Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து நாளை வெளியேறுவதாக ஐ.நா. அறிவிப்பு

Featured Replies

வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் நாளை செவ்வாய்க்கிழமை வெளியேறவுள்ளதாக சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி கோர்டன்வைஸ் இன்றிரவு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

'ஐ.நா. பணியாளர்கள் வெளியேறுவதற்கு வழியேற்படுத்தித்தர விடுதலைப் புலிகள் சம்மதம்'

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஐநா அமைப்புகள் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவை அடுத்து, அப்பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஐ.நா. மன்ற அமைப்பின் பணியாளர்கள் ஏற்கெனெவே அங்கிருந்து வெளியேறத் துவங்கிவிட்டனர். மீதமுள்ள ஐநா அமைப்பின் பணியாளர்கள் அனைவரும் நாளை செவ்வாய்க்கிழமை அங்கிருந்து வெளியேறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக இவர்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்று கோரி, கிளிநொச்சியிலிருக்கும் பொது மக்கள் போராட்டங்கள் நடத்தி தடை ஏற்படுத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து, ஐ.நா. மன்ற அதிகாரிகள் இது குறித்து விடுதலைப்புலிகள் அமைப்பிடம் பேசியதை தொடர்ந்து, மீதமுள்ள ஐ.நா. அமைப்பின் பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வழியை ஏற்படுத்தித் தருவதாக விடுதலைப்புலிகள் தங்களிடம் உறுதி அளித்திருப்பதாக இலங்கையில் இருக்கும் ஐ.நா. மன்றத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான கோர்டன் வெய்ஸ் அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/

சந்தோசமாய் வெளிக்கிடுத்தி விட்டால் சிங்களவனுக்கு சுகம் தானே ஓரேயடியாய் போட்டு கொலை செய்யுறதுக்கு

ஓகோ சனம் அங்க வாசலில போக வேண்டாம் எண்டு முன்னால இருக்கு நீங்களம் சோந்து தூக்கி பாதுகாப்பாக அனுப்பி வையுங்கோ சிங்களவன் எங்கட சனத்தை ஓரேயடியாய் கொலை செய்யயுறதுக்கு வசதியாக இருக்கும்.

இவ்வளவு காலமும் இவர்கள் அங்கே இருந்ததினால் சனங்களை குண்டுபோட்டுத் தாக்கவில்லையோ? வெளியேறு என்றவுடனே பெடடியைத் தூக்கிக்கொண்டு சனத்தைப்பற்றிச் சிந்திக்காத இவர்கள் இருந்தென்ன? இல்லாவிட்டாலென்ன? மக்கள் தடுத்தும் போராட்டம் நடத்தியும் புரிந்துகொள்ளாத ஐயன்னா நாவன்னா இனி என்ன தேவைக்கு அங்கு? அறுத்துக்கொண்டு ஓடுவதற்கு முதல் அவிழ்த்து விடுதலே நல்லது. அதை செய்ய வேண்டியது தேவையானதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் உயிரை காக்க புலம்பெயர்ந்த எங்களுக்கு, வேற்று நாட்டவன் தன்னுயிரை பாதுகாக்க வெளியேறுவதை குறை கூற எந்த அருகதையும் இல்லை.

இப்பொழுதே கிளி மருத்துவமனைக்கு கடும் செல் அடிக்கத் தொடங்கிவிட்டான்.

மக்கள் செறிவாக வாழும் பகுதிகளுக்கு மல்ரி பரல் அடித்தால் பாரிய அழிவுகள் ஏற்படும். சாவகச்சேரியில் 2000 இல் 500 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப் பட்டார்கள்.

சனத்தை நினைக்கத் தான் பெரிய பாவமாய்க் கிடக்குது.

ஐநாவும் ஏனைய சர்வதேச தொண்டர் நிறுவனங்களும் ஒரு அங்கீகாரம் அற்ற நடைமுறை அரசின் பிரதேசத்தில் எப்படி இயங்க முடியுமோ அந்தளவிற்கு இயங்கியிருக்கிறார்கள். தனி நாடு என்பதன் மூலம் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி பொறுப்புகளின் ஆழ அகலங்களை உணரும் காலம் இது. அது தேசிய பாதுகாப்பாக இருக்கட்டும் அல்லது மக்களின் அத்தியாவசிய தேவைகளாக இருக்கட்டும்.

