Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் ஏலத்திற்கு வரும் காந்தியடிகளின் கண்ணாடி, மற்றும் இடுப்புக் கடிகாரம் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்: மகாத்மா காந்தியடிகளின் ஒரு ஜோடி மூக்குக் கண்ணாடி, செருப்புகள், இடுப்பில் தொங்க விட்டிருக்கும் கடிகாரம், தட்டு, கிண்ணம் ஆகியவை லண்டனில் ஏலத்திற்கு வருகின்றன.

மார்ச் 4 - 5 ஆகிய தேதிகளில் இந்த பொருட்கள் ஏலம் விடப்படவுள்ளன. அனைத்தும் சேர்ந்து 30 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றை பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் சேகரித்து ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

தனது கண்ணாடிகளை 1930ம் ஆண்டு ராணுவ கர்னல் திவான் நவாப் என்பவரிடம் கொடுத்துள்ளார் காந்தி. அப்போது, இவைதான் எனது இந்தியாவை சுதந்திர நாடாக்க வேண்டும் என்ற பார்வையை எனக்குக் கொடுத்தவை என்று அப்போது கூறினாராம் காந்தி.

அதேபோல தனது செருப்புகளை இங்கிலாந்து ராணுவ அதிகாரி ஒருவரிடம் 1931ம் ஆண்டு கொடுத்தார் காந்தி. லண்டனில் நடந்த வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றபோது இந்த செருப்புகளை அவர் கொடுத்துள்ளார்.

அதேபோல 1910ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இடுப்பில் கட்டிக் கொள்ளும்படியான பாக்கெட் வாட்ச்சை, தனது உறவினரான அபா காந்தியிடம் வழங்கியிருந்தார் காந்தி. இந்தக் கடிகாரம் ஏலப் பொருட்களில் மிகவும் அதிக விலைக்குப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க்கைச் சேர்ந்த ஆன்டிகோரம் ஆக்ஷனர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மிச்சல் ஹால்பெர்ன் இந்த ஏலத்தை லண்டனில் நடத்தவுள்ளார்.

நன்றி தற்ஸ் தமிழ்

காந்திய கோவணத்தை யாரிட்ட கொடுத்தவராம்?சில புலம் பெயர்ந்த ஈழத்தமிழனிடம், என்று நான் நினைக்கிறன்.

காந்தியின் மீது பற்று இருப்போர் அம்மனிதனின் கருத்துக்களும் கொள்கைகளும் பின்பற்றப்பட என்ன செய்யலாமோ அதைச்செய்தால் போதும்... காலங்கடந்து நிற்க்கப்போவது கைக்குட்டயும் கோவனமும் அல்ல என்பது என் கருத்து...

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியின் மீது பற்று இருப்போர் அம்மனிதனின் கருத்துக்களும் கொள்கைகளும் பின்பற்றப்பட என்ன செய்யலாமோ அதைச்செய்தால் போதும்... காலங்கடந்து நிற்க்கப்போவது கைக்குட்டயும் கோவனமும் அல்ல என்பது என் கருத்து...

உண்மையிலேயே நாம் சில விடயங்களை உணர்ச்சி வயப்பட்ட நிலையிலும், கண்மூடித்தனமான, பக்திமயமான நிலையிலும் பார்ப்பதன் காரணமாகவே உண்மைகளைத் தரிசிக்க முடியாமல் உள்ளது. காந்தியை எப்போ கொன்று, அவரது தோலிலே காலணிகளைச் செய்து போட்டவாறு அலைகின்றது இன்றைய இந்தியாவின் ஆழும் வர்க்கம். அதற்கு காந்தி சொன்ன அமைதியோ, மனிதாபிமானமோ, என்றால் என்னவிலை என்று கேட்கின்றது. காந்திகூட இந்திய விடுதலைக்காக் காணாமற்போகடிக்கப்பட்ட, இன்றுவரை கைதுநிலை உடன்பாடுகொண்ட சுபாஸ்சந்திரபோஸ் அவர்களை மதிக்கவில்லை. இந்தக் காந்தியைக்காட்டியே உலகு போராடும் இனங்கள் மீது மிளகாய் அரைக்கிறது என்பதே, காந்தி தேசம் உட்பட உண்மையாகும்.

