Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தவர்களுக்கு முக்கிய யோசனை !!!!

Featured Replies

ஸ்ரெயிட் பார்வேர்டாக மேட்டருக்கு வந்துவிடுகிறேன்..

ஏன் தமிழ் ஈழத்தை இந்தியாவுடன் இணைத்துவிடக்கூடாது ? ஒரு இந்திய மாநிலமாக மாறிவிடுங்களேன் ? ஏற்கனவே இருக்கிற மொழிவாரி மாநிலத்தில் ஒன்றாக இணைந்துவிடுங்களேன் ?

இந்தியாவின் அருமை பெருமைகளை பட்டியல் போட்டால் ஒருவேளை நீங்கள் இந்த திசையிலும் யோசிக்கலாம்...

1. அணுகுண்டு வெடித்திருக்கிறோம்..பிரமோஸ், அக்னி என்று பல அணு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறோம்..

2. நிலாவுக்கு ராக்கெட் விட்டுள்ளோம்...மறுபடி ரஷ்யாவின் உதவியுடன் கிரயோஜெனிக் எஞ்சின் பொருத்தி நிலா நிலா ஓடிவா பாடலை நிஜமாக்கியுள்ளோம்...

3. விமானந்தாங்கி கப்பல் வைத்துள்ளோம்...ஐ.என்.எஸ் விக்ராந். சோமாலியா கடற்கொள்ளையர் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய அளவில் கடற்படையும் உள்ளது...

4. பங்களாதேஷ் என்ற நாட்டையே உருவாக்கியுள்ளோம்...பாக்கிஸ்

Edited by செந்தழல் ரவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க ரொம்ப நல்லவர் என்பதை இப்படியெல்லாமா நிரூபிப்பது? :huh:

  • 2 weeks later...

என்னாங்க வெளிக்குப் போவேனுமின்னா ஒரு சொம்பு ஜலத்துக்கு நாமளும் மத்திய கும்பிட வேணுமின்னு சொல்ரிகளா?

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ரொம்ப நல்லவர் என்பதை இப்படியெல்லாமா நிரூபிப்பது?

:):D

ஸ்...ஸ் கடல்நீர் கழுவிற நீராகும் வரைக்கும் கம்முனு இருக்கனு :unsure::unsure:

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் இருக்கும் நாங்கள் .தமிழன் உயிறை காக்க முடியவிள்ளை எனும்போது உன்மையில் இந்தியா தான் எங்கள் தாய் நாடா .இல்லை தமிழ்நாடு தனி நாடா.அங்கே தமிழ் இன ஒழிப்பு, இங்கே தமிழ் இன உணர்வு ஒழிப்பு.

என்ன பிழை செய்தோம் தமிழனாய் பிரந்ததை தவிர.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரெயிட் பார்வேர்டாக மேட்டருக்கு வந்துவிடுகிறேன்..

இந்தியாவின் அருமை பெருமைகளை பட்டியல் போட்டால் ஒருவேளை நீங்கள் இந்த திசையிலும் யோசிக்கலாம்...

போதும் போதும்னு ஏன் அலறல் ?

நானும் ஸ்ரெயிட் பார்வேர்டாக குவார்ட்டருக்கே வந்துவிடுகிறேன்..! :lol:

ஒருமுறையல்ல..மூன்றுமுறை பக்கிஸ்தான் இந்தியாவின் முகத்தில் காரியுமிழ்ந்து, பாராளுமன்றத்திலும் வியாபார மையங்கள், கோயில்களிலும் சும்மா முதுகெலும்பு முறியிற மாதிரி பேயறை கொடுத்தும், ஹி..ஹி..ஹி தாங்கள்தான் "பிராந்திய வாலரசு"ந்னு கனவு காணுதுங்களே கசுமாலங்கள்.. ! இதுவும் சாதனையா? இல்லை, மற்றவர்களுக்கு மட்டும் போதனையா? :lol:

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே தமிழ் இன ஒழிப்பு, இங்கே தமிழ் இன உணர்வு ஒழிப்பு.

