Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுக்கு வழிகள்

Featured Replies

தகவலுக்கு நன்றி தேவகுரு.

தொடர்ந்து எழுதுங்கள்.

  • Replies 358
  • Views 138.2k
  • Created
  • Last Reply

இன்றுதான் உங்கள் எல்லா குருக்குவழிகளையும் வாசித்தேன் மிகவும் பயனுள்ள தகவல்கள்:.. நன்றி தேவகுரு மேலும் தொடர்ந்து எழுதுங்கள்

எம் எஸ் என் இல் தமிழ் எழுத்துக்களில் சாட் செய்வது எப்படி இலகுவான வழி சொல்லுங்களேன் தமிங்கிலத்தால் நிறைய சண்டைதான் வருகிறது யாரவது உதவி செய்யுங்கள்

எம் எஸ் என் இல் தமிழ் எழுத்துக்களில் சாட் செய்வது எப்படி இலகுவான வழி சொல்லுங்களேன் தமிங்கிலத்தால் நிறைய சண்டைதான் வருகிறது யாரவது உதவி செய்யுங்கள்

இருவரிடமும் ஒரே எழுத்துரு இருந்தால் அதனைப் பாவிக்கலாம், அல்லது கீழே உள்ளதை நிறுவினீர்கள் என்றால் யுனிகோட்டில் ரைப்பண்ணலாம்.

http://www.suratha.com/vanni.zip

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 100

யுனிகோட் தமிழிலில் தட்டச்சு செய்வது எப்படி?

எம்மில் பலரைப்போல் ஆங்கிலத்தில் மாத்திரம் தட்டச்சு பயிற்சி பெற்றவன் நான். இப்போது "குறுக்குவழிகள்" ஐ தமிழில் எழுத வேண்டி ஏற்பட்டதால் ஆங்கில விசைப்பலகை மூலம் யூனிக்கோட் தமிழை விண்டோஸ் செயலிகளான word, Excel, IE மற்றும் yahoo ஆகியவற்றில் உள்ளீடு செய்கின்றேன். Msn ஐ நான் பாவிப்பதில்லை. ஆனால் இம்முறை அதற்கும் கண்டிப்பாக பொருந்தும்.

எழில்நிலா தளத்தில் மென்பொருள் என்ற பக்கத்தில் எ-கலப்பை (Keyman.exe) என்றொரு மென்பொருளை இறக்கி உங்கள் கம்பியூட்டரில் பொருத்திக்கொள்ளுங்கள்.(ttp://www.ezilnila.com/software.htm)

TSCu Paranar. aAvaragal, TheniUni என்ற மூன்று எழுத்துருக்களைல்யும் இது கூடவே கொண்டுவந்து உங்கள் Font பைலில் போடும். இதுமட்டும்தான் நீங்கள் செய்யவேண்டிய ஆயத்தவேலை.

நீங்கள் தமிழில் தட்டும்போது இடையில் ஒரு ஆங்கில சொல்லை போடவேண்டுமெனில் அதற்குவேண்டிய வசதியும் இதில் உண்டு. இப்போது செயற்பாட்டை பார்ப்போம்.

Word ஐ லோட்பண்ணுங்கள். அடுத்து start--> Programs--> keyman.exe கிளிக்பண்ணியவுடன் இவ்மென்பொருள் இயங்கி Task Bar ன் வலது மூலையில் K என்ற எழுத்துக்கொண்ட ஐக்கொன் ஐ காண்பிக்கும். ALT+3 கீக்களை தட்டியவுடன் K என்ற எழுத்து அ என்று மாற்றம்பெறும். அடுத்து மேலே Formating Tool Bar ல் TSCu Paranar என்ற எழுத்துருவை கிளிக்பண்ணி காட்சிக்கு விடவும். இப்போது ஆங்கிலத்தில் தட்டத்தட்ட தமிழ் திரையில் தெருயும். இடையில் ஆங்கிலத்தில் சொற்கள் வரவேண்டுமெனில் AIL+1 கீக்களை தட்டிவிட்டு தொடருங்கள் ஆங்கில வார்த்தை திரையில் தெருயும். இம்முறையில் Word ல் தட்டிய text ஐ கொப்பிபண்ணி Yarl.com தளத்தின் கருத்துக்களதில் "உங்கள் பதில்" பட்டனை கிளிக்பண்ண வரும் மேல்பெட்டியில் பிரதி பண்ணி posting செய்யலாம். எந்த ஆங்கில கீயை தட்ட எந்த தமிழ் சொல் திரையில் தெரியும் என்பதை இந்த லிங்கிற்கு போய் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். (http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm)

