Jump to content

தமிழீழ பாட்டு வரிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...m_paniyathump3/

புலியொரு காலமும் பணியாது -எந்த

படைவந்த போதிலும் சலியாது

திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன்

அலையாதிடுமோ கிடையாது -எங்கள்

நிலைமாறிடுமோ நடவாது

எல்லை தாண்டி வந்து உருவாகும் -பகை

எம்மை ஆளவென்று சதிபோடும்

முள்ளை மலரென்று கதைபேசும் -சில

மந்திகள் கொடிதாவும்

கொட்டிலுக்கு கூரையில்லை

கொண்டுவந்த தேதுமில்லை

கட்டுதற்கு ஆடையில்லை

மானமின்னும் சாகவில்லை.

பட்டினிக்கு வட்டியில்லை

வாவா... -இனி

குட்டநின்று வாழ்வதில்லை வாவா.

பகைவந்து பிடித்தது சுடுகாடு -அதைப்

பறிப்போம் திடமாய் நடைபோடு

மறுபடி செய்வோம் பூக்காடு -வெள்ளி

மலந்திடும் கூத்தாடு

நாம் பிறந்த ஊருமில்லை

நட்டுவந்த தேதுமில்லை

ஆதரவுக்காருமில்லை

ஆறுதற்கு நேரமில்லை

ஓருயிர்தான் யாவருக்கும்

வாவா... -இனி

சாவதேனும் ஓய்வதில்லை வாவா.

கண்ணில் பாய்கிறது நீரோட்டம் -தமிழ்

களத்தில் கயவரது தேரோட்டம்

மண்ணில் நடத்துறோம் போராட்டம் -புலி

மறுபடி கொடியேற்றும்

பள்ளியில்லை தேதியில்லை

சொல்லியள யாருமில்லை

உள்ளமின்றி மிச்சம் இல்லை

உயிர்துறக்க அச்சம் இல்லை

போரெடுத்து வெல்வதற்கு

வாவா... -எங்கள்

ஊர்பிடித்துச் செல்வதற்கு வாவா

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வீரப் பையன்26

பாட‌லை கேக்க‌ https://voca.ro/mNAN1gtR4tT   நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

வீரப் பையன்26

த‌மிழ‌ர‌சு  அண்ணா இணைத்த‌ இர‌ண்டு பாட்டு வ‌ரி பாட்டு , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா /  https://voca.ro/jqv6QDW5fSY https://voca.ro/fKbes0CdvUe  இர‌ண்டு பாட‌லுக்கும் இசை அமைத்த‌து முன்னால் போராளி

தமிழரசு

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள் கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள் வண்ண மலர் தூவும் அந்த வாசல் வ

