Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியிலிருந்து வெளியேற முடியாதென ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது--வன்னி மக்களின் போராட்டத்திற்கு வெற்றி

Featured Replies

திருமுறிகண்டி இன்று விடிய இன வெறி சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துவிட்டது என்ற செய்தி கேட்டேன் அதனால் வன்னியில் கிளிநொச்சியில் இருந்த சற்றலைற் கதிர் உள்வாங்கி கழற்றப்படுவதாகவும் இதனால் சிறியளவில் இருந்த மக்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது , ஆனால் முறிகண்டி சமரில் பல இராணுவம் கொல்லப்பட்டுள்ளார்கள், பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது....

  • Replies 62
  • Views 5.8k
  • Created
  • Last Reply

வன்னியில் எஞ்சி இருக்கும் ஐநா பணியாளர்கள் நாளை 10 மணிக்கு 1 தொடர் அணியாக வெளியேற உள்ளனர்.

UN expects LTTE to provide safe passage to its convoy

[TamilNet, Monday, 15 September 2008, 15:42 GMT]

The United Nations office of the Resident / Humanitarian Coordinator for Sri Lanka, in a statement issued on Monday in Colombo, said it intends to move remaining UN and humanitarian agency staff in a single convoy at 10:00 a.m. on Tuesday and that it expects the Liberation Tigers of Tamileelam (LTTE) to provide safe passage to the convoy towards Oamanthai crossing.

Full text of the press release by the UN office in Colombo follows:

15 September 2008

STATEMENT

The UN has received assurances from the LTTE that UN and humanitarian agency staff remaining in Kilinochchi can leave. We intend moving those staff in a single convoy at 10 am tomorrow morning. We expect that all staff and this convoy will be given safe passage by the LTTE to the Omanthai crossing. We reiterate that we have been compelled to temporarily relocate from Kilinochchi because of our security assessment that the situation has become too dangerous to remain working from there at this time. Because of our continuing commitment to and concern for the civilians of the Vanni, senior staff are in place to mount our humanitarian operation from Vavuniya.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26954

மக்களுக்கு சேவை செய்ய விடவில்லை என்று புலிகள் மீது குற்ற சாட்டிய ஜ நா சபை இன்று அரசு பாதுகாப்பை காரணம் காட்டி வெளியேற சொன்னதும் வெளியேறுவது?

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

அங்கீகாரம் உள்ள இறைமை ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசோடும் அங்கீகாரம் வேண்டி நிற்கும் இறைமையை நிலை நாட்ட முயலும் நடைமுறை அரசோடும் ஐநா உட்பட எந்த சர்வதேச தரப்பும் ஓரே மாதிரி உறவாடும் என்று எதிர்பார்க்க முடியாது.

அந்த சமதரப்பு அந்தஸ்தை வெல்வதற்கு செய்ய வேண்டிய முதலீடுகளும் ஏற்பாடுகளும் கடைப்பிடிக்க வேண்டிய பொறுமைகளும் கொடுக்க வேண்டிய விலையும் கணிசமானது.

இறையாமையுள்ள அரசு என்பதால் தான் சொந்த நாட்டு மக்களை கொல்கிறதா?

ஏன் இந்தே ஜ நா சபை வன்னி மக்களை இறையாமை அரசிடம் கூட்டி செல்லாமே?

  • கருத்துக்கள உறவுகள்

இறையாமையுள்ள அரசு என்பதால் தான் சொந்த நாட்டு மக்களை கொல்கிறதா?

ஏன் இந்தே ஜ நா சபை வன்னி மக்களை இறையாமை அரசிடம் கூட்டி செல்லாமே?

இறையாண்மை உள்ள அரசு மக்களை தாங்கள் பாதுகாப்போம் என்று சொன்னதன் பின்னரும் ஐ.நா. நிறுவனங்கள் அதைக் கேளாமல் கிளிநொச்சியில் நிற்கமுடியாது. அப்படி நிற்கவேண்டுமாயின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதி பெறவேண்டும். தமிழர்களும் சிறிலங்காப் பிரஜைகள் என்பதால்தானே இறையாண்மையை உறுதிப்படுத்த வன்னிப் பகுதியை நோக்கி இராணுவம் கஸ்டப்பட்டு முன்னேறுகின்றது.

நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும்???

இறைமையும் அங்கீகாரமும் இருந்தால் சட்டரீதியாக ஆயிரக்கணக்கிலும் கொல்லலாம். பின்னர் அதன் நீதி நிர்வாக அலகுகளை வைத்து பயங்கரவாதிகள் எண்டு நியாயப்படுத்தலாம்.

ஐநாவோ செஞ்சிலுவை சங்கமோ விரும்பாத இடத்திற்கு மக்களை பலவந்தமாக கொண்டு போக மாட்டார்கள். வர இருக்கும் அவலங்கள் பற்றி தெரிந்திருந்தாலும் ஐநாவோ செஞ்சிலுவைச் சங்கமோ மக்கள் எங்கு போக வேண்டும் என்று அறிவுரையும் கூறமாட்டார்கள். இதுவே யுகோசிலாவியா யுத்தத்தில் நடந்த இனப்படுகொலைகளின் போதும் நடந்தது. மக்கள் போக முடிவு செய்யும் இடத்திற்கு எந்தத் தரப்பும் தடையாக இருக்கக் கூடாது என்பது தான் அவர்களது நிலைப்பாடு.

ஆக்கிரமிப்பிற்கு எதிராக வன்னியின் நடைமுறை அரசு இறைமையை பேணி அங்கு மக்களின் அத்தியாவசிய உணவு சுகாதார வாழ்விடத் தேவைகளை பூத்தி செய்து பாதுகாப்பை வழங்குவது அங்கீகாரம் வேண்டி நிற்பவர்கள் கடமை.

மறுவளமபக வன்னி மக்களை முழுவதுமாக இடம்பெயரவைத்து நடைமுறை அரசை மக்கள் அற்ற பயங்கரவாதமாக சர்வதேசத்திற்கு காட்டத்தான் சிறீலங்கா முயல்கிறது.

இந்த பல்பரிமாணப் பலப்பரீட்சையை வெல்லுவதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் பல வழிகளில் பங்களிக்க வேண்டும்.

ஐநா மீது அர்த்தமற்றவகையில் கோபப்படுவதால் பாதிக்கப்படுவது நாம் தான். முக்கியமாக புலம்பெயர்ந்தவர்கள் சர்வதேச தளத்தில் ஐநா முதல் ஏனைய சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் ஊடகங்கள் அரசுகள் என்று தமிழர் பிரதிநிதியாக உறவாட வேண்டியவர்கள். எமது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அவர்கள் இயங்கவில்லை என்றவுடன் வெறுப்பை உமிழ்ந்து அதை மற்றவர்களிற்கும் பரப்பி எமது மனங்களில் அவர்கள் பற்றி ஒரு வெறுப்பையும் நம்பிக்கையீனத்தையும் விதைத்துவிட்டு பரப்புரை செய் தமிழீழ ஆதரவு கருத்தியல் தளத்தை உருவாக்கு என்று வெறுமனே எழுதவும் பேசவும் தான் முடியும். அது நோக்கிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளிற்கான சிந்தனைகளிற்கு எமது மனங்களால் முடியாது போய்விடும். இப்படிப்பட்ட உளவியல் புதை குழிக்குள் தான் நாம் ஏற்கனவே இருக்கிறம். இனி நடக்க இருக்கும் அவலங்களால் உணர்ச்சி வசப்பட்டு அதை மேலும் ஆழமாக கிண்டாது பார்த்துக் கொள்ள வேண்டியது எல்லாருடைய கடமையும்.

அங்கீகாரம் வேண்டி நிற்பது ஐநாவோ அமெரிக்காவோ ஐரோப்பிய ஒன்றியமோ இந்தியாவோ நோர்வோயோ சிறீலங்காவோ அல்ல தமிழர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும்???

எவ்வளவுதான் எண்ணையைப் பூசி மணலுக்குள்ளை உருண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்படுவது எம்மக்கள் என்ற எண்ணமே இல்லாமல் நாம் இங்கு பேசிக்கொண்டிருக்க ,ஐ நா என்ன மாமனா? மச்சானா? அவன்ற உயிருக்கு ஆபத்து எண்டா அவனும் போகத்தானே விரும்புவான்.

