Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுந்தகவல் - தத்துவங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாலையில் மரணமென்று தெரிந்தும்

காலையில் அழுவதில்லை மலர்கள்.

நீ மட்டும் சோகங்களை நினைத்து

வாடுவதா அழகு?

  • Replies 51
  • Views 24.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது

ஊமையாய் இரு.

புகழ்ந்து பேசும் போது

செவிடனாய் இரு.

எளிதில் வெற்றி பெறலாம்.

எங்கே சுட்டது என்று எழுதினாலும் நன்றாக இருக்கும் நண்பரே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே சுட்டது என்று எழுதினாலும் நன்றாக இருக்கும் நண்பரே

ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது

ஊமையாய் இரு. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது

ஊமையாய் இரு. :D

ஒருவர் உன்னைத் உயர்த்திப் பேசும் போது

விழிப்போடு இரு.

இதுவும் மிகச் சரியானதே. தற்போதைய கால மனிதர்களை எதிர்கொள்வதற்கு..! :D

உண்மைகள் சிலவேளை உறைக்கும்

இதுவும் சுட்டதுதான்.

ஏன் கோபப்படுகின்றீர்கள் நண்பரே இதை யார் எழுதியது என்று கூறினால் நன்றாக இருக்குமே. காரணம் களத்தில் தற்போது சுட்ட பழங்கள்தான் அதிகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் உன்னைத் உயர்த்திப் பேசும் போது

விழிப்போடு இரு.

இதுவும் மிகச் சரியானதே. தற்போதைய கால மனிதர்களை எதிர்கொள்வதற்கு..! :D

"நெடுக்ஸ்" அண்ணை 'விழிப்போட இருக்கிறவையாலதான் 'ஊமையாயும் அந்தக்கணத்தில் இருக்கலாம்"...

அதுதான் அந்த வார்த்தைக்குள் பொதிந்து கிடக்கும் அர்த்தம்.

உண்மைகள் சிலவேளை உறைக்கும்<<<

உண்மை எப்போதும் பொய்யானவர்களைச்சுடும்"...

இதுவும் சுட்டதுதான்.

ஏன் கோபப்படுகின்றீர்கள் நண்பரே இதை யார் எழுதியது என்று கூறினால் நன்றாக இருக்குமே. காரணம் களத்தில் தற்போது சுட்ட பழங்கள்தான் அதிகம்

** நான் தான் எழுதினேன் என்று மறைமுகமாகச்சுட்டிக்காட்டுக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது- டக்ளஸ் ஹட்

மன்னிக்கவும் நண்பரே நீங்கள் எழுதியதாயின் குறிப்பிட்டுவிடுங்கள் இல்லாவிட்டால் சுட்டு விடுவார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும் நண்பரே நீங்கள் எழுதியதாயின் குறிப்பிட்டுவிடுங்கள் இல்லாவிட்டால் சுட்டு விடுவார்கள்

சுடுபவர்கள் சுடட்டுக்கும் நான் சிலவற்றை சுட்டு போடுகிறேன் சிலவற்றை ஈமெயிலில் வருவதை போடுகிறேன் இதனால் பயனடைபவர்கள் பயனடையட்டும் வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு உந்துதலாய் அமையட்டும் இன்னும் பலவற்றை இனைக்கிறேன் பயனடைபவர்கள் பயனடையட்டும்

கம்பளி இருந்தும்

சளியுடன் தும்மும்

செம்மறியாடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;

ஆனால் அனுபவமோ

தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.

- பில் கேட்ஸ்

ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.

ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டாலும் சூடாக இருக்கிறது :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் நம்மை மெளனமாக்குகின்றன.- பிரான்ஸ்

*பிரார்த்தனையின் முதல் திறவுகோல் சுத்தமாக இருத்தல். - அரேபியா

*உலகில் இருவகை குடும்பத்தினரே இருக்கின்றனர். அவர்கள் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள். - போலந்து.

*மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே! - கிரீஸ்

*நியாயம், நேர்மை உங்கள் செயல்பாடுகளில் வெளிப்பட மரணத்தின் நினைவோடு வாழ்ந்து வாருங்கள். - லத்தீன்

பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல் நடத்தையால் தொடரும் உறவுகளே உன்னதமானவை

(எங்கேயோ வாசித்தது)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்

- காந்தியடிகள்

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.

- ஓர் அனுபவசாலி

இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். - அரவிந்தர்

கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பொ¢தும் நாசப்படுத்தி விடும்

- கிளெண்டல்

என்றாவது நான் ஆசி¡¢யரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும் - டொரோதி தெலூஸி

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை - எமர்சன்

மனிதனின் வாழ்க்கை பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் - வா¡¢யார் சுவாமிகள்

உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள் - ஜேம்ஸ் ஆலன்.

இறைவனின் தா¢சனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும். - சுவாமி ராமதாஸ்.

நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள் - ஓர் அறிஞர்

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்

- மு.வ.

நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.

- ஜான்ஸன்

ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.