யாஹூவிலும் இதேபோன்றுதான். ஆனால் சின்னொரு மாற்றம். IE--> Yahoo-->Compose. கம்போஸ் பெட்டி வந்தவுடன், Start --> Programs -->keyman.exe, ALT+3, இப்போது அ என்ற எழுதுகொண்ட ஐக்கொன் டாஸ்க் பாரின் வலது பக்க மூலையில் தெரியும். அடுத்து View-->Encoding--> Unicode (UTF-8) என்பவற்றை கிளிக்பண்ணிவிட்டு ரைப்பிங் செய்தால் தமிழ் வரும்.

இன்ரர்நெட் ஐ அடிப்படையாக கொண்டு இயங்கும் யாஹூ, எம்.எஸ்.என், மெசெஞ்ஞர் எல்லாவற்றிலும் இதே முறையை பின்பற்றி தமிழில் தட்டலாம்

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 101

Prefetch போல்டரை இடைக்கிடை சுத்தம் செய்ய வேண்டுமா?

Xp யில் Windows போல்டரினுள் உள்ள Prefetch போல்டரை Disk clean-up செய்கையில் சுத்தம் செய்யவேண்டும் என்றுதான் இதுவரை எண்ணியிருந்தேன். ஆனால் தகுந்த ஆதாரங்களுடன் ஒரு கட்டுரை படித்தபின் ஒருகாலும் சுத்தம் செய்யவே கூடாது என எண்ணத்தை மாற்றிக்கொண்டுள்ளேன். (அக்கட்டுரையை எழுதியவர் Microsoft க்காக வேலை செய்யும் ஒருவர்தான்.) அப்படி சுத்தம் செய்தாலும் Windows மீண்டும் அவைகளை உண்டாக்கிக்கொள்ளும். அத்தோடு ஒப்பீட்டளவிலும் தேவைக்கு அதிகமாக ஹாட்டிஸ்க்கில் அதிக இடத்தை பிடித்துக்கொள்ளாது. கம்பியூட்டரின் செயற்திறனை அதிகரிக்கவேண்டிய நோக்கோடு மெமறியில் ஏற்றம் பெற கோப்புக்களை அதிக பட்சம் 128 எண்ணிக்கையை மாத்திரம் Prefetch தன்னகத்தே அடக்கிகொள்ளும். இந்த 128 ல் புதியன வரவர பாவிக்கப்படாத பழையன கழிந்து போகிறது. இந்த பையில் களில் காணப்படுவது பக்கங்களின் (Index) பட்டியல் தவிர பக்கங்களின் பிரதிகளல்ல என கூறப்படுகிறது.புதிதாக வரவுள்ள அடுத்த Windows பதிப்பில் Super Prefetch என மாற்றம்பெறுவதுடன் திறனும் அதிகரித்து காணப்படுமாம்.

1. மீண்டும் உண்டாக்கப்படுகிறது.

2. ஹாட்டிஸ்க்கின் அதிக இடத்தை பிடிக்கவில்லை.

3. பழையனவற்றை கழிக்கிறது.

4. நாமாக Prefetch ஐ சுத்தம் செய்தவுடன் வேகம் தற்காலிகமாக குறைகிறது.

