Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபிசேகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருவிளையாடல் நகேஷ் பாணியில் சொன்னால் கதை என்னுடையது தான், என்னுடையது தான், என்னுடையது தான் ஐயா

அய்.... இது பொய்தானே. கதை நல்லாயிருக்கு சத்தியமாய் சொல்லுங்கோ நீங்கள் தானா எழுதினது..... :D

அப்பாடா ஒரு மாதிரி குளப்பியாச்சு இனி நிம்மதி ..அப்ப நான் போட்டுவாறன். :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம்.

மணிவாசகனுக்கு எனது பாராட்டுகள்.

கதை மிகவும் கவனமாக ஆரம்பித்து அடுத்து என்ன நிகழப்போகின்றதோ என்றபடி படித்துக்கொண்டிருந்தபோது பால் போத்தல் உடைந்ததும் முடிந்துவிட்டதைப் படித்தபோது அட! அதற்கிடையில் கதை முடிந்துவிட்டதா? என்றே எண்ணத் தோன்றியது. இன்னும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

எந்தவொரு பக்கத்தைப் படித்தாலும் எழுதுபவர்கள் கருப்பொருளைப் பற்றிக் கருத்தெழுதுவதில் தொடங்கி எங்கெல்லாமோ கால் வைத்துச்செல்லுவதைப் படிக்கும்போது சற்றுக் கவலையாக இருக்கிறது. பொருத்தமான தலையங்கத்தைத் தெரிந்து அதற்கெனக் குறிக்கப்பட்ட வரையறைக்குள் நின்று கருத்தெழுனால் பலரும் படித்துப் பயனடைவார்கள் எனபது எனது தாழ்மையான கருத்து.

வேறு சில பக்கங்களில் சிறுபிள்ளைத்தனமாக ஒரு சிலர் கருத்தெழுவதை படிக்கின்றபோது சிறிது வெறுப்பாகவும் இருக்கின்றது என்பதனை எழுதாமலும் இருக்க முடியவில்லை.

யாரும் கோபிக்கவேண்டாம்.

  • தொடங்கியவர்

அய்.... இது பொய்தானே. கதை நல்லாயிருக்கு சத்தியமாய் சொல்லுங்கோ நீங்கள் தானா எழுதினது..... :)

அப்பாடா ஒரு மாதிரி குளப்பியாச்சு இனி நிம்மதி ..அப்ப நான் போட்டுவாறன். :):lol:

வணக்கம் சாத்திரி!

உங்களுடைய பதிலைப் பார்த்ததும் எனக்கு பயை சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.

நான் கதை எழுதத் தொடங்கிய ஆரம்பத்தில் ஒரு கதை எழுதி முடித்ததும் என் நண்பர்களிடம் கொடுத்து வாசிக்கும் படி ஆக்கினைப் படுத்துவேன். அதனால் காகிதங்களுடன் என்னைக் கண்டால் நண்பர்கள் வந்திட்டான் எழுத்தாளன் என்று சொல்லி ஓடி மறைவார்கள். ஒரு நாள் ஒரு நண்பன் மட்டும் கதையை வாசித்து வாசித்து நல்லா இருக்கு அண்ணா நல்லா இருக்கு அண்ணா என்று சொல்லி வாசித்தான். வாசித்து முடிந்ததும் கேட்டானே ஒரு கேள்வி

'எங்கையண்ணா பாத்து எழுதினனீங்கள்'

அனைவருக்கும் வணக்கம்.

மணிவாசகனுக்கு எனது பாராட்டுகள்.

கதை மிகவும் கவனமாக ஆரம்பித்து அடுத்து என்ன நிகழப்போகின்றதோ என்றபடி படித்துக்கொண்டிருந்தபோது பால் போத்தல் உடைந்ததும் முடிந்துவிட்டதைப் படித்தபோது அட! அதற்கிடையில் கதை முடிந்துவிட்டதா? என்றே எண்ணத் தோன்றியது. இன்னும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

எந்தவொரு பக்கத்தைப் படித்தாலும் எழுதுபவர்கள் கருப்பொருளைப் பற்றிக் கருத்தெழுதுவதில் தொடங்கி எங்கெல்லாமோ கால் வைத்துச்செல்லுவதைப் படிக்கும்போது சற்றுக் கவலையாக இருக்கிறது. பொருத்தமான தலையங்கத்தைத் தெரிந்து அதற்கெனக் குறிக்கப்பட்ட வரையறைக்குள் நின்று கருத்தெழுனால் பலரும் படித்துப் பயனடைவார்கள் எனபது எனது தாழ்மையான கருத்து.

வேறு சில பக்கங்களில் சிறுபிள்ளைத்தனமாக ஒரு சிலர் கருத்தெழுவதை படிக்கின்றபோது சிறிது வெறுப்பாகவும் இருக்கின்றது என்பதனை எழுதாமலும் இருக்க முடியவில்லை.

யாரும் கோபிக்கவேண்டாம்.

வணக்கம் செல்லமுத்து அண்ணா!

