Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவுக்கான இறுதிப் போர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவுக்கான இறுதிப் போர்?

[11 - January - 2009]

விதுரன்

முல்லைத்தீவுக்கான இறுதிப் போருக்கு படையினர் தயாராகின்றனர். கிளிநொச்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டில் விடுதலைப் புலிகள் வசமிருந்த பகுதிகளும் படையினர் வசமாகிவிட்டதால் தற்போது படையினரின் கவனம் முல்லைத் தீவை நோக்கி திரும்பியுள்ளது. ஈழப் போரின் இறுதிப்போராக இது இருக்கு மெனப்படையினர் கருதுவதால் இந்தப் பிரதேசத்தையும் கைப்பற்றிவிட அவர்கள் தங்கள் முழுப்பலத்தையும் இங்கு பிரயோகிக்க முயல்வர். இதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர்கள் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். அடுத்து வரும் நாட்களில் இந்தப் போர் முழு அளவில் தொடங்கக் கூடும்.

கிழக்கில் திருகோணமலையின் மாவிலா றில் படையினர் ஆரம்பித்த பார் கிழக்கை யும் கடந்து வடக்கிலும் பரவி இன்று கடை சிக் கட்டத்திற்கு வந்துள்ளது. கிழக்கின் புவியியல் நிலைமைக்கேற்ப பின்நகர்ந்த புலிகள் வடக்கிலும் பின்நகர்வுகளை மேற் கொண்டனர். படையினருக்கு ஆளணிப் பற்றாக்குறை அதிகளவில் இருந்த போதும் புலிகளின் பின் நகர்வுகளையடுத்து படையினரும் தங்கள் முன்நகர்வுகளை துரிதப்படுத்தினர். கிழக்கிலும் வடக்கிலும் அகலக்கால் வைத்தனர். கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக அவர்கள் பெரும் போரில் ஈடுபட்டு வருகின்றனர். பாரிய இழப்புகளையும் சந்தித்துள்ளனர். கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த படையினரால் ஆயிரக் கணக்கானார் களமுனைகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். எனினும் எந்தவொரு கட்டத்திலும் அரசு போரை நிறுத்த முன்வரவில்லை.

போர்தான் இந்த அரசின் அரசியலாயிருப் பதால் போரின் வெற்றிய இந்த அரசின் வெற்றிகளையும் தீர்மானிப்பதாயிருக்கிறது. மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு பெரும் நெருக்கடிக்குள் ளாக்கப்பட்டபாதும் போரில் கிடைக்கும் வெற்றியின் மூலம் அவற்றை மூடி மறைப்பதில் அரசு அக்கறை காட்டியது. பார்முனை வெற்றிகள், அரசுக்கெதிரான உணர்வுகளையெல்லாம் மழுங்கடித்ததுடன் இந்த வெற்றிகள் சிங்கள இனவாதிகளை தட்டியெழுப்பியது. இனவாதிகளின் உணர்வுகளுக்கு இந்த அரசும் தீனிபாடவே யுத்தத்தால் நாடு சின்னாபின்னமாகி சீர ழிந்தாலும் வாழ்க்கைச் செலவு ரொக்கட் வேகத்தில் சென்றாலும் தமிழர்களுக்கெதிரான போரில் வெற்றி பெற்று விட வண்டுமென்ற உணர்வை இனவாதிகளிடம் வளர்த்தது. அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சிறப்பாக தலைமை தாங்க தெற்கில் எதுவித தயக்கமுமின்றி யுத்தத்தை ஆதரிப்போரின் தொகையும் அதிகரித்தது. இதனால் வன்னிப் போரில் பேரிழப்புகள் ஏற்பட்ட போதும் அதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பவில்லை. யுத்தத்தின் பேரால் ஊடக சுதந்திரம் அடக்குமுறைக்குள் வந்துவிட யுத்த முனையில் என்ன நடக்கிறதென்று எவருக்குமே தெரியவில்லை. வெற்றிச் செய்திகள் மட்டுமே வெளியாகின்றன.