எனவே நாம் ஏன் அதை சுத்தம் செய்யவேண்டும்?. முக்கியமான போல்டர் இன்றேல் அதை ஏன் உண்டாக்கியிருக்கவேண்டும். முக்கியமான Windows போல்டரினுள் கொண்டுவந்து வைக்கவேண்டும். வெட்டவேட்ட தழைக்கும்படி ஏன் செய்தார் Bill Gates?

சுத்தம்செய்து சில தினங்கள் வரை வேகம் குறைந்து, பின் அந்த போல்டரினுள் மீண்டும் பைல்கள் உண்டாக்கப்பட்டவுடன் வேகம் இயல்பு நிலையை அடைகின்றன. எனவே சுத்தம் செய்வது எதிர் விளைவையே உண்டாக்குகிறது.

மேலதிக தகவல்களுக்கு இந்த லிங்ஐ கிளிக்பண்ணி அந்த ஆங்கில கட்டுரையை படிக்கவும்.

http://www.edbott.com/weblog/?p=743#comments

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் -102

Proxy Server என்றால் என்ன?

இணையத்தில் தட்டுப்படும் சொல் இது. ஈ-மெயில், உலாவி, இவைகளில் ஏதாவது settings செய்யும்போது உங்கள் proxy sever ன் விலாசம் என்ன என்று கேட்கப்படலாம்.

Proxy Server என்பது உலாவிக்கும் வெப்தளங்களை காட்சிக்கு வைத்திருக்கும் Web Server க்கும் நடுவிலுள்ள இடைமுகப்பாகும். அல்லது இடையில் நின்று உங்களுக்கு உதவும் சேவையாகும்.அல்லது ஒரு தரகர் என்று கூட சொல்லலாம். இந்த Proxy server உங்கள் கம்பியூட்டர்

அமைந்துள்ள Local Nerwork இனுள் காணப்படும்.

உலாவி இணையத்தில் ஒரு பக்கத்தை தேடும்போது Proxy server தலையிட்டு உதவமுன்வரும்: தனது சேமிப்பு கிடங்கில் அந்த பக்கம் கிடக்கா என பார்க்கும், கிடந்தால் அங்கிருந்து எடுத்து அனுப்பும். இன்றேல் இணையத்தில் தேடி உரிய Web Server இலிருந்து எடுத்து அனுப்பிவைக்கும்.

X,Y என்ற இரு இந்திய நபர்களுக்கு கனடாவிலுள்ள Web Server ரில் உள்ள ஒரே வெப்பக்கம் தேவைப்படுகிறது. முதலில் X தனது உலாவி மூலம் தேடுகிறார். Proxy Server தலையிட்டு தன்னிடம் தேடி இல்லையென கண்டவுடன் கனடாவிலுள்ள வெப்சர்வரிடமிருந்து பெற்று உலாவி உள்ள

கம்பியூட்டருக்கு அனுப்பி வைக்கிறது. அப்போது பிரதி ஒன்றை தன்னிடம் வைத்துக்கொள்கிறது. பின் Y என்பவர் அதே பக்கத்தை தேடும்போது Proxy Server தன்னிடமுள்ள பிரதியில் இன்னொரு கொப்பியை Y என்பவரின் கணணிக்கு அனுப்பிவைக்கிறது.

Proxy Serverகள் இணையத்தின் போக்குவரத்து நெருக்கடிகளை தளர்த்தி திறனையும் வேகத்தையும் அதிகரிக்க உதவுகிறது. வேண்டப்படாத

போக்குவரத்துகளை தடுக்கிறது. இணைய சேவை வழங்குனர்க்கு ஒரு Switch Board போலவும் இயங்குகிறது, உங்களுக்கு தேவை ஏற்படும்போது இதன் விலாசத்தை இணைய சேவை வழங்குனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இது பெரும்பாலும் இன்னொரு IP Address ஆக இருக்கும். .

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் -102

Proxy Server என்றால் என்ன?