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...avikinrathump3/

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது

பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது

பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது

ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது

அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது

பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது

ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது

அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது

ஆற்றினிலே நீருமில்லை

ஆதரிப்பார் யாருமில்லை

நேற்றிருந்த சொந்தமெல்லாம்

நேரினிலே இன்று இல்லை

ஆற்றினிலே நீருமில்லை

ஆதரிப்பார் யாருமில்லை

நேற்றிருந்த சொந்தமெல்லாம்

நேரினிலே இன்று இல்லை

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது

பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது

நாய் வளர்த்துப் பாலை வார்த்தால்

வாளையாட்டிக் கொள்ளும்

நம்பிப் பெற்ற பிள்ளைகளோ

நன்றியினைக் கொல்லும்

நாய் வளர்த்துப் பாலை வார்த்தால்

வாளையாட்டிக் கொள்ளும்

நம்பிப் பெற்ற பிள்ளைகளோ

நன்றியினைக் கொல்லும்

கோவிலுண்டு பூசை செய்ய

யாருமிங்கு இல்லை

கொள்ளியிடக் கூட ஒரு

பிள்ளையிங்கு இல்லை

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது

பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது

கட்டிலுக்கு வந்தவளும் என்னைவிட்டுப் போனாள்

தொட்டில் வந்த பிள்ளைகளோ தூரதேசம் போனார்

கட்டிலுக்கு வந்தவளும் என்னைவிட்டுப் போனாள்

தொட்டில் வந்த பிள்ளைகளோ தூரதேசம் போனார்

விட்டபடி சுத்துதடா

பூமியென்ற பந்து

இரத்தபாசம் என்பதெல்லாம்

இங்கு வெறும் பேச்சு

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது

பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது

ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது

அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது

ஆற்றினிலே நீருமில்லை

ஆதரிப்பார் யாருமில்லை

நேற்றிருந்த சொந்தமெல்லாம்

நேரினிலே இன்று இல்லை

ஆற்றினிலே நீருமில்லை

ஆதரிப்பார் யாருமில்லை

நேற்றிருந்த சொந்தமெல்லாம்

நேரினிலே இன்று இல்லை

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது

பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...l_vilundthamp3/

மண்ணில் விளைந்த முத்துக்களே

மரணம் ஏதடா

கண்ணில் விழுந்த இரத்தத்திலே

கவிதை பாடடா

இதயம் முழுதும் அழுவதால்

விழியில் நீரடா

விழையும் பயிர்கள் அழிவதால்

மனதில் நோயடா

விந்தைதானடா

மண்ணில் விளைந்த முத்துக்களே

மரணம் ஏதடா

கண்ணில் விழுந்த இரத்தத்திலே

கவிதை பாடடா

சந்தனப் பேழையிலே

உறங்கிடும் தோழனே

எனக்குன் துணிவைத் தா

எனக்குன் புடவை தா

அண்ணன் தம்பி ஆகி விட்டோம்

அப்பு ஆச்சி ஆசிப் பட்டோம்

ஆயுதங்கள் ஏந்தி விட்டோம்

ஆனவரை பார்த்திடுவோம்

காலம் வரட்டும் காத்திருப்போம்

காதில் சங்கொலி கேட்டிருப்போம்

போ.. வந்தால் போர் தொடுப்போம்

சாதல் என்றால் பேர் கொடுப்போம்

இனி நாளை நாம்தான் வா

மண்ணில் விளைந்த முத்துக்களே

மரணம் ஏதடா

கண்ணில் விழுந்த இரத்தத்திலே

கவிதை பாடடா

சிறைகளில் இருந்ததும்

தலைகளை இழந்ததும்

விடுதலை அடையவே

நினைத்தது நடக்கவே

உங்கள் அடிச்சுவட்டிலே

எங்கள் வழி இருக்குது

எதிரிகள் தெரியுது

எண்ணங்கள் புரியுது

தீரம் என்றென்றும் ஒய்வதில்லை

வெற்றி என்பது தூரமில்லை

நாளை என்பது நம் கையிலே

நாடு என்றென்றும் நம் கண்ணிலே

புது வாழவே காண்போம் வா

மண்ணில் விளைந்த முத்துக்களே

மரணம் ஏதடா

கண்ணில் விழுந்த இரத்தத்திலே

கவிதை பாடடா

இதயம் முழுதும் அழுவதால்

விழியில் நீரடா

விழையும் பயிர்கள் அழிவதால்

மனதில் நோயடா

விந்தைதானடா

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/U3ABKmQW/track03/

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்

மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்

கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்

கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்

வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்

செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்.

வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்

செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்.

சாவை புறங்கைகளினால் தட்டி விட்டவர்- தம்

தாயகத்துக்காக உயிர் தன்னை விட்டவர்*

கோபவிழி கொண்டு களம் மீது தொட்டவர்- பகை

கோட்டை பொடியாக உயிர் வீசி விட்டவர்*

தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று

தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று

காவல் தெய்வம் ஆனவரின் கல்லறையை ஆற்று

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்

மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்

கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்

கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்

மண்ணுக்குள்ளே கண்ணை மூடி தூங்குகின்றவர்-இன

மானம் பெரிதானதென்று சொல்லுகின்றவர்

கண்ணுக்குள்ளே வந்து கன வாகி நிற்பவர்- வெல்லும்

காலம் வரை எங்களுக்கு காவல் நிற்பவர்

பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு

பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு-காவியத்து

நாயகர்கள் கல்லறைகள் மீது

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்

மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்

கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்

கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்

வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்

செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்.

வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்

செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...nknown_track_6/

நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா ‍‍‍‍‍‍‍‍‍‍‍

இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா

தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம் உந்தன்

தாய்நிலத்தில் உனக்கு ஒரு பந்தமில்லையாம் அழுவதன்றி உனக்கு

வேறு மொழியுமில்லையாம் இன்னும் அடங்கிப் போதல் அன்றி எந்த வழியுமில்லையாம்

அகதி யாகியே தெருவினோரமாய் திரிவதேனடா

அடிமைமாடுகள் போல இன்று நீ அலைவதேனடா

இன்னும் விழிகள் மூடி அமைதியாகப் படுப்பதேனடா

அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா

அப்புகாமியை ஆளயிங்க்கு விட்டதாரடா

இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா

இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா

புதிய வாழ்வதை எழுத நீயுமே களத்திலாடடா

புலிகள் சேனையோ டெழுந்து நின்றுமே தடைகள் மீறடா

தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...panai_marammp3/

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அன்று முற்றத்தில் அழித்து அழித்து நான்

