Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலும் வேதனையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

வஞ்சிகளுக்கும் ,வேந்தர்களுக்கும் இன்றைக்கு நான் அறிந்த விசயம் ஒன்றை உங்களுக்கும் தெரியபடுத்த விரும்புகிறேன்

என்னதான் காதல் ____இனிப்பு ,தேன் ,அமிர்த்தம் என்றாலும் அதைசிலர் தவறாக பயன் படுத்தி தங்கள் வாழ்கையை கேள்வி குறியாக்கி விடுகின்றானர் அண்மையில் நான் அறிந்த சம்பவம் ஒன்று

பெண் .....ஆறு மாதம் தனது படிப்பை முடித்திருந்தால் ஒரு பொறியியலாளர்

ஆண்...... வெளிநாட்டில் இருந்து சென்ற ஒருவர்

இருவரும் காதலித்தார்களாம் ஆனால் இது வீட்டுக்கு பிடிக்கவில்லையாம் உடனே இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்........

........................என்னதான் பிள்ளையை பெற்று வளர்த்து,எவ்வளவு கஸ்ரப்பட்டு காசு செலவழித்து ,படிப்பித்து பெரியவர்களாக்கி வளர்த்து விடுகின்றனர் தாய் தந்தையர் ஆனால் இவர்களோ அந்த நேரத்தில் தாய்தந்தையரை மறந்து வீட்டை விட்டு ஓடி செல்கின்றனர். அந்த தாய் தந்தையர் படும் வேதனை அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை அந்த சமுதாய மக்களோ அந்த தாய் தந்தையர் மீது வளர்த்த வளர்ப்பு பற்றி ஆயிரம் கேள்வி கணைகள் தொடுக்கின்றனர்

..ஆனல் இவர்களோ தங்கள் சந்தோசத்தை முக்கியமாக நினைத்து வாழ்க்கை என்னும் ஆழமான கடலில் துடுப்பு இல்லாமல் பயணிக்கிறார்கள் [இருவருக்கும் வேலை இல்லை] அது எவ்வளவு கஸ்ரம் என்பது அவர்களுக்கு போக போகத்தான் தெரியும்

ஏன் இப்படி செய்கிறார்கள் உலகிலேயே பெண்கள் முடிந்து விடுவார்கள் என்பதாலா

அல்லது ஆண்கள்தான் முடிந்து விடுவார்களா சில நேரம் நாம் செய்யும் தவறு நம் வாழ்க்கையை கேள்வி குறியாக்கின்றது :)

இன்று அந்த பெண் தன் எதிர்காலத்தை தொலைத்துவிட்டு அடுப்பு ஊதுகிறார்

அந்த ஆண் கட்டியதை கரை சேர்க்க கடிகாரம் போல் ஓய்வில்லாமல் கூலியாக

நான் கேட்க்கும் கேள்வி இதுதான்

ஏன் இந்த காதலை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பயன் படுத்திகொள்கிறார்கள்[ ஆணும் ,பெண்ணும்] :D

அந்த பெண் தன் எதிர்காலத்தை நினைத்திருந்தால் இன்று ஒரு பொறியியலாளராக எங்க கள உறவுகள் உங்கள் கருத்தையும் சொல்லுங்கோவன் பார்ப்போம் :D

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு அவர்கள் மட்டுமல்ல காரணம். இள வயதினர் மத்தியில் காதல் என்ற போதையை ஊட்டி வளர்த்துப் பிழைப்பு நடத்தும் கூட்டங்களும் தான் காரணம்.

காதல் சிந்திக்க விடாது. அல்லது காதலர்களை சிந்திக்க விடமாட்டார்கள். சிந்தித்துவிட்டால்.. இருக்கிற தப்பு தண்டவாளம் எல்லாம் தெரிய வந்திடுமே..!

நான் கண்ட அனுபவத்தில சொல்லுறன்.. காதலைப் போல முட்டாள் தனமான செயல் உலகில் வேறெதும் இருக்க முடியாது. காதலில் வென்றவர்கள் கோமாளிகள். தோன்றவர்கள்.. ஏமாளிகள்..! எனவே வென்றதுக்காக சந்தோசப்படவும் முடியாது. தோற்றதற்காக கவலைப்படவும் கூடாது. தோற்றால் விடுதலை. வென்றால் சிறை..! :)

இவர்கள் (நீங்கள் சொன்ன சொந்தங்கள்) செய்ய வேண்டியது.. விட்ட தவறுக்காக வருந்திக் கொண்டிருப்பதிலும் வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக்கிற வழியைத் தேடுறதுதான் சரியானது..! இதற்காகப் பெற்றோரை நோக முடியாது. அவர்கள் செய்த தவறுதான் என்ன இங்கு. ஏமாந்ததும் ஏமாற்றப்பட்டதும் காதலர்களே..! :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு. ஏமாந்ததும் ஏமாற்றப்பட்டதும் காதலர்களே..! :D

இதை இதைத்தான் நம்ம நெடுக்கிடம் இருந்து எதிர்பார்த்தேன் :D :D

கண்ணுக்கு தெரியாத பேய்க்கு காதல் என்று வார்த்தை சொல்லி கடலில் மூழ்குவதுதான் காதல் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இங்கு அந்த காதலர்களை மட்டும் குறைசொல்லுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. இரண்டு பேரும் தமக்கு பிடித்தவருடன் தானே தமது வாழ்க்கைப்பயணத்தை மேற்கொள்ளுகிறார்கள்? அந்த காதலன் அவளை களட்டிவிட்டுட்டானா என்ன, இரண்டு பேரும் சேர்ந்துதானே வாழ்கிறார்கள்? மனதிற்கு பிடிக்காதவருடன் வாழ்வதை விட, மனதிற்கு பிடித்தவருடன் (கூலிவேலை செய்தாவது) ஒன்றாக வாழ்வது எவ்வளவோ மேல்! பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தனக்கு பிடித்த வாழ்க்கைத்துணையை கைவிடலாமா? இங்கு தப்பு யாரின் மீது உள்ளது? இரண்டு பக்கமும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

காதலில் வென்றவர்கள் கோமாளிகள். தோன்றவர்கள்.. ஏமாளிகள்..! எனவே வென்றதுக்காக சந்தோசப்படவும் முடியாது. தோற்றதற்காக கவலைப்படவும் கூடாது. தோற்றால் விடுதலை. வென்றால் சிறை..! :)

உலகம் கோமாளிகளாலும் ஏமாளிகளாலும்தான் நிரம்பியுள்ளது. இதற்கு விதிவிலக்காக இருப்பவர்கள் என்று நம்புவர்களும் இதற்குள்ளேதான் அடங்குகின்றார்கள்.

மேற்படி சம்பவம் சொல்லாத செய்திகள் பலவுள்ளன என்றே நினைக்கிறேன்.

ஆறு மாதத்தில் பொறியியலாளராக வரக்கூடியவரென்றால் அறிவு உள்ளவராகத்தான் இருக்கவேண்டும். எனவே தீரயோசிக்காமல் காதலனுடன் சென்றுவிட்டார் என்று எடுத்துக்கொள்ள முடியாது. இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றாய் இருப்போம் என்று புறப்பட்டவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இங்கு அந்த காதலர்களை மட்டும் குறைசொல்லுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. இரண்டு பேரும் தமக்கு பிடித்தவருடன் தானே தமது வாழ்க்கைப்பயணத்தை மேற்கொள்ளுகிறார்கள்? அந்த காதலன் அவளை களட்டிவிட்டுட்டானா என்ன, இரண்டு பேரும் சேர்ந்துதானே வாழ்கிறார்கள்? மனதிற்கு பிடிக்காதவருடன் வாழ்வதை விட, மனதிற்கு பிடித்தவருடன் (கூலிவேலை செய்தாவது) ஒன்றாக வாழ்வது எவ்வளவோ மேல்! பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தனக்கு பிடித்த வாழ்க்கைத்துணையை கைவிடலாமா? இங்கு தப்பு யாரின் மீது உள்ளது? இரண்டு பக்கமும் தான்.

