Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியை இப்போது பிடிப்பதென்பது முடியாத காரியம் - கெஹலியவால் முடிந்தால் பிடித்துக் காட்டட்டும்

Featured Replies

எல்லோரையும் ஒரே கூடைக்குள் போடுவது தவறு

ஆனால் நீங்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை

இல்ல விசுகு. பெரிசா தமிழ் உணர்வு எண்டு பேசுறவங்கள பாத்திருக்கிறன்.

வெளிநாட்டில எப்பிடி அண்ண அகதியா பதியிறது எண்டு கேட்டா

தம்பி புலியால பிரச்சனையெண்டு சொல்லு என்பாங்க

ஏன் அண்ண அரசாங்கத்தால பிரச்சனையெண்டா கிடைக்காதோ? எண்டால்

புலிகள் ஆளும் போது அரசாங்கத்தால பிரச்சினை எண்டால் இவங்க நம்பாயினம் ....

நீங்களுமா எண்டால்?

நாங்க செய்யிறதை தானே சொல்லுறம்.

ஏஜன்சியால கூப்பிட்டு

வீட்டுக்குள்ள பல மாசம் வச்சிருந்து

ஆமி கெடுத்து கர்ப்பம் என்று அசைலம் அடிச்ச கதைகளையும் பலர் சொன்னவை :lol:

கடவுளே?

  • கருத்துக்கள உறவுகள்

அதனால்தான் அப்படியானவயளும் எம்மில் இல்லாமல் இல்லையென்றுதான் நான் முதலிலேயே எழுதினேன்

அப்படிப்பட்டவர்கள் ஊரிலும் உண்டுதானே

அதாவது தம்மை விற்றும் பிழைக்கக்கூடியவர்கள் அவர்கள்

ஆனால் எதுவந்தாலும் புலிக்கு வசை வரக்கூடாது என்று வாழ்பவர்கள் பல ஆயிரத்தை நான் கண்ணால் கண்டுள்ளேன்

முரளிதரன்

டக்களசு

ஆனந்தசங்கரி....... ஊரிலிருந்து செய்வதைவிடவா..................????

இவர்கள் வெளியில் வந்து செய்துவிட்டார்கள்.

அதென்ன நீங்கள் மட்டும் அடிகடி தவறு விட்டுக்கொண்டிருக்கிறீங்கள

இதுகளைப்பார்க்கும் போது இங்கு எங்கள் கள உறவு ஒன்று ஏற்கனவே இணைத்த ஒரு வசனம் நினைவுக்கு வருகுது.

"தவறித்தவறின் தவறல்ல தவறியபின் தவறில்லை என்பதே தவறு"

நீங்க பொன் வாத்து :rolleyes:

நீங்க பொன் வாத்து <_<

என்னை அறுக்காமல் விட்டாச்சரிதான் :rolleyes:

என்னை அறுக்காமல் விட்டாச்சரிதான் :rolleyes:

சூறாவளி தெரியுமா ஒரு கதை.

அரண்மனைகளில ராஜகுரு என்று ஒருத்தர் இருப்பார்.

அவர்காளல்தான் அரசருக்கே ஆபத்து வாரதாம்.

அதுபோல இங்கும் ராஜகுருக்கள் இருக்கிறார்கள்... <_<

சூறாவளி தெரியுமா ஒரு கதை.

அரண்மனைகளில ராஜகுரு என்று ஒருத்தர் இருப்பார்.

அவர்காளல்தான் அரசருக்கே ஆபத்து வாரதாம்.

அதுபோல இங்கும் ராஜகுருக்கள் இருக்கிறார்கள்... :rolleyes:

புரிகிறது தல

அதெப்படி அப்படியே நச்செண்டு சொல்லுறிங்க?

புரிகிறது தல

அதெப்படி அப்படியே நச்செண்டு சொல்லுறிங்க?

பச்சைக் கள்ளர்கள் எல்லாரும் வானேலியிலயும் இணையத்திலயும்

பச்சை புள்ளை மாதிரி எழுதுறதையும் பேசுறதையும் பார்த்திருக்கிறன்.

வெளியில சமுதாய உணர்வோட பேசுறவங்க : எல்லாம் சமுதாய உணர்வு உள்ளவங்க இல்ல.

அவன் செய்யிறதை பாத்து அடுத்தவன் சொல்ல வேணும் அவன் சமுதாய உணர்வு உள்ளவன் என்று சூறாவளி.

அடுத்தவனை திட்டினால் : தான் சரியெண்டு அடுத்தவங்க நினைப்பாங்க எண்டு பலர் நினைக்கினம். :rolleyes:

கேக்க கேனயனா? எண்டு கேக்கிறவனுக்கு கேட்டதாலதானே தெரியுது அவன் கேனயன் என்று?.