ஆனா எழுதிய மண்ணல்லவா

இன்று நான் பாடும் பாட்டும் என் தாய்மண் என்னுள்

இசைக்கின்ற பண்ணல்லவா

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

எங்கு வாழ்ந்தாலும் எனது தமிழ் நெஞ்சம்

இயங்கும் என் தாயின் எண்ணத்திலே

அங்கு தமிழினம் துடிக்கும் பொழுதெல்லாம்

ஆறு பாயுமென் கன்னத்திலே

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

எதிரி எங்கள் தாய் மண்ணை அழித்ததாய்

இரவு பகல் நூறு கதை கட்டுவான்

அதிரும் புலிகளின் குண்டு வெடியோசை

அறிந்து தமிழ்பிள்ளை கை தட்டுவான்

அழகான அந்த பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

பகைவர் பாயலாம் உடல்கள் சாயலாம்

எனினும் தமிழ் ஈழம் பணியாது

அகமும் புறமுமாய் உயிரில் கலந்த என்

அன்னை மண் பாசம் தணியாது

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்வரிகளையும் , ஒலிவடிவையும் இணைத்து கேட்கும் போது விளக்கமாக உள்ளது .

அதிலும் புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடல்களை கேட்டால் , அந்தப்பாடல்கள் அடிக்கடி காதில் ரீங்காரமிடும் .

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் குட்டிப்பையன் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...1L2/track_2mp3/

