் பற்றியும், கடவுளின் சந்நிதியில் கொடூரமான வெட்டிக்கொலை செய்யப்பட்ட பார்ப்பனர் குடும்பத்தையும் கேட்டுப்புரிந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முன்னாள் வருமானவரி கமிசனர் யாராக இருப்பார் என்பது அறியாது அப்பாவி தமிழன் "அட்டாச்மெண்ட்" செய்வது அபத்தம். அவாள் என்றுமே மலத்தில் சிதறி இருக்கும் அரிசியின் பெருமையை மட்டுமே பேசுவாள். மலத்தை அருகில் போய் பாரும் ஓய்... அப்போது புரியும் நாற்றமா? மணமா?? என்பது.

.

எவர் இந்து மதத்தை பற்றி கொஞ்சம் சிறப்பாக எழுதினாலும் உடனே பார்ப்பன முத்திரை குத்தி விடுவீர்களே!

கட்டுரையை எழுதியவர் பெயர் J.G. Arora. அரோரா என்பது பஞ்சாபில் சாதாரண குடியானவர்களின் குடும்ப பெயர் என்று நீங்கள் அறியாமல் இருப்பது தான் வேடிக்கை!!!

வேதம் பயி;ன்று, இந்து மதத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவன் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சாமிகளிடமும் திருச்சி உஷா, நடிகை சொர்ணமால்யா ஆகியோரைப் பற்றியும், கடவுளின் சந்நிதியில் கொடூரமான வெட்டிக்கொலை செய்யப்பட்ட பார்ப்பனர் குடும்பத்தையும் கேட்டுப்புரிந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நாத்திக கொள்கை பேசுபர்களிலும் தான் நாட்டையே திருடி வாயில் போட்டுக்கொள்ளும் நல்ல பல திருடர்களும் உருவாகி விட்டார்கள். அதற்காக நாத்தீக கொள்கை என்பதே திருடர்களின் கொள்கை என்று எவராவது சொன்னால் அப்படி சொல்பவர்கள் அடிமுட்டாள்களாக தான் இருக்க முடியும். அது போல் தான் இதுவும்.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் அடிமைமக்களின் தலைவன், வேதங்களின் உண்மைகளை உள்ளது உள்ளவாரே கற்றுத்தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக சமஸ்கிருதம் கற்று, வேதங்களின் நாற்றத்தை அம்பலப்படுத்திய மாமேதை அம்பேத்கர் நூல்களை படிக்காமல் புதிய, புதிய வியாக்கனங்கள் பயன்தரா.

நடுநிலையோடு பார்க்கிறேன் என்று கூறி விட்டு, ப+ணூல் கொண்டு முதுகு சொறிய வேண்டாம்.

நால் வேதங்களையும் இன்னும் என்னென்ன இந்து மதக்குப்பைகள் உள்ளதோ அனைத்தும் படித்து பிரச்சாரம் செய்கிறவன் எவனும் இன்று வரை ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாகவோ, ஏன் ஈழம் தமிழர்களின் ப+ர்வீகம் என்று கூட சொன்னதில்லை. சொல்லப்போவதுமில்லை. காரணம், கீதை, அதற்கு வழங்கலாறுகளைத் தந்த ஸ்ருமிதிகளுமே. பச்சையாகச் சொன்னால், அது சூத்திரர்களின் போராட்டம். அது மட்டுமல்ல, வவுனியா சிங்கள கூலிப்படை தலைமையகம் தாக்கப்பட்டபோது அதில் இருந்த இந்திய பொறியாளர்கள் இருவரும் பார்ப்பனர்களே என்பதையும் அறிய வேண்டும். போப்பிடம் கட்டி அனைத்து ஆசீர்வாதம் பெற முடியும். இந்து மத வேதத்தலைவர்களிடம் அருகிலாவது போகமுடியுமா? வெற்றிவேல் அய்யா!

வேத வியாக்கானம் மறுத்து., மனிதனாக வாழ நம் இனத்தின் விடுதலையில் முழுநேர பங்காற்றுங்கள். அதுவெ உங்கள் தலைமுறைகளை உயர்நிலையை அடையச்செய்யும்.

நீங்கள் அம்பேத்காரின் வேதங்கள் பற்றிய புத்தகங்களை படித்துள்ளீர்களா. அத்தோடு அம்பேத்கார் ஒரு சமஸ்கிருத பண்டிதர் என்று உங்களுக்கு யார் சொன்னது?

