Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போர் யாருக்கு சாதகம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போர் யாருக்கு சாதகம்?

[18 - January - 2009]

விதுரன்

முல்லைத்தீவில் இறுதிப்போரில் படையினர் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் குவிக்கப்பட்டுள்ள படையினர் ஆங்காங்கே பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடும் பதில் தாக்குதல்களால் பின்னடைவையும் சந்திக்கின்றனர். தங்களது சகல வளங்களையும் திரட்டி முல்லைத்தீவை குறிவைத்துள்ள படையினருக்கு புலிகளின் பதில் நடவடிக்கைகள் குறித்தும் பலத்த சந்தேகங்கள் உள்ளன. இதுவரை காலமும் பின்வாங்கிய புலிகளின் பதில் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது குறித்தும் படையினர் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.

வன்னிப் போரில் படையினரின் கையே ஆரம்பம் முதல் ஓங்கியுள்ளது. வன்னியில் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் கைப்பற்றி விட்டனர். வவுனியா, மன்னார் மாவட்டங்களும் யாழ்.மாவட்டமும் தற்போது படையினரின் பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. கிளிநொச்சியின் பெரும் பகுதியையும் அவர்கள் கைப்பற்றியுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் கணிசமான அளவு பகுதிகளுக்குள்ளும் சென்றுள்ளனர். இதன் மூலம் முல்லைத்தீவையும் விரைவில் முழுமையாகக் கைப்பற்றிவிட முடியுமென்றும் கருதுகின்றனர். இதனால் முல்லைத்தீவில் படையினர் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முல்லைத்தீவைச் சுற்றி எட்டு முனைகளில் இந்தப் பாரிய படைநகர்வு நடைபெறுகிறது.

இந்தப் போரில் 50,000 படையினர் வரை ஈடுபட்டுள்ளதாக படைத்தரப்பு கூறுகின்ற போதும் வன்னியின் அனைத்துப் பகுதியிலும் அதிலும் குறைவான படையினரே நிலைகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்.குடாவை படையினர் முழுமையாகக் கைப்பற்றியதன் மூலம், அங்கு நிலைகொண்டிருந்த ஆயிரக்கணக்கான படையினரில் கணிசமானோர் வன்னிப் போர் முனைக்கு வந்துள்ளனர். புலிகளைத் தற்போது முல்லைத்தீவுக்குள் மட்டும் முடக்கியுள்ளதால் படையினரின் முழுக்கவனமும் முல்லைத்தீவிலேயே மையங் கொண்டுள்ளது. அவர்களது ஆயுத வளங்களும் முல்லைத்தீவைச் சுற்றியே குவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவுக்குள் முடங்கிப் போயிருக்கும் புலிகளை முற்?க அழித்து விட வேண்டுமென்பதற்காக முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் ஆட்லறிகள், பல்குழல் ரொக்கட்டுகள், கனரக மோட்டார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கவசப் படையணியின் யுத்த டாங்கிகளும் முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து வருகின்றன.

கிளிநொச்சியை படையினர் கைப்பற்றி விடுதலைப் புலிகளை "ஏ9' வீதியின் கிழக்குப் புறத்தினுள் தள்ளியபோது புலிகள் 40 கிலோ மீற்றர் X 40 கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டனர். எனினும் அதன் பின்னரான போரின் மூலம் புலிகள் தற்போது 30X20 கிலோமீற்றர் பரப்புக்குள் முடங்கியுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. புலிகளுடன் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் இந்தச் சிறிய இடத்திற்குள் முடங்கியுள்ளதால் இந்தப் போரில் அப்பாவி மக்களின் இழப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒருவாரத்தில் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களால் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளனர். எங்கு ஷெல் விழுந்தாலும் அங்கு பொது மக்களுக்கு இழப்புகள் ஏற்படுகின்றன. புலிகளின் பகுதி மிகவும் குறுகிவிட்டதால் ஒவ்வொரு விமானத் தாக்குதலிலும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

வன்னிக்குள் படையினர் பாரிய படைநகர்வை ஆரம்பித்து எப்படி படிப்படியாக நிலங்களைக் கைப்பற்றி புலிகளை பின்நகரச் செய்தார்களோ அப்படி புலிகளின் பின்நகர்வுகளின் போது மக்களும் பின்நகர்ந்தார்கள். இந்தப் பாரிய படைநகர்வின் போது புலிகளின் பகுதிகளிலிருந்து மக்களை தங்கள் பகுதிகளுக்குள் வரவழைக்க அரசும் படைத்தரப்பும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. தற்போது இறுதிப் போர் நடைபெற்று வரும் பகுதியில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இந்தப் போரில் தினமும் அவர்கள் பலத்த இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். எனினும் மக்களின் இழப்புகள் குறித்து எந்தவொரு நாடும் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. தினமும் இடம்பெறும் கடும் ஷெல் வீச்சாலும் விமானத் தாக்குதலாலும் பெருமளவானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகையில் அங்கிருந்து ஒருவாறு வெளியேறி வரும் மக்களின் தொகையும் ஓரளவு அதிகரித்தே வருகிறது. இதனால் மக்களை அங்கிருந்து மேலும் மேலும் வெளியேற்றுவதற்காக அங்கு தாக்குதல்களும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