இந்தமண் எங்களின் சொந்தமண்

இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்

இந்தமண் எங்களின் சொந்த மண்

இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்

நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு

நிம்மதி ஒன்றுதான் இல்லை

இந்தமண் எங்களின் சொந்தமண்

நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து

நின்றது போதும் தமிழா

உன் கலைகள் அழிந்து கவலை மிகுந்து

கண்டது போதும் தமிழா

வரிப்புலிகள் எழுந்து புயலைக்கடந்து

போர்க்களம் ஆடுது தமிழா

இன்னும் உயிரை நினைந்து உடலைச்சுமந்து

ஓடவா போகிறாய் தமிழா

இந்தமண் எங்களின் சொந்தமண்

இந்தமண் எங்களின் சொந்த மண்

இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்

நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு

நிம்மதி ஒன்றுதான் இல்லை

எனினும் இந்தமண் எங்களின் சொந்தமண்

சாவா இலையொரு வாழ்வா எனப்பெரும்

சமரே எழுந்தது தமிழா

உடன் வா வா புலியுடன் சேர் சேர் எனும் குரல்

வரையைப் பிளக்குது தமிழா

நீ ஆகா அழைத்திது

போ போ எனவொரு மகவை அனுப்பிடு தமிழா

நீ பூவா இலைப்பெரும் புயலாய் எழுந்துமே

புறப்பட்டு வந்திடு தமிழா

இந்தமண் எங்களின் சொந்தமண்

இந்தமண் எங்களின் சொந்த மண்

இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்

நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு

நிம்மதி ஒன்றுதான் இல்லை

எனினும் இந்தமண் எங்களின் சொந்தமண்

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...tholarkalinmp3/

எங்கள் தோழர்களின் புதைகுழியில்

மண்போட்டுச் செல்கின்றோம்

இவர்கள் சிந்திய குருதி -தமிழ்

ஈழம் மீட்பது உறுதி

இளமைநாளின் கனவையெல்லாம்

எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்

போர்க்களம் படைத்து தமிழ்இனத்தின்

கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்

வாழும்நாளில் எங்கள் தோழர்

வாழ்ந்த வாழ்வை நினைக்கின்றோம் - எம்

தோழர் நினைவில் மீண்டும் தோளில்

துப்பாக்கிகளை அணைக்கின்றோம்

தாவிப்பாயும் புலிகள்நாங்கள்

சாவைக்கண்டு பறப்போமா

பூவாய்ப் பிஞ்சாய் உதிரும் புலிகள்

போனவழியை மறப்போமா

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...emmai_ninaithu/

காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்

காதோரம் ஒரு சேதி சொல்வோம்

காதோரம் ஒரு சேதி சொல்வோம்

கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்

புரியாத புதிராகச் சென்றோம்

புரியாத புதிராகச் சென்றோம்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்

காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

வாழும்போது மானத்தோடு

வாழ்பவன்தானே தமிழன் -தன்

வாசலில் அடிமை சேகவம் செய்து

வாழ்பவன் என்ன மனிதன்

வாழும்போது மானத்தோடு

வாழ்பவன்தானே தமிழன் -தன்

வாசலில் அடிமை சேகவம் செய்து

வாழ்பவன் என்ன மனிதன்

வழியில் இடறும் பகைகள் எரிய

வருக வருக தமிழா

வழியில் இடறும் பகைகள் எரிய

வருக வருக தமிழா

உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து

வெளியில் வருக தமிழா

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

காற்றும் நிலவும் யாருக்கெனினும்

கைகள் கட்டுவதில்லை - நாங்கள்

போகும் திசையில் சாகும்வரையில்

புலிகள் பணிவதுமில்லை

காற்றும் நிலவும் யாருக்கெனினும்

கைகள் கட்டுவதில்லை - நாங்கள்

போகும் திசையில் சாகும்வரையில்

புலிகள் பணிவதுமில்லை

மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்

முளைப்போம் இந்த மண்ணில்

மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்

முளைப்போம் இந்த மண்ணில்

எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து

மூட்டும் தீயைக் கண்ணில்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்

கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்

எங்கள்

காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எங்கள்

காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

ரொம்ப நன்றி குட்டி தொடருங்கள் இன்னும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...hi_sotinthump3/

குருதி சொரிந்து கடலின் உடலும் சிவந்து போனதே

குயில்கள் பர்டும் இராகம் யாவும் சோகமானதே

எரியும் தீயில் கரிய புலிகள் உருகிப் போனதேன்

எமது தலைவன் விழியில் அருவி சொரியலானதேன்

தங்கை நளாயினி போனாள் -எங்கள்

தம்பிகள் வாமனும் இலக்மனும் போனார்

மங்கையும் கூடவே போனாள் - இந்து

மாகடல் மீதினில் தீயெனவானாள்.

கடலின்அரசன் சிதறும்வகையில் வெடிகள் சுமந்து போனீர்

கரையில்இருந்த உறவுகலைய சிறகு விரித்துப் போனீர்

படங்களாகி சுவர்கள் யாவும் உயர்ந்து சிரிக்கும் வீரரே

பகைவன் ஏறும் பெரிய கலத்தை எரித்து முடித்த தீரரே

அலைகள்அசையும் வகையில்பகையை முடித்த வீரப்பெண்களே

மகளிர்படையின் வலிமைஉலகில் தெரிய விழித்த கண்களே

அலைகள் மீதில் உலவும் பகையை அடித்த கரிய வேங்கைகள்

அவர்கள்தலைவன் ஒருவன்தலையைப் பிடித்து வந்த தங்கைகள்

உலகமெங்கும் திரியும் காற்றில் உமது மூச்சும் கலந்திடும்

உரிமைகேட்டு நிமிரும்போதில் உமது தீரம் விளங்கிடும்

தலைவன்காட்டும் வழியில்புலிகள் பகையை வென்று திரும்பிடும்

தமிழர்தேசம் உமதுபெயரை தினமும் பாடி வணங்கிடும்

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...l/thiru_udalil/

திருவுடலில் வெடிசுமந்து நிதன் எழுந்தவன் -எங்கள்

சாதுரியன் யாழினியும் உயிர் கொடுத்தனர்

பெருவிழியில் கனல்சுமந்து இவர் நடந்தனர் -தாண்டிக்

குளமிருந்த பகைமுடித்து இவர் விழுந்தனர்

நெருப்பென நிமிர்ந்தவர் இருப்பது அழித்திட

எழுந்தவர் படையினை உடைத்தனர் -உயர்

கரும்புலியாகியே களத்திடை ஆடியே

கயவர்கள் தங்ககம் தகர்த்தனர் -வெடி

மருந்துடன் தம்முடல் வெடித்தனர்

சந்ததி காத்திட கந்தகம் சுமந்திவர்

சாவினை நெஞ்சினில் -இவர்

சந்தன மேனிகள் வெந்திடும் போதிலே

சிந்தையில் தலைவனை நினைத்தனர்

தமிழ் தேசத்தின் புயலென நிலைத்தனர்

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/Xu2z-Hn/music/.../mankiliyummp3/

மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை

நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல.

சிங்களவன் படை வானில்

நெருப்பை அள்ளிச் சொரியுது

எங்களுயிர் தமிழீழம்

சுடுகாடாய் எரியுது

தாய் கதற பிள்ளைகளின்

நெஞ்சுகளைக் கிழிக்கிறான்

காயாகும் முன்னே இளம்

பிஞ்சுகளை அழிக்கிறான்.

