Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினர் முன்னகர்வு முறியடிப்பு - 30க்கும் மேற்பட்ட படையினர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கந்தபுரம் கோணாவில் பகுதியினூடாக சிறீலங்கா படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிப்பின் போது 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விடுதலைப் புலிகள் மேலும் அறிவித்துள்ளதாவது, கோணாவில் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணியளவில் பெருமளவிலான முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்ட படையினர் விடுதலைப் புலிகளின் இலக்குகளை நோக்கி செறிவான எறிகணை மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை நடத்தியபடி முன்னேறினர்.

படையினர் மேற்கொண்ட இந்த முன்னகர்வுத் தாக்குதல்களுக்கு எதிராக உக்கிர எதிர்த்தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டன. இந்த எதிர்த்தாக்குதல்கள் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வரையில் நீடித்துள்ளன. அதன் பின்னர் படையினர் பெரும் இழப்புக்களுடன் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது படையினரின் சடலங்கள் உட்பட ஆயுதங்கள் பலவும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. ஆயினும் அவ்வாறானதொரு மோதல் சம்பவம் இடம்பெறவில்லை என்று சிறீலங்கா படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளது.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

நல்ல அடி போல இருக்கு

Edited by kuddipaiyan26

சங்கதி தான் இன்னமும் "ஒறிஜினல் தமிழ்தேசிய ஊடகமாக" நிலைத்து நிக்குது போல கிடக்கு :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் மற்றவர்களை நக்கலடிப்பது, அவர்கள் குறித்துக் குதர்க்கம் கதைப்பது எல்லாம் தமிழ்தேசியம் இல்லை.

இச்செய்தி தமிழீழ தேசிய தொ.காவில் வந்த ஒன்று.

http://www.youtube.com/watch?v=c6S7ZuoU28g

http://www.youtube.com/watch?v=phC5WudELQ0

ததேதொ வில வேற கனக்கவும் வந்தது தான் 2005, 2006, 2007களில. இப்ப அதுக்கு என்ன? :(

உந்த கிளிப்புகளைப் பாத்தா கிளிநொச்சி வைத்திய சாலை மின்பிறப்பாக்கிக்கே எரிபொருள் தட்டுப்பாடு எண்ட செய்தி பொய்போல கிடக்கு. :(

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்ன நையாண்டிக் கதை எடுபடவில்லை என்றவுடன், உடனே வழமையான நக்கல்பாணியில் தொடங்குகின்றீர்.

இப்போது அதுக்கு என்னவென்றால் சங்கதியை ஏன் வம்புக்கிழுக்கின்றீர்? அதுக்கு என்ன என்று இருந்து விட வேண்டியது தானே?

இன்று நம்மவர்களின் தளங்களுக்குள்ள நம்பகத் தன்மையைக் குறைத்து, அந்த இடவெளிக்குச் சிங்கள அரச பிரச்சாரங்களுக்கு இடம் வகுத்துக் கொடுத்தது, உங்களைப் போன்ற சில விதாண்டவாதிகள் தான். பொறுப்பில்லாமல் உங்களை நியாயப்படுத்தவும், எல்லாப் பிரச்சனைகளையும் கேவலப்படுத்தியும் நடந்து கொள்ளுமையும் தான்.

எமக்காக போராடிய வீரர்களுக்கு நன்றிகள்....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்ன நையாண்டிக் கதை எடுபடவில்லை என்றவுடன், உடனே வழமையான நக்கல்பாணியில் தொடங்குகின்றீர்.

இப்போது அதுக்கு என்னவென்றால் சங்கதியை ஏன் வம்புக்கிழுக்கின்றீர்? அதுக்கு என்ன என்று இருந்து விட வேண்டியது தானே?

