Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லா மரக்கறி.. பழங்கள் சாப்பிடுங்கோ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரக்கறி வகைகள் மற்றும் பழங்களில் உள்ள பெக்ரினாலான (pectin) நார்பொருட்கள் (fibre)புற்றுநோயை உருவாக்கவல்ல Gal3 புரதத்தினை நிரோதிப்பதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில் நார்பொருள் நிறைந்த பல் வேறுபட்ட மரக்கறி வகைகளை மற்றும் பழங்களை உண்பதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதிலின்றும் எம்மை ஓரளவுக்கு தற்காத்துக் கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நார்பொருட்கள் உருளைக்கிழங்கில் இருந்து மேற்குறிப்பிட்ட வகைக்கு புற்றுநோயைக் கட்டுப்படுத்த அதிகம் பயன்படக் கூடிய blueberries மற்றும் spinach ஈறாக பல வகை மரக்கறி வகைகளில் மற்றும் பழங்களில் அடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்: http://www.kuruvikal.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று பழங்கள் சாப்பிடுவதும நல்லம் என்றார்கள். இப்போ

ஒரு நாளைக்கு 5 பழங்கள் சாப்பிடுவது நல்லதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று பழங்கள் சாப்பிடுவதும நல்லம் என்றார்கள். இப்போ

ஒரு நாளைக்கு 5 பழங்கள் சாப்பிடுவது நல்லதாம்.

என்ன கப்பி அக்கோய் பழத்தை தானே சாப்பிட சொல்லினம் கனக்க வாங்கி சாப்பிடுங்கோ சாப்பிடுறதில கொஞ்சத்தை முகத்துக்கும் பூசுங்கோ வெள்ளையா வந்திடுவிங்க (இல்லை என்றால் யாருக்கும் முகத்தில பூசிட்டும் அப்புறம் சாப்பிடலாம் :icon_mrgreen: )

  • கருத்துக்கள உறவுகள்

மூளை வளர ஏதாவது இருக்கா என்று சொல்லுங்க நெடுக்ஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூளை வளர ஏதாவது இருக்கா என்று சொல்லுங்க நெடுக்ஸ்.

மூளை 5 வயது வரையும் தான் வளரும். அதுக்குள்ள வளர்ந்தால் சரி.. இல்ல கஸ்டம்..!

ஆனால் மூளைத் திறனை வளர்க்கலாம். அதற்கு பல வகை முறைகள் இருக்கு. மூளைத்திறனில்.. பிறப்புரிமையும் செல்வாக்குச் செய்யுறதால குறிப்பிட்டவரின் குடும்பப் பின்னணி தெரியாமல் ஆலோசனை வழங்க முடியாது.. தூயவன்..! :icon_mrgreen:

ஓ..அப்படியோ நெடுக்ஸ் தாத்தா..தா டகவலிற்கு நன்றி..றி..!!.. :icon_mrgreen:

ஆனா மரக்கறி எல்லாம் நான் சாப்பிடுறதே கெடையாது பாருங்கோ பழங்கள் எண்டு பெரிசா சாப்பிடுறதில்ல ஆனா பழச்சாறு அடிகடி குடிக்கிறனான்..ன்.. :icon_mrgreen:

ஆனபடியா எனக்கு புற்று நோய் வராது தானே..னே :lol: பிறகு வந்திட்டா எண்ட கதி என்னாகிறது..து அது தான் கேட்டனான் பாருங்கோ..கோ.. :icon_mrgreen:

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா காய் பழமாகி கீழ விழும் இது தான் வாழ்க்கை..கை.." :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூளை 5 வயது வரையும் தான் வளரும். அதுக்குள்ள வளர்ந்தால் சரி.. இல்ல கஸ்டம்..!

:rolleyes::wub::wub::):)

நல்ல தகவல்..நன்றி நெடுக்ஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:wub::wub::):):(

கு.சா, தூயவன்.. மற்றும் என் போன்ற புத்தியற்றவர்களின் மூளைக்கு பலம் கூட்ட மாத்திரைகள் மத்தியில் ஒரு அவதானிப்பைச் செய்திருப்பதாக விஞ்ஞானிகள் செய்திகள் வழி சொல்கின்றனர். ஆனால் அதன் பின்னால் உள்ள ஆபத்துக்களுக்கு அவர்களோ செய்தியை இங்கே போட்ட நானோ பொறுப்பில்ல..! :rolleyes:

மாத்திரைகளால் மூளைச் செயற்பாட்டை ஊக்குவிக்கலாம்.

