Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த எதிரிகளை வெல்வாராம் - சாஸ்திரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோதிடத்தில் தமிழர்களைப் போலவே சிங்களவர்களுக்கும் ஒரு அபார நம்பிக்கை.

பிரபல்ய சிங்கள சோதிடர் சுமனதாச அபயகுணவர்த்தனா மகிந்தவின் குறிப்பு மற்றும்.. தேசிய தலைவரின் குறிப்பை ஒப்பிட்டுப் பார்த்ததில் மகிந்த ருகுணுவில் இருந்து உதித்த பலமிக்க சிங்கள மன்னன் என்றும் அவர் எதிரிகளை வெல்வார் என்றும் இருக்கிறதாம். 25 ஆண்டுகளுக்கு முன்னரே றுகுணுவில் இருந்து பலம் மிக்க ஒரு சிங்கள மன்னன் உதிப்பான் என்று கூறி இருந்தாராம் இவர்..!

இருந்தாலும் தேசிய தலைவரின் குறிப்பும் பலமாகத்தானாம் இருக்கிறது. மற்றைய சிங்களத் தலைவர்களை விட தேசிய தலைவரின் குறிப்பு பலமாகவே இருந்து வந்துள்ளதாகவும் ஆனால் மகிந்தவின் குறிப்பு.. மிகப்பலமானது என்றும் கூறியிருக்கிறார்.. அந்தச் சிங்கள ஜோதிட சிகாமணி..!

இதை பிபிசி வேற பிரசுரித்துத் தொலைக்குது.. நானும் கிறிஸ்மஸ் கொலிடேக்கு என்ன செய்யலாம் என்று தெரியாமல்.. யாழில மிணக்கடுறதால.. எழுதித் தொலைக்கிறன்.. ம்ம்...! :wub:

'Hero king'

It is to astrologer Sumanadasa Abeygunawardene that many politicians have turned.

He says he even advised President Rajapaksa on the auspicious time to leave his house in the deep south to vote in the 2005 elections in which he became Sri Lanka's leader.

"Twenty-five years back, I said there would be a hero king from Ruhuna, Matara, now he's the one, we believe, President Mahinda Rajapaksa," said Mr Abeygunawardene.

"So President Rajapaksa's horoscope is a powerful one. He is the one who will bring development to the country. He will defeat the enemies and terrorists."

Mr Abeygunawardene said he had seen the horoscope of Velupillai Prabhakaran, the leader of the Tamil Tigers.

He said the rebel's horoscope was more powerful than those of previous Sri Lankan presidents, but Mahinda Rajapaksa's was stronger still.

Back in the wedding hall, Vijayaruban and Umaranjini were just hoping their marriage would be successful.

Even though they did not know each other very well, they were confident they will have a happy life together.

It was, after all, written in the stars.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7783842.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கூரையில் இருந்து நற் குறிதனைச் சொல்லி

கூழினுள் விழுந்து தன் உயிர்விடும் பல்லி

யாரையும் ஏய்த்திடும் நமது சாத்திரிமார்

நாளை தம் வாழ்வதன் முடிவினை உணரார்.

பாரையும் கோள் உடு நிலையையும் இணைத்தே

பலவித கதைகளை உரைத்திடு மூடர்

போரையும் அதன் அடிவேரையும் அறியார்

புவியினில் அமைதிக்கும் திகதிகள் குறிப்பார்.

நெடுக்ஸ்.. தாங்களும் அவரோட தொடர்பு கொண்டு எப்ப (உங்களுக்கு) நல்ல காரியம் எண்டு கேட்டு சொல்லுங்க.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. தாங்களும் அவரோட தொடர்பு கொண்டு எப்ப (உங்களுக்கு) நல்ல காரியம் எண்டு கேட்டு சொல்லுங்க.. :lol:

அவரை என்ன கேட்கிறது.. நான் நல்லாத்தானே இருக்கிறன்..!

உங்களுக்கு நான் நல்லா இருக்கிறது.. பிடிக்கல்ல என்றா சொல்லுங்க.. கேட்டுச் சொல்லுறன். எப்ப நான் அவஸ்திப்படுவன்.. என்று..! :) :)

  • கருத்துக்கள உறவுகள்

இதை பற்றி யாழ்கள சாத்திரியார் என்ன சொல்ல போகிறார் :):lol:

இதை பற்றி யாழ்கள சாத்திரியார் என்ன சொல்ல போகிறார் :):lol:

வேணாம்...அப்புறம் கஸ்டம்

எங்க சாஸ்த் எதையாவது சொல்ல...அண்ணாச்சி வர..

கிகிகககி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூரையில் இருந்து நற் குறிதனைச் சொல்லி

கூழினுள் விழுந்து தன் உயிர்விடும் பல்லி

யாரையும் ஏய்த்திடும் நமது சாத்திரிமார்

நாளை தம் வாழ்வதன் முடிவினை உணரார்.

பாரையும் கோள் உடு நிலையையும் இணைத்தே

பலவித கதைகளை உரைத்திடு மூடர்

போரையும் அதன் அடிவேரையும் அறியார்

புவியினில் அமைதிக்கும் திகதிகள் குறிப்பார்.

கரு

அருமையான கவிதை.

சாஸ்திரம் சொல்வது ஒருபுறமிருக்கட்டும். உங்கள் சந்தம் நிரம்பிய கவிதையையே நான் ரசித்துப் படித்தேன். பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி செல்வமுத்து அவர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி என்ன யாராக இருந்தாலும் வெள்ளை வானில் ஏறாமல் இருக்க வேணும் என்றால் மகிந்தவை சமாதானப்படுத்தக் கூடிய செய்திகளைத் தான் சொல்ல வேண்டும்.

எவ்வளவு பிரபலமான பத்திரிகைகள் எல்லாம் எப்படி எப்படி எல்லாம் எழுதினார்கள்.

வெள்ளை வான் பயத்தில் இப்போது மகிந்தவுக்கு சார்பாக மட்டுமே எழுதுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. தாங்களும் அவரோட தொடர்பு கொண்டு எப்ப (உங்களுக்கு) நல்ல காரியம் எண்டு கேட்டு சொல்லுங்க.. :rolleyes:

மூண்ணு முடிச்சைத் தானே சொல்றீங்க.

நானும் அதைத் தான் எதிர்பார்த்திருக்கேன்.

தம்பி ரொம்பவும் தான் துள்ளிக் குதிக்கிறார்.

மூண்ணு முடிச்சைத் தானே சொல்றீங்க.

நானும் அதைத் தான் எதிர்பார்த்திருக்கேன்.

தம்பி ரொம்பவும் தான் துள்ளிக் குதிக்கிறார்.

சாத்திரியை ஏன் கேட்க வேணும். நெடுக்கும் காதலியுமல்லவா முடிவுசெய்ய வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.