Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கலைஞர்

Featured Replies

இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத்தில் பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.

நன்றி: நக்கீரன்

  • Replies 56
  • Views 5.7k
  • Created
  • Last Reply

நல்லவிடயம் வாழ்த்துக்கள் உலகத்தமிழ்தலைவரே உங்கள் நாடகம் அற்புதம். இதற்கு கதை வசனம் யார்? எழுதியவர் பாராட்டுக்குரியவர்.

ஒன்று செய்யலாமே தமிழீழம் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று நீங்கள் உண்ணாவிரதம் இருக்கலாமே?

தமிழக மக்கள் ஏமாறுவார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவிடயம் வாழ்த்துக்கள் உலகத்தமிழ்தலைவரே உங்கள் நாடகம் அற்புதம். இதற்கு கதை வசனம் யார்? எழுதியவர் பாராட்டுக்குரியவர்.

ஒன்று செய்யலாமே தமிழீழம் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று நீங்கள் உண்ணாவிரதம் இருக்கலாமே?

தமிழக மக்கள் ஏமாறுவார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

எழுதியவர் யார் என யாருக்கும் தெரியாது. தங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். ஆனால் இந்திய ஊடகங்கள் அனைத்திலும் சண்டையை நிறுத்தவதாக அறிவுப்பு வந்தது பற்றி தங்களின் மேன்மையான கருத்து என்ன சோழன் அவர்களே?

ஓரு நாடகம் முடிந்து விட்டது.விமான தாக்குதல்களும் கனரக ஆயுதங்களும் பாவிக்கப்பட மாட்டாது என்று தான் அறிவித்தானுகளே தவிர போர்நிறுத்தமல்ல.

  • தொடங்கியவர்

அப்படி போர் நிறுத்தம் மெய் என்றால் மகிழ்வது தமிழர்கள் தானே! இந்திய பத்திரிக்கைகளில் வந்த செய்தி ஏன் தமிழ் வலையங்களில் வரவில்லை? சற்று பொறுத்தும் பார்ப்போம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடக்குது இங்க

கனரக ஆயுதங்கள் பாவிக்கமாட்டார்கள் என்று எவ்வாறு நம்புவது

  • கருத்துக்கள உறவுகள்

கனரக ஆயுதங்களையும் போர்விமானத்தையும் பாவிக்க மாட்டோம் என்று சொல்லியிருப்பதாகத்தான் சிங்கள இணையம் சொல்கிறது..! :huh:

Karunanidhi cuts short fast

Tamil Nadu CM Karunanidhi called off his fast after it was reported that the Sri Lankan government has halted the use of heavy weapons and combat aircraft in its assault on the LTTE, Indian Media sources confirmed.

நண்பரே போர்நிறுத்தம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இது தேர்தல் வெற்றிக்காக அமைக்கப்பட்ட ஒரு காட்சி இதை அரங்கேற்றுவதற்காகத்தான் ஒரு சில தினங்களுக்கு முன்னர் இரண்டு இயக்குனர்கள் இலங்கை சென்றிருந்தனர். இப்படி ஒரு காட்சியமைப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஜெயா தமிழீழத்தை ஆதரிப்பதாக மேடைகளில் கூற ஆரம்பித்ததும் இப்படியான கூத்துக்கள் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இது ஒரு கேவலமான தந்திரம் இதற்காக இன்று கொல்லப்பட்ட மக்கள் எத்தனைபேர். இவர்களின் தேர்தல் வெற்றிக்காக எமது மக்கள் கொல்லப்படுவது மிகவும் வேதனையான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

கனரக ஆயுதங்களையும் போர் விமானங்களையும் பாவிக்காமல் மகிந்தவினால் போர் செய்ய முடியாதா?

இதென்ன புதுமையான கண்துடைப்பு நாடகம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனரக ஆயுதங்களையும் போர்விமானத்தையும் பாவிக்க மாட்டோம் என்று சொல்லியிருப்பதாகத்தான் சிங்கள இணையம் சொல்கிறது..! :unsure:

அப்ப இனி அம்பும்வில்லுமே இல்லாட்டி கெற்ரப்போல்? :huh:

Sri Lanka continues air strikes violating own announcement - Puleedevan

[TamilNet, Monday, 27 April 2009, 07:45 GMT]

Two Sri Lanka Air Force (SLAF) fighter bombers continued to bomb civilian targets in Mu'l'li-vaaykkaal after the announcement by the Sri Lankan forces that it would not deploy heavy weapons or carry out air attacks as pressure mounted from the International Community. LTTE's Director of Peace Seceratariat, S. Puleedevan, when contacted by TamilNet told that SLAF bombers were attacking civilian targets at Mu'l'li-vaaykkaal at 12:50 p.m. and again at 1:10 p.m. despite the announcement to cease such attacks. He blamed Colombo for "deceiving the International Community, including the people of Tamil Nadu," with the announcement.