_45102279_be910967-8c56-4217-b0da-80bd50a4120d.jpg

பரிந்துரைக்கப்பட்டும் Ritalin (methylphenidate) போன்ற அதிக துடிப்புள்ள சிறுவர்கள் மத்தியில் கற்றல் திறனை அதிகரிக்க தயாரிக்கப்படும் (a drug designed to treat hyperactive children - to maximise their learning power)மாத்திரை மற்றும் Provigil மாத்திரைகளைப் பாவிப்பதால் மூளையின் செயற்பாடு மற்றும் ஞாபக சக்தி ( focus, concentration or memory) ஊக்கமடைவதாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் நடத்திய கருத்துக்கணிப்பில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறு மாத்திரைகளை நீண்ட காலம் பாவிப்பதன் பின்னால் உள்ள பாதிப்புக்கள் மற்றும் உடல் நலத்துக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் சரியான ஆய்வு ரீதியான முடிவுகள் இன்னும் பெறப்பட வேண்டிய நிலையில் இது ஒரு ஆரம்ப நிலை அவதானிப்பாக மட்டும் இருக்கிறது.

அதுமட்டுமன்றி நீண்டகாலத்துக்கு இவ்வாறான மாத்திரைகளை உட்கொள்ளல் குறிப்பிட்ட மாத்திரிகைகள் கொண்டுள்ள இரசாயனப் (வேதியல்) பதார்த்தங்களுக்கு மக்களை அடிமைப்படுத்தி விடலாம் என்றும் எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

மூலம்: http://www.kuruvikal.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கண்களைப் பேணும் காய்கறிகள்

நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.

வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

நன்றி: கீற்று



  • கருத்துக்கள உறவுகள்

மூளை 5 வயது வரையும் தான் வளரும். அதுக்குள்ள வளர்ந்தால் சரி.. இல்ல கஸ்டம்..!

ஆனால் மூளைத் திறனை வளர்க்கலாம். அதற்கு பல வகை முறைகள் இருக்கு. மூளைத்திறனில்.. பிறப்புரிமையும் செல்வாக்குச் செய்யுறதால குறிப்பிட்டவரின் குடும்பப் பின்னணி தெரியாமல் ஆலோசனை வழங்க முடியாது.. தூயவன்..! :)

நெடுக்ஸ், ஒமேக்கா (omega) 3 & 6 மற்றும் fatty acid போன்றவை மூளைவளற்சிக்கு நல்லதென சொல்கிறார்களே... உண்மையா?

நெடுக்ஸ், ஒமேக்கா (omega) 3 & 6 மற்றும் fatty acid போன்றவை மூளைவளற்சிக்கு நல்லதென சொல்கிறார்களே... உண்மையா?

நான் நெனைக்கல்ல எனி உங்களுக்கு மூளை வளரும் எண்டு சபேஷ் மாமா..மா.. :rolleyes: எனி இருக்கிறதை கொண்டு மேல போறது தான் புத்திசாலி தனம்..ம் பாருங்கோ..கோ.. :icon_idea:

சரி..சரி கோவித்திடாதையுங்கோ நான் பகிடிக்கு..கு.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், ஒமேக்கா (omega) 3 & 6 மற்றும் fatty acid போன்றவை மூளைவளற்சிக்கு நல்லதென சொல்கிறார்களே... உண்மையா?

ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பமிலங்கள் என்பவை நிரம்பாத கொழுப்பமிலங்கள். பொதுவாக நிரம்பாத கொழுப்பமிலங்கள் உடலக்கு நன்மையானவையே. கொலஸ்ரோலின் அளவைக் கட்டுப்படுத்தும். நிரம்பாத கொழுப்பமிலங்கள் அடங்கிய புரதங்கள் (HDLs) கொலஸ்ரோலை ஈரலுக்கு காவி அதை சிதைவடையச் செய்யும். நிரம்பிய கொழுப்பமிலங்கள் அடங்கிய புரதங்கள் (LDLs) கொலஸ்ரோலை உடற்கலங்களிற்கு காவிச் செல்பவை... எனவே நிரம்பிய கொழுப்பமிலங்கள் அதிகம் இரத்தத்தில் இருப்பின் கொலஸ்ரோலின் அளவும் அதிகமாக இருக்கும்.

எனி நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன்..

ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பமிலங்களில் ஒமேகா 3 முக்கியமாக மூளையின் செயற்பாட்டில் செல்வாக்குச் செய்வனதாம். குறிப்பாக குழந்தைகளுக்கும் கருவுற்றிருக்கும் தாய் மாருக்கும் அவசியமானவை. குழந்தைகளின் கருவில் வளரும் சிசுவின் மூளை வளர்ச்சிக்கு. பெரியவர்களில் மூளைச் செயற்பாட்டுக்கு அவசியம். அதுமட்டுமன்றி சீரான இதயத்தொழிற்பாட்டுக்கும் அவசியமானவை.