நீண்ட நாட்களுக்குப் பின்னர் களத்திலே சந்தித்ததில் மகிழ்ச்சி

பாராட்டுக்களுக்கு நன்றி

நீங்கள் கூறியது போல கருவையே சுற்றிச் செல்லாமல் கதை ஆங்காங்கே அலை பாய்ந்து விடுகிறது. உண்மைதான். சுட்டிக் காட்டியதற்கு மிகவும் நன்றி.

எதிர்வரும் கதைகளிலே திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.

  • தொடங்கியவர்

:)என்ன இங்கே நக்கீரன் யாரும் இல்லை என்ற துணிச்சலா?? :lol:

முதலில் மணிவாசகனின் படைப்பிற்கு வாழ்த்துக்கள். ஆத்துக்காரியையும் சுகம் கேட்டதாகச் சொல்லுங்கள்.

சோழியானின் கருத்துக்களோடு நானும் ஒத்துப் போகின்றேன். பொதுவாகவே இந்த மூட நம்பிக்கைகள் என்பது எல்லாமதங்களிலும் இருக்கின்றது. இதை மூட நம்பிக்கைகள் என்பதை விட சில பக்தர்களின் அதீத நம்பிக்கைகள் என்று கூறுவதே சாலப் பொருந்தும். இந்து மதம் என்பதால் எவரும் இலகுவில் விமர்சிக்க முடிகின்றது. ஆனால் ஏனைய மதங்களை இப்படி எம்மால் விமர்சிக்க முடியுமா??

மணிவாசகன் கூறுவது போல் இந்தச் சடங்குகள் எல்லாம் சிலரால் தமது பிழைப்பிற்காக இடையில் ஏற்படுத்தப் பட்டவை தான். இவற்றைப் பற்றி நாம் வாதப் பிரதி வாதங்கள் பொதுவான தளங்களில் செய்வதால் நாமே நமது மதத்தை இழிவு படுத்துவது போல் ஆகிவிடும். அதைவிடுத்து எமது மதத்தில் தேவையில்லாத சடங்குகளை நாம் ஒவ்வொருவரும் சுயமாக முன்வந்து தவிர்த்துக் கொண்டு வருவோமாயின் எதிர்காலத்தில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்தேயாகும். மாற்றங்கள் முழுவதுமாக வர சில காலங்கள் எடுக்கலாம். ஆனால் வருகின்ற மாற்றங்கள் உறுதியானதாக இருக்கும்.

கருத்துக்களுக்கு முதலிலே எனது நன்றி

உண்மையிலே நான் நாத்திகவாதி அல்ல. சைவ சமயத்தின் அன்பே சிவம் என்ற கோட்பாட்டிலும் ஆழ்ந்த பற்றுக் கொண்டவன்.

ஆனால் இத்தகைய இடைச்செருகல்களால் சைம சமயத் தரந்தாழ்ந்து போகும் போது (மன்னிக்கவும்; தரந் தாழ்த்தப்படும் போது) மனதிற்குள் புளுங்கிக் கொள்கிறேன்.

அதிலும் படித்தவர்கள் கூட இந்தப் பாழ் பட்ட பழக்கங்களை சைவத்தின் கொள்ளைகள் கோட்பாடுகள் என்று நம்பிப் பாழ்படுத்தும் போது கவலையாக இருக்கிறது.

வணிக மயப்படுத்தப்பட்ட ஆலயங்களால் யாருக்கு என்ன பயன்?

நான் இங்கிலாந்திலே வசித்த போது சில ஆலயங்கள் தாயகத்துக்காக பல நல்ல திட்டங்களைச் செய்து கொண்டு வந்தார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு ஆலயத்தின் மூலம் நூற்றிற்கு மேற்பட்ட அநாதைச் சிறுவர்க்ள தத்தெடுக்கப்பட்டு வளர்க்கபட்டார்கள். மாதா மாதம் பல நல்ல திட்டங்களுக்கு ஆலயத்திலிருந்து பணம் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் ஒரு சிலர் ஆலயத்திற்கென்று சொத்துச் சேர்க்காது எல்லாப் பணத்தையும் தாயகம் அனுப்புகிறார்கள் என்று கொதித்தெழுந்து நிர்வாகத்தை மாற்றியமைத்து இப்போது அம்மனுக்குச் சொத்துக் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். இது வருந்தத்தக்க விடயமல்லவா? இவை போன்ற விடயங்களை எனது நண்பர்களாகிய உங்களுடன் பகிர்நது கொள்ளாமல் யாருடன் பகிர்ந்து கொள்வது?

  • தொடங்கியவர்

இத்தகைய விடயங்கள் தனிநபரால் சீரமைக்கப்படக் கூடிய விடயங்களே அல்ல. ஏனெனில் இவற்றின் வேர்கள் மிக ஆழமானவை. இவற்றை சீரமைக்கிறோம் என முனைந்தால், அங்கே இலகுவாகத் தூன்றுபவை புதுப்புது பிரிவுகளும் முரண்பாடுகளும்தான். அதுவே தமிழின ஒற்றுமையைக் குலைக்கும் இன்னொரு காரணியாகவும் உருவாகும். அதனால்தான் நான் இன்றைய தேவை எமக்கான தாயகத்துக்கான பயணம் என்றேன். மற்றும்படி இது பயமுறுத்தல் அல்ல. பத்திரப்படுத்தல்.