கடைசியில் ஐ நாவும் அகதியாகிவிட்டது வன்னையில்!

Edited by vasee

..........................

ஐநா மீது அர்த்தமற்றவகையில் கோபப்படுவதால் பாதிக்கப்படுவது நாம் தான். முக்கியமாக புலம்பெயர்ந்தவர்கள் சர்வதேச தளத்தில் ஐநா முதல் ஏனைய சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் ஊடகங்கள் அரசுகள் என்று தமிழர் பிரதிநிதியாக உறவாட வேண்டியவர்கள். எமது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அவர்கள் இயங்கவில்லை என்றவுடன் வெறுப்பை உமிழ்ந்து அதை மற்றவர்களிற்கும் பரப்பி எமது மனங்களில் அவர்கள் பற்றி ஒரு வெறுப்பையும் நம்பிக்கையீனத்தையும் விதைத்துவிட்டு பரப்புரை செய் தமிழீழ ஆதரவு கருத்தியல் தளத்தை உருவாக்கு என்று வெறுமனே எழுதவும் பேசவும் தான் முடியும். அது நோக்கிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளிற்கான சிந்தனைகளிற்கு எமது மனங்களால் முடியாது போய்விடும். இப்படிப்பட்ட உளவியல் புதை குழிக்குள் தான் நாம் ஏற்கனவே இருக்கிறம். இனி நடக்க இருக்கும் அவலங்களால் உணர்ச்சி வசப்பட்டு அதை மேலும் ஆழமாக கிண்டாது பார்த்துக் கொள்ள வேண்டியது எல்லாருடைய கடமையும்.

............

குறுக்கர்,

யார் தமிழர் பிரதிநிதிகளாக உறவுகளை ஏற்படுத்த முடியும்?

சமுகத்தில உயர்பொறுப்பில இருக்கிற ஆக்கள், நடுநிலமையையா யதார்த்தத்தை பேசுற ஆக்கள், தனக்கு பிடிக்காத ஆக்கள் எல்லாத்தையும் துரோகிகள் துரோகிகள் என்று விழுந்தடித்து பட்டம் கொடுக்க முண்டியடிக்கினம் எங்கட தமிழ்தேசிய ஆரவாரக்காரார்கள். உதுக்கு காரணம் நீங்கள் ஆதரிக்கிற தமிழ் தேசிய ஊடகங்களும் அவை ஏத்திவிடுற போதையும்தான்! இப்ப கொஞ்சம் கீழ இறக்கியிருக்கிற அந்தப்போதை இன்னும் ஒரு தாக்குதலில் 25 சடலம் கைப்பற்றினவுடன திருப்பி முருங்கையில ஏறிடும். இப்ப தேவைப்படுகிற தமிழர் பிரதிநிதிகள் அப்ப உங்களுக்கு துரோகிகளாக தெரிவினம்!

நீங்கள் இப்ப எழுதுற கருத்தில ஒரு கட்டுரை அவையின்டை பெருவிருப்புக்குரிய புதினத்தில வெளிவருமோ?

இப்ப மாமனிதர் பட்டம் வழங்கிற மாதிரி, துரோகிகள் பட்டம் வழங்கிறதையும் புலிகளின் அரசில்துறை பொறுப்பேற்க வேணும்! உங்களுக்கு பிடிக்காத யாருக்கும் துரோகிபட்டம் கொடுக்க வேணும் என்றா, அதை முதலில அவையளின்டை பரிசீலனைக்கு அனுப்பி வையுங்கோ! :icon_mrgreen:

(யாழ்களத்தில நீங்களே இப்ப துரோகிகள் பட்டியலிலதான் இருக்கிறியள் என்பதை நினைவூட்ட விரும்புறன் :o )

Edited by சாணக்கியன்

வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து நாளை வெளியேறுவதாக ஐ.நா. அறிவிப்பு

திங்கட்கிழமை 15 செப்ரெம்பர் 2008 10:37 பி.ப ஈழம்

வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் நாளை செவ்வாய்க்கிழமை வெளியேறவுள்ளதாக சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி கோர்டன்வைஸ் இன்றிரவு தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள தமது கிளை அலுவலகத்திலிருந்து இடம்பொயர்ந்து வன்னிப்பெரு நிலப்பரப்பில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்குரிய பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கோர்டன் வைஸ் தெரிவித்தார்.

