Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் செவாலியர் விருது பெற்ற முதல் ஆள் நானாகும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சு நாட்டின் பெருமதிப்பு வாய்ந்த விருதான "செவாலியர்' விருது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். செவாலியர் என்றதும் "சட்' டென்று எமக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஞாபகத்துக்கு வராமல் போகாது! அங்கு வேறு சில பிரமுகர்களும் அவ்விருதைப் பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், நமது இலங்கைத் திருநாட்டில்..? இதுவரை நாம் கேள்விப்பட்டதில்லை.

அந்த பெருமைக்குரிய விருதினைப் பெற்ற ஒருவர் நம் நாட்டில் இருக்கிறார் என்றால் ஆச்சரியப்படுவீர்கள். அதுவும் அவர் ஒரு தமிழ்ப் பெண் என்றால் மேலும் வியப்படைவீர்கள் யார் இவர்?

இவரது பெயர் திருமதி சிவா இராமநாதன் (சிவயோகநாயகி என்ற பெயரின் சுருக்கம்) யாழ். பருத்தித்துறை பொலிகண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரை அண்மையில் கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.

கனிந்த ஒரு தமிழாசிரியையின் தோற்றம் புன்னகை தவழும் முகம். பரஸ்பர புன்னகையுடன் கலந்து பேச ஆரம்பிக்கிறோம். "இலங்கையில் செவாலியர் விருது எனக்குக் கிடைத்திருக்கிறது. வேறு யாருக்கும் கிடைத்துள்ளதா என்று எனக்குத் தெரியாது'' என்றார் செவாலியர் திருமதி சிவா இராமநாதன் அடக்கமாக.

உங்களுக்கு அடக்கமாக ஒரு விஷயத்தைக் கூறட்டுமா? என்றவர், ""செவாலியர்'' என்பது உயர் பெருமைக்குரியவர் என்ற அர்த்தத்தைக் கொண்டிருப்பதால் அத்தகைய ஒரு விருது பெற்றவரைக் காணும் போது தலை தாழ்த்தி வணங்கி ""சேர் அல்லது மேடம் என்று அழைக்கவேண்டும் என்ற வழக்கம் உள்ளது'' என்றார் புன்ன கைத்தவாறு ""அட! அது மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! நமக்கும் தெரியாது என்று சமாளித்து நமது பணிவைத் தெரிவித்தோம்..

""தயவு செய்து உங்கள் ஊர், பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, நீங்கள் தேர்ந்தெடுத்த துறை போன்றவற்றை சற்று விபரமாகக் குறிப்பிடுவீர்களா? எனக் கேட்டபோது அவர் பின் கண்ட விபரங்களைத் தந்தார்:

""பருத்தித்துறை, பொலிகண்டி, திக்கம் செல்லையாபிள்ளையின் இளைய மகள் நான். ஆரம்பக் கல்வியை அமெரிக்க மிஷன் கல்லூரியிலும், பின்னர் பருத்தித்துறை மெதடிஸ்த மிஷன் கல்லூரியிலும் கல்வியைப் பெற்றேன்.

அதன் பின் கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் சேர்ந்து மனையியலில் விசேட பட்டம் பெற்று 1963 ஆம் ஆண்டில் மேலும் ஒரு பட்டத்தைப் பெற்றேன்.

1965 இல் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராகக் கடமை புரிந்து 1970 ஆம் ஆண்டில் பகுதி நேர விரிவுரையாளராக கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் 1972 இல் நிரந்தர நியமனம் பெற்று அளுத்கம ஆசிரிய பயிற்சிக்கல்லூரியிலும் பின் 1973 ஆம் ஆண்டு பதவி உயர்வுடன் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் கற்பித்தேன்.

1975 ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசின் மேற்படிப்பு புலமைப் பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்ட மூவரில் நானும் ஒருவராக இருந்தேன். மற்ற இருவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள்.