வன்னியில் ஒவ்வொரு படைநகர்வின் போதும் பெருமளவு பிரதேசங்களைக் கைப்பற்றிய படையினர் அவற்றை தக்கவைப்பதற்காக பெருமளவு படையினரை ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு படையினர் கைப்பற்றிய பகுதிகளைத் தக்கவைப்பதற்காக அதிகளவானோரை ஈடுபடுத்தியுள்ளதால் தொடர்ந்தும் சில படையணிகளே முன்னேற்ற முயற்சியில் ஈடுபடுவதுடன் போரில் பலத்த இழப்புகளையும் சந்தித்து வருகின்றன. முன்னைய காலங்களைப் போலன்றி தற்போது வடக்கிலும் கிழக்கிலும் மிகப்பெரும்பாலான பகுதிகள் படையினர் வசமுள்ளதால் அவற்றைத் தக்கவைப்பதற்காக அனைத்துப் பகுதிகளிலும் நிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அப்படியிருக்கையில் முல்லைத்தீவுக்கான இறுதிப் போரில் ஐம்பதாயிரம் படையினரை எப்படி அவர்களால் ஈடுபடுத்த முடிகிறது என்ற கேள்வியும் எழுகிறது. இத?ல் இறுதிப் போரில் ஈடுபடும் படையினரின் எண்ணிக்கை குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுகின்றன, அல்லது புலிகள் வசமிருந்து கைப்பற்றிய பகுதிகளில் மிக மிகக் குறைவானவர்களை நிறுத்திவிட்டு பெரும்பாலானோரை யுத்த முனையில் நிறுத்தியுள்ளார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

படையினர் கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை மிகக் குறைவென்றால், முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினரின் பின்புறப் பகுதி பலவீனமாகவும் வெற்றுக் கோதாகவுமேயிருக்கும். இது பாரிய சமரின் போது புலிகள் முறியடிப்புத் தாக்குதலை அல்லது ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டு முன்னேறி?ல் படையினருக்கு பெரும் பாதகமாகிவிடும். கோதாக இருக்கும் பகுதிகளுக்குள் புலிகளின் ஊடுருவலும் அதிகரித்து விடும். இது படையினரை புலிகள் பின்புறத்தால் தாக்க வழிசமைத்து விடுமென்பதுடன் படையினரின் கனரக ஆயுதங்களுக்கும் ஆபத்தாகிவிடும். இத?ல் கடைசிப் போரில் புலிகளின் பாரிய ஊடுருவல்களைத் தடுக்க வேண்டிய கட்டாய தேவை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் முல்லைத்தீவுக்குள் மிகக் குறைந்தளவு புலிகளே முடங்கிப் போயிருப்பதாக படையினர் கணக்குப் போடுவதால் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல் அல்லது ஊடறுப்புத் தாக்குதல் பாரியளவில் இருக்காதென படைத்தரப்பு கருதுகிறது. எனினும் புலிகளின் நடவடிக்கை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இராணுவத் தளபதி போர் முனைத் தளபதிகளை எச்சரித்துள்ளார்.

வவுனியாவுக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா வன்னிக் கட்டளைத் தலைமையகத்தில் போர் முனைத் தளபதிகளைச் சந்தித்து இறுதிப் போருக்குரிய பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்குள் புலிகளின் ஊடுருவல்களைத் தடுக்க, முடிந்தவரை பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் கூறியுள்ளார். மோதல்கள் உச்சக் கட்டத்தை அடையும் போது புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்களை நடத்துவதன் மூலமும் ஊடுருவல்கள் மூலமும் படையினர் கைப்பற்றிய பகுதிகளுக்குள் நுழைந்து விட்டால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிடுமென்பதே அவரது இந்த எச்சரிக்கைக்கு காரணம். இதனால் இறுதிச் சமரின் போது புலிகளின் பகுதிகளை நோக்கி படையினர் முன்னேறும் அதேநேரம் அடர்ந்த காடுகளினூடாக புலிகள், படையினர் வசமுள்ள பகுதிகளுக்குள் ஊடுருவுவதையும் தடுக்க வேண்டிய கட்டாய தேவையும் ஏற்பட்டுள்ளது.