அதேவேளைஇ அலுவலகத்தை மூடிவிட்டு வெளியேறும் முடிவையும் அது தொடர்பிலான தமது கவலையையும் விடுதலைப் புலிகளிடம் கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையக அதிகாரிகள் நேரில் சந்தித்து கூறியதாகவும் கோர்டன் வைஸ் மேலும் தெரிவித்தார்

இதேவேளைஇ போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றமையினால் பணிகளை நிறுத்தி விட்டு அனைத்துலக தொண்டர் நிறுவனங்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும்இ இல்லையேல் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற முடியாது என்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.

இதன் காரணத்தினாலேயே கிளிநொச்சியிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் வெளியேறும் முடிவை எடுத்ததாக கொழும்பில் இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்த மக்களுக்கு பணியாற்றுவது தொடர்பில் அகதிகளுக்கான உயர் ஆணையகம் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியபோதும் அது பயனளிக்கவில்லை என்றும் இராஜதந்திர தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நன்றி புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(யாழ்களத்தில நீங்களே இப்ப துரோகிகள் பட்டியலிலதான் இருக்கிறியள் என்பதை நினைவூட்ட விரும்புறன் :icon_mrgreen: )

யாரப்பா யாழ் களத்தில் அப்படியொரு பட்டியல் வைத்திருப்பது? நீங்களாகவே தொப்பியை மாட்டினால் யாரென்ன செய்வது?

குறுக்கர் எண்டைக்கும் போராட்டம் பற்றியோ, புலிகளைப் பற்றியோ, த.தே.கூ பற்றியோ இழித்துப் பேசவில்லை. மாறாக புலம்பெயர் தமிழரின் தவறான போக்குகள் பற்றியே பிரதானமாக அவருடைய கருத்துக்கள் அமைவதுண்டு. அவர் ஸீரியஸாக எழுதும் கருத்துக்கள் எப்பொழுதும் தரமானவை.

உங்கள் கருத்துக்கள்.. ? உங்கள் நோக்கங்கள் ? யாழ் களமே அறியும்..

Edited by காட்டாறு

சமுகத்தில உயர்பொறுப்பில இருக்கிற ஆக்கள், நடுநிலமையையா யதார்த்தத்தை பேசுற ஆக்கள், தனக்கு பிடிக்காத ஆக்கள் எல்லாத்தையும் துரோகிகள் துரோகிகள் என்று விழுந்தடித்து பட்டம் கொடுக்க முண்டியடிக்கினம் எங்கட தமிழ்தேசிய ஆரவாரக்காரார்கள். உதுக்கு காரணம் நீங்கள் ஆதரிக்கிற தமிழ் தேசிய ஊடகங்களும் அவை ஏத்திவிடுற போதையும்தான்! இப்ப கொஞ்சம் கீழ இறக்கியிருக்கிற அந்தப்போதை இன்னும் ஒரு தாக்குதலில் 25 சடலம் கைப்பற்றினவுடன திருப்பி முருங்கையில ஏறிடும். இப்ப தேவைப்படுகிற தமிழர் பிரதிநிதிகள் அப்ப உங்களுக்கு துரோகிகளாக தெரிவினம்!

நீங்கள் இப்ப எழுதுற கருத்தில ஒரு கட்டுரை அவையின்டை பெருவிருப்புக்குரிய புதினத்தில வெளிவருமோ?

