Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத் தீவை நோக்கி கரூர் வழக்கறிஞர்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத் தீவை நோக்கி கரூர் வழக்கறிஞர்கள் !

கரூர் : இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் கரூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் முல்லைத்தீவுக்கு செல்ல உள்ளனர்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கம் தொடர் போராட்டமும், நீதி மன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் நீதிமன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், இப் போராட்டத்தின் உச்ச கட்டமாக கரூர் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் , தூத்துக்குடி வழக்கறிஞர்களுடன் இணைந்து முல்லைத் தீவுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

கரூரில் உள்ள மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகையன் தலைமையில் கூட்டிய கூட்டத்தில் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போர் நிறுத்தம் கோரி முல்லைத் தீவுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று மாலை 4 மணிக்கு, கரூரில் இருந்து கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகையன் தலைமையில் வழக்கறிஞர்கள் ரமேஷ், நடேஷ், பாண்டியன், நெடுஞ்செழியன், லட்சுமணன் உள்பட சுமார் 11 பேர் தூத்துக்குடிக்கு புறப்பட்டனர்.

அங்கிருந்து படகு மூலம் முல்லைத் தீவுக்கு செல்ல உள்ளனர். இதற்கான உரிய ஏற்பாடுகள் செய்துள்ளதாக வழக்கறிஞகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் இவர்கள் முல்லைத் தீவுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபடும் முன்பு தூத்துக்குடியில் போலீசாரால் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிய வருகிறது. இதனால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

-தட்ஸ் தமிழ்

தமிழகச் சட்டவாளர்களே தலைவணங்குகிறோம். இது போன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது சட்டவாளர்கள், முல்லைத்தீவுக்குப் போகவேண்டாம். தாம் வாழும் நாட்டு அரசியல்வாதிகளைச் சந்தித்து அழுத்தம் கொடுக்கலாமே.

ஈழத்தமிழர்களை போரில் இருந்து காப்பாற்ற தமிழக வக்கீல்கள் 14 பேர் கள்ளத் தோணியில் தூத்துக்குடியில் இருந்து முல்லைத்தீவை நோக்கி சென்றனர்.

கரூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகையன் தலைமையில் ஈழத்தமிழர்களை காக்கக் கோரி, போராட்டம் நடத்தி வந்தனர். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லையெனில் முல்லைத்தீவு சென்று பேராடுவோம் என்றும் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் 6 பேரும், கரூர் வழக்கறிஞர்கள் 8 பேர் முருகையன் தலைமையில் முல்லைத்தீவு செல்ல முடிவு செய்தனர். தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கறிஞர்கள் 14 பேரும் தூத்துக்குடிக்கு முன்பு 3 கி.மீ. தொலையில் இருந்து ஒரு கள்ளத் தோணியில் புறப்பட்டனர்.

முல்லைத்தீவு நோக்கி சென்றுக்கொண்டிருந்த முருகையனை தொடர்பு கொண்டு பேசியபோது, நாங்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் முல்லைத்தீவு சென்று விடுவோம் என்று தெரிவித்தார். வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் செய்வதை அறிந்த கடலோர காவல்படையினர் அவர்களை பிடிக்க விரைந்துள்ளனர்.

ஈழத்தமிழர்களுக்காக தமிழக வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் மேற்கொண்டுள்ள செய்தி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களிடையே பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி www.tamiloosai.com

Source Link: http://tamiloosai.com/index.php?option=com...7&Itemid=68

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களை போரில் இருந்து காப்பாற்ற தமிழக வக்கீல்கள் 14 பேர் கள்ளத் தோணியில் தூத்துக்குடியில் இருந்து முல்லைத்தீவை நோக்கி சென்றனர்.

கரூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகையன் தலைமையில் ஈழத்தமிழர்களை காக்கக் கோரி, போராட்டம் நடத்தி வந்தனர். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லையெனில் முல்லைத்தீவு சென்று பேராடுவோம் என்றும் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் 6 பேரும், கரூர் வழக்கறிஞர்கள் 8 பேர் முருகையன் தலைமையில் முல்லைத்தீவு செல்ல முடிவு செய்தனர். தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கறிஞர்கள் 14 பேரும் தூத்துக்குடிக்கு முன்பு 3 கி.மீ. தொலையில் இருந்து ஒரு கள்ளத் தோணியில் புறப்பட்டனர்.

