Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாகச் செயற்படுவதை விமானத் தாக்குதல்கள் காட்டுகின்றன – ராமன் :

Featured Replies

விடுதலைப்புலிகளின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாகச் செயற்படுவதை விமானத் தாக்குதல்கள் காட்டுகின்றன – ராமன் :

TAF_2_.jpg

ஒக்.28ஆம் திகதி இரவு விடுதலைப்புலிகளின் வான்படைப்பிரிவு வடக்கில் இராணுவ இலக்கு ஒன்றின் மீதும் தெற்கில் கொழும்பில் பொருளாதார இலக்கு ஒன்றின் மீதும் 90 நிமிட இடைவெளியில் தாக்குதல் நடாத்தியுள்ளன. விடுதலைப் புலிகளின் வான்படைப்பிரிவு 2007 மார்ச்சில் தாக்குதலை ஆரம்பித்தது முதல் ஒக்.28 வரை ஏழு வான்படைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

போர்க்களச் செய்திகளைத் தரும் புலிகளுக்காதரவான ஆங்கில மொழி இணையத்தளமான தமிழ்நெற் கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்தது. இச்சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் போர்முனைச் செய்திகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது. ஒக்.28ஆம் திகதி விடுதலைப்புலிகளின் வான்படை தாக்குதல் நடாத்திய பிறகு அது இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.

மன்னாரிலுள்ள சிறிலங்கா இராணுவத்தின் பிரதான ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கித் தளமான தள்ளாடி இராணுவத் தளத்தின் மீது 10.30 மணியளவில் மூன்று குண்டுகளை வீசியுள்ளது. பின்னர் சிறிலங்காவின் விமானப்படை விமானங்கள் இரவு 11.00 மணி முதல் 1.30 வரை கிளிநொச்சியின் மேலாகப் பறந்து புலிகளின் விமானத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது புலிகளின் விமானம் கொழும்பை நோக்கிச் சென்று களனி திஸ்ஸ மின்நிலையத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசியுள்ளது.

தள்ளாடியில் புலிகளின் விமானம் குண்டு வீசியதைத் தொடர்ந்து இரவு 11.00 மணி முதல் சிறிலங்கன் விமானப்படையினரின் விமானங்கள் வன்னியின் மேலாகப் பறந்து தொடர்ச்சியாகப் புலிகளின் விமானங்களைத் தேடிக்கொண்டிருந்தன. குறிப்பாக கிளிநொச்சி, இரணைமடு, விஸ்வமடு,முரசுமோட்டை பிரதேசங்களில் பரா வெளிச்சத்தைப் பாய்ச்சி அது தனது தேடுதலை மேற்கொண்டது. ஆனால் பொதுமக்கள் தரப்பிலிருந்து கிடைத்த தகவலின்படி புலிகளின் விமானங்கள் மன்னாரூடாக வன்னியை நோக்கிச் சென்றுவிட்டன என்று தெரிய வந்த.து.

எவ்வாறோ புலிகளின் ஆதரவு தமிழ் இணையத்தளமான புதினம்.கொம் புலிகளின் உத்தியோகபூர்வ செய்தியைப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது. மன்னார் பிராந்தியத்திலுள்ள தள்ளாடி இராணுவத்தளம் மீது செவ்வாய் இரவு 10.20 மணியளவில் புலிகளின் விமானப்படை குண்டுகளை வீசியுள்ளது. இராணுவத்தளம் பாரியளவில் சேதத்திற்குள்ளானது. இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

செவ்வாய் இரவு 11.45 மணியளவில் கொழும்பிலுள்ள களனிதிஸ்ஸ மின்நிலையத்தின் மீது வெற்றிகரமாக தாக்குதலை நடாத்தியுள்ளது. இவ்விரு தாக்குதலையும் நடாத்திவிட்டு புலிகளின் விமானங்கள் பாதுகாப்பாக தமது தளம் திரும்பியுள்ளன.

