Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெட்டுக்கால இப்பிடியும் செய்வாங்களா?

Featured Replies

வணக்கம்,

இண்டைக்கு இஞ்ச பத்திரிகையில ஒரு செய்தி பார்த்தன். அதிர்ச்சியாய் இருந்திச்சிது. அது என்ன எண்டால் அமெரிக்காவில இருக்கிற ஒரு பெண் நெட்டில செய்த ஒரு சேட்டை காரணமாக ஒரு பதின்மூண்டு வயசு சிறுமி தற்கொலை செய்து இறந்துவிட்டா.

நடந்த சம்பவம் என்ன எண்டால் ஒரு வயதுமுதிர்ந்த பெண் சும்மா பன்பலுக்கு மைஸ்பேஸ் தளத்தில ஒரு பதினைஞ்சு வயசு ஆண் பெயரில ஒரு உறுப்புரிமையை எடுத்து இருக்கிறா. பிறகு சம்மந்தப்பட்ட பதின்மூண்டு வயசு பெண்ணை பசப்பு காட்டி வசீகரம் செய்து இருக்கிறா. அந்தப்பிள்ளையிண்ட மனதில விசமத்தனமான முறையில ஆசையை ஏற்படுத்தி வளர்த்து இருக்கிறா. சும்மா சீண்டி விளையாடி அந்த சிறுமியிண்ட மனதை குழப்பி அடிச்சு இருக்கிறா. கடைசியில அந்தச்சிறுமி நிஜமாக இல்லாத ஒரு ஆணை மனதில நினைச்சுக்கொண்டு, அந்த கற்பனைப்பாத்திரம் இல்லாவிட்டால் தான் வாழ முடியாது எண்டு கவலைகொண்டு, கடைசியில இதன் உச்சக்கட்டமாக இடுப்பு பட்டியை கழுத்தில கட்டி தற்கொலை செய்துபோட்டா.

கடைசியில காவல்துறை மோப்பம் போட்டு குற்றவாளியை கண்டுபிடிச்சிட்டிது. இப்ப விசாரணை நடக்கிது. குறிப்பிட்ட அந்த கொலைகாரி பெண்ணுக்கு கடுமையான தண்டனை கிடைக்கலாம் எண்டு எதிர்பார்க்கப்படுகிது. என்ன கொடுமை இது? மற்றவனை பொழுதுபோகாவிட்டால் இப்பிடியும் யாரும் சீண்டி விளையாடுவாங்களா நெட்டுக்கால? இப்பிடி ஒருசிலர் செய்யுற சேட்டையால கடைசியில பாதிப்பு அப்பாவிகளுக்குத்தான். அன்புக்காக ஏங்கிறது எல்லாருக்கும் ஏற்படுகிற ஒரு இயல்பான நிலை. இந்த நிலையை வேணுமெண்டால் மனிசனில இருக்கிற ஒரு குறைபாடு அல்லது அடிப்படை தேவை எண்டு கூட சொல்லலாம்... ஆனால் இந்த நிலமையை பொழுதுபோகிறதுக்கு சேட்டை செய்து விளையாடுற ஆக்களை என்ன எண்டு சொல்லுறது?

நம்மவர்கள் சிலரும் இப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். தங்களுக்கும் இப்படியான பாதிப்பு வந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்தால் இப்படிச் செய்யமாட்டார்கள்.

அந்த பெண் இதை விளையாட்டாய் செய்யப்போய் இப்படி முடிந்திருக்கலாம். சிறுவர்கள் இணையத்தை பாவிக்கும்போது பெரியவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். இதற்கு என்ன சொல்ல?

இன்டர்நெட்டில் பல பேர் முன்னிலையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை

அமெரிக்காவில் மனமொடிந்த நிலையில் இருந்த இளம்வாலிபர் ஒருவர், இன்டர்நெட்டில் கேமராவை ஆன் செய்துவிட்டு பல பேர் முன்னிலையில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்துக்கொள்வதை பலர் ஊக்கப்படுத்தியதுதான் கொடூரம்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள புரூவார்டுவை சேர்ந்தவர் ஆப்ரகாம் கே பிக்ஸ் (19). மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