இவை பொதுவாக அத்தியாவசிய கொழுப்பமிலங்கள் எனப்படுகின்றன. காரணம்.. இவ்வகை கொழுப்பமிலங்களை எமது உடலுக்கு ஆக்கத் தெரியாது. உணவின் மூலமே நாம் உட்கொள்ள வேண்டும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நெனைக்கல்ல எனி உங்களுக்கு மூளை வளரும் எண்டு சபேஷ் மாமா..மா.. :rolleyes: எனி இருக்கிறதை கொண்டு மேல போறது தான் புத்திசாலி தனம்..ம் பாருங்கோ..கோ.. :icon_idea:

சரி..சரி கோவித்திடாதையுங்கோ நான் பகிடிக்கு..கு.. :wub:

அப்ப நான் வரட்டா!!

சபேஷ் மாமா தனக்குக் கேட்கல்ல.. யூனியர் சபேஸ் மாமி வந்திருக்கா எல்லோ.. (நீங்கள் தானே சொன்னீங்கள்.. தேவதை போல தோழி வந்திட்டாள் சபேஸ் மாமா வீட்ட என்று..) அவாவுக்கு..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூளை வளர ஏதாவது இருக்கா என்று சொல்லுங்க நெடுக்ஸ்.

ஏன் இத என்னட்ட கேட்க வேண்டியது தானெ அண்ணா அதுவந்து ஒவ்வொருநாளும் 10 நிமிடங்கள் தலைகுத்தனமா சுவரோடசாய்ந்து நேராக தலைகீழாக நிட்கவேண்டும் அப்போது ரத்த ஓட்டம் கோஞசம் மன்டையிக்கு வருமாம் அப்பத்தான் மூலை கொஞ்சமாவது வேலைசெய்யும்

எனக்குத் தெரியாது ஆனால் முந்தி நானும் விடியவில படிக்கமுதல் 10 நிமிடம் இப்படியெல்லாம் செய்தனான் பாருங்கோ நீங்ளும் ஒருக்கா றை பன்னுங்கோ(வேறுவிதமாய் ஆனால் நான் பொறுப்பில்லேங்கோ)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இத என்னட்ட கேட்க வேண்டியது தானெ அண்ணா அதுவந்து ஒவ்வொருநாளும் 10 நிமிடங்கள் தலைகுத்தனமா சுவரோடசாய்ந்து நேராக தலைகீழாக நிட்கவேண்டும் அப்போது ரத்த ஓட்டம் கோஞசம் மன்டையிக்கு வருமாம் அப்பத்தான் மூலை கொஞ்சமாவது வேலைசெய்யும்

எனக்குத் தெரியாது ஆனால் முந்தி நானும் விடியவில படிக்கமுதல் 10 நிமிடம் இப்படியெல்லாம் செய்தனான் பாருங்கோ நீங்ளும் ஒருக்கா றை பன்னுங்கோ(வேறுவிதமாய் ஆனால் நான் பொறுப்பில்லேங்கோ)

ஓமோம் நல்ல வழி. இப்படி செய்தால் மூளை தலைக்கு வெளியில்தான் (தலை வீங்கி ) நல்லா வளரும் :rolleyes::o

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இத என்னட்ட கேட்க வேண்டியது தானெ அண்ணா அதுவந்து ஒவ்வொருநாளும் 10 நிமிடங்கள் தலைகுத்தனமா சுவரோடசாய்ந்து நேராக தலைகீழாக நிட்கவேண்டும் அப்போது ரத்த ஓட்டம் கோஞசம் மன்டையிக்கு வருமாம் அப்பத்தான் மூலை கொஞ்சமாவது வேலைசெய்யும்

எனக்குத் தெரியாது ஆனால் முந்தி நானும் விடியவில படிக்கமுதல் 10 நிமிடம் இப்படியெல்லாம் செய்தனான் பாருங்கோ நீங்ளும் ஒருக்கா றை பன்னுங்கோ(வேறுவிதமாய் ஆனால் நான் பொறுப்பில்லேங்கோ)

ஐயோ ..... விபரீத விளையாட்டுக்களில் இறங்கிவிடாதீர்கள் .

எனக்கு தெரிந்த ஒருவர் , சிரசாசனம் செய்து கண்ணிற்கு வரும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்படுகின்றார் .

யோகாசனம் போண்றவைகள் செய்யும் போது , அதனை முறைப்படி கற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டபின் நாம் செய்வதே புத்திசாலித்தனம் .