இணையத்தில் தட்டுப்படும் சொல் இது. ஈ-மெயில், உலாவி, இவைகளில் ஏதாவது settings செய்யும்போது உங்கள் proxy sever ன் விலாசம் என்ன என்று கேட்கப்படலாம்.

Proxy Server என்பது உலாவிக்கும் வெப்தளங்களை காட்சிக்கு வைத்திருக்கும் Web Server க்கும் நடுவிலுள்ள இடைமுகப்பாகும். அல்லது இடையில் நின்று உங்களுக்கு உதவும் சேவையாகும்.அல்லது ஒரு தரகர் என்று கூட சொல்லலாம். இந்த Proxy server உங்கள் கம்பியூட்டர் அமைந்துள்ள Local Nerwork இனுள் காணப்படும்.

உலாவி இணையத்தில் ஒரு பக்கத்தை தேடும்போது Proxy server தலையிட்டு உதவமுன்வரும்: தனது சேமிப்பு கிடங்கில் அந்த பக்கம் கிடக்கா என பார்க்கும், கிடந்தால் அங்கிருந்து எடுத்து அனுப்பும். இன்றேல் இணையத்தில் தேடி உரிய Web Server இலிருந்து எடுத்து அனுப்பிவைக்கும்.

X,Y என்ற இரு இந்திய நபர்களுக்கு கனடாவிலுள்ள Web Server ரில் உள்ள ஒரே வெப்பக்கம் தேவைப்படுகிறது. முதலில் X தனது உலாவி மூலம் தேடுகிறார். Proxy Server தலையிட்டு தன்னிடம் தேடி இல்லையென கண்டவுடன் கனடாவிலுள்ள வெப்சர்வரிடமிருந்து பெற்று உலாவி உள்ள

கம்பியூட்டருக்கு அனுப்பி வைக்கிறது. அப்போது பிரதி ஒன்றை தன்னிடம் வைத்துக்கொள்கிறது. பின் Y என்பவர் அதே பக்கத்தை தேடும்போது Proxy Server தன்னிடமுள்ள பிரதியில் இன்னொரு கொப்பியை Y என்பவரின் கணணிக்கு அனுப்பிவைக்கிறது.

Proxy Serverகள் இணையத்தின் போக்குவரத்து நெருக்கடிகளை தளர்த்தி திறனையும் வேகத்தையும் அதிகரிக்க உதவுகிறது. வேண்டப்படாத போக்குவரத்துகளை தடுக்கிறது. இணைய சேவை வழங்குனர்க்கு ஒரு Switch Board போலவும் இயங்குகிறது, உங்களுக்கு தேவை ஏற்படும்போது இதன் விலாசத்தை இணைய சேவை வழங்குனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இது பெரும்பாலும் இன்னொரு IP Address ஆக இருக்கும். .

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் -103

iso file என்றால் என்ன?

International organisation for standards என்னும் தர கட்டுப்பாட்டு சபையால் CD அல்லது DVD யில் எப்படி பையில்களை பதிவது என்பது பற்றி நிர்ணயிக்கப்பட்ட தரமுறையாகும் இந்த "ISO 9660 Disk image".

ஒபரேட்டிங் சிஸ்டம்களான Windows, Mac, Unix ஆகியவைகளினால் ஏற்று செயற்படக்கூடியவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ISO file கள் என்பது, சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு CD யின் digital photo என கூறலாம். ஏதாவது ஒரு CD யை நாம் இரண்டு வழிகளில் விலைக்கு வாங்கலாம். கடையில் அல்லது பார்சலில் முழு சீடி ஆக பெற்றுக்கொள்ளலாம். இரண்டாவது: credit card மூலம் பணம் செலுத்தி விற்பனையாளரிடமிருந்து தரவிறக்கம் செய்து சீடி இல் burn செய்து கொள்வது. அவர் எமக்கு நாம் விலைக்கு வாங்கிய அந்த மென்பொருளை ISO ஆகவே அனுப்பிவைப்பார்.