இன்று நம்மவர்களின் தளங்களுக்குள்ள நம்பகத் தன்மையைக் குறைத்து, அந்த இடவெளிக்குச் சிங்கள அரச பிரச்சாரங்களுக்கு இடம் வகுத்துக் கொடுத்தது, உங்களைப் போன்ற சில விதாண்டவாதிகள் தான். பொறுப்பில்லாமல் உங்களை நியாயப்படுத்தவும், எல்லாப் பிரச்சனைகளையும் கேவலப்படுத்தியும் நடந்து கொள்ளுமையும் தான்.

உண்மைதான் தூயவன்

தலைவருக்கு பத்துக்கைகள் இல்லையே என்ற கவலை எனக்கு ..........இவர்களையும் கருவறுக்க??????????

இன்று நம்மவர்களின் தளங்களுக்குள்ள நம்பகத் தன்மையைக் குறைத்துஇ அந்த இடவெளிக்குச் சிங்கள அரச பிரச்சாரங்களுக்கு இடம் வகுத்துக் கொடுத்ததுஇ உங்களைப் போன்ற சில விதாண்டவாதிகள் தான். பொறுப்பில்லாமல் உங்களை நியாயப்படுத்தவும்இ எல்லாப் பிரச்சனைகளையும் கேவலப்படுத்தியும் நடந்து கொள்ளுமையும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லை குகதாசன். இவர்களை ஏன் கருவறுக்க வேண்டும்.

நம்மவர்களின் நம்பத்தன்மையைக் குறைப்பதைத் தவிர்ப்பது நல்லது என்பது தான் அவர்களுக்கான பதிலே தவிர, கருவறுத்தல், வெட்டுதல், குத்துதல் என்பன கடுமையான வார்த்தைகள். இதனால் தான் நமக்கிடையே புரிந்துணர்வு இல்லாமல் போகின்றது.

அவர்கள் நம்பகத் தன்மையைக் குறைக்கின்றார்கள் என்றால், உங்களது வார்த்தை நமக்கிடையிலான ஒற்றுமைக்குப் பங்கமாக அமைகின்றது.

பல விடயங்களில் எதிர்கருத்து இருக்கலாம். ஆனால் தமிழீழத் தீர்வுக்காக அனைவரும் வேண்டும்.... நீங்கள் உற்பட!

  • கருத்துக்கள உறவுகள்

நாய்

பேய்

நரி

நண்டு

குரங்கு

புலி

சிங்கம்

ஓணான்

உலக்கை

..............எல்லாத்தையும் ஒன்று சேர்க்கப்போறீரே.......

போராட்டம் நமக்குள்ள மட்டும்தான் நடக்கும்

விடியவிடிய..................????

தமிழ் இணையங்களில் வாற செய்திகளை நக்கல் பண்ணவேண்டும். ஆங்கில இணையங்களில் வாற செய்திகளை எடுத்து அடிக்கடி போட்டு காட்ட வேணும். இப்படி எல்லாம் எழுதினால் நீங்கள் தான் புத்திசீவி!!!

  • கருத்துக்கள உறவுகள்

நாய்

பேய்

நரி

நண்டு

குரங்கு

புலி

சிங்கம்

ஓணான்

உலக்கை

..............எல்லாத்தையும் ஒன்று சேர்க்கப்போறீரே.......

போராட்டம் நமக்குள்ள மட்டும்தான் நடக்கும்

விடியவிடிய..................????

நீங்கள் இதில் எவ்வகை என்றால் தான் உங்களையும் சேர்ப்பது தொடர்பாகச் சிந்திக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இதில் எவ்வகை என்றால் தான் உங்களையும் சேர்ப்பது தொடர்பாகச் சிந்திக்கலாம்!

என்ன நடந்தாலும்...........

எது வந்தாலும்..........

