Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிவருகிகின்றது! வாழ்த்து மடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
leadervc2.jpg

இந்தப் பகுதியில் யாரும் கருத்து எழுதாதது சில செய்திகளை சொல்கின்றன. அந்தச் செய்தியை சம்பந்தப்பட்டவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ரஜனிகாந் ரசிகர்களின் உண்ணாவிர போராட்டத்தை பார்வையிட்வர்களை விட வாழ்த்து மடலை பார்வையிட்டவர்கள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்,

நீங்கள் அந்த மவுனத்தை வேறாக அர்த்தப்படுத்த வேண்டாம். வாழ்த்துமடல்தான் வந்திருக்கிறதே ஒழிய, வாழ்த்து மடலே தவறு என்று வரவில்லை.

போராட்டம் படத்தில் இல்லை. எங்கள் உணர்வில் இருக்கிறது !

என்னுடைய கருத்தை வெளிப்படையாகச் சொல்கின்றேன்.

ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தேசியத் தலைவர் பற்றி ஒரு செய்தியை வாசித்தேன். அவருடைய பிறந்தநாளிற்கு அடுத்த நாள் முதலாவது விடுதலைப் புலிப் போராளி வீரச்சாவு அடைந்ததால், அவர் அன்றிலிருந்து பிறந்த நாள் கொண்டாடுவது இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.

90களில் வெளிவந்த பல நூல்களில் இந்தச் செய்தி இருக்கின்றது.

உலகின் மற்றைய தலைவர்கள் போன்று சந்திக்குச் சந்தி தன்னுடைய "கட்அவுட்"களை எமது தேசியத் தலைவர் வைப்பது இல்லை என்பது பற்றி எனக்கு பெருமிதம் உண்டு. உலகின் மற்றைய தலைவர்கள் தமது பிறந்த நாள்களை ஆடம்பரமாக கொண்டாடுகின்ற பொழுது, எமது தலைவர் அதற்கு நேர் மாறாக நடந்து கொள்வதும் எனக்கு பெருமையை தந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று ஆரம்பித்தது. ஒரு இனத்தை விடுதலை அடையச் செய்வதற்காக பாடுபடும் ஒரு தலைவரின் பிறந்த நாளை அந்த இனம் கொண்டாடுவது வெகு இயல்பானது. அது ஒரு மகிழ்ச்சியான தினம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மக்கள் கொண்டாடுவது சரி, ஆனால் இன்றைக்கு விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் ஒரு வாழ்த்து மடலை வெளியிடுவது எனக்கு நெருடலாப் படுகிறது.

அனைத்துலகத் தொடர்பகம் தலைவரை வாழ்த்தட்டும். நாமும் வாழ்த்துவோம். உலகின் தமிழர்கள் அனைவரும் தலைவரை வாழ்த்தட்டும்.

ஆனால் இன்றைய நிலையில் இப்படி ஒரு வாழ்த்து மடலை வெளியிடுவது என்னுடைய பார்வையில் ரசிக்கும்படி இல்லை.

அவ்வளவுதான்!

சபேசனின் கருத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறேன்!!!

ஆனால் புலத்தில் இயங்கும் சில தமிழ்தேசிய ஊடகங்களின் செயற்பாடுகள் வெறுப்பை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு கனடாவில் இருந்து வெளிவரும் ஈழமுரசு விழாவை எடூக்க இருப்பதாக செய்தியை சங்கதியும் இணைப்புடன் வெளியிட்டு இருக்கிறது.

http://www.sankathi.com/index.php?mact=Cal...nt01returnid=64

ஓர் ஒப்பற்ற தலைவனை காலம் எமக்கு தந்தது மறுக்க முடியாத உண்மைதான்!! ஆனால் அதற்காக மக்கள் இருக்க இடமில்லாமல், கொட்டும் மழையிலும், கொட்டும் குண்டு மழையிலும் அழிந்து கொண்டிருக்க நிச்சயமாக எம்தலைவன் இதனை விரும்பமாட்ட்டார் மட்டுமல்ல வெறுப்பார்!!

ஆனால் இந்த புலத்தில் செயற்படும் சில அதி புத்திசாலிகள், மக்களை விரக்திக்கு கொண்டு செல்லவே முனைகிறார்கள்!!! அதுமட்டுமல்ல இதனை துரோகிகளும், எதிரியும் பிரச்சாரத்துக்கு பாவிக்கவே துணை போகிறார்கள்.!!!