என்ன பிழை செய்தோம் தமிழனாய் பிரந்ததை தவிர.

தமிழனென்று சொல்வதில், பிறந்ததில் பிழையென்ன இருக்கிறது..? ஒரு பாரம்பரிய மிக்க இனத்தில் பிறந்ததிற்கு நீங்கள் பெருமைகொள்ளவே வேண்டும். சில அரசியல் காவாலிப் பயல்களின் தன்னலச் செய்கைகளால் இப்போதைக்கு தமிழினம் சிறுமைபடுத்தபட்டுள்ளதே தவிர தமிழ், தமிழினம் என்றும் விலைபோகாது..நிச்சயம் தலைநிமிரும்..இதில் உங்களின் மயக்கம் அர்த்தமற்றது..

Edited by ராஜவன்னியன்

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் அருமை பெருமைகளை பட்டியல் போட்டால் ஒருவேளை நீங்கள் இந்த திசையிலும் யோசிக்கலாம்...

1. அணுகுண்டு வெடித்திருக்கிறோம்..

------------எங்களிடம் ஆள் குண்டே நிறைய இருக்கு!

பிரமோஸ், அக்னி என்று பல அணு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறோம்..

-----------பிரமோஸ் இல்லை அதை விட கோடி படி மேல்- பிரபாகரன் இருக்கிறார் இங்கு, கடனாய் அல்ல சொந்தமாக எமக்கு!

2. நிலாவுக்கு ராக்கெட் விட்டுள்ளோம்...

-----------------சிங்களவனுக்கும் சேர்ந்து நின்று கொட்டம் அடிக்கும் இந்திய ராணுவத்தின் கண்ணிலும் விரலை மன்னிக்கவும் பீரங்கியை விட்டு ஆட்டி உள்ளோம்!

3. விமானந்தாங்கி கப்பல் வைத்துள்ளோம்...

-----கையில் தாருங்கள், கப்பல் தாங்கி விமானமாக அதை கழட்டி பூட்டி காட்டுகிறோம்!

ஐ.என்.எஸ் விக்ராந். சோமாலியா கடற்கொள்ளையர் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய அளவில் கடற்படையும் உள்ளது...

------தளபதி சூசை தலைமையில் கடற்புலிகளை தாங்கள் அறிந்தது இல்லை போல!

6. தமிழகத்து நெய்வேலி நிலக்கரியை சுரண்டி ஆந்திரம், கருநாடகம், கேரளம் என்று எல்லா மாநிலங்களுக்கும் கரண்டு அனுப்புகிறோம்...

--------------அரசாங்கம் மின் தடை செய்தால் ஜெநேறேட்டெர், கார் பட்றி மட்டும் இல்லை துவிச்சக்கர வண்டியை சுழட்டியே மின்சாரம் எடுப்போம்!

7. வெளிநாட்டு படையினர் எங்கள் நாட்டில் பயிற்சி எடுக்கும் அளவுக்கு எஜுகேஷனில் உயர்ந்துள்ளோம்...

----------யாரு சிங்களவனுக்கா? ஹையோ ஹையோ!!

8. குட்டி மாநிலமான காட்ஸ் ஓன் கண்ட்ரி கேரளாவில் இருந்து இந்தியாவையே ஆட்டிப்படைக்கும் பொறுப்புகளில் உள்ள நாராயணன், மேனன், அந்தோனிகளை நியமித்துள்ளோம்..உங்களுக்கும

்அப்படி ஒன்னு கிடைக்காமலா போயிரும் ?

-----------அதை விட திறம் - ஈழம் கிடைக்கும்!!! இருந்து பாருங்கள்..!

12. மக்கள் ஆதரவு இருந்தா புது மாநிலமே உருவாக்குவோம் தெரியுமா?

--- தனி நாடே உருவாக்கி காட்டுவோம்...

13. எங்க நாட்டுல இருக்கிற அம்பானிகளோட சொத்தை கணக்கு போட்டா உலக பணக்காரரை விட அதிகம் தெரியுமா?

