Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் மீண்டும் கைது

Featured Replies

தோழர் சீமான் வத்தலகுண்டுவில் கைது செய்யப்பட்டார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மேலதிக செய்திகள் விரைவில்....

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இறையாண்மைக்கு எதிராக , ஸ்ரீ லங்கா இராணுவ தளபதி தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொல்லும் போது வராத சட்டம் ,

தமிழன் சீமான் பேசும் போது மட்டும்தான் விழித்துக் கொள்ளுமா ?

இறையாண்மையா அப்படியன்றால் என்ன பொருள் கொள்கிறார்கள்?

அரசியல்வாதிகளை கோமாளிகள் என்றது எப்படி இறையாண்மைக்கு எதிரானது? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் கைது குறிதது பிந்திக் கிடைத்த ஆடியோச் செய்தி:

http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் அந்தஆளு அரசியல் கள்ளார்கள்..எங்கள் புரட்சி தலைவன் சீமான் வாழ்க..வாழ்க...பாயும் புலியே வாழ்க...

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகளை கோமாளிகள் என்றது எப்படி இறையாண்மைக்கு எதிரானது? :)

உள் நாட்டுக்காறன் சொன்னால் நீங்கள் சொல்வது சரி

ஒரு வெளிநாட்டுக்காறன் அதிலும் இராணுவ அதிகாரி சொல்லும்போது

அதை அந்த நாடு கேட்கவில்லையென்றால் தனது இறையாண்மையை அவிட்டு அவனை விட்டுவிட்டால் அவனே பார்த்துக்கொள்வான் தானே???

அதுதானே நான் அறிந்த இறையாண்மை என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

புலி ஆதரவு பேச்சு: இயக்குனர் சீமான் கைது

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 19, 2008, 14:24 [iST]

சென்னை & திண்டுக்கல்: விடுதலைப் புலிகளை ஆதரித்தும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கியும் பேசிய இயக்குனர் சீமான், காங்கிரஸ் கட்சியின் நெருக்குதலையடுத்து இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்லை அடுத்த தேவதானப்பட்டியில் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை பிரச்சனை தொடர்பாக ராமேஸ்வரத்தில் நடந்த திரைப்பட கலைஞர்கள் பொதுக் கூட்டத்தில் ஆவேசமாக பேசிய இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இயக்குனர் சீமான் அண்மையில் ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஆதரித்தும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கியும் அவர் பேசினார்.

இந்த மண்ணில் (தமிழகத்தில்) இன்னொரு பிரபாகரன் பிறக்கும் வரை தமிழினம் மீளாது என்று அவர் ஆவேசமாக பேசினார்.

இதையடுத்து சீமானை கைது செய்ய வேண்டும் என காங்கிரசார் போராட்டத்தில் குதித்தனர்.

'குண்டாஸ்'-தங்கபாலு கோரிக்கை:

சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கோரினார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ராஜீவ் காந்தி இலங்கை தமிழர்களை அழிக்க அமைதிப் படையை அனுப்பியதாகக் கூறி இந்திய நாட்டையும், அமைதிப் படையையும் கொச்சைப்படுத்தி பேசுவதும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதும், ராஜீவ் காந்தியின் படுகொலையில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனை தமிழர் தலைவர் என்று புகழ்பாடுவதும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல பயங்கரவாதத்தை ஆதரித்து பேசுகிற தேசவிரோத குற்றமும் ஆகும்.

இலங்கையில் தமிழர்கள் சமமான வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதற்காக, அவர்களது மீட்சிக்காக, வாழ்வு மேம்பாட்டிற்காக உரிய நடவடிக்கைகளை உணர்வோடு மேற்கொண்ட ராஜீவ் காந்தி, சிங்கள வெறியரால் தாக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் என்ற வெடிகுண்டு இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட கொடிய நிகழ்ச்சியையும் கொச்சைப்படுத்தி பேசுகிற யாரும் உண்மையான தமிழனாக இருக்க மாட்டார்கள்.

இந் நிலையில் ஈரோட்டில் சினிமா இயக்குநர் சீமானும், மற்றும் அவரோடு சிலரும் பேசிய பேச்சுகள் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் செயலாகவும், சட்டவிரோதமானதும் ஆகும். அவர்கள் பேசி 72 மணி நேரம் ஆனதற்குப் பிறகும் இத்தகைய வன்முறைப் பேச்சுக்களை கேட்டுக் கொண்டு அவர்கள் மீது தமிழக போலீஸ் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?. யாரை திருப்திபடுத்துவதற்காக?.

இந்த செய்திகள் முதல்வர் கருணாநிதியின் பார்வைக்கு வந்துள்ளதா?. அல்லது மறைக்கப்பட்டுள்ளதா?.