இங்கு யாரையும் குறை சொல்ல வில்லை தங்கள் நினைத்த வாழ்கையை வாழலாம் அந்த வாழ்க்கை வாழ்வதற்க்கு முன் எதிர் காலத்தை நோக்க வேண்டும் ஏன் அந்த பெண் அவசரப்பட்டு ஓடி விடுகிறாள் இன்னும் ஆறு மாதம் தனது படிப்பை முடித்திருந்தால் இன்று அடுப்பு ஊத தேவை யில்லை அதை அந்த நேரத்தில் சிந்திக்கவில்லை இதுதான் உங்கள் காதலின் வேலையா ஒரு வீட்டுக்கு பெண் என்பவள் அத்திவாரம் போல ஆட்டம் கண்டால் இடிந்து விழும் வாழ்க்கையும் கூட [வீடும் கூட] இங்கு காதலர்களை குறை கூறவில்லை அவர்கள் எடுக்கும் முடிவைத்தான் குறைகூறுகிறோம் :D:D

உலகம் கோமாளிகளாலும் ஏமாளிகளாலும்தான் நிரம்பியுள்ளது. இதற்கு விதிவிலக்காக இருப்பவர்கள் என்று நம்புவர்களும் இதற்குள்ளேதான் அடங்குகின்றார்கள்.

மேற்படி சம்பவம் சொல்லாத செய்திகள் பலவுள்ளன என்றே நினைக்கிறேன்.

ஆறு மாதத்தில் பொறியியலாளராக வரக்கூடியவரென்றால் அறிவு உள்ளவராகத்தான் இருக்கவேண்டும். எனவே தீரயோசிக்காமல் காதலனுடன் சென்றுவிட்டார் என்று எடுத்துக்கொள்ள முடியாது. இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றாய் இருப்போம் என்று புறப்பட்டவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

இது உன்மை சம்பவம் இன்னும் திருமண சான்றிதழ் கிடைக்காமல் ஒரு விடுதியில் கிருபன் :D:)

அப்போ கிருபன் காதலர்களையும் ஏமாளிகள் கோமாளிகள் என்றுதான் சொல்றீங்கள் போல :D

சந்தோசம் என்பது அன்றாடம் அன்றாடம் செத்து செத்து பிளைப்பதா அப்படியென்றால் அந்த வாழ்கை வெறுத்துவிடும் நாளைக்கு அந்த காதல் நீதி மன்றத்தை நாடும் என்பது உறுதி :D

Edited by muneevar

அண்மையில் நான் அறிந்த சம்பவம் ஒன்று

பெண் .....ஆறு மாதம் தனது படிப்பை முடித்திருந்தால் ஒரு பொறியியலாளர்

ஆண்...... வெளிநாட்டில் இருந்து சென்ற ஒருவர்

இது எங்கு நடந்ததென்று தெரியவில்லை.

ஆனால், அந்த 6 மாத படிப்பை கலியாணம் செய்த பிறகாவது படித்து முடித்திருக்கலாமே. அல்லது படித்து முடித்ததும் கலியாணம் செய்திருக்கலாம்.

இவர்கள் சாதாரண - எளிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்து அவ்வாறு செய்தால் அதில் தவறில்லை தான், அது நிம்மதியான வாழ்க்கையும் கூட. ஆனால், அன்றாட வாழ்வுக்கே திண்டாட வேண்டிய நிலை வருமோ என ஏற்கெனவே சிந்தித்து முடிவெடுத்திருக்கலாம்.

சில நேரங்களில், ஓடிப்போதலும் தற்கொலை செய்வதைப் போல தான். அந்தப் பொழுதுகளில் புத்திசாலித்தனமாக சிந்திக்க தோன்றாது. அந்த நேரம் எடுக்கும் முடிவு வாழ்க்கையையே தலை கீழாக மாற்றியும் விடலாம்.

மேலும், காதலில் தவறு இல்லை. காதலிப்பவர்கள் தான் தவறான முடிவை எடுக்கிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் மட்டும் போதாது. வாழ்க்கைக்கு தேவையான புத்திசாலித்தனமான முடிவுகளையும் எடுக்க தெரியவேண்டும்.

எப்படியோ, இவ்வாறான சம்பவங்கள் மற்றவர்களுக்கு ஒரு பாடம்.

  • கருத்துக்கள உறவுகள்

மேல மல்லிகை வாசம் சொன்ன மாதிரி இன்னும் 6மாதத்தில் படிப்பு முடியும் என்றால் அதை முடிப்பது பெரிய விசயம் இல்லை.அவ்ாகள் வாழும் வாழ்க்கை அவர்களுக்கு திருப்பதியாக இருந்தால் நாங்கள் ஏன் வீனாக குத்தி முறிவான் :)

  • கருத்துக்கள உறவுகள்

வேற என்ன.. எல்லாம் வயசுக் கோளாறுதான்..! ஹோர்மோன் எகிறிப் பாயேக்க வடிவா சிந்திக்க ஏலாது. பெற்றோர்தான் அதைப் புரிஞ்சு நடந்து கொள்ள வேணும்..! :(

பெண் .....ஆறு மாதம் தனது படிப்பை முடித்திருந்தால் ஒரு பொறியியலாளர்

ஆண்...... வெளிநாட்டில் இருந்து சென்ற ஒருவர்

அதுசரி.. முனி கிட்டடியில ஊருக்குப் போனதோ?? :(:)

எல்லாம் காலம் கடந்த ஞானம் ஐசே. இப்ப இங்க சொல்லி அழுது என்ன செய்யிறது?? :D:lol:

முனிவர், இது அவர்களைப் பொறுத்த விடயம். அவர்கள்தான் உங்கள் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். எவ்வளவுதான் கஸ்டப்பட்டாலும், தாங்கள் ஒன்று சேர்ந்ததையிட்டு சந்தோசமாக வாழலாம், அல்லது இவ்வளவு கஸ்டப்படுவதற்குத் திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாம் எனவும் யோசிக்கலாம். ஆகவே, இது அவரவர்களைப் பொறுத்த விடயம். இருந்தாலும், அவர்கள் அவசரப்பட்டு ஓடிப்போகாமல், தங்களை நிலைப்படுத்திக் கொண்டு திருமணம் செய்திருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சாதாரண - எளிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்து அவ்வாறு செய்தால் அதில் தவறில்லை தான், அது நிம்மதியான வாழ்க்கையும் கூட. ஆனால், அன்றாட வாழ்வுக்கே திண்டாட வேண்டிய நிலை வருமோ என ஏற்கெனவே சிந்தித்து முடிவெடுத்திருக்கலாம்.

சில நேரங்களில், ஓடிப்போதலும் தற்கொலை செய்வதைப் போல தான். அந்தப் பொழுதுகளில் புத்திசாலித்தனமாக சிந்திக்க தோன்றாது. அந்த நேரம் எடுக்கும் முடிவு வாழ்க்கையையே தலை கீழாக மாற்றியும் விடலாம்.