ரஷ்யா பற்றி எரிய சார் மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம், தலைவனையும் அவ்வாறு எடை போட வைக்க முயல்கிறார்களா, இந்த அதி புத்திசாலிகளான தமிழ்தேசியவாதிகள்????

தாழ்மை கொண்டு விடுதலைப் புலிகளின் அனைத்துல செயலகத்திற்கு வேண்டுகோள் ஒன்று

இதுவரை காலமும் உங்கள் அறிவீனத்தால் விடுதலைப் போராட்டத்திற்கு செய்த பாதிப்புகளே போதுமானவை!!! (யாரும் விரும்பின் விரிவான விபரம் தரலாம்) இனியாவது புத்திசாலித்தனமாக செயலாற்றுங்கள்!!!!!!!!! செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன!! அட்வற்றை செய்யுங்கள்!!! இது போன்றவைகளையல்ல...........

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாகக் கொண்டாடி விட்டு, இப்பொழுது கொண்டாடாவிட்டால் என்ன நடக்கும். எதிரிகள் அதையும் பிரச்சாரம் செய்வார்கள்.

வன்னியில் மக்கள் கஸ்டப்படுகின்றார்கள் என்பதற்காக நீங்கள் என்ன சாப்பிடாமல், முழுகாமலா நிற்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் சிலர் தர்க்கப் பொருளாக்கி விட முனைகின்றனர். தலைவர் தலைவர் என்று கொண்டே தமக்குள் இருக்கும் அறியாமையால் எழும் சந்தேகங்களை மக்கள் முன் கருத்தாக்கி விதைக்க முனைகின்றனர்.

இது உண்மையில் பிறந்த நாள் கொண்டாட்டமல்ல. ஒரு தேசிய இனத்தின் விடிவுக்காக தன்னையே அர்ப்பணித்துப் போராடும் தமிழீழத் தாயின் தலைமகனுக்கு மக்கள் வழங்கும் கெளரவிப்பு... தமிழின எழுச்சியின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் நிகழ்வு நாள்.

இதனால் மக்களின் துன்பங்கள் மறக்கப்பட்டதாகவோ.. மாவீரர்களின் தியாயகங்கள் மலினப்படுத்தப்பட்டதாகவோ காட்டவோ கருதவோ முடியாது.

இது களியாட்டமல்ல.. தலைவனை உதாரணமாக்கி.. அவன் வழியில் மக்களின் எழுச்சி வீச்சுக் கொள்ள வைப்படுவதற்கான அறைகூவலே ஆகும்..! :)

Edited by nedukkalapoovan

இம் முறை தேசியத் தலைவரின் பிறந்ந நாள் கொண்டாட்டங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்றும், அப்படி ஏதாவது ஏற்கனவே ஏற்பாடாகி இருந்தால், அதை துன்பப்படும் மக்களுக்கு நிதி சேகரிக்கும் நிகழ்வாக மாற்றும்படியும் வன்னியில் இருந்து அனைத்துலகப் பணியகங்களுக்கு அறிக்கை சென்றிருக்கிறதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம்.. தலைவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சில ஆண்டுகளாக பிறந்த நாள் கொண்டாட்டங்களை களியாட்டமாகச் செய்த நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. இன்றைய சூழலில் அப்படி செய்வதை அனுமதிப்பது அழகல்ல. அதற்காக தலைவரைக் கெளரவித்து அவரின் மக்கள் எழுச்சிக்கான பணியில் மக்களை மேலும் மேலும் எழுச்சியுறச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தவறாக இனங்காட்டப்படக் கூடாது.

களியாட்டம் என்பது வேறு தலைவனை முன்மாதிரியாக்கி மக்களை எழுச்சியூட்டல் என்பது வேறு. அனைத்துலகச் செயலகம் மட்டுப்படுத்திய அளவில் எழுச்சி நிகழ்வுகளைச் செய்வது வரவேற்கத்தக்கது.

மாவீரர் தினம் தமிழீழ மண்ணின் உலகத் தமிழ் மக்களின் புனித தினமாகும். ஒரு மக்கள் எழுச்சிக்கான தலைவரின் பிறந்த நாள் மக்கள் எழுச்சி நாளாக நினைவு கூறப்படுவதில் தவறில்லை..! இரண்டுமே களியாட்ட நாட்கள் அல்ல...!