கேட்கமா இருந்தா அது எப்படித் தெரியும் அவனுக்கு? <_<

இந்த பழம் புளிக்கும் என்று சொன்ன ஒரு நரிக்கதை தெரியும்தானே? :unsure:

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா!(தம்பி?) நீங்கள் யாழில் இப்போது செய்திகளை இணைப்பதில்லையாயினும் வேறு ஒரு உறவினால் இணைக்கப்பட்ட தவறான செய்தியை ஒட்டி நடத்தப்படுகின்ற விவாதத்திற்கு பிழையான விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.காரணம் யாழ் களத்தில் இணைக்கபட்ட தமிழ் செய்தியின் மூலம் தாங்கள் என்பதால்தான்;. நீங்கள் லக்மிபதான் செய்தியின் மூலம் என்று குறிப்பிட்டு இருந்தால் எந்தக் குழப்பமும் வந்திருக்காது. அதை விட்டு விட்டு நீங்கள் மிகச் சிரமத்தின் மத்தியில் செய்திகளைச் சேகரிக்கிறீர்கள் என்பதைக் காட்ட முனவதால்தான் மேற்கண்ட நியாயப் படுத்தலைச் செய்கிறீர்கள் என்று மற்றவர்கள் எண்ணத் தோன்றும்.பெரும்பாலான ஊடகவியலாளர்கள் வாசகர்களை குறைத்து மதிப்பிடுவது வழக்கமாக உள்ளது.(உதாரணம் பேச்சு தமிழில் எழுதினால்தான் வாசகர்களுக்குப் புரியும் என்ற விதத்தில் எழுதுவது, நீட்டி முழக்குவது)வாசகர்களை மதிப்பிட ஊடகவியளாளர்கள் யார்?

அஜீவன் அண்ணர்.

எழுதுவதை எழுதித்தள்ளுங்கள்........ கேக்க யாரு இருக்கா?

ஆனால் எடிட் பண்ணுவதை குறையுங்கோ..

மண்டையால போவுது.....

:rolleyes:

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா எழுதுங்கள். மொழி மாற்றம் செய்யுங்கள். உங்களின் சிங்கள, ஏனைய நண்பர்கள் மூலம் செய்திகளை சேகரித்து போடுங்கள்.

ஆனால் எப்போதும் மற்றவர்களை மூடராக்கலாம் என நினைக்காதீர்கள். கண்ணுக்குள் எண்ணை விட்ட படி தான் உள்ளோம்.

எனக்கென்னவோ "கேகலிய முடிந்தால் பிடித்து காட்டட்டும்" என்ற வரி எப்படி உங்களால் எழுதப்பட்டது என சிறு விளக்கம் தந்தாலே போதும்..

தவறு என்றால் தவறு என்று கூறுவதற்கு பதிலாக உண்மையாக நடேசன் தான் பேட்டி தந்தாரா என கேள்வி கேட்கிறீர்கள். சாதாரண வாசகனே சந்தேகத்துக்கு உரியது என கூறும் போது நடேசனா என விழித்து கேள்வி கேட்பதுமட்டுமல்லாமல் வக்காலத்தும் வாங்க முயல்கிறீர்கள்.

அஜீவன் அண்ணா தயவு செய்து பிழையாக விளங்காமலும் தனிப்பட்ட தாக்குதலாக எடுக்காமல் ஊடகவியலாளர் என்ற முறையில் விளக்கம் தர முடியுமா?

யாரோ இணைத்தார் என்பதல்ல , அவர் இணைத்தது உங்களது தள செய்தி. ஆகவே அதன் பொறுப்பு உங்களையே சாரும்.

மிக நன்றி.

அஜீவன் அண்ணா,

தவறை சுட்டிக்காட்டுவது வாசகராகிய எமது பொறுப்பு

தனிப்பட்டரீதியில் உங்களைத்தாக்குவதற்காக கருத்துக்கள் எழுதப்படவில்லை.

உங்கள், தாயகத்திகான சேவை தொடர எமது வாழ்த்துக்கள்.

குறுக்கர் சொன்னமாதிரியில்லாமல்

அதாவது $50 க்கோ 100 க்கோ ஒரு தளத்தை பதிவு செய்து போட்டு ஈ அடிச்சான் கொப்பிமாதி இல்லாமல் வாறதுகளை எடிட்டிங்செய்து போடுறதுமாத்திமில்லாமல்

அதுக்கு வக்காலத்து வாங்கி காலத்தை ஓட்டுவது எவ்வளவு கஸ்டமப்பா?

அடேயப்பா இங்க ஒரு மோதலா? பார்க்காமலே இருந்திட்டம்.

அஜீவன் கேக்கிற கேள்வியில் ஞாயம் இருக்கு? அதுக்கு பதில் சொல்லுங்கோ ஒருக்கா?

புதினம்

லக்பிமவுக்கும் நக்கீரனுக்கும் கொடுத்த செய்தியை

விடுதலைப்புலிகளின் தலைவர் கொடுக்கவில்லை.

பா.நடேசன் அவர்களே கொடுத்ததாக எழுதியுள்ளது.

அப்படியானால் இந்த கேள்வியும் பதிலும் எதைச் சொல்கிறது?

இங்க ஒரு கருத்து இருந்தது வெட்டி போட்டினம். போல கிடக்கு

ஏன்?

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=9788

மேலே உள்ளது பா.நடேசன் அவர்களது கருத்தா?

"லக்பிம" வார ஏட்டுக்குத் தலைவர் பிரபாகரன் பிரத்தியேக பேட்டி எதுவும் வழங்கவில்லை: பா.நடேசன் மறுப்பு

கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது பேட்டி, உண்மையில் தன்னாலேயே வழங்கப்பட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் “புதினம்" செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=9825

நக்கிரனது பேட்டி வந்து பல காலமாகிறது.

இதுவரை அதை யாரும் கண்டு கொள்ளவில்லையா?

இது குறித்து புதினத்துக்கு மட்டுமல்ல

முக்கியமாக லக்பிமவுக்கும்

அவற்றை பிரசுரித்த அனைத்து ஊடகங்களுக்கும்

நடேசன் அவர்கள் மறுப்பு அறிக்கை ஒன்றை அனுப்பவேண்டும்.