கடந்த 19ம் தேதி இவர், வீடியோ சாட் வசதி அளிக்கும் இன்டர்நெட் வெப்சைட்டில் தோன்றி உள்ளார். அப்போது, தான் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக, சாட்டிங்கில் இருந்த மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் சாட்டிங்கில் 1,500 பேர் வரை இருந்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சொல்லிக்கொண்டே தூக்க மாத்திரைகளை ஒவ்வொன்றாக விழுங்க ஆரம்பித்துள்ளார். அப்போது வீடியோ சாட்டில் வந்த சிலர், ‘‘தற்கொலை செய்து கொள்வது என்றால், ஒரேயடியாக 10, 15 மாத்திரைகளை விழுங்க வேண்டியது தானே? ஏன் ஒவ்வொரு மாத்திரைகளாக சாப்பிட்டு எங்களுடைய நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறாய்’’ என்று இரக்கமே இல்லாமல் கூறியுள்ளனர். ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட ஆப்ரகாம், சில நிமிடங்களில் தூங்கிவிட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் இன்டர்நெட்டில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதை பார்த்த ஒரு சிலர், அமெரிக்காவின் புரூவார்டு போலீசுக்கு இ-மெயில் அனுப்பி உள்ளனர்.

ஆப்ரகாம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, தன்னுடைய தற்கொலை குறித்து குறிப்பு ஒன்றை எழுதி அதை பல்வேறு இன்டர்நெட் வெப்சைட்களில் வலம் வரச் செய்துள்ளார். வீடியோ சாட்டிங்கிலும் இதை போட்டுள்ளார். இதன் மூலம் அவரது முகவரியை தெரிந்து கொண்ட புரூவார்டு போலீசார், அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போதும் வீடியோ சாட் கேமரா ஓடிக்கொண்டிருந்தது.

போலீசார் சென்று கேமராவை நிறுத்திவிட்டு ஆப்ரகாமை பார்த்தனர். ஆனால், அவர் அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருந்ததால் இறந்திருந்தார்.

dinakaran

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தொல்லைக்குத்தான் நான் சாட்டிங் போன்ற எதிலுமே ஈடுபடுவதில்லை. பல சமயங்களில் மன உளைச்சல் தான் மிஞ்சும்...! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சீண்டி விளையாடிய , பதினைந்து வயது சிறுமிக்கு மேற்குலகத்தில் பெரிதாக என்ன தண்டனை கிடைத்துவிடப் போகின்றது .

பிள்ளையை சரியாக கண்காணிக்காத பெற்றோருக்கு தான் , தண்டனை கொடுக்க வேண்டும் .

  • தொடங்கியவர்

நெட்டில நல்லவங்களும் இருக்கிறாங்கள். கெட்டவங்களும் இருக்கிறாங்கள். குறிப்பிட்ட அந்தப்பெண் விளையாட்டுத்தனமாக இப்படி செய்து இருக்கிறதாக எனக்கு தெரிய இல்லை. குரூர மனத்துடன் திட்டமிட்டு இப்படி செய்து இருக்கிறார். அதுக்கா நெட் கூடாதவிசயம் எண்டு சொல்லிறதுக்கு இல்லை. கடைசி அந்தச்சிறுமிக்கு கொஞ்சம் அறிவு இருந்து இருந்தால் குறிப்பிட்ட ஆணுடன் நேரடியாக கதைச்சு இருக்கலாம். இப்பத்தான் எல்லாம் வெப்காம்புகள் வச்சு இருக்கிறாங்களே. உண்மையில நிஜமாக ஒருத்தர் ஒரு இடத்தில இருக்கிறது உறுதிப்படுத்தப்படாமல் நெட்டுக்கால உறவுகளை வளர்க்கிறது எப்பவும் ஆபத்திலதான் முடியும். பலர் இணையத்துக்கால நல்ல உறவுகளை பெற்று இருக்கிறீனம். எனது இந்திய நண்பர் ஒருத்தர் மிகவும் திறமைசாலி. அவர் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறார். தான் தனது துணையை நெட்டுக்கால பெற்றதாக சொன்னார். ஆனாலும் ஒரு சிக்கல் நெட்டுக்கால அறிமுகம் ஆகிறவர்கள் எப்படியானவர்கள், எப்படிப்பட்ட குணம் உடையவர்கள் எண்டு ஆரம்பத்தில எங்களுக்கு தெரியவராது. தவிர புலான்ய்வு செய்தும் உறவுகளை நெட்டுக்கால கட்டி எழுப்ப முடியாது. இந்தவிதத்தில Risks ம் இருக்கிது. அதுக்காக எல்லாரும் கூடாதவர்கள் எண்டு சொல்லிறதுக்கு இல்லை. இப்ப மல்லிகைவாசம், வசி, டங்குவார், தமிழ்சிறீ, சஜீவன் மற்றும் என்னை மாதிரி நல்லவர்களும் இருக்கிறீனம். :wub:

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மல்லிகைவாசம், வசி, டங்குவார், தமிழ்சிறீ, சஜீவன் மற்றும் என்னை மாதிரி நல்லவர்களும் இருக்கிறீனம். :)

ஆ ........ முரளி ,

இப்படி சொல்லி , இப்ப நீங்கள் என்னை கொல்லிப் போட்டியளே ............... :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெட்டில நல்லவங்களும் இருக்கிறாங்கள். கெட்டவங்களும் இருக்கிறாங்கள். குறிப்பிட்ட அந்தப்பெண் விளையாட்டுத்தனமாக இப்படி செய்து இருக்கிறதாக எனக்கு தெரிய இல்லை. குரூர மனத்துடன் திட்டமிட்டு இப்படி செய்து இருக்கிறார். அதுக்கா நெட் கூடாதவிசயம் எண்டு சொல்லிறதுக்கு இல்லை. கடைசி அந்தச்சிறுமிக்கு கொஞ்சம் அறிவு இருந்து இருந்தால் குறிப்பிட்ட ஆணுடன் நேரடியாக கதைச்சு இருக்கலாம். இப்பத்தான் எல்லாம் வெப்காம்புகள் வச்சு இருக்கிறாங்களே. உண்மையில நிஜமாக ஒருத்தர் ஒரு இடத்தில இருக்கிறது உறுதிப்படுத்தப்படாமல் நெட்டுக்கால உறவுகளை வளர்க்கிறது எப்பவும் ஆபத்திலதான் முடியும். பலர் இணையத்துக்கால நல்ல உறவுகளை பெற்று இருக்கிறீனம். எனது இந்திய நண்பர் ஒருத்தர் மிகவும் திறமைசாலி. அவர் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறார். தான் தனது துணையை நெட்டுக்கால பெற்றதாக சொன்னார். ஆனாலும் ஒரு சிக்கல் நெட்டுக்கால அறிமுகம் ஆகிறவர்கள் எப்படியானவர்கள், எப்படிப்பட்ட குணம் உடையவர்கள் எண்டு ஆரம்பத்தில எங்களுக்கு தெரியவராது. தவிர புலான்ய்வு செய்தும் உறவுகளை நெட்டுக்கால கட்டி எழுப்ப முடியாது. இந்தவிதத்தில Risks ம் இருக்கிது. அதுக்காக எல்லாரும் கூடாதவர்கள் எண்டு சொல்லிறதுக்கு இல்லை. இப்ப மல்லிகைவாசம், வசி, டங்குவார், தமிழ்சிறீ, சஜீவன் மற்றும் என்னை மாதிரி நல்லவர்களும் இருக்கிறீனம். :wub:

பரவாயில்ல நல்ல முயற்சி தொடநுங்கள் முரளி மற்றும் அனைவரும் இன்னும் கொஞ்ச நாளாள கானாமல் போகப்போறியல் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா சீண்டி விளையாடிய , பதினைந்து வயது சிறுமிக்கு மேற்குலகத்தில் பெரிதாக என்ன தண்டனை கிடைத்துவிடப் போகின்றது .

பிள்ளையை சரியாக கண்காணிக்காத பெற்றோருக்கு தான் , தண்டனை கொடுக்க வேண்டும் .

ரொம்ப சரி தமிழ்சிறி

இப்ப எங்கபார்த்தாலம் சின்னப்புள்ளைகள் கொம்பியுட்டா் இல்லாமல் இருக்கிறினம் இல்ல ஏன் எங்கட ஆக்கள் தான் மோசம் கடகடஎன்டு சத்தம் மட்டும் தான் கேட்குது

பெற்றோர் கேட்டா நல்ல ஒரு சாட்டு படிப்பு மம்மி ஆனா பிள்ளை ஏதோ செய்யுது பெற்றோர் வேலை வீடு அவ்வளவு தான் கவனிப்பு என்பது மிகக் குறைவு கொம்பியுட்டா் அவசியம் தான் அதை பொதுவான ஒரு இடத்தில வைக்க வேண்டும் அதக்கொண்டு போய் பிள்ளையோட அறை மூலையிக்க வைச்சா அது வசதிதான