The SLA was also continuing to fire shells into the civilian zone while engaging the troops to continue to mount ground operations at Valaignar-madam, he charged.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29193

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி அம்பும்வில்லுமே இல்லாட்டி கெற்ரப்போல்? :huh:

ஓம்.. இப்ப நந்திக்கடலுக்கு அங்கால நிண்டு கொண்டு கல்லெறியிறாங்களாம்..! நல்ல ஒரு கண்துடைப்பு வேலை போலத்தான் இருக்கு..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும்: ராஜபக்சே

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் இன்று காலை 10 மணிக்கு உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் தமிழகத்தில் தற்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள நிலைமை குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இறுதியாக போர் நிறுத்தம் செய்வதாக இலங்கை அரசு அறிவித்தது. மேலும் தமிழர் பகுதிகளில் நிவாரணப் பணிகள் துவங்கப்படும் என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கை ராணுவம் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழர் பகுதிகளில் விமானத் தாக்குதலை நிறுத்துமாறும், கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. புலிகளுக்கு எதிரான தாக்குதலில் தமிழர்கள் காயமடைவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனிமேல் எங்களது படையினர் புலிகளிடம் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மட்டுமே ஈடுபடுவர் என்று கூறப்பட்டுள்ளது.

தாக்குதலை முழுமையாக நிறுத்துவதாக இலங்கை கூறவில்லை. புலிகளிடமிருந்து தமிழர்களை மீட்கும் நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் தொடரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தையும் தமிழ்நாட்டு மக்களையும் எமாத்தும் கூட்டு நாடகம்.

அம்மா ஈழத்தை பெற்றுத்தர இருப்பதாக கூறிவிட்டார். கருணாநிதி வேற என்னத்தை செய்ய???

  • தொடங்கியவர்

உலகத்தையும் தமிழ்நாட்டு மக்களையும் எமாத்தும் கூட்டு நாடகம்.

என்றுதான் நானும் நினைக்கிறேன்....அதற்காக நம் போராட்டம் தளர்வடையக் கூடாது.

பொதுமக்கள் மீது தொடர்ந்தும் விமானத்தாக்குதல், செல்வீச்சு தாக்குதல் நடந்துகொண்டு இருப்பதாக ஐபிசி சொல்கிறது.

  • தொடங்கியவர்

பொதுமக்கள் மீது தொடர்ந்தும் விமானத்தாக்குதல், செல்வீச்சு தாக்குதல் நடந்துகொண்டு இருப்பதாக ஐபிசி சொல்கிறது.

கொழும்பு: இலங்கை அரசு போர் நிறுத்ததை அறிவித்துவிட்டதாக மத்திய அரசு உறுதிமொழி தந்துள்ளதாகக் கூறி முதல்வர் கருணாநிதிஉண்ணாவிரத்தை கைவிட்டாலும் அது தாற்காலிக போர் நிறுத்தமே.

கருணாநிதியின் உண்ணாவிரதத்தையடுத்து இன்று காலை மத்திய அரசுதந்த நெருக்கடியையடுத்து இலங்கை ராணுவம் வெளியிட்ட சிறிய அறிக்கையில்,

தமிழர் பகுதிகளில் விமானத் தாக்குதலை நிறுத்துமாறும், கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. புலிகளுக்கு எதிரான தாக்குதலில் தமிழர்கள் காயமடைவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனிமேல் எங்களது படையினர் புலிகளிடம் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மட்டுமே ஈடுபடுவர் என்று கூறப்பட்டுள்ளது.

தாக்குதலை முழுமையாக நிறுத்துவதாக இலங்கை கூறவில்லை. புலிகளிடமிருந்து தமிழர்களை மீட்கும் நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் தொடரலாம்.

ஆனால், இலங்கை போர் நிறுத்தம் அறிவித்தது திமுகவுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. ஆனால், இத்தனை காலம் காத்திருந்துவிட்டு தேர்தல் வரும்போது தான் இந்த உண்ணாவிரதத்தை நடத்தி தமிழர்களை காக்க முயன்றிருக்க வேண்டுமா என்ற கேள்வி திமுகவை நோக்கி எழுந்துள்ளது.

அதே போல இலங்கையை நெருக்க முடியும் என்றாலும் கூட மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தது என்ற கேள்வியும் காங்கிரசை நோக்கி எழுந்துள்ளது.