மேலும், காதலில் தவறு இல்லை. காதலிப்பவர்கள் தான் தவறான முடிவை எடுக்கிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் மட்டும் போதாது. வாழ்க்கைக்கு தேவையான புத்திசாலித்தனமான முடிவுகளையும் எடுக்க தெரியவேண்டும்.

எப்படியோ, இவ்வாறான சம்பவங்கள் மற்றவர்களுக்கு ஒரு பாடம்.

இதேயேதான் சொல்ல வருகிறோம் ....நன்றி மல்லிகை வாசம் :)

sagevan Posted நேற்று, 09:37 PM

மேல மல்லிகை வாசம் சொன்ன மாதிரி இன்னும் 6மாதத்தில் படிப்பு முடியும் என்றால் அதை முடிப்பது பெரிய விசயம் இல்லை.அவ்ாகள் வாழும் வாழ்க்கை அவர்களுக்கு திருப்பதியாக இருந்தால் நாங்கள் ஏன் வீனாக குத்தி முறிவான்

சகிவன் நாம் திருப்தி என்பதை எப்படி உணர்கிறோம் எல்லாம் கிடைத்தால்தான் திருப்தி ஆனால் இந்த ஓடி போன வாழ்க்கையில் ஏதாவது திருப்தி கிடைக்குமா என்பதில் எனக்கு கடும் சந்தேகம் :D

Danguvaar Posted நேற்று, 09:58 PM

வேற என்ன.. எல்லாம் வயசுக் கோளாறுதான்..! ஹோர்மோன் எகிறிப் பாயேக்க வடிவா சிந்திக்க ஏலாது. பெற்றோர்தான் அதைப் புரிஞ்சு நடந்து கொள்ள வேணும்..!

அதுசரி.. முனி கிட்டடியில ஊருக்குப் போனதோ??

எல்லாம் காலம் கடந்த ஞானம் ஐசே. இப்ப இங்க சொல்லி அழுது என்ன செய்யிறது??

டங்குவார் இதுக்கு ஏன் பெற்றோரை கொண்டு சொருகிறீங்கள் டங்கு இவர்கள் காதல் என்னும் நடு ரோட்டில் நிற்க்கும் போது பெற்றோரால் ஒன்றும் செய்ய முடியாது அவர்களேதான் வரும் வாகனத்தை பார்த்து விலகி கொள்ளவேண்டும் :lol:

டங்கு ஊருக்கு போனன் அக்க ஊசி போட்டு அனுப்பி விட்டாவு இங்கு :lol::D

தமிழச்சி Posted இன்று, 08:07 AM

முனிவர், இது அவர்களைப் பொறுத்த விடயம். அவர்கள்தான் உங்கள் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். எவ்வளவுதான் கஸ்டப்பட்டாலும், தாங்கள் ஒன்று சேர்ந்ததையிட்டு சந்தோசமாக வாழலாம், அல்லது இவ்வளவு கஸ்டப்படுவதற்குத் திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாம் எனவும் யோசிக்கலாம். ஆகவே, இது அவரவர்களைப் பொறுத்த விடயம். இருந்தாலும், அவர்கள் அவசரப்பட்டு ஓடிப்போகாமல், தங்களை நிலைப்படுத்திக் கொண்டு திருமணம் செய்திருக்கலாம்

தமிழச்சி அக்கா அதைதான் நாங்களும் சொல்ல வருகிறோம் எதற்க்காக இப்படியான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பது தான் எங்களுக்கு மிககவலை சற்று சிந்தித்தால் வாழ்க்கை வாழ்க்கையாக இருக்கும் இல்லாவிட்டால் வாழ்க்கை வழைந்து கேள்விகுறியாகிவிடும் :D

Edited by muneevar

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் இதுக்கு ஏன் பெற்றோரை கொண்டு சொருகிறீங்கள் டங்கு இவர்கள் காதல் என்னும் நடு ரோட்டில் நிற்க்கும் போது பெற்றோரால் ஒன்றும் செய்ய முடியாது அவர்களேதான் வரும் வாகனத்தை பார்த்து விலகி கொள்ளவேண்டும் :lol:

டங்கு ஊருக்கு போனன் அக்க ஊசி போட்டு அனுப்பி விட்டாவு இங்கு :lol::D

முனி.. நான் காதலர்கள் ஓடிப் போறதுக்கு வக்காலத்து வாங்கேல்ல. ஆனால் அவையள் ஓடிப் போறதுக்கு காரணம் என்ன? முதலாவது பெற்றோர். இரண்டாவது சமுதாயம்.

திருமணம் செய்யும் வயதடைந்த ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கினம் எண்டால், அதில பெற்றோர் சொல்லுறதுக்கு ஒண்டுமில்ல. அவையள் அப்பிடிச் சொல்லிச்சினம் எண்டால் மற்றவர் சுதந்திரத்தில தலையிடுகினம் எண்டு அர்த்தம். உங்கட சுதந்திரத்தில ஆராவது தலையிட முடியுமோ, அது பெற்றோராவே இருந்தாலும்? பெற்றோர் இப்பிடி உருட்டி மிரட்டி தங்கட விருப்பத்துக்கெல்லாம் செய்யிறதாலதான் கள்ளக்காதல், கொலை, ஓடிப்போறது எண்டெல்லாம் நடக்குது. தமிழ்நாட்டில மணமகள்மாரே ஆளை வச்சு கொலையும் செய்யினம். :D

எங்கட சமுதாயம் வித்தியாசமானதுதான். ஆனால் காதலிப்பவர்களுக்கு அதெல்லாம் ஒரு விசயமே இல்லை. ஏனெண்டால் அவையளுக்குள்ள ஓடுற ஹோர்மோனும், தன் விருப்பம் போலவே வாழ்கிற ஒரு வெள்ளையின் ஹோர்மோனும் ஒண்டுதானே? பிறகு எப்பிடி வேறமாதிரி சிந்திக்கிறது? அப்பிடி சிந்திக்கிற பக்குவம் இருந்திச்சிது எண்டால் அவையள் வயது முதிர்ந்த ஞானப்பழங்கள் எண்டு அர்த்தம். :D

அதனால இப்பிடி ஒரு பிரச்சினை வரேக்குள்ள பெற்றோர்தான் முழிச்சுக் கொள்ளோணும். அதட்டி உருட்டி கட்டாயக் கல்யாணம் அவசரமா செய்து வைக்காமல், பொறுமையோட நடந்துகொள்ள வேணும். தங்கள் பிள்ளைகள் மேல உள்ள அன்பை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை அவர்களுக்கு உறுதிப் படுத்த வேண்டும்.

உதாரணமாக, அந்தப் பெண்ணிடம் பேசி, படிப்பை முடித்த பிறகு கல்யாணம் செய்து வைக்கிறோம் என்று பேசியிருந்தால், அந்தப் பெண் நிச்சயம் கேட்டிருப்பார். படிப்பை முடிச்ச பிறகும் காதல் தொடர்ந்தால், கல்யாணம் செய்து வைக்க வேண்டியதுதானே. ஆனால் அந்தக் காலப் பகுதியில் சோடிகளே அந்தரப்படாமல் சிந்திச்சு சில நேரம் தாங்களாவே பிரியும் சந்தர்ப்பமும் உண்டு. அதை விட்டிட்டு பெற்றோர் அடியடா பிடியடா எண்டால் பிள்ளையளும் எகிறிக் குதிக்கத்தான் செய்வினம்.

