Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடபோர்முனையில் இந்திய "றோ"வின் உளவு வானூர்திகள்: கொழும்பு ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடபோர்முனையில் இந்திய "றோ"வின் உளவு வானூர்திகள்: கொழும்பு ஊடகம்

[புதன்கிழமை, 07 சனவரி 2009, 06:01 மு.ப ஈழம்] [பி.கெளரி]

கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு நிறுவனமான "றோ"வின் வானூர்திகள் கண்காணித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு வானூர்திகள் கண்காணித்து வருகின்றன.

சிறிலங்கா அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உளவு வேலைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்திய உளவு அமைப்பான றோவின் இரகசிய பிரிவுகளில் ஒன்றான வான் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வானூர்தி ஜனவரி 3 ஆம் நாள் அதிகாலை 3:00 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு வடபோர்முனையின் கரையோர பகுதிகளை அடைந்து கண்காணிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

அதிநவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட இந்த வானூர்தி பின்னர் மீண்டும் சென்னைக்கு திரும்பாது வேறு வானூர்தி நிலையம் ஒன்றில் தரையிறங்கியுள்ளது. 40,000 அடி உயரத்தில் பறக்கும் இந்த வானூர்திகளில் துல்லியமாக படங்களை எடுக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முகில் கூட்டங்களின் ஊடாக தரையில் நடைபெறும் சம்பவங்களை படம் பிடிக்கும் தகமை கொண்ட இந்த ஒளிப்பட சாதனங்கள் சிறிய வாகனங்களையும், மனித நடமாட்டங்களையும் காண்காணிக்க கூடியது.

இந்திய உளவு அமைப்பின் இந்த வான் ஆய்வு மையத்தை சேர்ந்த வானூர்திகளை உளவு நிறுவனங்களை சேர்ந்த வானோடிகளே செலுத்துவதுண்டு, அதனை வான்படை வானோடிகள் செலுத்துவதில்லை.

மேலும் அவை குறிப்பிட்ட ஒரு நிலையத்தை பயன்படுத்துவது கிடையாது, பொதுமக்கள் பயன்படுத்தும் வானூர்தி நிலையங்களையும், வான்படையின் நிலையங்களையும் மாறி மாறி பயன்படுத்துவது உண்டு.

இதனிடையே, வான் ஆய்வு மையத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக தமக்கு சிறிதளவான தகவல்கள் தெரியும் என சென்னை வானூர்தி நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வேறு ஒரு நிலையத்தில் இருந்து வந்த வானூர்தி ஒன்றே சென்னை வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puthinam.com

  • கருத்துக்கள உறவுகள்

RAW goes on recce mission

CHENNAI: A day after the Sri Lankan army took over Kilinochchi, pushing the LTTE fighters to the northern jungles of Mullaittivu, India sent a

select team of the Research & Analysis Wing (RAW) on a secret aerial surveillance mission across the Palk Straits.

Sources told TOI that the aircraft belonging to the Air Research Centre (ARC), a top secret wing of RAW, took off from Chennai airport around 3am on Saturday. Sources refused to confirm if the ARC exercise was on the request of the Sri Lankan government.

"The ARC aircraft, which took off from Chennai with high-tech espionage equipment, flew quite close to the Sri Lankan coast and got back to another airport without returning to Chennai," a source said. ARC, which has a fleet of Boeings and Embraers fitted with some of the best cameras for high-altitude photography, can fly well above 40,000 feet.

The vision of the cameras, made on the lines of satellite cameras, can penetrate clouds and get photographs of spatial resolution of less than one metre, which means a small vehicle or even a person on the ground could be photographed from those heights. For civilian flights, there are internationally accepted preset codes. The ARC aircraft uses codes and call signs other than these and keeps changing them before every exercise.