ஐநாவும் கருணாநிதியும் சொல்கைமும் கரும்புலிகள் மாதிரி அர்பணிப்போடு இயங்க வேண்டும் என்று அடுக்கு மொழியில் கவிநயமாக அங்கலாய்த்து ஒரு பயனும் இல்லை. யதார்த்தத்திற்கு புறம்பான எதிர்பார்ப்புகளோடு இருப்பது நாம். முக்கியத்துவம், சிந்தனை, செயல் என்பவற்றில் பாரிய மாற்றங்களை கொண்டுவர வேண்டியவர்கள் நாம் வேறு யாருமல்ல. புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்புகள் எத்தனை மடங்கு அதிகரிக்க வேண்டும் அவர்களது நேரமும் பொருளாதாரமும் எப்படியெல்லாம் விரையமாகிறது என்பது பற்றி சுயவிசாரணை செய்ய இந்த இறுதிச் சந்தர்ப்பத்தையாகுதல் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெறுமனே இராணுவ ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதும் வாசிப்பதும் சூரியதேவன் புராணம் எழுதுவதும் சிவபுராணத்தை ஒட்டுவதும் விளையாட்டுப்போட்டிகள் போல் ஸ்கோர்களை ஓடி ஓடி வாசிப்பதும் பகிர்ந்து பொழுது போக்க கரும்புலிகளும் சர்வதேசமும் தனிநாடு பிடிச்சுத்தரும் என்று இருந்தால் ஏமாரப்போவது நாம் தான்.

எங்கள் உயிரை காக்க புலம்பெயர்ந்த எங்களுக்கு, வேற்று நாட்டவன் தன்னுயிரை பாதுகாக்க வெளியேறுவதை குறை கூற எந்த அருகதையும் இல்லை.

இப்பொழுதே கிளி மருத்துவமனைக்கு கடும் செல் அடிக்கத் தொடங்கிவிட்டான்.

மக்கள் செறிவாக வாழும் பகுதிகளுக்கு மல்ரி பரல் அடித்தால் பாரிய அழிவுகள் ஏற்படும். சாவகச்சேரியில் 2000 இல் 500 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப் பட்டார்கள்.

சனத்தை நினைக்கத் தான் பெரிய பாவமாய்க் கிடக்குது.

இது குறைகூறுதல் அல்ல. அங்கிருக்கும் வரை நடந்ததைப் போன்றுதான் இனியும் நடக்கும் அதிலும் கூடுதலாகவும் நடக்கும். ஒரு உலக உதவி இஸ்தாபனத்தின் நிலை இப்படியென்றால், அது எதற்கு அங்கு? நடுநிலையாளர் என்றும் உதவுகிறோம் என்றும் உட்புகுகின்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு சரியாக இல்லாவிட்டால் குழப்ப நிலையை ஏற்படுத்தியிருக்கக் கூடாது. அவர்கள் உயிர் காக்க ஓடுகிறார்கள் என்பதெல்லாம் பொய்யானது. இதைவிடப் பாரிய களங்களில் இந்த அமைப்புக்கள் செயலாற்றுகின்றன. யுத்தத்தை நிறுத்துகின்றன. தீர்வினை ஏற்படுத்துகின்றன. அது இவர்களால் இதுவரை முடியவில்லையென்றால் அங்கிருந்து அவர்களை அனுப்பி வைப்பதே மேல். யுத்த பரிமாணத்தின் வெளிப்பாடுகள் இனிப் புலப்படும். இராணுவம் பலவீனப்படும் போது இவர்கள் கூப்பாடு போட்டுக் கொண்டு திரும்பவும் ஓடிவருவார்கள்.

யுத்த நிறுத்தக் குழுவினர் நாட்டில் இருந்த போது வாகரையில் மல்ரிபரலினால் மக்கள் தாக்கப்படவில்லையா? மக்கள் அவர்களது விலகலைத் தடுக்க முயற்சித்தார்கள். முடியவில்லை. அவர்களே அறுத்துக்கொண்டு ஓடுவதற்கு முன் அவிழ்த்து விடுதல் சிறந்தது.( வழியனுப்பி வைத்தல்) மரியாதை கொடுத்து.

யரரும் எதையும் பெற்றுத் தருவார்கள் என்றநிலையில் நமது போராட்ட இருப்பும் அதன் சக்தியும் தங்கியிருக்கவில்லை. இது எற்கெனவே பல சந்தர்ப்பங்களில் தேசியத்தலைவரினால் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. அதைச் செவியிலெடுக்காது விட்டவர்கள் போராட்டத்தினைக் கவனிக்காதவர்கள். எப்போது இந்த நிறுவனங்கள் உட்புகுந்தன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இராணுவ சமநிலை இராணுவத்தின் இயலாமைகளின் போதே இவை உட்புகுந்தன.