புதினம் தமிழர் மட்டுமே பார்க்கும் இணையதளம்.

ஆகக் குறைந்தது

தமிழ்நெட்டிலாவது (ஆங்கிலத்தில்)

அவரது மறுப்பறிக்கையை தெரிவிக்கவேண்டும்.

லக்பிமவும்

நக்கீரனும்

ஏனைய ஊடகங்களும்

தனது செய்தி தவறென பகிரங்கப்படுத்த வேணும்.

எதிர்காலத்தில்

யாரும் பேட்டி கொடுக்காமலே

பேட்டி கொடுத்ததாக வரலாமல்லவா?

நன்றி.

நான் பார்த்த அளவில அஜீவனோட தளம் வந்த பிறகு : இணையத்தில பல தளங்களில மாற்றங்கள் வந்தது. அதாவது துரோகி அது இது என்டு எழுதுறவையெல்லாம் அவரோட தளத்தை பார்த்துதான் தங்களை தீருத்திக் கொண்டவை?

அந்த ஆளை என்னவோ தமிழரோட எதிரி எண்டு காட்டி இங்க நல்ல பேர் வாங்க பலர் திரியினம் இல்லாட்டி எரிச்சல் படுறதாவே இங்க உள்ள கருத்துகள் தெரியுது. இமாலயத் தவறு செஞ்சுட்டு துன்பியல் எண்ட பரம்பரயில வந்தவனா அஜீவன் இருக்கலாம். இல்லாட்டி பிரச்சனையான காலத்தில தமிழனுக்கா இப்ப இங்க நிக்க வேண்டியதில்லை எண்டே நினைக்கிறன். அந்த ஆளுக்கு சிங்களவரை தெரியுமெண்டா சிங்களவனோட இருந்து தன்னை உயர்த்திக் கொள்ளலாம். ஈழத்தமிழனுக்காக இந்திய பதிவொன்றில தன்னட பேரில அடிபட்டிருந்தவர். தேடுறன் கிடைச்சா இணைக்கிறன். அதில அவரோட உன்மை முகம் தெரியும். நானும் பாத்திட்டு இந்த ஆளுக்கு இது தேவையா எண்டு நினைச்சன் :D

அஜீவனை எனக்கு தெரியாது. இருந்தாலும் யாழில உள்ள நல்ல ஒரு கருத்தாளரை துரத்துறதுக்கு முயல்றதில பலரோட நடத்தையில எனக்கு உடன்பாடில்லை. அதைத்தான் நான் பலதரம் இங்க கண்டன். சிங்களவனை தெரியாம , இல்லாட்டி சிங்களவனிட பேரே போடாம யாராலயாவது ஒரு செய்தி போடுங்கோ. அப்ப உங்கட குற்றசாட்டு சரி. அவனை சிங்களவனனெண்டு காட்டிப் போட்டு சிங்களவனோடு குலாவுறவங்கதான் இங்க அதைப் பெரிசா எழுதுறவை. அது தெரிஞ்ச விசயம்தானே? புலத்தில புலி ஆதரவாளராயிருப்பினம் கொழும்புக்கு வந்து நிக்கேக்க சிங்களவன் விடுதிகளிலயும் சிங்களவனிட உதவியோடயும் நாடெல்லாம் சுத்தி திரிவினம். தமிழனை நம்ப ஏலாது எண்டும் சொல்லுவினம். அவன் அதுதான் சிங்களவன் நீங்க புலியோ எண்டா ? அவங்களாலதான் இந்த மாதிரி ஒரு அருமையான நாட்டில இருக்க ஏலாம போனதெண்டு புலியை திட்டி : தமிழனை தோலுரிச்சி அழுற மாதிரி நடிப்பினம். அவனும் நம்பீடுவான். பக்கத்தில இருருக்கிற எங்களாலதான் தாங்கேலாம இருக்கும். :rolleyes: ஐயோ இப்பிடி எத்தனையை கண்ட நாங்களண்ண? :o கொழும்புக்கும் இந்தியாவுக்கும் வந்து வந்து நீங்க அடிக்கிற சிலுமிசங்களையும் : உங்கட நடிப்பையும் ஒருக்கா யோசிச்சு பாருங்கோ? :huh: எழுதினா இணையமே தாங்காதுங்கோ :)

இல்லை எண்டு யாராவது சொல்லுங்கோா பாாப்பம்?

இங்க அஜீவனோட முண்டுறவை புலத்தில செய்தி தளம் செய்யிறவை எண்டது மாத்திரம் தெட்டத் தெளிவு பாருங்கோ? :D

Edited by Thalaivan

நான் அறிந்த வரைக்கும் அஜீவனுக்கு எதிர்ப்பு தொடங்கியது கொழும்பில் ஒரு புலிபோராளி தற்கொலை செய்ததாக சொல்ல வேண்டியதற்கு அஜீவனுடைய தளத்தில் ஒரு புலிப்பயங்கரவாதியெண்டு செய்தி வெளியிட்டிருந்தார்.

ஆனால் சொல்லியவுடன் திருத்தியிருக்கலாம் ஆனால் அவர் அதை செய்யவில்லை.இதன் பின் தான் எதிர்ப்பு கிழம்பியது இங்கு

நான் அறிந்த வரைக்கும் அஜீவனுக்கு எதிர்ப்பு தொடங்கியது கொழும்பில் ஒரு புலிபோராளி தற்கொலை செய்ததாக சொல்ல வேண்டியதற்கு அஜீவனுடைய தளத்தில் ஒரு புலிப்பயங்கரவாதியெண்டு செய்தி வெளியிட்டிருந்தார்.