காந்தியின் கொள்கையை நல்லூர் வீதியிலும், மாமாங்கத்திலும் என்றோ கொன்றுவிட்டார்கள். காந்தி சொன்ன உண்ணாநிலை என்ற அகிம்சையை இந்திய நடுவணரசு காறி உமிழ்ந்ததன் விளைவே முத்துக்குமாருக்களின் தோற்றமாகும்.

சும்மா நாங்கள் இன்றும் மெய்நிலையுணராது கண்மூடி இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி! எனக்கும் அதே கருத்துத்தான்.

காந்தியின் அகிம்சையையும், உண்ணாவிரதத்தையும் மதித்தது ஆங்கிலேயரே தவிர இந்தியரல்ல! அதுவும் முதல் ஆபிரிக்காவிலும் அவர் அதைச் செய்து வெற்றி பெற்றிருந்தார். அதன்பின் இந்தியாவில் மீன்டும் அவர் அதைச் செய்தபோதும் அவருக்கு எவ்வித ஊறையும் செய்யவில்லை ஆங்கிலேய அரசாங்கம்!

இந்தியாவின் சுதந்திரம்வரை அவரைப் பாதுகாத்துக் கொடுத்தது. ஆனால் இந்தியர்கள் என்ன செய்தார்கள்? சில மாதங்களிலேயே அந்த மகாத்மாவைப் போட்டுத் தள்ளி விட்டார்கள்.

அப்படி மதிக்கும் தன்மை அவர்களுக்கு இருந்திருந்தால் திலீபன், முத்துக்குமார் போன்றவர்களின் தியாகங்களையும் அவர்கள் மதித்திருப்பார்கள், இப்படி மிதித்திருக்க மாட்டார்கள்.

இந்தியா புண்ணிய தேசம் என்பதெல்லாம் அத்வைதம் போன்று வெறும் மாயையே! நான் கடவுள் படத்தில் காட்டியதைப்போல் மூன்று முகத்தைத்தான் மூன்று சிங்கங்களாக தைத்திருக்கிறார்கள். அதி மேல்தட்டு முதலாளிகள், பிச்சைக்காரர்கள், பரதேசிகள்!!!

காந்தியம் பேசும் காந்திநாடு என்று கூறும் இந்தியா இன்று காந்திக்கு என்னத்தை செய்தது? இல்லை காந்தி தான் என்னத்தை செஞ்சார்? பாகிஸ்தான் பிரிக்கும் போது குரல்கள் ஒலித்தன ஆனால் காந்திக்கு முன்னரான வரலாற்றை அழித்து மகிழ்ந்தனர் இந்தியர் என்றால் பெருமைப்படவேண்டுமா? தமிழரின் தொன்மை அழிக்கப்பட்டுவிட்டது என்றுதான் கூறவேணும். தமிழனை தமிழன் ஆள வக்கில்லாமல் போனது இந்தியாவில். 6 கோடி 7 கோடி எண்டுறாங்கள் அதில ஒருத்தன் தலைவனாக வழியில்லை அதில பேச்சு....

சுதந்திரம் பெரும் வரை காந்தியின் கீழ் ஒன்றினைந்த சக்திகள் சுதந்திரத்தின் பின் ஏனோ அவரை கைவிட்டுவிட்டன... இல்லாவிடில் அப்போது நடந்த இந்து முசுலிம் கலவரங்கள் நடந்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்... அவர் போதித்த அகிம்சா வழிகளும் காற்றில் பறந்தன.. காந்தி வரித்துக்கொண்ட தலைவர்... அடிமைத்தளைகளை விட்டு வெளியே வர கிளர்ந்தெழுந்த சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்ட காந்தியின் தலைமை உதவியது... அம்புட்டுத்தான் அவர்...

தமிழனை தமிழன் ஆள வக்கில்லாமல் போனது இந்தியாவில். 6 கோடி 7 கோடி எண்டுறாங்கள் அதில ஒருத்தன் தலைவனாக வழியில்லை அதில பேச்சு....

தமிழனையும் தமிழன் ஆள வக்கில்லை... இந்தியனையும் இந்தியன் ஆள வக்கில்லை... பேருக்குத்தான் பொம்மலாட்ட பிரதமர்... ஆட்டிவைக்கும் அம்மனியின் தனிப்பட்ட வஞ்சம் தான் இன்றைக்கு இத்தனையும் செய்கிறது... தமிழா இன்றாவது உனக்கு உரைக்குமா... கூத்தாடி பின்னாலும் கூ..யா பின்னாலும் இன்னும் எத்தனை நாள்தான் சுத்திக்கொண்டிருக்கப்போகிற

Edited by அன்புசிவம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காந்தி பொருட்களை ரூ 9.3 கோடிக்கு ஏலம் எடுத்தார் விஜய் மல்லையா .