ஏற்கனவே ராமேஸ்வரம் கூட்டத்தில் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி ஆகிய தலைவர்களின் படுகொலையை நியாயப்படுத்தி பேசிய இவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டபோது தமிழக போலீஸ் துறை சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததைத் தொடர்ந்து இன்றைக்கு அதே பேர்வழிகள் அதேபோன்ற தேசவிரோத பேச்சுக்களை பேசி வருகிறார்கள்.

இவ்வாறு அன்றாடம் காங்கிரஸ் பேரியக்கத்தையும், இந்திய திருநாட்டையும், ராஜீவ் காந்தியையும் கொச்சைப்படுத்தி பேசிவரும் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். ராஜீவ் காந்தியையும், இந்திரா காந்தியையும் அவர்களது வழியில் இன்றைக்கு சோனியா காந்தியும் தான் இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர்கள்.

இவைகளுக்குப் பிறகும் தேசவிரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சீமான் போன்றவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

படப்பிடிப்பில் வைத்து கைது:

இந் நிலையில், திண்டுக்கல் அருகே தேவதானப்பட்டியில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த சீமானை, ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் இன்று கைது செய்து அழைத்துச் சென்றனர்.

thatstamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல்வாதிகளை கோமாளிகள் என்றது எப்படி இறையாண்மைக்கு எதிரானது? :)

உங்கள் தமிழறிவு, அரசியல் அறிவு என்பவற்றை நேரங்காலம் தெரியாமல் எடுத்துவிடாதீர்கள் குறுக்ஸ்!

கோமாளி என்பது கேலிச்சித்திரம் வரைவது எல்லாம் கருத்துச் சுதந்திரம். அதற்கு பதிலாக நீங்களும் ஏதாவது சொல்லாம் அல்லது வரையலாம். இஸ்லாமியர்கள் முகமதுவை கொச்சைப் படுத்தி கேலிச்சித்திரம் வரைந்ததற்கு வன்முறைகள் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டது போல் ஈடுபடலாம். அல்லது பக்குவப்பட்ட வழர்ச்சி அடைந்த சமுதாயமாக உங்கள் பொருளாதரா நுகர்வுப் பலம் மூலம் உங்கள் எதிர்ப்பை தெரிவித்த படி உங்கள் பாதையில் முன்னேறலாம் (சீனர்கள் போல்). investigative journalism மூலம் சிறீலங்கா தூதரகத்தின் செயற்பாடுகளை வெளிக் கொண்டுவரலாம்.

தமிழ்நாடு பிரியும் தனிநாடு அமையும் என்று அச்சுறுத்துவது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கையில் தமிழர்கள் சமமான வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதற்காக, அவர்களது மீட்சிக்காக, வாழ்வு மேம்பாட்டிற்காக உரிய நடவடிக்கைகளை உணர்வோடு மேற்கொண்ட ராஜீவ் காந்தி, சிங்கள வெறியரால் தாக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் என்ற வெடிகுண்டு இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட கொடிய நிகழ்ச்சியையும் கொச்சைப்படுத்தி பேசுகிற யாரும் உண்மையான தமிழனாக இருக்க மாட்டார்கள்.

காங்கிரசாரின் திருவாக்கியம் இவை மட்டும்தானா?

ஐ.நாவே மோசமான இனக்கொலை நாடுகளின் பட்டியலில் இலங்கையை வைத்திருக்கும் போது, அந்த சிங்களமேதான் ஈழத்தமிழரின் விமோசன சக்தி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களும் இவர்கள்தானே.

கண்டங்கள் கடந்து இருக்கின்ற நாடுகளே சிங்களைத்தை தட்டிக் கேட்க முன்வருகின்ற போதும் அவற்றில் இருந்து இவர்களை காப்பாற்றுவோரும் இந்த காங்கிரசாரின் வேலைதானே.

காட்டிக்கொடுப்பின் கூடாரம் இந்த காங்கிரஸ்!

தமிழுணர்வுக்கு மரணவைரஸ் இந்த காங்கிரஸ்!