பிரான்ஸில் விஷி என்ற ஊரில் கவிலம் என்ற பள்ளிக்கூடத்தில் பிரெஞ்சு மொழியை 9 மாத காலம் கற்றுத் தேர்ச்சி பெற்றேன். அதன் பின் பாரிஸில் என்துறை சார்ந்த மேற்படிப்பை மேற்கொண்டேன். அதில் ஆசிரியர்களுக்கு கொடுக்கக் கூடிய பயிற்சிகள் எமக்கு வழங்கப்பட்டன. இப்படிப்பு சொபோரோ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதான எம்.எஸ்.சி. பட்டப்படிப்புக்கு சமமானதாகும். 1977 ஆம் ஆண்டு திரும்பி வந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியிலும் பின்னர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியிலும் கற்பித்தேன். பிரெஞ்சுத் தூதரகத்தின் பணிப்பின் பேரில் யாழ். பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழியை 1979 ஆம் ஆண்டில் இருந்து கற்பிக்க ஆரம்பித்து 2004 ஆம் ஆண்டு வரை படிப்பித்தேன்'' எனக் குறிப்பிட்டார்.

இதைவிட, வேறு எவ்விதமாக உங்கள் பிரெஞ்சு மொழிக் கற்பித்தல் அமைந்தது?

யாழ்ப்பாணத்தில் அலியோன்ஸ் பிரான்ஸே என்றோர் கல்வி நிலையம் இருந்தது. இது பிரெஞ்சு அரசுடன் தொடர்பு கொண்டது. இதில் டாக்டர் குலேந்திரன் என்பவரும் அவரைத் தொடர்ந்து ராஜலிங்கம் என்பவரும் அவருக்குப் பின் டாக்டர் ஜெரால்ட் என்பவரும் பொறுப்பாகச் செயற்பட்டார்கள்.

அங்கு நான் 2002 ஆம் ஆண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டுவரை கற்பித்தேன். அதில் பிரதித் தலைவராகவும் கடமை புரிந்திருக்கிறேன்.

கேள்வி: இதைவிட வேறு என்ன பொறுப்புகளை வகித்திருக்கிறீர்கள்?

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பிரதி அதிபராகக் கடமை புரிந்த நான் 1993 ஆம் ஆண்டு அதிபராகவும் 1996 ஆம் ஆண்டில் வலயம் இரண்டின் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றி 1997 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றேன். மற்றும் குறிப்பாக ஒரு விடயத்தை இங்கு பெருமையாகக் குறிப்பிட முடியும்.

கேள்வி: என்ன விடயம்? அதைப் பற்றிக் கூறுங்கள்.

2004 ஆம் ஆண்டு வரை யாழ். பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழியைக் கற்பித்த நான் அங்கு மனைப்பொருளியியல் பாட நெறியை ஆரம்பித்து வைத்த காரண கர்த்தாவாக இருந்தேன். என்பதுதான் அந்த பெருமை.

கேள்வி: ஓய்வு பெற்ற பின்பும் உங்கள் பிரெஞ்சு மொழி கற்பித்தல் பணியைத் தொடர்ந்தீர்களா?

பதில்: சில தனிப்பட்ட காரணங்களினால் என் கணவருடன் கொழும்புக்கு வந்த நான், நாம் தங்கியிருந்த வீட்டில் இருந்தவாறு பிரெஞ்சு மொழி கற்பிக்கும் பணியையும் செய்தேன்.

சர்வதேச பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் பலரும் என்னிடம் வந்து பிரெஞ்சு மொழியைப் படித்தனர். நல்ல பெறுபேறுகளையும் பெற்றனர். அதனாலே அதிகம் பலரும் படிக்க வருகின்றனர். எனினும் எனது உடல்நிலை கற்பித்தலில் அதிகம் ஈடுபட இடம்கொடுப்பதாக இல்லை.

கேள்வி: இதுவரை உங்களிடம் எவ்வளவு பிள்ளைகள் பிரெஞ்சு மொழியைக் கற்றிருக்கிறார்கள்?அதன் தேவைப்பாடு முக்கியமானதாக இருக்கிறதா?

இதுவரை என்னிடம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் பிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியைக் கற்பவர்களுக்கு பிரெஞ்சு மொழிகட்டாய துணைப் பாடமாக இருக்கிறது. பரீட்சையில் சித்தி அடைய செய்ய வேண்டும் என்பதற்காகப் படிக்கிறார்கள்.

அத்தோடு பிரெஞ்சு மொழி எல்லா நாடுகளிலும் தேவைப்படும் ஒரு மொழியாக இருப்பதனாலும் படிக்கிறார்கள். தவிரவும் விஸா போன்றவற்றிற்கு புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டும் பலர் படிக்கிறார்கள். சர்வதேச பாடசாலைகளிலும பிரெஞ்சு மொழி இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப்படுகிறது.