- வில்லியம் ஹாஸ்விட்

ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது. - ஷாம்பர்ட்

நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும் - அரவிந்தர்

உலகம் எவ்வளவு பொ¢யதோ, அவ்வளவு பொ¢யதாக உங்கள் இதயத்தை வி¡¢வாக்குங்கள் - சுவாமி விவேகானந்தர்

உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது

- எமர்சன்

கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.

- பிளேட்டோ

காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். - ஷேக்ஸ்பியர்

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம் - காந்திஜி

அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான் - யாரோ

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும் - மா¡¢யோ போஜியோ

துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான் - ஹென்றி லீவ்ஸ்

கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன் - ராபர்ட் பிராஸ்ட்

நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன.

(சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)

ஒருவர் இருந்தால் ஆனந்தம்; இருவர் என்றால் சுகம்; மூவர் இருந்தால் அபிப்பிராய பேதம், வம்பு; நால்வர் என்றால் சண்டை தவத்திற்கு ஒருவர்; தமிழுக்கு-உரையாடலுக்கு இருவர்; வம்புக்கு மூவர், சண்டைக்கு நால்வர்.

'ஏக் நிரஞ்சன், தோ சுகீ, தீன் கட்பட், சார் லட்பட்' என்று இந்தியில் ஒரு பொன்மொழி இருக்கிறது. ஏகாந்தமாய் இருப்பதே இன்பத்தை அடைய வழி.-

(ஸ்ரீ ஞானனானந்தகி¡¢ சுவாமிகள்)

நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.

(ஷேக்ஸ்பியர்)

உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள்-

(லாங்·பெல்லோ)

பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது

(அ¡¢ஸ்டாட்டில்)

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே

(அனுபவ வாக்கு)

மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான்.

(ஜார்ஜ் பெர்னார்டு ஷா)

எல்லோரும் ஒரே மாதி¡¢யாகச் சிந்திக்கும்போது, ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை

(விட்மன்)

சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது.

(டிபியன் போர்ட்)

உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்

(ஷில்லாவகில்)

தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து; அதற்காக பாடுபடு

(ஓர் அறிஞர்)

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல

(வின்ஸ்ட்டன் சர்ச்சில்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்கள் பற்றி சில பொன்மொழிகள்.

கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ

மற்றவரை நம்புகின்றன.

-ஜெர்மன் பழமொழி

உனது கண் உனக்கு குற்றமிழைத்தால் அதைப் பிடுங்கி

விட்டெறி: இரண்டு கண்களோடு நரகத்தில் வீசி

எறியப்படுவதைக் காட்டிலும், ஒற்றைக்கண்ணோடு

வாழ்வில் பிரவேசிப்பதே நலம்.

-சார்வாண்டிஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது

ஊமையாய் இரு.

புகழ்ந்து பேசும் போது

செவிடனாய் இரு.

எளிதில் வெற்றி பெறலாம்.

இது நல்லா இருக்கு... :) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தான் மட்டுமே ஒளிர்ந்து உருகும்

மெழுகுதிரியை விட....

இன்னொன்றை ஏற்றிவைக்கும்

மெழுகுதிரி உயர்ந்தது....!

இரு வலிகள்: விடாமுயற்சி செய்யும் போது ஏற்படும் வலி ஒன்று. (முயற்சி செய்யவில்லையே என்று) வருத்தப்படுவதன் வலி இன்னொன்று.

முயற்சி செய்யவில்லையே என்று வருத்தப்படுவதன் வலி யானது, விடாமுயற்சி செய்யும் போது ஏற்படும் வலியை விட வேதனையானது.

(அறிஞர் ஒருவரின் சிந்தனையிலிருந்து)

Edited by Mallikai Vaasam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே, உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்

சிந்தனைக்கு விருந்தாகும் கருத்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி புஷ்பாவிஜி :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உனது கண் உனக்கு குற்றமிழைத்தால் அதைப் பிடுங்கி

விட்டெறி: இரண்டு கண்களோடு நரகத்தில் வீசி

எறியப்படுவதைக் காட்டிலும், ஒற்றைக்கண்ணோடு

வாழ்வில் பிரவேசிப்பதே நலம்.

-சார்வாண்டிஸ்

இதைச் சொன்னது இயேசு கிறிஸ்து, சார்வாண்டிஸ் அல்ல. (மூலம் - பைபிள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைச் சொன்னது இயேசு கிறிஸ்து, சார்வாண்டிஸ் அல்ல. (மூலம் - பைபிள்)

மத்தேயு 5:29 உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

நண்பரே இயேசுவும் சொன்னதுதான் சார்வாண்டிஸ் என்பவரும் இதைத்தான் சொன்னார்

Edited by புஸ்பாவிஜி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்தேயு 7:5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெரேமி டெய்லர்.

*துயரம் தலையை நரைக்கச் செய்யும். அதே சமயம் இதயத்தை வலிமையாக்கும்.- ஜார்ஜ் பெய்ஷி.

*அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியினால்தான். - ஓவிட்.

*அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். - சாலமன்.

*தோல்வி குற்றம் காது. உயர்வற்ற லட்சியமே ஒரு குற்றமாகும். - ஜேம்ஸ்ரசல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.