Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எஞ்சிக்கிடப்பது ஞாபகங்கள் மட்டுமே...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எஞ்சிக்கிடப்பது ஞாபகங்கள் மட்டுமே...

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

நேற்று முதல் ஒரு தொலைபேசியழைப்பு வந்து வந்து துண்டிக்கப்படுகிறது. யாரென்று அறிய முடியாமல் அந்த அழைப்பு மனதைக் கலவரப்படுத்துகிறது. 'please call me' என வந்த அந்த எஸ்எம்எஸ் யாரென்பதை இனங்காண முடியாமல் தொடர்பை ஏற்படுத்துகிறேன்.

அது யாழ்ப்பாணத்திலிருந்து வந்த அழைப்பு. 19வருடத்துக்குப் பின்னான தொடர்பாக அழைத்த அந்த அழைப்பு, ஒருபுறம் மகிழ்வும் இன்னொருபுறம் துயருமாக இருந்தது. 21வருடம் முதல் இறந்து போன சித்தப்பாவின் மகன் அவன். உறவுகளிடம் தேடி என்னை அழைத்திருந்தான்.

இந்திய இராணுவம் கொன்ற எனது சித்தப்பாவும் 5வயதில் நான் கண்ட என் சித்தப்பாவின் மகனும் நினைவில் வந்தார்கள். 1987 மழைக்கால நாளொன்றில் ஊரையழித்து உறவுகளைச் சிதைத்தபடி இந்திய இராணுவ வாகனங்கள் பலாலியிலிருந்து ஊர்களைத் தனது வாயில் போட்டு மென்று கொண்டிருந்தது. ஊரிலிருந்தவர்கள் யாவரும் கோவில்களையே நம்பிக் கோவில்களுக்குள் தஞ்சமடைந்திருந்தனர்.

சித்தப்பாவும் சித்தியும் பிறந்து சில மாதங்களேயான கடைசிக் குழந்தையுடன் மூத்தவனையும் அடுத்தவனையும் கூட்டிக்கொண்டு கோண்டாவில் அன்னொங்கை அம்மன் கோவிலில் அடைக்கலமானார்கள். உயிரைக் காக்கும் அவசரத்தில் பிறந்து சிலமாதங்களேயான இளையவனுக்குப் பால்மா கூட எடுத்துவர முடியாமல் அம்மன்கோவிலில் ஒரு பக்கத்தில் ஒதுங்கிக் கொண்டார்கள்.

பிள்ளைகள் மீது உயிரையே வைத்திருந்த சித்தப்பா றெயில்றோட்டை அண்டியிருந்த தனது கடைக்குப் போக முடிவெடுத்தார். சித்தியும் சித்தியின் உறவுகளும் தடுக்கத் தடுக்க தான் கவனமாகத் திரும்பி வருவதாச் சொல்லிக்கொண்டு போனார்.

பிள்ளைகளுக்குச் சாப்பாட்டோடு வருவதாகப் போன சித்தப்பா மீளவராமல் சித்தப்பாவின் நினைவோடு சித்தி அழுகையும் அவலமுமாய் ஒருவார நிறைவின் பின்...

ஒருநாள் இந்தியப்படைகளால் தளர்த்தப்பட்ட ஒருமணித்தியால ஊரடங்கு உத்தரவிற்குள்

வீட்டுக்குப் போன போது.....

சித்தப்பா வீங்கி முட்டி நாறிப்பெருத்துப் பிணமாய் நாய்கள் கடித்ததும் காகங்கள் கொத்தியதுமாக மீதமிருந்த உடலம்தான் சித்திக்குக் காணக்கிடைத்தது.

மரண வீடு கொண்டாடித் துயர் தீர அழுது தீர்க்கவோ சித்தப்பா இருந்த அன்னொங்கையிலிருந்து எட்டுமைல் தொலைவிலிலிருந்து குப்பிளானுக்குச் செய்தி கொண்டு வரவும் ஆளின்றி அமுலில் இருந்த காலவரையற்ற ஊரடங்கையும் மீறி சித்தியாலோ சித்தியின் கூடப்பிறந்தவர்களாலோ எதையும் செய்ய முடியவில்லை. சித்தப்பாவின் உழைப்பால் நிறைந்த அந்த வளவின் ஒரு மூலைமட்டும் சித்தப்பாவை எரிக்கும் நிலமாகியது.