----------சிங்கள ஆமி எம்மிடம் பறி கொடுத்த ஆயுதங்களை கணக்கு போட்டால் அம்பானி இல்லை அரசாங்கங்களை விட அதிகம் உண்டு எம்மிடம்!!!

14. 400க்கும் மேல எங்க நாட்டு மீனவர்களை அடுத்த நாட்டு கடற்படை சுட்டு கொன்றபோதும், எதுவும் பேசாம அமைதியா இருக்க காந்தி பொறந்த நாடு..இந்த உதாரணம் போதாதா ? இந்த நாடு எவ்ளோ அமைதி நாடுன்னு ?

---------உங்கள் இழப்பிற்கு எமது உண்மையான அனுதாபங்கள்......

ஈழம் அமைத்தும் அறிவிட்கிறோம்... விரும்பினால் ஈழ்த்தோடு வந்து ஒரு மாநிலமாய் சேர்ந்து கொள்ளுங்கள்....

இந்தியா என்றால் என்ன.... ஈழம் என்றால் என்ன? தமிழ் மக்களுக்கு நல்லது நடந்தா சரிதான்...

போதும் போதும்னு ஏன் அலறல் ?

__________தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்_________

Edited by Ilayapillai

இளையபிள்ளை!

சிறப்பான பதில்கள்....வெளிப்படையான உண்மைகள்.

Edited by பருத்தியன்

செந்தழல் ரவி, ஐடியா சூப்பரப்பு. ஆனால்.. இதை நீங்களே முதலில பாவிச்சு பார்க்கலாமே? நீங்கள் சொன்னதின்படி பார்த்தால்.. சீனாவுடன் இந்தியா இணைந்து கொள்ளலாமே? நீங்கள் பட்டியலில் சொன்னதைவிட பலமடங்காக சீனாவிடம் உள்ளது. அப்படியானால் இந்தியா சீனாவுடன் இணைந்து சீனாவின் ஓர் மாநிலமாக மாறினால் சூப்பராக இருக்குமே?

இல்லாவிட்டால் இப்படியும் செய்யலாம்... அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து அமெரிக்காவின் மாநிலங்களில் ஒன்றாக இந்தியாவின் பகுதிகளையும் பலவாறாக பிரித்து அமெரிக்காவுடன் இணைக்கலாமே?

இல்லாவிட்டால்... பழையபடி பிரித்தானியாவின் ராட்சியத்தின் கீழ் இந்தியா இருக்கலாமே?

ஜெலயலிதா அம்மா சொன்ன ஈழம் இதுதான் போல... இதைவிட சிங்களவனுடன் சேர்ந்து இருந்து அழிந்துபோவது மேல்.

உண்மைதான் கலைஞன்!

கோபம்தான் வருது.

இந்த ஐடியா எல்லாத்தையும் கேட்கிற கேவலத்தை விட செத்துப் போறதே மேல்.

Edited by பருத்தியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பருத்தியன்" அண்ணா - தமிழ்வின் ஆய்வு கட்டுரை பருத்தியன் நீங்கள் தானா?

தங்கள் எழுத்திற்கு நானும் ஒரு விசிறி

அடிக்கடி எழுதுங்கள் ..... அது நீங்களாக இருந்தால்!

:unsure::unsure:

Edited by Ilayapillai

உண்மைதான் கலைஞன்!

கோபம்தான் வருது.

இந்த ஐடியா எல்லாத்தையும் கேட்கிற கேவலத்தை விட செத்துப் போறதே மேல்.

எனக்கு ஒரு சந்தேகம்.... இவர் செந்தமிழ் ரவியோ... அல்லது செந்தமிழ் "றோ" வோ...????