பெத்தவங்க ஊரில

ஏங்குறாங்க பாசத்தில

எத்தனை நாள் காத்திருப்போம்

அடுத்தவன் தேசத்தில

உண்ணவும் முடியுதில்லை

உறங்கவும் முடியுதில்லை

எண்ணவும் முடியுதில்லை

இன்னுந்தான் விடியுதில்லை

கிட்டிப் புள்ளு அடித்து நாங்கள்

விளையாடும் தெருவில

கட்டிவச்சுச் சுடுகிறானாம்

யார் மனசும் உருகல

ஊர்க்கடிதம் படிக்கையில

விம்மி நெஞ்சு வெடிக்குது

போர்ப்புலிகள் பக்கத்தில

போக மனம் துடிக்குது

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தலைப்பிலும் மூன்று பாடல்கள் உள்ளன:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=42002&hl=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/Xu2z-Hn/music/...a_thuninthavar/

சாகத் துணிந்தவர் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம்.

சாகத் துணிந்தவர் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம்.

வேகமுடன் பகை வீடு எரித்திடும் வீரப் புலிகளின் கூட்டம்.

வேகமுடன் பகை வீடு எரித்திடும் வீரப் புலிகளின் கூட்டம்.

சாகத் துணிந்தவர் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம்.

தூங்கிடும் கூட்டம் என்று எம்மை நினைத்தனர், வேங்கைகள் கூட்டமடா, தமிழ் வேங்கைகள் நாங்களடா.

தூங்கிடும் கூட்டம் என்று எம்மை நினைத்தனர், வேங்கைகள் கூட்டமடா, தமிழ் வேங்கைகள் நாங்களடா.

ஆண்டி பரம்பரையாக்கவோ எங்களை, ஆண்டி பரம்பரையாக்கவோ எங்கள் -

ஆண்ட பரம்பரை நாங்கள் - ஈழம் ஆண்ட பரம்பரை நாங்கள்,

ஆண்ட பரம்பரை நாங்கள் - ஈழம் ஆண்ட பரம்பரை நாங்கள்.

சாகத் துணிந்தவர் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம்.

நீரில் நடக்கவும், நெருப்பை கடக்கவும், வீரம் இருக்கிதுடா நெஞ்சில் வீரம் இருக்கிதுடா.

நீரில் நடக்கவும், நெருப்பை கடக்கவும், வீரம் இருக்கிதுடா நெஞ்சில் வீரம் இருக்கிதுடா.

நாம் சொத்தை மதிக்கும் சொத்தைகள் அல்லர், சொத்தை மதிக்கும் சொத்தைகள் அல்லர்.

செத்திடினும் உழைத்திடுவோம், தமிழ் தேசம் படைத்திடுவோம்.

செத்திடினும் உழைத்திடுவோம், தமிழ் தேசம் படைத்திடுவோம்.

சாகத் துணிந்தவர் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம்.

வேகமுடன் பகை வீடு எரித்திடும் வீரப் புலிகளின் கூட்டம்.

வேகமுடன் பகை வீடு எரித்திடும் வீரப் புலிகளின் கூட்டம்.

சாகத் துணிந்தவர் கூட்டம்,

ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம்,

ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம்,

ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம்.

இந்த பாட்டு வரி எழுதினது..Tigerblade

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/Xu2z-Hn/music/7GKzwASy/track_5/

என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா, எதிரிக் காலில் அடிமையாய் வாழ்வதுதான் சொர்க்கமா?

என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா, எதிரிக் காலில் அடிமையாய் வாழ்வதுதான் சொர்க்கமா?

அன்னை மண்ணை காத்திட உன் மனம் தயக்கமா, அஞ்சி நீயும் வாழ்வதால் தமிழினம் மதிக்குமா?

சொல்லடா சொல்லடா சொல்லடா,

சொல்லடா சொல்லடா சொல்லடா!

தாய் கொடுத்த பால் உனக்கு வீரம் ஊட்டவில்லையா? தாயகத்தை காத்திடத் தயக்கம் என்ன சொல்லடா!

தாய் கொடுத்த பால் உனக்கு வீரம் ஊட்டவில்லையா? தாயகத்தை காத்திடத் தயக்கம் என்ன சொல்லடா!

பேய்கள் உந்தன் ஊரழித்து நாசம் செய்ய விடுவதா?

பேய்கள் உந்தன் ஊரழித்து நாசம் செய்ய விடுவதா?

கேடி போல ஓடி ஓடி உரிமை கேட்டு சாவதா,

கேடி போல ஓடி ஓடி உரிமை கேட்டு சாவதா?