நான் பார்த்த ஒரு சில சம்பவங்களில், காதலர்கள் தாங்களாவே பிரியும் சந்தர்ப்பம் இருந்தும் பெற்றோரின் அடாவடியால, அவையள் வாழ்ந்துகாட்ட வேணும் எண்ட வைராக்கியத்தாலயே கல்யாணம் செய்து கொண்டவை. இதால ஆருக்கு நன்மை? பெற்றோர் நினைச்சதும் நடக்கேல்ல. பிள்ளையளுக்கும் சரியான சோடி அமைய இல்லை. :)

அதனாலதான் பெற்றோர் சிந்திச்சு செயல்பட வேணும் எண்டு சொன்னன். முனிவரிட்ட இருந்து சிஸ்யைமாரை ஆசிரமத்தில பிரிச்ச்சு வைச்சால் முனிவருக்கு கொலை வெறி வராது? அதுமாதிரிதான் இதுவும். :D

தமிழச்சி அக்கா அதைதான் நாங்களும் சொல்ல வருகிறோம் எதற்க்காக இப்படியான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பது தான் எங்களுக்கு மிககவலை சற்று சிந்தித்தால் வாழ்க்கை வாழ்க்கையாக இருக்கும் இல்லாவிட்டால் வாழ்க்கை வழைந்து கேள்விகுறியாகிவிடும் :wub:

இதற்குக் காரணம் டங்குவார் கூறியது போல எங்கள் பெற்றோரும் சமுதாயமுமே. எங்கள் பெற்றோரோ, சமுதாயமோ வாழ்க்கையில் நாம் சரியான முடிவை எடுப்பதற்குக் கற்றுத் தருவதில்லை. எல்லாமே அவர்களின் விருப்பப்படிதான் நடக்கவேண்டுமென நினைப்பார்கள். எங்கள் பெற்றோர்களும், பெரியவர்களும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று, பிள்ளைகளின் விருப்பு, வெறுப்புகளைக் கவனத்தில் எடுக்காது, பொருத்தத்தையும் உறவுகளையும் பார்த்துச் செய்து வைத்து விடுகிறார்கள். அவர்களின் மனப்பொருத்தத்தையோ, விருப்பு, வெறுப்புகளையோ கவனத்தில் எடுப்பதில்லை. சமீபத்தில் எனக்கு அறிமுகமான பெண்ணொருவர்கூட இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் படித்தவரைத் திருமணம் செய்யவேண்டுமென நினைத்திருந்தார். அவரும் படித்திருக்கிறார். அவருக்கு வயது கூடிக்கொண்டு போகிறதென்று அவசரப்பட்டு, படிக்காத ஒருவரைப் பொய் சொல்லித் திருமணம் முடித்திருக்கிறார்கள். அப்பெண்ணிற்கும் அவர்கள் வீட்டிற்கு வந்து சென்று நிச்சயம் முடித்தபின்பே அவருக்கு உண்மை தெரியவந்தது. அம்மணமகன் நல்லவராக இருந்தபடியால் அந்தப் பெண் ஓரளவு ஏற்றிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு அதில் சந்தோஷமே இல்லை. மணமகன் படிக்காதது அவரை உறுத்திக் கொண்டேயிருக்கிறது. அதனால் அவரால் சுமூகமாகப் போகமுடியாமல் உள்ளது. இது நடந்தது கனடாவில். அப்பெண்ணும் இங்கு பல வருடங்களாக இருக்கிறார். இவ்வாறான சம்பவங்களை நான் பரவலாகக் கண்டிருக்கிறேன்.

முக்கியமாகப் பெண்களுக்கு, விழிப்புணர்வு நிச்சயம் தேவை. பள்ளிப்படிப்பு மட்டும் போதாது, வாழ்க்கையை எப்படிக் கொண்டுபோகவேண்டும் என்றும் தெரிந்திருக்கவேண்டும் என்பதற்கு நீங்கள் குறிப்பிட்ட பெண்ணே சிறந்த உதாரணம். பொறியியல் படிக்கும் ஒரு பெண் நிச்சயம் நன்றாகப் படிக்கக்கூடியவராகத்தான் இருப்பார். இருந்தாலும் வாழ்க்கையில் அவர் தோற்றுத்தானே போய்விட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த பெண் தன் எதிர்காலத்தை நினைத்திருந்தால் இன்று ஒரு பொறியியலாளராக எங்க கள உறவுகள் உங்கள் கருத்தையும் சொல்லுங்கோவன் பார்ப்போம் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குக் காரணம் டங்குவார் கூறியது போல எங்கள் பெற்றோரும் சமுதாயமுமே. எங்கள் பெற்றோரோ, சமுதாயமோ வாழ்க்கையில் நாம் சரியான முடிவை எடுப்பதற்குக் கற்றுத் தருவதில்லை. எல்லாமே அவர்களின் விருப்பப்படிதான் நடக்கவேண்டுமென நினைப்பார்கள். எங்கள் பெற்றோர்களும், பெரியவர்களும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று, பிள்ளைகளின் விருப்பு, வெறுப்புகளைக் கவனத்தில் எடுக்காது, பொருத்தத்தையும் உறவுகளையும் பார்த்துச் செய்து வைத்து விடுகிறார்கள். அவர்களின் மனப்பொருத்தத்தையோ, விருப்பு, வெறுப்புகளையோ கவனத்தில் எடுப்பதில்லை. சமீபத்தில் எனக்கு அறிமுகமான பெண்ணொருவர்கூட இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் படித்தவரைத் திருமணம் செய்யவேண்டுமென நினைத்திருந்தார். அவரும் படித்திருக்கிறார். அவருக்கு வயது கூடிக்கொண்டு போகிறதென்று அவசரப்பட்டு, படிக்காத ஒருவரைப் பொய் சொல்லித் திருமணம் முடித்திருக்கிறார்கள். அப்பெண்ணிற்கும் அவர்கள் வீட்டிற்கு வந்து சென்று நிச்சயம் முடித்தபின்பே அவருக்கு உண்மை தெரியவந்தது. அம்மணமகன் நல்லவராக இருந்தபடியால் அந்தப் பெண் ஓரளவு ஏற்றிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு அதில் சந்தோஷமே இல்லை. மணமகன் படிக்காதது அவரை உறுத்திக் கொண்டேயிருக்கிறது. அதனால் அவரால் சுமூகமாகப் போகமுடியாமல் உள்ளது. இது நடந்தது கனடாவில். அப்பெண்ணும் இங்கு பல வருடங்களாக இருக்கிறார். இவ்வாறான சம்பவங்களை நான் பரவலாகக் கண்டிருக்கிறேன்.

முக்கியமாகப் பெண்களுக்கு, விழிப்புணர்வு நிச்சயம் தேவை. பள்ளிப்படிப்பு மட்டும் போதாது, வாழ்க்கையை எப்படிக் கொண்டுபோகவேண்டும் என்றும் தெரிந்திருக்கவேண்டும் என்பதற்கு நீங்கள் குறிப்பிட்ட பெண்ணே சிறந்த உதாரணம். பொறியியல் படிக்கும் ஒரு பெண் நிச்சயம் நன்றாகப் படிக்கக்கூடியவராகத்தான் இருப்பார். இருந்தாலும் வாழ்க்கையில் அவர் தோற்றுத்தானே போய்விட்டார்.