இதேநேரம், அரசும் படைத்தரப்பும் பிரசாரப் போரையும் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ் மக்களை, குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு வழிகளிலும் உதவும் புலம் பெயர்வாழ் தமிழ் மக்களின் மனோபலத்தை தகர்க்கும் நோக்கில் இந்தப் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. புலிகளின் கதை முடிந்து விட்டது. புலிகள், போரிட்டு மடிவதா அல்லது படையினரிடம் சரணடைவதா அல்லது தற்கொலை செய்வதா எனத் தெரியாது தடுமாறி வருவதாக அந்தப் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புலிகளின் தலைவர் பற்றியும் முக்கிய தளபதிகள் பற்றியும் தினமும் புதுப்புதுக் கதைகளும் பரப்பப்பட்டு வருகின்றன. ஒருபுறம் கடும் போரைத் தொடுத்துள்ள அரசு மறுபுறம் பிரசாரப் போரையும் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் இறுதிப்போர் தங்களுக்கு மிகவும் சாதகமாயிருப்பதாகக் கூறும் படையினரும், புலிகளால் இனித் தப்பிக்கவோ அல்லது தாக்குதல் நடத்தவோ முடியாதென்றே கூறிவருகின்றனர். புலிகள் வசமுள்ள பகுதி மிகவும் குறுகிவிட்டதாலும் அவர்கள் வசமிருக்கும் போராளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாலும் இறுதிப் போரில் படையினர் சுலபமாக வெற்றிபெறுவரென்றே படையினரும் கூறிவருகின்றனர். தினமும் படைநகர்வுகள் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன் இதன் மூலம் புலிகளின் பகுதிகள் மேலும் மேலும் விரைவாகச் சுருங்கி வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் புலிகளால் இனியும் தொடர்ந்து பின்நகர முடியாது. இனிமேல் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பின் நகர்வுகளும் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். கிளிநொச்சியை இழந்த பின்னராவது அவர்கள் தற்காப்புச் சமரை விடுத்து தாக்குதல் சமரில் இறங்குவரென அனைவரும் எதிர்பார்த்தனர். மிகக் குறுகலான பகுதிக்குள்ளிருந்து எவ்வாறு பாரிய தாக்குதல் சமரை ஆரம்பிக்க முடியுமென்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. குறுகிய பிரதேசத்திற்குள்ளிருந்து மேற்கொள்ளும் தாக்குதல் சமர் தோல்வியடைந்தால் அது நிலைமையை மோசமடையச் செய்துவிடலாமென்ற கருத்துக்களும் நிலவுகின்றன. புலிகளின் தொடர்ச்சியான பின் நகர்வுகள் குறித்து படையினர் மத்தியிலும் பலத்த சந்தேகம் நிலவுகிறது. கடைசி நேரத்தில் புலிகள் தங்கள் ஆட்பலம் மற்றும் ஆயுதவளங்களை ஒருமித்து திரட்டி மிகப்பெரும் தாக்குதலை நடத்தலாமென்ற சந்தேகமிருப்பதால் முல்லைத்தீவு நோக்கிய முன்நகர்வில் அவர்கள் சற்று கவனம் செலுத்துகின்றனர். முழு அளவில் போர் தீவிரமடையாத போதிலும் படையினர் தங்கள் நெருக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். முல்லைத்தீவுக்குள்ளிருக்கு