கேள்வி: பிரெஞ்சு நாட்டின் அதியுயர் விருதான "செவாலியர்' உங்களுக்கு எப்போது தரப்பட்டது? யார் அதை வழங்கினார்கள் என்று கூறுவீர்கள்

பதில்: கடந்த 10.02.2009 அன்று இவ் விருதினை அளித்தார்கள்

இலங்கையில் உள்ள பிரெஞ்சு தூதுவரின் இல்லத்தில் வைத்து தூதரால் எனக்கு இவ்விருது வழங்கப்பட்டது. பிரெஞ்சில் ஷெவாலியர் என்றால் ஆங்கிலத்தில் நைற்ஹுட் எனலாம். கல்வித் துறையில் எனக்கு இவ்விருதினை வழங்கினார்கள்.

இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அத்துடன் வாழ்நாளில் ஒரு சாதனை புரிந்து உயர்வை எனக்குள் ஏற்படுத்தியது. செவாலியர் என்றால் மதிக்கப்பட வேண்டியவர் என்பது கருத்தாகும். யாழ்ப்பாணத்தில் இவ்விருது பெறும் முதல் ஆள் நானாகும். .

இலங்கையில் வேறு யாருக்கும் கிடைத்ததா என்பது பற்றி எனக்குத் தெரியாது.

அவருக்கு எமது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து அடுத்த வினாவுக்குச் சென்றோம்.

கேள்வி: உங்களுக்கு பிரான்ஸில் 9 மாத கால பிரெஞ்சு மொழி கற்பிக்கப்பட்டதாகக் கூறினீர்கள். மொழியைக் கற்றுக் கொள்ள அக்காலம் போதுமானதா மேலும் பிரெஞ்சு மொழியின் சிறப்பு என்ன?

9 மாத காலமும் மொழியைக் கற்பதையே கடமையாக கொண்டிருந்தபடியால் அதை விளங்கிக்கொள்ளும் வகையில் படிக்க முடிந்தது. அதற்கு முதல் யாழ்ப்பாணத்தில் இரு வார காலம் பிரெஞ்சு மொழியைப் படித்திருந்தேன். ஆர்வம் உள்ள பிள்ளைகள் ஒரு வருடத்தில் அதைக் கற்றுக் கொண்டு விடுகிறார்கள். மற்றது பிரான்ஸ் நாட்டில் நான் கல்வி கற்கும் பொருட்டு இரண்டு வருடங்கள் தங்கியிருந்தேன். பிரெஞ்சுக்காரர்கள் தங்களது மொழியை மிகவும் நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். நாட்டுப் புறத்தில் மொழிப்பற்று மேலும் கூடுதலாக இருக்கிறது. ஆங்கிலம் தெரிந்தாலும் அவர்கள் கூடுதலாகத் தங்கள் மொழியில் தான் பேசுவார்கள்.

""பிரெஞ்சு மொழியை சங்கீத மொழி என்பார்கள். அம்மொழியைத் தொடர்ச்சியாகப் பேச வேண்டும். தமிழர்களுக்குரிய சில பண்பாடுகள் அவர்களுக்கும் இருக்கின்றன என்பதை நாம் அவதானித்திருக்கிறோம்.

கேள்வி: நீங்கள் கற்ற துறை மனைப், பொருளியல் துறை எனக் குறிப்பிட்டீர்கள். அங்குள்ள முறைகள் நமது நாட்டுக்கு ஏற்றதாக அமையுமா? குறிப்பாக கலாசார, பண்பாட்டு விடயங்கள்...?

பதில்: குறிப்பாக உணவு தயாரிப்பு விடயங்கள் மாறுபடலாம்.

ஆனால் எல்லா நாட்டுக்கும் பொதுவான விடயங்கள் அதாவது ஆடைகளைத் தயாரித்தல், வீட்டை நிர்வகித்தல், வீட்டை அலங்கரித்தல், முதலுதவி போன்றவை பொதுவான அம்சங்களாக அமையும்.

அவற்றில் நமது நாட்டின் பண்பாடு கலாசாரத்துக்கு ஏற்ப நாம் எடுத்துக் கற்பிப்போம்..