படித்த.. வேலையுள்ள.. வீடுவாசல் உள்ள..கார் வைச்சிருக்கும்.. நன்னடைத்தையுள்ள.. உயர்சாதி.. ஆண் விலங்கொன்று.. யாழ்ப்பாணத்துப் பாரம்பரிய பனங்கொட்டைத்தலை பெண்ணுக்கு வேண்டும். இதுதான் யாழ்ப்பாணத்துப் பனங்கொட்டைகளின் சிந்தனையில் திருமணம் என்றதும் உதிக்கும் விடயம்.

வாழ்க்கை என்பது படிப்பில.. வேலையில.. வீடுவாசல் வைச்சிருக்கிறதில.. கார் வைச்சிருக்கிறதில அல்ல ஆரம்பிப்பது.

படிப்பு.. காலம் பூராவும் பெறக் கூடியது.

வேலை நிரந்தரமற்றது. கார் பழுதாகி விடக் கூடியது. வீடு கடனை கூட்டுவது. நல்லவன் எப்பவும் கெட்டவனாக மாறக் கூடிய சூழல் உள்ளது. ஆக அடிப்படையில்.. பிரச்சனைகளுக்குரிய விடயங்களை விரும்புகிறார்களே தவிர.. ஒரு ஆணைத் தெரிவு செய்யும் போது அவனுடன் ஒத்துழைத்து எந்த சூழ்நிலையையும் சமாளித்து வாழ்வன் என்ற நம்பிக்கை என்பது இன்றைய பெண்களிடம் இல்லை என்பதையே மேற்குறிப்பிட்ட கருத்து இனங்காட்டுகிறது.

ஒரு பெண் ஆணைச் சார்ந்திருக்கும் தன்மை முற்றாக நீங்க வேண்டும். ஆணும் பெண்ணைச் சார்ந்திருக்கும் நிலை முற்றாக நீங்க வேண்டும். படிப்பு என்பது குடும்பத்துக்கு அவசியம் தான். அதற்காக இருவரும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்ற பேராசை அவசியமன்று. ஒருவர் படித்திருந்து மற்றவர் படிக்காதது ஒரு குறையல்ல. அதை நிறைவாக்க பல வழிகள் இருக்கின்றன. அப்படி இருக்க அதில் என்ன உறுத்தல்..! ஆனால் படித்தவர் என்று பொய் சொல்வது கூடாது.

இன்றைய உலகில் பெண்கள் தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய உழைக்க வேண்டும். படித்திருக்க வேண்டும். ஆண்களும் அப்படித்தான். அதற்காக பட்டப்படிப்பை எதிர்பார்க்க முடியாது.பொதுவா எல்லோரும் ஓல் வரையாவது படிச்சிருப்பினம். அதுபோதும்.. ஒருவன்.. சாதாரண குடும்ப வாழ்க்கைக்குள் நுழைய. அதற்கேற்பதான் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஒரு பெண் சுயசார்ப்புள்ளவளாக இருக்கும் நிலையில் ஏன் ஆண்களிடம் படிப்பை.. காரை.. வீடை.. எதிர்பார்க்கிறாள். தானே அதை பெற்றுக் கொள்ள முயலலாம் தானே. சுயசார்ப்புள்ள ஆணை திருமணம் முடிப்பதால் தாம் சொகுசாக வாழலாம் என்ற கனவைத்தான் எம் பெண்களுக்கு பெற்றோர் ஊட்டி வருகின்றனர். தோழிகள் என்ற பெயரில் கூட அலையும் பேர்வழிகளும் அதையே செய்கின்றன.

எமது பெண்கள்.. சிந்திக்க வேண்டிய பகுதிகள் பல இருக்கின்றன. இன்னும் ஒரு ஆணிடம் படிப்பையும் பட்டத்தையும் வேலையையும் எதிர்பார்க்கும் நிலையில் இவர்கள்.. என்பது எமக்கு பலவீனமானது. அப்படியான பெண்களை தெரிவு செய்வது ஆண்களுக்கு இன்றைய உலகில் ஆபத்தானது.

சுயசார்ப்புள்ள.. புரிந்துணர்வுள்ள.. சிநேகமுள்ள ஒரு பெண்ணைத் தேர்வு செய்வதே இன்றை உலகில் அவசியம். படிப்பு.. பட்டம்..வேலை.. நல்லவன்.. வீடு.. கார்.. விசா.. இவற்றை கருத்தில் கொள்ளும் பெண்களை உதாசீனம் செய்வது சிறப்பு என்பது எனது சொந்தக் கருத்து. காரணம்.. இவை எவையுமே நிரந்தரமற்றவை. அன்பும்.. புரிந்துணர்வும் வளர.. இவற்றை விலையாகப் பேசுபவள்.. இவை அதிகமாக இருக்கும் இன்னொருவரை கண்டுவிட்டால் அவன் கூடவே வாழவும் ஆசைப்படுவாள். அப்படியானவளிடத்தில் எப்படி.. நம்பிக்கை என்ற பிணைப்பால் எழும் குடும்ப வாழ்வை அன்போடு.. புரிந்துணர்வோடு.. அமைக்க முடியும். அதனால் தான் என்னவோ.. கணவனை கொன்று விட்டு.. இன்னொருவனுடன் ஓடும் பெண்களும்.. இணையத்தில்.. படித்தவன்.. வேலை செய்பவன் தேடும் பெண்களும்.. படிக்கும் இடத்தில..வேலையிடத்தில்.. வேலைக்கு வருமிடத்தில்.. கொஞ்சம் வசதியானவன் வாய்த்துவிட்டால் ஒன்றைக் கழற்றுவிட்டு மற்றதோடு தொற்றிவிடும் காதலிகளும்.. மனைவிகளும்.. விவாகரத்து வாங்க துடிக்கும் ஆண்களும் பெண்களும்.. மனைவி சரியில்லை என்று விபச்சாரியிடமோ.. வேறு பெண்ணிடமோ தஞ்சமடையும் ஆண்களும் இந்த உலகில் மலிந்து கிடக்கின்றனர்..! பார்க்கவே அசிங்கமான உலகாக இருக்கிறது..!

இப்படி ஒரு குடும்ப வாழ்க்கை வாழ்வதிலும்... தனியாளா சுயசார்போடு.. சுதந்திரமாக வாழலாம். குழந்தை வேணும் என்றால்.. ஒரு குழந்தையை.. உயிரியல் தாய் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அல்லது தத்தெடுத்து வளர்த்திடலாம். கொஞ்சம் மனக்கட்டுப்பாடு இருந்தால் நிச்சமாக இந்த வாழ்க்கை கூடிய வசதியானது என்றே சொல்லலாம். தேவையற்ற தலையிடிகள் இல்லாமல் போகும்..! உடலாரோக்கியமும் பேணப்படும். :) :) :wub:

Edited by nedukkalapoovan

இதற்காகப் பெற்றோரை நோக முடியாது. அவர்கள் செய்த தவறுதான் என்ன இங்கு. ஏமாந்ததும் ஏமாற்றப்பட்டதும் காதலர்களே..! :D

பெற்றோர் செய்த தவறு...

அவர்களது காதலால் குழந்தை பெற்றது... :wub::) :)

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர் செய்த தவறு...

அவர்களது காதலால் குழந்தை பெற்றது... :wub::) :)

அது தவறல்ல விபத்து. :D

கருத்தடை மாத்திரை அல்லது கருத்தடை சாதனம் செய்த சதி..! இன்று உலகில் பெண்கள் எத்தனை கிலோ கருத்தடை மாத்திரைகளை விழுங்குகிறார்கள் என்று அறிந்தால் தலைசுற்றி விழுந்துடுவீங்க..! அதுமட்டுமா நாம் (சாதாரண மக்கள்) அறியாத எத்தனையோ சாதனங்களை எல்லாம் தமது உடலுக்குள் செலுத்தி கொண்டும் திரிகிறார்கள் பெண்கள்..! ஏன்.. இந்த விபத்துக்களை தவிர்க்கத்தான்.