தொத்திப் பிழைக்கும் தம் கட்சியின் விதியையாவது நினைக்காமல்

தமிழ்நாட்டுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க நினைக்கின்றார்கள் பரிதாபம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமாளி என்பது கேலிச்சித்திரம் வரைவது எல்லாம் கருத்துச் சுதந்திரம். அதற்கு பதிலாக நீங்களும் ஏதாவது சொல்லாம் அல்லது வரையலாம். இஸ்லாமியர்கள் முகமதுவை கொச்சைப் படுத்தி கேலிச்சித்திரம் வரைந்ததற்கு வன்முறைகள் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டது போல் ஈடுபடலாம். அல்லது பக்குவப்பட்ட வழர்ச்சி அடைந்த சமுதாயமாக உங்கள் பொருளாதரா நுகர்வுப் பலம் மூலம் உங்கள் எதிர்ப்பை தெரிவித்த படி உங்கள் பாதையில் முன்னேறலாம் (சீனர்கள் போல்). investigative journalism மூலம் சிறீலங்கா தூதரகத்தின் செயற்பாடுகளை வெளிக் கொண்டுவரலாம்.

தமிழ்நாடு பிரியும் தனிநாடு அமையும் என்று அச்சுறுத்துவது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது.

தமிழ்மொழி இலக்கணத்தில் பொருளழுத்தம் செய்யும் மொழிப்பயன்பாடுகள்தான் இவை எனவே இவற்றால் குற்றங்காணப்பட முடியாது. "கொல்லுவேன் சொன்னதைச் செய்யாவிட்டால்" என்று சூழுரைக்கும் தாயை நீதிமன்றுக்கு யாரும் எடுப்பதில்லை!

சீமானின் குற்றச்சாட்டுகளில் உள்ள யதார்த்தம்தான் அவர்களை இம்சிக்கின்றது.

புத்தனின் பேரில் என்ற திரைப்படம் என்ன காரணத்தின் பேரில் தடை செய்யப்பட்டது - அண்டை நாட்டின் உறவுக்கு பாதகமானது. ஆனால் அவர்கள் பதிலாக மீனவர்களை சுட்டுக் கொண்டே இருக்கின்றார்கள் எனவே சிங்களத்துக்கும் இந்தப் பொறுப்பு வேண்டாமா? எனவே இந்தக்காரணம் எத்துணை பம்மாத்தானது?

இப்படி சின்னப்புள்ளைத்தனமாக சட்டம் போதிக்கின்றார்கள் மக்களுக்கு தங்கள் வசதிப்படி.

Edited by தேவன்

இப்படி எங்கும் சீமான் அவர்கள் சொன்னதாக நான் அறியவில்லை

ஆனால் அப்படி ஆக்கிவிடாதீர்கள் என்று சொல்வது

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானதாக ஆகாது

மாறாக இந்தியாவின் இண்மையின்பால் ஒரு இந்தியருக்கு இருக்கக்கூடிய அக்கறையாகவே பார்க்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியையும், இந்திரா காந்தியையும் அவர்களது வழியில் இன்றைக்கு சோனியா காந்தியும் தான் இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர்கள்.

:)

இது எப்போது நடந்தது ? நக்கித்தின்னி பாலு என்னவென்று தெரிந்துகொண்டுதான் பேசுகிறானா? இந்திரா எங்களுக்கு உதவியது எதற்காக என்று இவனுக்குத் தெரியாது, அதேபோல ராஜீவ் ஈழத்துக்கு தனது காட்டுமிறாண்டிகளை அனுப்பியதும் அங்கிருந்த குமரிகள் கிழவிகளின் கற்பைப் பாதுகாக்கத்தான் என்று நினைக்கிறான் போலும்.அதே காட்டுமிராண்டி ராணுவத்தை இவனின் குடுமத்திலுள்ள கிழவி குமரிகளிடம் அனுப்பிப் பார்க்கட்டும், அப்போது தெரியும் தங்களது "இந்திய ராணுவத்தின்" லட்சணம்!!!

கிழமைக்கொருதரம் விபச்சார்களிடம் அலையும் இந்த பன்னாடைகள் எல்லாம் "காங்கிரஸ் பேரியக்கத்தின்" தூண்களாம்!!தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவனாம்!!! இவனுக்கொரு கட்சி, அதுக்கொரு தலைவி, அதற்கு தவறாமல் வாக்களிக்கும் ஏமாளி வாக்களர்கள்?!

வாழ்க ஜனநாயகம் !!!இல்லாவிட்டால் இவன் மாதிரியான அறிவு சூனியமெல்லாம் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியுமா ??!!

அது எப்படி ? சிங்கள ராணுவத்துக்கு ராடர்களும், ஆயுதங்களும் பயிற்சியும் குடுப்பதுதான் ஈழத்தமிழர்களின் மேல் சோனியா காட்டும் அக்கறையா? தமிழ்நாட்டில் எத்தனை படித்த தமிழர்கள் இருக்கிறீர்கள்? இதை ஒருவனுமே தட்டிக் கேட்க மாட்டீர்களா?