ஆனால் சொல்லியவுடன் திருத்தியிருக்கலாம் ஆனால் அவர் அதை செய்யவில்லை.இதன் பின் தான் எதிர்ப்பு கிழம்பியது இங்கு

அடேயப்பா இதுக்கா இந்த பில்டப். :D:o:rolleyes: இனி தமிழனோட அவருக்கு இருக்க ஏலாது. சிங்களவனோட சேரட்டும். நாங்களாவது அதை செய்வம் :huh:

அஜீவனது தமிழீழம் தொடர்பான உரையாடல் ஒன்று தமிழக பதிவொன்றில் கண்டேன். சொந்த பெயரில் எழுதுற இந்த ஆளுக்கு மண்டை சரியில்லையோ எண்டு நினைச்சன்.

இருந்தாலும் அந்நத ஆள் அந்த ஆள்தான். பாராட்டாமல் இருக்க ஏலாது. இங்க இருக்கிற பச்சோந்திகளைவிட எவ்வளவோ மேல்.

இதோ அது:

AJeevan said...

//சொந்த‌ மாநிலத்தில், உள்ளூர்களில், சேரிகளில் வாழும் கீழ்குல ஏழை தமிழ் மக்கள் மீது இல்லாத அக்கறை ஏன் திடீரென்று இலங்கை தமிழர்கள் மீது பிறந்துவிட்டது.//

வீட்டில ஒரு வேளை சாதத்துக்கு திண்டாடும் ஒரு மனிதன், அம்மா பசிக்குது என்று பாதையில கையேந்துற குழந்தைக்கு கையில இருக்கிற நாலானாவை கொடுக்கிறவன பாத்திருப்பீங்க. அவன் நிச்சயம் பாதிக்கப்பட்ட ஒருவனாத்தான் இருப்பான். பணக்காரனுக்கு அந்த மனசு உடனே வராது. ஆதாயம் இல்லேண்ணா அவனால அதுக்கு மனசே வராது.

இது இதயத்துக்கும் மூளைக்கும் இடைப்பட்ட மோதல்.

ஐயோ என்றால் அது இதயத்தின் உணர்வு. இது எல்லா இடத்திலும் நடக்கிறதுதானே என்றால் அது மூளையின் செயல்பாடு.

சந்தனக்கடத்தல் வீரப்பனோடு இலங்கை தமிழர் போராட்டத்தை ஒப்பிட்டதோடு பதிவாளர் விபரமே அறியாதவர் என புரிகிறது.

பிரபாகரனுக்கு பின்னர் இந்த மோதல் நின்று விடும் என்றால்....எங்கப்பன் செத்த பிறகு நாங்களும் செத்துடுவோம் என நினைப்பது மாதிரி ஆகிடும்.

அப்போ, முதலாளித்துவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அனைவரும் பயங்கரவாதிகளா?

அதுமாதிரி ஒரு இனத்தின் உரிமைக்கான சாத்வீகமே வன்முறையாகி நிற்கிறது.

ஈழத் தமிழர்கள் மிக பயந்தவர்கள். அடித்தபோதெல்லாம் ஓடியவர்கள் : ஒழிந்தவர்கள் : கொல்லப்பட்டவர்கள் : பாதிப்புக்குள்ளானவர்கள்.....

கர்னாடக தமிழர் பிரச்சனை ஒரு உதாரணம்.

காலா காலமாக , அடித்த போதெல்லாம் தமிழ் நாட்டுக்கு ஓடிவந்தார்கள்.

கடந்த முறை நாங்களும் எதையும் சந்திக்கத் தயார் என்று அறிக்கை விட்டு , கன்னட தமிழர்கள் சரிக்கு சரி நின்ற போது அங்கே வன்முறைகள் நின்றன.

தமிழக மக்களும் "நீ அங்கே அடி. நாங்க இங்கே உதைக்கிறோம்" என்ற போது அது அவர்களை சிந்திக்க வைத்தது இல்லையா?

அது காலம் கடந்தே ஈழத்தில் தொடங்கியது.எனக்குத் தெரிந்து 1958 : 1977 : 1983 என 1950களிலிருந்தே இந்தப் பிரச்சனையில் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல இலங்கையில் தமிழ் பேசும் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

உண்ணாவிரதமிருந்தோர் தாக்கப்பட்டார்களே?

1980களுக்கு பிறகுதானே இளைஞர் எழுச்சியாக ஆரம்பித்தது.

வாழும் பருவத்தில் கருகிப் போக எந்த இளைஞனும் விரும்பமாட்டான். அவன் என்ன துறவறமா செல்கிறான்? அடுத்த நிமிடம் அவனது உயிர் போகும் என்று தெரிந்தே சிரிப்போடு வாழ்கிறான்.

இராணுவம் என்பதும் போராளிகள் என்பதும் வேறு வேறு.

இராணுவ சிப்பாய் மனது சாவதற்கு முன் யாரையாவது அனுபவித்து சாக துடிக்கிறது. அது நடந்தேயுள்ளது.

போராளி சாகும் போது கூட தன் இனத்தை கரை சேர்க்க யாருக்காவது பாதுகாப்பு கொடுத்து உயிர் கொடுக்க நினைக்கிறது.

