Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையா காதலிக்கிறவங்க என்ன செய்வாங்க?

காதலிக்கும் ஒருவருக்கு பிரச்சனை என்றால் உண்மையாகக் காதலிக்கின்றவங்க என்ன செய்வாங்க? 28 members have voted

  1. 1. காதலிக்கும் ஒருவருக்கு பிரச்சனை என்றால் உண்மையாகக் காதலிக்கின்றவங்க என்ன செய்வாங்க?

    • ஓடி ஒளிப்பாங்க.
      1
    • பிரச்சனையை எதிர்கொள்ள கூட இருந்து உதவுவாங்க.
      21
    • இதுதான் சாட்டென்று கழற்றிவிடுவாங்க.
      6

Please sign in or register to vote in this poll.

Featured Replies

வாக்களிச்சதை வெளியில சொல்லக் கூடாது என்பார்கள். ஆனால் இங்க எல்லாரும் சொல்லிட்டினம் நானும் சொல்லுறேன். 3.இதுதான் சாட்டென்று கழற்றிவிடுவாங்க. இதுக்குத்தான் வாக்களிச்சனான். (ஏதாவது அன்பளிப்பு குடுக்கிறீங்களா?)

ம்ம்..அன்பளிப்பு தானே வசி அண்ணா..ணா..உங்களுக்காகவும் மற்றும் நெடுக்ஸ் தாத்தாவிற்காகவும்..சா..சா அவரிண்ட நண்பருக்காகவும்..ம் இந்தாங்கோ இந்த பாட்டு..டு.. :lol:

அன்பளிப்பு காணுமோ..மோ..(இல்லாட்டிக்கு ஏகன் படதிற்கு இரண்டு டிக்கட்டும் வாங்கி தரட்டோ).. :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் , நீங்கள் பனிபிரதேசத்தில் வாழும் எஸ்கிமோவர்களுக்கே ஐஸ்பழம் விற்கிறனீங்கள் , :lol:

உங்களுக்கு காதல் பாலபாடம் நடத்த யாழ். களத்தில் ஒருவருமே இல்லை என நினைக்கின்றேன் . :D

எப்படி தமிழ் சிறி உங்களால் மட்டும் கண்டு பிடிக்க முடியுது :):D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..நல்லதொரு கேள்வி தாத்தா..தா..!!.. :unsure:

ஏன் இப்படி சொல்லுறன்..ன் எண்டா அதிலையும் ஒரு காரணம் இருக்கு..கு..இப்ப ஒரு உதாரணதிற்கு என்னை காதலிக்கிறவா வந்து என்னட்ட இப்படி சொல்லுறா எண்டு வையுங்கோவன்..ன்.."டார்லிங்" நான் கர்பமா இருக்கிறன் எண்டு உடன நான் யோசிக்கோனும் உதுக்கு காரணம் நானோ எண்டு..டு..அப்படி நானா இருந்தா பிரச்சினையை எதிர்கொள்ள உதவி செய்வன்..ன்.. :unsure:

இப்ப ஒராள் கர்ப்பமாகிட்டன் என்று சொன்னால்... அங்கும் ஒரு உண்மை என்பது இருக்கும் அல்லவா.. உங்களைப் பொறுத்தவரை அவரைப் பொறுத்தவரை.

ஒன்றில் கர்ப்பத்துக்கு நீங்கள் காரணம்.. அல்லது யாரோ ஒருவன் காரணம் என்ற உண்மை அங்கு ஒளிந்திருக்கும் அல்லவா. கர்ப்பத்திற்கு நீங்கள் காரணமா இல்லையா என்பதை தீர்மானிக்கிறதுக்கு உங்களளவில் உண்மை இருக்கும் அல்லவா. நீங்கள் தொடாமல்.. உங்களால் கர்ப்பம் உருவாகாது. அந்த வகையில்.. நீங்களா இல்லையா என்பதை உண்மையாக நீங்கள் உணரலாம் இல்லையா.. அதேபோல் தான் காதலையும் உள்ளத்தால் உண்மையாக ஏற்றுக் கொண்டு செய்தால்.. உண்மைக் காதல்.. உள்ளத்தில்.. ஏற்பதா விடுவதா அல்லது ஏதாவது நன்மை கிடைக்குமா.. தீமையாகுமா என்று சஞ்சலப்பட்டுக் கொண்டு பொழுதை வீணடித்தால் அது வீணாப்போதல்.. அங்கு அடிப்படையில் காதல் இல்லை. செய்வதை எல்லாம் செய்திட்டு.. தனக்கு வசதியான ஒன்றைத் தேடி நேரத்தை காலத்தை வீணடித்தல்.. ஒரு இழிச்சவாய் கிடைக்குமா என்ற போலித்தேடல்தான் அங்கிருக்கிறது.