Edited by nedukkalapoovan

தலைவனுடைய பிறந்தநாளை எழுச்சிக்குரிய நாளாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் இங்கு அடிக்கப்போகும் கூத்துக்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. தமிழகத்தின் நடிகர்களே தங்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து ஈழத்தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதங்கள் கவனஈர்ப்புக்கள் என்று இறங்கியுள்ளபோது, இங்கு நாங்கள் கொண்டாட்டங்களை நடத்தி அதை ஊடகங்கள் மூலமாக விளம்பரப்படுத்தினால், அது தமிழகத்தில் எப்படியான உணர்வை ஏற்படுத்தும் என்பது தெரியாது. குதூகலமான கொண்டாட்டங்களைத் தவிர்த்து, அர்த்தமுள்ளதாக அந்த நாளை மாற்றுவதுதான் சிறப்பானது. அதற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள எம்மவர் ஒத்துழைப்பார்களா என்பது கேள்விக்குறி.

இந்த வாழ்த்துமடல் தேசியத்தலைவருடைய பிறந்தநாளுக்காக வெளியிடப்பட்டதுதானா?

வாழத்துமடல் தேசியத் தலைவருடைய பிறந்தநாளுக்கானது இல்லை என்று அறிகிறேன். 26ம் திகதி பயன்படுத்தப்படுவதாக இருந்தால் சில நாட்கள் முன்னதாகவே வெளியாகியிருக்கும். இந்த வாழத்துமடல், அதன்பின்னர் வரப்போகும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்கானதாக இருக்கலாம். எழுதப்பட்டுள்ள வரிகள் தமிழீழம் நோக்கிய எழுச்சியை விதைப்பதாகவே இருப்பதைக் கவனியுங்கள்.

தலைவனுடைய பிறந்தநாளை எழுச்சிக்குரிய நாளாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் இங்கு அடிக்கப்போகும் கூத்துக்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. தமிழகத்தின் நடிகர்களே தங்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து ஈழத்தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதங்கள் கவனஈர்ப்புக்கள் என்று இறங்கியுள்ளபோது, இங்கு நாங்கள் கொண்டாட்டங்களை நடத்தி அதை ஊடகங்கள் மூலமாக விளம்பரப்படுத்தினால், அது தமிழகத்தில் எப்படியான உணர்வை ஏற்படுத்தும் என்பது தெரியாது. குதூகலமான கொண்டாட்டங்களைத் தவிர்த்து, அர்த்தமுள்ளதாக அந்த நாளை மாற்றுவதுதான் சிறப்பானது. அதற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள எம்மவர் ஒத்துழைப்பார்களா என்பது கேள்விக்குறி.

மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றால் எம்மவர்களை வழிநடத்தும் ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும். ஊடகங்கள் எப்படி விளம்பரப்படுத்துகின்றதோ அதைப் பொறுத்து தான் ஏழுச்சியாக இருக்கப் போகின்றதா அல்லது கூத்தாக இருக்கப்போகின்றதா என்று தெரியும். இப்படியான நிகழ்வுகள் பலவருடங்களாக நடந்து வருகின்றது. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் பலவருடம் எழுச்சி நாள் என்று ஆரம்பித்து கூத்தில் முடிந்துள்ளது. இம்முறை பல முக்கிய பிரமுகர்கள் ஈழத்தில் நடக்கும் அவலத்தை குறித்து பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்த்துள்ள நிலையில் எமது ஊடகங்கள் கவனத்துடன் நடக்காவிடில் எமக்கு நாமே கரி பூசிக்கொள்வது நிச்சயம். இந்த நாளில் எதாவது நற்பணி செய்வது குறித்த திட்டங்களை அறிவிக்கலாம், அவ்வாறான ஒரு கோணத்தில் இந்த நாளை மாற்றலாம். வானொலிகளில் வாழ்த்து தெரிவிக்கின்றது பற்றி எதுவும் விமர்சிக்க இல்லை. காரணம் ஏராளமான மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதை கண்டிருக்கின்றேன், அதில் வாழ்த்துவது என்பது தாயகத்தின் மீதான பற்றாக இருப்பதை காணலாம். ஆனால் வழ்த்துக்கு இடையிடையில் குத்தாட்டம் போடும் பாடல் ஒலிபரப்புவதும், வாழ்த்துக்கு அனுசரணை வழங்கும் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் எல்லாம் மக்களின் உணர்வுகளை செல்லாக் காசாக்கி விடுவதே வருடந் தோறும் நடந்து வருகின்றது. எழுச்சிக்குரிய தனித்துவம் சிதைக்கப்படுகின்றது முடிவில் கூத்தாகவே பார்வைக்கு தெரிகின்றது. இவைகள் தவிர்த்து தாய்நாட்டின் அவலங்களை வெளிப்படுத்தலாம். ஒரு நிகழ்வை எழுச்சியாக முன்னெடுப்பதும் கூத்தாக மாற்றுவதும் வழிநடத்துபவர்கள் கைகளிலேயே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சுகனுடைய கருத்தை வரவேற்கிறேன் .அதுவே எனது விருப்பமும்/.