காலம் அப்படியாப் போச்சு. கண்டவனோடும் கூடவும் வேணும்.. குழந்தையும் பிறக்கக் கூடாது. என்றால் பெண்கள் பாடு கொஞ்சம் சிரமம் தான். பார்க்கப் பாவமாக இருக்கிறது. கடவுள் காக்க..! இப்போ ஆண்களுக்கும் குளுசை கொடுக்க வெளிக்கிட்டாங்க. குளுசைகளால தான் அழிவு மனிசனுக்கு..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Danguvaar Posted நேற்று, 03:38 PM

முனி.. நான் காதலர்கள் ஓடிப் போறதுக்கு வக்காலத்து வாங்கேல்ல. ஆனால் அவையள் ஓடிப் போறதுக்கு காரணம் என்ன? முதலாவது பெற்றோர். இரண்டாவது சமுதாயம்.

என்ன டங்குவார் பெற்ரோர் மீதும் சமுதாயம் மீதும் பழியை போட்டு இருக்கிறீங்கள் :)

பெற்றோர்.....படிக்கும் போது யாராவது காதலித்து திரிந்தால் அவர்களின் எதிர்காலம் என்னத்திற்க்காகின்றது என்று யோசித்து கண்டித்து இருக்கலாம்.அடுத்து பெற்றோர் தன் பிள்ளைகளை தெரிந்தும் வாழ்க்கையில் கஸ்ரப்பட விடுவார்களா என்ன அந்த ஆணுக்கு வேலையில்லை உன் வாழ்க்கையை பற்றி சற்று யோசி என சொல்லியிருக்கலாம் அப்போது நீங்கள் சொன்ன ஓர் மோன்கள் விட்டிருக்காது போல :) சுயமாக சிந்தித்தல் என்பது காதலிக்கும் போது மறந்து போகிறார்கள் போல :wub:

சமுதாயம்__

...............................சமுதாயம் என்பதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கின்றீர்கள் எனக்கு தெரியாது இருந்தும் சமுதாயம் ஒரு மனிதனால் தனது விருப்பதிற்கேற்றவாறு தன் சூழலை அமைத்துக்கொள்கிறான் அது அவனது நடவடிக்கைக்கு சாதகமாக அமையும் போது அந்த சமுதாயத்தை பாராட்டுவான் அதுவே பாதகமாக அமையும் போது அதை குறை கூறுவான் அந்த சமுதாயம் என்பது அவன் தான்

உன்னை திருத்து உலகம் திருந்தும் என்பதை போல நம்மில் பிழையை வைத்துக்கொண்டு சமுதாயத்திலும் பெற்றோரிலும் பிழை சொல்வது அவ்வளவு நன்றாகவா உள்ளது

ஒர்மோன்கள் பதின்மூன்று வயதிலும் சுரக்கும் அதை கடக்கவில்லையா நாம் :D

என் சிஷ்யகளை பிரிக்க இயலுமா என்ன :)

இது பெற்றோர், பிள்ளைகள், சமுதாயம் எல்லாவற்றினதும் கூட்டான பொறுப்பு.

பிள்ளைகள் பெற்றோருடன் இவை பற்றி வெளிப்படையாக கலந்துரையாடும் நிலை வரவேண்டும். வெளிப்படையாக பேசுவதன் மூலம் மனச்சுமைகள் குறையும். அவர்கள் காதலிப்பதை பெற்றோர்கள் விரும்பாவிட்டாலும் கூட, உரியமுறையில் அவர்களுக்கு புரியவைக்கலாம். அல்லது, பிள்ளைகளும் மனம் மாறலாம். நான் கண்டதில் அப்படி வெளிப்படையாக இருக்கும் குடும்பங்களில் இப்படியான பிரச்சினை வந்தது இல்லை.

சமுதாயத்துக்கு செய்தி சொல்லும் ஊடகங்கள். உதாரணமாக வகையில் சினிமா எடுப்பவர்களும் பொறுப்பாக செயற்பட வேண்டும். வெறுமனே, ஜனங்கள் இதை தான் எதிர்பார்க்கிறார்கள் என்று சாக்கு சொல்லிக்கொண்டு கண்ட குப்பையை தராமல் நல்ல படங்களை எடுக்க வேண்டும். அனேகமான தமிழ்ப்படங்கள் காதலுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இப்படங்களில் இளம் சமுதாயத்துக்கு தவறான வழிகாட்டுதல்கள் நிறைய உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை பெற்றவர்கள் எல்லாரும் பெற்றோர்கள்தான்.ஆனால் எத்தனை பெற்றோர் தமது பிள்ளைகளின் நலன்களில் உண்மையான,ஆரோக்கியமான அக்கறை செலுத்துகினம்?தமது (வரட்டு)கெளரவம் என்று வரும் போது தாம் பெற்ற பிள்ளைகளின் நலன்கள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் என்பவை மீறப்படுகின்றன.உதாரானத்துக்

sagevan Posted இன்று, 07:53 PM

��ு இங்கு சில பெற்றோர்கள் உந்தச்சுரப்பிகள் சுரப்பதை கட்டுப்படுத்தவென சில (கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையில்)கேவலமான நடவடிக்கைகளை செய்கினம். இப்ப இந்த வேலையை செய்யும் பெற்றோர் எனப்படுவோர் தமது பதின்ம வயதில் அவர்களுக்கு இப்ப இங்கு இருக்கும் வசதி வாய்ப்பு இருந்திருந்தால் எத்தினை பேர் கலியானம் கட்டும் வரைக்கும் கட்டுப்பாடாக இருந்திருப்பினம் அனேகமான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் விடையத்தில் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக வந்த வேலையைத்தான் செய்கினம்.

சகிவன் முக்கியமாக இந்த மருந்து கொடுப்பது மாத்திரை கொடுப்பது ஈழத்தில் இல்லை [நான் அறிந்ததாக இல்லை] :icon_mrgreen::lol:

படித்த.. வேலையுள்ள.. வீடுவாசல் உள்ள..கார் வைச்சிருக்கும்.. நன்னடைத்தையுள்ள.. உயர்சாதி.. ஆண் விலங்கொன்று.. யாழ்ப்பாணத்துப் பாரம்பரிய பனங்கொட்டைத்தலை பெண்ணுக்கு வேண்டும். இதுதான் யாழ்ப்பாணத்துப் பனங்கொட்டைகளின் சிந்தனையில் திருமணம் என்றதும் உதிக்கும் விடயம்.

வாழ்க்கை என்பது படிப்பில.. வேலையில.. வீடுவாசல் வைச்சிருக்கிறதில.. கார் வைச்சிருக்கிறதில அல்ல ஆரம்பிப்பது.

படிப்பு.. காலம் பூராவும் பெறக் கூடியது.

வேலை நிரந்தரமற்றது. கார் பழுதாகி விடக் கூடியது. வீடு கடனை கூட்டுவது. நல்லவன் எப்பவும் கெட்டவனாக மாறக் கூடிய சூழல் உள்ளது. ஆக அடிப்படையில்.. பிரச்சனைகளுக்குரிய விடயங்களை விரும்புகிறார்களே தவிர.. ஒரு ஆணைத் தெரிவு செய்யும் போது அவனுடன் ஒத்துழைத்து எந்த சூழ்நிலையையும் சமாளித்து வாழ்வன் என்ற நம்பிக்கை என்பது இன்றைய பெண்களிடம் இல்லை என்பதையே மேற்குறிப்பிட்ட கருத்து இனங்காட்டுகிறது.