இதேநேரம், இறுதிப் போர் குறித்து புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார். எதிரிகூறுவது போல் விடுலைப் புலிகள் பலவீனமடையவில்லை. தமிழீழப் போராட்டத் திற்கு புலம்பெயர் வாழ் மக்கள் தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென அவர் கேட்டுள்ளார். புலிகளின் தலைவரும் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் அருகருகே இருந்து உரையாற்றும் ஒளிப்பதிவு நாடாக்கள் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், "விடுதலைப் புலிகள் இதுவரை தற்காப்புச் சமரில் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். இந்த தற்காப்புச் சமருக்காகவே இதுவரை புலிகள் பின்நகர்வுகளை மேற்கொண்டு வந்ததுடன் தங்கள் வசமிருந்த பகுதிகளையும் இழக்க வேண்டியிருந்தது. பெருமளவில் போராளிகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காகவும் போராளிகளின் எண்ணிக்கையையும் ஆயுத வளங்களையும் தொடர்ந்தும் அதிக எண்ணிக்கையில் பேணிப் பாதுகாப்பதற்காகவும் இவ்வா?ன தந்திரங்களை பயன்படுத்த வேண்டியிருந்தது. தற்போது தற்காப்புச் சமரை நிறுத்தி தாக்குதல் சமரை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டன. தங்களது நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகுமென்றும் தாங்கள் தொடர்ந்தும் விடுதலை இராணுவமாகவே செயற்படுவோமென்றும் விடுதலைப் புலிகள் கெரில்லா அமைப்பாக மீண்டும் மாற்றப்படாதெனவும் கூறியுள்ளதுடன் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் முழு ஆதரவையும் கோரியுள்ளனர்.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, இந்தச்சொல்லை கேட்கவோ அல்லது பார்க்கவோ எரிச்சலாகஇருக்குது. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சேகவன், இந்தியா எமக்கு எதிரி. ஆனால் நம்பவைத்து பின்னர் முதுகில் குத்திய தமிழ் நாட்டு மக்களுக்கு இந்தியா துரோகி. ஆகவே நாம் கோபப்படுவதைக் காட்டிலும், தமிழகத்து நம் உறவுகள் கோபப்பட்டு ஏதாவது செய்வதுதான் இப்போது தேவை. போலி இந்திய தேசியவாதமும், போலிப் பிராந்திய வல்லரசு வாதமும் உடைத்தெறியப்பட்டு அது நூறு துண்டுகளாக உடைய வேண்டும். அப்போதுதான் அதைச் சுற்றியுள்ள நாடுகள் எல்லாவற்றிற்குமே நல்ல காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

இக் கட்டுரையில் எனக்கு ஒரு சந்தேகம் இதில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

//இதேநேரம், இறுதிப் போர் குறித்து புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார். எதிரிகூறுவது போல் விடுலைப் புலிகள் பலவீனமடையவில்லை. தமிழீழப் போராட்டத் திற்கு புலம்பெயர் வாழ் மக்கள் தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென அவர் கேட்டுள்ளார். புலிகளின் தலைவரும் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் அருகருகே இருந்து உரையாற்றும் ஒளிப்பதிவு நாடாக்கள் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. //

அவ் ஓளீப்பதிவு நாடாவை யாரவது பார்த்தீர்களா?

ரதி,

இதிஅ எழுதியவர்க்குத் தான் அந்த ஓளீப்பதிவு நாடா வெளிச்சம்.. மற்றயபடி விடுதலையை விரும்பும் தமிழன் உதவி கேட்க்குவை காகலாமா?

ஓம் பாத்தனான் பாரிய வெற்றிச் செய்தி புலம்பெயர்ந்தவர்களிற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் எண்டு இருக்கு.

தலைவர் பிரபாகரனும் நடேசனும் உரையாற்றும் காணொளி எதுவும் வெளியாகவில்லை: புலிகளின் வட்டாரங்கள் மறுப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 18 சனவரி 2009, 10:45 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும், அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் உரையாற்றும் காணொளி பதிவினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருப்பதாக ஒரு செய்தியை நேற்று வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை "புதினம்" தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி ஒரு காணொளிப் பதிவு வெளியிடப்படவில்லை என்று அவர்கள் மறுத்துள்ளனர்.

"டெய்லி மிரர்" நாளேட்டில் நேற்று சனிக்கிழமை வெளியாகியிருந்த ஒர் ஆய்வுக்கட்டுரையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை நோக்கி தலைவர் பிரபாகரன் அவர்களும், பா.நடேசன் அவர்களும் இந்த காணொளிப் பதிவில் அருகருகே அமர்ந்து உரையாற்றுவதாகவும் தற்போதைய கள நிலவரங்கள் தொடர்பாகவும், எதிர்காலம் தொடர்பாகவும் அவர்கள் இருவரும் அதில் விளக்கம் அளித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தகவல் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வட்டாரங்களை "புதினம்" வினவிய போதே, அப்படியான காணொளிப் பதிவு எதுவும் வெளியிடப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

http://www.puthinam.com/full.php?2b1VoKe0d...d434OO2a030Mt3e

  • கருத்துக்கள உறவுகள்

வதந்திகளை இவரைப் போன்ற கட்டுரையாசிரியர்கள் பரப்புவதால் தான் உண்மையாக தமிழ் தேசியத்திற்கு உழைப்பவர்கள் கூட வெறுப்படைகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் பாத்தனான் பாரிய வெற்றிச் செய்தி புலம்பெயர்ந்தவர்களிற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் எண்டு இருக்கு.

:) :) :):D:o:(

ஓம் பாத்தனான் பாரிய வெற்றிச் செய்தி புலம்பெயர்ந்தவர்களிற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் எண்டு இருக்கு.
:)

ஒரே குழப்பமாத்தான் இருக்கு.... இவை எல்லாம் சிலகாலம் மட்டுமே... :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.