ஒன்றிற்கு மேற்பட்ட புலிகளின் விமானங்கள் இத்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதான எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு புலிகளின் ஆதரவு தளங்கள் முயற்சி செய்தன. இத்தாக்குதலில் புலிகளின் ஒரு விமானமே பயன்படுத்தப்பட்டதாக ரொய்டர் செய்தியாளர் அறிக்கையிட்டுள்ளார். சிறிலங்காவின் இராணுவ வட்டாரங்களும் கொழும்பு மின்நிலையத்தின் மீதான தாக்குதலில் ஒரு விமானமே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. புலிகளின் ஆதரவுத் தளங்கள் மன்னார் இராணுவத்தளத்தின் மீது குண்டு வீசிய விமானமோ விமானங்களோ கொழும்பை நோக்கிப் பறந்து வந்து மின்நிலையத்தின் மீது குண்டு வீசியதாகத் தெரிவித்தன.

கொழும்பிலிருந்து வடக்கே250 கி.மீற்றர் தொலைவில் இராணுவத்தளம் உள்ளது. குறைந்தது இரு குண்டுகளைக் காவிச் செல்லும் விமானம் அல்லது விமானங்கள் வன்னியிலிருந்து புறப்பட்டு இராணுவத் தளம் மீது குண்டுகளை வீசிவிட்டு பின்னர் கொழும்புக்கு வந்து தாக்குதல் நடாத்திவிட்டு அதன் பின்னர் பாதுகாப்பாகத் தமது தளத்திற்குத் திரும்பிச் செல்வதற்குப் போதுமான எரிபொருளை வைத்திருந்தனவா?

இராணுவத்தில் கடுமையான இழப்புக்களும் சேதங்களும் ஏற்பட்டிருப்பதாகப் புலிகள் சார்பு வட்டாரங்கள் உரிமை கோருகின்றன. ஆனால் இராணுவ வட்டாரங்களின் தகவலின்படி உயிரிழப்புக்கள் எதுவுமில்லையென்றும் தளபாடங்களுக்குச் சிறிதளவு சேதமே ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரேயொரு பாதுகாப்பு அதிகாரியே காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. குண்டுகள் வீழ்ந்த போது அதிர்ச்சியால் ஊழியர் ஒருவர் மரணமானதாக மின்நிலையம் தெரிவித்துள்ளது. நிர்வாகப்பகுதிக் கட்டிடங்கள் மற்றும் குளிரூட்டிகள் தீப்பற்றியதால் சிறிதளவு சேதம் ஏற்பட்டதாகவும் தீயணைக்கும் படையினர் அதனைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்பிறப்பாக்கி இயந்திரங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகப் புலிகள் சார்பு வட்டாரங்கள் கூறியுள்ள போதும் இதுவரை கொழும்பில் மின்சாரத் துண்டிப்பு அதிகளவில் இடம்பெற்றதாகச் செய்திகள் வரவில்லை. தந்திரோபாயமாக வெற்றிகரமான முறையில் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. சிறிலங்கா விமானப்படையின் விமானங்களின் இடைமறிப்புகள் இல்லாமல் இலக்குகள் மீது குண்டுகளை வீசிவிட்டு தளத்திற்கு விமானங்கள் திரும்பிப் போயுள்ளன.

அத்துடன் விமான எதிர்ப்பு பாதுகாப்பு முறைமைத் தாக்குதல்களால் வீழ்த்தப்படாமல் தளத்திற்குத் திரும்பிச் சென்றுள்ளன. ஆயினும் பாரதூரமான சேதத்தை ஏற்படுத்தியதாகத் தென்படாததால் அவர்களின் தந்திரோபாய முக்கியத்துவம் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படுகிறது. எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் வெளிநாடுகளிலுமுள்ள ஆதரவாளர்கள் மற்றும் புலிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இந்தத் தாக்குதல்கள் உளவியல் ரீதியான உணர்வுகளைத் தக்க வைப்பது தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்க முடியும்.

இந்தத் தாக்குதல்களும் ஒரு பெண்புலி உறுப்பினர் உட்பட இரு கடற்புலிகளால் காங்கேசன்துறை துறைமுகத்தில் இரு வர்த்தகக் கப்பல்கள் மீது ஒக்.22இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் புலிகளின் ஒழுங்கு கட்டுப்பாடு என்பன சிறப்பாகச் செயற்படுவதைக் காட்டுகின்றன. இலங்கை இராணுவத்தால் வன்னிப்பகுதியில் தற்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல் நடவடிக்கைகளால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களின் மத்தியிலும் அவர்களின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாகச் செயற்படுவதை இது காட்டுகின்றது.