வன்னியில் ஒவ்வொரு பகுதியையும் படையினர் கைப்பற்றிய போது அடுத்த பகுதிக்கான நகர்வில் அரசு ஆர்வம் காட்டியது. இந்தியாவின் முழுமையான ஆசி இலங்கை அரசுக்கு கிடைத்தாலும் சீனா, பாகிஸ்தான், ஈரானுடன் போட்டி போட்டு இந்தியாவும் இலங்கை படையினருக்கு இராணுவ உதவிகளை வழங்கியதாலும் இலங்கை அரசுக்கு இந்த யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வது இலகுவாகிவிட்டது. ஏழு காடி தமிழர்களதும் உணர்வை இந்திய அரசு உதாசீனம் செய்ய அதற்கு தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆதரவும் கிடைத்தது. மத்திய அரசுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கக் கூடாதென கருணாநிதி தீர்மானித்தபாது அதனைச் சாதகமாக்கி இந்திய அரசும் ஈழத் தமிழருக்கெதிரான போருக்காக இலங்கை அரசுக்கு உதவியது. இதன் மூலம் ஈழத் தமிழருக்கெதிரான போருக்கு தமிழக அரசும் மறைமுகமாக உதவுவதை கருணாநிதி இதுவரை புரிந்து கொள்ளவில்லை. இதனால்தான், விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் இலங்கைப் படையினர் வெற்றிகொண்ட பின்னர் இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிடலாமென இந்தியா இலவு காத்திருக்கிறது.

இந்த நிலையில்தான் வன்னியில் இறுதிப் போர் தொடங்கப் போகிறது. வன்னியின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து பின்வாங்கிய விடுதலைப் புலிகள் இன்று முல்லைத்தீவுக்குள் மட்டும் முடக்கப் பட்டுள்ளனர். பரந்தனை புலிகள் கைவிடத் தீர்மானித்த பாத யுத்தம் முல்லைத்தீவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுவிட்டத

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் வெல்லலாம் என்ற நம்பிக்கையில் உள்ள சிங்கள அரசும் இராணுவமும் எதிர்க்கட்சியையும், தமிழகத்தையும் சட்டைசெய்யப் போவதில்லை. போருக்கான அங்கீகாரத்தை சர்வதேச நாடுகள் வழங்கியுள்ளதனால், தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் அவலத்தைப் பற்றி அவர்கள் அறிக்கை ஏதும் வெளியிடப் போவதுமில்லை. மக்கள் தப்பிப் பிழைக்க வழிகளும் இல்லை.. எனவே சத்தமில்லாமல் ஓர் பேரவலம் நடக்கப்போகின்றது :blink:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆய்வு, இருப்பினும் எதிர்விளைவுகள் மாற்றமடையவும் நிறைய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

Edited by Valvai Mainthan

சர்வதேசத்திற்கு நாம்தான் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

தயவு செய்து எல்லோரும் உடனே கையொப்பமிடுங்கள்.

www.tamilsforobama.com/sign/letter.html'

Total Signatures : 19456

Country Number of Signatures Percentage

1 Canada 5041 25.91%

2 India 4059 20.86%

3 United Kingdom 2237 11.5%

4 Sri Lanka 1544 7.94%

5 United States Of America 1250 6.42%

6 Australia 1125 5.78%

7 Switzerland 680 3.5%

8 Germany 503 2.59%

9 France 415 2.13%

10 Italy 358 1.84%

11 Iran 356 1.83%

12 Norway 294 1.51%

13

14

15

மேடையில வித்தை செய்யிற மாமா கடசி நேரத்தில தொப்பிக்காலை முயல் குட்டி நிச்சையம் எடுப்பார். கவலைப்படாதேங்கோ புலம்பெயர்ந்த குழந்தைகளே.

அப்பிடியே டன்டனக்கவுக்கு ஒரு அனிமேச போடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ்,

மக்களை நக்கல் நையாண்டி செய்வதை விட, என்ன செய்யலாம் என்று, எழுதினீழுர்கள் என்றால் அது பிரியோசனம். இப்படி எழுதுவது எந்த வகையில் உதவப் போகின்றது. மு

புலம்பெயர்ந்த மக்கள் செய்யிறதுக்கு பெரிதாக ஒண்டும் இல்லை.

பாரிய வெற்றிச் செய்தியை விரைவில் அனுப்பி வைப்பதாக நடேசன் 1 முறை அல்ல பலமுறை சொல்லியிருக்கிறார். அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன காறர் கடசியில ஒரு பஜ் கேள்வி கேப்பார் அதுக்கு ஒரு பஜ் பதில் வரும். ஏன் எண்டால் இதுகளைத்தான் புலம்பெயர்ந்தவர்கள் விரும்பி கேப்பினமாம். பபாக்களுக்கு வேறையள் கேக்க விருப்பமில்லை.