அத விட பிள்ளை என்ன செய்யுது என்ன படிக்குது என்பதை ஒவ்வொரு நாளும் கவனிக்க வேண்டும் பிள்ளை ஓரளவு வளருமட்டும் இதைச்செய்தால் இப்படிப்பட்ட கொலைகளையும் பிள்ளைகள் கூடாதவழி செல்வதை தடுக்கவுவும் முடியும் என்பது என்கருத்து

  • தொடங்கியவர்

அமெரிக்க கலாச்சாரம் வித்தியாசமானது. பிள்ளைகள் பதின்மூண்டு வயசில பருவத்துக்கு வந்த கையோடையே நடைமுறை உறவுகளை தேடி பயணம் தொடங்கீடுவீனம். வீட்டுக்க கண்காணிச்சாலும் வெளியில நடக்கிறதுக்கு ஒண்டும் செய்ய ஏலாது. உங்களுக்கு எத்தின பேருக்கு தெரியுமோ தெரியாது... பள்ளிக்கூடங்களில இலவச condoms களை மலசலகூடங்களில வைத்து இருக்கிறீனம். ஏதாவது எக்கச்சக்கமாக நடக்கேக்க பிள்ளைகள் பாதுகாப்பான முறையில தங்கட தாகங்களை தீர்க்கிறதுக்கு.

எனக்கு கனடாவுக்கு வந்த புதிசில இந்தச்செய்தியை கேட்க ஆரம்பத்தில அதிர்ச்சியாத்தான் இருந்திச்சிது. ஆனால் அவர்களிண்ட கலாச்சாரம் அப்பிடி. இஞ்ச கவனிக்க வேணும் என்ன எண்டால் பிள்ளைகளை வெருட்டி வைக்கிறதில பிரயோசனம் இல்லை. ஆனால் பதிலாக, பிள்ளைகளோட அம்மா, அப்பா சினேகபூர்வமாக உரையாட வேணும். பிள்ளைகள் வாய் திறந்து சொல்லாவிட்டாலும் அவர்களின் மனதில இருக்கிறதை கண்டறிய முயற்சிக்க வேணும். அவர்களோட தினமும் உரையாடி அவர்களிண்ட பிரச்சனைகளை கண்டறிய வேணும்.

எங்கட ஆக்களே பிள்ளைகளை இந்தக்காலத்தில கண்டுகொள்ளுறது இல்லை. ஒண்டில் அளவுக்கு மிஞ்சிய வெருட்டல்.. இல்லாட்டிக்கு அளவுக்கு மிஞ்சிய செல்லம். என்னத்தையாவது செய் எண்டு விடுறது. நிலமை இப்பிடி இருக்கேக்க அமெரிக்க குடும்பத்தில பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில எப்படியான தகவல் பரிமாற்றம், உரையாடல் இடம்பெறுகிது எண்டு யாருக்கு தெரியும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில ஒரு புரிந்துணர்வு understanding இருக்க வேணும். அப்பத்தான் பெற்றோரும் முன்னேற முடியும். பிள்ளைகளும் முன்னேற முடியும்.

ஆனால் அண்மையில ஒரு பகிடி பார்த்து இருந்தன். அதில தாய் மகளிண்ட அறையுக்க வருவா புருசனோட. அப்ப மகள் ஒரு பெடியனோட சும்மா கதைச்சுக்கொண்டு இருப்பா. அப்ப தாயக்கண்டு மகள் அம்மா எண்டு கூப்பிடுவா. அதுக்கு தாய் என்ன சொல்லுவா எண்டால் என்னை அம்மா எண்டு கூப்பிடாதை.. மிசஸ். எண்டு அவவிண்ட முழுப்பெயரை சொல்லி கூப்பிடட்டாம். இதுமாதிரி தகப்பனையும் மிஸ்டர் எண்டு அவரிண்ட முழுப்பெயரையும் சொல்லி கூப்பிடட்டாம். இது பகிடி நிகழ்ச்சி எண்டாலும், ஒரு குடும்பத்தில இப்படியான ஓட்டத்தில நிகழ்வுகள் நடக்கிறதை காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

செற் டையே வெறுக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் தொல்லைக்குத்தான் நான் சாட்டிங் போன்ற எதிலுமே ஈடுபடுவதில்லை. பல சமயங்களில் மன உளைச்சல் தான் மிஞ்சும்...! :wub:

முதலில் முரளியின்ற தலைப்பைப்பார்த்ததும் 'மரங்களில் "நெட்டு" பற்றித்தான் கதைக்கிறார் எண்டு. படித்து முடித்ததும் அடக் கடவுளே! என்றிருந்தது.

