Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மத்திய அரசுக்கு வேதனை தரும் முடிவு எடுக்க மாட்டேன் : கருணாநிதி பேட்டி

Featured Replies

மத்திய அரசுக்கு வேதனை தரும் முடிவு எடுக்க மாட்டேன் : கருணாநிதி பேட்டி

சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் சென்னையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:பிரணாப் முகர்ஜி என்னுடன் பேசினார். அவர் தெரிவித்த விஷயங்கள் எல்லாம் முடிவடைந்தால் தான் முழு திருப்தி; முடிவடையும் என நம்புகிறேன். நார்வே முயற்சி அடிப்படையில் போர் நிறுத்தம் என்பது இப்போது ஆகாது. அதுபற்றிய பேச்சு இல்லை. இலங்கைப் பிரச்னை 40 ஆண்டுகளாக நடந்துவரும் போராட்டம்; நான்கு நாட்களில் முடிக்க முடியாது.போர் நிறுத்தம் என்பது, பொதுமக்களைக் காப்பாற்றத்தான். இலங்கை அரசின் உறுதிமொழி, பொதுமக்களை நிச்சயம் தாக்க மாட்டோம் என்பது. போர் நிறுத்தத்தை இந்தியா முன்னின்றோ, வேறு நாடுகளோ அல்லது அமைப்புகளோ நடத்துமா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. போர் நிறுத்தங்களுக்கான வழிமுறைகள் ஆராயப்பட்டுள்ளன. அதை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை.எம்.பி.,க்கள் ராஜினாமா முடிவை நிறைவேற்றினால் மத்திய அரசு பல சிக்கல்களுக்கு ஆளாகும். எனவே, முடிவை ஒத்திவைக்க அவர் கேட்டுக்கொண்டார். மத்திய அரசுக்கு வேதனை, சிக்கல் உள்ளாக்கும் வகையில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். "நிச்சயம் அப்படி ஒரு நிலையை உருவாக்க மாட்டேன்' எனக் கூறினேன்.

ஆதாரம் தினமலர்

இனிவரும் காலங்கள் 'றோ"வின் நாடகங்கள் அரங்கேறக்கூடும்.

தொடரூந்தின் பெட்டிகளை எரித்து சிலையை உடைத்து அரங்கேறிய 'பாச்சா' பலிக்காது போகவே....தற்போதைய தற்காலிக சமரசம்.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் பின் மத்தியிலிருந்து தூது எதுவும் அனுப்பாது தாமதித்துப் பார்த்தார்கள். ஊடகங்களால் உரைகளால் உரசிப் பார்த்தார்கள். கைதுகளுக்கு உரமூட்டினார்கள். தமிழக உறவுகள் முன் இவை எடுபடாததால் பாலு பறந்தார் டெல்லிக்கு, முகர்ஜி வந்தார் தமிழ் நாட்டிற்கு சில அரைகுறை உறுதிமொழிகளுடன்....

இனி....முன்னைய நாடகங்கள் போல அதாவது மீனவரைக் கடத்தல், சுட்டுக்கொல்லுதல் போன்றவைபோல வேறு அணுகுமுறைகள் முனைப்புப்பெறும்.

அதில் முதலாவது "கொன்கோட் தியேட்டரின் நாடகம்" ஆக அமையலாம்.

எம் எழுத்துக்களும் பெரிதாக்கி திரித்துக்காட்டி தமிழக மக்களை திசைதிருப்பப் பயன்படுத்த முனையலாம்.

அரசியல்வாதிகள் தம்மைக் காப்பாற்ற "சாணக்கியம்" பேணலாம் ஆனால் தமிழக மக்கள் எம்முடன் என்றும் இருக்க எமது முனைப்புக்கள் அவசியம்.