ஆனால் இப்போது, இராணுவம் முன்னேறுகிறது, குண்டுகள் வீழ்கின்றன, என்றெல்லாம் கூறிக்கொண்டு வெளியேறுவது எதைச் சொல்கின்றது. இராணுவத்திற்குப் பாதக நிலை உருவாகும் போது இவர்கள் மீண்டும் உள்நுழையக் கூடாது. அதற்கானதுதான் இந்த மக்களின் தடுப்பு மறியல் போராட்டம்.

போரின் பாதகத்தையும் சாதகத்தையும் அனுபவிக்க வேண்டியவர்கள் களத்தில் வாழ்கின்ற தமிழர்கள்தான். தமிழ்ஈழமும் அவர்களுக்கானதே. இறையாண்மை என்பது அங்கீகரிக்கப்பட்ட நாட்டுக்க மட்டுமல்ல, ஒப்பந்தங்கள் ஊடும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

வன்னிப்பிரதேச மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டுவர அரசு தீவிர முயற்சி

வன்னிப்பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அங்குள்ள பொதுமக்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறியவருகின்றது.

வன்னியிலிருந்து இராணுவகட்டுப்பாட்டு பகுதியான வவுனியாவிற்கு இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அவர்கள் விரைவில் மீள்குடியேற்றப்படுவார்கள் என மீள்குடியேற்ற அமைச்சின் சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்து வரும் மக்களை வரவேற்க பாதுகாப்பு படையினர் தயாராகவுள்ளனர், கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வரவழைக்க மேற்கொண்ட நடவடிக்கைபோன்றதொரு பாரியதிட்டத்துடன் வன்னிமக்களையும் அரசாங்கம் அழைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வன்னியின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை தொடர்கின்ற நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தவிர்ந்த பெரும்பாலான சர்வதேச தொண்டு நிறுவனங்களும் வன்னியிலிருந்து பாதுகாப்பின் நிமித்தம் வெளியேறியுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சர்வதேச தொண்டுநிறுவனங்களினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து நிவாரண செயற்பாடுகளும் தடைப்படும் அபாய நிலை தோன்றியுள்ளது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவுனியா வரும் வன்னி மக்களுக்குரிய வசதிகளை வழங்குவது குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும். சகல அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர் இதில் பங்கு கொள்வார்கள்.

அவசர உதவி கோரப்படுகிறது

இதேநேரம், யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்துள்ள மக்கள் போதிய இருப்பிட வசதிகளின்றி பொது இடங்களிலேயே தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு அவசரமாக தற்காலிக கூடாரங்கள் தேவைப்படுகின்றது என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா செயலக கேட்போர் கூடத்தில் சிரேஷ்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த போது மேற்கண்டவாறு கூறினார்.

30 ஆயிரம் பாடசாலை மாணவர்களும் வன்னியில் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தினமும் 20 லொறிகள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒமந்தை வழியாக வன்னிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றது எனவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தற்போது நெல் அறுவடை நடைபெறுவதினால் சூடு அடிப்பதற்கு இயந்திரங்களை இயக்க கூடுதல் மண்ணெண்ணெய் தேவைப்படுகின்றது என்றும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.thinakkural.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உத்தரவு வந்துட்டுதுதானே , பிறகென்ன கொழும்புல போய் குடித்து கும்மாளமடித்துவிட்டுச் உங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்லுங்கள் உங்களை அரச சார்பற்ற நிருவனம் என்டு சொல்லுவதை விட அரச சார்பு நிறுவனம் என்டு சொல்றது தான் சரி. என்ன உயிர் போகப்பபோகுதெண்டா பெட்டி படுக்கைகளோட கிளம்பிட்டிங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் இருந்த போது என்ன செய்தார்கள் (பாதிக்கபட்டவர்களுக்கு உதவினார்கள் அதை விடுவம்) ? மக்கள் சிறிலங்கா ராணுவத்தால் கொல்லப்படும் போது தடுத்தார்களா?

மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கினர்களா?

சிறிலங்க ராணுவத்தால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை தடுத்தார்களா அல்லது அப்படி செய்பவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***

அரச சார்பற்ற நிறுவன வெளிநாட்டு பணியாளருக்கு வவனியா போனால் அவர்கள் உயிருக்கு உதரவாதம் இருக்கிறது, சாதாரண மக்களின் உயிருக்கு உங்களால் உத்தரவாதம் தரமுடியுமா? அவர்கள் விரும்பும் இடங்களில் குடியிருக்க அனுமதிக்க படுவார்களா? குறிப்பாக கொழும்பில், பின்னர் ஏன் கொழும்பில் இருபர்களை உடனே வெளியேற சொல்கிறார்கள்.வவனியாவில் அமைக்கபட்டிருக்கும் சிறப்பு வதை முகாம்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அங்கு வர சொல்லி ஒட்டு மொத்தமாக அவர்களை கொலை செய்ய நினைக்கிறீகளா? அல்லது ராணுவம் அப்படி செய்யாது, பாலும் சோறு உட்டிவிட்டு தாலாட்டு பாடும் என நிக்கிறீகளா?