The exercises are so secretive that ARC uses its own pilots and not even those from the Indian Air Force. While it uses civilian and IAF airports across the country, there is no fixed air base for ARC, which remains more of a dynamic arrangement than an organisation. "There was little notice for Saturday's mission. The flight came from some other airfield and took off in the early hours," an airport source said.

http://timesofindia.indiatimes.com/India/R...how/3939767.cms

கிளிநொச்சியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய விமானம்

கிளிநொச்சி நகரை இலங்கைப் படைகள் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்ட அடுத்த நாள் இந்தியாவின் உளவுப்பிரிவான "றோ" வின் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள், நவீன கருவிகள் பொருத்தப்பட்ட இரகசிய உளவு விமானத்தின் மூலம் இலங்கையின் வடபகுதியை சென்று பார்வையிட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரேஸ்ட இந்திய செய்தியாளர் வெங்கட்ராகவன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்திய றோ அதிகாரிகளை ஏற்றிய குறித்த நவீன உபகரணங்களை கொண்ட விமானம் சென்னை விமானநிலையத்தில் இருந்து ஜனவரி 3ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இலங்கையின் வடக்குநோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. தமது பணிகள் நிறைவுற்றதன் பின்னர் இந்த விமானம் சென்னைக்கு திரும்பிவராமல் வேறு ஒரு விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

எனினும் இந்திய அதிகாரிகளின் இந்த நடவடிக்கை, இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையிலா மேற்கொள்ளப்பட்டது என்ற விடயத்தை அறிந்துகொள்ள முடியவில்லை என வெங்கட்ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்திய அதிகாரிகள் பயணித்த விமானத்தில் பொருத்தப்பட்ட நவீன புகைப்படக் கருவிகளின் மூலம் சுமார் 40 ஆயிரம் கிலோமீற்றர் உயரத்தில் இருந்து தரையில் செல்லும் மனிதர்களையும் வாகனங்களையும் படம் பிடிக்கமுடியும். அத்துடன் இந்த புகைப்படக்கருவிகள் முகில் கூட்டத்திற்கு மத்தியிலும் படங்களை தெளிவாக எடுக்கக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்திய புலனாய்வு பிரிவான "றோ" அதிகாரிகள் இலங்கையின் வடபகுதிக்கு சென்றமையை சென்னை விமான நிலைய தரப்புகளும் உறுதிசெய்துள்ளன.

http://www.tamilwin.com/

இலங்கையின் ஆளில்லாத விமானங்களை இயக்குவதும், அதன் படங்களை ஆராய்வதும், ராடர்களை இயக்குவதும் இந்திய பொறியியலாளர்கள் எண்று நீண்ட காலம் முன்னமே செய்திகள் சொல்லினவே...??

  • கருத்துக்கள உறவுகள்

வடபோர்முனையில் இந்திய "றோ"வின் உளவு வானூர்திகள்: கொழும்பு ஊடகம்

[புதன்கிழமை, 07 சனவரி 2009, 06:01 மு.ப ஈழம்] [பி.கெளரி]

கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு வானூர்திகள் கண்காணித்து வருகின்றன.

சிறிலங்கா அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உளவு வேலைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

puthinam.com

காவியக் காலமாகட்டும் இன்றாகட்டும் தமிழினத்தை ஒடுக்குதல் என்பதில் இந்தியத் தீவிரமென்பது, சிறீலங்காவை விட அதிகமானது. கிளிநொச்சி ஆக்கிரமிப்பால் அதிகம் அகமகிழந்திருப்பது சிறீலங்காவை விட இந்தியாவே. சமாதன முன்முயற்சிகள் யாவும் சீர்குலைந்து, இன்றைய அவலத்திற்குக் காரணமாணவர்களும் இவர்களே என்பதில் ஐயமில்லை. கிளிநொச்சி பறிபோய் விடுமோ என்று கண்காணிக்கிறது. தமிழர் தாயகத்தின் எந்தப் பகுதியிலும் ஆக்கிரமிப்பாளரால் நிலைக்க முடியாதென்பதை புறப்பட இருக்கும் சுழற்புயல் சுற்றிச் சுழன்றடித்து, எதிரியே இனி வேண்டாம் என்று சொல்லும் நிலையொன்று உருவாகும். அதுவரை இவர்களின் அடாவடிகள் தொடரவே செய்யும். ஆனால் உலகெங்கும் பரந்து வாழும் எட்டுக்கோடித் தமிழினத்தின் நிர்மிவை யாராலும் தடுக்க முடியாதென்பதை வரலாறு பதியும்.