இப்போ.. கர்ப்பம் என்று சொன்னால் கூட.. பழகின தோழியை.. அப்படியே கைவிட்டிட்டு.. ஓடி ஒளிவது நல்லதா. நைசா.. உன்ர சகவாசமே வேணாண்டி.. நம்ம வம்பில மாட்டிடப் போறாங்க என்று கழற்றிவிடுறது நல்லதா. அந்தத் தோழியின் கர்ப்பத்துக்கு காரணமானவனை.. சேர்த்து வைக்கிறதுதானே.. தோழமைக்கு அழகு. யதார்த்தத்தில் இது சிக்கலான விடயம் தான். இருந்தாலும்.. மனிதத் தோழமை என்பது அந்தளவுக்கு உண்மையாக.. புரிந்துணர்வுள்ளதாக.. தெளிவானதாக.. ஒழுக்கம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் மனிதனின் பகுத்தறிவு அங்கு செயற்படுவதாகக் கருத முடியும். நாம் என்ன விலங்குகளா.. சிந்தனையற்று திரிவதற்கு..! எனக்கு நான் உண்மையானவனா இருந்திட்டால்.. ஏன் அடுத்தவருக்கு அஞ்ச வேண்டும். தவறு செய்பவன் தான் தனக்கே அஞ்சுவான்..! :unsure:

Edited by nedukkalapoovan

இப்ப ஒராள் கர்ப்பமாகிட்டன் என்று சொன்னால்... அங்கும் ஒரு உண்மை என்பது இருக்கும் அல்லவா.. உங்களைப் பொறுத்தவரை அவரைப் பொறுத்தவரை.

ஒன்றில் கர்ப்பத்துக்கு நீங்கள் காரணம்.. அல்லது யாரோ ஒருவன் காரணம் என்ற உண்மை அங்கு ஒளிந்திருக்கும் அல்லவா. கர்ப்பத்திற்கு நீங்கள் காரணமா இல்லையா என்பதை தீர்மானிக்கிறதுக்கு உங்களளவில் உண்மை இருக்கும் அல்லவா. நீங்கள் தொடாமல்.. உங்களால் கர்ப்பம் உருவாகாது. அந்த வகையில்.. நீங்களா இல்லையா என்பதை உண்மையாக நீங்கள் உணரலாம் இல்லையா.. அதேபோல் தான் காதலையும் உள்ளத்தால் உண்மையாக ஏற்றுக் கொண்டு செய்தால்.. உண்மைக் காதல்.. உள்ளத்தில்.. ஏற்பதா விடுவதா அல்லது ஏதாவது நன்மை கிடைக்குமா.. தீமையாகுமா என்று சஞ்சலப்பட்டுக் கொண்டு பொழுதை வீணடித்தால் அது வீணாப்போதல்.. அங்கு அடிப்படையில் காதல் இல்லை. செய்வதை எல்லாம் செய்திட்டு.. தனக்கு வசதியான ஒன்றைத் தேடி நேரத்தை காலத்தை வீணடித்தல்.. ஒரு இழிச்சவாய் கிடைக்குமா என்ற போலித்தேடல்தான் அங்கிருக்கிறது.

இப்போ.. கர்ப்பம் என்று சொன்னால் கூட.. பழகின தோழியை.. அப்படியே கைவிட்டிட்டு.. ஓடி ஒளிவது நல்லதா. நைசா.. உன்ர சகவாசமே வேணாண்டி.. நம்ம வம்பில மாட்டிடப் போறாங்க என்று கழற்றிவிடுறது நல்லதா. அந்தத் தோழியின் கர்ப்பத்துக்கு காரணமானவனை.. சேர்த்து வைக்கிறதுதானே.. தோழமைக்கு அழகு. யதார்த்தத்தில் இது சிக்கலான விடயம் தான். இருந்தாலும்.. மனிதத் தோழமை என்பது அந்தளவுக்கு உண்மையாக.. புரிந்துணர்வுள்ளதாக.. தெளிவானதாக.. ஒழுக்கம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் மனிதனின் பகுத்தறிவு அங்கு செயற்படுவதாகக் கருத முடியும். நாம் என்ன விலங்குகளா.. சிந்தனையற்று திரிவதற்கு..! எனக்கு நான் உண்மையானவனா இருந்திட்டால்.. ஏன் அடுத்தவருக்கு அஞ்ச வேண்டும். தவறு செய்பவன் தான் தனக்கே அஞ்சுவான்..! :D