விடுதலைப் புலி ஆதரவோடு பேசுவதாக யாராவது கருதினால் , ஏனைய போராளிகள் அனைவரும் தவறானவர்களே என்றாகிவிடும்.

உங்கள் வீட்டில் புகுந்த திருடனுக்கு சாவிக் கொத்தைக் கொடுத்து அனைத்தையும் சுருட்ட இடமளித்து வீட்டிலுள்ளோரையும் கெடுத்துவிட்டு போக வழிவிடுபவராகவே கருத நேரிடும்.

என் குடும்பத்தை காக்க என நீ போராடுவது தவறில்லையோ? அதுபோலத்தான் இதுவும்....

தமிழர்கள் புலம்பெயர்ந்ததில் பல நன்மைகள் உண்டு.

போராட்டத்தின் ஆதரவு புலம் பெயர்ந்தவர்களிடமிருந்தே வருகின்றன.

பல செய்திகள் உலகுக்கு அவர்கள் மூலமே பரவுகின்றன.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்.....எனும் பாரதியின் கருத்தாக்கம் ஈழத் தமிழர்களாலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய தமிழர்கள் வெளிநாடு சென்றார்கள். உழைத்தார்கள். திரும்பினார்கள் என்பதே நிசம்.

ஈழத் தமிழர்களாலேயே உலகெங்கும் தமிழ் பரவியது. எல்லோரும் ஒரே இடத்தில் இருந்திருந்தால் இன்று அனைவரும் செத்திருப்பார்கள்.

இங்கே இலங்கை பிரச்சனையை பலரும் புரிந்து கொள்ளவேயில்லை.

அதை புரியவைக்க வார்த்தைகளுக்கு வயதில்லை.

மலேசியாவில் தமிழருக்கு உங்கள் கண்முன் நடப்பதென்ன?

நாளை நடக்கப் போவது என்ன?

இன்று அகிம்சையாளர்கள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். அது நாளை வன்முறையாகாதென்பதற்கு என்ன உத்தரவாதம்?

அவர்களது பூர்வீகம் இந்தியர் என்பதுதானே? அதற்காக என்ன செய்தீர்கள்?

http://puthuyugam.blogspot.com/2008/11/blog-post.html

அஜீவனுக்கு பதில் எண்டு ஒரு தலைப்பு

AJeevan said...

என் கருத்துகள் காரணமாக ஒரு கருத்தாடல் தொடர்வதை இப்போதுதான் பார்க்க முடிந்தது.

சில தவறான கருத்தை பதிவாளர் உள்வாங்கியுள்ளார்.என்பதை தாழ்மையுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

முதலில் நான் இந்திய எதிர்ப்பாளருமில்லை. விடுதலைப் புலி ஆதரவாளருமில்லை என்பதை தெரிவிக்கவிரும்புகிறேன்.

அதற்கு காரணம் நான் இலங்கையில் பிறந்தவன். தந்தை இலங்கை தமிழர். தாயார் இந்திய தமிழர். படித்தது சிங்கள மொழியில்... வளர்ந்தது சிங்கப்பூரில்.... இந்தியாவிலும் இருந்திருக்கிறேன்.

எனவே சரித்திர ரீதியாக இல்லாவிட்டாலும் , என் கண் முன் நடந்தவை எனக்குத் தெரியும்.

//இந்தியாவின் மத்திய அரசை நான் நிச்சயம் வன்மையாகக் கண்டிக்கிறேன், தன் சுய லாபத்திற்காக புலிகளை வளர்த்தமைக்காக. //

அது ஏன் என்று நீங்கள் கேட்கவில்லையே. விடுதலைப் புலிகளை மட்டுமல்ல. அனைத்து ஈழ போராளி இயக்கங்களை வளர்த்து , அவர்களுக்குள் பிரிவினைகளை உருவாக்கியதும் இந்தியாதான். இதை தெரிந்தவர்களுக்கு புரியும். அதை எழுத இது போதாது?

//பாகிஸ்தான் தோன்றிய போது வங்கதேசம் உருவாகும் என யார் கண்டார் ?//

இல்லை. இந்தியாவின் நலனுக்காக வங்க தேசம் உருவாக்கப்பட்டது. அதுபோல வளம் கொழித்த இலங்கை மேலும் வளர்ந்துவிடாமல் சின்னாபின்னமாக்கப்பட்டது.

இல்லாவிட்டால் இலங்கையில் பிரச்சனை உருவான போது நீங்கள் சொல்லும்

//மலேசிய பிரச்சினையிலும் கூட இரு புறமும் தவறுகள் உண்டு. நாம் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நாம் வாழவேண்டும். உங்களுக்கு அந்தச் சட்ட திட்டங்களுடன் உடன்பாடு இல்லையெனில், மறுபடியும் இந்தியாவுக்கு வரவேண்டியது தானே? //

என்றால் இலங்கை தமிழரை இந்தியா அழைத்திருக்க வேண்டுமே? இல்லை மலேசியாவில் வாழும் தமிழரை அழைத்திருக்க வேண்டுமே....? அப்படி ஏதும் நடக்கல்லயே?

அங்கெல்லாம் என்ன நடக்கிறது?

உங்களுக்கு முழுமையாக தெரியாது.

இதுவே உண்மை.

