Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை நிதி-நயனதாரா ரூ5 லட்ச

Featured Replies

இலங்கைத் தமிழர் துயர் துடைக்கத் திரட்டப்படும் நிவாரண நிதிக்கு தன் பங்காக ரூ. 5 லட்சத்தை நடிகை நயனதாரா வழங்கியுள்ளார்.

இந்தத் தொகையை வழங்க முதல்வரின் கோபாலபுரம் வீட்டுக்கு இன்று காலை நயனதாரா சென்றார்.

முதல்வரிடம் நிதியை வழங்கிய நயனதாரா, இலங்கைத் தமிழர் துயர் துடைக்க திரையுலகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் தான் பங்கேற்பதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை நடக்கும் உண்ணாவிரதத்தில் தான் பங்கேற்கவிருப்பதையும் முதல்வரிடம் கூறி ஆசி பெற்றார்.

இதற்கிடையே இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு நிதிக்கு தமிழ் திரையுலக புள்ளிகள் பலரும் இன்று திரண்டு வந்து நிதி வழங்கினர்.

நெப்போலியன் 5 லட்சமும், குஷ்பு, சுந்தர் மற்றும் விவேக் தலா ரூ. 1 லட்சமும் இன்று வழங்கின

http://thatstamil.oneindia.in/movies/news/...if.html#cmntTop

என்ன தாராளமான நெஞ்சு................................. நன்றியுங்கோ.

உண்மை உணர்ச்சியுடன் செய்பவர்களுக்கு நன்றிகள்..

  • கருத்துக்கள உறவுகள்
என்ன தாராளமான நெஞ்சு................................. நன்றியுங்கோ.
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான தமிழன்

எதையுமே ஏதாவது சொல்லாமல் ஏற்கமாட்டான்

வாழ்க

வளர்க

தங்கள் பணி

இதில்கூடவா...........???

நையாண்டி

நளினம்??????????????

உண்மையான தமிழன்

எதையுமே ஏதாவது சொல்லாமல் ஏற்கமாட்டான்

வாழ்க

வளர்க

தங்கள் பணி

இதில்கூடவா...........???

நையாண்டி

நளினம்??????????????

நான் சொன்னதில் என்ன பிழை? நான் குறிப்பிடுவது நெப்போலியனை. :unsure:

தாங்கள் பாலியல்வாதியாக இருப்பீர்கள் போல இருக்கிறதே.................. :unsure:

நான் சொன்னதில் என்ன பிழை? நான் குறிப்பிடுவது நெப்போலியனை. :unsure:

தாங்கள் பாலியல்வாதியாக இருப்பீர்கள் போல இருக்கிறதே.................. :unsure:

என்ர அய்யோ...

என்னவா இருந்தா என்ன?... அந்த 5 இலச்சத்தையும் சம்பாதிக்க அவ என்ன கஸ்டப்பட்டிருப்பா... அதை வழங்குவதற்கு அவாக்கிருக்கும் மனப்பக்கு பெரியதுதான்...

என்னுடைய நன்றியையும் அறிந்தவர்கள் அவாவிடம் கூறுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடையள் ஒருகாலமும் திருந்தாதுகள் திருந்தவும் மாட்டுதுகள்

உதவி செய்தாலும் நக்கல் உதவி செய்யாட்டிலும் நக்கல்

"நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன"

dogrun-1.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொன்னதில் என்ன பிழை? நான் குறிப்பிடுவது நெப்போலியனை. :unsure:

தாங்கள் பாலியல்வாதியாக இருப்பீர்கள் போல இருக்கிறதே.................. :unsure:

என்ன பனங்காய்? உங்களை விடவே? நல்லாய்த்தான் பகிடி விடுறியள் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: உதவி செய்யும் அனைவருக்கும் நன்றி. ஆனால் இப்படிச் சேரும் நிதி இறுதியில் எங்கே போய்ச் சேரப்போகிறது ? இதையும் அந்த 800 தொன் உணவுப்பொருட்கள் போல இலங்கை அரசிடமே கொடுத்து விடப் போகிறார்கள். அப்படி நடந்தால் இதுவரை தமிழர்க்கு உதவி செய்த நடிகை உற்பட அனைவருமே சிங்களவனுக்கு நிதியுதவி அளித்தவர்களாக மாறிவிடுவார்கள், ஜாக்கிரதை !
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதவி செய்பவர்கள் அனைவரும் தமிழ்மக்களை நினைத்துத்தான் உதவி செய்கின்றார்கள்.

அதை கொண்டுபோய் சேர்ப்பவர்களின் கையில்தான் எல்லாம் தங்கியுள்ளது.

சிலவேளைகளில் இது ஒருசில அரசியல் கண்துடைப்பாக இருந்தாலும் உதவி செய்பவர்களுக்கு நன்றி சொல்லவது எம்மவர் கடமை.

அதிகப்பிரசங்கித்தனமான கருத்தாடல்களால் பாதிக்கப்படுவது ஈழத்தில் வாழும் எம் உறவுகளே.

ஜாக்கிரதை !

வேறு என்ன செய்வார்கள் எண்டு நீங்க எதிர்பாக்கிறீங்க?

உதவி என்றவுடன் ஓடி உதவும் இந்திய உறவுகளிற்கு நன்றிகள் குறிப்பாக சினிமா உறவுகளிற்கு நடிப்பால் மக்கள் மனதில் நிறைந்த நீங்கள் நாமும் மனிதர்கள்தான் எமக்கும் ஈர நெஞ்சு உண்டு என்று முன்வந்து உதவுவது மிகமிக மகிழ்வுக்குரியது. பிறப்பால் தமிழ் அல்லாவிடினும் தமிழ்மக்கள் மீது குறிப்பாக ஈழத்தமிழர்கள் மீது மதிப்பும் பாசமும் வைத்துள்ள நடிகர் நடிகைகளுக்கு நன்றிகள். . .