Edited by இணையவன்
*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னையா நாடுகள் மக்களுக்கு உதவிக்கு தான் ஜ நா எல்லாம் ஆனா ஜநா வே மக்களை கொல்ல வெளிNறுது என்ன ஜ நா இதுவெல்லாம்

என்னையா நாடுகள் மக்களுக்கு உதவிக்கு தான் ஜ நா எல்லாம் ஆனா ஜநா வே மக்களை கொல்ல வெளியேNறுது என்ன ஜ நா இதுவெல்லாம்

என்னையா நாடுகள் மக்களுக்கு உதவிக்கு தான் ஜ நா எல்லாம் ஆனா ஜநா வே மக்களை கொல்ல வெளியேNறுது என்ன ஜ நா இதுவெல்லாம்

என்னையா நாடுகள் மக்களுக்கு உதவிக்கு தான் ஜ நா எல்லாம் ஆனா ஜநா வே மக்களை கொல்ல வெளியேறுது என்ன ஜ நா இதுவெல்லாம்

என்னையா நாடுகள் மக்களுக்கு உதவிக்கு தான் ஜ நா எல்லாம் ஆனா ஜநா வே மக்களை கொல்ல வெளியேறுது என்ன ஜ நா இதுவெல்லாம்

அரச சார்பற்ற நிறுவன வெளிநாட்டு பணியாளருக்கு வவனியா போனால் அவர்கள் உயிருக்கு உதரவாதம் இருக்கிறது, சாதாரண மக்களின் உயிருக்கு உங்களால் உத்தரவாதம் தரமுடியுமா? அவர்கள் விரும்பும் இடங்களில் குடியிருக்க அனுமதிக்க படுவார்களா? குறிப்பாக கொழும்பில், பின்னர் ஏன் கொழும்பில் இருபர்களை உடனே வெளியேற சொல்கிறார்கள்.வவனியாவில் அமைக்கபட்டிருக்கும் சிறப்பு வதை முகாம்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அங்கு வர சொல்லி ஒட்டு மொத்தமாக அவர்களை கொலை செய்ய நினைக்கிறீகளா? அல்லது ராணுவம் அப்படி செய்யாது, பாலும் சோறு உட்டிவிட்டு தாலாட்டு பாடும் என நிக்கிறீகளா?

சிறுவர்களினதும், முதியவர்களினதும் உயிர்களை உடனடியாக காப்பதற்கு ஒரு வேண்டுகோள். இளைஞர்களின்டை முடிவை அவையள்தான் எடுக்கவேணும்.

கொழும்பில போய் வசிக்கிறது, நிம்மதியா வாழுறது என்பன உயிர் இருந்தால்தான் சிந்திக்கலாம். உங்கடை அரசியல் ஆதாயங்களுக்கா அவை செத்தால் பறவாயில்லை என்ற முடிவோட நிக்கிறீங்கள் என்பது வெளிப்படையா தெரியுது!

நீங்களும் உப்பிடியான முகாமிலைதங்தித்தானே வடக்கிலையும் கிழக்கிலையும் இருந்து வந்து தப்பி வெளிநாட்டுக்கு போனனீங்கள். வன்னியைதவிர ஏனையபகுதிகளில இருக்குற எல்லா தமிழ்சனத்தையும் கொண்டே போட்டாங்கள்?

Edited by சாணக்கியன்

பூனை வெளிக்கிட்டுடுது போல இருக்கு பாத்து எழுதுங்கோ, :icon_mrgreen: அப்ப கொஞ்ச சனத்தை கொண்றால் பறாய் இல்லை எண்டுறியள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:icon_mrgreen: அப்ப கொஞ்ச சனத்தை கொண்றால் பறாய் இல்லை எண்டுறியள்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ...குறுக்கர் என்ன நடந்தது உங்களுக்கு?

இதுக்கு இன்றைக்கு உங்களுக்கு சங்குதான்,...!

படத்தை மட்டையில ஒட்டி தூக்கிப்பிடிப்பதும், சிவப்பும் மஞ்சளும் துணிகளை கட்டிக்கொண்டு திரியுறதுதானே தமிழ்தேசிய உச்ச பட்சசெயற்பாடு!