தலைவருக்கு பின்னால போறவகை

புலம்பெயர்ந்தவர்களின் தமிழ் "ஊடகங்கள்" தும்பிக்கையை இழந்தது நக்கல் அடிப்பவர்களால் அல்ல. காலப்போக்கில் அவர்களது செய்திகள் படைப்புகள் யதார்த்தத்திற்கு புறம்பானவை என்பதை சாதாரண வாசகர்கள் பார்வையாளர்கள் உணர்ந்ததால் வந்தது. பிரச்சார யுத்தத்தில் புறமுதுக்கிடக் கூடாது என்று தாமும் சிறீலங்கா சொல்வது ஒவ்வொன்றுக்கும் எதிர்மறையாக 10 மடங்கு கற்பனையில் இயங்கி இந்த நிலையை இந்த தமிழ்தேசிய ஆதரவு "ஊடகங்கள்" தாமாகவே தேடிக் கொண்டன.

சிறீலங்காவின் நிலையில் இருந்து

  • பேர்நிறுத்த உடன்படிக்கை பயங்கரவாதிகளிற்கு உதவுகிறது
  • தனது இறையாண்மைக்கு பாதகமானது
  • அங்கீகாரம் உள்ள அரசு
  • மனிதாபிமானப் போர்
  • பயங்கரவாதத்திற்கு எதிரான போர்

போன்ற நிலைப்பாடுகளை மய்யப்படுத்தித்தான் சிங்களத்தின் ஊடக செயற்பாடுகள் சமாதான காலத்தில் இருந்தே தொடர்ந்து நடத்தப்படுகிறது.

தமிழர் நிலையைப் பொறுத்தவரை

  • போர் நிறுத்தம் ஏன் எப்படி உருவானது?
  • இன்று தமிழர்கள் போராட்டம் வேண்டி நிற்பது என்ன?
  • தாயகத்தின் இன்றைய தேவைகள் என்ன?
  • போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து புலிகள் வெளியேறினார்களா?
  • போர்நிறுத்த உடன்படிக்கையும் சமாதான முயற்சிகளும் தொடர்வது பற்றி புலிகளின் நிலைப்பாடு என்ன?
  • புலிகள் வலிந்த தாக்குதல்களை நடத்தாது தற்காப்பு தாக்குதல்களை நடத்தியபடி பின்னகருகிறார்கள்.

  • ஆனால் தமிழ் ஊடகங்களில் புகைப்படங்களில் காணொளிகளில் காட்டுவது என்ன?
  • தமிழ் ஊடக கட்டுரைகளில் கண்ணோட்டங்களில் சொல்வது என்ன?

இந்த குழப்பகரமான முரண்பாடுகள் நிறைந்த ஊடக நிலைப்பாடுகள் சமாதான காலத்தில் இருந்து தொடர்கிறது. இவை தான் நம்பிக்கையீனத்தை உருவாக்கியது. நக்கலடிப்பவர்களால் என்ன திட்டமிட்ட எதிர்ப்பிரச்சாரத்தால் கூட யதார்த்தமாக இயங்கும் ஒரு ஊடகத்தின் மீது அவநம்பிக்கையை உருவாக்க முடியாது.

ஈராக் யுத்தத்தை அமெரிக்க ஊடகங்கள் மேற்குலக ஊடகங்கள் அரபு ஊடகங்கள் எப்படி கைய்யாண்டார்கள் என்று கவனியுங்கள்.

அல்ஜசீரா ஆங்கில சேவை சிஎன்என் இற்கு எதிர்மறை பிரச்சாரம் செய்திருந்தால் இன்று இந்தளவிற்கு மேற்குலகில் சாதாரண மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்றிருக்காது. அதே போல் அமெரிக்காவின் சிஎன்என் ஏபிசி பொக்ஸ் போன்றவை நம்பிக்கை இழந்தது நக்கலடிப்பவர்களால் அல்ல.

Edited by kurukaalapoovan

இப்ப கடைசியா என்ன சொல்ல வாறீங்கள்? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோணாவில் நோக்கிய முன்னகர்வுகள் முறியடிப்பு: 45 படையினர் பலி!