ம்ம்..நெடுக்ஸ் தாத்தா..தா..!!.. :huh:

நீங்க சொல்லுறதில விசயம் இருக்கு தான்..ன் அதாவது கர்ப்பதிற்கு யார் காரணம் எண்டு கண்டறியலாம்..ம் அது வெளிபடையா தெரிய வாறபடியா..யா ஆனா காதல் அப்படியோ..யோ..?? :( ..இல்லையே எனக்கு பக்கத்தில இருந்து ஜஸ்கிரிம் குடித்து கொண்டு வேற ஒருவனிண்ட நினைப்பில அவா இருந்தாலும் எனக்கு தெரிய போறதில்லை நானும் உண்மையான காதல் எண்டு ஜஸ்கீரிமை குடித்து கொண்டு இருக்க வேண்டியது தான் மிச்சம்..ம்.. :(

ம்ம்..பழகக்க எல்லாரும் உள்ளத்தால் ஏற்று கொண்டு தான் பழகீனம் கொஞ்சம் நாள் போக தான் வண்டவாளம் தெரியும் உதை என்னால ஏற்று கொள்ள ஏலாது..து அடிபடை காதல் எண்டு தற்போது எதுவுமே இல்லை..ல ஏதோ பிடித்திருந்தா பழகிறாங்க பிறகு "பாய்" சொல்லிடுறாங்க..க.. :D

இன்னொரு இளிச்ச வாயனை கல்யாணம் வேற கட்டுறாங்க..க இந்த அடிபடையில் தான் தற்பொழுது காதலும் இருக்கின்றது தாத்தா..தா..!!.. :(

இன்றைய காதலை எளிதிள் நம்பிவிட முடியாது அதனால் ஆற அமர யோசிகோனும்..ம் பங்கு சந்தையை போல் தான் காதலும்..ம் உடன போய் முதலிட்டிட்டு..டு இருந்து அழ கூடாது..து ஆகவே முதலீடுற நாங்க தான் யோசிகோனும் காலதிற்கும் இந்த முதலீட்டால இலாபமோ இல்லாட்டிக்கு நட்டமோ எண்டு..டு.. :D

அதை விட்டிட்டு உண்மையான காதல் எண்டு போனா...பிறகு உங்களிண்ட வருமானதிற்கும் திண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் பாருங்கோ..கோ..

ஓமோம்..உங்களுக்கு ஒரு காதலி இருந்து அவா வேற ஒருவர் மூலம் கர்பமாகினா..னா நீங்க சேர்த்து வைக்க தேடுவியள் அவரை..ரை..எனக்கு அந்த அளவிற்கு மனிதாபிமானம் எல்லாம் இல்லை..லை விட்டிட்டு எண்ட வேலையை தான் பார்ப்பன் இது தான் உண்மையான காதல்..ல் :D ..அதை விட்டிட்டு தேட போய் எண்ட வாழ்க்கையும் கெடுத்து..து எண்ட நேரத்தையும் வீண்படுத்த எல்லாம் என்னால ஏலா பாருங்கோ..கோ..

வாழ்க்கையில காதல் ஒரு பகுதி தான்..ன் அதுவே வாழ்க்கை இல்லை..லை ரசிக்கலாம் ஏன் அநுபவித்து மகிழலாம்..ம் ஆனா அதுவே முழுநேர வேலையா போயிட கூடாது..து..

நான் சொல்லுற மாதிரி செய்யிறவன் தான் உண்மையான பகுத்தறிவாளன்..ன் அதை விட்டிட்டு கர்பதிற்கு யார் காரணம் எண்டு தேடி சேர்த்து வையுங்கோவன்..ன் உது நல்லா தான் இருக்கு..கு..தவறு நேர்திடாம பாதுகாத்து கொள்வது உண்மையான அழகு..கு..தவறு நேர்ந்தா பிறகு வருத்தபடுவது அது மனித வாடிக்கை..கை..அதுவே தற்போதையை காதலின் வாடிக்கை..கை..