எப்பொருள் யார்வாயில் கேட்டால் எப்பொருள் கொள்ள வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும் உங்களுக்கு இருக்கும் கவலைகளுள் இவற்றையும் வீணே ஏன் சேர்த்துக் கொள்வான் சானக்கியன்?

சாணகியன் உங்கள் பொன்னான சிந்தனைகளுக்கு இங்கே கூட்டம் இல்லைத்தான் ஆனாலும் மனம் தளராதீர்கள்.

உங்கள் பணி ஆளைப்பிடிக்குதோ இல்லையோ நல்ல பேரைத்தருவிக்கும் என்று நம்புங்கள். ஒருவரும் சிந்திக்க முடியாத வகையில் உங்கள் சிந்தனைகள் இருப்பதால் சில அற்பங்கள் உங்கள் அறிவைக்காட்டுவதற்க்குதான் இப்படி தலையால் நடக்கின்றது உங்கள் முயற்ச்சி என்றுகூட சொல்வார்கள்! கொண்டது விடாப்பரப்பரை அல்லவா நாங்கள்.

மோகன் அண்ணாவுக்கும் இடையிடையே தேவாரம் பாடிப் பாடி உங்கள் பணிகளைத் தொடருங்கள் தூக்கிவிடுகின்றார் அல்லவா சிலநேரம் கருத்துக்களை.

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் உப்பிடியான முகாமிலைதங்தித்தானே வடக்கிலையும் கிழக்கிலையும் இருந்து வந்து தப்பி வெளிநாட்டுக்கு போனனீங்கள். வன்னியைதவிர ஏனையபகுதிகளில இருக்குற எல்லா தமிழ்சனத்தையும் கொண்டே போட்டாங்கள்?

சாணக்கியன் அண்ணா சாணக்கியமா என்ன சொல்லவாறார் என்றால் இன அழிப்பு இன அழிப்பு என்றீங்களே.. கொழும்பில நான் (சாணக்கியன்) இருக்கல்லையா.. டக்கிளசு மாமா இருக்கல்லையா.. கருணா அம்மான் இருக்கல்லையா.. சித்தார்த்தன் அங்கிள் இருக்கேல்லையா.. ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் இருக்கல்லையா.. எல்லாரும் தானே இருக்கினம். அப்ப எப்படிச் சொல்லுவீங்க சிங்களவன் தமிழரை அழிக்கிறான் என்று. அவன் தமிழ் பொதுமக்களை கண்ணும் கருத்துமா பாதுகாக்கிறான். அடுத்த கண்டத்தில இருந்து தமிழருக்க புகுந்த புலிப் பயங்கரவாதிகளைத்தான் கொல்லுறான் என்று.

சாணக்கியன் அண்ணா போன்றவை போலத்தான் சர்வதேசமும்.. சிந்திக்குது.. மலைய அரசியல் தலைமைகளும் சிந்திக்குது.. பிரா-ந்திய வல்லரசுகளும் சிந்திக்குது.

சாணக்கியன் அண்ணாவைக் கேட்டிங்கள் என்றால்.. கிட்லர் தான் மனிதாபிமானம் மிக்க உலகத் தலைவர் என்று சொன்னாலும் சொல்லுவார்.

கிட்லர்.. யூத இன அழிப்பைச் செய்யேல்ல என்றும் சொல்லுவார். அப்படி அழிச்சிருந்தா எப்படி இருப்ப ஒரு இஸ்ரேல் இருக்கும் என்றும் கேட்பார். அவரைப் பொறுத்தவரை இன அழிப்பு என்பது அணுகுண்டு போட்டது போல.. சிறீலங்காவில உள்ள எல்லாத் தமிழர்களையும் ஒரு அடையாளமும் இல்லாமல் கொல்லுவதுதான்.. அவரின்ர அறிவுக்கும்.. சர்வதேசத்தின்ர சுயநல பொருண்மிய இராணுவ அணுகுமுறைகளுக்கும்.. டக்கிளசு.. கருணா.. சங்கரி.. சித்தார்த்தன்.. வரதராஜப் பெருமாள்.. ஆறுமுகம் தொண்டமான் போன்ற உலகப் பெருந்தலைவர்களினது சிந்தனைக்கும்.. இந்திய பிராந்திய வல்லரசு உட்பட்ட எல்லோரினதும் சிந்தனைக்கும்.. அதுதான் இன அழிப்பு.

ஆனால்.. பாருங்கோ.. ஜோர்சியாவில தன்ர பிரஜைகள் அடிவாங்கின உடன ரஷ்சியா அடிச்சதுமில்லாமல்.. தனி நாடு பிரிச்சுக்கொடுத்த போதும்.. ஒருத்தரும்.. ஒன்றும் சொல்லேல்ல.