இப்போதைக்கு திமுகவும்-காங்கிரசும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், தேர்தல் நேரத்தில் இலங்கையில் மீண்டும் என்ற தகவல் ஏதும் வந்தால் அது இந்தக் கூட்டணிக்கு பெரும் பாதகமாக அமையும் என்பது நிச்சயம்

நன்றி: தட்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் நிறுத்துவதாக இலங்கை அறிவிப்பு- உண்ணாவிரதத்தை முடித்தார் கருணாநிதி

திங்கள்கிழமை, ஏப்ரல் 27, 2009, 9:03

சென்னை: இலங்கையில் உடனடியாக தாக்குதலை நிறுத்துவதாக மத்திய அரசிடம் அந் நாடு உறுதிமொழி தந்துள்ளது. இதையடுத்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முதல்வர் கருணாநிதி முடித்துக் கொண்டார்.

கருணாநிதியின் உண்ணாவிரதத்தையடுத்து இலங்கை அரசிடம் மிகக் கடுமையான பேச்சுவார்த்தையை மத்திய அரசு தொடங்கியது. போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என நெருக்குதல் தந்தது. இதையடுத்து அந் நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதம் நடத்தி, போரை உடனடியாக நிறுத்துவதாக மத்திய அரசுக்கு உறுதிமொழி தந்தது.

இத் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொலைபேசி மூலம் முதல்வர் கருணாநிதியிடம் தந்ததையடுத்து தனது உண்ணாவிரதத்தை நிறுத்துவதாக அறிவித்தார்.

முன்னதாக இலங்கையில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் கோரி அண்ணா சமாதி அருகே இன்று காலை 5 மணிக்கு திடீர் உண்ணாவிரதம் தொடங்கினார்.

வழக்கம்போல் இன்று காலை 4.45 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் வழக்கமான யோகா பயிற்சிக்காக அண்ணா அறிவாலயம் செல்வதாக வீட்டினர் நினைத்திருக்க, காரை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு செலுத்துமாறு கருணாநிதி உத்தரவிட்டார்.

அங்கு சென்றதும் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு திடீரென ஒரு நிழற் குடையின் கீழ் தனது வீல் சேரிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.

அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகளும் உதவியாளர்களும் முதல்வரின் வீட்டினருக்குத் தகவல் தரவே அவர்கள் விரைந்து வந்தனர். அவரது மருத்துவர் கோபாலும் விரைந்து வந்தார்.

டாக்டர்கள் கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து காலையில் சாப்பிடும் மாத்திரையை சாப்பிடுமாறு கோரினர். ஆனால், கருணாநிதி அதை சாப்பிட மறுத்து விட்டார்.

இதையடுத்து மூத்த அமைச்சர்களுக்கு தகவல் தரப்பட்டு அவர்களும் ஓடி வந்தனர். உண்ணாவிரதம் இருக்க வசதியாக ஏற்பாடுகளை செய்தனர், பந்தல் அமைத்ததோடு, அருகில் கட்டிலும் போடப்பட்டது.

இதற்கிடையே முதல்வர் உண்ணாவிரதத்தை அறிந்து ஏராளமான திமுக தொண்டர்கள் அண்ணா நினைவிடம் முன் குவிந்தனர். இதையடுத்து தொண்டர்கள் அமர பந்தல் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டன.

கருணாநிதியி் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடன் அமர்ந்தனர்.

காலை 9.15 மணிக்கு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் தலைமையிலான டாக்டர்கள் குழு கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து அவரை படுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து படுத்தபடி அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்.

உண்ணாவிரதம் நடக்குமிடத்தில் மத்திய அமைச்சர் பாலு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் இருந்தனர்.

இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் வாசன், முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், குமரி அனந்தன் உள்பட ஏராளமானோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் மத தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர் உண்ணாவிரத்ததை கைவிடவும் கோரினர். ஆனால், அதை ஏற்க கருணாநிதி மறுத்துவிட்டார்.

சத்யராஜ், ராதாரவி சந்திப்பு:

உண்ணாவிரதம் இருந்து வரும் முதல்வர் கருணாநிதியை, நடிகர்கள் சத்யராஜ், ராதாரவி ஆகியோர் சந்தித்து, உடல் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேபோல நடிகை விஜயக்குமாரியும் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இந் நிலையில் போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி ராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்தார்.

இதையடுத்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக கருணாநிதி அறிவித்தார்.

தனது உண்ணாவிரதத்தை கைவிடும் முடிவை அறிவித்து முதல்வர் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இலங்கையின் பாதுகாப்பு கவுன்சில் இன்று காலை கூடி தமிழர்களுக்கு எதிரான போர் நடவடிக்கைளை நிறுத்துவது என்ற முடிவை எடுத்துள்ளது.