நானும் அத்தகைய வாடிக்காயளனாக காதல் வங்கியில் இருக்க விருப்பவில்லை..லை..தாத்தா... :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்..உங்களுக்கு ஒரு காதலி இருந்து அவா வேற ஒருவர் மூலம் கர்பமாகினா..னா நீங்க சேர்த்து வைக்க தேடுவியள் அவரை..ரை..எனக்கு அந்த அளவிற்கு மனிதாபிமானம் எல்லாம் இல்லை..லை விட்டிட்டு எண்ட வேலையை தான் பார்ப்பன் இது தான் உண்மையான காதல்..ல் ..அதை விட்டிட்டு தேட போய் எண்ட வாழ்க்கையும் கெடுத்து..து எண்ட நேரத்தையும் வீண்படுத்த எல்லாம் என்னால ஏலா பாருங்கோ..கோ..

காதலிக்கின்றன் என்று கொண்டு இன்னொருவனுடன் சேர்ந்து கர்ப்பமாகிய பின் அல்லது காதலிக்கிறன் என்று கொண்டு.. இன்னொரு நினைப்பில் வாழ்த்து கொண்டிருக்கும் போது.. அங்கென்ன காதல் இருக்கு. அப்படி இல்லையென்ற பின்.. அந்த நபர் சாதாரண நபர் தானே. அவரின் மீது மனிதாபிமானம் காட்டுவதைத் தவிர வேறு எதுவும் மனிதப் பகுத்தறிவாக இருக்க முடியும் என்று நினைக்கவில்லை. எனவே கர்ப்பத்துக்குக் காரணமானவருடன் சேர்த்து வைப்பது அல்லது அதற்கு உதவுவதுதான்... வள்ளுவன் சொன்னதற்கு இலக்கணமாகும்..

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்துவிடல்..

இன்னா செய்தாரை - (தமக்குத்) தீமை செய்தவரை

ஒறுத்தல் - தண்டித்தல்

அவர்நாண - அவரே நாணும்படியாக

நன்னயஞ் செய்து - (அவருக்கு) நன்மை செய்து விடல்

வள்ளுவர்.. எப்பவோ சொல்லிட்டார்.. இப்படித்தான் இந்த உலகம் இருக்கும்.. என்று.. அப்பவே மனிதாபிமானத்தை முன்னிறுத்தி தீர்வு சொல்லி இருக்கிறார்..! :(

Edited by nedukkalapoovan

காதலிக்கின்றன் என்று கொண்டு இன்னொருவனுடன் சேர்ந்து கர்ப்பமாகிய பின் அல்லது காதலிக்கிறன் என்று கொண்டு.. இன்னொரு நினைப்பில் வாழ்த்து கொண்டிருக்கும் போது.. அங்கென்ன காதல் இருக்கு. அப்படி இல்லையென்ற பின்.. அந்த நபர் சாதாரண நபர் தானே. அவரின் மீது மனிதாபிமானம் காட்டுவதைத் தவிர வேறு எதுவும் மனிதப் பகுத்தறிவாக இருக்க முடியும் என்று நினைக்கவில்லை. எனவே கர்ப்பத்துக்குக் காரணமானவருடன் சேர்த்து வைப்பது அல்லது அதற்கு உதவுவதுதான்... வள்ளுவன் சொன்னதற்கு இலக்கணமாகும்..

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்துவிடல்..

இன்னா செய்தாரை - (தமக்குத்) தீமை செய்தவரை

ஒறுத்தல் - தண்டித்தல்

அவர்நாண - அவரே நாணும்படியாக

நன்னயஞ் செய்து - (அவருக்கு) நன்மை செய்து விடல்

வள்ளுவர்.. எப்பவோ சொல்லிட்டார்.. இப்படித்தான் இந்த உலகம் இருக்கும்.. என்று.. அப்பவே மனிதாபிமானத்தை முன்னிறுத்தி தீர்வு சொல்லி இருக்கிறார்..! :(

இப்ப எனக்கு இன்னொரு சந்தேகம் வந்திட்டுது..து ஒரு வேளை காதலிக்கிறவா இன்னொருவன் கூட கற்பமாகி ஆனால் குறிப்பிட்ட ஆள் உண்மையாக காதலிக்க..க..காதலித்தவர் வந்து ஒரு வேள அவாவை ஏமாற்றி இருந்தா..தா இந்த தருவாயில என்ன செய்யிறது..து.. :(

அப்ப குறிப்பிட்ட ஆளை தேடுறதிலையும் பிரயோசனம் கெடையாது..து..இந்த தருணத்தில அவாவை கை பிடிக்க சொல்லுறீங்களோ..ளோ..??. :D

என்னாலை எண்டா..டா ஏலாது பாருங்கோ..கோ..!!