ஒன்றரை மாதத்தின் பின் கோண்டாவிலிலிருந்து எங்களுக்கு வந்த செய்தி சித்தப்பாவின் மரணத்தைத் தாங்கி வந்தது. அதுவும் எப்போ என்ன என்ற எந்தவித விபரமும் இல்லாத செய்தியாக.....ஒரு ஊரிலிருந்து மறு ஊருக்குப் போக முடியாதபடி இந்திய இராணுவம் விதித்திருந்த ஊரடங்குச் சட்டம். இதையும் மீறி உள் ஒழுங்கைகள் வளவுகள் என அப்பாவும், அமமாவும் , மாமிமாரும் சித்தப்பாவின் வீட்டையடைந்த போதுதான் விடயம் தெளிவாகியது. சித்தப்பா இறந்து ஒன்றரை மாதம் முடிந்ததென்பது.

சொந்தங்கள் போன போது சித்தி கதைக்கவேயில்லையாம். சித்தப்பாவை இழந்த அதிர்ச்சியில் சித்தி சித்தப்பிரமை பிடித்தமாதிரி இருந்தாவாம். போனவர்கள் அழுது சித்தப்பாவை எரித்த இடத்தில் போய் விழுந்து குழறிய போதுதான் சித்தியழுதாவாம். ஒன்றரை மாதம் சித்திக்குள் அடங்கியிருந்த கண்ணீர் அன்றுதான் வெளியில் ஊற்றெடுத்துப் பாய்ந்தது. சித்தப்பாவுடனான 6வருட வாழ்வோடு சித்தியின் வாழ்வும் முடிந்து....விதவையாக...3பிள்ளைகள

ோடு தனித்துவிடுகிறா.

1990 வரை தனது 3பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வருடத்துக்கு 4அல்லது 5தடவைகள் குருந்தடி மூலையில் இறங்கி எங்கள் வீடுகளுக்கு வருவா. கொதிக்கும் மதிய வெயிலில் வந்திறங்கி மீளவும் மாலையில் . அப்பம்மா கொடுக்கும் சில நூறு ரூபாய்களோடு சித்தி போய்விடுவா. சித்தியின் கைகளைப் பிடித்தபடி எனது தம்பிகள் போவது மனசைக் கலவரப்படுத்திக் கொண்டேயிருக்கும். அந்தப்பிள்ளைகளுக்ககா எந்தவித பொருளாதார உதவியையும் செய்ய முடியாத நமது பொருளாதார நிலமை அவர்களுக்காக எதையுமே அந்த நேரம் செய்யவில்லை.

1990 யூன் மாதம் தொடங்கிய இரண்டாம் கட்ட ஈழப்போரோடு சித்தியுடனான தொடர்புகள் அறுபட்டுப் போனது. நாங்களும் நமது ஊரும் 1990 தீபாவழியுடன் எங்கள் ஊரை நிரந்தரமாகப் பிரிந்து போனோம். யாரையும் தேடவோ நினைக்கவோ முடியாமல் போர்விமானங்களின் இரைச்சலும் எறிகணைச்சத்தமும் துப்பாக்கி ஒலியுமே தினமாகியது. போன இடமெங்கும் பதுங்குளியமைத்தலும் போர் விமானம் இரைந்தால் போய் ஒழிவதுமாக நாங்கள்.

பொருளாதாரத்தடை விதித்த இலங்கையரசின் தடையை வெல்ல ஊர்களில் பழைய நாட்களை நினைவுபடுத்திப் பட்டைகளால் தண்ணீர் இறைத்து விவசாயத்தில் முன்னேற்றம் கண்டது யாழ்மாவட்டம். கிடப்பில் போனவையெல்லாம் புத்துயிர் பெற பனங்களியும் செவ்வரத்தம் சாறும் எங்களுக்கு சவர்க்காரங்களாகின.

மின்விளக்குகள் ஒட்டறைதட்டிப்போக சிமினி விளக்குகளும் குமுளி விளக்குகளும் புதுப்பிக்கப்பட்டது. மண்ணெண்ணையில் எரிந்த விளக்குகளுக்குத் தேங்காயெண்ணையில் எரியத் துணிச்சல் பிறந்தது. பெற்றோலில் ஓடிய வாகனங்கள் மண்ணெண்ணையில் புதுவித ஒலியெழுப்பி இயங்கத் தொடங்கின. எந்தத்தடை வரினும் நாங்கள் நிமிர்ந்து நிற்போமென்ற நிமிர்வை விடுதலைப்புலிகளின் புதிய புதிய ஊக்குவிப்புகள் உறுதிப்படுத்தின.