கேள்வி: ஒரு கல்வியியளார் என்ற வகையில் பழைய, புதிய கற்பித்தல் முறைகளில் என்ன வித்தியாசத்தைக் காண்கிறீர்கள் என்று குறிப்பிட முடியுமா?

பழைய காலத்தில் நிலவி வந்த ஆசிரியர் மாணவர்கள் உறவு இப்போது காணப்படுவதில்லை. காலம் மாறிப்போனதால் மாற்றங்களும் தோன்றியுள்ளன. மாணவர்கள் ஒரு துறையை மட்டும் கற்பதில்லை. பல துறைகளில் கற்கிறார்கள். பல ஆசிரியர்களிடம் படிக்கிறார்கள். அதனால் ஆசிரியர், மாணவரிடையே நெருக்கம் குறைந்து போய் விட்டது. அப்போது மாணவர்களாகிய நாம் படித்தோம். இப்போது பிள்ளைகளுக்காக பெற்றோர் படிக்கிறார்கள்!

இத்துடன் செவாலியர் திருமதி சிவா இராமநாதனுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து விடை பெற்றோம்.

வீரகேசரி நாளேடு

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் பெருமையான விருதுதான்! இந்த அரிய வாய்ப்பு யாருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. பாக்கியசாலி செவாலியர் திருமதி சிவா இராமநாதனுக்கு வாழ்த்துக்கள்!

மேலும் சில வருடங்களுக்கு முன் பிரான்ஸில் லியோன் என்னுமிடத்தில் வசித்த ஈழத் தமிழர் ஒருவருக்கும் இவ்விருது கிடைத்ததாக ஞாபகம்! சட்டென்று அவரது பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை! பிரான்ஸ வரலாறு சம்பந்தமாக ஆய்வுசெய்ததில் அவருக்கு அந்த விருது கிடைத்தது என நினைக்கின்றேன்.

செவாலியர் திருமதி சிவா இராமநாதனுக்கு எமது வாழ்த்துக்கள்!

இணைப்புக்கு நன்றி சகோதரி

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு பெருமை சேர்த்த , செவாலியர் திருமதி சிவா இராமநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் மனிதனுக்கு மனிதன் வழங்கும் பட்டங்களும் விருதுகளும். என்னைப் பொறுத்தவரை இவை சுத்த வேஸ்டுகள்..! மக்களை பராபட்சமாக நடத்த வித்திடும் சித்து விளையாட்டுகள். ஒருவரின் திறமை என்பதை விருதுகளால் அளவிடவும் முடியாது மதிப்பிடவும் முடியாது. அது மட்டுமன்றி வெள்ளைத்தோல் வழங்குவதெல்லாம் உயர் கெளரவம் என்பதும் ஒரு வித மாயையே. அது இந்த உலகில் வெள்ளையர்களால் தமது ஆதிக்கப் புகழை நிலைநிறுத்த கட்டி எழுப்பப்பட்டுள்ளது. முதலில் விருதுகள் என்ற போர்வையில் இந்த போலிக் கெளரவம் அளிக்கும் அடக்குமுறை நாகரிகத்தை தகர்த்தெறிய வேண்டும்.

உண்மையான திறமைசாலி ஒட்டுமொத்த மனித சமூகமும் தன்னால் பயன்பெறுவதை பார்த்து மகிழ்வானே அன்றி சக மனிதன் ஒருவன் வழங்கும் விருதில் தன்னை உயர்ந்தவனாய் எண்ணமாட்டான்..! :mellow:

Edited by nedukkalapoovan

எல்லாம் மனிதனுக்கு மனிதன் வழங்கும் பட்டங்களும் விருதுகளும். என்னைப் பொறுத்தவரை இவை சுத்த வேஸ்டுகள்..! மக்களை பராபட்சமாக நடத்த வித்திடும் சித்து விளையாட்டுகள். ஒருவரின் திறமை என்பதை விருதுகளால் அளவிடவும் முடியாது மதிப்பிடவும் முடியாது. அது மட்டுமன்றி வெள்ளைத்தோல் வழங்குவதெல்லாம் உயர் கெளரவம் என்பதும் ஒரு வித மாயையே. அது இந்த உலகில் வெள்ளையர்களால் தமது ஆதிக்கப் புகழை நிலைநிறுத்த கட்டி எழுப்பப்பட்டுள்ளது. முதலில் விருதுகள் என்ற போர்வையில் இந்த போலிக் கெளரவம் அளிக்கும் அடக்குமுறை நாகரிகத்தை தகர்த்தெறிய வேண்டும்.