தாத்தா..தா காதலிக்கிற நேரம்..ம் எல்லாம் சுகமா தான் இருக்கும்..ம்..ஏன் எண்ட கிடைக்கிற முத்தமும் காதலி பேசுகின்ற சில போலி வார்த்தைகளும்..ம் ருசியா தான் இருக்கும்..ம்..அதில மயங்கி உண்மை எண்டு கொண்டு போனா பிறகு வாழ்க்கையே..யே பொய் ஆகிடும்..ம்.. :huh:

ம்ம்..வள்ளுவர் தாத்தா தாடி வளர்த்திருக்கும் போதே எனகொரு சந்தேகம்..ம் இப்ப தான் வெளங்குது வள்ளுவர் தாத்தாவிற்கும் யாரோ ஒருத்தி ஆப்பு வைத்திட்டா..டா இல்லாட்டி இந்தளவிற்கு யோசித்து இந்த குறளை எழுதி இருக்க மாட்டார்..ர் பாருங்கோ.. :D

இப்படியே சேத்து வைக்க வெளிகிட்டியள் எண்டா தாத்தா..தா எல்லாரையும் சேத்து வைப்பியள் அது தான் நடக்கும் என்ன செய்யிறது சேத்து வையுங்கோ..கோ ஒழுங்கா இருந்த தாத்தாவை கூட யாரோ ஒருத்தி கெடுத்து போட்டா எனி அவ்வளவு தான் போதையில இருக்கிறவையிட்டையும்..ம் காதல் மயக்கத்தில இருக்கிறவையிட்டையும் பேசி என்னாக போது ம்ம் பட்டிட்டு வரக்க..க

நான் சொன்னது உண்மையா இருக்கும்..ம்.. :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்கா இருந்த தாத்தாவை கூட யாரோ ஒருத்தி கெடுத்து போட்டா எனி அவ்வளவு தான் போதையில இருக்கிறவையிட்டையும்..ம் காதல் மயக்கத்தில இருக்கிறவையிட்டையும் பேசி என்னாக போது ம்ம் பட்டிட்டு வரக்க..க

தாத்தா நான் காதலை விட பெண்களை எப்பவும் மிக அவதானமாகத்தான் அணுகிறனான். றோட்டில வேகமாக போற லொறியை நம்பிக் கடப்பன்.. ஆனால்.. பெண்களைக் கடக்கேக்க.. மிக மிக எச்சரிக்கையாகத்தான் கடக்கிறனான்.. ஏனென்றால்.. காதல் பொய்யாவதும் மெய்யாவதும்.. காதலிக்கிறவை செய்யுற தவறுகளாலும்.. சரிகளாலும் தானே தவிர.. வேற ஒன்றும் இடைக்க வாறதில்ல. தாத்தா கவுத்தாச் சரி.. காதலோ.. பெண்களோ.. தாத்தாவை கவுக்க தாத்தா இடமளிக்கமாட்டார்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

றோட்டில வேகமாக போற லொறியை நம்பிக் கடப்பன்.. ஆனால்.. பெண்களைக் கடக்கேக்க.. மிக மிக எச்சரிக்கையாகத்தான் கடக்கிறனான்.. ஏனென்றால்.. :D

ஜம்மு பேபி , உங்கடை தாத்தா றீல் விடுகிறார் . :(

நீங்கள் நம்பாதையுங்கோ .

தாத்தாமார் , சின்ன பிள்ளைகளுக்கு இப்படியா சொல்லிக்கொடுப்பது . :huh:

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி தமிழ் சிறி உங்களால் மட்டும் கண்டு பிடிக்க முடியுது :(:huh::D

எல்லாம் சும்மா ஒரு அனுமானம் தான் , முனிவர் . :D

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்றுமே காதல்தான்! அங்கு ஒளிப்பதற்கும் கழட்டுவதற்கும் இடமில்லை.

அது மனங்களில் மட்டுமே உயிர்வாழ்ந்து கொண்டிருப்பது. உடல்களில் அல்ல.

அதனால் காதல் பிரிந்து நின்ற போதும் வாழும். பரஸ்பரம் குற்றம் குறை பார்க்காது.

என் ஓட்டு இரண்டுக்கு. நன்றி நெடுக்ஸ்!!!