Windows 98 startup disk பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைக்கொண்டு ஒரு கம்பியூட்டரை boot செய்யலாம். ஆனால் அதில் உள்ள 24 files களையும் ஹாட் டிஸ்க்கில் கொப்பிபண்ணிவிட்டு மீண்டும் அந்த 24 ஐயும் ஒரு புதிய floppy யில் கொப்பி பண்ணி அந்த புதிய floppy யைக்கொண்டு கம்பியூட்டரை boot பண்ணமுடியாது. காரணம நாம் ஹாட்டிஸ்க்கிற்கு கொப்பி பண்ணும்போது floppy யில் உள்ள Master Boot Record மற்றும் Partition Table கொப்பிபண்ணப்படாமல் data file ஆகவே கொப்பிபண்ணப்படுகிறது. ஆனால copy disk கட்டளை கொண்டு (My computer-->R.Click A:--> Coy Disk) ஒரு புதிய floppy யில் கொப்பி பண்ணினால், அந்த புதிய floppy bootable ஆகிறது. காரணம் அதில் MBR, Partion table, Datas உட்பட முழு floppy யும் பிரதி பண்ணப்படுகிறது.

Data files களை நாங்கள் ISO மாற்றலாம். WinIso, UltraIso, IsoBuster, Nero ஆகிய மென்பொருள்களைக்கொண்டு இவற்றைச்செய்யலாம். இந்த மென்பொருட்களை நாம் பணம் கொடுத்து வாங்கவேண்டும். IsoBuster Basic இலவசமாக கிடைக்கிறது. Nero Express இலும் ஓரளவு செய்யலாம். nLite என்ற மென்பொருளின் Demo Version ஐ இறக்கம் செய்தும் பாவிக்கலாம். nLite Sipstreaming செய்வதற்கும் உகந்தது. Winsows 98 startup disk இல் உள்ள 24 files களையும் 25 ஆவதாக Norton Ghost ஐயும் சேர்த்து Nero Express மூலம் நான் ஒரு Bootable CD burn பண்ணியுள்ளேன். Nero Burning Rom அல்லது Express, ISO filem களை உருவாக்கும்போது ISO என்ற extension ஐ கொடுக்காமல் nrg என்று கொடுக்கும். ஒரிரு மென்பொருட்கள் img என்ற extension ஐ கொடுக்கும்.

IsoBuster பற்றி அறியவும் டவுண்லோட் பண்ணவும் கீழ் காணும் லிங்கை கிளிக்பண்ணவும்

http://www.smart-projects.net/isobuster/

http://www.magiciso.com/tutorials/miso-whatiso.htm

உங்களின் குறுக்கு வழிகள் தொடர் மிக பயன்மிக்கதாயுள்ளது. உங்களுக்கு எனது நன்றிகள்.

நண்றி தேவகுரு அண்ணா..! உங்களின் வாசகன் நான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nero Burning Rom அல்லது Express, ISO filem களை உருவாக்கும்போது ISO என்ற extension ஐ கொடுக்காமல் nrg என்று கொடுக்கும். ஒரிரு மென்பொருட்கள் img என்ற extension ஐ கொடுக்கும்.

Nero வில் ISO வகை கோப்புக்களையும் உருவாக்கலாம்.

nero2ke.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தேவகுரு அண்ணா. தளராமல் தொடர்ந்து தகவல்களைத் தரும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 104

What is Hiberfil.sys file?