நியூயார்க்: பெரும் பரபரப்பு, திருப்பங்களுக்கு மத்தியில் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை ரூ. 9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா.

மகாத்மா காந்தி பயன்படுத்திய வட்ட மூக்கு கண்ணாடி, பாக்கெட் கடிகாரம், சந்தனத்தால் செய்யப்பட்ட செருப்பு, சாப்பாட்டு தட்டு, குவளை, ரத்த பரிசோதனை அறிக்கை, மாணவர்களுக்கு கையெழுத்திட்டு அவர் அனுப்பிய வாழ்த்து தந்தி போன்ற அவரது நினைவு பொருட்கள் ஜேம்ஸ் ஓடிஸ் என்ற அமெரிக்கர் வசம் இருந்தது.

அவர் காந்தியின் பொருட்களை நியூயார்க்கில் உள்ள ஆன்டிகோரம் என்ற ஏலமையம் மூலம் இன்று ஏலம்விடப் போவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்திய அரசு தலையிட்டு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது ஓடிஸ் இந்திய அரசு பட்ஜெட்டில் ராணுவ செலவுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக, ஏழைகளின் சுகாதார வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது உட்பட சில நிபந்தனைகளை விதித்தார்.

ஆனால், அவரது நிபந்தனைகள் ஏற்க முடியாதவையாக இருந்ததை அடுத்து அது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மன் மோகன் சிங், இந்த ஏலத்தை ரத்து செய்ய முடிந்தவரை முயற்சிக்குமாறு கலாசார துறை அமைச்சர் அம்பிகா சோனிக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து அம்பிகா சோனி கூறுகையில்,

காந்திஜியின் பொருள்களை ஏலத்தில் விடாமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காந்தியின் பொருள்களை விற்பனைக்கு வைப்பது அவரது சிந்தனைக்கு எதிரானது. அப்பொருள்களை ஏலம் விடுவதாக அறிவித்தவர்களுடன் இந்தியா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது.

வேறு வழி இல்லாததால், அந்தப் பொருட்களை மத்திய அரசே ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும். அதற்குப் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கடைசி நிமிடத்தில் மனம் மாறிய ஜேம்ஸ் ஓடில் ஏலத்தை ரத்து செய்தார். ஆனால், இதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஏலத்தில் பங்கேற்க 30 பேர் பெயர் கொடுத்து விட்டனர். சிலர் ஏலத் தொகையையும் தெரிவித்துள்ளனர். எனவே ஏலத்தை ரத்து செய்ய முடியாது என கூறிவிட்டது.

இதையடுத்து ஏலம் நடந்தது. ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் திடீர் திருப்பமாக விஜய் மல்லையாவும் கலந்து கொண்டார்.

ரூ. 9.3 கோடிக்கு அவர் காந்தியடிகளின் பொருட்களை ஏலத்தில் எடுத்தார். இவரது பெயர் ஏலம் எடுக்கவிருப்பவர்களின் பட்டியலில் இல்லையென்றாலும் இவரது சார்பில் டோனி பேடி என்பவர் ஏலம் எடுத்தார்.

காந்தியடிகளின் பொருட்களை நாட்டுக்காக ஏலத்தி்ல எடுத்துள்ளதாக மல்லையா தெரிவித்துள்ளனர்.

ஏலத்தில் மல்லையா காந்தி பொருட்களை எடுத்து விட்டாலும் கூட சட்டப்படியான நடவடிக்கைகளுக்காக இன்னும் 2 வாரங்களுக்கு ஆன்டிகோரம் நிறுவனத்திடமே ஏலத்தில் எடுக்கப்பட்ட பொருட்கள் இருக்கும்.

இதற்குக் காரணம், காந்தி பொருட்களை ஏலம் விடக் கூடாது என்று தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமெரிக்க சட்டத்துறைக்கு இந்திய அரசு அனுப்பி வைத்து ஏலத்தை நிறுத்துமாறு கோரியிருந்தது.