சொல்லடா சொல்லடா சொல்லடா,

சொல்லடா சொல்லடா சொல்லடா!

உயிரினும் அரியது எங்கள் மானம் என்று எண்ணடா. உறுதி உள்ள தமிழனாக உன்னை ஆக்கிக் கொள்ளடா.

உயிரினும் அரியது எங்கள் மானம் என்று எண்ணடா. உறுதி உள்ள தமிழனாக உன்னை ஆக்கிக் கொள்ளடா.

இமையம் தன்னில் கொடியை நட்ட மறவர் பிள்ளை அல்லவா,

இமையம் தன்னில் கொடியை நட்ட மறவர் பிள்ளை அல்லவா.

இன்னும் இங்கு பூனை போல இருக்கும் எண்ணம் நல்லதா,

இன்னும் இங்கு பூனை போல இருக்கும் எண்ணம் நல்லதா?

சொல்லடா சொல்லடா சொல்லடா,

சொல்லடா சொல்லடா சொல்லடா!

விதைகளாக வீழ்ந்து நிற்கும் வேங்கைகளை பாரடா, விடுதலைக்கு உதவிடாமல் விலகி ஓடல் ஏனடா?

விதைகளாக வீழ்ந்து நிற்கும் வேங்கைகளை பாரடா, விடுதலைக்கு உதவிடாமல் விலகி ஓடல் ஏனடா?

அடிமை வாழ்வு முடிவடைந்து தமிழினமே சாவதா?

அடிமை வாழ்வு முடிவடைந்து தமிழினமே சாவதா?

அறிவு அற்ற மனிதனாக அவலவாழ்வு வாழ்வதா?

அறிவு அற்ற மனிதனாக அவலவாழ்வு வாழ்வதா?

சொல்லடா சொல்லடா சொல்லடா,

சொல்லடா சொல்லடா சொல்லடா!

என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா, எதிரிக் காலில் அடிமையாய் வாழ்வதுதான் சொர்க்கமா?

அன்னை மண்ணை காத்திட உன் மனம் தயக்கமா, அஞ்சி நீயும் வாழ்வதால் தமிழினம் மதிக்குமா?

சொல்லடா சொல்லடா சொல்லடா,

சொல்லடா சொல்லடா சொல்லடா!

இந்த பாட்டு வரி எழுதினது..Tigerblade

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/Xu2z-Hn/music/...cu/10_trackmp3/