***

அதைவிட சுடச் சுட சண்டை படங்கள் கைப்பற்றினவற்றை வைச்சு நடத்திற கண்காட்சிப் படங்கள் காணொளிகள் வருகுது.

அடுத்த மாவீரர் தினத்துக்கு என்ன சொல்லுவார் எண்டு ஆராயலாம்.

எப்பிடி பொறி வைச்சிருக்கு அகல கால் வைச்சிருக்கிறாங்கள் மோட்டுச் சிங்களவர் எண்டு ஆராயலாம்.

***

தினம் ஒரு படம் போட்டு பாட்டுப்பாடி தேசிய விடுதலைப் போராட்டத்தையும் 21000 மாவீரர்களின் அர்பணிப்பையும் 1 லட்சம் மக்களின் இறப்பையும் demagogue ஆக சர்வதேசத்தின் முன் சிறுமைப்படுத்தலாம்.

பிறகு அய்யோ சர்வதேசம் கணக்கெடுக்குதில்லை அவங்களுக்கு எங்களிலை எரிச்சல் பொறாமை ஏன் எண்டால் யூதர்களுக்கு அடுத்தாக எங்களுக்குத்தான் மண்டைக்கே அதிகம் ***** இருக்கு எண்டு புலம்பலாம்.

புலம்பெயர்ந்தவர்கள் பொழுது போக்க இந்தளவு கூத்தும் காணாதா? இதைவிட அதிகமாக என்ன வேணும்?

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

புலம்பெயர்ந்த மக்கள் செய்யிறதுக்கு பெரிதாக ஒண்டும் இல்லை.

பாரிய வெற்றிச் செய்தியை விரைவில் அனுப்பி வைப்பதாக நடேசன் 1 முறை அல்ல பலமுறை சொல்லியிருக்கிறார். அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன காறர் கடசியில ஒரு பஜ் கேள்வி கேப்பார் அதுக்கு ஒரு பஜ் பதில் வரும். ஏன் எண்டால் இதுகளைத்தான் புலம்பெயர்ந்தவர்கள் விரும்பி கேப்பினமாம். பபாக்களுக்கு வேறையள் கேக்க விருப்பமில்லை.

***

அதைவிட சுடச் சுட சண்டை படங்கள் கைப்பற்றினவற்றை வைச்சு நடத்திற கண்காட்சிப் படங்கள் காணொளிகள் வருகுது.

அடுத்த மாவீரர் தினத்துக்கு என்ன சொல்லுவார் எண்டு ஆராயலாம்.

எப்பிடி பொறி வைச்சிருக்கு அகல கால் வைச்சிருக்கிறாங்கள் மோட்டுச் சிங்களவர் எண்டு ஆராயலாம்.

***

தினம் ஒரு படம் போட்டு பாட்டுப்பாடி தேசிய விடுதலைப் போராட்டத்தையும் 21000 மாவீரர்களின் அர்பணிப்பையும் 1 லட்சம் மக்களின் இறப்பையும் demagogue ஆக சர்வதேசத்தின் முன் சிறுமைப்படுத்தலாம்.

பிறகு அய்யோ சர்வதேசம் கணக்கெடுக்குதில்லை அவங்களுக்கு எங்களிலை எரிச்சல் பொறாமை ஏன் எண்டால் யூதர்களுக்கு அடுத்தாக எங்களுக்குத்தான் மண்டைக்கே அதிகம் ***** இருக்கு எண்டு புலம்பலாம்.

புலம்பெயர்ந்தவர்கள் பொழுது போக்க இந்தளவு கூத்தும் காணாதா? இதைவிட அதிகமாக என்ன வேணும்?

ஆகா!

என்ன அற்புதமான விளக்கம்.

பாராட்டுக்கள்!

நீங்கள் எல்லாம் என்ன ரகம் பாவிக்கிறீங்களோ தெரியாது.

நல்லாத்தான் கற்பனைகள் உருவாகின்றன.

பெரிய புத்திசாலி என்ற எண்ணமோ?

Edited by வலைஞன்

ஆகா!