இங்கு பிறந்த குழந்தைகள் அல்ல. குழந்தைகள் எங்கு பிறந்தாலும் அவர்களுக்குள்ளே ஆயிரம் கேள்விகள் உதிக்கும். கேட்பார்கள். தேடல் அற்ற குழந்தையால் வளர முடியாது.

'அம்மா.. உங்க வயிறு ஏனு் பெரிசாகுது?'

'குட்டிப் பாப்பா வரப்போகுது..'

'குட்டிப் பாப்பா எப்பிடி வயித்துக்க போச்சு..'

இப்படி குழந்தை பலவற்றைக் கேட்கும். பின்பு குழந்தை குறிப்பிட்டு வயதை அடையும்போது குழந்தைக்கு தெரியும், குட்டிப் பாப்பா எப்படி வயிற்றினுள் போனது என்று.

இதைப்போலத்தான் சமயங்கள்பற்றிய கேள்விகளும் பெறும் அறிவுகளும். அந்தந்த பருவத்தில் அவர்களால் அறிய முடியும்.. உணர முடியும்.. அவர்களுக்கு அதிலே ஆர்வம் இருந்தால்.

ஆகவே, இதைப்பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை!!

கோயில்காரங்க விலைப்பட்டியல் தூக்கட்டும். அது அவங்க விருப்பம். இந்த அர்ச்சனை செய்தால்தான் இன்ன வரம் தருவேன் என்று கடவுள் சொல்லவில்லை. ஆக, நுகர்வோர்கள் கவனமாக இருந்தால் போதும்.

வெளிநாட்டுக்கு வந்து இருக்கைகளை உறுதிப்படுத்தத் தெரிந்தவர்களுக்கு, இந்த விசயங்களிலுள்ள உண்மை பொய்களை கூறவேண்டிய தேவை இல்லை. அது அவர்களுக்கு தெரிந்த விடயம். அதையும் தாண்டி ஏதோ ஒரு காரணத்துக்காக அவர்கள் செய்கிறார்கள். அதைத் தடுக்க முற்பட்டு அவர்களிடமிருந்து நாமோ அல்லது எம்மிடமிருந்து அவர்களோ பிரிந்தால்.. அதுதான் தற்போது தேவையில்லாத விளைவு.

முடியாது என்று இருந்தால் எதுவுமே நிகழப் போவதில்லை.

நீங்கள் கூறுவன அறியாமையால் விளையும் வினாக்கள் அவற்றிற்கு அனுபவங்கள் விடை பகரும் ஒத்துக் கொள்கிறேன்.

ஆனால் மனமொருமித்து வணங்குவதற்காக உருவாக்கப்பட்ட கற்சிலைகளுக்கு ஏனம்மா பாலையும் தேனையும் உற்றுகினம். இதை பசியால் வாடும் ஏழைக்குக் குடுப்பதை ஆண்டவன் விரும்ப மாட்டாரா என்ற கேள்விக்கு எப்போது சரியான விளக்கம் கிடைக்கும்? சோழியன் அண்ணா எனக்கு இந்தக் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. தயவு செய்து உங்களுக்குப் பதில் தெரிந்தால் என் சந்தேகத்தை நிவர்த்தி செய்து வையுங்கள்.

உண்மையில் மதங்கொத்திகளின் பன்னால் எம் சைவர்கள் பலர் போய்க் கொண்டிருக்கின்ற காலம் இது. இதற்குக் காரணம் என்ன? எங்கள் மதத்தின் தவறுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப இந்த மதங்கொத்திகள் காய் நகர்த்துகிறார்கள்.

ஒரேயோரு உதாரணத்தைச் சொல்கிறேன்.

எனது வீட்டுக்கு அண்மையிலிருந்த ஒருவர் கடும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி கடவுள் பக்தி நிரம்பியவர். கோயில்களுக்கெல்லாம் அடிக்கடி போய் வருபவர் தான். ஆனால் துன்பம் மிகுந்த வேளையில் அவர் எதிர்பார்த்த ஆறுதலை பூசகர் உள்ளிட்ட எம்மவர்கள் விரும்பவில்லை. (பணம் பெற்றுக் கொண்டு அவருக்கே புரியாத பாசையில் அர்ச்சனை செய்ததைத் தவிர)

இந்தநிலையில் அவரை நாடி வந்த ஒரு மதங் கொத்தி அம்மா எங்கடை தேவாலயத்திற்கு ஒரு நாள் வந்து பாருங்கோ என்று அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே அவரது கணவரின் பெயர் சொல்லி அவர் விரைவில் குணம் பெற் கர்த்தரிடம் எல்லாரும் மன்றாடுவோம் என்று சொல்லி எல்லாரும் சேர்ந்து கத்திக் குழறியிருக்கிறார்கள். இவை மனமுவந்து செய்யப்பட்டவையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் உளவியல் ரீதியாக அத்தனை பேரும் சேர்ந்து தனது கணவருக்காகப் பிரார்த்தித்தது அந்தப் பெண் மனம் மாறி மதம் மாறக் காரணமாக அமைந்து விட்டது.