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: குமாரசாமி அண்ணை,

கோபித்து விட்டீர்கள் போல கிடக்கு ! நான் சிரிப்புக்குறி இட்டது நக்கலுக்கு இல்லை. இன்றுள்ள நிலையில் ஈழத்தமிழர்க்கு எவர் செய்தாலும் அது மிகவும் வரவேற்கத் தக்க உதவிதான், அதில் சந்தேகமேயில்லை. ஆனால் நான் கேள்வி கேட்டது அதைசெய்யும் ஆட்கள் பற்றியது.

ஐய்யா பழ நெடுமாறன் அவர்கள் உண்மையான தமிழின உணர்வாளர்களிடமிருந்து சிறிது சிறிதாக சேர்த்த உணவு மற்றும் மருந்துப் பொருட்களை தனது புறங்கைய்யால் தட்டிக் கழித்த ஒருவர்தான் இந்த நிதி சேர்ப்பையும் தொடங்கியிருக்கிறார். தான் சேர்த்த 800 தொன் உணவுப்பொருட்களை சிங்கள அரசின் கீழ்த்தான் பகிர்ந்தளிக்கப்படும் என்று மத்திய அரசு சொன்னதை ஏற்றுக்கொண்ட அவர் இப்படிச் சேரும் பணத்தையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கமைய சிங்களப் பேரினவாத அரசின் மூலந்தான் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கூறினால் என்ன செய்யப் போகிறோம்? எதைச் செய்தாலும் மத்தியில் உள்ள அரசை சங்கடபடுத்தவோ அல்லது சிக்கலில் மாட்டி விடவோ விரும்பாத ஒரு அரசியல் சாணக்கியர்தான் இதையும் செய்கிறார், அதுதான் ஜாக்கிரதை என்று சொன்னேன்.இதுக்குப் போய் நீங்கள் கோவிக்கலாமா?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் துயர் துடைக்க யார் கை தூக்கினாலும் அவர்களிற்கு இந்த பஞ்சன் மகனின் சிரம் தாழ்ந்த நன்றியும், கடமையும் பட்டுள்ளான்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் ஒரு ரூபாய் கொடுப்பதுக்கு 100 கேள்வி!!!!! காசு த ந்தால் நீங்கள் அந்த காசில் என்ன வாங்குவீர்கள். யாருக்கு போகுது!!! அத்தனையும் கேட்டு விட்டு பிறகுதான் கையை விரிப்பார்கள்.

சம்பந்தம் இல்லாதவர்கள் கொட்டி கொடுக்கிறார்கள். சம்பந்தம் உள்ள சிலர் வெட்டி நியாயம் பேசுகிறார்கள்.

என்ன செய்ய காலதின் கொடுமை.

பஞ்சன் மகனின் மன குமுறல்.

எமது உறவுகளிற்கா உதவும் எம் சகோதரர்களிற்கு நன்றிகள் .... மீண்டும் ஓரு முறை நயன்தாரவுக்கு நன்றிகள். தொடந்தும் எமக்காவும் எம்மின விடுதலைக்காவும் செய்பட வாழ்த்துக்கள்.

நாளைய உண்ணாநோன்பில் நேற்று கொல்லப்பட்ட பள்ளி மாணவனின் உருவப்படத்தை திகதியுடன் பெரியஅளவில் பிரசுரிக்க யாராவது ஆவன செய்வீர்களா?

பயந்தவர்கள் பேசாவிட்டாலும் உணர்ந்தவர்கள் கவனமாக எழுதிய ஈழத்தமிழர் துயர் குறித்து பேசலாமே, கவிதைகள் கூறலாமே!

அன்று விதைப்பது தான் வேண்டா வெறுப்பாக வருபவர்களின் மனங்களில் கூட பதிந்து படங்களிலும் பாடல்களிலும் எதிர்காலத்தில் வெளிவரும் என்பது நிச்சயம்!

vallipunam_20081030.jpg

vallipunam_20081030001.jpg

வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வராசா சதீஸ்கரன் (வயது 15)

காயமடைந்தோர்:

vallipunam_20081030002.jpg

கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவியும் சிறிலங்கா வல்வளைப்பு படையினரால் பூநகரியில் இருந்து இடம்பெயர்ந்து வள்ளிபுனத்தில் வசித்து வந்தவருமான பத்மநாதன் நிவேதினி (வயது 17) என்பவர் காயமடைந்துள்ளார்.

நவரத்தினம் தவக்குமார் (வயது 32)

நாகரட்ணம் நவரூபி (வயது 32)

புஸ்பகரன் சாந்தினி (வயது 34)

இராசேந்திரம் யேசுதாசன் (வயது 29)

மூன்று மாதக் குழந்தையான சிறினீவாசன் தமிழரசன்

ஆறுமுகம் மகேஸ்வரி (வயது 45)

மாணவியான பரமநாதன் தேவவதனி (வயது 18)

Edited by சாணக்கியன்

பின்னே என்ன? கலக்ட் பண்ண வருபவன்........ றோவின் ஆளகவோ.... சிரீலன்கன் ஒட்டு குழுவாகவோ இருக்கலாம்.

சம்பந்தபட்டவர்கள் கவனிக்கமையினால்.... நாங்கள் உளவுபார்க்க வேண்டியா நிலமை..

இதுல பஞ்சனின் புள்ளெயின் எதிர்வினை மனோததுவ குத்தல் வெற.....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தான் ஒரு மலையாழி என்றாலும் உதவும் எண்ணம் கொண்ட உள்ளத்திற்கு நன்றி நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நயின் நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.