முரளி,நல்ல நண்பனா இருக்கிறது எப்படி எண்டு சொல்லுங்கோ முதலில்; அப்பத்தான் அக்கா சொன்னதை எவ்வளவு தூரம் உள்வாங்கி இருக்கிறீங்கள் எண்டு எங்களுக்குத் தெரிய வரும் :(

அக்காவிண்ட அறிவுரை எண்டு சொன்னன். இது எண்ட அறிவுரை இல்லை முதலாவது விசயம். மற்றது, உதுகள் பற்றி எல்லாம் ஏற்கனவே விவாதம் செய்து களைச்சுப்போனன். இதுகள திருப்பி கதைக்கிறதில எனக்கு விருப்பம் இல்லை. நெடுக்காலபோவான் தனது நண்பனுக்கு உதவி செய்வதற்காக இந்தக்கருத்தாடலை ஆரம்பிப்பதாக சொல்லி இருந்தார். நான் இது உண்மையா பொய்யா எண்டு இன்னும் நாலு நாளில விசயம் தெரியும் எண்டு சொல்லி இருந்தன். இப்ப இதுகள வாசிச்சால் உவர் தண்ட நண்பனுக்கு உதவி செய்யவா இல்லாட்டிக்கு உவத்திரவம் செய்யவா இத ஆரம்பிச்சார் எண்டு உங்களால அறியக்கூடியதாக இருக்கும். நெடுக்காலபோவான் காதலையும், பெண்களையும் வழமைபோல தூக்கி எறிஞ்சு பேசுறதுக்கே இப்பிடி அச்சாப்பிள்ளையாட்டம் ஒரு கதையோட ஆரம்பிச்ச மாதிரி இருக்கிது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் காதலையும், பெண்களையும் வழமைபோல தூக்கி எறிஞ்சு பேசுறதுக்கே இப்பிடி அச்சாப்பிள்ளையாட்டம் ஒரு கதையோட ஆரம்பிச்ச மாதிரி இருக்கிது.

காதலும் பெண்களும் மட்டுமல்ல.. எவையெவையெல்லாம் மனிதத்தை.. நியாயமான மனித உணர்வுகளை மதிக்கவில்லையோ அவற்றை தூக்கி எறிவதில் தப்பேதும் இல்லை. மனிதமற்றவை மனிதனிடத்தில் ஏன் வாழ வேண்டும்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

உந்த நக்கலுகளை விட்டுப்போட்டு உங்கட நண்பனுக்கு என்ன அறிவுரை சொன்னீங்கள் இல்லாட்டிக்கு சொல்லப்போறீங்கள் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த நக்கலுகளை விட்டுப்போட்டு உங்கட நண்பனுக்கு என்ன அறிவுரை சொன்னீங்கள் இல்லாட்டிக்கு சொல்லப்போறீங்கள் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ.

நான் அறிவுரை சொல்லுற அளவுக்கு உதுகள் என்ன பாடப்புத்தக்கதில படிக்கிற பாடமே. என்ர அபிப்பிராயத்தைச் சொன்னன். அது தவறா வழி நடத்துமோ அல்லது சரியா வழிநடத்துமோ என்ற ஒரு அச்சம் எனக்குள். அதை தெளிவுபடுத்த வாசகர்களின் எண்ணத்தைக் கேட்பம்.. அனுபவஸ்தர்களின் அனுபவப் பாடம்.. இன்னும் தெளிவான அபிப்பிராயத்தைத் தரும் என்றிட்டு இதைப் போட்டன்.

என் நண்பன்.. ஆக இழிச்ச வாய் இல்லை. போனால் போகட்டும் என்ற பேர்வழி. அபிப்பிராயத்தை கேட்டுக் கொண்டான். ஆனால் தீர்மானம் எடுப்பது அவனின் சிந்தனை.. சூழ்நிலைப் படிதானே..! நாம் என்ன திணிக்கவா முடியும். :)

தாத்தா நான் காதலை விட பெண்களை எப்பவும் மிக அவதானமாகத்தான் அணுகிறனான். றோட்டில வேகமாக போற லொறியை நம்பிக் கடப்பன்.. ஆனால்.. பெண்களைக் கடக்கேக்க.. மிக மிக எச்சரிக்கையாகத்தான் கடக்கிறனான்.. ஏனென்றால்.. காதல் பொய்யாவதும் மெய்யாவதும்.. காதலிக்கிறவை செய்யுற தவறுகளாலும்.. சரிகளாலும் தானே தவிர.. வேற ஒன்றும் இடைக்க வாறதில்ல. தாத்தா கவுத்தாச் சரி.. காதலோ.. பெண்களோ.. தாத்தாவை கவுக்க தாத்தா இடமளிக்கமாட்டார்..! :)