என்ன அற்புதமான விளக்கம்.

பாராட்டுக்கள்!

நீங்கள் எல்லாம் என்ன ரகம் பாவிக்கிறீங்களோ தெரியாது.

நல்லாத்தான் கற்பனைகள் உருவாகின்றன.

பெரிய புத்திசாலி என்ற எண்ணமோ?

http://www.yarl.com/forum3/index.php?showt...=13797&st=0

மனித அவலங்களை இதுவரை சர்வதேசம் கண்டுள்ளதா? போரை நடத்துவதற்கு உதவி செய்பவர்கள், மனித அவலங்களைக் கண்டுகொள்ள முடியாதது புரிந்து கொள்ளக் கூடிய நிலைதான். ஆனால் கொழும்பில் குண்டுகள் வெடித்தால்தான் அவை மனித அவலமாகக் கருதப்படும், என்பது இவரின் கருத்தாகிவிட்டது.

மனித அவலங்களை இதுவரை சர்வதேசம் கண்டுள்ளதா? போரை நடத்துவதற்கு உதவி செய்பவர்கள், மனித அவலங்களைக் கண்டுகொள்ள முடியாதது புரிந்து கொள்ளக் கூடிய நிலைதான். ஆனால் கொழும்பில் குண்டுகள் வெடித்தால்தான் அவை மனித அவலமாகக் கருதப்படும், என்பது இவரின் கருத்தாகிவிட்டது.

உண்மைதான் சர்வதேச ஊடகங்களுக்கு சொல்வது முளுக்க பொய்.

Edited by தாயகன்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இப்போது புலிகள் பின்வாங்குவது இன்னொரு பெரும் பாய்ச்சலுக்குத்தான் என்று இங்கு பலர் இன்னும் நம்பிக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அது அவர்கள் களத்தில் நடப்பதை என்னவென்று சரியாக இன்னும் அறிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. இன்று வன்னியில் நடந்து கொண்டிருப்பது, பலர் ஏற்றுக்கொள்ள தயங்கினாலும், அது போராட்டத்தை தக்கவைத்துக்கொண்டு இன்றிருக்கும் இக்கட்டான சூழ்நிலைகளினூடு அதைப் பாதுகாப்பாக எதிர்காலத்துக்கு கொண்டு செல்லும் ஜீவ மரணப் போராட்டமேயன்றி பெரும் பாய்ச்சலுக்கான பின்வாங்கல் அல்ல. இன்றைய கட்டத்தில் புலிகளோ அல்லது எமது தேசியத் தலமையோ அழிக்கப்பட்டால் நாம் ஈழம் எனும் வார்த்தையை இன்னும் 20 - 25 வருடங்களுக்காவது உச்சரிக்க முடியாமல்ப் போய்விடும். ஏனென்றால் ஈழப் போராட்டத்தை முன்னின்று வழிநடத்தும் வரலாற்றுக் கடமையைச் செய்ய இன்று எமது தேசியத் தலைவரை விட்டால் தமிழருள் எவருமே இல்லை என்பதுதான் உண்மை.

இன்றுள்ள நிலை 1987 - 88 இல் இந்திய ஆக்கிரமிப்பு ராணுவத்துக்கெதிரான போரில் புலிகள் முல்லைக் காடுகளுக்குள் பின்வாங்கியதை ஒத்தது. அன்றும் புலிகள் இந்திய ராணுவத்தோடு பின்வாங்காது போராடியிருந்தால் இன்று நாம் எல்லோரும் நம்பியிருக்கும் புலிகள் என்கிற இயக்கமே இல்லாமல்ப் போயிருக்கும். ஆனால் புலிகள் அன்று எடுத்த சரியான முடிவுதான் இன்றும் நம் எமது போராட்டத்தை நடத்தி வரக் காரணமாக இருக்கிறது. இன்று நடக்கப்போவதும் அதுதான். இந்திய பிராந்திய வல்லரசாலும், ஏனைய ஆயுத ஏற்றுமதி நாடுகளாலும் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் புலிகள் விடாப்பைடியாக சண்டையிட்டு அழிந்து போவதைக் காட்டிலும், பின்வாங்கி, தமது ஆள் ஆயுத வளங்களைப் பாதுகாத்துக்கொள்வதென்பது மிகவும் இன்றி அமையாததாகிவிடுகிறது.