அப்ப மாமனிதர் விருது, நாட்டுப் பற்றாளர் விருது எல்லாம் என்ன மாதிரி? அதுவும் உங்களின் வரைவிலக்கணத்திற்குட்படுமா? :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரையில் இளவாலையை சேர்ந்த அடைகலமுத்து மாஸ்டர் .....

அவர்களுக்கு (சந்திரகாந்தன் அடிகளாருடைய தந்தை )

லண்டனில் வைத்து கொடுத்ததாக கேள்வி பட்டு இருக்கிறேன்.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மாமனிதர் விருது, நாட்டுப் பற்றாளர் விருது எல்லாம் என்ன மாதிரி? அதுவும் உங்களின் வரைவிலக்கணத்திற்குட்படுமா? :lol:

ஒரு மனிதன் பாதுகாப்பற்ற தன் தேசிய இனத்துக்காக உயிரை கூட மதிக்காமல் ஆற்றும் பணியை இனங்காட்ட வழங்கப்படும் அடையாளங்களாகவே அவற்றைப் பார்கிறேன். பெருமைப்படுத்தும் பெருமைப்படும் விடயங்களாக அல்ல...! :mellow:

தியாகி திலீபன் என்பது அவரின் மக்களுக்கான செயல்களை.. தியாகத்தை அடையாளம் காட்ட வழங்கப்படுவது. அவரை பெருமைப்படுத்த அல்ல என்றே நான் நினைக்கிறேன்.

ஆனால் மேற்சொன்ன செவாலியர் என்ற விருதுகள் படைப்பாளிகளின் படைப்புகளில் வெளிக்கொணரும் திறமைகளை மக்கள் உணரவும் அவற்றால் பயன்பெறவும் அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு மேலாக.. சில நாடுகள்.. இனங்கள்.. தமது பண்டைய ஆதிக்க செல்வாக்கை நிலைநிறுத்த விருதுகளை வழங்குகின்றன. அவை ஏற்புடையவையும் அல்ல அதுமட்டுமன்றி அவ்வகை விருது வழங்கும் நாகரிகம் ஒழிக்கப்படனும். :lol:

Edited by nedukkalapoovan

ஒரு மனிதன் பாதுகாப்பற்ற தன் தேசிய இனத்துக்காக உயிரை கூட மதிக்காமல் ஆற்றும் பணியை இனங்காட்ட வழங்கப்படும் அடையாளங்களாகவே அவற்றைப் பார்கிறேன். பெருமைப்படுத்தும் பெருமைப்படும் விடயங்களாக அல்ல...! :mellow:

உண்மை...

விருதுகளின் தரம் என்பது யார் கொடுக்கின்றார்கள், யாருக்கு கொடுக்கின்றார்கள் என்ற இரு விடயங்களில் தங்கியுள்ளது. செவாலியர் விருது, நோபல் விருது என்பன உலகத்தரம் வாய்ந்த விருதுகள். வெறும் வியாபார நோக்கினை முன்னிலைப் படுத்தும் ஒஸ்கார் விருது போன்றது அல்ல

செவாலியர் விருது பெற்ற அனைவரும் பாராட்டப் பட வேண்டியவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

செவாலியர் விருது பெற்ற அனைவரும் பாராட்டப் பட வேண்டியவர்கள்

செவாலியர் விருது சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவரை நடிப்பின் சிகரம் என்றும் சொல்கிறார்கள். இதனால் சாதாரண மக்கள் அடைந்த நன்மைகள் என்ன..??! அவர் சாதாரண மக்களுக்கு நன்மை கிடைக்க நடிப்பை எப்படி பயன்படுத்தினார்..??! இவை எல்லாம் கேள்விக் குறிகளாகவே. அந்த வகையில்.. என்னால் செவாலியர் விருதை மக்களின் பணிக்காக அவற்றை அடையாளப்படுத்தும் நோக்கிற்காக வழங்குவதாக எண்ண முடியவில்லை..! :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

பிரஞ்சு மொழியை பிறசமுகத்தவர் மேலும் கற்பதை ஊக்கிவிக்கத்தான் ..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.