செவ்வாய், 11 நவம்பர் 2008, 21:11 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தமிழ்]

கோணாவில் நோக்கி சிறீலங்காப் படையினரின் முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 15 படையினர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணி முதல் பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மற்றும் கனரக ஆயுதங்களில் சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் அக்கிராயன் பகுதியிலிருந்து கோணாவில் நோக்கி முன்னகர்வுகளில் ஈடுபட்டனர்.

படையினரின் முன்னகர்வுகளுக்கு எதிராகப் போராளிகள் களமாடி படையினரை பழைய நிலைகளுக்குப் பின்வாங்கச் செய்துள்ளனர். இதன்போதே படையினர் தரப்பில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளகர். சூனியப் பகுதியில் படையினரின் சடலங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

இதேபோன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஸ்கந்தபுரத்திலிருந்து கோணாவில் நோக்கிய முன்னகர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளனன. காலை 11:30 மணி முதல் கனர ஆயுதங்களில் சூட்டாதரவுடன் கோணாவில் நோக்கிப் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர்.

படையினருக்கு எதிராக நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினர் தரப்பில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். படையினருடைய இரு சடலங்களும், ஆயுத தளபாடங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செந்தணல் களமாடிய வீர வேங்கைகளிற்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கடைசியா என்ன சொல்ல வாறீங்கள்? :lol:

வசி சில பேர் சொல்லிக் கொண்டிருப்பார். சில பேர் செய்து கொண்டிருப்பார். சில பேர் சொல்லிக் கொண்டும் செய்து கொண்டும் இருப்பார்கள். சில பேர் செய்து விட்டு சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில பேர் எதுவும் செய்யார்கள் ஆனால் தாராளமாகச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசி சில பேர் சொல்லிக் கொண்டிருப்பார். சில பேர் செய்து கொண்டிருப்பார். சில பேர் சொல்லிக் கொண்டும் செய்து கொண்டும் இருப்பார்கள். சில பேர் செய்து விட்டு சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில பேர் எதுவும் செய்யார்கள் ஆனால் தாராளமாகச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். :)

இப்ப முடிவா என்ன சொல்லுறிங்கள் :lol: ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவா என்ன சொல்லுறிங்கள் :rolleyes: ?

அவருக்கு தெரிந்தால் சொல்லமாட்டாரா???

அவரே தானும் குளம்பிப்போய்

மற்றவையையும் குளப்பிறார்........

நீங்கள் வேற முடிவா என்ன என்று கேட்டபடி???????

டி.ராNஐந்தர் பாணியா???

S.S.சந்திரன் பாணியா???

கவுண்டமணி பாணியா என்று தெரியாமல் விழிக்கிறார் அவரே?????

அண்ணாத்தை நீங்கள்

குழம்பாமல் எழுதப்படும்

கருத்துக்களை..........?????

எந்த உறுப்பினர் எழுதுகிறார்........????

என்பதை ஒரு தரத்திற்கு இரு தரம்

படித்துவிட்டு எழுதுங்கோ!!!

சரியோ....?????

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஊடகங்களை நக்கல் அடிப்பவர்கள் தாங்களே தரமான ஊடகங்களை நடத்திக் காட்டினால் அவர்களைப் பார்த்து திருந்தலாம்.அதை விட்டு விட்டு தானும் ---- தள்ளியும் படுக்கான் என்று இருந்தால் எப்படி?

உண்மையை மிகைப் படுத்திச் சொல்வதை விட உண்மையைச் சொல்லாமல் விடுதல் மிகப்பெரிய குற்றமாகும். அதைத்தான் உலகின் அநேகமான ஊடகங்கள் செய்கின்றன.(இங்கே மேற்கோள் காட்டப்படும் ஊடகங்களும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது).

தமிழ் ஊடகங்களை நக்கல் அடிப்பவர்கள் தாங்களே தரமான ஊடகங்களை நடத்திக் காட்டினால் அவர்களைப் பார்த்து திருந்தலாம்.அதை விட்டு விட்டு தானும் ---- தள்ளியும் படுக்கான் என்று இருந்தால் எப்படி?