ஒரு பெண் ஆணைச் சார்ந்திருக்கும் தன்மை முற்றாக நீங்க வேண்டும். ஆணும் பெண்ணைச் சார்ந்திருக்கும் நிலை முற்றாக நீங்க வேண்டும். படிப்பு என்பது குடும்பத்துக்கு அவசியம் தான். அதற்காக இருவரும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்ற பேராசை அவசியமன்று. ஒருவர் படித்திருந்து மற்றவர் படிக்காதது ஒரு குறையல்ல. அதை நிறைவாக்க பல வழிகள் இருக்கின்றன. அப்படி இருக்க அதில் என்ன உறுத்தல்..! ஆனால் படித்தவர் என்று பொய் சொல்வது கூடாது.

இன்றைய உலகில் பெண்கள் தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய உழைக்க வேண்டும். படித்திருக்க வேண்டும். ஆண்களும் அப்படித்தான். அதற்காக பட்டப்படிப்பை எதிர்பார்க்க முடியாது.பொதுவா எல்லோரும் ஓல் வரையாவது படிச்சிருப்பினம். அதுபோதும்.. ஒருவன்.. சாதாரண குடும்ப வாழ்க்கைக்குள் நுழைய. அதற்கேற்பதான் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஒரு பெண் சுயசார்ப்புள்ளவளாக இருக்கும் நிலையில் ஏன் ஆண்களிடம் படிப்பை.. காரை.. வீடை.. எதிர்பார்க்கிறாள். தானே அதை பெற்றுக் கொள்ள முயலலாம் தானே. சுயசார்ப்புள்ள ஆணை திருமணம் முடிப்பதால் தாம் சொகுசாக வாழலாம் என்ற கனவைத்தான் எம் பெண்களுக்கு பெற்றோர் ஊட்டி வருகின்றனர். தோழிகள் என்ற பெயரில் கூட அலையும் பேர்வழிகளும் அதையே செய்கின்றன.

எமது பெண்கள்.. சிந்திக்க வேண்டிய பகுதிகள் பல இருக்கின்றன. இன்னும் ஒரு ஆணிடம் படிப்பையும் பட்டத்தையும் வேலையையும் எதிர்பார்க்கும் நிலையில் இவர்கள்.. என்பது எமக்கு பலவீனமானது. அப்படியான பெண்களை தெரிவு செய்வது ஆண்களுக்கு இன்றைய உலகில் ஆபத்தானது.

சுயசார்ப்புள்ள.. புரிந்துணர்வுள்ள.. சிநேகமுள்ள ஒரு பெண்ணைத் தேர்வு செய்வதே இன்றை உலகில் அவசியம். படிப்பு.. பட்டம்..வேலை.. நல்லவன்.. வீடு.. கார்.. விசா.. இவற்றை கருத்தில் கொள்ளும் பெண்களை உதாசீனம் செய்வது சிறப்பு என்பது எனது சொந்தக் கருத்து. காரணம்.. இவை எவையுமே நிரந்தரமற்றவை. அன்பும்.. புரிந்துணர்வும் வளர.. இவற்றை விலையாகப் பேசுபவள்.. இவை அதிகமாக இருக்கும் இன்னொருவரை கண்டுவிட்டால் அவன் கூடவே வாழவும் ஆசைப்படுவாள். அப்படியானவளிடத்தில் எப்படி.. நம்பிக்கை என்ற பிணைப்பால் எழும் குடும்ப வாழ்வை அன்போடு.. புரிந்துணர்வோடு.. அமைக்க முடியும். அதனால் தான் என்னவோ.. கணவனை கொன்று விட்டு.. இன்னொருவனுடன் ஓடும் பெண்களும்.. இணையத்தில்.. படித்தவன்.. வேலை செய்பவன் தேடும் பெண்களும்.. படிக்கும் இடத்தில..வேலையிடத்தில்.. வேலைக்கு வருமிடத்தில்.. கொஞ்சம் வசதியானவன் வாய்த்துவிட்டால் ஒன்றைக் கழற்றுவிட்டு மற்றதோடு தொற்றிவிடும் காதலிகளும்.. மனைவிகளும்.. விவாகரத்து வாங்க துடிக்கும் ஆண்களும் பெண்களும்.. மனைவி சரியில்லை என்று விபச்சாரியிடமோ.. வேறு பெண்ணிடமோ தஞ்சமடையும் ஆண்களும் இந்த உலகில் மலிந்து கிடக்கின்றனர்..! பார்க்கவே அசிங்கமான உலகாக இருக்கிறது..!

இப்படி ஒரு குடும்ப வாழ்க்கை வாழ்வதிலும்... தனியாளா சுயசார்போடு.. சுதந்திரமாக வாழலாம். குழந்தை வேணும் என்றால்.. ஒரு குழந்தையை.. உயிரியல் தாய் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அல்லது தத்தெடுத்து வளர்த்திடலாம். கொஞ்சம் மனக்கட்டுப்பாடு இருந்தால் நிச்சமாக இந்த வாழ்க்கை கூடிய வசதியானது என்றே சொல்லலாம். தேவையற்ற தலையிடிகள் இல்லாமல் போகும்..! உடலாரோக்கியமும் பேணப்படும். :lol::D:icon_mrgreen:

தொடர்ந்து படிக்கும்போது, அவர்களின் மூளை வளர்ச்சி பெறுகிறது. சிந்தனைத்திறன் கூடுகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்கும் பக்குவம் கூடுகிறது. புரிந்துணர்வு அதிகரிக்கிறது. இந்தப் புரிந்துணர்வைத்தான் இன்றைய காலகட்டப் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இங்குள்ள பெண்களில் அநேகம் பேர் தங்கள் சொந்தக்கால்களில் நிற்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். மற்றவர்களை நம்பி வாழவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.

தனியாளா, சுயசார்போடு வாழநினைப்பவர்களுக்குப் பிறகேன் குழந்தை ஆசைகள்? ஆசைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக வேறுபடும். அந்த ஆசைகளுக்கேற்ப ஒரு பெண் தன் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தவறென்ன?

நீங்கள் கூறியதுபோல, படிப்பை நிவர்த்திச் செய்யப் பல வழிகள் உள்ளனதான். இருந்தாலும் பல வருடங்களாகப் புலம்பெயர்ந்து வாழும் அந்த ஆண் இதுவரை படிக்கவேண்டுமெனச் சிந்திக்கவில்லையே. இதிலிருந்தே அவரது சிந்தனைத்திறன் எந்தளவில் உள்ளது என்பதை அறியக்கூடியதாக உள்ளதே. ஆனால் அந்தப் பெண் நன்றாகப் படித்து ஒரு நல்ல வேலையிலும் இருக்கிறார். அவ்வாறு அவ்வாண் படிக்க விரும்பாதது அவரது விருப்பம். அதற்காக, அவர் மட்டும் படித்த பெண்ணுக்கு ஆசைப்படலாம். ஆனால் அந்தப் பெண் ஆசைப்படக்கூடாதா? இதென்ன நியாயம்???? அப்படியே அவர் திருமணம் செய்ய விரும்பினாலும், படிக்காத ஒரு பெண்ணைத் தெரிவு செய்யவேண்டியதுதானே? அவர்மட்டும் ஏன் படித்த பெண்ணுக்கு ஆசைப்படவேண்டும்??? இதைத்தான் ஆணாதிக்கச் சிந்தனை என்பதோ????