1950களில் கொரிய யுத்தத்தின் போது வடகொரியா பயன்படுத்திய யுத்த உபாயங்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்துவதாக கடந்த மார்ச்சில் விடுதலைப்புலிகள் வான்படையைப் பயன்படுத்த ஆரம்பித்த தருணத்திலிருந்து ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். எந்தவொரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நோக்கத்தையும் வென்றெடுக்காமல் தென்கொரிய அமெரிக்க விமானப்படை விமானங்களுக்கு ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் கொடுக்கும் நோக்கில் வட கொரியா சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்தி அச்சமயம் தாக்குதல்களை மேற்கொண்டது.

விடுதலைப்புலிகள் விமானங்களைப் பயன்படுத்தியது முதல் இரண்டு சந்தர்ப்பங்களிலேயே கணிசமான உயிரிழப்புக்களும் தளபாட சேதாரங்களும் ஏற்பட்டது.

கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் அநுராதபுர விமானப்படைப்பயிற்சித் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலும், இவ்வருடம் செப்டம்பர் 9இல் வவுனியா இராணுவத்தளம் மீதான தாக்குதலின் போதும் கணிசமான உயிரிழப்புக்கள் உடமையிழப்புக்கள் என்பன ஏற்பட்டன. இவ்விரு தாக்குதல்களும் ஆகாயமார்க்கமாக புலிகளின் விமானப்படையினரும் தரைமார்க்கமாக தற்கொலைப் போராளிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களாகும். தரை மார்க்கமாக மோதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை உறுப்பினர்களே பெருமளவு உயிர், உடைமை அழிவுகளை ஏற்படுத்தினர். விமானத்தின் பங்களிப்பு இங்கு உளவியல் ரீதியாக அத்தியாவசியமானதாக இருந்தது. தரையிலுள்ள சிறிலங்கா பாதுகாப்புப் படையினரின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக இது அத்தியாவசியமானதாகக் கருதப்பட்டது. ஆனால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகள் வான்மார்க்க தரைமார்க்க உறுப்பினர்களிடையே சிறப்பான ஒத்துழைப்பின் தரத்தைக் காட்டுவனவாக உள்ளன. புலிகளின் விமானங்கள் தனியாகச் செயற்படும் போதெல்லாம் அதாவது தரைமார்க்கமாக உறுப்பினர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படாத வேளைகளில் வென்றெடுக்கப்பட்ட பெறுபேறுகள் குறிப்பிடத்தக்கனவாக இல்லை.

தரைமார்க்க சக்திகளின் ஆதரவு இல்லாமல் பொருளாதார இலக்குகள் மீது தனியாக விமானத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டால் கணிசமான சேதத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் குண்டுகள் போதியளவு சக்தி வாய்ந்தவையாக இருத்தல் வேண்டும். இதுவரை பொருளாதார நிலைகள் மீது விடுதலைப்புலிகள் இரு தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்;.

கடந்த வருடம் கொழும்பில் பெற்றோல் குதங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் அதிலொன்றாகும். மற்றையது ஒக்.28இல் மேற்கொள்ளப்பட்ட அனல் மின் நிலையம் மீதானதாகும்;. இரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் போதியளவு சக்தி வாய்ந்தவையல்ல. அத்துடன் உபகரணங்களுக்குப் பாரதூரமான சேதத்தை ஏற்படுத்தக் கூடியவையுமல்ல. அத்தோடு சரியான இலக்கைக் கொண்டதாகவும் அது இல்லை. இதன்விளைவாக பொருளாதார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலிருந்து இவ்விரு தாக்குதல்களும் தோல்வியடைந்துள்ளன.

இதேவேளை அண்மைய தாக்குதல் முன்னைய தாக்குதல்களைப் போலவே சிறிலங்கா விமானப்படையினதும் விமான எதிர்ப்பு பாதுகாப்பு நடவடிக்கையினதும் வேளைப் பாதுகர்பு நடவடிக்கையின் பலவீனத்தை மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளன. விமான எதிர்ப்புச் சுடுகலன்களால் விமானத்தைச் சுட்டு வீழ்த்தக் கூடியதாகவும் இருக்கவில்லை. தாக்குதல் நடாத்திய விமானங்களைத் துரத்திச் சென்று கீழே இறங்குவதை தடுக்கவும் முடியவில்லை. விடுதலைப்புலிகளின் விமானங்கள் கிழே இறங்கிய இடத்தைக் கண்டு பிடிக்கவும் முடியவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் விமானங்கள் திரும்பிச் சென்ற வேளை சிறிலங்கா விமானப்படை விமானங்கள் வானில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் புலிகளின் விமானங்கள் தரையிறங்கும் போது அவை தரையிறங்கும் இடத்தை அடையாளம் கண்டு தாக்குதல் நடாத்துவதில் அவை தோல்வி கண்டுள்ளன.