பலாலி , வசாவிளான் , ஒட்டகப்புலம் , அச்சுவேலி,தெல்லிப்பழை , வறுத்தலைவிளான், மாவி்ட்டபுரம் , கொல்லங்கலட்டி ,அம்பனையென பாடசாலைகள் மூடுவிழாக்காண பாடசாலைகள் இடம்பெயரத் தொடங்கின. 1990 நடக்கவிருந்த சாதாரணதரப்பொதுப்பரீட்சை 1991இற்குத் தள்ளிப்போனது.

ஒவ்வொன்றாய் ஒலியெழுப்பிக் கூவிவரும் ஆட்லறி, தனது பெரிய உடலைத் தூக்கி வரும் சகடையிலிருந்து வரும் பீப்பாக்குண்டு எங்காவது வெடித்துச் சிதறும். யாராவது சாவார்கள் படுகாயமடைவார்கள். கண்ணயரும் போதும் காதுமடல் கிழித்துப் போகும் கலிபர் சத்தமென போரின் அடையாளம் யாரையும் விடேன் என்ற திமிரில் ஊரையழித்து உறவையழித்துக் கொண்டிருக்க ஊரிலிருந்து என் வயதுள்ளோர் திடீர்தீடீரெனக்காணாமற் போனார்கள். சிலகாலங்களின் பின் என் கண்முன்னேயே வரிச்சீருடையில் போராளிகளாக புதிய பிறப்பெடுத்து நடமாடத் தொடங்கினார்கள். வீடுகளில் வந்து பழகிப்போன போராளிகள் பலர் மாவீரர்களானார்கள்.

தேசம் வீட்டுக்கொரு வீரனை வீராங்கனையை அழைத்து விடுதலைப்போரில் வீரியத்துடன் இயங்கத் தொடங்கியது. கோட்டை வீழ்ந்தது. திலீபனின் கனவு பலித்தது. மாங்குளம் வீழ்ந்தது. போர்க்கென்ற லெப்.கேணல் கரும்புலி வீரனின் சரிதம் எழுந்தது. வல்வைக்கடலில் கடற்கரும்புலிகளின் வீரம் நிகழ்ந்தது.

வழிகள் அடைந்து புது வழிகள் திறந்து தமிழர் பயணங்கள் கடுமையாகின. கொம்படி , சங்குப்பிட்டி, ஊரியான் , கிழாலியென வீதிப்பயணங்கள் தண்ணீரால் நிகழ்ந்தன.

1991இல் ஆனையிறவு உப்பள வெளியில் புலிகளணி ஆனையிறவில் குடியிருந்த படைகளுடன் போர் முகம் கண்டது. மரபுப்படையணியாய் மாற்றம் கண்ட களமாக ஆனையிறவில் புலிகளின் பலம் வரலாறாகியது.

"இந்தமண் எங்களின் சொந்த மண் இதன் எல்லைகள் மீறியார் வந்தவன் ,பொங்கும் கடலும் பொழியும் நிலவும் உங்கள் கதைசொல்லும், எதிரிகளின் பாசறையைத் தேடிப்போகிறோம்" என விடுதலையின் வேர் தேடியபடி விடுதலைப்பாடல்களும் , விடுதலைப்புலிகளின் வீரமும் வேரோடக் களங்களில் காலவலண்களில் போராளிகள் கடமைகளில் நிற்க....ஊர்களிலிருந்து பிள்ளைகள் போராடப்போய்க் கொண்டிருந்தார்கள். இவர்களுக்குள் போய்விட்டாலென்று அஞ்சிய அம்மாவின் கண்ணீர் 1992இல் என்னைப் புலம்பெயர்த்தது. 17வயதில் வெளிநாடு நான் காண என் தேசத்திலிருந்து என் வயதொத்த இளைஞர்களும் யுவதிகளும் களங்கள் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள்.

(எஞ்சிக் கிடக்கும் ஞாபகங்கள் இன்னும் வளரும்......)

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து ஞாபகங்கள் வளரட்டும்........