தமிழ்மொழி இலக்கணத்தில் பொருளழுத்தம் செய்யும் மொழிப்பயன்பாடுகள்தான் இவை எனவே இவற்றால் குற்றங்காணப்பட முடியாது. "கொல்லுவேன் சொன்னதைச் செய்யாவிட்டால்" என்று சூழுரைக்கும் தாயை நீதிமன்றுக்கு யாரும் எடுப்பதில்லை!

சீமானின் குற்றச்சாட்டுகளில் உள்ள யதார்த்தம்தான் அவர்களை இம்சிக்கின்றது.

புத்தனின் பேரில் என்ற திரைப்படம் என்ன காரணத்தின் பேரில் தடை செய்யப்பட்டது - அண்டை நாட்டின் உறவுக்கு பாதகமானது. ஆனால் அவர்கள் பதிலாக மீனவர்களை சுட்டுக் கொண்டே இருக்கின்றார்கள் எனவே சிங்களத்துக்கும் இந்தப் பொறுப்பு வேண்டாமா? எனவே இந்தக்காரணம் எத்துணை பம்மாத்தானது?

இப்படி சின்னப்புள்ளைத்தனமாக சட்டம் போதிக்கின்றார்கள் மக்களுக்கு தங்கள் வசதிப்படி.

கண்டுகொள்ள காரணம் கொடுக்காது நகரவேண்டும். ஏற்கனவே பயங்கரவாதிகள் என்ற முத்திரை அதை கவனத்தில் கொண்டு பேசினால் நல்லம். கவனத்தைப் பெறுவது முக்கியமல்ல எப்படி என்ன காரணத்துக்காக பெறப்படுகிறது என்பது தான் பயனைத்தரும்.

புத்தரின் பெயரால் திரைப்படத்திற்கு தடை என்றால் அதற்கு எதிராக வழக்கு போட்டு விபரமாக நியாயத்தை மக்களின் முன் வைத்தால் எங்கள் மீது அனுதாபம் ஆகுதல் வரும்.

இத்தனை ஊடகங்கள் உள்ள தமிழ்நாட்டில் ஏன் மீனவர் மீதான சிறீலங்கா கடற்படையின் தாக்குதலை ஆவணப்படுத்த முடியவில்லை? ஆதாரங்களை வெளி கொண்டுவர முடியவில்லை?

பலஸ்தீனர்கள் மீதான தாக்குதல் எத்தனை பதிவாகி வெளியில் வந்திருக்கிறது. தனிய குற்றச்சாட்டுகள் ஆவேசப் பேச்சுக்கள் போதாது. உண்மையில் இந்த விடையத்தில் அக்கறையிருந்தால ஆதாரங்களை ஆவணப்படுத்துங்கள். அவற்றை வெளியிட ஊடகங்கள் இருக்கு ஊடக சுதந்திரம் இருக்கு. மேடையும் மைக்கும் ஒரு கூட்டத்தை கூட்டி வைத்து ஆவேசமாக அரசியல்வாதிகள் போல் முழங்கினால் எடுபடும் நிலையில் இன்றைய சந்ததி இல்லை. நடுத்தர வர்க்கத்தின் ஆதரவை அனுதாபத்தை பெற விடையத்தை தகுந்த முறையில் ஆவணப்படுத்திக் காட்டுங்கள். சிரமம் எடுத்து ஆதாரங்களை சேகரித்து நம்பிக்கையான முறையில் முன்வைய்யுங்கள். நீங்கள் தொண்டை கிளிய மேடைகளில் கத்துவதை எடுத்தவீச்சுக்கு நம்ப வேண்டி அவசியம் எவருக்கும் இல்லை. மும்பாய் தாக்குதல்களை அதனால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு எல்லா தொலைக்காட்சிகளிலும் நிரப்பினார்கள் என்று கவனியுங்கள். பாக்கிஸ்தானுக்கு சவால்விடும் பேச்சுக்களால் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் சீமானுக்கு இடப்படும் விலங்குகள் அவர் தலைக்கான கிரீடத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. நன்றி தோழனே. அச்சம் என்பது உன்னை கண்டே அஞ்சும். எங்களுக்கான உந்தன் குரல் அகலப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Edited by valvaizagara

சீமானுக்கும் அவரின் எம் மக்கள் மீதான பற்றுக்கும் அன்பான நன்றிகள்.