அமெரிக்க அதிபராக கென்ய நாட்டு பூர்வகத்தைக் கொண்ட ஒபாமா போட்டியிட முடியுமானால் ? அதிபராக (வருவார்)முடியுமானால்? அட மலேசியா நாட்டின் முழுகெலும்பாக உழைத்த அந்த இந்திய (தமிழர் - இந்தி - மலையாள - தெலுங்கு மற்றும் ஏனைய இன...) மக்கள் ஏன் சார் அவனது நியாயமான கோரிக்கையை முன்வைத்து அரசியல் செய்யக்கூடாது?

அந்த இந்திய மக்களையே வேலைக்கு போனியா? உழைச்சியா? வந்தியா? அதுதானே உங்க கருத்து?

கண்முன்னே மலேசிய இந்தியனுக்கு என்ன நடக்குதுண்ணு தெரியாத உங்களுக்கு? நிச்சயம்

ஈழப்பிரச்சனை தெரிய முடியாது.

இலங்கையிலிருந்து சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா வந்த (இலங்கையில் வாழ்ந்த) மலையக இந்திய தமிழர்கள் தமிழகத்தில் பிச்சைக்காரர்கள் போல் வாழ்கிறார்கள்.

அப்படி வந்தவர்கள் இருக்கும் இடங்களைப் போய் பாருங்கள் சார். உண்மை புரியும்? எங்கே இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள் என்று எவருக்காவது சொல்ல முடியுமா?

இதே நிலைதான் மலேசிய தமிழருக்கு மட்டுமல்ல யார் வந்தாலும் அங்கு நடக்கும். பணம் உள்ளவன் வாழ்வான். அடிப்படை பிரச்சனையானவன் நாதியற்று போவான். அதைதானே நடக்குது. தமிழக அகதி முகாம்களுக்கு போங்க. அவங்களை ஒரு போட்டோ கூட எடுக்க முடியாது. அவங்க எல்லாம் உயிரை காப்பாத்திக்க ஓடிவந்தவங்கதான். ஆனா தன்மானம் இழந்து திறந்த வெளி சிறைகளுக்குள்ள அடைபட்டு கிடக்கிறானே?

மலேசியாவிலோ அல்லது சிங்கப்பூரிலோ உள்ள தமிழன் வீசா வாங்காம இந்தியாவுக்கள்ள வர முடியுமா? அது அவன் தாயம் என்று என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

ரங்கூனிலிருந்து வந்த தமிழனுக்கு நடந்த கதையை கலைஞரே எழுதி நடிகர் சிகரம் நடித்து பாராசக்தி என வந்ததே? பார்க்காவிட்டால் இன்னொரு முறை பாருங்கள்?

அங்கே அடிப்படை பிரச்சனை பார்ப்பனியத்துக்கு எதிராக திசை திருப்பப்பட்டது என்பது இன்னொரு சாராரை பழி வாங்கவோ அரசியலாகவோ என்பது தெரியாது. அதற்கும் பார்ப்பனியத்துக்கும் என்ன பிரச்சனை? வந்த இந்தியனை காப்பது அரசின் கடமையல்லவா? அதை மழுங்கவைத்து திசை மாற்றி விட்டதே அந்தப்படம்?

இலங்கையில் பிரச்சனை என்பது நான் பிறப்பதற்கு முன்னமே தேன்றிவிட்டது.

என் பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கொழும்பில் வாழ்ந்தவர்கள். 1950களிலேயே உடமைகள் சூறையாடப்பட்டு பிரச்சனைக்குள்ளாகி வேறு பகுதிகளுக்கு சென்று வாழ்ந்தவர்களான என் பெற்றோர் எனக்கு புரிய ஆரம்பித்த போது கதை கதையாக சொன்னார்கள்.

எனக்கு அப்படி பிரச்சனை வரக் கூடாது என எனக்கு சிங்களம் படிக்க வைத்தார்கள். அங்குதான் பிரச்சனை?

என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா?

ஒரு மொழி புரியாமல் பிரச்சனைக்குள் இருப்பவனை விட மொழி புரிந்தவன் அந்தப் பிரச்சனையோடு வாழும் போது ஏற்படும் புரிதல் : வேதனை அதிகம்.அவனுக்குள் ஏற்படும் பிரைச்சனையும் அதிகம். அது எனக்கு கிடைத்தது.

தென் இந்தியாவிலிருந்து போனவனை (தமிழகம் -கன்னடா - ஆந்திரா - கேரளா)பம்பாயிலுள்ளவன் மதறாசி என்றால் வலிக்காது. அங்கு உள்ள இந்தி தெரிஞ்ச தென் இந்தியனுக்கு மதராசி என்றால் வலிக்கும் சார்?

எனக்கு தமிழ் நண்பர்களை விட சிங்கள நண்பர்கள் அதிகம். நான் விடுதலைப் புலிகளுக்கு வக்காலத்து வாங்கவில்லை. நான் அவர்களோடும் இல்லை. உண்மைக்காக மட்டுமே பேசுகிறேன்.

ஈழத்து இயக்கங்களை வளர்த்தது - பயிற்சி அளித்தது மட்டுமல்ல , அவர்களிடையே பிரிவினைகளை உருவாக்கியதும் இந்தியாதான். அதைவிட இலங்கையில் தாக்குதல் நடத்த உதவிகள் செய்ததும் இந்தியாதான்.

தஞ்சாவூர் - திருச்சி - தேனி - டில்லி போன்ற பகுதிகளில் ஆயுதப்பயிற்சியும் கொடுத்து , பண உதவிகளும் யார் செய்தது?

