Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதவிடாயையும் வெல்லலாம் ... !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெனோபாஸ். நடுத்தர வயதை எட்டிக் கொண்டிருப்பவர்களை மிரட்டும் மெனஸ் இது.

நடுத்தர வயதை எட்டிப்பிடித்தவர்கள் இளம் வயதுப் பெண்களுடன் அழகுக்கு இணையாக தங்களையும் பராமரித்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள். எல்லாம் மெனோபாஸ் மிரட்டல்தான் காரணம்.

தங்களை விட இளம் வயதுப் பெண்கள் உடல் ரீதியாக ஆண்களை கட்டி இழுத்து விடுவார்களே என்ற பயத்தாலும், மேக்கப், முகப் பொலிவு, உடற்கட்டு குறித்து அதிகம் கவலைப்படுவார்கள்.

குடும்பப் பொறுப்புகள், பிள்ளைகளை கவனிக்க வேண்டிய கடமை. அவர்களுக்கு அதிக நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயம், நேரமின்மை என பல காரணங்களால், நடுத்தர வயதினருக்கு பெரும் மனக் கவலைகள், மனச் சுமைகள்.

ஆனால் மெனோபாஸ் காலத்தில் இருப்பவர்களுக்கு உடலுறவு மட்டுமே சந்தோஷம் தரும் விஷயமல்ல. அதையும் தாண்டி பல விஷயங்கள் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பது நிறைய பேருக்கு மறந்து விடுகிறது.

உடல் ரீதியான சந்தோஷத்திற்கு உடலுறவு மட்டும்தான் ஒரே வழி என்றில்லை. அதற்குப் பிறகும் நிறைய மேட்டர்கள் உள்ளன.

மெனோபாஸ் காலத்தில்தான் உண்மையிலேயே சுதந்திரமாகவும், மன இறுக்கம் இன்றியும், எந்தவித பயமின்றியும் உடல் ரீதியிலான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.

இந்த காலகட்டத்தில்தான் கணவர்களுடன், இளம் வயதில் இருந்ததை விட சுதந்திரமாகவும், பயமின்றியும் உடல் ரீதியான உறவைக் கொள்ள முடிகிறது என பல பெண்கள் கூறுகிறார்கள்.

கர்ப்பமாகி விடுவோமோ என்ற பயம் இல்லை. நினைத்தபோது சந்தோஷமாக இருக்கலாம் என்பதே இதற்குக் காரணம்.

இருப்பினும், இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. மெனோபாஸ் வந்து விட்ட பெண்களுக்கு இரவு நேரத்தில் அதிகம் வியர்வை சுரக்கும். பெண்ணுறுப்பில் ஒரு வறட்சித்தன்மை இருக்கும். மன நிலை ஒரே மாதிரியாக இருக்காது. மன அழுத்தமும் கூடவே வந்து முழுமையான இன்பத்தை அனுபவிக்க தடையாக இருக்கின்றன.

ஆனால் மெனோபாஸ் பயத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. மெனோபாஸ், இனியும் அவர்களுக்கு வறண்ட பாலைவனமாக இருக்கப் போவதில்லை. பாலைவனத்திற்கு அழகூட்டும் ஓயாசிஸ் போல, அவர்களுக்கும் ஒரு பரிகாரம் வந்து விட்டது.

இதையெல்லாம் ஒரே ஒரு தெரபி மூலம் சரி செய்து விடலாம். அதுதான் ஹார்மோன் மாற்று தெரப்பி.

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் மற்றும் மன நிலை மாற்றங்களை சரி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட தெரபிதான் இந்த ஹார்மோன் மாற்று தெரபி.

அது என்ன ஹார்மோன் மாற்று தெரபி ..?

மெனோபாஸ் காலத்தில் பெண்களிடம் இருந்து மறையும் ஹார்மோன்களுக்குப் பதிலாக இயற்கை அல்லது செயற்கை செக்ஸ் ஹார்மோன்களை செலுத்துவதுதான் இந்த தெரபியின் முக்கிய அம்சம்.

மாத்திரைகள், பேட்ச்சுகள் மற்றும் ஜெல் வடிவில் இதை உட் கொள்ளலாம். இதில், மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் குறைக்கும் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் இருக்கும். இது பெண்களுக்கு பெரும் வரமாக அமைந்துள்ளது.