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொடர் தொடருங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மணி இதே விடயத்தை ஒரு பேப்பரிலும் பார்த்தேன். அதில் கடைசியில் இருந்த ஒரு பந்தி யாழ் இணைப்பில் இல்லை. அந்தப் பந்தி உங்களால் எழுதப்பட்டதா அல்லது ஒரு பேப்பர் காரரால் இணைக்கப்பட்டதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மணி இதே விடயத்தை ஒரு பேப்பரிலும் பார்த்தேன். அதில் கடைசியில் இருந்த ஒரு பந்தி யாழ் இணைப்பில் இல்லை. அந்தப் பந்தி உங்களால் எழுதப்பட்டதா அல்லது ஒரு பேப்பர் காரரால் இணைக்கப்பட்டதா

ஐயா துரோணரே !

நீங்கள் ஒரு பேப்பரில் பார்த்தது இதுதான். இறுதியில் போட்ட வரிகளும் எனதேதான். ஆயினும் இத்தொடரை தொடராக யாழில் போடுவதற்காக முடிவு வரிகளைப் போடவில்லை. 5பாகமாக போடக்கூடியளவுக்கு எஞ்சிக்கிடக்கிறது ஞாபகங்கள். அதனாலேதான் இங்கு முற்றும் போடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகங்கள் துயரமானவை தான் ....சொல்லி ஆறினால் சற்று நிம்மதி கிடைக்கும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,தியா,துரோணர்,நிலாமத

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எஞ்சிக்கிடப்பது ஞாபகங்கள் மட்டுமே - பாகம் 2

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

அதன்பின்னான ஊரும் உறவுகளின் நினைவும் நானும் குடும்பம் குழந்தைகள் என காலக்கதியில் வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருக்க....அத்தகையதொரு நாளில் அதிகாலை வந்த தொலைபேசியழைப்பு. கொழும்பில் அம்மாவும் , அப்பாவும் , தங்கைகளும், தம்பியும் பொலிசாரினால்கைதென்ற போது பாதியுயிர் போய் பதைபதைத்துக் கொழும்பிலிருந்தவர்களிடம் கேட்டபோது.....

இடம்பெயர்ந்து இருந்த இடத்தில் நித்திரையில் கிடந்தவர்களை விசர்நாய் கடித்து மருந்தின்மையால் மேலதிக சிகிச்சைக்குக் கொழும்புக்கு வந்திருந்த எனது குடும்பத்தினரைப் பொலிஸ் பிடித்ததாம் புலியென்று. 12வயதான தம்பியும் 19,16 வயதுகளான தங்கைகளும் புலிகளா ? பொம்பர் சத்தம் கேட்டால் எந்தப் புற்றிலாவது புகுந்துவிடத் துடிக்கும் எனது தங்கைகளின் அழுகையொலிதான் மனசில் ஒலித்தது. ஊரார் ஒருவரின் உதவியில் ஆளுக்குப் பத்தாயிரம் கட்டி அவர்கள் வெளியில் வந்து சொன்ன கதை உயிரைக் கொன்றது.

'பிரபாகரனிட்டை மருந்தில்லாமல் இஞ்சை வந்தியளா'? என்ற ஏளனத்தோடு கொழும்பு அரச வைத்தியசாலையின் சிங்கள வைத்தியன் ஒருவன் கேட்டதும் சரியான மருத்தும் கிடைக்காமலும் ஏமாந்த எனது குடும்பத்தை அந்தச் சிங்கள மருத்துவனே புலியென்று அறிவித்துப் பிடித்துக் கொண்டு போனார்களாம். நாய்க்கடிக்காயம் ஆறாமல் கொசுக்கடிக்குள் 4நாள் அவர்கள் சிறையிருந்த சோகம் கேட்கக் கோபமாக வந்தது.

எங்கள் சுயநலம் எத்தனை நாள் இப்படி ஏதிலி வாழ்வில் எங்கள் உறவுகள் வாழ்வு அவலமாய்ப் போகப்

போகிறது ? போராளிகளாகப் பிள்ளைகள் போக வெளிநாடு அனுப்பிய அம்மாவின் கண்ணீரை நினைக்க ஆத்திரம் , அழுகை , இயலாமையென எல்லாம் ஒன்றாகி அழுத்தியது.

மருந்தும் வேண்டாம் கொழும்பும் வேண்டாமென இலவச மருத்துவனையும் வேண்டாமென விட்டுக் காசு வைத்தியம் செய்து யாழ் திரும்பினர் என்னுறவுகள்.