மேலும், இனிமேல் தமிழர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

எனவே இந்த அளவோடு உண்ணாநோண்பு திரும்பப் பெறப்படுகிறது என்றார்.

முன்னதாக உண்ணாவிரதம் இருந்த முதல்வர் கருணாநிதிக்கு அவ்வபோது தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க அவருக்கு ஏர் கூலர்களும் பேன்களும் வைக்கப்பட்டிருந்தன.

தற்ஸ்தமிழ்

  • தொடங்கியவர்

Sri Lanka continues air strikes violating own announcement - Puleedevan

[TamilNet, Monday, 27 April 2009, 07:45 GMT]

Two Sri Lanka Air Force (SLAF) fighter bombers continued to bomb civilian targets in Mu'l'li-vaaykkaal after the announcement by the Sri Lankan forces that it would not deploy heavy weapons or carry out air attacks as pressure mounted from the International Community. LTTE's Director of Peace Seceratariat, S. Puleedevan, when contacted by TamilNet told that SLAF bombers were attacking civilian targets at Mu'l'li-vaaykkaal at 12:50 p.m. and again at 1:10 p.m. despite the announcement to cease such attacks. He blamed Colombo for "attempting to deceive the International Community, including the people of Tamil Nadu," with the announcement.

நன்றி: Tamilnet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாடகம் அற்புதமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.மகிந்

No ceasefire in Sri Lanka - Military

Military spokesman Udaya Nanayakkara speaking to the Daily Mirror ascertained that the government has not declared a ceasefire. He clarified that only the use of heavy weapons and combat aircraft will be halted. His comment came after some International Media claimed that Sri Lanka has declared a ceasefire with the LTTE.

The Government statement;

“Government of Sri Lanka has decided that combat operations have reached their conclusion. Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian casualties.

Our security forces will confine their attempts to rescuing civilians who are held hostage and give foremost priority to saving civilians”.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=47236

எல்லாம் வெறும் ஏமாற்று நாடகம்

:huh::unsure:

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார்

அப்ப இவ்வளவு காலமும் செய்தது தமிழினப் படுகொலைதான் என்று ஒத்துக்கொள்கிறானோ?! அதென்ன கனரக ஆயுதம் பாவிக்காமல் யுத்தம்? சனம் ஒன்றும் சாக மாட்டுதோ? இவ்வளவு காலமும் வாந்தாக்குதலிலும், ஆட்டிலெறியிலையும் மட்டும்தான் சனம் செத்ததோ? ஆருக்கு ரீல் விடுகிறான்? அதைக் கேட்டுத் தமிழ்நாட்டு மக்களும் நிம்மதிப்பெருமூச்சு விடுவது அநியாயம்.

புலிகளின்ர யுத்த நிறுத்த அறிவிப்பை ஏற்கேலாது எண்டு சொல்லி மூன்று முனைகளினூடாக முன்னேறி வரும் சிங்களப் பயங்கரவாதம் இதுவரை 1000 பேரைக் கொன்றிருக்கிறது. கொடூரமான விமானத் தாக்குதலும் அகோர பீரங்கித்தாகுதலும் கடலிலிருந்து நடக்கிறதே? கலைஞரே யாரை ஏமாற்றுகிறீர்கள்? யுத்த நிறுத்தமுமில்லை ஒரு மயிருமில்லை. அகோரமான இனவழிப்பு இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. சும்மா சோனியாவின்ர சீலைக்குள்ள கிடக்கிறதை விட்டுப்போட்டு வீட்டை போய் நித்திரை கொள்ளுங்கோ.

இந் நிலையில் போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி ராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்தார்.

இதையடுத்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக கருணாநிதி அறிவித்தார்.

இது அநியாயம், அக்கிரமம். அவன் யுத்த நிறுத்தமுமில்லை, ஒரு கோதாரியுமில்லை என்று திரும்பத் திரும்ப அறிக்கை விடுகிறான். இந்த பரதேசிகள் சிதம்பரம் என்கிற நாய் ஏதோ சொல்லிச்சுதாம் என்று உண்ணாவிரதம் கைவிட்டு வீரவசனம் பேசிக்கொண்டிருக்குதுகள். கடவுளே, இது மரத்தால விழுந்தவனை மாடேறி மிதிச்ச கதைதான். இனிப் போராட்டமெல்லாம் படுத்துவிடும். சிங்களவன் காலாட்டிக் காலாட்டிக் கொலை செய்யப்போறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.