சி்ன்னஞ்சிறு ஊரு

கண்ணழுத வாறு

தேடியுமக்காக காத்திருக்கும்

தென்னைமரத் தோப்பு உம்மையெதிர் பார்த்து

கண்ணிரண்டும் நோக பூத்திருக்கும் -எங்கள்

சின்னஞ்சிறு ஊரு கண்ணழுத வாறு

தேடியுமக்காக காத்திருக்கும்

பகைவென்று பகைவென்று விடைகொண்டவர் -ஆனை

யிறவெங்கும் புலிவீரர் கதைசொன்னவர்

தடைவென்று மாவீரர் எனவானவர் -நாளை

தமிழீழம் வருமென்று துயில்கின்றவர்

உப்புத் தரவையெங்கும் உங்களின் குருதி -இந்த

உப்பளக் காற்றினிலே உங்கள் சுருதி

எப்பொழுதும் கேட்கும் உங்கள் குரலே -நீங்கள்

எழுந்தே வரவேண்டும் எங்களின் அருகே

கண்களில் நீர்வழிய உமைநினைத்தோம் -உங்கள்

கல்லறை தனில்வந்து எமைநனைத்தோம்

விண்ணிருந்து இறங்கி கண்ணைத் திறப்பீர் -நீங்கள்

விழுந்த இடம்தன்னில் புன்னகை செய்வீர்

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/Xu2z-Hn/music/-AMSZCk2//

தம்பி நிதனோடு தங்கை யாழினி -எங்கள்

சாதுரியன் பெயரைச் சொல்லி பாடுநீ

பொங்கிக் கரும்புலிகளாகி வெடிகளானவர் -பிற

பெரிய நெருப்பாகி எரிந்துபோனவர்

வன்னிமண்ணை சிறைபிடிக்க எண்ணிவந்த பகைவனுக்கு

வாசலிலே விழுந்ததடா முதலடி -தலைவன்

சொன்னபடி கரும்புலிகள் மின்னலென பாய்ந்து -ஜெய

சிக்குறுக்குக் கொடுத்த அடி பதிலடி

செந்தமிழர் வீதியிலே வந்துநின்ற எதிரிகளை

தேடித்தேடி அடிகொடுத்தார் யாழினி -எங்கள்

தம்பி நிதனோடு பொங்கி சிங்களத்துப் படைகளுக்கு

சாதுரியன் அடிகொடுத்தான் பாடுநீ

கரியவேங்கை வெடிசுமந்து திரியும்வரை பகைவனது

கால்கள் இந்த மண்ணில் படமாட்டுதே -இங்கு

விரியும் சிறு மலர்கள்கூட கரியபுலியாகி நின்று

விடுதலைக்க ஒளிகொடுத்துக் காட்டுமே

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

ஒரு சில பாடல்களை எமது யாழ் கள உறவுகள் எழுதியுள்ளார்கள்.பெருமையாக உள்ளது. ஒரு சில பாடல்கள் எனக்கு ரொம்ப விருப்பமானவை.

பாடல்: சொல்லி சொல்லி நாங்கள் வெல்லப்போகும் ஆண்டு

http://rs103.rapidshare.com/files/17741048...llich_Solli.mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/Xu2z-Hn/music/sQ0l83bu/track04/

காந்தரூபன் வாழுகின்ற கடலிது

கொலின்ஸ் கால்பதித்து நடைபயின்ற நிலம் இது

நீந்தி வினோத் ஆடிநின்ற அலையிது

ஜெயந்தன் சிதம்பரத்தின் உயிர்களுக்கு

விலையேது விலையேது

புதிய வரலாறு எழுதும் புலிவீரர்

புகழை உலகெங்கும் கூவு -அவர்

உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கி

உரத்த குரலெடுத்து பாடு பாடு பாடு

எதிரி வருவானா கரையைத் தொடுவானா

என்று புயலாகி நின்றோம் -புலி

அதிரும் வெடியோடு கடலில் நடைபோடும்

அணியில் துணையாகி வென்றோம்

உலகத் திசையாவும் தமிழன் அரசாளும்

நிலைமை வருமிங்கு ஒருநாள் -கடல்

புலிகள் படைசென்று பகைவர் படைவென்று

புலரும் தினமன்று திருநாள்

கடலின் கரையோரம் தலைவன் உருவாகி

கால்கள் நடைபோட வந்தான் -பெரும்

தடைகள் எதுவந்த போதும் அவன்காலில்

உடையும் எனச்சொல்லி வென்றான்

பூவும் புயலாகி பாயும் புலியாகி

போரில் குதித்துள்ள நாடு -தமிழ்

ஈழம் உருவாகும் வேளை இதுவாகும்

என்று களம்நோக்கி ஓடு

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி குட்டித்தம்பி!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/Xu2z-Hn/music/...5_manithulijil/

இன்னும் ஐந்துமணித்துளியில்

எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ்

ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும்

என்னை நீவாழத் தருகிறேன் -தமிழ்

ஈழத்தாயே போய்வருகிறேன்.

நேற்றுச் சிங்களவன் கொடிதாங்கினோம்

நெஞ்சில் அவன்கொடுத்த அடிவாங்கினோம்

மாற்று வழிகண்டு படைகூட்டினோம்

மானம் தமிழ்மண்ணில் நிலைநாட்டினோம்

இன்னும் நான்கு மணித்துளியில்

எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ்

ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும்.

எங்கள் கடலெல்லை யார்தாண்டுவார்

ஈழ மணிநாட்டை எவன்தீண்டுவான்

குண்டு தமிழ்நெஞ்சை யார்கொல்லுவான்

புலிகள் உயிர்மூச்சை எவன்வெல்லுவான்

இன்னும் மூன்று மணித்துளியில்

எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ்

ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும்.

கொலைஞர் ஆட்சிவிழ நான்தாக்குவேன்

கொடியர் படைவெறியர் உயிர்போக்குவேன்

தலைவர் ஆணைநான் நிறைவேற்றுவேன்

தமிழர் தாய்மண்ணைக் காப்பாற்றுவேன்

இன்னும் இரண்டு மணித்துளியில்

எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ்

ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும்.

இன்றுகளத்தில் நான் மடிதல்கூடும்

என்பின்னும் புலிகள் படைபோராடும்

வென்று தமிழீழம் வாகைசூடும்

விடுதலைக் கொடி காற்றிலாடும்

இன்னும் ஒரு மணித்துளியில்

எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ்

ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும்.

என்னை நீவாழ தருகிறேன் -தமிழ்

ஈழத்தாயே போய் வருகிறேன்.