அதைத் தான் நான் சொல்கிறேன். எமது ஆலயங்களில் எம்மிடமிருக்கும் பணத்தின் அளவை வைத்தே நாங்கள் இறைவனை நெருங்க முடிகிறது.

10 ரூபாய் இநருதால் ஒரு சுவாமிக்கு மட்டும் அர்ச்சனை

50 ரூபா இருந்தால் 3 சுவாமிகளுக்கு அர்ச்சனை

100 ரூபா இருந்தால் எல்லாச் சுவாமிகளுக்கும் அர்ச்சனை

5000 ரூபா இருந்தால் இறைவனை தங்கத் தேரிலேற்றி நீங்களே இழுத்துச் செல்ல விடப்படும்.

இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்???????

  • கருத்துக்கள உறவுகள்

அரிச்சனைக் ரிக்கட் போடும் முறை அல்லது ஆலயத்து;ககான உண்டியல் முறை எப்படித் தோன்றியிருக்கும்??? நான் நினைக்கின்றேன் ஒரு வகையில் குற்றம் செய்தவர்கள் செய்த குற்றங்களுக்காக தொடர்ந்து, அஞ்சி நடப்பதைக் குறைக்கத் தொடங்கியிருக்கலாம். இல்லாவிட்டில், நாடு, ஆலயங்களுக்கான நிதிச் சேகரிப்புக்காகத் தொடங்கப்பட்டிருக்கலாம்... எது எப்படியோ அது தற்போது தனிப்பட்டவர்களின் சொத்தாக மாறிவிட்டது.

வன்னியில் ஏ9 பாதையில் போனவர்கள் பரந்தன் பகுதியில் பார்த்திருப்பீர்கள். கோவில் கட்டுவதற்காக உண்டியல் சிலர் குலுக்கியதை.... அங்கே நிதி திரட்டப்படும்போது கிடைக்கின்ற நிதியின் கணக்கினை அருகில் உள்ள கரும்பலகையில் எழுதி வைத்திருமிருந்தார்கள். அப்படியான உண்மையான நடவடிக்கை வரவேற்கலாம்...

எடுத்துக்காட்டாக, சிவனின் தலையில் இருந்து கங்கை வருகிறது என்று சொன்னார்கள்...! இமயத்தின் உச்சியிலே கைலாயம் இருக்கின்றது என்று சொன்னார்கள். எவரஸ்டையும் ஏறிமுடித்துவிட்டார்கள் இன்னும் கைலாயத்தைக் காணவில்லை.

ஆனால், இன்றைய விஞ்ஞான உலகின் யதார்த்தத்தின் முன்னே யாரால் இவற்றை உண்மை என்று நிரூபிக்க முடியும்...!!!

கொசுறுத்தகவல்: கைலாயம் என்று இமயமலைத் தொடரில் ஒரு குன்று உண்டு.அது எவரஸ்ட் அளவு உயரமல்ல... பல பக்தர்கள் அந்த மரிக்குத் தான் இமயம் போவதாக வழிபடச் செல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சமயமானது இவ்வளவு காசைத் தந்து அபிசேகம் செய் என்றோ அல்லது இதைத் தந்து வேண்டுதலை நிறைவேற்று என்றோ கூறவில்லை. அது வழிபடுபவரின் மனதைப் பொறுத்து வேறுபடுகிறது.

ஒருவன் தகப்பனை பன்னோலைல சுடுகாட்டுக்கு எடுத்து செல்வான். இன்னொருவன் பல்லக்கு கட்டி தாரை தப்பட்டைகளோடை எடுத்துச் செல்வான்.. இன்னொருவன் வெள்ளை வேட்டியால சுத்தி மூடிப்போட்டு, சேமக்கலத்தோடையும் சங்கோடையும் கொண்டு போவான்.

அதைப்போல ஒருத்தன் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பான். இன்னொருவன் அழைப்பிதழுடன் ஊடகங்களிளும் அறிவிப்பான். இன்னொருவன் வீடியோ எடுத்து சீடீல அழைப்பிதழ் அனுப்புவான். அது அவரவர் மனனிலையைப் பொறுத்தது. அதற்காக.. என்ன பெரிய கலியாணம்? ஏதோ மற்றவன் செய்யாததையா செய்யப் போறியள்? குழந்தைதானே பெறப் போறியள்? ஏன் மோட்டுத்தனமான செலவுகள் என்று கூற முடியுமா?