Hibernation என்பது, பனி பெய்யும் மேலை நாடுகளில் ஒரு மிருகம் அதிக குளிர் காரணமாகவும் உணவு கிடைக்காததின் காரணமாகவும் சக்தியை சேமித்து உயிர் வாழும்பொருட்டு சில மாதங்களுக்கு நிலத்தின் கீழ் புற்றெடுத்து ஆழ்ந்த உறக்கம்போன்ற நிலையில் கிடந்து, குளிர் முடிய வெளியே வருவதாகும். இதே யுக்தியை கம்பியூட்டரிலும் கையாளும்போது எழுதப்படும் கோப்புத்தான் Hiberfil.sys file என்பது

கம்பியூட்டரின் முன் ஆளில்லாதபோது நாம் ஏற்கனவே set பண்ணியபடி குறிப்பிட்ட சில நிமிடங்களில் கம்பியூட்டர் Hibernation mode க்கு போகும். அப்போது நினைவகத்தில் உள்ளவற்றை ஹார்ட் டிஸ்க்கில் எழுதிவைக்கும். இந்த எழுதிவைக்கப்பட்டதைதான் Hiberfil.sys file என்கிறோம். பின்பு உரியவர் வந்து கம்பியூட்டரில் கைவைக்கும்போது கம்பியூட்டர் உயிர் பெற்று Hiberfil file லில் உள்ளதை நினைவகத்திற்கு ஏற்றிகொள்ளும். அதன் பின் இந்த file தேவையற்ற ஒன்று தான். Laptop கம்பியூட்டர்களில் மின்சார இணைப்பு இல்லாதபோது மின்கலம் பாவிக்கையில் இந்த Hibernation mode மிகவும் பிரயோசனமானது. மற்றும்படியும் சிலர் காலையில் கம்பியூட்டரை on செய்தால் இரவு படுக்கைக்கு போகும்போதுதான் off பண்ணுவார்கள். பகலில் சில மணிநேரங்கள் கம்பியூட்டரின் முன் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு இந்த setting பிரயோசனமானது.

எனவே Defragmentation செய்யும் முன்பதாக இந்த file களை நாம் ஹார்ட்டிஸ்க்கில் இருந்து அழிக்கவேண்டும். எப்படி?

Control Panel ஐ திறக்கவும்

Power Options Icon ஐ இரட்டை கிளிக்செய்யவும்.

Hibernate Tab ஐ கிளிக் செய்யவும்

Enable Hibernation என்பதன் முன் உள்ள Tick ஐ எடுத்து விடவும்.

Tick எடுபட்டவுடன் விண்டோஸ் XP தானகவே இந்த Hiberfil ஐ அழித்துவிடும். பின்பு நீங்கள் Degragmentation செய்யலாம். செய்து முடிந்தவுடன் மீண்டும் Tick ஐ போட்டுவிடலாம்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 105

Bulk Rename Utility

இந்த மென்பொருள் டிஜிட்டல் கமெரா வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பிரயோசனமானது.பல நூறு பையில்களின் பெயர்களை ஒரேயடியாக பெயர் மாற்றம் செய்வதற்கு உதவும் இலவச மென்பொருள் இது.

கமெராவிலிருந்து படங்களை கணணிக்கு மாற்றும்பொழுது படங்களின் கீழ் பெயர்கள் ஒரே மாதிரியாக காணப்படும் (சில இலக்கங்களை தவிர). இது விரும்பத்தகாத ஒன்று. சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது)

இப்படியான நேரங்களில் எமக்கு உதவுவது மேற்கூறப்பட்ட மென்பொருளாகும்.

பெயர்களின் முன்பகுதியில், பின்பகுதியில் அல்லது இடையில் ஓரிரு எழுத்துக்களை நீக்கவோ, சேர்க்கவோ மாற்றவோ அல்லது பெயரோடு இலக்கங்களை வரிசைக்கிரகமாக சேர்க்கவோ இதனால் முடியும். இலங்களை 1 இலிருந்தல்லாமல் வேறொரு இலக்கத்திலிருந்தும் ஆரம்பிக்க முடியும். இப்படி பல வழிகளில் பெயர் மாற்றம் செய்ய இந்த மென்பொருள் உதவி செய்யும்.