தன்ர மண்ணில 9/11 2001 இல சுமார் 2000 பேரை ஒசாமா என்று அமெரிக்கா சொல்லும் ஒருவர் கொன்றிட்டார் என்று இலட்சக்கணக்கில ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும்.. அமெரிக்கா செய்யும் மனிதப் படுகொலை மனிதாபிமானம் என்றும் உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்குது.

இப்படியான.. மனிதர்களும்.. அரசுகளும்.. தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் போக்கிரிக் கூட்டமும்.. உலகத்தில இருக்கும் வரை.. உண்மையான.. மனித சுதந்திரம் என்பது கிடைக்காது. கிடைக்கவும் விடமாட்டார்கள்.

சாணக்கியன் என்ற இந்தத் தமிழனுக்கே சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டு செய்யும் தமிழின அழிப்பை அடையாளம் காண முடியல்லை என்றால்.. அதுதான் சிங்களப் பேரினவாதிகளுக்கு கிடைத்த வெற்றி. கிளிநொச்சி பிடிப்பதோ.. ஆனையிறவு பிடிப்பதோ அல்ல..! :icon_mrgreen::o:o

Edited by nedukkalapoovan

நெடுக்கர் அண்ணை,

பெருமாள்கோவிலடிக்காரார் எங்களை விடுங்கோ முடிவா உதில சனத்திற்கு என்ன முடிவை சொல்லுறியள் என்று விளங்குதில்லையே?

எப்பொருள் யார்வாயில் கேட்டால் எப்பொருள் கொள்ள வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும் உங்களுக்கு இருக்கும் கவலைகளுள் இவற்றையும் வீணே ஏன் சேர்த்துக் கொள்வான் சானக்கியன்?

சாணகியன் உங்கள் பொன்னான சிந்தனைகளுக்கு இங்கே கூட்டம் இல்லைத்தான் ஆனாலும் மனம் தளராதீர்கள்.

உங்கள் பணி ஆளைப்பிடிக்குதோ இல்லையோ நல்ல பேரைத்தருவிக்கும் என்று நம்புங்கள். ஒருவரும் சிந்திக்க முடியாத வகையில் உங்கள் சிந்தனைகள் இருப்பதால் சில அற்பங்கள் உங்கள் அறிவைக்காட்டுவதற்க்குதான் இப்படி தலையால் நடக்கின்றது உங்கள் முயற்ச்சி என்றுகூட சொல்வார்கள்! கொண்டது விடாப்பரப்பரை அல்லவா நாங்கள்.

மோகன் அண்ணாவுக்கும் இடையிடையே தேவாரம் பாடிப் பாடி உங்கள் பணிகளைத் தொடருங்கள் தூக்கிவிடுகின்றார் அல்லவா சிலநேரம் கருத்துக்களை.

தேவன் அண்ணை,

நீங்களே சொன்னியள் தானே என்னாலதான் களம் உற்சாகமா இருக்குது எண்டு!

நீங்களும் இப்படி இடைக்கிடை கருத்தெழுதி என்னை உற்சாகப்படுத்த வேணும் கண்டியளோ!

என்னைப்பற்றின ஆராச்சியில இருந்து நல்ல வடிவா தெரியுது கேட்ட கேள்விகளுக்கு யாருக்கும் பதிலை சொல்வக்கில்லை என்று!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள வல்லாதிக்கம் இப்படி நில ஆக்கிரமிப்பு என்று வந்ததால் தான் இப்படி மக்கள் கஸ்டப்படுகின்றார்கள் என்ற கருத்தை இந்த மனிதனால் தெரிவிக்க வக்கில்லை. அதற்கு எதிராக இவரால் கிளர்ந்தெழ முடியாத முள்ளதண்டில்லாத .... ஏதோ மக்களுக்காக கண்ணீர் வடிப்பதாக பாசங்கு செய்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

UN pulls out of north Sri Lanka

_45023188_sri_lanka_466.gif

The United Nations has pulled its staff out of Sri Lanka's rebel-held northern region after being ensured safe passage by government troops and rebels.

Other aid agencies have also left, after being prevented from doing so over the weekend by displaced people.

The agencies' move comes as the army continues a major offensive against the rebels in northern areas of the island.

The government ordered aid workers out of the north last week saying they could not guarantee their safety.

The army says it is closing in on rebel headquarters in Kilinochchi after other rebel bases fell in recent months.

KILINOCHCHI TOWN

The capital of Kilinochchi District, it is part of the Northern Province of Sri Lanka

Serves as the administrative centre and headquarters of the Tamil Tigers

Rebels have their own judiciary and police force in the town

According to the UN, 90% of population is Tamil

Town surrounded by thousands of landmines, says the UN

Town has high rates of infant mortality and malnutrition.