அதற்காக அவன் அந்த நிகழ்வில் பணத்தை செலவு செய்கிறான் என்பதற்காக, இன்னலுறுபவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருக்கிறான் என்றும் கூற முடியுமா?

அவன் தன் திருப்திக்காக செய்கிறான்.. ஊரில் என்றால் ஊறுகாய்த் தண்ணியும் சர்க்கரைத் தண்ணியும் ஊத்துவான்.. இங்கை சர்பத் ஊத்துறான்.. அங்கை முதுலாம் திருவிழாவுக்கு பவளக்கொடி கூத்தென்றால் இரண்டாம் திருவிழாவுக்கு போட்டியாக சத்தியவான் சாவித்திரி.. அடுத்தவர் வள்ளி திருமணம்.. அடுத்தவர் கண்ணன் கோஸ்டி.. மற்றவர் இரட்டையர் கோஸ்டி.. இங்கை ஒருத்தர் அவுடி என்றால் மற்றவர் பீஎம்டபிள்யூ.. அடுத்தவர் பென்ஸ்.. அடிப்படை ஒன்றுதான்.

அதுக்காக மூடநம்பிக்கை என்று சொல்லலாமோ?! இப்பிடிச் சொல்லுறதால எதுவுமே நடந்துவிட முடியாது.. மாறாக வீண் சலிப்புகளும் வெறுப்புகளும்தான் தோன்றும்.. வேண்டுமானால் தங்கள் கருத்துடன் உடன்படுபவர்கள்மாத்திரம் இதற்கு 'ஓ..' போட்டுவிட்டு போவார்கள். இதனால் என்ன பலன்?

ஆடிக் கறக்குற மாட்டை ஆடிக் கறக்கணும். பாடிக் கறக்குற மாட்டை பாடித்தான் கறக்கணும்.

திருவிழாக்களில சனம் கொட்டிச் சிந்துது என்று சொல்பவர்கள்.. அந்த கொட்டிச் சிந்துற இடத்தில ஆகக் குறைந்தது 'இன்னலுறுபவர்களுக்காக' ஒரு உண்டியலை ஏன் வைக்கக் கூடாது.. கொட்டிச் சிந்துபவன் அதிலயும் ஏதாவது போடுவான்தானே? அதைவிடுத்து.. கொட்டிச் சிந்தாமை முழுவதையும் போடு என்றால்.. அவன் என்ன நினைப்பான்? 'இவர் என்ன சொல்லுறது.. நான் என்னவும் செய்வன்..' ஏன் என்றால் அவனும் நம்ம இனம்தானே?! :):lol:

'அப்பு ராசா.. நீ கொட்டு.. சிந்து.. இதிலையும் கொஞ்சம் கொட்டு' என்றால்.. அவனுக்கும் கொஞ்சமாலும் யோசனை வரும்.. அதை விடுத்து 'மூடத்தனத்தைவிட்டு வா' என்றால்.. 'யோவ்... யாரையா மூடன்? நானோ? எனக்கு சின்னனில வயித்து வலி வந்தா.. அம்மா செல்லச் சந்நிதியானுக்கு நேர்ந்து அறுணாக் கயித்திலை (அரை நார்க்கயிறு) ஐம்பது சதம் முடிஞ்சு வைச்சுட்டு.. சந்நிதியாக் சுகப்படுத்துவான் எண்டுட்டு நிம்மதியாய் படுப்பா.. பேந்து வருசத்துக்கொருக்கா செல்வச் சந்நிதி தேருக்கு போகேக்கை.. அதை மறக்காமை கொண்டுபோய் உண்டியலிலை போடுறவ.. அப்ப அவவும் மோடியோ..' என்று உணர்ச்சிவசப்பட.. சொல்ல வந்த விடயம் குப்பைக்குத்தான் போகும்.

மணிவாசகனுக்கு இதெல்லாம் தெரியாததா என்ன? அதுவும் பத்திரிகையாளர்.. எப்படி கருத்துகளை செலுத்த வேண்டும் என்ற யுக்தி பத்திரிகையாளர்களுக்குத்தான

  • தொடங்கியவர்

அரிச்சனைக் ரிக்கட் போடும் முறை அல்லது ஆலயத்து;ககான உண்டியல் முறை எப்படித் தோன்றியிருக்கும்??? நான் நினைக்கின்றேன் ஒரு வகையில் குற்றம் செய்தவர்கள் செய்த குற்றங்களுக்காக தொடர்ந்து, அஞ்சி நடப்பதைக் குறைக்கத் தொடங்கியிருக்கலாம். இல்லாவிட்டில், நாடு, ஆலயங்களுக்கான நிதிச் சேகரிப்புக்காகத் தொடங்கப்பட்டிருக்கலாம்... எது எப்படியோ அது தற்போது தனிப்பட்டவர்களின் சொத்தாக மாறிவிட்டது.