மேலதிக தகவல்களுக்காக ஒரு பேட்டி:

http://www.tamilcinema.com/general/interview/Nedumaran.asp

குழந்தைகள் கையில் ஆயுதங்களை விளையாட்டுப் பொருளாகக் கொடுத்துவிட்டு உன்னை யார் கொலை செய்யச் சொன்னது என்று ஆயுதத்தைக் கொடுத்த பெரியவர்களே கேட்டால் அதுக்கு என்ன சார் அர்த்தம்?

யார் சார் பொறுப்பு?

அந்தக் குழந்தைகளா? பெரியவங்களா?

சின்னப்பசங்க அவங்களுக்குத்தான் புத்தியில்ல? பெரியவங்க, உங்களுக்கு எங்க சார் போச்சு புத்தி?

கேட்க தோணுமா? தோணாதா?

இலங்கை அரசு பேச்சு வார்த்தைக்கு வரணுமுண்ணா, சிங்களப்பகுதியில தாக்குதல் நடத்துங்கண்ணு அனைத்து தமிழ் இயக்கங்களையும் அழைத்து ஆயுதம் கொடுத்து கட்டளை இட்டது யார் சார்?

அதற்கு எதிராக சிலர் பொது மக்களை கொல்லக்கூடாது என அங்கே வாதிட்டவர்களை நான் அறிவேன். அதையெல்லாம் பார்க்காதீங்க என்ற நிலையில் வற்புறுத்தி பெளத்த நகரான அனுராதபுரத்தில் ஒரு தாக்குதல் நடந்தது. அதற்கு பின்னரே திம்பு பேச்சு வார்த்தைக்கு இலங்கை அரசு வந்தது. இதை நீங்க சொன்னீங்களா என ரொமேஸ் பண்டாரியிடம் கேளுங்க? பதில் வரும்.

இந்திய டில்லி அரசு என்பதும் தமிழக தமிழர் என்பதும் வேறு வேறு சார்.

தமிழக தமிழர் ஆதரவு என்பது தனது இனத்துக்கான குரல் சார்.

இந்திய ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது தனது பிராந்திய நலனிலுள்ள அக்கறையின் காய் நகர்த்தல்.

இதனால்தான் தொடர் கொலை கலாச்சாரம் ஒன்று உருவானது என்றால் யாருக்குத்தான் கோபம் வராது?

பாகிஸ்தான் வங்கதேசம் எல்லாம் பிரிஞ்சாச்சே எதுக்கு சார் அங்க இன்னும் மோதல் நடக்குது? அங்க ஏன் சார் சாகிறாங்க?

ஆசை சார் . ஆசை . மண்ணாசை.

உலகத்தில பலருக்கு மண்ணாசை.

அடுத்தவனை விட நான் மட்டும் நல்லாயிருக்கணுமுங்கிற ஆசை.

அவனும் வாழனும் நானும் வாழனும் எனும் நிலை வேணும் சார்.

நான் பிரிவினை வாதியில்ல சார். குடும்பத்துக்குள்ள பிரச்சனையின்னா பிரிஞ்சு வாழுறதில தப்பேயில்ல. அங்க அடிபட்டு சாகிறதை விட அவங்க பிரஞ்சு ரெண்டு பேரும் உயிர் வாழுறது : வாழ விடுறதுதான் சட்டத்தின் கடமை.

ஒருத்தனை சாகடிக்க வைத்துவிட்டு, நடந்த கொலைக்காக அடுத்தவனையும் தூக்கில போட்டு, ரெண்டு பேரையும் சாகடிக்கிறதில என்ன சார் சட்டம் சாதிக்கும்?

தான் வாழ்ந்த மண்ணில் வந்தவனை வாழ வச்சுட்டு சாகிறான் பாருங்க சார். அது கொடுமையிலும் கொடுமை சார்.

இதோ இந்த பதிவில அது குறித்து இருக்கு சார். அதை பாருங்க. இது யாரோ எழுதினது சார். கண்ணில பட்டுது. இணைச்சிருக்கேன்.

http://inioru.com/?p=1180

ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் இல்ல. அதை மட்டும் புரிஞ்சுக்கிட்டீங்கண்ணா போதும்.

செத்துக்கிட்டிருக்கிற உன் இனத்தை சாகவிடு என்கிற மாதிரி இந்தமாதிரி பதிவுகள் எழுதப்படுமானால் , அதை எழுதாம இருக்கிறதே மேல்.

அரசோடு இருக்கும் கட்சிகளில் இருப்பவர்கள் கூட அவர்கள் செய்வது தவறென பேசுறாங்க.

உ+ம்: http://www.ajeevan.ch/content/view/6839/1/

அப்படியல்லாதோர் தம்மை காக்கவே அரசோடு இருக்கிறார்கள். அதை அன்றைக்கும் சில தமிழ் தலைவர்கள் செய்தார்கள்.அது இப்போதும் நடக்குது. காலம்தான் பதில் சொல்லும்.

இவை எதுவுமே இந்தியாவுக்கு எதிரான கருத்துகளோ அல்லது அல்லது இந்திய மக்களுக்கு எதரிான கருத்துகளோ அல்ல.

உங்கள் புரிந்துணர்வுக்காக இணைக்கப்படுகிறது.

நன்றி

www.ajeevan.com

https://www.blogger.com/comment.g?blogID=36...947124313299066

எனக்குத்தெரிந்தவரை அஜிவனுக்கு எதிராக எளும்கருத்துக்கள் அவரின் செய்திக்கு எதிராணாதில்லை.... அந்தச்செய்தியை யாராவது விமர்சிக்கும்போது அந்த விமர்சனத்துக்கு அஜிவன் எழுதும் கருத்துக்களே பெரும் சர்ச்சையாகவுள்ளது.