இதையடுத்து ஏல நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட அமெரிக்க சட்டத்துறை, ஏலத்தை நடத்தலாம். ஆனால் அதை வாங்கியவர்களிடம், மறு உத்தரவு வரும் வரை பொருட்களை தரக் கூடாது என அறிவுறுத்தியிருந்தது.

இந்தியா தற்போது என்ன சொல்கிறதோ அதற்கேற்ப, ஆன்டிகோரம் நிறுவனத்திற்கு அமெரிக்க சட்டத்துறை உத்தரவு பிறப்பிக்கும். அதன் பிறகே மல்லையா கைக்கு ஏலப் பொருட்கள் வந்து சேரும்.

நன்றி தற்ஸ் தமிழ் .

இவற்றை மல்லையா ஏலத்திலெடுத்து மத்திய அரசிடம் கொடுப்பது நல்லவிடயம். ஆனனால் எந்த காலலகட்டத்திலும் மத்திய அரசு இவற்றை விற்கவோ அல்லது ஏலம் விடவோ கூடாது என்ற அறிவுறுத்தலை எழுத்து பூர்வமாக மத்திய அரசிடம் மல்லையா அவர்கள் வாங்குவது அவசியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜய் மல்லையாவின் காந்தி மீதான பக்திதான் என்னே? காந்தியின் பொருட்களில் காட்டும் அபிமானத்தை இந்த கள்ளுக்காய்ச்சுபவர் அவரது கொள்கைகளில் செலுத்துவதாகத் தெரியவில்லை. மது ஒழிப்பை வலியுறுத்தியவர் காந்தி. மல்லையாவோ இந்தியாவின் மிகப்பெரிய Kingfisher Beer உற்பத்தி நிறுவனமான United Breweries இன் சொந்தக்காரர்.

Edited by MI7

  • கருத்துக்கள உறவுகள்

ஏலம் போனது அமெரிக்காவிலையெண்டு கேள்விப்பட்டன் ஆனால் இதிலை லண்டன் என்று இருக்கு காந்தி பொருட்களை நாடு நாடாய் ஏலம் போடுறாங்களா???? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி கொள்கையே இந்தியா ஏலம் விடுகிறது......காந்தியின் சாமான்களை அமேரிக்கா ஏலம் விட்டா என்ன பிரித்தானியா ஏலம் விட்டா என்ன

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்பு தெரியாதவர்கள்

மகாத்மா காந்தியை நினைக்க வேண்டியவர்கள் மறந்து கொண்டிருக்கிறார்கள். நினைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லாதவர்கள் காந்தியை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால், இதை இந்திய அரசியலின் நகைமுரண் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது!

காந்தியின் உடைமைகள் ஒரு மூக்குக் கண்ணாடி, இரண்டு பாத்திரங்கள், காலணி ஆகியவற்றை ரூ.9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார் மதுபான உற்பத்தி உட்பட பல்வேறு பெருந்தொழில்களை நடத்தி வரும் விஜய் மல்லையா. ஏலம் முடிந்த பிறகுதான், இந்தப் பொருள்களை வாங்கியவர் இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா என்பதே தெரியவந்தது.

விஜய் மல்லையா இந்திய மக்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்குரியவர். காந்தியின் கொள்கைக்கு மாறுபட்ட தொழில் செய்பவர் என்றாலும், காந்தியின் கொள்கையை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்க்கு இல்லாத ஆர்வமும், இந்திய உணர்வும் அவருக்கு இருந்தது என்பதால் அவர் இந்தப் பாராட்டுக்கு முழுத் தகுதியுடையவர்.

"இந்திய அரசு சார்பில் யாரும் என்னிடம் பேசவில்லை. இது முழுக்க முழுக்க எனது சொந்த முடிவு' என்று குறிப்பிட்டுள்ள விஜய் மல்லையா, இரண்டாவது முறையாக இந்திய மானம் ஏலம் போவதைத் தடுத்துள்ளார்.

முன்பு, 2005 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானின் வீரவாள் உட்பட 30 பொருட்களை சோத்பே ஏல நிறுவனம் ஏலத்திற்குக் கொண்டு வந்தபோது ரூ.8 கோடிக்கு அந்தப் பொருட்களை வாங்கி, பெங்களூர் கொண்டுவந்து சேர்த்த பெருமை விஜய் மல்லையாவுக்கு உண்டு. திப்பு சுல்தானின் வீரவாளை பெங்களூருக்குக் கொண்டு வந்து சேர்த்ததற்காக அவருக்கு பெங்களூரில் மிகப்பெரிய விழாவும் எடுக்கப்பட்டது. அதேபோன்று, காந்தி நினைவுப் பொருட்களை ஏலத்தில் எடுத்து இந்திய மானத்தைக் காப்பாற்றியதற்காக இன்னொரு விழா நடத்தப்படலாம்.