வணக்கம் தூயவன்,

உண்மைதான். அவை அப்படி மாறிவிட்டது என்பதற்காக அதை எப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அவற்றை மாற்ற முயற்சிக்க வேண்டாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொசுறுத்தகவல்: கைலாயம் என்று இமயமலைத் தொடரில் ஒரு குன்று உண்டு.அது எவரஸ்ட் அளவு உயரமல்ல... பல பக்தர்கள் அந்த மரிக்குத் தான் இமயம் போவதாக வழிபடச் செல்வார்கள்.

அப்ப அது வெறும் குன்று தானா...!!!

எல்லாரும் எனக்கு சொன்னவ அங்க தான் சிவன், பார்வதி, நந்தி மற்றும் பூதகணங்கள் எல்லாம் இருக்கினம்மெண்டு....!!!

அப்ப அது கூட டப்பாகூறா...!!! :P:P:P

முடியல...!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அது வெறும் குன்று தானா...!!!

எல்லாரும் எனக்கு சொன்னவ அங்க தான் சிவன், பார்வதி, நந்தி மற்றும் பூதகணங்கள் எல்லாம் இருக்கினம்மெண்டு....!!!

அப்ப அது கூட டப்பாகூறா...!!! :P:P:P

முடியல...!

என்ன சொல்ல.. அப்படி ஒரு குன்று இருப்பதே தெரியாது இல்லாமல் விவாதம் செய்ய வந்த விழலை எண்ணி, அது பற்றிய தகவலைத் தந்தேன். மற்றும்படி சிவன், பார்வதி, பூதகணங்கள் என்ற கரு்ததுருவாக்கம் எழுந்தமைக்குக் காரணம்... அக்காலத்தில் படிப்பறிவில்லாத சமுதாயமாக இருந்த மக்களுக்கு ஒரு கடவுள் பற்றிய எண்ணக்கருவினை மனதினுள் விதைப்பதற்காக.... மற்றும்படி கடவுளுக்கு உருவம் இருப்பதாக இந்து மதம் வலியுறுத்துவதில்லை....

திரும்பவும் விதண்டாவாதங்கள் செய்து, சண்டை இழுப்பம் என நினைக்கின்றீர்கள். நான் தவிர்க்கவே நினைக்கின்றேன்....

வணக்கம் தூயவன்,

உண்மைதான். அவை அப்படி மாறிவிட்டது என்பதற்காக அதை எப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அவற்றை மாற்ற முயற்சிக்க வேண்டாமா?

இப்படிச் சேரும் நிதியைப் பிரியோசனமாகப் பாவிக்கும் வண்ணம், ஒரு உறுதியான அமைப்பினை இந்து மதப்பிரிவுக்குள் உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட அமைப்பினூடாகத் தான் நிதிகள் பங்கிட வேண்டும், அல்லது அதை வளர்ச்சியாக்க வைக்க வேண்டும் என்று நிலை வந்தால் அது பொருந்தும்.

பணம் வைத்திருப்பவர்களிடம் இருந்து, கிடைக்கின்ற பணத்தை ஏழைகளுக்குப் பாவிக்கின்ற வகையில் நிறுவனப்படுத்தினால், அது சிறப்பாக இருக்கம்.

தமிழகத்தில் பல ஆலயங்கள் தமிழக அரசின் கீழ் தான் உள்ளன. அவர்கள் நினைத்தால் இது முடியக் கூடியதே. ஆனால் ஊழல் மலிந்த இடத்தில் அது எப்படிச் சாத்தியமாகும் என்று தான் தெரியவில்லை.

அப்ப அது வெறும் குன்று தானா...!!!

எல்லாரும் எனக்கு சொன்னவ அங்க தான் சிவன், பார்வதி, நந்தி மற்றும் பூதகணங்கள் எல்லாம் இருக்கினம்மெண்டு....!!!

அப்ப அது கூட டப்பாகூறா...!!! :P:P:P

முடியல...!

அம்மா ஒரு கடதாசியில் 'அ' என எழுதிவிட்டு, அந்த கடதாசியை சின்ன பிள்ளையிடம் காட்டி 'இது ஆனா' என்றாராம்.

பக்கத்தில் கவனித்துக் கொண்டிருந்த பெரிய பிள்ளை கேலியாகச் சிரித்துக் கொண்டு, 'இது ஆனா இல்லை.. கடதாசி' என்றதாம்.

அம்மாவின் நோக்கம் 'அ'வை காண்பிப்பது. பெரிய பிள்ளையின் நோக்கம் கடதாசியில்.