எனக்குத்தெரிந்தவரை அஜிவனுக்கு எதிராக எளும்கருத்துக்கள் அவரின் செய்திக்கு எதிராணாதில்லை.... அந்தச்செய்தியை யாராவது விமர்சிக்கும்போது அந்த விமர்சனத்துக்கு அஜிவன் எழுதும் கருத்துக்களே பெரும் சர்ச்சையாகவுள்ளது.

இங்கே பிரச்சனை செய்தியிலிருந்தே தொடங்கியுள்ளது. அவரது கருத்து பின்னரே வந்துள்ளது.

உண்மைகளை ஏற்காதவர்கள் அஜீவனை ஆரம்பத்திலிருந்தே ஏதாவது நொட்டு சொல்வதை பார்த்திருக்கிறேன். அவர் தன் மனதில் பட்டதை நேரடியாக சொல்லும் ஒருவராகவே பலர் கூறுகின்றனர். நானும் அதையே சொற்ப காலத்தில் பார்த்துள்ளேன். என்னைப் பொறுத்த வரை அவர் தவறான தளங்களுக்கு எழுதாமல் இருப்பதே சரி. அதை யாழ் களம் செய்கிறதென்று வருத்தமாக இருக்கிறது. அல்லது நாம் அவரை எதிரிகளின் உறவாக்க விரும்புகிறோமா என்ற கேள்வி என் மனதில் படுகிறது? அதை யாழில் பலர் விரும்புவது கண்கூடு இதுக்கு மேல விவாதித்தால் என்னை தடை செய்தாலும் செய்திடுவாங்க. ஆளைவிடுங்கப்பா :rolleyes:

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இந்தச் சவாலுக்கே வேலை இல்லை என்றாகப் போகிறது. பரந்தன் சந்தியிலிருந்து கிளிநொச்சி நோக்கி முன்னேறுவதுதான் சிங்களத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை. நாங்கள பழைய தலைப்பு ஒன்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறோம்.

கிளிநொச்சி 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றப்படும் - சரத்பொன்சேகா

சிறீலங்கா இராணுவத்தின் தரைப்படைத்தளபதி கிளிநொச்சி நகரை தமது படையினர் எதிர்வரும் 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றிவிடுவர் என தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா படையினர் பரந்தன் சந்தியையும் இரணைமடு சந்தியையும் கைப்பற்றியதன் பிற்பாடு இவரது இவ் அறிவிப்பு வெளிவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை இவர் பலதடவைகள் கிளிநொச்சியை தாம் கைப்பற்றுவோம் என காலகெடுக்களை விதித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.pathivu.com/

ஆ..ஆ..ஆ... அஜீவன்................ அவர்களின்,, பிரபாகரனின் பெயரில் விடுத்த அறைகூவலுக்கு பதில் கிடைத்துவிட்டது... அல்லது எங்கட அஜீவன் உள்வீட்டுகாரர் எண்டு சொல்லிகொள்ள்கிறார். அவருக்கு நடக்கபோவது தெரிஞ்சிருந்துதான்... குண்டக்கமண்டக்க மொழிபெயர்ப்பு செய்தவரோ?

http://www.lankanewspapers.com/news/2009/1/37473.html

Capturing Kilinochchi a daydream for Lanka: LTTE chief

Liberation Tigers of Tamil Eelam (LTTE) supremo Velupillai Prabhakaran on Saturday reportedly denied the fall of Kilinochchi to the Sri Lankan Army.

Prabhakaran reportedly said in his e-mail interview with a Chennai-based Tamil magazine, Nakeeran that the Sri Lankan forces have entered parts of our homeland and are stationed in close proximity to Kilinochchi town. But, capturing Kilinochchi is just a daydream of President Mahinda Rajapaksa.

The LTTE chief further issued a warning that his fighters would launch a counter-attack. However, intelligence suggests his guerrillas are moving back to the Vanni jungles of Mullaitivu.

According to a newspaper report, Prabhakaran lives in a sprawling air-conditioned bunker complex, located 30 feet below the ground, and comes up to the surface only in the night to avoid detection.

The LTTE chief`s bunker, divided into two sectors, has a tunnel which connects to a similar bunker complex, and the rebel leader`s room is tucked away in the lower-most floor having two exits, a sketch carried by the paper along with the report showed.

A typical day for Prabhakaran, who suffers from hypertension, begins at 5.00 am when he is served a cup of tea without sugar or milk and is briefed about the battlefront at 6.30 am, the paper had said quoting sources.

`From a powerful radio set, Prabhakaran gives instruction to his field commanders though he himself would not talk directly, and asks his confidant to do the talking. If he thinks that communications are not secure, he would insist on communicating through satellite phones at night,` it said.

Not in the best of health, Prabhakaran is attended to by three doctors. `His blood pressure is checked twice during the day,` the report said.

For lunch, his aide prepares food without salt which he `doesn`t like at all`, but is compelled to eat due to his health. `He has become a vegetarian because of his illness,` the report said, adding `he has light dinners mostly `kurakkan` (cereal grass whose seed yields somewhat bitter flour) and some gravy.`

The LTTE had subsequently denied that Prabhakaran was sick and claimed that he was healthy and having a normal diet.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.