Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: பெருமளவிலான படையினர் பலி; 2 டாங்கிகள் அழிப்பு

Featured Replies

முள்ளவளை முழுப்பிரதேசத்தையும் இராணுவம் ஆக்கிரமித்துள்ளதா?? வித்தியானந்தக்கல்லூரி, மாவீரர் துpலுமில்லாம் பற்றி எவ்விதஎவ்வித தகவலும் வரவில்லை அது தான் கேட்டேன். நான் நினைக்கின்றேன் தண்ணீரூற்றுப் பக்கத்தில் தான் அவன் நிற்கக் கூடும் என.

கொழும்பு: உலக அளவில் மக்களுக்கான எதிரான வன்முறைகள் அதிகம் நடக்கும் நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள உலக வன்முறைகள் கண்காணிப்பு மையம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் நாடுகள் வரிசையில் இலங்கைக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது.

இலங்கையின் வட பகுதியில், இலங்கைப் படைகள் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையால், பல அப்பாவிப் பொதுமக்கள் தினசரி கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கொல்லப்பட்ட அல்லது காயமடந்த மக்களுக்கு உதவக்கூடிய பொது உதவி நிறுவனங்களுக்கும், ராணுவம் குந்தகம் விளைவித்து வருகிறது.

இலங்கையின் ராணுவ நடவடிக்கைகள் வெற்றி தருவதாக அரசு கூறினாலும் கூட, ஜனவரி மாதம் பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை அங்கு மேலும் மோசமடைந்துள்ளது.

உலகில் தற்போது நடைபெற்று வரும் மிக மோசமான போர் நடவடிக்கைகளில் மிக அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்படும் இடமாக இலங்கையின் வடபகுதி காணப்படுகிறது.

இஸ்ரேலியப் படையினரின் முன்னெடுப்பால் பாதிப்படைந்த காசா நிலப்பரப்பு, அரசுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ள மடகஸ்கார் பகுதி, அரச படைகளுக்கெதிராகப் போர் புரியும் மாலி நாட்டின் டோடக் ஆகியவை வன்முறை அதிகம் நிறைந்த அடுத்த மூன்று பகுதிகள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thanks:thatstamil

  • Replies 84
  • Views 13.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதில் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் நாடுகள் வரிசையில் இலங்கைக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது.

இந்த இடத்துக்கு வர மகிந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். :wub::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

"அந்த " இடத்தை பிடிக்க சிறி லங்க தலைவர்களின் குறிப்பாக மகிந்துவின் முயற்சி அபாரம் ,இப்படி பெயர் எடுத்தவரை எப்படி பாராட்ட போகிறீர்கள்?. நாடுக்கு செய்த மிக பெரும் "சாதனை" அல்லவா ?

முன்பிருந்த நிலை இன்றில்லை அங்கு

எனவே முன்புபோல் செய்திகளை அடிக்கடி அனுப்பமுடியாது போகலாம்

என்னதான் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அங்கே எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கிறது. எறிகணை வீச்சோ வான் தாக்குதலோ நடத்தப்படும் வேளையில் பதுங்கிவிட்டு மீண்டும் அவர்கள் தமது பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஊடகங்களிற்கு எப்ப எதைக் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தற்போது அவர்கள் மிகக் கவனமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

போர்க்களப் பணிகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதைப்பற்றி நாம் கவலை கொள்ளாது எமக்குரிய கடமைகளை நாம் சரிவரச் செய்ய வேண்டும். தனியே பேரணிகள் ஆர்ப்பாட்டம் என்றில்லாது பங்களிப்புகளையும் அள்ளி வழங்கவேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகு உங்களுக்கு கல்லெறியிறதோ ....... நான் கல்லும் எறியல புல்லும் எறியல.

நீங்கள் எல்லாரும் ஒன்றை புரிந்துகொள்ளுங்கோ விடுதலை புலிகள் தங்கள் செய்தவற்றையும் செய்யப்போவதையும் எப்பவும் உங்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தால் அங்கு ரகசியம், யுக்தி, ராஜதந்திரம் எதுவுமே இருக்காது. சில நேரங்களில் சிலவற்றை மறைத்து சிலவற்றை பெரிதாக காட்டவேண்டும் அனால் அதற்காக அவை உண்மை அல்லது பொய் என்று ஆகிவிடாது. புலிகள் செய்வதை எல்லாம் படம் போட்டு காட்டுவதற்கு அல்லது செய்யப்போவதற்கு முன் சொல்லுவதற்கு தெருசண்டை செய்யவில்லை (சிலவற்றை சொல்லியிருக்கலாம் ஆனால் அதன் நோக்கம் வேறாக இருக்கல்லாம்) . நீங்கள் சொல்வதில் இருந்து நீங்கள் ராணுவ தளங்களையும் மற்றைய ஊடகங்களையும் மட்டுமே நம்புகிறீர்கள் என்று தெரிகிறது,, எப்பொழுதாவது ராணுவ தளங்களோ அல்லது மற்றைய ஊடகங்களோ ராணுவத்துக்கு ஏற்படும் இழப்புக்களை கூறுவதில்லை (ஒருவேளை அப்படியான சம்பவங்கள் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் நடைபெற்றிருந்தால் கூறவேண்டிய கட்டாயம் உள்ளது ஆனால் இதுவோ மக்கள் அற்ற களமுனையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது ஆகவே சொல்லவேண்டிய கட்டாயம் ராணுவத்துக்கு இல்லை ) .தற்போது வன்னி இருக்கும் நிலையில் அவர்கள் வெற்றிபெற்றால் கூட வெளியில் சோ;;சொல்லமுடியாத நிலையிலே உள்ளார்கள் ராணுவ வெற்றிகளை நாம் தூக்கிபிடித்தால் மக்கள்படும் பாடு நீங்கள் கொண்டுள்ள எழுச்சி தமிழகத்தின் எழுச்சி, உலக நாடுகள் எம்மை நோக்கும் பார்வை என்பன வித்தியாசமாக இருக்கும்.நடப்பவை நன்றாக நடக்கும் ஒருநாள் அவை நிச்சயமாக வெளிச்சத்துக்கு வரும் அப்பொழுது உங்கள் கேள்விகளுக்கு விடை நிச்சயமாக இருக்கும் தயவுசெய்து அதுவரை புலிகளோடு அங்குள்ள எம் மக்களோடு அனைவரும் உங்கள் கரங்களை இணைத்திருங்கள்.