உண்மையில் அரட்டைகளே வீண்தான். உதுகளில போய் அழியுறதுகள் பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை நெடுக்கும் இந்த சாட்டில் மாட்டுப்பட்டிருப்பாரோ :):wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவேளை நெடுக்கும் இந்த சாட்டில் மாட்டுப்பட்டிருப்பாரோ :):wub:

சேச்சே!! எங்கட "நெடுக்ஸ் அண்ணையோ.....இருக்காது :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தம்பி மாப்பு? நானும் பந்தாவுக்கு கொம்பியூட்டருக்கு மேலை ஒரு கமரா பூட்டியிருக்கிறன்

இதாலை ஏதும் வில்லங்கம் வருமோ? :lol:

நான் ஒரு நாளும் கொம்பியூட்டருக்கு முன்னாலை நிண்டு உடுப்பு மாத்திறேல்லை :lol:

  • தொடங்கியவர்

வெப் காம்ப் மூலம் நல்ல பல விசயங்கள் செய்யலாம். நாங்கள் எண்ட அக்காமாரோட, மருமக்களோட அதுக்கால பார்த்து கதைக்கிறது எம்.எஸ்.என் மெசஞ்சருக்கால. இதால செலவும் இல்லை. அத்தோட நேரா முகத்தை பார்த்து கதைக்க எல்லாரும் ஒரே வீட்டில இருக்கிற மாதிரியான உணர்வும் கிடைக்கும். நாங்கள் மருமகளிண்ட சாமத்தியவீட்டுக்கு கனடாவில இருந்துதான் எல்லாருக்கும் புடவை, மிச்சம் உடுப்புக்கள் வாங்கிக்கொண்டு போனது. வாங்கின சாமான்களை அவையளிட்ட கமராவுக்கால காட்டி எல்லாம் சரியோ எண்டு சரிபார்க்க முடிஞ்சிது. வீட்டில இருக்கிற அறை, சாமான்கள் எண்டு அதுகளை வெப்காம்புக்கால இப்பிடி உறவினர்களோட பகிர்ந்து கொள்ளலாம். இப்பிடி நல்ல விசயங்கள் இருக்கிது. ஆனால் முன்பின் தெரியாத ஆக்களோட இந்த விளையாட்டுக்கள் காட்டினால் ஆபத்து. எண்டாலும் இப்ப பலரும் வெளிப்படையாக வெப்காம்புக்கால கதைக்க வெளிக்கிட்டீனம் முன்பின் தெரியாத ஆக்களோடையும். ஒரு விதத்தில இப்படி வெப்காம்ப் மூலம் தொடர்பு கொள்ளிறது மூலம் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். இதன் மூலம் நேரடியாக ஒருவரை தொடர்புகொள்ள முடியுறதால அவர் ஏதாவது பொய் சொல்லிறாரோ எண்டு எல்லாம் இலகுவாக கண்டுபிடிச்சு விடலாம்.

என்ன தான் பெரிசாய் இருக்கப் போகுது ,

பாக்கிற ஆக்களுக்கு தான் வில்லங்கம் . :lol:

நெட் சாட்டிங் எனது அன்றாட வாழ்வின் ஒரு முக்கிய நிகழ்வு. ஆயிரக் கணக்கான கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் என் நண்பர்/நண்பிகளுடனும், உறவுகளுடனும் தொடர்சியாக தொடர்பை பேண மிகுந்த உதவிகரமாக இருக்கும் ஒரு சிறந்த தொழில்நுடபம். முகம் பார்த்து கதைக்கும் போது அருகில் இருந்து உறவாடும் உணர்வு வரும்.

ஆனால், இதனை எத்தனை பேர் நல்ல விடயங்களுக்கு உபயோகிக்கின்றனரோ அதே அளவுக்கு தவறாக பயன்படுத்தும் நபர்களும் உள்ளனர். அண்மைய காலங்களில் பாலுறவு ஒளிப்படங்களில் 'வெப் கம்' முன்பாக நிகழ்த்தும் ஏராளமான ஒளித்தொகுப்புகள் வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது. அதுவும் இந்தியா போன்ற ஓரளவிற்கேனும் பெற்றோர்களின் கட்டுப்பாடுகள் உடைய சமூகத்திலேயே இத்தகைய நேரடி அல்லது பதிவு செய்யப்பட்ட ஒளிப்படங்கள் தினம்தோறும் புதிது புதிதாக வருகின்றன. காலப்போக்கில் இவை பெரும் சமூக நோயாக மாறும் நிலை இருக்கின்றது.