இன்றைய கள யதார்த்தத்தை சரியாகப் புரிந்துகொள்வதன்மூலம் நாம் தேவையற்ற ஏமாற்றங்களை தவிர்த்துக்கொள்வதோடு, பிழையான வழியில் வழிநடத்தப்படுவதையும் தவிர்த்துக்கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுள்ள நிலை 1987 - 88 இல் இந்திய ஆக்கிரமிப்பு ராணுவத்துக்கெதிரான போரில் புலிகள் முல்லைக் காடுகளுக்குள் பின்வாங்கியதை ஒத்தது.

பின்வாங்கிச் செல்ல காடுகளையும் விட்டுவைக்கவில்லை சிங்கள் இராணுவம். அத்துடன் காடுகளுக்குள் புகுந்த இந்திய இராணுவத்தினரை அவர்கள் "மணம்" (உணவு தயாரிக்கப் பயன்படுத்தும் எண்ணெயில் இருந்து வருவது) காட்டிக் கொடுத்துவிடும். அந்த சாதகமான நிலமையும் தற்போது இல்லை..

சுனாமி அடிக்க முதல் உள்ளுக்கு இழுக்கிற மாதிரியான செயற்பாடுதான் இப்ப நடந்து கொண்டிருக்கு. ஓயாத அலைகளையே தாங்க முடியாதவர்கள் சுனாமியை எப்படி தாங்கப் போகிறார்கள்?

அதுவும் தேள்வடிவில் வருதா இல்லை எந்த வடிவில் என்று வேறு மோட்டுச் சிங்களவருக்கு குழப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி அடிக்க முதல் உள்ளுக்கு இழுக்கிற மாதிரியான செயற்பாடுதான் இப்ப நடந்து கொண்டிருக்கு. ஓயாத அலைகளையே தாங்க முடியாதவர்கள் சுனாமியை எப்படி தாங்கப் போகிறார்கள்?

அதுவும் தேள்வடிவில் வருதா இல்லை எந்த வடிவில் என்று வேறு மோட்டுச் சிங்களவருக்கு குழப்பம்.

நீங்க வேற ! இது இப்ப தேவையா??

எங்கயோ சுட்டது...... ஒரு சிங்களம் எழுதியது............

[Now tigers cornered to mulathivu jungle..what things they going to do..jump in to the indian ocean..??]

Answer to your question .

In reality tiger carders will sneak out of Mullathiv jungles and surrender to SLA when Bombs start to fall from the sky with rains of MBRs and heavy artillery fire day and night shocking and shattering the brains out of them. Hardcore LTTE carders along with some of the Top leaders will continue to operate until they get killed one by one or bite the cyanide capsule after the last fair well speech is given by Schizo Prbha. If Prabhakaran get killed earlier than expected many LTTE carders and Leaders will save their lives simply surrendering to the army.

[Maintenant tigres acculés aux choses de jungle. .what de mulathivu ils allant faire. .jump dedans à l'Océan Indien. ? ?]

Réponse à votre question.

Dans le tigre de réalité les cardeurs partiront furtivement hors des jungles de Mullathiv et se rendront à SLA quand les bombes commencent à tomber à partir du ciel avec des pluies de MBRs et de tirs d'artillerie lourds jour et nuit choquant et brisant les cerveaux hors de eux. Les cardeurs inconditionnels de LTTE avec certains des chefs supérieurs continueront à fonctionner jusqu'à ce qu'ils obtiennent tués un ou mordent la capsule de cyanure après que le dernier discours de puits de foire soit donné par Schizo Prbha. Si Prabhakaran obtiennent tué plus tôt que prévu beaucoup de cardeurs et chefs de LTTE sauvera leurs vies se rendant simplement à l'armée.

:)

வணக்கம் பனங்காய் அண்ணா.

5 சதத்துக்கும் பிரியோசனம் இல்லாத அந்த மொழிபெயர்ப்பை (french) யார் செய்தது? google ஆ ?

பிரஞ்சு மொழியை அசிங்கப்படுத்தும் அதை எடுத்துவிடுங்கள். படு பிழையாக உள்ளது. இதை உண்மையான பிரஞ்சுக்காரன் பார்த்தால் தற்கொலை செய்து விடுவான்... :)

சும்மா ஒரு ட்ரைதானுங்கோ......... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.