1995இல் சுரியக்கதிர் படையெடுப்பில் யாழ்மண்ணிலிருந்து மக்கள் புலிகளின் பின்னே சென்றுவிட மனிதர்களற்ற மண்ணைப் பிடித்து சந்திரிகா அரசும் ரத்வத்தையும் சிங்கக்கொடியேற்றி மகிழ்ந்து திழைக்க...வன்னிக்குள்ளிருந்த

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபக பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள் சாந்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாபக பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள் சாந்தி

கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் றதி.

Edited by shanthy

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எஞ்சிக்கிடப்பது ஞாபகங்கள் மட்டுமே - பாகம் 3

நினைவுகளை ஊடறுத்த சித்தப்பாவின் மகனின் குரல் அவன் பற்றி அவனது குடும்பம் பற்றியெல்லாம் விசாரிப்புக்கள், சித்தி , தம்பிமார் , உறவுகள் என நீண்ட கதை முடிவில் அவர்கள் தாங்கிய துயரும் துன்பமும் என்னில் தங்கி வழிகிறது.

அக்கா உதவி செய்யுங்கோ. கடனெடுத்துக் கடையொண்டு துவங்கியிருக்கிறோம். அவன் தங்கள் கடனின் தொகையைக் கூறினான். அந்தத் தொகையைத் தனித்து என்னால் ஈடுகட்ட முடியாது என்பதைப் புரிந்தவன் என் சகோதரங்களுடனும் கேட்டிருப்பதாகச் சொன்னான்.

19வருடத்தின் பின் தாங்கள் தலையெடுத்த பின் வந்து முதன் முறையாக உதவி கேட்டிருக்கிறான் அவன். என்னால் முடியாது எனச் சொல்லவா முடியும். அவனது வங்கிக்கணக்கிலக்கத்தைப் பெற்றுக் கொண்டு விடைபெறுகிறேன். நாங்களாகச் செய்திருக்க வேண்டிய உதவியைத் தாங்களாகத் தேடி வந்து கேட்க வைத்த குற்றம் மனசைக் குடைந்து கொண்டிருந்தது. துண்டிக்கப்பட்ட உறவு மறுபடி துளிர்விடத் தொடங்கியதன் அடையாளமாக அவனது தொடர்பு அமைகிறது.

அள்ளிக் கொடுக்க முடியவில்லை. இயன்றதைக் கிள்ளிக்கொடுத்த போது அவன் சொல்லிக் கொண்ட நன்றியைக் கேட்டுப் பலநாள் அழுதிருக்கிறேன். அள்ளியள்ளிக் கொடுத்தும் போதாமல் அறுத்தெடுத்துக் கடனையே எமக்கு வாழ்வாக்கிய உறவுகளுக்கு நடுவில், கிள்ளிக்கொடுத்த சிறுதுளிக்காய் எத்தனைதரம் தான் நன்றி சொல்வான் இவன் ? அந்தக் குடும்பத்துக்காக உள்ளவரை எதையாவது சித்தப்பாவின் நினைவோடு செய்ய வேண்டுமெனக் குறித்துக் கொள்கிறேன்.

ஊர் நிலவரம் அகோரமாகி வன்னிமண் போர் தின்று சாவில் மூழ்கிக் கிடக்கிறது.

எல்லாவற்றையும் இழந்து எறிகணையின் நினைவும் இறந்து போகும் உயிர்களின் கனவுமாக இந்த இரவுகள் ஒரே பயங்கரமானவையாக இருக்கிறது. மண்ணை உழுதபடி இராட்சத டாங்கிகள் போகும் ஒலியும் , மனதை வருத்தும் துயரின் படிவும் தாங்கிய மக்கள் வன்னியில் போகும் காட்சிகள் கண்ணை உறுத்துகின்றன. சொல்லியழ முடியாத் துயராய் வன்னிக்குள் உள்ள உறவுகளின் நினைவில் உழல்கிறது மனசு.

போரின் வாய்க்குள் சிக்குண்ட மக்களின் இரத்தமும் சிதறிய உடல்களுமான செய்திகளும் படங்களும் இந்த நாட்களில் மனசை அரித்துக் கொண்டிருக்கின்றன. மனசுமுட்ட தினம் வரும் இழப்புகளின் எண்ணிக்கையே நிறைந்து வழிகிறது.