புலிகளின் விமானம் பாதுகாப்பாகத் தரையறங்கியதுடன் அவர்களின் வான்படையைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் துரிதமாக அவற்றின் பாகங்களைக் கழற்றிக் கொண்டு அதனை அவர்கள் இரகசியமாக வைக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று விட்டனர்.

இராமன்

ஓய்வுபெற்ற மேலதிக செயலாளர், அமைச்சரவைச் செயலாளர், நியூடெல்லி, இந்தியா

www.globaltamilnews.com

  • கருத்துக்கள உறவுகள்

இதன்விளைவாக பொருளாதார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலிருந்து இவ்விரு தாக்குதல்களும் தோல்வியடைந்துள்ளன.

தாக்குதல் தோல்வியென்றால் எப்படி ஜயா மில்லியன் கணக்கில் நஸ்ரம் ஏற்பட்டிருக்கும்

நல்லா கெளப்பிறாங்க பீதியை இதுக்கு ஆராய்சி வேறு :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அட ராமா - தேவுண்டா ஏழு குண்டல வாலா !!!

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் தோல்வியென்றால் எப்படி ஜயா மில்லியன் கணக்கில் நஸ்ரம் ஏற்பட்டிருக்கும்

நல்லா கெளப்பிறாங்க பீதியை இதுக்கு ஆராய்சி வேறு :unsure::unsure:

இந்திய உளவு அமைப்பினர் உட்பட உலகத்தில உள்ள உளவு அமைப்பினர் இப்படித்தான் பட்டர்.. ஜாம் பூசிய பாணுடன் நஞ்சையும் தூவித் தருவார்கள். பட்டர் ஜாமைக் கண்டதும் விழுந்தடிச்சு மக்கள் பாணை உண்டுவிடுவார்கள். நஞ்சோ சிறிதளவாக இருப்பினும்.. சிறுகச் சிறுக சேதமாக்கி உடலை அழித்துவிடும்.

இக்கட்டுரையை.. முழுமையாக புலிகளை எதிர்த்து எழுதின் ஒரு குறிப்பிட்டவர்களே அதை அக்கறையோடு படிப்பர். புலிகளைப் புகழ்வது போல எழுதின்.. பலரும் படிப்பர். அதேநேரம் நாசூக்காக.. புலிகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் நம்பிக்கையை.. தகர்க்க வேண்டிய கருத்தையும் செருகிவிடுவதால்.. இவ்வளவு நல்லாச் சொல்லுறவர்.. ஏன் பொய் சொல்லப்போறார்.. உண்மையா புலிகளுக்கு தோல்விதானோ என்ற சிந்தனையைக் கிளப்பி மக்களை குழப்பி விட்டாலே போதும்.. புலிகள் மீதான பாதி நம்பிக்கை தகர்ந்துவிடும்.