ஓ..அது தானே பார்த்தன்..ன்..!!.. :)

என்ன தான் நாங்க வீதியை வடிவா பார்த்து கடந்தாலும்..ம் சில ஓட்டுநர்கள் தண்ணியை போட்டிட்டு வந்து ஆட்களோட மோதுற மாதிரி தான்..ன் இந்த காதலும்..ம் ஆனபடியா யார் எப்ப கவிழீனம் எண்டு சொல்ல முடியாது..து...அப்படியே மாட்டுபட்டிட்டா..டா.. :(

காதலிக்கிறேன் எண்டு உருகி..உருகி காதலித்து விட்டு பிறகு உருகாம..ம எல்லாத்தையும் மாதிரி காதலையும் இலகுவாக எடுத்து கொண்டா பிரச்சினை கெடையாது..து இல்லாட்டிக்கு காதலும் பிரச்சினை ஆகி காதலிக்கிறவையும் பிரச்சினையாக மாற நேரிடும்..ம்.. :)

என்ன நான் சொல்லுறது சரியோ..யோ..உரசுற காற்றும் உரசுற பொண்ணும்..ம் கொஞ்ச நேரம் தான்..ன்.. :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி , உங்கடை தாத்தா றீல் விடுகிறார் .நீங்கள் நம்பாதையுங்கோ .

தாத்தாமார் , சின்ன பிள்ளைகளுக்கு இப்படியா சொல்லிக்கொடுப்பது

தமிழ் சிறி அண்ணா..ணா..!!.. :D

இப்ப தாத்தாமாரை விட கொழந்தைகளுக்கு எல்லாமே தெரியும்..ம் சொல்ல போனா கொழந்தை பருவத்தில வருது அல்லோ காதல் அது வேண்டும் எண்டா தூய காதலா இருக்கலாம்..ம் அதுக்கு பெறகு வாறது எல்லாம் என்னத்தையோ எதிர்பார்த்து தான்..ன்.. :D

அது சரி நீங்களும் காதலித்தனியளே..ளே..??..சில பேரை கேட்டா சொல்லுவீனம் காதல் சுகமான வலி எண்டு..டு யாருக்கும் வலிக்கிறது சுகமா இருக்குமே..மே.. :)

உந்த கன்றாவி தான் காதல்..ல்... :(

அப்ப நான் வரட்டா!!

றோட்டில வேகமாக போற லொறியை நம்பிக் கடப்பன்.. ஆனால்.. பெண்களைக் கடக்கேக்க.. மிக மிக எச்சரிக்கையாகத்தான் கடக்கிறனான்.. ஏனென்றால்

நெடுக்கண்ணாவை கண்டால் பெண்கள் விடுகினம் இல்லை போல கிடக்கு .. கொடுத்து வைத்தவர். :)

என்ன காதலுக்கும் கர்ப்பத்துக்கும் பெரிய சம்மந்தம் இல்லை....ஆனால் காதலி வேறுஒருவருடன் கலந்து கர்ப்பம் ஆனால் காதல் கலைந்துவிடும். காதலன்கள் கர்ப்பம் ஆகதபடியால் எப்பவும் "ஜாலியாக" இருக்கலாம். :)

காதல் எண்டுறது வைரமுத்து சொன்னமாதிரி ஹோர்மோன்களின் சேட்டைதான். அத அப்பட்டமாய்ச் சொல்ல மனமில்லாத ஆக்கள் உருவாக்கி வச்சிருக்கிற கதையள சின்ன வயசிலயிருந்து சினிமாவிலயும் கதையிலயும் பாத்துப்படிச்சு, கெட்டுக் குட்டிச்சுவராப்போய், காதல் காதல் எண்டு கொடிபிடிச்சு, செய்யிற கூத்துக்கள நாலஞ்சு வருசம் கழிச்சு நினைச்சுப்பாத்தா எங்கள நாங்களே செருப்பால அடிக்க வேணும்போல இருக்கும். காதல் தாற மப்புத் தெளியமுதல் பிரச்சனை வந்தா நிண்டு உதவி செய்வாங்கள். தெளிஞ்ச பிறகு பிரச்சனை வந்தா மற்ற ரெண்டு வழியும்தான்..