இப்ப மாமனிதர் பட்டம் வழங்கிற மாதிரி, துரோகிகள் பட்டம் வழங்கிறதையும் புலிகளின் அரசில்துறை பொறுப்பேற்க வேணும்! உங்களுக்கு பிடிக்காத யாருக்கும் துரோகிபட்டம் கொடுக்க வேணும் என்றா, அதை முதலில அவையளின்டை பரிசீலனைக்கு அனுப்பி வையுங்கோ! :icon_mrgreen:

(யாழ்களத்தில நீங்களே இப்ப துரோகிகள் பட்டியலிலதான் இருக்கிறியள் என்பதை நினைவூட்ட விரும்புறன் :o )

சமுகத்தில உயர்பொறுப்பில இருக்கிற ஆக்கள், நடுநிலமையையா யதார்த்தத்தை பேசுற ஆக்கள், தனக்கு பிடிக்காத ஆக்கள் எல்லாத்தையும் துரோகிகள் துரோகிகள் என்று விழுந்தடித்து பட்டம் கொடுக்க முண்டியடிக்கினம் எங்கட தமிழ்தேசிய ஆரவாரக்காரார்கள். உதுக்கு காரணம் நீங்கள் ஆதரிக்கிற தமிழ் தேசிய ஊடகங்களும் அவை ஏத்திவிடுற போதையும்தான்! இப்ப கொஞ்சம் கீழ இறக்கியிருக்கிற அந்தப்போதை இன்னும் ஒரு தாக்குதலில் 25 சடலம் கைப்பற்றினவுடன திருப்பி முருங்கையில ஏறிடும். இப்ப தேவைப்படுகிற தமிழர் பிரதிநிதிகள் அப்ப உங்களுக்கு துரோகிகளாக தெரிவினம்!

நீங்கள் இப்ப எழுதுற கருத்தில ஒரு கட்டுரை அவையின்டை பெருவிருப்புக்குரிய புதினத்தில வெளிவருமோ?

இப்ப மாமனிதர் பட்டம் வழங்கிற மாதிரி, துரோகிகள் பட்டம் வழங்கிறதையும் புலிகளின் அரசில்துறை பொறுப்பேற்க வேணும்! உங்களுக்கு பிடிக்காத யாருக்கும் துரோகிபட்டம் கொடுக்க வேணும் என்றா, அதை முதலில அவையளின்டை பரிசீலனைக்கு அனுப்பி வையுங்கோ! :o

(யாழ்களத்தில நீங்களே இப்ப துரோகிகள் பட்டியலிலதான் இருக்கிறியள் என்பதை நினைவூட்ட விரும்புறன் :o )

சாணக்கியன் ! அண்ணனை இதுகளை சொன்னவுடன சில பேர் வந்து குளறுவினம் ஐய்யோ ஓட்டுக்குழு நிக்குது இங்சை எண்டு ஆனாலும் பாருங்கோ ! இன்னமும் திரும்ப திரும்ப அதே பல்லவி தான் பாடுறதே தவிர எல்லாரையும் இணைச்சு எல்லாச் தமிழரும் " நான் புலி நீ ஓட்டுக்குழு நீ ஓட்டாத குழு " எண்டு புலம்பி பட்டமளிப்பு விழா கொண்டாடுறதை விடுத்து எல்லாரும் அடிமைப்படுகிறம் அதை சொந்ர் உடைக்க வேணும் எண்டு செய்யுறது கொஞ்சம் வில்லங்கம் தான் ஆனாலும் செய்யலாம்.

எங்க எங்கட 22 கூத்தமைப்பக் காரர் போட்டினம் ! ஓ மன்னிக்கவும் அவயள் உலகத்தiயே தலைவரின்ர காலில வைக்கிற மாதிரி ஏதும் கூட்டத்திற்கு கதை எழுதப் போயிருப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டுபவர்கள் தாங்களும் தொப்பியை போட்டு கொண்டு அடுத்தவனுக்கு அதை பரிசளிப்பதும் பட்டம் கொடுப்பதும் சுட்டி காட்டினால் எவன் தலையிலாவது ஏத்திவிட்டு செல்வது...............................

மீண்டும் யாழ் கள ஒப்பாரி வைப்புனர்கள் , தமது ஒப்பாரியை ஆரம்பித்துள்ளார் கள் :icon_mrgreen:

மக்களை குழப்புவது இவர்கள் தான்

பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டுபவர்கள் தாங்களும் தொப்பியை போட்டு கொண்டு அடுத்தவனுக்கு அதை பரிசளிப்பதும் பட்டம் கொடுப்பதும் சுட்டி காட்டினால் எவன் தலையிலாவது ஏத்திவிட்டு செல்வது...............................