இதனை விட வேறு முடிவுகள் மு.க எடுத்திருந்தால்தான் ஆச்சரியம் தந்து இருக்கும். மத்திய அரசின் மீதான ஆதரவினை விலக்கி கொண்டால், மாநில அரசிற்கான ஆதரவினை காங்கிரஸ் விலக்கி கொள்ளும் என அவருக்கு தெளிவாக உணர்த்தப் பட்டிருக்கும்.

தமிழக கட்சிகளுக்கு அப்பால் தமிழக மக்களின் ஆதரவும், தமிழக அரசியல் சாராத (அல்லது கட்சி அல்லாத) அமைப்புகளின் ஆதரவுமே எம் போராட்டத்திற்கு என்றும் தேவை. இதனி புரிந்து கொள்ளாமல், நாம் அஜித் போன்றவர்களை எதிர்பதிலும் அவ் எதிர்ப்பை நிறுவனப் படுத்துவதிலும் மும்முரமாக ஈடுபட்டு வீணாக நேரத்தையும், எம் வளங்களையும் வீணடிப்போம் வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இதனி புரிந்து கொள்ளாமல், நாம் அஜித் போன்றவர்களை எதிர்பதிலும் அவ் எதிர்ப்பை நிறுவனப் படுத்துவதிலும் மும்முரமாக ஈடுபட்டு வீணாக நேரத்தையும், எம் வளங்களையும் வீணடிப்போம் வாருங்கள்

மௌனமாக இருந்திருக்கலாம் அஜித் போன்றோர். ஏன் எதிர்க் கருத்துக்களை உதிர்க்க வேணும் தமிழர்களுக்கெதிராக? அதனால் ஈழத் தமிழரின் எதிர்ப்பைக் காட்ட வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். எங்களிடமும் அவர்களின் வருமானமும் தொழிலும் தங்கியிருக்கிறது என்று காட்ட பெரிய முன்னெடுப்பு எதுவும் தேவையில்லை. ஐங்கரன் நிறுவனம் அஜித் படங்களை வெளிநாடுகளில் விற்க முடியாத படி செய்யும் ஒரு பகிஷ்கரிப்புக்கு பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை. ஆனால் கருணாநிதி மத்திய அரசைக் கஷ்டப் படுத்தாமல் நடந்து கொள்வது போல அஜித் ரசிகர்களுக்கு நோகாமல் நாம் நடந்து கொள்ள இயலாது என்றே நினைக்கிறேன். எங்கள் ஆட்கள் தான் விளையாட்டு, கலை, எழுத்து இவையெல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்று பேசும் முதிர்ச்சியான ஆசாமிகளாயிற்றே.

மௌனமாக இருந்திருக்கலாம் அஜித் போன்றோர். ஏன் எதிர்க் கருத்துக்களை உதிர்க்க வேணும் தமிழர்களுக்கெதிராக? அதனால் ஈழத் தமிழரின் எதிர்ப்பைக் காட்ட வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். எங்களிடமும் அவர்களின் வருமானமும் தொழிலும் தங்கியிருக்கிறது என்று காட்ட பெரிய முன்னெடுப்பு எதுவும் தேவையில்லை. ஐங்கரன் நிறுவனம் அஜித் படங்களை வெளிநாடுகளில் விற்க முடியாத படி செய்யும் ஒரு பகிஷ்கரிப்புக்கு பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை. ஆனால் கருணாநிதி மத்திய அரசைக் கஷ்டப் படுத்தாமல் நடந்து கொள்வது போல அஜித் ரசிகர்களுக்கு நோகாமல் நாம் நடந்து கொள்ள இயலாது என்றே நினைக்கிறேன். எங்கள் ஆட்கள் தான் விளையாட்டு, கலை, எழுத்து இவையெல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்று பேசும் முதிர்ச்சியான ஆசாமிகளாயிற்றே.