மேலும் அம்பேத்கார் இந்திக்கு பதிலாக சமஸ்கிருதத்தை இந்திய ஆட்சி மொழியாக கொண்டுவரலாம் என்று சொன்ன சரித்திரமாவது உங்களுக்கு தெரியுமா?

கொள்கை குப்பைகளை மட்டும் படித்து கொண்டிராமல் வெளியுலகத்தில் மற்றவர்கள் எழுதுவதையும் படிப்பவர்கள் சுயசிந்தனை பெறுவார்கள்!

இல்லை என்றால் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று தேய்ந்து போன இசைத்தட்டு போல ராகம் பாடவேண்டியது தான்

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

என்னுடைய முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி!

"பூசாரிகள்" என்று எழுதியதற்கு காரணம் இருக்கின்றது. இவர்களை "ஐயர்" என்று அழைப்பதை நான் விரும்பவில்லை. அப்படி அழைக்கப்படுவதற்கான தகுதி இவர்களுக்கு இருப்பதாகவும் நான் நம்பவில்லை.

"பார்ப்பனர்கள்" என்றும் சொல்ல முடியாத ஒரு நிலை இருக்கின்றது. ஈழத்தில் பூசை செய்பவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் அல்ல என்று ஒரு கருத்து இருக்கின்றது. பொதுவாகவே சைவ சமயத்தில் உள்ள பார்ப்பனர்கள் வேளாள சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சில ஆய்வுகள் சொல்கின்றன.

இல்லை, இவர்கள் ராஜராஜசோழன் காலத்தில் கர்நாடகாவில் இருந்து தருவிக்கப்பட்ட பார்ப்பனர்கள்தான் என்ற கருத்தும் உண்டு. ஈழத்தில் "சர்மாக்கள்" என்று அழைக்கப்படுபவர்கள் கன்னட வழி வந்தவர்கள் என்று இந்த ஆய்வுகள் சொல்கின்றன.

இது பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாததால் "பார்ப்பனர்கள்" என்ற அழைப்பதை தவிர்த்து "பூசாரிகள்" என்று விழித்தேன். ஈழத்து பூசாரிகளை நோக்கிய அறைகூவல் என்பதாற்தான் இப்படி எழுதியிருக்கின்றேன்.

ஒரு விடயம் கேள்விப்பட்டேன். மந்திரங்கள் பற்றிய என்னுடைய கருத்தை முறியடிப்பதற்காக இது பற்றி அறிந்த வர விரைவில் சில பூசாரிகள் இந்திய செல்வதற்கு உள்ளார்களாம். இவர்களை அடிக்கடி இந்தியாவிற்கு விரட்டுவது என்று தீர்மானித்திருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீறல் விழுந்த இசைத்தட்டின் ராகக்கேள்வி?

கொள்கைகளை குப்பைகள் என்று சொல்லும் போதே., கொள்கைகளை உங்கள் வசதிக்கு வளைப்பதில் வல்லவர் என்பது அறியக்கிடக்கிறது.

மேலும் நான் அம்பேத்கரை சமஸ்கிருத பண்டிதர் என்று சொல்லவில்லை.

கேள்வி1: அம்பேத்கர் எந்த நூலில், எந்த பத்தியில் சொல்லியுள்ளார் என்பதை இணைப்பாகத்(கற்றறிந்த தாங்கள்) தரமுடியுமா?

கேள்வி2: மேல்நிலையாக்கம்என்ற பெயரில் தமிழன் சிந்தனை வளர்ச்சியில் தொய்வையும், பிற்போக்குதன்மையையும் வளர்க்கும் பிற்போக்காளர்கள் உலக அறிஞர்கள் சிந்தனையோடு வழிபாட்டு தமிழையும் தமிழ் மரபையும் ஒப்பிட்டு காட்டியிருந்தால் மகிழ்ச்சியிருக்குமே., பார்ப்பானோ டு எதற்கு சம்பந்தப்படுத்த வேண்டும்.

மானமற்ற ஆயிரம் பேரோடு போராடுவதை விட., மானமுள்ள ஒருவனனோடு போராடலாம் - தந்தைபெரியாh

;

"பூசாரிகள்" என்று எழுதியதற்கு காரணம் இருக்கின்றது. இவர்களை "ஐயர்" என்று அழைப்பதை நான் விரும்பவில்லை. அப்படி அழைக்கப்படுவதற்கான தகுதி இவர்களுக்கு இருப்பதாகவும் நான் நம்பவில்லை.