மாமோய் சரியா சொன்னிங்க..ரகுனாதன் அண்ணாவும் இதை புரிஞ்சு கொள்ளுவார் என்று நினைக்கிறன் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களிற்கு எப்ப எதைக் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தற்போது அவர்கள் மிகக் கவனமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நம்ம குறுக்கரின் விடாமுயற்ச்சிக்கு பலன் கிடைச்சிருக்கு.

போர்க்களப் பணிகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதைப்பற்றி நாம் கவலை கொள்ளாது எமக்குரிய கடமைகளை நாம் சரிவரச் செய்ய வேண்டும். தனியே பேரணிகள் ஆர்ப்பாட்டம் என்றில்லாது பங்களிப்புகளையும் அள்ளி வழங்கவேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம்.

படிக்கின்ர காலக்தில நான் இரவில வேலை செய்வேன், அப்போது அது எனக்கு அவசியமானது. இப்போது அதை விட அவசியமான தேவை எங்கள் மக்களின் விடுதலைக்குத்தேவையாக உள்ளது.

நான் மீண்டும் இரவுவேளை ஒன்றின் மூலம் வருவதை எங்களின் நாட்டுத்தேவைக்காக வழங்கவுள்ளேன். இது ஒரு வேற்றுநாட்டு நன்பனின் அனுபவம், அவர்கள் அனைவரும் இவ்வாறே செய்ததாகவும் சொன்னார். எம் உறவுகலும் இதை பரிசீலிக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்களப் பணிகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதைப்பற்றி நாம் கவலை கொள்ளாது எமக்குரிய கடமைகளை நாம் சரிவரச் செய்ய வேண்டும். தனியே பேரணிகள் ஆர்ப்பாட்டம் என்றில்லாது பங்களிப்புகளையும் அள்ளி வழங்கவேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம்.

படிக்கின்ர காலக்தில நான் இரவில வேலை செய்வேன், அப்போது அது எனக்கு அவசியமானது. இப்போது அதை விட அவசியமான தேவை எங்கள் மக்களின் விடுதலைக்குத்தேவையாக உள்ளது.

நான் மீண்டும் இரவுவேளை ஒன்றின் மூலம் வருவதை எங்களின் நாட்டுத்தேவைக்காக வழங்கவுள்ளேன். இது ஒரு வேற்றுநாட்டு நன்பனின் அனுபவம், அவர்கள் அனைவரும் இவ்வாறே செய்ததாகவும் சொன்னார். எம் உறவுகலும் இதை பரிசீலிக்கலாமே?

அண்ணாவுக்கு நல்ல மனசு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு புதிதாக இன்னொரு வேலைக்குபோவதை விடுத்து பிறந்த நாள் கொண்ட்டாட்டங்கள் பிற கேளிக்கைகளில் உலக அளவில் செலவிடப்படும் இலட்சக்கணக்கான டொலர்களை கொடுத்துதவினாலேயே போதும் எமது நாடு அழிவின் விளிம்பில் நிற்கிறது எமக்கு இந்த கேளிக்கைகள் வேண்டாம் பல தமிழக உறவுகள் பிறந்த நாள் கொண்டாடுவதையும் இனிப்பு சாப்பிடுவதையும் எமக்காக விடும்போது நாங்கள் மட்டும் என்ன ...................... பிறவிகளா? ஒரு கவி பாடினான் மானம் எனும் பானையில் வாழ்வெனும் சீனி சமைத்தவனே!

கொகண்டாடுறவங்கள் கொண்டாடலாம் ஆடாமல் விடலாம் அது அவரவரா யோசிச்சு முடிவெடுத்து செய்யலாம் அல்லது செய்யாமலே விடலாம்.

அதுவரைக்கு பொறுக்கக்கூடிய நிலையா இன்று?

எதையாவது செய்ய நினைப்பவர்களுக்குத்தான் இதை எழுதினேன்.. மற்றதுபோக இதை வேறொரு இனத்தவர்கள் செய்து அதிக பலன் அடைந்துள்ளார்கள்.

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.