உண்மையை மிகைப் படுத்திச் சொல்வதை விட உண்மையைச் சொல்லாமல் விடுதல் மிகப்பெரிய குற்றமாகும். அதைத்தான் உலகின் அநேகமான ஊடகங்கள் செய்கின்றன.(இங்கே மேற்கோள் காட்டப்படும் ஊடகங்களும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது).

சரியா சொன்னிங்கள் புலவர்

சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு புலிகளால் நான்காவது நாளாகவும் முறியடிப்பு.

களமுனைச்செய்தியாளர் - வர்மன். புதன், 12 நவம்பர், 2008

கிளிநொச்சி நகரத்திற்கு தென்மேற்கே அக்கராயன் கோணாவில் பகுதியை கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்து நான்காவது நாளாகவும் சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதில் 12க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 25க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர்.

அக்கராயன் கோணாவில் பகுதியை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்காப்படையினர் தொடர்ந்தும் 4 ஆவது நாளாக இந்தப் பாரிய முன்னகர்வு முயற்சியை இன்று மேற்கொண்டனர்.

இன்று காலை 10.00 மணிமுதல் மாலை வரை படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப்புலிகள் தீவிர எதிர்தாக்குதலை நடத்தினர்.

செறிவான சூட்டாதரவுடன் முன்னகர்ந்த படையினரை விடுதலைப் புலிகள் வியூகமிட்டுத் தாக்கி முன்னகர்வு முயற்சியை முறியடித்தனர்.

இதில் 12 ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 25ற்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் இந்த தீவிர எதிர்த்தாக்குதலை அடுத்து காயமடைந்த படையினரையும், கொல்லப்பட்ட படையினரின் உடலங்களையும் தூக்கிக்கொண்டு படையினர் பின்வாங்கி ஓடியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஐந்து நாட்களில் இந்தப் பகுதியில் சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சிகள் முறியடிக்கப்பட்டதில் 50ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், 100ற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

படங்களுக்கு

http://www.tamilntt.com/albumview.php?nid=...;alc=Akk1211200

செய்தி தகவல்களுக்கு நன்றி..

யாழ்களத்தை சிதைக்காமல் எப்போதும் பார்த்துக்கொள்ளுங்கள்..சமீபக

ாலமாக தாயகவிடுதலையை நோக்கி இருக்கமால் திசை திருப்பல், பொழுதுபோக்கு களமாக மாற்ற, சிலரின் முயற்சிகளை காணக்கூடியதாக இருக்கிறது...

உண்மையான் விடுதலை விரும்பிகள் ஒன்றாகுதல் கண்டு எதிரிகளும், தவறானவர்களும் எங்கோ ஓடி மறைவர்...

அல்ஜசீரா ஆங்கில சேவை சிஎன்என் இற்கு எதிர்மறை பிரச்சாரம் செய்திருந்தால் இன்று இந்தளவிற்கு மேற்குலகில் சாதாரண மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்றிருக்காது. அதே போல் அமெரிக்காவின் சிஎன்என் ஏபிசி பொக்ஸ் போன்றவை நம்பிக்கை இழந்தது நக்கலடிப்பவர்களால் அல்ல.

அல்ஜசீரா ஏதோ இஸ்லாமிய தேசிய எழுச்சி ஊடகம் போல ஒரு கதையை சொல்கிறீர்களே, உண்மையில் அப்படித்தானோ...???

அப்பட்டமான மெற்குலகின் ஆதிக்க சக்திகளின் குரல் எண்று பல இஸ்லாமியர்கள் சொல்கிறார்களே...!!! இஸ்லாமியர்கள் ஒத்து கொள்ளாமல் அப்படி ஒரு ஊடகம் அவர்களுக்காக இருக்குமா என்ன...!!

வேண்டுமானால் அல்ஜசீரா எப்படி மேற்குலகின் கைகளில் விழுந்தது எண்று நீங்கள் விளக்க உரை எழுத முடியும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.