இன்றைய போர் சிறீலங்காவினதல்ல. இந்தியா.. அமெரிக்கா போன்ற பலம் பொருந்திய நாடுகள் எம்மீது சிறீலங்காவூடு திணித்துள்ளதே இன்றைய போர். அவர்கள் தங்களின் அனைத்து வழிமுறைகளையும் இதில் பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில்.. நாம் எமது போராளிகளின் திறமையில் நம்பிக்கை வைத்திருப்பதை.. இவர்கள் சிதைத்து.. மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி.. இப்போராட்டம் வெற்றிகளை அடைவது.. குறைந்து வருகிறது என்பது போலக் காட்டி மக்களிடம் போராட்டம் பற்றிய சலிப்படைதலை தூண்டி.. போராட்டத்துக்கான அவர்களின் பங்களிப்பை.. குறைப்பதே இவர்களின் முக்கிய உளவுத்திட்டம். இது போர் முனையில் புலிகளின் (தமிழ் மக்களின்) எதிரிக்கு சாதகமானதாக அமையும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விடுதலைப்புலிகள் இவ் விமானத்தாக்குதல்களை துல்லியமாக இலக்கை 100% அழிக்க வேண்டும் என்று நடத்த எப்போதும் தெரிவு செய்யவில்லை. அப்படிச் செய்வதானால்.. அவர்கள் கரும்புலிகளை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. விமானத்தாக்குதல் என்பது இராணுவ தந்திரத்திற்கான ஒரு உபாயமாக மேற்கொள்ளப்படுகிறதே அன்றி.. இவற்றால் பேரழிவுகள் உருவாகி.. அதனால் போர் நின்றுவிடும் அல்லது சமாதானம் உருவாகிவிடும் என்று அவர்கள் எதிர்பார்த்து தாக்குதல் நடத்தவில்லை. போரில் தமக்கு எதிரான சில இடர்களை அகற்ற அல்லது போர்க்களத்தில் சிறிய கால ஓய்வுகளை இவ்வாறான தாக்குதல்கள் நிச்சயம் வழங்கும் என்ற எதிர்பார்ப்போடு அல்லது எதிரியிடம் உளவியல் தாக்கத்தை எதிர்பார்த்து அவர்கள் நடத்துகின்றனர். இவை சில சந்தர்ப்பங்களில் எதிரிக்கு களத்தில் பின்னடைவாக அமையக் கூடிய புறநிலையை உருவாக்கியும் கொடுக்கலாம்.

இராமன் போன்றவர்களுக்கு இது தெரியும். புலிகளின் வான் தாக்குதல் பற்றிய அவரது விமர்சனத்தில் உள்ள சாரம்சம்.. சிங்களப் படையினரின் மன வலிமையை அதிகரிப்பதாகவும்.. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை தானாகவே அதிகமாகக் காட்டி.. அது தோற்பதாகவும் சொல்லிக் கொள்வதால்.. மக்களின் மன வலிமை தகர்க்கப்பட வேண்டும் என்பதே அவரின் இக்கட்டுரையின் பிரதான நோக்கம். புலிகளைப் புகழ்வது என்ற பட்டர் ஜாமை மக்களைக் கவர அவர் அதில் பூசியுள்ளார்.

எமது புலம்பெயர் ஊடகங்கள்.. பட்டரையும்.. ஜாமையும் பார்க்கின்றனவே தவிர.. அதில் தூவப்பட்டுள்ள நஞ்சை.. ஆராய்ந்து பார்க்காமலே.. எதிரிக்கு சாதகமான பிரச்சார தகவல்களை எம்மிடம் எடுத்து வருகின்றன. இதை தெரிந்தும் சிலர் செய்கின்றனர். சிலர் தெரியாமலும் செய்கின்றனர். :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எமது புலம்பெயர் ஊடகங்கள்.. பட்டரையும்.. ஜாமையும் பார்க்கின்றனவே தவிர.. அதில் தூவப்பட்டுள்ள நஞ்சை.. ஆராய்ந்து பார்க்காமலே.. எதிரிக்கு சாதகமான பிரச்சார தகவல்களை எம்மிடம் எடுத்து வருகின்றன. இதை தெரிந்தும் சிலர் செய்கின்றனர். சிலர் தெரியாமலும் செய்கின்றனர். :icon_idea

இதை புரியாதா நமது ஆராய்ச்சியாளர்கள் மேலாக சில தகவல்களும் வழங்குகிறார்கள் என்பதுதான் புரியாத புதிர் :(

தாக்குதல் புலிகளுக்கு வெற்றியே.... இலக்கு அழிக்கப்படவேண்டுமெண்டில்லை இலக்கை எட்டினதுமட்டுமில்லை சேதமும் ஏற்படுத்தி தளம் திரும்பிருக்கிறது விமானம்....

இவ்வளவு வசதியும் ஆயுதமும்... இருந்து தடுக்கவோ முறியடிக்கவோ சுட்டு விழுத்தவோ முடியாமல் போனதுக்கு தோல்வியே. இதை ம மைக்கும் இந்த கட்டுரை சிங்களவனுக்கான நொண்டிச்சாட்டு.

