Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் பலரும் உயிரை இழந்து வரும் வேளையில்,பிறந்தநாள் ரத்து: கமல்ஹாசன்

Featured Replies

ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் பலரும் உயிரை இழந்து வரும் வேளையில்,பிறந்தநாள் ரத்து: கமல்ஹாசன்

ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் பலரும் உயிரை இழந்து வரும் வேளையில், தன்னுடைய பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நவம்பர் 7-ஆம் தேதியை என் பிறந்தநாளாகக் கொண்டாடி மகிழ ஆவலாய் உள்ள என் இயக்கத் தோழர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் உயிரைப் பலரும் பிறந்த நாட்டையே பலரும் இழந்து வரும் இவ்வேளை யில், தனி ஒரு மனிதனின் பிறப்பு கொண்டாடப்படும் தகுதியை இழக்கிறது.

10 ஆயிரம் ஆண்டுகளே நிரம்பப் பெற்ற நமது மனித கலாச்சாரம் இன்னும் முழுமை பெறாத நிர்மாணப் பணி. அதற்குப் பேருதாரணமே உலகெங்கிலும் நிகழும் போர்கள்தாம்.

மத, ஜாதி, இன, மொழி, நிற வேறுபாடுகளைக் கூறி நம் இனத்தையே கூறுபோட்டு விற்கும் வியாபாரம் கலந்த அரசியலுடன் எனக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடு இப்போது வேரூன்றி நிலைத்து விட்டது.

அத்தகைய வியாபார அரசியல் நடத்தியதால் நிகழ்ந்த அவலம் தான் ஈழப்போரும் கூட. இலங்கை நமது அண்டை வீடு என்ற சமீபம் போக, ஈழப்போர் நம் தற்கால தமிழ் சரித்திரம் என்ற நெருக்கமும் என்னை எந்தக் கொண்டாட்டத்திலும் மனம் லயிக்க முடியாமல் தடுக்கிறது.

இதை ஒரு அரசியல் விமர்சனமாக நான் சொல்லவில்லை.மனிதனே மனிதனைக் கொல்லும் இந்தப் போர் இந்த நவீன யுகத்தின் ஊடகங்களால் நம் காது கேட்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் நடக்கிறது.

இதன் முடிவு என்னவாக இருக்கும் என யூகிக்கும் அரசியல் சாதுர்யம் எனக்கில்லை. நான் நிஜமாகவே சாதாரணன். மனித சோகங்கள் என்னை வெகுவாக பாதிக்கின்றன.

இந்தச் சோகச் சூழலுக்கு முடிவு சொல்லும் ஞானமில்லாவிடினும், அடுத்த வீட்டில் அடுத்தடுத்து இழவுக் கூட்டங்கள் நடக்கும் இவ்வேளையில் நம் வீட்டில் குதூகலக் கொண்டாட்டங்கள் நடப்பது மனித நேயம் சார்ந்த செயலாக இராது.

வழக்கமாக நான் பிறந்ததைக் கொண்டாடும் இத்தினத்தை நான் போற்றும் மொழியை பேசிய ஒரே குற்றத்திற்காக மட்டுமே இறந்து கொண்டிருக்கும் சாமானியருக்கு அனுதாபம் தெரிவிக்கும் நாளாகச் செலவிடுங்கள். இறந்தவருக்கு இரங்கல் சொல்லும் நாளாகச் செலவிடுங்கள்.

நான் பிறந்ததற்கான பயன்களில் ஒன்று இதுவாகவும் இருப்பின் பெருமை கொள்வேன்.

இவ்வாறு கமல்ஹாசன் அந்த அறிக்கையில் கூறினார்.

www.tamilwin.com

Edited by THEEPAN0007

எம் மக்கள் இன்னும் பலர் இன்னும் கொண்டாட்டங்கள், களியாட்டங்களில்,விழாக்களில் ஒன்றும் தெரியாதமாதிரி அ நியாயத்திற்கு செலவு செய்து ஊதாரிகளாக இருக்கும்போது தமிழகத்து மக்கள் எம் ஈழத்து மக்களுக்காக பலவிதமான போரட்டங்கள் விட்டுகொடுப்புகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்...

நாம் எதிர்பார்க்காத பலர் எம்மக்கள் நிலையில் தெளிவாக இருக்கிறார்கள்.. நித்திரை மாதிரி இருப்பவர்களே உறக்கத்தை விட்டு நிலையுணர்ந்து செயல்படுங்கள்...

கமலகாசன்,ரசனிகாந்த்,சீமான்,வ

கமலின் வார்த்தை..நன்றிக்குரியது..

இங்கே பலருக்கு சாட்டையடி

தமிழினத்திற்காக தமது பிறந்தநாளை கொண்டாடாமல் விட்டமைக்கும் எமது உயிருக்காக எமது மக்களுக்காக தமது பிறந்ததினத்தை நினைத்து குரல் தந்து எமது மக்களை விழிப்படைய செய்தமைக்காகவும் எனது சார்பாகவும் எமது உறன்பிறப்புக்கள் சார்பாகவும் கமல் சார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதோடு எமது உடன்பிறப்புக்களின் துயர்களில் பங்கு கொள்ளவும் அன்போடு கேட்கும்

தமிழன்

நாதன் தோமஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கமல் அவர்களே!

நன்றி கமல் அவர்களே.