சுகன், நிலாமதியக்கா!

நான் குறிப்பிட்டது ஊடகங்களையும் சேர்த்துத்தான். ஒரு ஊடகம் இவ்வாறான சந்தர்ப்பங்களைக் கொண்டாட்டங்களாக மாற்றும்போது மற்ற ஊடகங்களும் தாங்கள் தமிழ்த் தேசியத்தின் பால் நிற்கிறோம் என்பதைக் காட்ட அதனைப் பின்பற்ற ஆரம்பிக்கின்றன. இதில் தவறு எல்லோருடையதும்தான்.

இங்குள்ள ஊடகங்களில் இருக்கும் பலர் தமிழ்த்தேசியத்தின்பால் தங்களுக்குள்ள உண்மையான பற்றினால் பணிசெய்வதை விட்டுவிட்டு, தாங்கள் தேசியப்பற்றுள்ளவர்கள் என்று மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதைக் காணும்போது வேதனையாக இருக்கிறது,

மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றால் எம்மவர்களை வழிநடத்தும் ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும். ஊடகங்கள் எப்படி விளம்பரப்படுத்துகின்றதோ அதைப் பொறுத்து தான் ஏழுச்சியாக இருக்கப் போகின்றதா அல்லது கூத்தாக இருக்கப்போகின்றதா என்று தெரியும். இப்படியான நிகழ்வுகள் பலவருடங்களாக நடந்து வருகின்றது. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் பலவருடம் எழுச்சி நாள் என்று ஆரம்பித்து கூத்தில் முடிந்துள்ளது. இம்முறை பல முக்கிய பிரமுகர்கள் ஈழத்தில் நடக்கும் அவலத்தை குறித்து பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்த்துள்ள நிலையில் எமது ஊடகங்கள் கவனத்துடன் நடக்காவிடில் எமக்கு நாமே கரி பூசிக்கொள்வது நிச்சயம். இந்த நாளில் எதாவது நற்பணி செய்வது குறித்த திட்டங்களை அறிவிக்கலாம், அவ்வாறான ஒரு கோணத்தில் இந்த நாளை மாற்றலாம். வானொலிகளில் வாழ்த்து தெரிவிக்கின்றது பற்றி எதுவும் விமர்சிக்க இல்லை. காரணம் ஏராளமான மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதை கண்டிருக்கின்றேன், அதில் வாழ்த்துவது என்பது தாயகத்தின் மீதான பற்றாக இருப்பதை காணலாம். ஆனால் வழ்த்துக்கு இடையிடையில் குத்தாட்டம் போடும் பாடல் ஒலிபரப்புவதும், வாழ்த்துக்கு அனுசரணை வழங்கும் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் எல்லாம் மக்களின் உணர்வுகளை செல்லாக் காசாக்கி விடுவதே வருடந் தோறும் நடந்து வருகின்றது. எழுச்சிக்குரிய தனித்துவம் சிதைக்கப்படுகின்றது முடிவில் கூத்தாகவே பார்வைக்கு தெரிகின்றது. இவைகள் தவிர்த்து தாய்நாட்டின் அவலங்களை வெளிப்படுத்தலாம். ஒரு நிகழ்வை எழுச்சியாக முன்னெடுப்பதும் கூத்தாக மாற்றுவதும் வழிநடத்துபவர்கள் கைகளிலேயே உள்ளது.

Edited by கிருபா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசனின் கருத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறேன்!!!

:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.