இப்படித்தான் சிவனும், பார்வதியும், கைலாயமும், குன்றும். எல்லாம் பார்வையையும் நோக்கத்தையும் பொறுத்தது!! :D

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் மெஞ்ஞானத்தைத் தேடியலைந்த பல ஞானிகள் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த மதங்களுடன் தமது புதிய சிந்தனைகள் முரண்பட்டதால் அவற்றை குறைபாடுகளுள்ள மார்க்கங்களாக கருதி அக்குறைபாடுகளைக் கழைந்தெறிய முற்படாமல் புதிய புதிய மதங்களை இஸ்தாபித்தார்கள். நாளடைவில் அந்த புதிய மதங்களிலும் இடைச்சொருகல்கள் வந்து பற்றிக்கொள்ளத்தான் செய்தன. மதம் என்பதும் கடவுள் என்பதும் தனக்குப் புரியாத பல புதிர்களுக்கு ஒரு பதிலாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றாயிருக்க பின்னால் வந்த மனிதர்களோ அதை புரிந்து கொண்ட விதங்களும் வேறாயிருக்க இப்படியான இடைச் சொருகல்கள் நீடிக்கத்தான் செய்யும். அதற்காக மதத்தையோ மனிதர்களையோ குறைகூறுவது எப்படிப் பொருந்தும். இடைச்செருகல்கள் என்று நீங்கள் குறிப்பிடும் விடயங்களுக்காக தான் சார்ந்த மதத்தை அன்னியப்படுத்துவது கொஞ்சம் அபத்தமாகவே எனக்குப் படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்ல.. அப்படி ஒரு குன்று இருப்பதே தெரியாது இல்லாமல் விவாதம் செய்ய வந்த விழலை எண்ணி, அது பற்றிய தகவலைத் தந்தேன். மற்றும்படி சிவன், பார்வதி, பூதகணங்கள் என்ற கரு்ததுருவாக்கம் எழுந்தமைக்குக் காரணம்... அக்காலத்தில் படிப்பறிவில்லாத சமுதாயமாக இருந்த மக்களுக்கு ஒரு கடவுள் பற்றிய எண்ணக்கருவினை மனதினுள் விதைப்பதற்காக.... மற்றும்படி கடவுளுக்கு உருவம் இருப்பதாக இந்து மதம் வலியுறுத்துவதில்லை....

திரும்பவும் விதண்டாவாதங்கள் செய்து, சண்டை இழுப்பம் என நினைக்கின்றீர்கள். நான் தவிர்க்கவே நினைக்கின்றேன்....

தூயவன்,

இமயமலையில் கைலாயம் என்று ஒரு குன்றுஇருப்பது எனக்கு தெரியும். நான் முன்பு கூற விளைந்த விடயம் என்னவென்றால்... மிக உயரம் கூடிய எவாரஸ்டுக்கே சென்று விட்டார்கள் இன்னும் சிவன் முதலானோரை கண்டு பிடிக்கவில்லையே என்பதையே கூற முயன்றேன். உங்களுடன் விதண்டாவாதம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. நான் சற்று வேடிக்கையாக கூறப்போய் அது உங்ளுடைய மனதை புண்படுத்தியிருந்தால், என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் இன்னும் சற்று தெளிவாக எழுதவேண்டும் என்று நினைக்கின்றேன். முயற்சி செய்கின்றேன்.

சிவன், பார்வதி, நந்தி, பூதகணம் என்பவை எல்லாம் படிப்பறிவில்லாத சமுதாயத்துக்காக உருவாக்கபட்டதென்றால்..., அது இருக்கட்டும். ஆனால் அதை இன்றும் நாம் ஏன் கடைப்பிடிக்க வேண்டும். தற்போதும் சமுதாயம் கல்வி அறிவு இல்லாமலா இருக்கின்றது...????? ஆரியர்களால் காலங்காலமாக திணிக்கப்பட்ட திராவிட எதிப்புக்கொள்கைகளே இன்றைய இந்து மதம். இந்து மதத்தில் மட்டும் தான் கடவுளுக்கும் பக்தனுக்கும் நடுவில் ஓர் தரகன். அதுவும் பக்தனுக்கே விளங்காத மொழியில் பேசுவதற்கு...!!!

சற்றும் வேடிக்கையாக தெரியவில்லையா...!!!

எடுத்துக்காட்டாக..., 2ம் ஆண்டு சமயப்புத்தகதில் என்று நினைக்கின்றேன். பிள்ளையார் நடனமாடுவதைப்பார்த்து ஏளனம் செய்த சந்திரன் பிள்ளையாரின் கோபத்துக்கு உள்ளானதால் தான் சந்திரன் தேய்வதாக சொன்னார்கள். அந்த காலத்தில் வேண்டும் என்றால் இதனை விளக்க பிள்ளையாரை துணைக்கு அழைத்திருக்கலாம். 1990 களிலுமா புளூடா விடவேண்டும். இதையே மேற்குலக நாடுகளில் குழந்தைகளுக்கு, சந்திரனின் தேய்வுக்காரணத்தை, விஞ்ஞான ரீதியாக எடுத்ததுரைத்து விடுவார்கள். 7 வயது தமிழ் குழந்தைக்கும் 7 வயது மேற்கத்தேய குழந்தைக்கும் இடையில் சமயம் எவ்வளவு அறிவுசார் பாரபட்ச்சத்தில் ஈடுபடுகின்றது என்று பாத்தீர்களா...????

என்னுடைய ஏக்கம் எல்லாம், சமயம் என்ற பெயரில் நாடாத்தப்படுகின்ற, தற்கால சாதாரண பாமரனுக்கு கூட விளங்கக்கூடிய விடயங்களைக்கூட மதப்பூச்சாண்டிகளால் மூடி மறைத்து விடுகின்றார்கள்.