முல்லைத்தீவு நோக்கி சென்றுக்கொண்டிருந்த முருகையனை தொடர்பு கொண்டு பேசியபோது, நாங்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் முல்லைத்தீவு சென்று விடுவோம் என்று தெரிவித்தார்.

வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் செய்வதை அறிந்த கடலோர காவல்படையினர் அவர்களை பிடிக்க விரைந்துள்ளனர்.

ஈழத்தமிழர்களுக்காக தமிழக வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் மேற்கொண்டுள்ள செய்தி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களிடையே பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nakkheeran

ஈழத்தமிழ் மக்கள் மீத இலங்கை அரசால் ஏவிவிடப்பட்டிருக்கும் போர் நடவடிக்கைகள் எட்டாம் தேதியோடு நிறுத்தப்படவேண்டும், இல்லையேல் 9ஆம் தேதி வழக்கறிஞர்கள் முல்லைத்தீவு நோக்கி பயணம் செல்வோம் என தூத்துக்குடி மற்றும் கரூர் வழக்கறிஞர்கள் சங்கங்களில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தார்கள். இதன்படி இன்று கரூரில் எட்டுவழக்கறிஞர்களும், தூத்துக்குடியைச்சேர்ந்த ஆறு வழக்கறிஞர்களும் முல்லைத்தீவு நோக்கி காலை பத்து மணிக்கு கிளம்பினர். இந்த வழக்கறிஞர்களில் முருகேசன் கருர் (மனித உரிமைப் பாதுகாப்பு மையம் - ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) ம.உ.பா.மையத்தின் அமைப்பாளர், ராமச்சந்திரன் தூத்துக்குடி ம.உ.பா.மையத்தின் செயலாளர், ஹரி ராகவன் தூத்துக்குடி ம.உ.பா.மையத்தின் தலைவர் மற்றும் செல்வம்,வேலு ம.உ.பா.மையத்தின் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். சற்று முன்னர் கிடைத்த தகவலின் படி இந்த வழக்கறிஞர்கள் சுமார் ஐம்பது கி.மீட்டர் வரை கடலுக்குள் சென்றுள்ளனர். ஒன்றரை நாளில் முல்லைத் தீவு அடைந்து விடுவதாக திட்டம்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜூ படகில் சென்று கொண்டிருக்கும் வழக்கறிஞர்களிடம் செல்பேசியில் பேசினார். அவர் நமக்குத் தந்துள்ள தகவலின் படி எப்படியும் முல்லைத் தீவு செல்வது என அவர்கள் உறுதியுடன் உள்ளதாகவும் இதை வைத்து போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கு தங்களது இந்த சாகசப் பயணம் வழிவகுக்கும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை வழக்கறிஞர்கள் இன்று ஈழப்பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருக்கும் அரங்கில் படகில் சென்று கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் செல்பேசி ஸ்பீக்கர் மூலம் உரை நிகழ்த்தி அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாளை நீதிமன்ற பணிக்கு வழக்கறிஞர்கள் திரும்புவதாக இருந்த திட்டமும் இந்தப் படகு பயணத்தின் மூலம் ரத்தாகலாம் என்றும் தெரிகிறது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இந்தப் படகு பயணத்தைப் பற்றி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும் தெரிகிறது. தமது உயிரைப் பற்றி கவலைப்படாமல் சில வழக்கறிஞர்கள் ஏதாவது செய்து போரை நிறுத்த வேண்டும் என துடிப்பது ஓட்டுக்கட்சிகளுக்கும், மத்திய அரசுக்கும் கேட்கப்போவதில்லை. அப்படி கேட்கும் அளவு பெரும் எழுச்சியை தமிழக மக்கள் எழுப்புவார்கள் என்ற நம்பிக்கையோடு சில வழக்கறிஞர்கள் தம் உயிரைப் பணயம் வைத்து இந்த சாகசப்பயணத்தை துவக்கியிருக்கிறார்கள். மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள்தான் சிதம்பரம் நடராசர் கோவிலை அரசு வசம் ஆக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வினவு தளத்திலிருந்து:http://vinavu.wordpress.com/2009/02/09/eelam22/