ஆனால் உணர்ச்சிவசப்பட்டு ஆவேசமாக பேசும் பேச்சு எம் போராட்டத்திற்கு எந்த நன்மையையும் கொண்டுவரப் போவதில்லை, மாற்றாக தீங்கினையே கொண்டு வரும். தமிழகத்தில் இருந்து கொண்டு காத்திரமான முறையில் எம் போரட்டத்திற்கு ஆதரவு கொடுக்க கூடிய பல வழிகள் இருந்தும் ஒலிவாங்கியை மட்டுமே பயன்படுத்தி உணர்ச்சிவசப்பட்டு பேசி, இருக்கின்ற ஆதரவினையிம் குறைக்கும் செயலே இப்போது நடக்கின்றது. தமிழக மக்கள் எமக்கான ஆதரவுக்காக தம் நாட்டையும் இறையான்மையையும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. காங்கிரசுக்கும் எமது போராட்டத்தினை எதிர்க்கும் சக்திகளுக்கும் முக்கிய விடயமாக இருப்பது ராஜிவ் கொலைதான். மற்றைய விடையங்களை விட, அவர்கள் அதனை தூக்கி பிடிப்பது தமிழக மக்களை எம் போராட்டத்திற்கு எதிராக திருப்புவதற்கு பயன்பட கூடிய ஆதாரமாக அது இன்னமும் இருப்பதால் தான். இதனை புரிந்து கொள்ளாமல் ஆவேசமாக பேசும் போதும், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக கருத்துகள் வைக்கும் போதும் அவர்களின் வலையில் வீழ்வதாகத்தான் கொள்ள முடியும்

பேசாப் பொருளாக இருந்த எம் போராட்ட ஆதரவு மீண்டும் பேசும் பொருளாக காரணமாக இருந்த கம்யூனிச கட்சி நடந்து கொள்ளும் முறையை போன்றும், சில மாணவர் அமைப்புகள் டெல்லிவரை சென்று பரப்புரை செய்வது போன்ற செயல்களும், குறுக்ஸ் சொல்வது போன்ற ஆவணப்படுத்தல்களும் தான் தமிழகத்தில் இருந்து எமக்கு தேவை. அதனை செய்ய முயல்கின்ற, செய்யக்கூடிய எத்தனையோ அமைப்புகளும், தனிநபர்களும், சஞ்சிகைகளும் தமிழகத்தில் உள்ளன(ர்). ஆனால் நாம் அப்படியானவர்களின் உதவியினையோ அல்லது தொடர்புகளையோ நாடுவதேயில்லை. அவர்கள் யார் யார் என்று அறிவதில் கூட நேரம் செலவளிப்பதும் இல்லை.

Edited by நிழலி

வேதனையான விடயம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டுகொள்ள காரணம் கொடுக்காது நகரவேண்டும். ஏற்கனவே பயங்கரவாதிகள் என்ற முத்திரை அதை கவனத்தில் கொண்டு பேசினால் நல்லம். கவனத்தைப் பெறுவது முக்கியமல்ல எப்படி என்ன காரணத்துக்காக பெறப்படுகிறது என்பது தான் பயனைத்தரும்.

புத்தரின் பெயரால் திரைப்படத்திற்கு தடை என்றால் அதற்கு எதிராக வழக்கு போட்டு விபரமாக நியாயத்தை மக்களின் முன் வைத்தால் எங்கள் மீது அனுதாபம் ஆகுதல் வரும்.

இத்தனை ஊடகங்கள் உள்ள தமிழ்நாட்டில் ஏன் மீனவர் மீதான சிறீலங்கா கடற்படையின் தாக்குதலை ஆவணப்படுத்த முடியவில்லை? ஆதாரங்களை வெளி கொண்டுவர முடியவில்லை?

பலஸ்தீனர்கள் மீதான தாக்குதல் எத்தனை பதிவாகி வெளியில் வந்திருக்கிறது. தனிய குற்றச்சாட்டுகள் ஆவேசப் பேச்சுக்கள் போதாது. உண்மையில் இந்த விடையத்தில் அக்கறையிருந்தால ஆதாரங்களை ஆவணப்படுத்துங்கள். அவற்றை வெளியிட ஊடகங்கள் இருக்கு ஊடக சுதந்திரம் இருக்கு. மேடையும் மைக்கும் ஒரு கூட்டத்தை கூட்டி வைத்து ஆவேசமாக அரசியல்வாதிகள் போல் முழங்கினால் எடுபடும் நிலையில் இன்றைய சந்ததி இல்லை. நடுத்தர வர்க்கத்தின் ஆதரவை அனுதாபத்தை பெற விடையத்தை தகுந்த முறையில் ஆவணப்படுத்திக் காட்டுங்கள். சிரமம் எடுத்து ஆதாரங்களை சேகரித்து நம்பிக்கையான முறையில் முன்வைய்யுங்கள். நீங்கள் தொண்டை கிளிய மேடைகளில் கத்துவதை எடுத்தவீச்சுக்கு நம்ப வேண்டி அவசியம் எவருக்கும் இல்லை. மும்பாய் தாக்குதல்களை அதனால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு எல்லா தொலைக்காட்சிகளிலும் நிரப்பினார்கள் என்று கவனியுங்கள். பாக்கிஸ்தானுக்கு சவால்விடும் பேச்சுக்களால் அல்ல.