ஒரு படிக்காத ஆணை ஒரு படித்த பெண் திருமணம் செய்ததால்.. அது ஆணாதிக்கம். ஆனால் யாழ்ப்பாண பனங்கொட்டை சமுதாயத்தில் படிக்காத பெண்களை படித்துப் பட்டம் பெற்ற ஆண்கள் திருமணம் செய்து கொள்ளச் செய்தால்.. அது நியாயம். அது பெண்ணாதிக்கமல்ல. என்னே நியாயமான கருத்தாடல் பாருங்கள். :icon_mrgreen:

படிப்பு மட்டுமல்ல ஒரு மனிதனின் சிந்தனையை வளப்படுத்துவது. படிப்பு வேலை வாங்கித்தரலாம். அல்லது தராமலும் விடலாம். ஆனால் வாழ்க்கைக்கான கல்வி என்பது சமூகத்தில் இருந்தே பெறப்பட வேண்டியது.

படித்த பலர் வாழ்க்கையில் தோல்வி கட்டுள்ளனர். படிக்காத பலர் வாழ்க்கையில் வெற்றி கண்டுள்ளனர். அது சிந்திக்காமலா..??!

படிக்காத தோமஸ் அல்வா எடிசன்.. விஞ்ஞானியானார். படிக்காத லிங்கன்.. அமெரிக்க ஜனாதிபதியானார். அதிகம் படிக்காத பிரபாகரன் தேசிய தலைவராக உலகம் வியக்கும் தளபதியாக இருக்கிறார். அதிகம் படிக்காத கலைஞர் தமிழகத்தை அதிக காலம் ஆளும் முதல்வராக இருக்கிறார். இப்படி படிக்காதவர்கள் வகிக்கும் பதவிகள் கூட மேலாணவையாகவே இருந்துள்ளன.

பல பட்டங்கள் பெற்றவர்கள் பெற்ற அறிவு என்பது மனிதாபிமானத்தை ஊட்டவில்லை என்பதையே மேற்குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் படித்தவள் வேலைக்குப் போபவள் என்ற தலைக்கணம் பிடித்த எண்ணம் சுட்டிக்காட்டி நிற்கிறது.

உண்மையில் நாம் பெற்ற கல்வி என்பது அணுவிலும் சிறியது.. இதில் எப்படி எவன் அதிகம் படிச்சவன் என்று தீர்மானிப்பது.

பல படித்தவர்கள் சரியான வேலை கூட இன்றி உலகில் வாழ்கின்றனர். ஆனால் ஒரு இளைஞன் படிக்கவில்லை என்பதற்காக மனைவியால் மட்டம் தட்டப்படும் கொடுமையை சராசரி படிக்காத பெண் கூட செய்ய முன்வரமாட்டாள். இதற்குள் நீங்கள் குறிப்பிட்ட பெண்ணை படித்தவள் என்று அடையாளம் காட்டுகிறீர்கள்.

அது உங்களின் தவறல்ல. இன்றைய கல்வியின் நிலை அப்படி. இன்றைய கல்வி தொழிலை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறதே தவிர மனிதாபிமானத்தையும் சேர்த்து ஊட்ட வழி செய்யவில்லை. அதை பல சமூகவியல் ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

உண்மையில் குறித்த பெண் படித்தவளாக இருப்பின்.. அந்த ஆணின் குறையை நிறைவாக்கிற முயற்சியை தான் செய்வாளே அன்றி.. பிற ஆண்களோடு ஒப்பிட்டு அவனை இன்னொருத்தனுடன் வைத்து ரசிக்கின்ற அசிங்கத்தை செய்யமாட்டாள்.

உண்மையில் அந்தப் பெண் சிந்திப்பவளாக இருந்திருந்தால்.. அந்த இளைஞனை உற்சாகப்படுத்தி.. அவனுக்கு இயன்ற வகைக்குரிய படிப்பை வழங்க முன் வந்திருக்க வேண்டும். தானே அதனை ஆரம்பித்திருக்க வேண்டும். ஒத்துழைப்பைக் கொடுத்திருக்க வேண்டும். உதவி இருக்க வேண்டும். அதைவிடுத்து நான் படித்தவள்.. நல்ல வேலை செய்யுறன்.. அவன் படிக்காதவன் என்ற தலைக்கணத்தை ஏற்படுத்தி அவனை மட்டம் தட்டி உறுத்துது... குடையுது என்ற வாழ்வதல்ல... படித்தவர்களின் பண்பு. சிந்தனைப் போக்கு. அதையல்ல படிப்பு எதிர்பார்க்கிறது..!

படிப்பு மனிதனைப் பண்படுத்த வேண்டும். படித்ததை பிரயோகித்து அடுத்தவனுக்கு அறிவூட்ட வேண்டும். உதவ வேண்டும். அதற்குத்தான் கல்வி. தலைக்கணம் வளர்ப்பதற்கல்ல.

உண்மையில் அங்கிருப்பது.. ஆணாதிக்கமும் அல்ல.. மண்ணாங்கட்டியும் அல்ல. அந்தப் பெண்ணின் படித்தவள் என்ற அறியாமை கலந்த தலைக்கணமே. இதுவே இன்றைய பெண்களின் பரிதாப நிலை..!

ஏனெனில் பெண்கள் தாம் சாதிக்க முடியாததை சாதிப்பதாக காட்டி வளர்க்கப்படுகின்றனர். அது அவர்கள் பெறும் சிறிய வெற்றியையும் பெரிய சாதனையாகக் காட்டி விடுகிறது. அதனாலேயே இவ்வாறான தலைக்கணங்கள் பெருக்கெடுக்கின்றன. நிச்சயம் அவை இவ்வாறானவர்களை நிம்மதியாக.. அமைதியாக.. அன்பான குடும்பத்துடன் வாழ அனுமதிக்காது.

கல்வி என்பது எமக்கான அறிவூட்டல்... பண்படுத்தல் காரணி. பிறருக்கு ஊட்ட வேண்டிய ஒன்று. அதை தலைக்கணத்தால் எமக்கே சொந்தமானது.. நாமே பெரியவர் என்று சிந்திக்க வைப்பின்.. அதுவே கல்வியால் பெற்ற சிறுமையாகும்.

என்னைப் பொறுத்தவை மேற்குறிப்பிட்ட பெண்ணை கற்றும் கல்லாதவள் என்றே சொல்வேன்..! நான் அவளை ஒரு திறமையற்ற படிப்பறிவற்றவள் என்றே சொல்வேன்..! இப்படியான நிலையில் தான் அடிமட்டத்தில் இருந்து மேலெழுந்து வந்த பல பெண்கள் சிந்திக்கத் தலைப்படுகின்றனர். அது பரிதாபகரமானதாக இருக்கிறது. அதற்கு அவர்களை வழிகாட்டுபவர்கள் சரியானவர்களாக இருக்க வேண்டும். தமிழிச்சி போன்று ஆணாதிக்கம் மண்ணாங்கட்டி என்று உசுப்பேத்தின் தலைக்கணம் நிச்சயம் யதார்த்தைதைத் தேடாது. தலைவலியையே தரும்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இணைந்த காதலர்கள் காதலிலும், இந்தத் திரியில் எழுதுபவர்களும் அதை வாசிப்பவர்களும் வேதனையிலும் இருப்பதுமாதிரித் தெரியுது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.