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/KPM_djB/music/...enn_vanthaimp3/

யாரென்று நினைத்தாய் எம்மை

ஏன்வந்து அழித்தாய் மண்ணை

போரென்றா எழுந்தாய் வந்து

புலிகாலில் விழுந்தாய் பணிந்து

கண்டிவீதி நீபிடித்து கைகுலுக்கவோ -முன்னர்

ஆண்டிருந்த நிலமுழுதும் நாமிழக்கவோ

தாண்டிக்குளம் மேலே மேகம் இடியிடித்தது -எல்லை

தாண்டிவந்து நின்றவர்க்கு உயிர் துடித்தது

பார்த்தாயா சிங்களத் தம்பி-இங்கு

வருவாயா அனுருத்த நம்பி

கொண்டுவந்து ஆயுதங்கள் நீகுவிப்பதோ -நாளும்

குண்டுகளால் எங்கள்தேசம் தீக்குளிப்பதோ

கோபம் கொண்ட வேங்கைள் களங்களாடினர் -தாண்டிக்

குளத்தில் நின்ற பகைவர்கள் பிணங்களாயினர்

பார்த்தாயா சிங்களத் தம்பி-இங்கு

வருவாயா அனுருத்த நம்பி

Edited by kuddipaiyan26
Link to comment
Share on other sites

கண்ணிவெடி கனவில் வருது

காலை நினைக்க அழுகை வருது

ஐயோ அம்மே என்ன வாழ்க்கையோ

சண்டை போட கொட்டி வருது

சாவை நினைக்க பயம் வருது

மகே அம்மே என்ன வாழ்க்கையோ

திக்குமுக்கு ஆடுகிறது நம்ம புத்தி ஏனோ

திட்டம் எல்லாம் போடுறாங்க சண்டைக்குத்தானோ

பெறகெற போயி நாம நேந்ததும் ஏனோ

சிங்களத்து சிப்பாய் ஆன பாவம்தானோ...(கண்ணிவெடி..)

பெரியதுரை கொமாண்ட் பண்ண மூவ்பண்ணி போனது

கொட்டி வைச்ச ஜொனி வெடியில சில்வா காலு போனது

பொடி மல்லி கொட்டியெண்டு நமக்கெல்லாம் சொன்னது

ஐயோ பாவம் பண்டா கூட நொண்டி ஆகிப்போனது

தப்பிமண் அங்கும் இங்கும் நம்ம காலை எடுக்குது

தப்பினேன் பிடிக்க சொன்னா நமக்கு உள்ளே வெடிக்குது

கொட்டி இல்லா இடத்தில் எல்லாம் கண்ணிவெடி இருக்குது

பெட்டியில நம்மை எல்லாம் போடத்தானே துடிக்குது

எங்க காலை ஐயோ பார்க்க இப்ப

புத்தம் சரணம் கச்சாமி

எங்க வாழ்வை வந்து பார்க்க

அந்த சங்கம் சரணம் கச்சாமி.....(கண்ணிவெடி..)

"ஏ.. பண்டா மே அப்பே பெளத்த பூமியாய்

இங்கு தமிழன் எண்டு யாரும் இருக்க கூடாது

ஒக்கம அழிக்க வேண்டும். மூவ்"

தெமிழை கொல்லு எண்டு சொல்லி

அவங்க மப்பை கொடுக்கிறாங்க

வாங்கிக் கொண்டு இங்க வந்தா

இவங்க வெடியை முடிக்கிறங்க

மண்ணை தொட்டா வெடிக்கிறாங்க

மரத்தை தொட்டா வெடிக்கிறாங்க

கண்ட நிண்ட இடத்தில் எல்லாம்

நம்ம ஆக்கள் முடியிறாங்க

சண்டையில கண்ணிவெடி இல்லாட்டி மிச்சம் நல்லம்

சண்டைக்கு இப்ப போறதெண்டா எனக்குகூட ரொம்பப்பயம்

பொன்னம்மான் கண்ணிவெடி குறுப் ஒன்று இருக்குதாம்

பொம்பளை கொட்டிதானே நம்ம காலை எடுக்குதாம்.

எங்க காலை ஐயோ பார்க்க இப்ப

புத்தம் சரணம் கச்சாமி

எங்க வாழ்வை வந்து பார்க்க

அந்த சங்கம் சரணம் கச்சாமி.....(கண்ணிவெடி..)

இந்தபாடல் பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவினரால் வெளியிடப்பட்ட "வாகையின் வேர்கள்" எனும் ஒலித்தட்டில் கலைப்பருதியின் வரிகளுக்கு இசைப்பிரியனின் இசையில் சீலன் இப்பாடலை பாடியுள்ளார்.

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.