மருமகள் உடைத்தால் பொற்க்குடம், மாமியார் உடைத்தால் அது மண்குடம். இதுபோலத்தான் பயங்கரவாதத்தின் தன்மையும்

அரச செல்வாக்கு பங்கெடுக்கும் சம்பவம் உலக அனுதாபத்தை இலகுவில் வாங்கும்.

அரசே செய்யும் பயங்கரவாதம் ஆகக்குறைந்தது ஒரு அரசாவது பங்களித்தால் அது வெளிப்படுத்த முடியும் இல்லை என்றால் பரிதாபத்துக்கு உரியதுதான்.

இந்திய இராணுவம் யாழ்வைத்தியசாலைமீது மேற்கொண்டபடுகொலை மும்பே பயங்கரவாதத்தைவிட 1000 மடங்கு கொடூரமானது இதை எந்த உலகம் அறிந்து கொண்டது பரிதாபம் பார்க்கக்கூட ஆள் இல்லாமல் போனதே. இதர்க்கு காரணமான அரசே இது பயங்கரவாதிகளின் செயல் என்று ஒருவரியில் சொல்ல அந்த விவகாரம் அத்துடன் முற்றுப் பெற்றுவிடும்.

எனவே அரசுகள் செய்யும் காரியங்களுடன் ஒப்பீடு செய்து எமது காரியங்களுக்கும் குட்டுப் போடுதல் பொருத்தமில்லாதது.

எம்சக்திக்கு அதி உயர்ந்த பயன் தரும் செயல்களை நாம் செய்ய வேண்டும் என்று சொல்லும் உங்களின் போக்கை ஆமோதிக்கின்றேன் இருந்தும் எமக்காய் உழைப்பவர்களுக்கு தீங்குவரும் போது உடன்பாடாய் இருக்கவேண்டிய கடனும் எங்களுக்கே இருக்கின்றது.

மும்பாய் தாக்குதல்களை விட 1000 மடங்கு கொடுரமானது 1 அல்ல பல நூறு நிகழ்வுகள் தாயகத்தில் நடந்திருக்கிறது. ஆனால் அதை உலகம் புரியும்வண்ணம் ஆவணப்படுத்தி காட்டியிருக்கிறோமா? மற்றவர்களிற்கு எங்கடை வேதனைகள் அவலங்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதை அவர்களிற்கு எளிதில் புரியவைக்கும் நம்பத்தகுந்த அணுகுமுறையை கைய்யாளவேண்டியது எமது கடமை பொறுப்பு. கடந்தகால அவலங்களை விடுவோம் ஈழப்போர் 4 மூச்சுப் பெற்ற 2006 இல் இருந்து இன்றுவரை நடந்த எத்தனையே அவலங்களை ஆவணப்படுத்தி எத்தனை காணொளி விபரணங்கள் வந்துவிட்டது? தற்பொழுது நடந்தேறும் அவலங்களைப் பற்றி எத்தனை நிழல்படங்கள் காணொளிகள் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது?

இந்த நிலையில் எமது போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது என்ன? இராணுவ சாகசங்களும் தனிமனித துதிபாடல்களுமா அல்லது இனஅழிப்பை சந்திக்கும் ஒரு தேசிய இனத்தின் சுமைகள் வலிகள் பற்றி சர்வதேசம் புரிந்துகொள்ள செய்யப்பட்ட விபரணங்களா?

அங்கீகாரம் இன்றி பயங்கரவாதம் என்ற முத்திரையோடு இருக்கும் நிலையை மாற்ற எப்படி இவை உதவும்?

இந்திய அமைதிப்படை அனுபவத்தைப் பற்றி இளைப்பாறிய அதிகாரிகள் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களை எத்தனை தமிழ் தேசியம் என்று கூத்தாடும் தொலைக்காட்சிகள் பேட்டி கண்டிருக்கிறார்கள்?

புலம்பெயர்ந்த நாடுகளில் இவர்களை கூப்பிட்டு கருத்தரங்கு வைத்து உறவுப்பாலத்தை கட்ட முயல்கிறார்களா?

இது யாருடைய தவறு?

எமக்கே எம்மவர்களின் அவலத்தில் அழிவில் அக்கறை இன்றி தறிகெட்டு கூத்தாடுகிறோம். மற்றவருக்கு என்ன வில்லங்கம்? இப்படி ஒரு கேவலம் கெட்ட இனம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன?