தொலைபேசிகள் அழைத்தாலே மனம் பதைத்து நடுங்குகிறது. யாரை இழந்த துயர் சொல்லிவிடுமோ எனும் அச்சத்தில் படபடக்கிறது நெஞ்சு. கண்களை நெருங்காத நித்திரையும் கனவுகளில் புதையாத இரவுகளும் உடலையும் உள்ளத்தையும் சோர்வாக்குகிறது. எந்த வேலையும் ஏதோ பெரும் சுமைபோல உணர்கிறேன். வேலையிடத்தில் யாராவது ஊர் பற்றிக் கேட்டால் நிற்குமிடம் மறந்து நிறைந்து விடுகிறது கண்கள்.

வாசல்கள் அடைக்கப்பட்ட வன்னிக்குள்ளிருந்து தினம் தினம் வரும் செய்திகள் என்ன செய்ய இதை உலகுக்கு எப்படிச் சொல்லவெனத் துடியாய்த் துடிக்கிற துயரம் சொல்ல முடியாமல் மனது வெறுமையினால் சூழப்பட்டுள்ளது.

நேற்றைய அன்ரியின் அழைப்பு. இணையத்தில் வெளியான காயமடைந்தோர் பட்டியல் படங்கள் உயிரை மிதித்தாற்போல் எங்கள் எல்லோரையும் ஏக்கத்தில் வீழ்த்தியிருந்தது. கடந்தவருடம் மன்னார்க்களத்தில் காண்டீபனை மாவீரனாகக் கொடுத்த ராசுச்சின்னையா குடும்பம் குடும்பத்தில் ஒருவரும் மிச்சமின்றிக் காயமடைந்துள்ளார்கள். காண்டீபனைக் கொடுத்த காயம் ஆறமுதல் அடுத்தவன் நரேனின் காயம்பட்ட முகமும் உடம்பெங்கும் வளிந்து காய்ந்திருந்த குருதியின் படமும் நினைவை விட்டகலாமல் உறுத்திக் கொண்டிருந்தது.

சின்னவனாய் பார்த்த முகம் மாற்றங்கள் நிறைந்து 21வயதுத் தோற்றத்தின் வயதை மீறிய முதிர்ச்சியும் அவனது காயமும் இருந்த நிம்மதியையும் ஒன்றாக உறிஞ்சிக் கொள்கிறது. அந்தக் குடும்பத்திலிருந்து அத்தனை பேரும் காயமடைந்துள்ளார்கள். கொடிய அரசன் மகிந்தவின் படைகளின் கொத்துக்குண்டுகளின் அழிப்பில் மருந்துமில்லை மருத்துவமனைகளுமில்லாத வாழ்வில் தத்தளிக்கும் அவர்களுக்கு எதையும் செய்ய முடியாத கையறு நிலையில்.....

நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. வீட்டிலுள்ளோரின் உறக்கம் கலைந்து விடாமல் எழுந்து கணணி முன் அமர்கிறேன். ஏதாவது புதிய செய்திகளைத் தேடியபடி இணையப்பக்கங்களில் உலாவுகிறேன். எங்கும் சாவுச் செய்திகள் தான். சத்தம் குறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி ஒளிச்சமிக்ஞையால் தன் வரவைச் சொல்லியது.

மறுமுனையில் கேட்ட அழுகையொலி மனசைப் பிளிந்து ஒரு பெரும் துயரோடு......குரல் பிடிபட முன்னே தனது பெயரைச் சொல்லி.....'என்ரை புள்ளையைப் புடிச்சுப்போட்டாங்கள்....3லட்

சம் தந்தா விடுவமெண்டு சொல்றாங்கள்....வன்னியுக்கையி

  • கருத்துக்கள உறவுகள்

கெதியாய் சொல்லி முடியுங்கள் படிக்க ஆவலாய் உள்ளேன்

உங்கள் ஞாபகம் நல்லாயிருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி , ஞாபகம் கூட மிஞ்சுமா என்பது சந்தேகமே ......

வேதனையான காலகட்டம் இது .

  • கருத்துக்கள உறவுகள்

எம் இனம் வாழ்ந்த ஞாபகம்தான் கடைசியில் மிச்சம் ...,....எல்லாம் அவன் செயல்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் இனம் வாழ்ந்த ஞாபகம்தான் கடைசியில் மிச்சம் ...,....எல்லாம் அவன் செயல்...