தன்ரை வீட்டை கவனிக்க வக்கில்லை பக்கத்துவீட்டிற்குள்ளை வந்து பார்க்கிறாங்கள். சீ வெட்கமாயில்லை

"The ARC aircraft, which took off from Chennai with high-tech espionage equipment, flew quite close to the Sri Lankan coast and got back to another airport without returning to Chennai," a source said.

1 வேவு விமான சிறீலங்கா கடற்கரைக்கு மிக அண்மித்து பறந்துவிட்டு திரும்பிவிட்டது எண்டு தான் இருக்கு.

ஆனால் நமது குடிசைக்கைத்தொழில் ஊடகங்கள்

"விமானங்கள் என்று பன்மை ஆக்கி"

"கிளிநொச்சியில் வேவு பார்த்தாகவும்" மொழிபெயர்த்துதள்ளியிருக்கி

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசின் பணிப்பின் பேரிலேயே ரோ விமானம் ஆய்வு

வீரகேசரி நாளேடு 1/7/2009 6:57:09 PM - கிளிநொச்சியை இராணுவம் கைப் பற்றியதைத் தொடர்ந்து இந்திய அரசின் உத்தரவின்படியே இந்தியாவின் உளவு நிறுவனமான ரோ இலங்கை கடற் கரைக்கு மிகத் தாழ்வாகப் பறந்து சென்று ஆய்வில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதன் விபரம் வருமாறு; இந்திய அரசின் உத்தரவுப்படி இந்த ரகசிய வான் வழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதம்.

ரோ அமைப்பின் வான்வெளி ஆய்வு மையத்திற்குச் சொந்தமான விமானம் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இந்த விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றுள்ளது. இந்த ரகசிய ஆய்வை, இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளின்படி ரோ மேற்கொண்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

நவீன கருவிகளுடன் கூடிய அந்த உளவு விமானம், இலங்கை கடற்கரைக்கு மிக அருகே தாழ்வாக பறந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. பின்னர் மீண்டும் சென்னை திரும்பாமல் வேறு ஒரு விமான நிலையத்திற்கு அந்த விமானம் போய் விட்டதாக தெரிவிக்கிறது அந்தத் தகவல்.

ஏ.ஆர்.சியிடம் போயிங், கல்ப்ஸ்ட்ரீம் மற்றும் எம்பிரேயர்ஸ் ரக விமானங்கள் உளளன. இந்த விமானங்களில் அதிக உயரத்தில் பறந்தபடி, மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் 40 ஆயிரம் அடி உயரம் வரைக்கும் பறக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.சியின் விமானங்களை ஓட்ட தனியாக பைலட்டுகள் உள்ளனர். இந்திய விமானப்படை விமானிகள் கூட இந்த வகை விமானங்களை ஓட்டுவதற்கு அழைக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிக மிக ரகசியமான பணி என்பதால் இந்த ஏற்பாடு.

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமானப்படை விமானங்களை ஏ.ஆர்.சியின் விமானங்கள் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். இதற்கென தனியாக விமான நிலையம் எதுவும் கிடையாது.

சென்னைக்கு ஏ.ஆர்.சி. விமானம் வந்தது கூட ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. எங்கிருந்து வந்தது என்பது கூட விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லையாம். இலங்கையின் கோரிக்கையின்படியே இந்த உளவு வான் வழி ஆய்வை ரோ மேற்கொண்டதாக நம்பப்படுகிறது

:rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: பாக். ஜலசந்தியில் 'ரா' வான் வழி ஆய்வுபுதன்கிழமை

, ஜனவரி 7, 2009, 15:35 [iST]

சென்னை: கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றிய மறு நாள், இந்தியாவின் ரா உளவு அமைப்பைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் குழு, பாக் ஜலசந்தி பகுதியில் ரகசிய வான் வழி ஆய்வை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அரசின் உத்தரவுப்படி இந்த ரகசிய வான் வழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதம்.