இதன் மறுமொழிகள்:http://vinavu.wordpress.com/2009/02/09/eelam22/#respond

சற்றுமுன் கிடைத்த தகவலின்படி, வழக்கறிஞ்ர்களின் படகை கடலோர காவல்படை மறித்து அவர்களை கைது செய்து மீண்டும் தூத்துக்குடிக்கு அழைத்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு

http://vinavu.wordpress.com/2009/02/09/eelam22//

இன்று நண்பகல் 12.30 மனியளவில் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து மனித

உரிமை பாதுகாப்ப மய்யத்தின் வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் தலைமையில் 14

வழக்கறிஞர்கள் இந்திய தமிழக அரசின் கட்டுப்பாட்டை உடைத்துவிட்டு

முல்லைத்தீவினை நோக்கி படகு பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழக நேரப்படி

நண்பகல் 1.30 மணியளவில் 13 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருக்கின்றனர்.

அவர்களது விபரம் :

1 ) சுப.இராமச்சந்திரன் இ(தூத்துக்குடி)

2) முருகையன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் )

3) நடேசன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர்)

4 ) நெடுஞ்செழியன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் )

5) முகமது பரூன் ஹக் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் )

6) சின்னச்சாமி ( கரூர் )

7) லெட்சுமணன் ( கரூர் )

8 ) முருகேசன் ( கரூர் )

9) சுதாகர் ( கரூர் )

10 ) வேலுச்சாமி ( தூத்துக்குடி )

11 ) அரிகரன் ( தூத்துக்குடி )

12)பொன்ராசு ( தூத்துக்குடி )

13) இரகு (( தூத்துக்குடி ) மாணவர் திமுக மாவட்ட அமைப்பாளர் )

14 )தூத்துக்குடி வழக்கறிஞர்

சிங்கள அரசுக்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் தூத்துக்குடி துறைமுகத்தினை

200 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இப்பொழுது முற்றுகையிட்டு போராட்டம்

செய்துகொண்டிருக்கின்றனர்.

--

தமிழீழம் மலர்ந்தே தீரும்..........

நன்றிஇ அன்புடன்இ பகுத்தறிவுடன்

சுபாசு சந்திரன் தமிழினியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழப்பிரச்சனை: முல்லைத்தீவு நோக்கி சென்ற தமிழக வக்கீல்கள் 14 பேர் கைது

ஈழத்தமிழர்களை போரில் இருந்து காப்பாற்ற தமிழக வக்கீல்கள் 14 பேர் கள்ளத் தோணியில் தூத்துக்குடியில் இருந்து முல்லைத்தீவை நோக்கி சென்றனர்.

கரூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகையன் தலைமையில் ஈழத்தமிழர்களை காக்கக் கோரி, போராட்டம் நடத்தி வந்தனர். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லையெனில் முல்லைத்தீவு சென்று பேராடுவோம் என்றும் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் 6 பேரும், கரூர் வழக்கறிஞர்கள் 8 பேர் முருகையன் தலைமையில் முல்லைத்தீவு செல்ல முடிவு செய்தனர். தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கறிஞர்கள் 14 பேரும் தூத்துக்குடிக்கு முன்பு 3 கி.மீ. தொலையில் இருந்து ஒரு கள்ளத் தோணியில் புறப்பட்டனர்.

முல்லைத்தீவு நோக்கி சென்றுக்கொண்டிருந்த முருகையனை தொடர்பு கொண்டு பேசியபோது, நாங்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் முல்லைத்தீவு சென்று விடுவோம் என்று தெரிவித்தார்.

வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் செய்வதை அறிந்த கடலோர காவல்படையினர் அவர்களை பிடிக்க விரைந்தனர். நடுக்கடலில் சுற்றி வளைத்த கடலோர காவல்படையினர் அவர்களை கைது செய்தனர்.