இனியாரும் இலக்கியம் படிக்கவேண்டாம்,இலக்கியம் படைப்பதற்கான களமாக எங்கள் வன்னிமண்,வலியுடன் இதை வரியாக்குகின்றேன்,ஆழமாக புதைக்காமல் ஆற்றலாக அவலங்களை வெளியாக்குங்கள்,விஞ்சட்டும் உங்களான உள வலி,எஞ்சியதான ஞாபகங்கள் வஞ்சினமாய் வரிக்கட்டும்,வரி உளவுரண் பேண மேவும் அகச்சிக்கலை அரங்கேற்றமாய் ஆவணமாக்கட்டும்.சொல்லப்படும் உண்மை இது,சொல்லப்படவேண்டியவைகள் எல்லாம் இனி சிதைவின்றி சிரம் கொண்டு சினங்கொண்டு,இனங்கண்டு,இழைப்ப

ாற,இவ் இணையமாக,வன(ள)ங்கொண்டு வனையப்படட்டும்.ஆதலால் இன்னமும் இறுகக் கனல் கொள்ளும் எமதான இழப்பின் முகவரி,முகங்கொள்வோம்,ஆயின் தலங்கொள்வோம்,தரங்கொள்வோம். இயல்பான இழைவுடன் தங்களின் வலியின் சுமையை இணைவாக,, சுரங்கொண்டு,நிமிர்வான உளங்கொள, உரமாக தரங்கொள தகமையுடன்,

தும்பையூரான்.

எனதான ஆதங்கங்களை இதன் இணைப்பால் இறுகப்பற்றியுள்ளேன்,லயங்கொள,

இதனை வலங்கொள.நன்றி.

www.thumpaiyooran.blogspot.com

"கருத்தெறிந்தால் களம், தரம் திறன் கொள்வேன்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெதியாய் சொல்லி முடியுங்கள் படிக்க ஆவலாய் உள்ளேன்

உங்கள் ஞாபகம் நல்லாயிருக்குது.

விரைவில் ஞாபகங்கள் அடுத்துத் தொடரும் தீயா.

சாந்தி , ஞாபகம் கூட மிஞ்சுமா என்பது சந்தேகமே ......

வேதனையான காலகட்டம் இது .

துயர் முட்டிய ஞாபகங்கள் இனியெங்களுக்கோ என்ற அச்சம் எல்லாருக்கும் :rolleyes:

எம் இனம் வாழ்ந்த ஞாபகம்தான் கடைசியில் மிச்சம் ...,....எல்லாம் அவன் செயல்...

இப்படியொரு இனம் வாழ்ந்தது என எவராவது ஆராட்சி செய்ய வருவார்கள் போலுள்ளது.

இனியாரும் இலக்கியம் படிக்கவேண்டாம்,இலக்கியம் படைப்பதற்கான களமாக எங்கள் வன்னிமண்,வலியுடன் இதை வரியாக்குகின்றேன்,ஆழமாக புதைக்காமல் ஆற்றலாக அவலங்களை வெளியாக்குங்கள்,விஞ்சட்டும் உங்களான உள வலி,எஞ்சியதான ஞாபகங்கள் வஞ்சினமாய் வரிக்கட்டும்,வரி உளவுரண் பேண மேவும் அகச்சிக்கலை அரங்கேற்றமாய் ஆவணமாக்கட்டும்.சொல்லப்படும் உண்மை இது,சொல்லப்படவேண்டியவைகள் எல்லாம் இனி சிதைவின்றி சிரம் கொண்டு சினங்கொண்டு,இனங்கண்டு,இழைப்ப

ாற,இவ் இணையமாக,வன(ள)ங்கொண்டு வனையப்படட்டும்.ஆதலால் இன்னமும் இறுகக் கனல் கொள்ளும் எமதான இழப்பின் முகவரி,முகங்கொள்வோம்,ஆயின் தலங்கொள்வோம்,தரங்கொள்வோம். இயல்பான இழைவுடன் தங்களின் வலியின் சுமையை இணைவாக,, சுரங்கொண்டு,நிமிர்வான உளங்கொள, உரமாக தரங்கொள தகமையுடன்,

தும்பையூரான்.

எனதான ஆதங்கங்களை இதன் இணைப்பால் இறுகப்பற்றியுள்ளேன்,லயங்கொள,

இதனை வலங்கொள.நன்றி.

www.thumpaiyooran.blogspot.com

"கருத்தெறிந்தால் களம், தரம் திறன் கொள்வேன்"

பலங்கொள்வோம் இன்னும் வீச்சாய் தும்பையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.