"ஐயர்" தகுதியை அடைவதற்கு இந்த பூசாரிகள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நீங்களே அறிந்து அவர்களுக்கு சொன்னால் பாவம் அவர்களும் ஐயர் தகுதியை பெற்றுக் கொள்வார்கள்.

கீறல் விழுந்த இசைத்தட்டின் ராகக்கேள்வி?

கேள்வி1: அம்பேத்கர் எந்த நூலில், எந்த பத்தியில் சொல்லியுள்ளார் என்பதை இணைப்பாகத்(கற்றறிந்த தாங்கள்) தரமுடியுமா?

A dispatch of the Press Trust of India (PTI) dated September 10, 1949 states that Ambedkar was among those who sponsored an amendment making Sanskrit as the official language of the Indian Union in place of Hindi.

Most newspapers carried the news the next day, i.e., on September 11, 1949

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

"ஐயா" என்பதுதான் "ஐயர்". "ஐயா" என்று நாம் அழைப்பது எமது தந்தையை. தந்தைக்கு சமமாக மதிப்பவர்களையும் நாம் ஐயா என்று அழைப்போம். எமது மொழிக்காக, நாட்டுக்காக பாடுபட்ட பெரியவர்களையும் நாம் ஐயா என்று அழைப்பது உண்டு.

அதேவேளை அடிமைகளும் தங்கள் எசமானர்களை "ஐயா" என்றுதான் அழைக்கின்றார்கள். ஈழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரையும் எம்மவர்கள் அச்சத்தில் "ஐயா" என்று அழைப்பதைக் கண்டிருக்கிறேன்.

வயதுக்கு மூத்தவர்களை "ஐயா" என்று அழைப்பது குறித்து எனக்கு ஆட்சேபணை அல்ல.

ஆனால் எந்த வயதாக இருந்தாலும், அவனை ஐயா என்று ஒருவன் அழைத்தால், அழைப்பவன் அவனுக்கு அடிமையாக இருக்கின்றான் என்றுதான் அர்த்தம்.

நான் அடிமையாக இருக்க விரும்பவில்லை. அத்துடன் தமிழை புறந்தள்ளி வேறொரு மொழியை திணிக்கின்ற எவரும் "ஐயா" என்றோ "ஐயர்" என்றோ அழைக்கப்படும் தகுதி படைத்தவர்கள் அல்ல.

  • தொடங்கியவர்

வணக்கம் வெற்றிவேல்!

பொதுவாகவே ரிக் வேத மந்திரங்களை மேலும் கீழும் வெட்டி நடுவில் நல்ல விடயம் போன்று தோன்றுகின்ற வசனங்களை தந்து பலர் எம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக

"இந்திரனே! இந்த சோமபானத்தை அருந்து! எங்களைக் காப்பாற்று! எங்கள் எதிரிகளைக் கொல்!"

இப்படி இருந்தால் இதில் "எங்களைக் காப்பாற்று" என்பதை மட்டும் எழுதி ரிக் வேதம் எதோ அற்புதமான வேதம் போன்று காட்டுவார்கள்.

எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கின்ற நீங்கள் இவைகளையும் ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நல்லதொரு முயற்சி. ஆனால் வார்த்தைப் பிரயோகங்கள் சரியில்லை. ஒருவர் தவறு செய்கின்றார் என்றால் அதை நாகரீகமாக கருத்தாடி தவறைச் சுட்டிக் காட்டுவதே முறையானது. சவால்கள் விடுவதும் நான் சொல்வது தான் அனைத்தும் சரியானது என்று வாதம் செய்வதும் சுயதம்பட்டத்தின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகின்றது. குறிப்பிட்ட சந்திப்பில் பிரபலமான பிராமணர்கள் கலந்து கொண்டு உங்களோடு வாதிடுவார்கள் என்று கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தவர்கள் தானே உங்களுக்கு அறிவித்தார்கள். இது சம்பந்தமான சரியான ஏற்பாடுகளை அவர்கள் செய்யாமலும் விட்டிருக்கலாம். எனவே இதில் பிராமணர்களை மட்டும் குறை சொல்வதிpல் பயனில்லை. ஆனால் உங்களிடம் கலந்தரையாடலில் கலந்து கொண்டு வாக்களித்த ஜெயந்திநாதசர்மா இது சம்மந்தமான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜேர்மனியிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் ஒரு வருடத்திற்குள் தமிழில் பூஜை நடக்குமென்று டோட்முண்ட் நகரில் கூடிய தமிழர்கள் முடிவெடுத்ததாக எழுதியுள்ளீர்கள். அங்கு ஜேர்மனியிலுள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் வந்திருந்தார்களா??