இந்து சமயம் என்ற போர்வையில் நான் 7 வயதில் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மையை 11 வயதில் விஞ்ஞானம் படிக்கும் வரை மூடி மறைத்து விட்டார்களே...??? இது சமூதாயம், மதம் என்ற பெயரால் இளைஞர் நமக்கு செய்த அறிவுத் துரேகமல்லவா...???

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா ஒரு கடதாசியில் 'அ' என எழுதிவிட்டு, அந்த கடதாசியை சின்ன பிள்ளையிடம் காட்டி 'இது ஆனா' என்றாராம்.

பக்கத்தில் கவனித்துக் கொண்டிருந்த பெரிய பிள்ளை கேலியாகச் சிரித்துக் கொண்டு, 'இது ஆனா இல்லை.. கடதாசி' என்றதாம்.

அம்மாவின் நோக்கம் 'அ'வை காண்பிப்பது. பெரிய பிள்ளையின் நோக்கம் கடதாசியில்.

இப்படித்தான் சிவனும், பார்வதியும், கைலாயமும், குன்றும். எல்லாம் பார்வையையும் நோக்கத்தையும் பொறுத்தது!! :D

:D:D

இந்த திரியில் நீங்கள் வைத்த கருத்துகளே எனது கருத்துகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் மதங்கொத்திகளின் பன்னால் எம் சைவர்கள் பலர் போய்க் கொண்டிருக்கின்ற காலம் இது. இதற்குக் காரணம் என்ன? எங்கள் மதத்தின் தவறுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப இந்த மதங்கொத்திகள் காய் நகர்த்துகிறார்கள்.

ஒரேயோரு உதாரணத்தைச் சொல்கிறேன்.

எனது வீட்டுக்கு அண்மையிலிருந்த ஒருவர் கடும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி கடவுள் பக்தி நிரம்பியவர். கோயில்களுக்கெல்லாம் அடிக்கடி போய் வருபவர் தான். ஆனால் துன்பம் மிகுந்த வேளையில் அவர் எதிர்பார்த்த ஆறுதலை பூசகர் உள்ளிட்ட எம்மவர்கள் விரும்பவில்லை. (பணம் பெற்றுக் கொண்டு அவருக்கே புரியாத பாசையில் அர்ச்சனை செய்ததைத் தவிர)

அதைத் தான் நான் சொல்கிறேன். எமது ஆலயங்களில் எம்மிடமிருக்கும் பணத்தின் அளவை வைத்தே நாங்கள் இறைவனை நெருங்க முடிகிறது.

10 ரூபாய் இநருதால் ஒரு சுவாமிக்கு மட்டும் அர்ச்சனை

50 ரூபா இருந்தால் 3 சுவாமிகளுக்கு அர்ச்சனை

100 ரூபா இருந்தால் எல்லாச் சுவாமிகளுக்கும் அர்ச்சனை

5000 ரூபா இருந்தால் இறைவனை தங்கத் தேரிலேற்றி நீங்களே இழுத்துச் செல்ல விடப்படும்.

இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்???????

எனக்கும் இந்த கவலை இருக்கிறது. ஊரில் இப்படியில்லை. பூசகர்கள், சமயப்பிரசங்கிகள் மனதால் நொந்து கோவிலுக்கு வருபவர்களுடன் ஆறுதலாக கதைத்து ஆறுதல் சொல்வார்கள். எங்கள் ஊரில் அர்ச்சனை செய்ய பணம் தேவையில்லை. வெறும் பூவுடன் சென்றாலும் அர்சனை செய்து தருவார். இங்கு எம்மவர் கோவில்கள் முழுக்கு முழுக்க வியாபார நோக்கம் தான். கடவுளும் அப்படி அர்ச்சனை அபிசேகம் செய்ய சொல்லவில்லை. சோழியான் அண்ணா சொன்னது போல ஒவ்வொருத்தரும் தம்தம் வசதிக்கும் மனவிருப்பத்திற்கும் செய்கிறார்கள்.

நீங்கள் ஒட்டாவா வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மீண்டும் இங்கு வரும்போது வசதி இருந்தால் பாங் வீதி தெற்கில் இருக்கும் இந்து ஆலயத்திற்கு சென்று பாருங்கள். இந்தியர்களால் நிர்வகிக்க படும் ஆலயம். அங்கு போனால் அர்ச்சனைக்கு எவ்வளவு என்று கேட்டு பாருங்கள்.

  • தொடங்கியவர்

வணக்கம் சபேஷ்

தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி.

ஈழத்து மக்களுக்காக ஒரு சில டொலர்களைக் கொடுப்பதற்குக் கூட ஒன்றிற்கு இரண்டு முறை சிந்திக்கும் பலர் கூட இந்திய ஆலயங்களில் கொண்டு போய் பணத்தைக் கொட்டுவதை நானும் கண்டிருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.