இங்கு பட்டமளிச்சு கொண்டு இருந்தால் சிங்களவனுக்கு இன்னும் சுகமாய் இருக்கும் ஓரே அடியாய் உள்ள தமிழரை எல்லாரையும் போட்டுத் தள்ளுறதுக்கு தயவு வெய்து இஞ்சை உந்த கோதாரி பட்டமளிப்புக்களை நிறுத்திப் போட்டு எல்லோரும் சோந்து அரவணைச்சு செய்யுற வேலையை பார்ப்பது பிழையோ ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமுகத்தில உயர்பொறுப்பில இருக்கிற ஆக்கள், நடுநிலமையையா யதார்த்தத்தை பேசுற ஆக்கள்

ஆரவை எண்டு பெயர் சொல்லி எழுதினா ரொம்ப நல்லாயிருக்கும். உதாரணத்திற்கு ஒரு சிலரையாவது..

சங்கரி? கே.ரி. ராஜசிங்கம் (ASIAN TRIBIUNE)? டி.பி.ஸ் ஜெயராஜ்,... இவர்களைப் போன்றவர்களையா???

BBC காரனைப் பொறுத்தவரையில் நடுநிலமை எண்டுறது பொருந்தும். ஆனால் தமிழனைப் பொறுத்தவரையில நடுநிலமை எண்டுறது இப்ப உள்ள சூழலில் என்னவெண்டு எண்டு தெளிவா விளங்கப்படுத்துவியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பட்டமளிச்சு கொண்டு இருந்தால் சிங்களவனுக்கு இன்னும் சுகமாய் இருக்கும் ஓரே அடியாய் உள்ள தமிழரை எல்லாரையும் போட்டுத் தள்ளுறதுக்கு தயவு வெய்து இஞ்சை உந்த கோதாரி பட்டமளிப்புக்களை நிறுத்திப் போட்டு எல்லோரும் சோந்து அரவணைச்சு செய்யுற வேலையை பார்ப்பது பிழையோ ???

நான் சொன்னது உங்களுக்கு விளங்கவில்லை என்று நினைக்கிறேன் புதியவன் மேலே பாருங்கள் குறுக்கருக்கு துரோகிப் பட்டம் வழங்கப்பட்டதாக கூறியிருக்கிறார் அல்லோ

குற்றம் செய்த மனம்தான் குறுகுறுக்கும் தனக்கு நேர்ந்ததை இன்னொருவருக்கும் மேல் ஏத்திவிட்டு செல்கிறார் என்றே சொல்ல வந்தேன் :icon_mrgreen:

Edited by muneevar

வன்னியிலிருந்து ஐநா அமைப்பினர் இன்று வெளியேறுகின்றனர்

ஓமந்தை வரை வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு வழங்க விடுதலைப் புலிகள் இணக்கம் என்கிறார் ஐநாவின் பேச்சாளர் கோடன் வெயிஸ் வன்னியிலிருந்து ஐநா அமைப்பினர் அனைவரும் இன்று காலை 10 மணியளவில் வெளியேறுவதாகவும், இவர்களது வாகனத் தொடரணிக்கு விடுதலைப் புலிகள் பாதுகாப்பு வழங்க முன்வந்துள்ளதாகவும் ஐநாவின் இலங்கையில் உள்ள பேச்சாளர் கோடன் வெயிஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக வன்னியில் இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்ற இராணுவ நடவடிக்கைகள் மிக மோசமடைந்துள்ளதையடுத்து, அங்கு மனித நேய பணிகளில் ஈடுபட்டுள்ள ஐநா அமைப்புக்கள் உட்பட சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பினை தம்மால் முடியாது எனக் கூறி அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறி, வவுனியாவில் இருந்து பணியாற்றுமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து கடந்தவாரம் வன்னியிலிருந்து மனிதநேய பணியாளர்கள் வெளியேறத் தொடங்கியதும், அவர்களை வெளியேற வேண்டாம் எனக்கோரி, அங்குள்ள மக்கள் ஐநா அமைப்பு அலுவலகங்களுக்கு முன்னால் கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மனித நேய பணியாளர்கள் வன்னியில் தொடர்ந்தும் தங்கியிருந்து தமது இன்னல்களைப் போக்க பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பல மகஜர்கள் பொதுமக்களினால், வன்னியில் உள்ள ஐநா அமைப்பினரின் ஊடாக ஐநாவின் செயலாளர் நாயகத் பன்கீ மூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும், இருந்து ஐநா அமைப்புக்கள் உட்பட மனித நேய நிறுவனங்களை வன்னிப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. வன்னியில் நிலைமைகள் மோசமடைநது செல்வதனால், அங்கிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற வேண்டு ம் என்ற ஐநா அமைப்பினரின் தீர்மானத்திலும் மாற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஐநா அமைப்பின் உயரதிகாரி ஒருவர் நேற்று கிளிநொச்சிக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடனும், விடுதலைப் புலிகளுடனும் பேச்சுக்கள் நடத்தியதையடுத்து, நேற்று நண்பகலுடன் பொதுமக்களின் மறியல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவி;க்கின்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் இன்று காலை 10 மணியளவில் வன்னியில் உள்ள மனிதநேய அமைப்புக்கள் ஒரே வாகனத் தொடரணியில் வெளியேறுவது என்றும், அந்தத் தொடரணிக்கு விடுதலைப் புலிகள் ஓமந்தை சோதனைச்சாவடி வரையில் உரிய பாதுகாப்பை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு பட்டமளிச்சு கொண்டு இருந்தால் சிங்களவனுக்கு இன்னும் சுகமாய் இருக்கும் ஓரே அடியாய் உள்ள தமிழரை எல்லாரையும் போட்டுத் தள்ளுறதுக்கு தயவு வெய்து இஞ்சை உந்த கோதாரி பட்டமளிப்புக்களை நிறுத்திப் போட்டு எல்லோரும் சோந்து அரவணைச்சு செய்யுற வேலையை பார்ப்பது பிழையோ ???

நிச்சயமாகப் பிழை இல்லை நண்பரே.

ஆனால் இந்த நடுநிலமை, மாற்றுக்கருத்து போன்றவற்றை இப்போதும் தூக்கிப் பிடிப்பது ஒன்றுபடுவதற்கு நிச்சயமாக வழிவகுக்கப்போவதில்லை . மாறாக ஒன்றுதான் இலட்சியம். ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபடுதல் இவைகள் தான் அவசியம். காலத்தின் கட்டாயம்.

காட்டாறு மற்றும் முனிவர்,

இந்த துரோகியையும் ஒரு மனிசனா மதித்து பதிலெழுதுற உங்கட பெருந்தன்மைக்கு மிக்க நன்றி!

அதோட "ஒன்றுபடுதல்" அல்லது "ஒற்றுமை" என்றால் என்ன என்று எனக்கு ஒருக்கா விழங்கப்படுத்துவியளே?

யாரை ஒன்றுபடச் சொல்லுறியள்?

ஏன் அவை ஏன் விலத்தி நிக்கினம், ஆர் அவையை விலத்தி வைச்சது!

அவையை ஒன்றுபடுத்துறத்திற்காக நீங்கள் எப்படியான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறியள்?

இதிலையும் ஒரு கேவலமான விசயம்... எங்கட மக்களிலையும் 100% மான மக்கள் போராட்டத்தோடை ஒண்றி இல்லை... அவர்களையும் இணையுங்கள் பிரச்சாரம் செய்யுங்கள் எண்டா.. இல்லை வேற வளியிலை காசுகளை மிச்சப்படுத்துறதுறதுதானாம் முக்கிய வேலை...!!

இவைக்கு போராட்டம் மக்களை ஒண்று திரட்டி இல்லை... காசுகளை மட்டும் சேகரிச்சு எண்ட விதத்திலை போகுது....!! இப்படியான் கேணையள் போராட்டத்துக்கு தலைமை தாங்க இல்லை எண்டது கொஞ்சம் நிம்மாதியானது...

Edited by தயா

:o:o:D:icon_mrgreen::o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.