காதலுக்கும் மேல அந்த ஆளோட ஆழமான புரிந்துணர்வும் நட்பும் இருந்தா, அதுக்காக எதையும் செய்யலாம். அது குறிப்பிட்ட ஆள் எங்களுக்காக எந்த அளவுக்கு விட்டுக்கொடுப்புக்குத் தயாரா இருக்கிறா(ர்) எண்டுறைதைப் பொறுத்தது. ஆனா எனக்குத் தெரிஞ்சு, ''நீங்கள் முந்தின மாதிரி என்னோட பாசமில்லை'' என்ற பெண்களின் நச்சரிப்புக்குப் பயந்து, ''உன்னைவிட உலகத்தில் உசந்தது ஒண்டுமில்லை'' எண்டு பாடிக்கொண்டு திரியிற ஆக்கள் எத்தின பேர்?

அதுசரி நெடுக்கண்ணை. பாயாசம் பக்கத்து இலைக்கோ? இல்லாட்டில் உங்கட..?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவளவையளை உண்மையாய் காதலிச்சு கட்டினாலும் சரி பொய்யுக்கு காதலிச்சு அமுக்குப்பட்டாலும் சரி பாவாடைசட்டை தோய்க்கிற முதல் அடுப்படி வேலை முழுக்க நாங்கள் தான் :)

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கும் ஒருவருக்கு பிரச்சனை என்றால் உண்மையாகக் காதலிக்கின்றவங்க என்ன செய்வாங்க?

ம்ம்ம்... சிக்கலான கேள்விதான்.. மாணவர்களே.. முதலில் காதல் என்றால் என்ன என்றும் அதன் விளக்கங்கள் என்ன என்றும் இன்றைய வகுப்பில் காண்போம். காதல் என்பது வயசுக்கோளாறு...! ஆகவே இதற்கான பதில்கள், ஆண்களின் பார்வையிலிருந்து..!

அ) "படியாத‌" காதல் என்றால் ஓடி ஒளிப்பார்கள். :D

ஆ) "வேலை முடியாத" காதல் என்றால் கூட இருந்து (ஒரு நப்பாசையில்) உதவுவது போல் காட்டிக்கொள்வார்கள். :rolleyes:

இ) "வேலை முடிந்த" காதல் என்றால் கழற்றி விடுவார்கள். :lol:

நான் இரண்டுக்குத்தான் போட்டன்.. :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணாவை கண்டால் பெண்கள் விடுகினம் இல்லை போல கிடக்கு .. கொடுத்து வைத்தவர். :icon_mrgreen:

நான் பொதுவாக பெண்களோட கதைப்பது குறைவு. அதனால அவர்கள் எனக்குப் பயம். பயங்கரமான கேடி என்று. :D:rolleyes:

அதுசரி நெடுக்கண்ணை. பாயாசம் பக்கத்து இலைக்கோ? இல்லாட்டில் உங்கட..?????

இதென்ன கேள்வி.. பக்கத்து இலைகளுக்கும் வார்க்க நான் என்ன பொதுத்தொண்டா செய்கிறேன். :D:lol:

உவளவையளை உண்மையாய் காதலிச்சு கட்டினாலும் சரி பொய்யுக்கு காதலிச்சு அமுக்குப்பட்டாலும் சரி பாவாடை சட்டை தோய்க்கிற முதல் அடுப்படி வேலை முழுக்க நாங்கள் தான் :D

இப்பவும் பாவாடை சட்டை போடினமோ.. கு.சா.. நான் காணேல்லையே. :D

நான் இரண்டாவதற்கு வாக்களித்தேன். உண்டையான காதல் என்றுமே தோற்றதில்லை தோற்றாலும் அது வாழ்ந்துகொண்டுதானிருக்கும்

விட்டுக்கொடுப்புகளுடனும் உதவிகளுடனும் வாழ்வதுததான் வாழ்க்கை அதுதூன் காதலும்

குறிப்பு

எனக்கு 3வதில் ஓரு ஆசை வந்துவிட்;டது ஆகவே இன்னுமொரு தடவை காதலித்து கழற்றிவிடுவோம் என்று நினைக்கின்றேன் கழன்று விட தயார் என்றால் தொடர்பு கொள்ளவும்

சுழியம் சுழியம் சுழியம் சுழியம் சுழியம் சுழியம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.