அடுத்து இனி மந்திரங்கள் சம்பந்தமாக வாதப்பிரதிவாதங்கள் இன்னொரு தினத்தில் நடக்குமானால் பொதுவான சிலரை நீதிபதிகளாக நியமித்து நடைபெறும் வாதப்பிரதிவாதங்கள் சம்மந்தமான சரியான தீர்ப்பை வழங்கச் செய்யலாம். இந்த நீதிபதிகளில் ஒருவராவது பிராமணரில்லாத சமஸ்கிரதம் தெரிந்தவராக இருந்தால் மிகவும் நல்லது. அதுவரை எவரினது வாதம் உண்மையானது என்பது கேள்விக்குறி தான்.

வணக்கம் வெற்றிவேல்!

பொதுவாகவே ரிக் வேத மந்திரங்களை மேலும் கீழும் வெட்டி நடுவில் நல்ல விடயம் போன்று தோன்றுகின்ற வசனங்களை தந்து பலர் எம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக

"இந்திரனே! இந்த சோமபானத்தை அருந்து! எங்களைக் காப்பாற்று! எங்கள் எதிரிகளைக் கொல்!"

இப்படி இருந்தால் இதில் "எங்களைக் காப்பாற்று" என்பதை மட்டும் எழுதி ரிக் வேதம் எதோ அற்புதமான வேதம் போன்று காட்டுவார்கள்.

எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கின்ற நீங்கள் இவைகளையும் ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

எங்கள் குடியையே வேரோடு அறுக்க நினைக்கும் எங்கள் எதிரியை கொல் என கேட்பது எப்படி தவறாக முடியும்? இதை ஏன் எவரும் மறைக்க வேண்டும். நீங்கள் சொல்வது ஆதாரமற்றதும் பொருத்தமற்றதும் ஆகும்

நியாயத்தையும் தர்மத்தையும் காப்பாற்ற யுத்தத்தில் எதிரிகளை கொல்வது பாவம் என்று இந்துமதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. கீதையும் அதையே சொல்கிறது. அதுவே நடைமுறை சாத்தியமானதாகவும் இருக்க முடியும்.

ஆகவே தான் விடுதலை வேள்விக்கு நாம் பலியெடுத்து கொண்டிருக்கும் எதிரிகளின் தலைகளை நான் பாவச்செயலாக பார்க்கவில்லை.

இந்து மதம் என்பது வெறும் அகிம்சையை மட்டும் போதிக்கும் சன்னியாசிகள் மடம் அல்ல! அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்பாற்ற செய்யப்படும் போராட்டங்களை இந்துமதம் பயங்கரவாதம் என்றும் எங்கும் சொல்லவில்லை.

தர்மமும் நியாயமும் உன்பக்கம் என்றால் அதற்கு எதிராக வேலை செய்பவன் உன் அண்ணண் தம்பி என்றாலும் கூட துவம்சம் செய்துவிடு என்பதே கீதை சொன்ன தர்மம்! அது டக்கு என்றாலும் சரி சங்கரி என்றாலும் சரி விட்டு வைக்காதே என்று கீதை சொல்வது எப்படி தவறாக முடியும்?

ஒரு அதர்ம ஆட்சிக்கு எதிராக தர்மத்தை நிலை நாட்ட போராடுபவன் பயங்கரவாதி என்றால் உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி கீதாச்சாரியன் ஸ்ரீ கிருஷ்ணனாக தான் இருக்கமுடியும். இதை நான் எடுத்து சொன்ன வேளைகளில் பல இந்திய அதிகாரிகள் திக்குமுக்காடி போனதுண்டு.

அவர்கள் பின்பு ஈழப்போராட்டத்தின் நியாயத்தன்மையையும் ஒப்புக்கொண்டதுண்டு.

முள்ளை முள்ளால் எடுப்பது என்பது ஒரு கலை. அதில் நம்மவர்கள் இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது. வெறும் உணர்ச்சிவசப்படுவதால் மட்டும் உலகத்தை வசப்படுத்தி விட முடியாது.

இறுதியில் வெற்றிக்கனியை தட்டிப்பறிப்பவன் உணர்ச்சிவசப்படுபவன் அல்ல உலகத்தை வசப்படுத்துபவன் தான். இதை புரிந்து கொண்டால் நாம் வெல்வது நிச்சயம்

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.