ரா அமைப்பின் வான்வெளி ஆய்வு மையத்திற்குச் (Air Research Centre-ஏ.ஆர்.சி.) சொந்தமான விமானம் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இந்த விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றுள்ளது. இந்த ரகசிய ஆய்வை, இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளின்படி ரா மேற்கொண்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து ரா அமைப்புக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் கூறுகையில், அதி நவீன கருவிகளுடன் கூடிய அந்த உளவு விமானம், இலங்கை கடற்கரைக்கு மிக அருகே தாழ்வாக பறந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. பின்னர் மீண்டும் சென்னை திரும்பாமல் வேறு ஒரு விமான நிலையத்திற்கு அந்த விமானம் போய் விட்டதாக தெரிவிக்கிறது அந்தத் தகவல்.

ஏ.ஆர்.சியிடம் போயிங், கல்ப்ஸ்ட்ரீம் மற்றும் எம்பிரேயர்ஸ் ரக விமானங்கள் உளளன. இந்த விமானங்களில் அதிக உயரத்தில் பறந்தபடி, மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் 40 ஆயிரம் அடி உயரம் வரைக்கும் பறக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

சாட்டிலைட் கேமராக்களுக்கு இணையான துல்லியத்துடன் செயல்படக் கூடியவை இந்த விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள். அடர்ந்த மேகக் கூட்டமாக இருந்தாலும் கூட அதைத் துளைத்துக் கொண்டு இலக்கை சரியாக கணித்து துல்லியமாக படம் பிடித்துக் காட்டும். 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் கூட, தரையில் நடக்கும் ஒரு நபரையோ அல்லது ஒரு வாகனத்தையோ மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது இந்த வகை கேமராக்கள்.

ஏ.ஆர்.சியின் விமானங்களை ஓட்ட தனியாக பைலட்டுகள் உள்ளனர். இந்திய விமானப்படை விமானிகள் கூட இந்த வகை விமானங்களை ஓட்டுவதற்கு அழைக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிக மிக ரகசியமான பணி என்பதால் இந்த ஏற்பாடு.

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமானப்படை விமானங்களை ஏ.ஆர்.சியின் விமானங்கள் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். இதற்கென தனியாக விமான நிலையம் எதுவும் கிடையாது.

சென்னைக்கு ஏ.ஆர்.சி. விமானம் வந்தது கூட ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. எங்கிருந்து வந்தது என்பது கூட விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லையாம்.

இலங்கையின் கோரிக்கையின்படியே இந்த உளவு வான் வழி ஆய்வை ரா மேற்கொண்டதாக நம்பப்படுகிறது.

thatstamil

இந்திய உளவு விமானம் கிளிநொச்சியில் பறந்ததா? ஜே.வி.பி. கேள்வி; தவறானது என பிரதமர் பதில்

படையினர் கிளிநொச்சியை கைப்பற்றியதன் பின்னர் இந்திய உளவு விமானம் கிளிநொச்சி வான்பரப்பில் பறந்ததா? என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது.

சபையின் பிரதான நடவடிக்கைகள் சகலதும் நிறைவடைந்ததன் பின்னர் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக கேள்வி எழுப்பினார்.

முன்னதாக எழுந்த அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. இராணுவத்தினர் கிளிநொச்சியை கைப்பற்றியதன் பின்னர் கிளிநொச்சி வான்பரப்பில் இந்திய உளவு விமானங்கள் பறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய விமானத்திற்கு அனுமதி வழங்கியது யார்? என்ன நோக்கத்திற்காக வானில் பறந்தது? இந்தச் செய்தி உண்மையா? என்று பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கஇ அந்தச் செய்தி பிழையானது என்று கூறியமர்ந்தார்.

http://www.swissmurasam.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.