ஈழத்தமிழர்களுக்காக தமிழக வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் மேற்கொண்டுள்ள செய்தி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களிடையே பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nakkheeran

Edited by suriyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வினவு அவர்களே,

தற்போதைய நிலவரம் என்ன? தங்கள் தகவல்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தடுத்து நிறுத்தபட்டு மீண்டும் தங்கள் தளம் நோக்கி திருப்பி அழைக்க படுகிறார்களாம் என்று வாசித்தேன். .....

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காக உங்கள் உயிர்களைத் துச்சமாகக் கருதும் தமிழக உறவுகளே! உங்களுக்குத் தலை வணங்குகிறோம். நீங்கள் மேற்கொண்ட பயணம் சாதாரணமானதல்ல முத்துக்குமாரன் தீக்குளித்த செயலைப் போன்றது தெரிந்தே துணிந்திருந்தீர்கள். உறவுகளே! எங்களிடமிருந்து உங்களுக்குத் தருவதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. நன்றியில் பனிக்கும் கண்ணீர்த் துளிகளைத் தவிர எதுவுமே இன்றைய உலகில் எமக்கானதாக இல்லை. உங்கள் புரட்சிதான் எங்களுக்கான சின்ன ஆறுதலாக இருக்கிறது. நன்றி உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவுக்குச் செல்ல முற்பட்ட தமிழ்நாடு சட்டவாளர்கள் நடுக்கடலில் கைது

ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு கோரி, வன்னி செல்ல முற்பட்ட சட்டவாளர்கள் 14 பேர் உட்பட 15 பேர் தமிழ்நாடு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் சட்டவாளர்கள் சங்கத் தலைவர் முருகையன் தலைமையில் தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக படகில் இன்று (திங்கட்கிழமை) வன்னி செல்ல முற்பட்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தத் தவறினால் முல்லைத்தீவு சென்று போராடுவோம் எனக்கூறிப் புறப்பட்டுச் சென்ற கரூர் சட்டவாளர்கள் 8 பேரும், தூத்துக்குடி சட்டவாளர்கள் 6 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் இருந்து புறப்பட்டுச் சென்ற இவர்களை, தமிழ்நாடு கரையோர காவல் படையினர் நடுக் கடற்பரப்பில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

01. சுப.இராமச்சந்திரன் (தூத்துக்குடி) ,

02. முருகையன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் )

03. நடேசன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர்)

04. நெடுஞ்செழியன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் )

05. முகமது பரூன் ஹக் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் )

06. சின்னச்சாமி ( கரூர் )

07. லெட்சுமணன் ( கரூர் )

08. முருகேசன் ( கரூர் )

09. சுதாகர் ( கரூர் )

10. வேலுச்சாமி ( தூத்துக்குடி )

11. அரிகரன் ( தூத்துக்குடி )

12. பொன்ராசு ( தூத்துக்குடி )

13. இரகு ( தூத்துக்குடி மாணவர் திமுக மாவட்ட அமைப்பாளர் )

14. விக்டர் ( தூத்துக்குடி )

15. மீனவர் செந்தில்வேல் ( அப்படகின் உரிமையாளர் படகினை ஓட்டிச்சென்றவர்)

நன்றி பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மன்னித்து கொள்ளுங்கள் இதை கேட்பதற்கு இவர்கள் முல்லைத்தீவுக்கு கடல் ஊடாக போவதன் மூலம் எப்படி நிறுத்தம் ஏற்படும் என நினைத்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தநிறுத்தம் ஏற்படுதோ இல்லையோ.... அவர்களுக்குத் தமிழர்களைக் காபப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சி... கொந்தளிப்பு.... அதை மதிக்கத் தெரிவதே சிறந்த பண்பு

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மன்னித்து கொள்ளுங்கள் இதை கேட்பதற்கு இவர்கள் முல்லைத்தீவுக்கு கடல் ஊடாக போவதன் மூலம் எப்படி நிறுத்தம் ஏற்படும் என நினைத்தார்கள்?