இதுதான் உண்மை:.............. சிங்கள இராணுவத்தினால் தமிழர்களின் விடுதலை புரட்ச்சியை அழிக்கமுடியாது... அழிக்கும் கூட்டணியில் இருப்பதால் இந்தியாவால் சகிக்கமுடியவில்லை. அதுதான் இவரது செய்தி கூறும் உண்மை....

Edited by Sooravali

ராமன் நல்ல விற்றமின் குளிசைகளை இலங்கை அரசிற்குக் கொடுக்கிறார். உளவியல் தாக்கங்கள்தான் போரைத் தீர்மானிக்கும். அது மட்டுமல்ல,தாக்கதலின் பெறுபேறு எவ்வாறு உணர்த்தன்பட்டிருக்கிறது, அதை எவ்வாறு உணர்ந்திருக்கிறது என்பதையெல்லாம் ராமன் தொட்டுப்பார்க்கவேயில்லை.

விமானங்கள் தாக்குதல் நடத்தப் போனதும் தெரியாது, தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பியதும் தெரியாது. எல்லா மேற்கோள்களும் "தமிழ்நெற்" "புதினம்" என்றிருந்தால், இவர்கள் அறியாமல் விடயங்கள் நடந்தேறியிருப்பது புலிகளுக்கு வெற்றியே. அதை இவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டும் வெளியே செரல்லாமல் இருக்கிறார். தாக்குதலுக்கான முழுத் தேவையும் புலம் பெயர் தமிழரின் தேவைக்காக என்ம் சொல்லி வைக்கிறார் ரம்புக் கெகலிய வழியில்.

"நெடுக்கால போவோனின்" கருத்துப் போல இது நஞ்சுதான். ஆனால் இதுவரை எத்தனை நஞ்சுகளை உண்ட கண்டர்கள் நம்மினம். இவைகளை அடையாளம் காணமுடியாதவர்க இருப்பார்களா?

எமது புலம்பெயர் ஊடகங்கள்.. பட்டரையும்.. ஜாமையும் பார்க்கின்றனவே தவிர.. அதில் தூவப்பட்டுள்ள நஞ்சை.. ஆராய்ந்து பார்க்காமலே.. எதிரிக்கு சாதகமான பிரச்சார தகவல்களை எம்மிடம் எடுத்து வருகின்றன. இதை தெரிந்தும் சிலர் செய்கின்றனர். சிலர் தெரியாமலும் செய்கின்றனர். :icon_mrgreen:

சரியாகச் சொன்னீர்கள்!

திரு. இராமன் அவர்கள் எப்போதும் நடுநிலையான ஆய்வாளராக (Unbiased Analyst) இருந்தது கிடையாது.

அவர் வகிக்கும் நேரடி, மற்றும் மறைமுக பதவிகளும் பொறுப்புகளும் அவரை அப்படி நடுநிலையான ஆய்வுகள் செய்ய அனுமதிக்கவும் போவதில்லை.

அவரின் எழுத்தாற்றல் மிகச்சிறப்பானது என்பதை மட்டும் சொல்லலாம். அந்த எழுத்தாற்றலை அவர் இந்திய புலனாய்வுத்துறை தான் நினைத்ததை

சாதிப்பதற்கு உதவும் வண்ணம் பயன்படுத்துகிறார்.

இனிப்பு தடவிய நஞ்சுப்பொருளே (Sweet Coated Poison) அவரின் கட்டுரைகள்.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: இவர் நிச்சயமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிராமணர்தான். அதில் சந்தேகமேயில்லை. இந்திய மத்திய புலநாய்வுத்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றபின்னரும் கூட பாதுகாப்பு அமைச்சிற்கு ஆலோசகராக விளங்கும் இந்த பார்ப்பணன் தனது சக தோழர்களான ராம், சோ, சுவாமி, பட்டிமன்றம் விசு, ஜயா ஆகியோரின் பணியை கன கச்சிதமாகச் செய்து வருகிறார்.

அதிகமாக உணர்ச்சி வசப்படுபவர்களும் மனதில் தோன்றியதை எல்லாம் வார்த்தைகளாய் கொட்டும் முட்டாள்களும் எப்போதும் ஒரு உயரிய இலட்சித்தை

அடைவதற்கான தடைக்கல்லாகவே இருந்து இருக்கிறார்கள் என்பதை மனித சரித்திரம் தெளிவாக பல இடங்களில் காட்டி உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.