Government ordered aid agencies to leave, Sept 2008

Aid agency dilemma in Sri Lanka

Kilinochchi is the town where aid agencies in the north have been based.

A convoy of some 20 vehicles carrying UN and other staff set off from the town on Tuesday travelling south along the A9 highway. Later the convoy arrived in Omantai town in government-controlled territory.

UN spokesman in Colombo Gordon Weiss said a total of 40 UN staff had now pulled out. Some local employees had decided to stay.

"We are pulling out reluctantly" because of aerial bombing and artillery shelling, he told the BBC Tamil service.

Meanwhile, a bomb has wounded at least four people on a bus in the capital, Colombo, police say. There have been a number of such attacks blamed on the rebels in recent months.

The BBC's Roland Buerk in Colombo says the military is pushing ahead with a major offensive to defeat the Tigers and end their fight for a separate state for the Tamil minority.

Troops are now near Kilinochchi

Fighting has intensified as soldiers continue a slow advance, aiming to crush the Tigers' de facto mini state in the north.

Key rebel bases have fallen, and the army says the Tigers have been driven from the east.

Military spokesman Brigadier Udaya Nanayakkara said troops were now just 5.5km (3.4 miles) away from the rebel headquarters at Kilinochchi.

Both sides claim to have inflicted heavy casualties on the other in fighting in Akkaraayan to the south-west of Kilinochchi district on Monday.

In Kilinochchi town itself, buildings around the hospital were hit by the air force and four civilians killed, a hospital doctor told the BBC Sinhala service.

Earlier, aid workers in the town told the BBC they could hear small-arms fire.

Last week, the government told aid workers employed by international organisations to leave the area, saying it could not guarantee their safety.

The International Committee of the Red Cross (ICRC) is being allowed to remain in the area. It operates a checkpoint between government and rebel-held territory.

The UN says the plight of civilians in the north is worsening

The government does not allow independent reporters into conflict areas, and many lines of communication to the north have been cut.

Aid agencies estimate there are 160,000 people in rebel areas who have been displaced by the fighting.

Leaflets have been dropped urging them to move out.

Sources on the ground say civilians are fleeing Kilinochchi into areas to the east, and rebel fighters are going that way too.

Asked if he planned to obliterate the Tigers, Sri Lanka's President Mahinda Rajapaksa told foreign correspondents the military would try, but it would take time.

"We are focusing on war," he said, Reuters reports. "We can crush them. Why can't we? They are in the jungle at the moment, and our forces are in the jungle at the moment."

Guerrilla warfare

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) have been fighting for a separate Tamil homeland in the north and east for 25 years. More than 70,000 people have died.

The rebels have come under sustained pressure from the government's air and ground forces, and they have been gradually forced to cede territory in several areas in recent months.

However, despite recent losses, the Tamil Tigers still hold considerable fighting ability to launch surprise counter attacks.

Contrary to some military claims, their core fighting formations are said to be still intact and they can easily adapt themselves to protracted guerrilla warfare, analysts say.

In July, Sri Lanka's army commander said the rebels had been defeated as a conventional force - but he conceded that a low-level insurgency could last forever.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7618016.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா என்பது திருடர்களின் குகை – தேசபற்றுள்ள தேசிய இயக்கம்

செவ்வாய், 16 செப்ரம்பர் 2008 [செய்தியாளர் மயூரன்]

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வட பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். ஐ.நா. நிறுவனங்களின் உதவி சிறி லங்காவுக்கு தேவையில்லை. இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி ஐ.நா. சமாதானப் படையை சிறி லங்காவுக்கு வரவழைப்பதற்கு மேற்குலக நாட்டினரும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் முயற்சிக்கின்றனர் என்று தேசபற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

ஐ.நா. சபையானது திருடர்களின் குகையாகும். அமெரிக்காவின் தாளத்திற்கு ரப்பர் முத்திரை பதிக்கும் முதுகெலும்பில்லாத அமைப்பே ஐ.நா. சேவையாகும். வெள்ளைக்காரர்களுக்கு அடிமைப்பட தாம் ஒருபோதும் தயாரில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு குணதாச அமரசேகர மேலும் கூறியதாவது: வன்னியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் வெளியேற வேண்டுமென்றும், ஏனெனில் அவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதமளிக்க முடியாதென்றும் அரசாங்கம் அறிவித்தது. இதனை ஏற்றுக்கொண்டு பல்வேறு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறின.