நடிகர்கள் விழிப்புணர்வு ஊட்டினால் பல இதயங்களை அது சென்றடையும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ரத்தபாசமே எமை இணைத்துள்ளது

அந்த வகையில் தமிழனாய் நீர் பிறந்ததற்காக நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

:) கமலுக்குள் இப்படியொருவர் இருப்பது கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

அவர் ஒரு பகுத்தறிவாளர் என்று மட்டுந்தான் இதுவரை எண்ணியிருந்தேன், அனால் அவர் ஒரு மனிதாபிமானவாதி என்பதையும் நிரூபித்திருக்கிறார்.

தமிழகத்தில் கமல் உற்பட அனைத்து திரையுலக உள்ளங்களுக்கும் மிக்க நன்றி !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு நாளா ஈழத்தில சனம் சாகேல போல.... முந்தாநாள் தான் ஈழத்தில சண்டை தொடங்கனது??? நேற்றுத்தான் சனம் நிறைய செத்தது??? இண்டைக்குத்தான் இந்திய ஊடகங்கள் மரண அறிவித்தல் சொன்னவை???

வாழ்க உலக நாயகன்...................... :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் பேச ஆரம்பித்திருக்கிறது. உணர்ச்சிகளை வெளிக்காட்ட ஆரம்பித்திருக்கிறது. அது எந்தளவுக்கு தொடரும் என்பதிலும்.. தொடர ஊக்கிவிப்பதே நன்று.

கமல் போன்றவர்கள் வெளிப்படையாக இவ்வாறு பேசியது மிக அரிது. ஈழப்போராட்ட சக்திகள் தமிழகத்தில் நிலை கொண்டிருந்த போது கூட கமல் இப்படிப் பேசியதாகப் பதிவுகள் இல்லை. விஜயகாந்த் போன்றவர்கள் பேசி இருக்கிறார்கள். கமல்.. ரஜனி பேசியதில்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால் கமல் இன்று அதுவும் தடைகளுக்கு மத்தியிலும் பேசி இருக்கிறார். அதை நிச்சயம் வரவேற்க வேண்டும். அதில் உள்நோக்கம் வெளிநோக்கம் இருக்கட்டும்.. வெளிப்படைக்கு அதை மக்களின் ஆதரவை.. குரலை ஓங்கச் செய்யப் பாவிப்பதே சிறந்தது. விவேகமானது. :)

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளா ஈழத்தில சனம் சாகேல போல.... முந்தாநாள் தான் ஈழத்தில சண்டை தொடங்கனது??? நேற்றுத்தான் சனம் நிறைய செத்தது??? இண்டைக்குத்தான் இந்திய ஊடகங்கள் மரண அறிவித்தல் சொன்னவை???

வாழ்க உலக நாயகன்...................... :)

முதலில

இந்த புPனை எலி எல்லாத்தையும் ஒழிக்கணும்

கடி தாங்கமுடியல

ஈழத்தமிழனுக்கு நன்மைகள் எதுவும் கிடைக்க இதுகள் விடப்போறதுமில்லை

நன்றி

உறவுகளே கிடைப்பவற்றை எல்லாம் எமக்காக்கி கொள்வோம் அவை காய்களா கனிகளா அவற்றை பிரித்து நோக்கும் காலப்பகுதியில் நாம் இல்லை சாயத் தோள் வேண்டும் அது பரந்து விரிந்து தற்போது கிடைக்கின்றுது சாய்வோம் நிச்சயம் பலன் கிடைக்கும்

Edited by Paranee

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதாபிமானிகளின் வார்த்தைகள் சற்று ஆறுதல் அளிக்கும் படி உள்ளது. நன்றி கமல் அவர்களே....!

எல்லாம் மாறிவருது... இப்ப யாழில் கூட.... இந்திய மாற்றத்தை இதுவரை எவரும் இங்கு யாழில்... கதைக்க விமர்சிக்க விரும்பல்ல... :) எனி தொடங்கிடுவம்... ஆனால்... என்னம் பொறுத்துக்கொழ்வது நல்லம்.... :lol: இந்த கமலையும்.... ரஐனியையும் பார்க்க எனக்கு... எமக்கே அதிசயமாய் உள்ளது.... :(:) கடவுளே எம்மை எமது யதார்தத்தை இனிஎன்றாலும் காப்பாற்று............ :) :) :D

உலக நாயகனே நன்றிகள் . உங்கள் உணர்வுபூர்வமான ஆதரவு தொடரட்டும்.

ஜானா

Edited by Janarthanan

இவரின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இவ்வாறு வெளிப்படையாகப் பேசியதை நம்பவே முடியவில்லை. ஆனால், முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு இவர்களின் மனமாற்றமே நல்ல எடுத்துக்காட்டு. இத்தனை வருடங்களாகப் பாராமுகமாக இருந்தவர்கள் மாறியது ஒரு நல்ல மாற்றமே. இவர்களின் இந்த உணர்வு மழுங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எமது கடமையாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் முடிவுக்கு நன்றி கலைஞனே.தொடர்ந்தும் எம்மோடு கைகோர்த்திருக்க வேண்டுகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கமல் அவர்களே . நீங்கள் தமிழ் திரையுலகின் பெருமைமிக்க கலைஞன் என்ற வகையில் உங்கள் கூற்று பலரை சென்றடையும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.