மன கட்டுப்பாட்டை இந்த தெரபி அதிகரிக்கிறது, எலும்பின் பலத்தையும் கூட்டுகிறது, இயல்பான நிலையில் நமது உணர்வுகளும், உடலும் இருக்க உதவுகிறது.

மகப்பேறு மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில்தான் இந்த தெரபியை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 6 மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை இந்த தெரபியை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தெரபியை எடுத்துக் கொள்வதை விட மிக முக்கியமானது நமது மன நிலையை இயற்கையாகவே நமது சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்வதுதான்.

உடலுறவு மட்டுமே சந்தோஷம் தரும் விஷயம் என்ற முடிவுக்கு வந்து விடாமல், உடல் ஸ்பரிசங்கள், தித்திக்கும் முத்தம், நெருக்கமான அன்பு உள்ளிட்ட விஷயங்களும் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று எண்ண வேண்டும்.

காதலையும், அன்பையும் வெளிப்படுத்த உடலுறவு மட்டுமே வடிகால் என்ற எண்ணத்தை விட வேண்டும். பரஸ்பரம் நம்பிக்கை, மாறாத அன்பு, உணர்வுகளுக்கு தரும் மதிப்பு ஆகியவையும் கூட கணவன், மனைவியரிடையே அன்பையும், காதலையும் இறுக்கமாக வைத்திருக்க உதவும்.

நன்றி தற்ஸ் தமிழ்

கொஞ்ச நாளாக எமது தமிழ்சிறி ஒரு type ஆகத்தான் பதிவுகளை போடுறார். அனேகமாக வெள்ளை படுதல் பற்றிய சித்த வைத்திய விளக்கத்தினை பார்த்த பின் ஆளே மாறிப் போட்டார் போல கிடக்கு.

ஆனாலும், ஆரோக்கியமான பதிவுகள் இவை.

தனது சொந்த பிள்ளைக்கே மாதவிடாய் பற்றி ஒரு தாய் விளக்க மறுக்கும் எமது தமிழ் சூழலில் இவை பற்றிய பதிவுகள் எமக்கு அவசியம். வணிக மயப்படுத்தப் பட்ட வாழ்வு நெறியில் sanitary napkins பற்றிய தொலைக்காட்சி விளம்பரங்களில் மட்டும் தான் ஒரு ஆண் குழந்தை மாதவிடாய் பற்றி அரை குறையாக விளங்கி கொள்ளுகின்றது. இந்த நிலை மாற இத்தகைய பதிவுகள் எல்லா வகையான ஊடகங்களிலும் வரவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்தா.... இப்படி பல பிரச்சனை இருக்கா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறியருக்கு என்ன நடந்தது இருந்தாப்போல இதுக்க இறங்கிப்போட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

சிறியருக்கு என்ன நடந்தது இருந்தாப்போல இதுக்க இறங்கிப்போட்டார்

அவர் தொன்றுதொட்டு யாழ்களத்திலதானே நிற்கிறார். எங்கே புதுசாய் இறங்கீட்டார்??

அவர் தொன்றுதொட்டு யாழ்களத்திலதானே நிற்கிறார். எங்கே புதுசாய் இறங்கீட்டார்??

சிலவேளை இந்தியாவிலிருந்து மற்றமாதிரி வைத்திய கலா நிதி சான்றிதழ் ஏதும் எடுக்கபோறார் போல என்ரு நினைக்கிறேன்

நல்ல கட்டுரை.

வயதான ஆண்கள் கூட அச்சமில்லாமல் வாழ ஒரு தெரபி உண்டு.

அதை இந்தோனேசியாவில் செய்கிறார்கள்.

அது ஒருவித ஒயில் மசாஜ்.

81 - 18 ஆகிவிடும்

நல்ல கட்டுரை.

வயதான ஆண்கள் கூட அச்சமில்லாமல் வாழ ஒரு தெரபி உண்டு.

அதை இந்தோனேசியாவில் செய்கிறார்கள்.

அது ஒருவித ஒயில் மசாஜ்.