காந்தியின் பொருட்கள் ஏலம் விடப்பட்ட இந்தச் சம்பவத்தில் இந்திய அரசும், காந்தியின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சியும் நடந்து கொண்ட விதம் வெட்கக்கேடானது. காந்தியின் உடைமைகளை ஏலத்தில் எடுப்போம் என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி வீரவசனம் பேசினாலும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மூலமாக ஓடிஸுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்களே தவிர, அதையும் முறைப்படி செய்து, பொருட்களை மீட்பதில் தீவிரம் காட்டவில்லை.

"இராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியில் ஒரு பகுதியை ஏழைகளின் உடல் நலத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று ஓடிஸ் கோரிக்கை வைத்ததாகவும் அதை அரசு நிராகரித்துவிட்டதாகவும், செய்திகள் வந்ததே தவிர, அரசு தரப்பில் என்ன பேசப்பட்டது என்ற விவரங்கள் ஏதும் வெளிவரவில்லை.

இந்தப் பொருட்கள் எப்படி ஓடீஸ் கைக்கு சென்றது, அல்லது இந்த உடைமைகள் நவஜீவன் அறக்கட்டளைக்குத்தான் சொந்தம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சமான விவகாரங்கள். இது மிகக் குறுகிய காலத்தில் தீராத பிரச்சினை. ஏலத்தைத் தடுக்க முடியாத நிலையில் இந்திய அரசே அப்பொருள்களை மீட்க ஏலத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். ஒருவேளை, இந்திய அரசு ஆர்வம் காட்டுவது ஏலத்தொகை உயரக் காரணமாகும் என்று கருதியிருந்தால், வேறு ஆட்கள் மூலம் ஏலம் எடுத்து, பின்னர் உலகம் அறிய தெரிவித்திருக்கலாம். ஆனால் எந்த முயற்சியையும் அரசு மேற்கொள்ளவில்லை.

இந்திய அரசுதான் இப்படியென்றால், காந்தியின் பெயரை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியும் எந்த விதமான முயற்சியையும் செய்யவில்லை. ஒருவேளை, நேருவின் நினைவுப் பொருட்கள் லண்டனில் ஏலம் விடப்பட்டால் அதற்காக வேண்டுமானால் அதுவும் சோனியா காந்தியின் கவனத்தைப் பெற்று ஆதாயம் பெறுவதற்காக ஏலத்தில் இறங்கி, காங்கிரஸ் கோஷ்டியினரே விலையை உயர்த்தி, பொருளை வாங்கி வந்து சேர்த்திருப்பார்களோ என்னவோ! அல்லது காந்தியின் கண்ணாடிக்கு குஜராத்தில் ஒரு லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்றாலோ அல்லது தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்றாலோகூட, ஏலத்தில் இறங்கியிருக்கக்கூடும்.

ரஷ்ய நாவலாசிரியர் லியோ தால்ஸ்தஸ்தோய் எழுதிய "போரும் வாழ்வும்' நாவல் இடம்பெறும் முக்கிய நாயகர்களில் ஒருவர் இளவரசர் ரஸ்தோவ். தந்தையின் மரணத்திற்குப் பின் பெருங்கடன் சுமையால் வறிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், அவரது சுற்றத்தார் அறிவுரை சொல்கிறார்கள்:"என் தந்தைக்கு மகன் என்ற உறவை நான் முறித்துக்கொள்கிறேன் என்ற ஒரு அறிவிப்பு போதும், தந்தையின் கடன்கள் உங்களைக் கட்டுப்படுத்தாது' என்று. ஆனால், "உயிரோடு இருக்கும்வரை செய்யமாட்டேன்' என்று சொல்லி அந்தக் கடன் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் இளவரசர் ரஸ்தோவ். மானம் உள்ளவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க மாட்டார்கள்.

தேசத்தை மதிக்கத் தெரிந்தவர்கள்தானே தேசத் தந்தையையும் மதிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள்!

தினமணி ஆசிரியர் தலையங்கம்: 10.03.2009

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.