அமெரிக்கா என்ற வல்லரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று நடத்தி இன்று அமெரிக்கா என்றாலே அவமானப்படும் வரை மாற்றியமைத்தது எது? ஈராக்கில் நடந்த சண்டையின் வீரதீரங்களை காணொளியிலும் படங்களிலும் பார்த்து ஒசமாவை புகழ்ந்து பாடல்கள் எழுதி பிறந்தநாள் கொண்டாடியா?

ஈராக்கிய மக்களின் அவலங்கள் ஆப்கானிஸ்தான் மக்களின் அவலங்கள் அபுகிரேப் சித்திரவதை குவந்தானமே நிலமைகளை ஆதரபூர்வமாக கொண்டுவந்தால் தான் ஒரு வல்லரசே அவமானப்பட்டு நிக்கிறது இத்ததை ஊடக பிரச்சார தந்திரங்களிற்கு மத்தியிலும்.

Edited by kurukaalapoovan

மும்பாய் தாக்குதல்களை விட 1000 மடங்கு கொடுரமானது 1 அல்ல பல நூறு நிகழ்வுகள் தாயகத்தில் நடந்திருக்கிறது. ஆனால் அதை உலகம் புரியும்வண்ணம் ஆவணப்படுத்தி காட்டியிருக்கிறோமா? மற்றவர்களிற்கு எங்கடை வேதனைகள் அவலங்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதை அவர்களிற்கு எளிதில் புரியவைக்கும் நம்பத்தகுந்த அணுகுமுறையை கைய்யாளவேண்டியது எமது கடமை பொறுப்பு. கடந்தகால அவலங்களை விடுவோம் ஈழப்போர் 4 மூச்சுப் பெற்ற 2006 இல் இருந்து இன்றுவரை நடந்த எத்தனையே அவலங்களை ஆவணப்படுத்தி எத்தனை காணொளி விபரணங்கள் வந்துவிட்டது? தற்பொழுது நடந்தேறும் அவலங்களைப் பற்றி எத்தனை நிழல்படங்கள் காணொளிகள் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது?

இந்த நிலையில் எமது போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது என்ன? இராணுவ சாகசங்களும் தனிமனித துதிபாடல்களுமா அல்லது இனஅழிப்பை சந்திக்கும் ஒரு தேசிய இனத்தின் சுமைகள் வலிகள் பற்றி சர்வதேசம் புரிந்துகொள்ள செய்யப்பட்ட விபரணங்களா?

அங்கீகாரம் இன்றி பயங்கரவாதம் என்ற முத்திரையோடு இருக்கும் நிலையை மாற்ற எப்படி இவை உதவும்?

இது யாருடைய தவறு?

எமக்கே எம்மவர்களின் அவலத்தில் அழிவில் அக்கறை இன்றி தறிகெட்டு கூத்தாடுகிறோம். மற்றவருக்கு என்ன வில்லங்கம்? இப்படி ஒரு கேவலம் கெட்ட இனம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன?

எமக்கு தேவை , முன்னுதாரணமான செயற்பாட்டார்கள் தான், நாமும் பின்பற்றி எதாவது செய்வோம் , ஆலோசனை கூறி எந்த பிரியோசனமும் இல்லை, அவ்வாறு தாங்கள் ஏதாவது செயலில் செய்து கொண்டு இருந்தால் மன்னிக்கவும்

சீமானுக்கும் அவரின் எம் மக்கள் மீதான பற்றுக்கும் அன்பான நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கே எம்மவர்களின் அவலத்தில் அழிவில் அக்கறை இன்றி தறிகெட்டு கூத்தாடுகிறோம். மற்றவருக்கு என்ன வில்லங்கம்? இப்படி ஒரு கேவலம் கெட்ட இனம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன?

நியாயமான கேள்வி. கவலையீனமாகவும், சோம்பேறி தனமாகவும் , ஏனோ தானோ என்ற நிலையிலும் உள்ள எம்மவர்கள் பலர். ஒரு சிலரின் தியாகம் கூட இதனால் வீணாக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய மண்ணே வணக்கம் - உன்

இறையாண்மைக்கு என்ன விளக்கம்?!

உண்மையைச் சொன்னால் கலக்கம்!

கொள்வருக்கு இணைங்குவதோ ஜனநாயகம்?!!

ஈழமெனும் தேசத்திற்காக தன் உயிர்

சோதரர்க்காக கொடுக்கும் குரலை

ஒடுக்கினால் அடங்கிவிடுமோ உண்மை??

இல்லை இல்லவே இல்லை இது வரலாறு

கண்ட உண்மை

எத்தனை எத்தனை உயிர்கள் ஈழத்தில்

அழிவதென்று அறிவாய்! உன் ஆயுதமும்

நீ கொடுத்து ஈழத்தமிழனின் இரத்தத்தில்

குளிர்காய்கிறாய்! அதிலே சுகம் காண்கிறாய்!