81 - 18 ஆகிவிடும்

ஆ... 48 - 84 ஆகாதுதானே?! :D

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளாக எமது தமிழ்சிறி ஒரு type ஆகத்தான் பதிவுகளை போடுறார். அனேகமாக வெள்ளை படுதல் பற்றிய சித்த வைத்திய விளக்கத்தினை பார்த்த பின் ஆளே மாறிப் போட்டார் போல கிடக்கு.

ஆனாலும், ஆரோக்கியமான பதிவுகள் இவை.

தனது சொந்த பிள்ளைக்கே மாதவிடாய் பற்றி ஒரு தாய் விளக்க மறுக்கும் எமது தமிழ் சூழலில் இவை பற்றிய பதிவுகள் எமக்கு அவசியம். வணிக மயப்படுத்தப் பட்ட வாழ்வு நெறியில் sanitary napkins பற்றிய தொலைக்காட்சி விளம்பரங்களில் மட்டும் தான் ஒரு ஆண் குழந்தை மாதவிடாய் பற்றி அரை குறையாக விளங்கி கொள்ளுகின்றது. இந்த நிலை மாற இத்தகைய பதிவுகள் எல்லா வகையான ஊடகங்களிலும் வரவேண்டும்

இதென்ன அநியாயமான.. நூற்றாண்டுக்கு பிற்பட்ட கதையா இருக்குது. மாதவிடாய் பற்றி.. இப்ப எல்லாம் ஆண்டு 6 இலேயே வயது 10+ இலேயே படிப்பிக்கினம். முன்னர் ஆண்டு 10 அல்லது 11 இல் படிப்பிச்சவை தானே..! :D :D

இந்த ஓமோன் சிகிச்சைகளால மாதவிடாய் நிற்கும் காலத்தை கூட்டி வைக்கலாம். ஆனால்.. அதன் பின் விளைவுகள்.. சில விரும்பத்தகாத பாதகத்தன்மைகளையும் உருவாக்கலாம்..!

ஊசிகள் மூலம்.. மாத்திரிகைகள் மூலம்.. ஓமோனைச் செலுத்துவதால்.. உடலின் வழமையான.. இரசாயனச் செயற்பாட்டு ஒழுங்கு சீர்கெடுகிறது. இதனால் பாதகமான விளைவுகளும் ஏற்படும். இதனை குறித்த சிகிச்சை அளிக்க முன்னரே விளக்கி விட்டுத்தான் சிகிச்சை அளிப்பார்கள் என்று நினைக்கிறேன்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை.

வயதான ஆண்கள் கூட அச்சமில்லாமல் வாழ ஒரு தெரபி உண்டு.

அதை இந்தோனேசியாவில் செய்கிறார்கள்.

அது ஒருவித ஒயில் மசாஜ்.

81 - 18 ஆகிவிடும்

ஆண்களுக்கு பொதுவா பெண்களைப் போன்று தெளிவான மெனோபோஸ் வாறதில்லை. இருந்தாலும்.. விந்தணு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படலாம். ஆணுறுப்புச் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.. பிற நோய்கள்.. குறிப்பாக.. அதிக இரத்த அழுத்தம்.. நீரிழிவு.. இதயப் பிரச்சனைகள்.. stroke.. மன அழுத்தம் போன்றவற்றால் ஏற்படலாம்..! இவற்றில் குறிப்பிடத்தக்கவவற்றைறைத் தீர்க்க இப்போ.. மருந்து மாத்திரைகள் இருக்கின்றன.

ஒரு சில விந்தணுக்களை வைத்துக் கொண்டே.. IVF முறையில் குழந்தை உருவாக்கக் கூடிய வகைக்கு மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கிறது. எனவே ஆண்கள் கடுமையா ஜோசிக்கத் தேவையில்லை..! ஆனால் பெண்களின் பிரச்சனைகள்.. பொதுவானவை. சில பெண்களுக்கு IVF கூட சரிவராது.. அவர்களின் கருப்பை.. மோசமாகப் பலவீனப்பட்டுப் போய் இருப்பின்.. ! அப்புறம் வாடகைக்குத்தான் கருப்பை பிடிக்க வேண்டும்.. குழந்தையை உட்கார வைச்சு வளர்க்க..! :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ லோகத்தில இப்படிஎல்லாம் பிரச்சனைகள் இருக்கோ :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.