எமக்கு எதிர்பற்கு இன்னமும் எத்தனையோ விடயங்கள் உள்ளன. அஜித் எல்லாம் வெறும் கூத்தாடிகள் ஆனால் அவர்கள் பிரதிநிப்படுத்தும் தமிழ் சினிமா முழுக்க முழுக்க தமிழ் தேசிய எதிர்ப்பை அரசியலாக கொண்டது. அவ் அரசியலுக்கு எதிராக கிளம்பும் சீமான் , அமீர் போன்றவர்களை சிறைக்கு தள்ளும் அரசியலை வருடும் அரசியலை கொண்டது. நாம் எதிர்க்க வேண்டியது அவ் தமிழ் தேசிய விரோத பார்பனிய அரசியலை தான்

மு.க. வாபஸ் வாங்கி விட்டார் நாம் தான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோம் என்று நிணைக்கிறேன். இப்போதும் ஒன்றும் தாமதிக்காமல் நாம் ஒரு காரியம் செய்யலாம்.

அதுவும் அவருடைய முறையிலேயே செய்யலாம்.அதவது புலத்திள் வாழும் அனைத்து ஈழத்தமிழர்களும் எமது ஏமாற்றத்தையும் கவலைகளையும் வெளிப்படுத்தி உருக்கமாக

மின்னஞ்சல் மூலமாகவும் தொலைநகல் மூலமாகவும் மு.க அவர்களுக்கு தெரிவிக்கலாம். யாராவது முகவின் மின்னஞ்சல் தொலைநகல் விலாசம் தெரிந்தால் களத்தில் தெரியத்தரவும்.நன்றி

எது நடக்கணுமோ அது நன்றாகத்தான் நடக்கிறது. எது நடந்ததோ அதுவும் நன்றாகத்தான் நடக்கின்றது. .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு முதலமைச்சர்: cmcell@tn.gov.in

தமிழ்நாடு கவர்னர்: governor@tn.nic.in

  • கருத்துக்கள உறவுகள்
:lol: முதலில் ஜெயலலிதா பின்வாங்கினார். இப்போது கலைஞர் பின்வாங்குகின்றார்.நிரந்தரவ

கலைஞர் இப்படி மத்திய அரசின்சொல்லுக்கு கட்டு படுவார் என்று எல்லாருக்கும் தெரிந்த விசயம் தானே.

காங்கிரஸ் தி.மு.க ஆதரவை விலக்கினாலும் பா.ம.க ஆதரவு கொடுத்து தமிழக அரசை காப்பாற்றி இருக்கும்

Edited by நேசன்

Indian government ally drops Sri Lanka resignation threat

Buzz Up Send

Email IM Share

Digg Facebook Newsvine del.icio.us Reddit StumbleUpon Technorati Yahoo! Bookmarks Print By S. Murari S. Murari – 2 hrs 53 mins ago Reuters – India's Foreign Minister Pranab Mukherjee speaks during a joint news conference with his Pakistan's counterpart … CHENNAI, India (Reuters) – A key regional ally of the Indian government has withdrawn a threat to stop supporting the coalition over the escalating conflict in Sri Lanka, Indian Minister of External Affairs Pranab Mukherjee said Sunday.

Mukherjee was given reassurances by the chief minister of the southern Indian state of Tamil Nadu, whose ruling party had threatened to pull out in protest against the Sri Lankan government's intensifying offensive against the LTTE.

"The Chief Minister assured me that he will not precipitate any crisis in the UPA government," Mukherjee said.

Withdrawal of support could have forced a vote of confidence in Prime Minister Manmohan Singh's government, ahead of elections due in 2009.

Mukherjee flew to the state capital Chennai from New Delhi to brief Chief Minister M. Karunanidhi about his earlier discussions with Sri Lankan special envoy

http://news.yahoo.com/s/nm/20081026/wl_nm/us_india_tamils_1

இதெல்லாம் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும். என்ன திட்டமிட்டது போல் தமிழுணவாளர்களின் குரல்கள் தற்காலிகமாகச் சிறையினுள் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.