வீட்டினில், அலுவலங்களில் இத்தகைய விடயங்கள் இடம்பெறுகின்றனவா என்பதனை அவதானிக்கவும், அதனை பெற்றோர்களுக்கு அல்லது அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரவும் ஏராளமான மென்பொருள்கள் உள்ளன (parental control software) அதனை வாங்கி கணணியில் நிறுவவது (install) ஓரளவிற்கேனும் பயன் தரும்

  • கருத்துக்கள உறவுகள்

வெப் காம் தொழிற்படும் போது அதில் சமிக்ச்சை விளக்கு எரியும் தானே .....

அவதானமாக இருந்தால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெப் காம்ப் மூலம் நல்ல பல விசயங்கள் செய்யலாம். நாங்கள் எண்ட அக்காமாரோட, மருமக்களோட அதுக்கால பார்த்து கதைக்கிறது எம்.எஸ்.என் மெசஞ்சருக்கால. இதால செலவும் இல்லை. அத்தோட நேரா முகத்தை பார்த்து கதைக்க எல்லாரும் ஒரே வீட்டில இருக்கிற மாதிரியான உணர்வும் கிடைக்கும். நாங்கள் மருமகளிண்ட சாமத்தியவீட்டுக்கு கனடாவில இருந்துதான் எல்லாருக்கும் புடவை, மிச்சம் உடுப்புக்கள் வாங்கிக்கொண்டு போனது. வாங்கின சாமான்களை அவையளிட்ட கமராவுக்கால காட்டி எல்லாம் சரியோ எண்டு சரிபார்க்க முடிஞ்சிது. வீட்டில இருக்கிற அறை, சாமான்கள் எண்டு அதுகளை வெப்காம்புக்கால இப்பிடி உறவினர்களோட பகிர்ந்து கொள்ளலாம். இப்பிடி நல்ல விசயங்கள் இருக்கிது. ஆனால் முன்பின் தெரியாத ஆக்களோட இந்த விளையாட்டுக்கள் காட்டினால் ஆபத்து. எண்டாலும் இப்ப பலரும் வெளிப்படையாக வெப்காம்புக்கால கதைக்க வெளிக்கிட்டீனம் முன்பின் தெரியாத ஆக்களோடையும். ஒரு விதத்தில இப்படி வெப்காம்ப் மூலம் தொடர்பு கொள்ளிறது மூலம் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். இதன் மூலம் நேரடியாக ஒருவரை தொடர்புகொள்ள முடியுறதால அவர் ஏதாவது பொய் சொல்லிறாரோ எண்டு எல்லாம் இலகுவாக கண்டுபிடிச்சு விடலாம்.

சரியா சொன்னீங்கள்....

வெப்கம் நிறைய வழியில பயன்படுது. இப்ப எல்லாம் skype ல ஒரு conference போட்டுட்டு ஊரில உள்ள எல்லாரையும் இழுத்துப் போட்டு கதைச்சா அந்த காலத்தில காழுவன் சந்தியில இருந்து கதைச்ச மாதிரி ஒரு எண்ணம் வரும்.

என்ன தம்பி மாப்பு? நானும் பந்தாவுக்கு கொம்பியூட்டருக்கு மேலை ஒரு கமரா பூட்டியிருக்கிறன்

இதாலை ஏதும் வில்லங்கம் வருமோ? :)

நான் ஒரு நாளும் கொம்பியூட்டருக்கு முன்னாலை நிண்டு உடுப்பு மாத்திறேல்லை :)

அது மட்டும் இல்ல...

இப்ப வெப்கம் வெளியில இருந்தும் இயக்கலாம் (remote access) அதனால பாத்து கு.சா. நீங்கள் நினைப்பியள் வெப்கம் போடேல்ல எண்டு. ஆனா பக்கத்து வீட்டுகாரன்/காரி உங்களை பாத்துகொண்டிருப்பான்/ள் :P

வெப் காம் தொழிற்படும் போது அதில் சமிக்ச்சை விளக்கு எரியும் தானே .....

அவதானமாக இருந்தால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை .

இப்ப சமிஞ்சை விளக்கு இல்லாமலும் வெப்கம் வருகுது...!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.