சபேஷ் மாமா தனக்குக் கேட்கல்ல.. யூனியர் சபேஸ் மாமி வந்திருக்கா எல்லோ.. (நீங்கள் தானே சொன்னீங்கள்.. தேவதை போல தோழி வந்திட்டாள் சபேஸ் மாமா வீட்ட என்று..) அவாவுக்கு..! :unsure:

ஒமென்ன..ன நான் மறந்து போயிட்டன்..ன் தாத்தா மறக்கல்ல..ல..(ம்ம் இப்ப எல்லாம் தாத்தாமார்களிண்ட மூளை தான் நல்லா வேலை செய்யுது).. :unsure:

எனகொரு சந்தேகம் தாத்தா..தா..அதுவென்னவெண்டா..டா..

இப்ப அது தான் இந்த காலகட்டத்தில..ல மூளைக்கு பெரிசா வேளை இல்ல எண்டு தான் நெனைக்கிறன்..ன் கணக்கு பார்க்கிறது எண்டா "கல்குலேட்டர்" அப்படி எண்டு ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு சாமான் இருக்கு..கு பிறகு நாங்க ஏன் மூளையை பற்றி கவலைபடணும்..ம்..??.. :lol:

எனக்கு கூட இப்ப "கல்குலேட்டர்" இல்லாம பெருக்க கூட முடியுதில்லை எண்டா யோசியுங்கோ எண்ட மூள எந்ந இக்கட்டான நெலையில இருக்குது எண்டு..டு.. :) உங்களுக்கு என்ன மாதிரி..??

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒமென்ன..ன நான் மறந்து போயிட்டன்..ன் தாத்தா மறக்கல்ல..ல..(ம்ம் இப்ப எல்லாம் தாத்தாமார்களிண்ட மூளை தான் நல்லா வேலை செய்யுது).. :wub:

எனகொரு சந்தேகம் தாத்தா..தா..அதுவென்னவெண்டா..டா..

இப்ப அது தான் இந்த காலகட்டத்தில..ல மூளைக்கு பெரிசா வேளை இல்ல எண்டு தான் நெனைக்கிறன்..ன் கணக்கு பார்க்கிறது எண்டா "கல்குலேட்டர்" அப்படி எண்டு ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு சாமான் இருக்கு..கு பிறகு நாங்க ஏன் மூளையை பற்றி கவலைபடணும்..ம்..??.. :)

எனக்கு கூட இப்ப "கல்குலேட்டர்" இல்லாம பெருக்க கூட முடியுதில்லை எண்டா யோசியுங்கோ எண்ட மூள எந்ந இக்கட்டான நெலையில இருக்குது எண்டு..டு.. :) உங்களுக்கு என்ன மாதிரி..??

அப்ப நான் வரட்டா!!

அது சரி கல்குலேட்டர் என்றால் என்ன தமிழில விளக்குமாறோ.எனக்கு அதால பெருக்கிறதைவிட வேற ஒன்டும் தெரியாது :(

அது சரி கல்குலேட்டர் என்றால் என்ன தமிழில விளக்குமாறோ.எனக்கு அதால பெருக்கிறதைவிட வேற ஒன்டும் தெரியாது :D

ம்ம்..வேற கூட்டலாம்,பெருக்கலாம் அல்லோ..லோ..பார்க்க போனா "கல்குலேட்டரும்" ஒரு வகையில வெளக்குமார் தான் ஏன் எண்டா..டா.. :lol:

வேலையை சுலபமாக்குது தானே..னே..(அது தான் கூட்டுற,பெருக்கிற வேலையை)..அதோட பொண்ணுங்க முந்தி வெளக்குமாரை தூக்கி காட்டினாங்க..க.. :)

இப்ப "கல்குலேட்டரை" தூக்கி காட்டுறாங்க..க...!! :D

அப்ப நான் வரட்டா!!

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரக்கறிகளை உண்போருக்கு புற்றுநோய் குறைவு.

தாவர (மரக்கறி) வகை உணவுகளை உண்போருக்கு புற்றுநோய்களின் தாக்கம் மாமிச உணவுகளை உண்பவர்களை விடக் குறைவென்று பிரித்தானியாவில் 52,700 க்கும் மேற்பட்ட 20 வயதுக்கும் 89 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள், பெண்களிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஆனால் வழமைக்கு மாறாக, முன்னைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டதற்கு மாறாக தாவர உணவுகளை உண்போர்கள் மத்தியிலும் சிவப்பு இறைச்சி உண்போர் மத்தியில் காணப்படும் புற்றுநோய்த் தாக்கம் அதிகம் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எதுஎப்படி இருப்பினும் நாளாந்தம் 5 பங்குகள் தாவர உணவுகள் அல்லது பழங்களை உண்பதால் புற்றுநோய்களின் தாக்கத்தை வெகுவாகக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் பரிந்துரை வழங்கியுள்ளனர்.

http://www.kuruvikal.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.