ஐ.நா.வின்கீழ் இயங்கும் நிறுவனங்களும் சம்மதித்தன. ஆனால் மேற்குலக நாட்டினரும் அவர்களின் ஏஜன்டுமான பிரபாகரனும் இணைந்து அப்பாவி மக்களைப் பயன்படுத்தி நிறுவனங்களை வெளியேற வேண்டாமென எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். இன்று ஐ.நா. அமைப்புக்கள் வெளியேற போவதில்லையென தெரிவித்துள்ளன.

சிறி லங்கா ஐ.நா. சபையின் காலணித்துவ நாடல்ல. அவர்கள் ஐ.நா. நிறுவனங்கள். அவர்கள் எம் நாட்டின் ஆளுநர்களும் அல்ல. எனவே உடனடியாக ஐ.நா. நிறுவனங்கள் வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் தெற்கில் எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும், விடுதலைப்புலிகளுக்கு உதவ முனைந்தால் தக்க பாடம் புகட்டுவோம். எமக்கு அவர்களது உதவிகளோ ஒத்தாசைகளோ அவசியமில்லை.

இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினையை முதன்மைப்படுத்தி ஐ.நா. சமாதானப் படையை இங்கு கொண்டு வருவதற்கான சதித்திட்டத்தை மேற்குலக நாடுகளும் பிரபாகரனும் முன்னெடுக்கின்றனர்.

விடுதலைப் புலிகளை இன்று எமது படையினர் வன்னிக்குள்சிக்க வைத்து சுற்றி வளைத்துள்ளனர். இந்நிலையில் சர்வதேதலையீடுகளை அதிகரித்து புலிகளை பாதுகாக்க பல்வேறு வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே அரசாங்கம் வன்னியிலுள்ள மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருவதற்கான பாதைகளை திறக்கவேண்டும். மனித உரிமைகள் தொடர்பான அமைச்சர் முதுகெலும்புடன் ஐ.நா தன்னார்வ தொண்டர் அமைப்புக்களை வெளியேற வேண்டுமென உத்தரவிடவேண்டும்.

அத்தோடு தெற்கிலுள்ள மக்கள் வன்னியில் இடம்பெயரும் மக்களுக்கு தேவையான உணவு, உடை, பால்மா, மருந்து வகைகளை வழங்கி உதவி புரிய வேண்டும். அதற்காக எமது இயக்கம் கொட்டா வீதி ரொட்னி ஒழுங்கையில் அலுவலகமொன்றைத் திறந்துள்ளது.

இவ்வாறு உதவி செய்வதன் மூலம் அப்பாவித்தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். வட பகுதி மக்களின் 60 சதவீதமானோர் இன்று கொழும்பிலேயே வாழ்கின்றனர். பாதைகளை திறந்தால் பிரபாகரனை தனிமைப்படுத்திவிட்டு அனைவரும் இங்கு படையெடுத்து விடுவார்கள்.

இதற்கு பயந்தே பொதுமக்களை பலிக்கடாவாக விடுதலைப்புலிகள் பயன்படுத்துகின்றனர்.

ஐ.நா சிறி லங்கா படையினரிடம் பாடம் கற்க வேண்டும். யுத்தத்தின் போது மனித உயிர்களை பாதுகாத்துக் கொண்டு விடுதலைப்புலிகளை ஒழிக்கின்றனர். ஆனால் அமெரிக்கப்படையினர் ஈராக், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை அல்ல பொதுமக்களையே கொன்றொழிக்கின்றனர்.

வெள்ளைக்காரர்களுக்கு அடிமைப்பட நாம் தயாரில்லை ஐ.நா. சபையென்பது திருடர்களின் குகையாகும். அமெரிக்காவின் தாளத்திற்கு ரப்பர் ஸ்டாம்பை பதிக்கும் முதுகெலும்பில்லாத அமைப்பே ஐ.நா சபையாகும் எனவும் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

pathivu.com

ஐநாவும் கருணாநிதியும் சொல்கைமும் கரும்புலிகள் மாதிரி அர்பணிப்போடு இயங்க வேண்டும் என்று அடுக்கு மொழியில் கவிநயமாக அங்கலாய்த்து ஒரு பயனும் இல்லை.

வெறுமனே இராணுவ ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதும் வாசிப்பதும் சூரியதேவன் புராணம் எழுதுவதும் சிவபுராணத்தை ஒட்டுவதும் விளையாட்டுப்போட்டிகள் போல் ஸ்கோர்களை ஓடி ஓடி வாசிப்பதும் பகிர்ந்து பொழுது போக்க கரும்புலிகளும் சர்வதேசமும் தனிநாடு பிடிச்சுத்தரும் என்று இருந்தால் ஏமாரப்போவது நாம் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.