சத்தியம் தோற்பது இல்லை தர்மங்கள் செத்ததும் இல்லை!

உத்தம உயிர்களைக்கொடுத்து தம் ஈழத்தின் சுதந்திரம்

வாங்கும் வீரர்கள் சோர்வதும் இல்லை!

ஈழத்தாயகம் 'ஒன்றே எம் எல்லை"..

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மும்பாய் தாக்குதல்களை விட 1000 மடங்கு கொடுரமானது 1 அல்ல பல நூறு நிகழ்வுகள் தாயகத்தில் நடந்திருக்கிறது. ஆனால் அதை உலகம் புரியும்வண்ணம் ஆவணப்படுத்தி காட்டியிருக்கிறோமா? மற்றவர்களிற்கு எங்கடை வேதனைகள் அவலங்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதை அவர்களிற்கு எளிதில் புரியவைக்கும் நம்பத்தகுந்த அணுகுமுறையை கைய்யாளவேண்டியது எமது கடமை பொறுப்பு. கடந்தகால அவலங்களை விடுவோம் ஈழப்போர் 4 மூச்சுப் பெற்ற 2006 இல் இருந்து இன்றுவரை நடந்த எத்தனையே அவலங்களை ஆவணப்படுத்தி எத்தனை காணொளி விபரணங்கள் வந்துவிட்டது? தற்பொழுது நடந்தேறும் அவலங்களைப் பற்றி எத்தனை நிழல்படங்கள் காணொளிகள் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது?

இந்த நிலையில் எமது போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது என்ன? இராணுவ சாகசங்களும் தனிமனித துதிபாடல்களுமா அல்லது இனஅழிப்பை சந்திக்கும் ஒரு தேசிய இனத்தின் சுமைகள் வலிகள் பற்றி சர்வதேசம் புரிந்துகொள்ள செய்யப்பட்ட விபரணங்களா?

அங்கீகாரம் இன்றி பயங்கரவாதம் என்ற முத்திரையோடு இருக்கும் நிலையை மாற்ற எப்படி இவை உதவும்?

இது யாருடைய தவறு?

எமக்கே எம்மவர்களின் அவலத்தில் அழிவில் அக்கறை இன்றி தறிகெட்டு கூத்தாடுகிறோம். மற்றவருக்கு என்ன வில்லங்கம்? இப்படி ஒரு கேவலம் கெட்ட இனம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன?

உலக அரசியல் போக்கு என்பது மனுதர்மம் போற்றுகின்ற நெறி என்ற எண்ணத்திலா உங்கள் கருத்துக்கள் விரிகின்றது?

எந்தக் கண்ணுக்கு வெண்ணை எந்தக் கண்ணுக்கு சுண்ணாம்பு என்பதை அடையக் கூடிய இலாபத்தை வைத்து தீர்மானிக்கின்ற இந்த உலகம், பயகரவாதம் என்று முத்திரைகுத்தினால் அதனால் போராட்டம் பயங்கரவாதம் ஆகிவிடாது.

மண்டேலாவின் போராட்டம் தொடக்கம் எத்தனையோ போராட்டங்கள் உதாரணத்துக்கு கிடக்கின்றது பயங்கரவாதப் பெயரோடு வெற்றி பெற்றமைக்கு.

குரங்கைக் கூட மனித வேசம் போட்டு ஐநாவுக்கு அனுப்பி இவர்களின் சாதனைகளைப் பாருங்கள் என்று செயற்பாடுகளைக் கூட வரிசைப் படுத்த அரச செல்வாக்கால் முடியும். உதாரணங்களாக பிள்ளையான், சங்கரியார் லக்ஸ்மன்கதிர்காமர் அரச செல்வாக்கே அத்தனை செயற்பாடுகளுக்கும் காரணமாக இருக்கும், செயல் வீரர்கள் என்று இலவசமாக பேர்கள் கிடைக்கும் இவர்களுக்கு.

ஆனால் எமது தரப்பாகச் செயற்படும் செயலர்களை இந்த அரச செல்வாக்கு எவ்வளவு தூரம் தடங்கல்களைச் செய்து கொண்டே இருக்கும் என்பது எமக்குத் தெரியாததும் அல்ல இதுவே யதார்த்தம். இதன் பழியை செயலர்களின் இயலாமை என்று பொறுப்புக்கொடுக்க முடியாது. உரிய வழிகளைக் தேடி எமது முயற்சியை எமது இயலுமையின் எல்லைவரை பிரயோகிப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.