இந்த மென்பொருளை இயக்க தோன்றும் ஒரே பெட்டியில் எல்லா வேலைகளையும் செய்து கொள்ளலாம். பார்க்க ஒரு பத்திரம் போல தோன்றும். தேவையில்லாதவற்றை நிரப்ப வேண்டியதில்லை. Preview உண்டு. பெயர் மாற்றம் செய்யவேண்டியதை நிரப்பி Rename பட்டனை கிளிக் பண்ணமுன்பாக preview வை பார்த்து திருத்தம் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளை நான் பாவிக்கின்றேன்.

http://www.bulkrenameutility.co.uk/Main_Intro.php

நண்றி தேவகுரு அண்ணா..!

ரொம்ப..பயனுள்ள தகவல்கள் தேவகுரு அண்ணா..கொஞ்ச நாட்களாகவே வாசித்து வருகின்றேன்..கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து முடித்து விடுவேன் என்று நினைக்கின்றேன்..ஆனாலும் முயற்சி விடாமல் தொடரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தேவகுரு ஜயா மிக பயனுள்ள தகவல்

உங்களுடைய சேவையை மேலும் தொடர என் வாழ்த்துக்கள் தேவகுரு அண்ணா.......

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 106

Hiren's BootCD 7.7

நூற்றுக்கு மேற்பட்ட இலவச மென்பொருட்களை (Tools) ஒன்று திரட்டி, அவைகளை வகைப்படுத்தி, ISO Format ஆக்கி டவுண்லோட் பண்ணி Bootable CD தயாரிக்கக்கூடியதாக இணையத்தில் கிடைக்கிறது Hiren's BootCD 7.7 இவ்வேலையை குஜராத்தை சேர்ந்த ஒருவர் தான் செய்கிறார் என எண்ணுகின்றேன்.

PC மெக்கானிசம் தெரிந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். தெரியாதவர்களுக்கு பழகிக்கொள்வதற்கு ஒது சந்தர்ப்பம். கம்பியூட்டர் Boot பண்ணாது தொல்லை கொடுக்கும்போது, இந்த சீடியில் பூட் பண்ணி கம்பியூட்டரை repair செய்து கொள்ளலாம்; Master boot record ஐ கொப்பி பண்ணலாம்: பாஸ்வேட் மறந்து போனவிடத்து reset பண்ணலாம்: ஹாட் டிஸ்க்கை பிரதி எடுக்கலாம். Partition ஐ resize பண்ணலாம்; Formatting செய்யலாம்; System Information முழுவதையும் ஒரேயடியாக பார்க்கலாம்; Ram testing செய்யலாம். டிஸ்க்கை பிரதி பண்ணலாம்; பொதுவாக எல்லாமே செய்து கொள்ளலாம். இந்த Tools களில் 75% மானவை Dos mode இல் இயங்குபவை. அதாவது Hard disk இலிருந்து பூட் பண்ணாமல் இந்த் சீடியிலிருந்து பூட் பண்ணி பின் இந்த Tools களை இயக்கவேண்டும்.

சில Tools கள் Windows இல் வேலை செய்பவை. XP அல்லது Win2000 வேலை செய்து கொண்டிருக்கும்போது இயங்குபவை. Hiren's Cd ஐ அதன் டிரைவிலிட்டு CD ஐ திறந்து Windows என்னும் போல்டரினுள் உள்ள EXE file களை கிளிக்பண்ணுவதன் மூலம் இயக்கலாம். இவைகள் Windows Tools என்ற தலையங்கத்தில் கீழ் வகைப்படுத்த பட்டுள்ளது. சரி இந்த சீடியின் உள்ளடக்கங்களை அறிய விரும்பின் இந்த லிங்கை கிளிக் பண்ணவும். ஆனால் இந்த தளத்தில் டவுண்லோட் கிடையாது .

http://homepage.ntlworld.com/hiren.thanki/bootcd.html

டவுண்லோட் பண்ணவேண்டுமெனில் கீழே உள்ள லிங்கை கிளிக்பண்ணவும். இதன் அளவு 59 MB. இதனை கையடக்கமாக வைத்துக்கொள்ளவேண்டுமென்பதற

நல்ல பயனுள்ள தகவல்களும் இணைப்பும் நன்றிகள் தேவகுரு

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் -107

How to remove unused drivers? பாவனையற்ற டிரைவர்களை நீக்குவது எப்படி?