செந்தழல் ரவி எழுதியது நக்ககல் என்று தெரியவில்லையா? அவர் எழுதிய மாதத்தை கவனிக்கவும். அப்போது யாரையோ கிண்டல் பண்ண இவ்வாறு எழுதியிருந்தார். அவரது வலைப்பூவை சென்று வாசித்தால் புரியும். :unsure:

இப்படித்தான் என்ன ஏது என்று தெரியாமலே பலரின் நட்புகளை இழந்திருக்கிறோம். :icon_idea:

உற்றுக் கவனிச்சீங்கள் என்றா அவர் இந்திiயாவை கிண்டல் செய்திருப்பது புரியும். :unsure:

"பருத்தியன்" அண்ணா - தமிழ்வின் ஆய்வு கட்டுரை பருத்தியன் நீங்கள் தானா?

தங்கள் எழுத்திற்கு நானும் ஒரு விசிறி

அடிக்கடி எழுதுங்கள் ..... அது நீங்களாக இருந்தால்!

:unsure::unsure:

ஆமாம் .... அதே பருத்தியன் தான்.

தங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

Edited by பருத்தியன்

செந்தழல் ரவி எழுதியது நக்ககல் என்று தெரியவில்லையா? அவர் எழுதிய மாதத்தை கவனிக்கவும். அப்போது யாரையோ கிண்டல் பண்ண இவ்வாறு எழுதியிருந்தார். அவரது வலைப்பூவை சென்று வாசித்தால் புரியும். :unsure:

இப்படித்தான் என்ன ஏது என்று தெரியாமலே பலரின் நட்புகளை இழந்திருக்கிறோம். :icon_idea:

உற்றுக் கவனிச்சீங்கள் என்றா அவர் இந்திiயாவை கிண்டல் செய்திருப்பது புரியும். :unsure:

நன்றி வசி_சுதா.

தவறுக்கு வருந்துகின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செந்தழல் ரவி எழுதியது நக்ககல் என்று தெரியவில்லையா? அவர் எழுதிய மாதத்தை கவனிக்கவும். அப்போது யாரையோ கிண்டல் பண்ண இவ்வாறு எழுதியிருந்தார். அவரது வலைப்பூவை சென்று வாசித்தால் புரியும். :unsure:

இப்படித்தான் என்ன ஏது என்று தெரியாமலே பலரின் நட்புகளை இழந்திருக்கிறோம். :icon_idea:

உற்றுக் கவனிச்சீங்கள் என்றா அவர் இந்திiயாவை கிண்டல் செய்திருப்பது புரியும். :unsure:

சிலது நக்கல் என்று விளங்குகிறது.... இருப்பினும் சொல்ல வேண்டும் போல் இருந்தது பதில்...சொன்னேன்!

எல்லாம் சரி அக்காச்சீ நட்பை இழந்ததை பற்றி சொல்லேக்கே ஏன் உவளவு இருதயம் பறக்குது உங்கே?!!!

15. கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்துக்கு பலியா இரண்டாயிரம் இஸ்லாமியர்களை போட்டு தள்ளினோம். இதில் இருந்தே தெரியலயா ? இது எவ்ளோ வீரம் சொ(செ)றிந்த நாடு...
நக்கலாகத்தான் தெரிகிறது.

நக்கலோ, நளினமோ... இளையபிள்ளையின் பதிலடியாவும் அதிரடியே!

வசி, இது பகிடிக்குரிய ஓர் விடயமாக எனக்கு தென்படவில்லை. அரசியல் அலசலில் இப்படி ஓர் பதிவை போட்டதை நக்கல் என்று சொல்வது எப்படி என்று விளங்கவில்லை. தவிர, இந்தப்பதிவு எழுதப்பட்டவிதம் நகைச்சுவைக்குரிய ஒன்றாகவும் தெரியவில்லை.

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இளையபிள்ளை அசத்தீட்டிங்க போங்க...!

  • கருத்துக்கள உறவுகள்

இளையபிள்ளை அசத்தீட்டிங்க போங்க...!

ரைகர்ரெல், இளையபிள்ளை எப்பவும் நல்ல கருத்துக்களையே வைப்பார். :(

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் தமிழில் வஞ்சகப் புகழ்ச்சி அணி என்று சொல்வார்கள்.வெளியில் பாரத்தால் புகழுற மாதிரிச் சொல்லிக் கவிழ்த்து விடுவது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.