இவையெல்லாம் மக்களை எழுச்சிநிலையில் வைத்திருக்க உதவும் நடவடிக்கைகள். எல்லாவற்றுக்கும் காரண காரியங்களை அலசினால் ஒன்றும் நடவாது. திருமா அண்ண‌னின் உண்ணாவிரதமும் அவ்வகைப்பட்டதே. அதையும் கேள்வியாக்கியவர்கள் இருக்கிறார்கள்.

வல்லாதிக்க சக்திகளால் முடக்கப்பட முயற்சிக்கப்படும் எமது போராட்டத்தை வெல்ல எமக்கு உள்ள ஒரே ஆயுதம் மக்கள் சக்தி. அந்த மக்கள் சக்தியைத் திரட்ட அவர்களை எழுச்சி நிலையில் வைத்திருத்தல் இன்றிய‌மையாதது.

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சி வசப்பட்டு உயிரை விட பார்த்தார்கள்.ஏன் உணர்ச்சி வசப்படாமல் ஆக்க பூர்வமாக சிந்திக்க மாட்டேன் என்கிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்ச்சி வசப்பட்டு உயிரை விட பார்த்தார்கள்.ஏன் உணர்ச்சி வசப்படாமல் ஆக்க பூர்வமாக சிந்திக்க மாட்டேன் என்கிறார்கள்?

உண்மைகள் எரிக்கப்படும் போது 'உணர்ச்சிவசப்படாமல் இருப்பவன் தன்மானம் மிக்க மனிதன் அல்ல"

ஆறிப்போட்டு சிந்திக்கின்ற நிலையில் இன்றைய அழிவுகள் இல்லை உடனடி நிவாரணம். அதற்கான ஒரு கவனயீர்ப்பு நிகழ்வே இதுவும்.

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சி வசப்பட்டு உயிரை விட பார்த்தார்கள்.ஏன் உணர்ச்சி வசப்படாமல் ஆக்க பூர்வமாக சிந்திக்க மாட்டேன் என்கிறார்கள்?

தமிழக மக்களை உணர்ச்சி நிலையில் வைத்திருக்க வேறு வழியில்லை. முத்துக்குமரன் உயிர் நீத்திராவிடில் இப்போது தமிழகம் தூங்கிக் கொண்டிருந்திருக்கும்..! இதுதான் கசப்பான உண்மை. இவற்றால் என்னவெல்லாம் நடக்கப் போகின்றது என்பதைக் காலம்தான் நமக்குச் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முத்துகுமாரன் உயிர் நீத்ததால் தான் தூங்கிக் கொண்டு இருந்த தமிழகம் விழித்து கொண்டது ஆனால் முத்துகுமாரன் மாதிரி பல பேர் தீக்குளித்தால் [அதுவே வாடிக்கையாக போனால்] அதன் மதிப்பு கெட்டுப் போகும் என்பது கருத்து.

bigthinkpo5.gif164tj2.gif

உயிகள் இழக்கப்படவல்ல, வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவை. கொல்லும் சர்வதேசம் கூறுமா ஓர் பதில். அன்று முத்துக்குமாரன் தெளிவாக இட்டுச்சென்ற அந்த மரணவாக்குமூலம் புரியாதவர்களால் செய்யப்படும் இத்தகைய செயல்களால் மட்டும் சாதிக்கப்படக்கூடியதல்ல, உணர்வுள்ள அனைவரும் திரண்டு, இன்று இலங்கையைப் பொறுத்தமட்டில் ஆகக் க்கூடியது 3கோடி மக்கள் தொகை, தமிழ்நாடு மட்டும் 6கோடி, 2கோடி மக்கள் போராட இந்தியாவின் தென்முனையிலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டாலே அடங்கும் உந்த சிங்களம். தமிழந்தானே தமிழக காவற்துறையிலும் வேலை செய்கின்றான். தமிழன் தானே கைது செய்யவும் உத்தரவிடுகின்றான், அதே தமிழ் இனத்தை. இனியாவது தட்டிக்கேட்போம். இனியும்விட்டால் நாம் தூங்க நிலம்கூட கிடையாதுபோகும்...

உயிராயுதம் என்பது இன்று தமிழனைப்பொறுத்தவரை இம்மியளவாகிவிட்டன, இந்த குறுக்கத்துக்குக் காரணம் சிங்கள அரசின் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புப்போர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.