என்னிடம் ஒரு கம்பியூட்டர் உள்ளது ஆனால் Printer இல்லை. ஒன்று கிடந்தது: தற்போது அது பழுதடைந்து விட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் ஒருமுறை scanner தேவைப்பட்டது, நண்பனிடம் வாங்கி பாவித்துவிட்டு திருப்பி கொடுத்துவிட்டேன். எனது சகோதரி கடந்த வாரம் நோர்வேயிலிருந்து வந்தவர். தனது டிஜிட்டல் கமெராவில் படங்கள் நிறைந்து விட்டதால் எனது XP கம்பியூட்டருக்கு தனது படங்களை டவுண்லோட் பண்ணி சீடியில் பதிந்து கொண்டு போனார்.

இதுதான் நிலைமை எனில் நான் தற்போது கம்பியூட்டரை இயக்கும்போது மேற்கூறப்பட்ட மூன்று சாதனங்களின் டிறைவர்களும் சேர்ந்து இயங்க ஆரம்பிக்கின்றன என்பது எனது கவனத்திற்கு வராமல் போய்விட்டது. அதைப்பற்றி நான் சிந்திக்கவில்லை. இந்த சாதனங்களை அகற்றும்போது அதற்குரிய டிறைவர்களை நான் uninstall செய்திருக்க வேண்டும். செய்யாமல் விட்டது எனது தவறுதான். இப்படி எத்தனை டிறைவர்கள் உள்ளனவோ? சரி இவைகளை எப்படி அகற்றுவதென பார்ப்போம்

1.Control Panel லில் உள்ள System Icon ஐ இரட்டை கிளிக் செய்யவும். ( அல்லது Windows+Break கீக்களை அழுத்தவும்)

2.வரும் ஜன்னலில் Advance Tab ஐ அழுத்தவும்.

3. வரும் புதிய பக்கத்தின் அடியில் காணப்படும் Environment Variable என்ற Tab அழுத்தவும்.

4.Environment Variable என்ற ஜன்னலில் கீழ் காணப்படும் System Variable என்ற பகுதியின் கீழ் அடியில் காணப்படும் New என்ற பட்டனை அழுத்தவும்.

5. New System Variable என்ற சிறிய பெட்டி வரும். அதில் Variable Name என்பதன் எதிரில் devmgr_show_nonpresent_devices என் ரைப் பண்ணவும். Variable Value என்பதன் எதிரில் 1 என ரைப் பண்ணவும். கிளிக் OK. மீண்டும் கிளிக் OK.

6. இப்போது System Properties டயலக் பெட்டியில் நிற்பீர்கள். Hardware Tab-->Device Manager-->View-->Show Hidden Devices இவைகளை கிளிக் பண்ணவும்.

7. Device Manager ஜன்னலில் மேலிருந்து கீழாக ஒவ்வொரு + அடையாளத்தையும் கிளிக்பண்ணி ஆராய்ந்து பார்க்கவும். மங்கலான icon காணப்படுகிறதாவென. மங்கலாக இருந்தால் டிறைவர் லோட் ஆகியுள்ளது ஆனால் device கழற்றப்பட்டுள்ளது என அர்த்தம். அதில் வலது கிளிக்பண்ணி Properties ஐ பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பயனுள்ள தகவல்களும் இணைப்புக்களுக்கும் நன்றிகள் தேவகுரு

நன்றி தேவகுரு அண்ணா... உங்கள் தகவல்கள் பயன் உள்ளதாக உள்ளது. நன்றிகள்.. தொடருங்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தேவகுரு உங்கள் தகவல்களுக்கு ஆனால் இங்கு இங்கிலீசில் உள்ளதை டொச்சில் போடமுடியுமா அல்லது யாராவது உதவி செய்யுங்களேன். ப்ளீஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.