Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கலைஞர்

Featured Replies

யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதான ஊடக செய்திக்கு அரசு மறுப்பு

யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது.

இருப்பினும் கனரக ஆயுதங்களை மற்றும் விமானத்தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=13357

  • Replies 56
  • Views 5.7k
  • Created
  • Last Reply

கலைஞர் போராட்டம் நடத்தும் போதெல்லாம் ரஜபக்ஸ்ச சாதகமாக பதில் அளிக்கிறான்.... அனேகமாக ரஜபக்ஸ என்ன செய்ய போகிறார் என்பதை அறிந்தே கருணாநிதி போராட்டங்களை நடத்துகிறார் என்பது மட்டும் தெளிவாக உள்ளது...

எமது தேசிய தலைவர் கைத்து செய்ய பட்டு விடுவார் எண்று கலைஞரும் இராஜபஸ்ச குடும்பம் போல நம்பினார் என்பதுதானே உண்மை... இலங்கையில் போரை நடத்துவது காங்கிரசும், திமுக தலைமையும்தானே...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sarath fonseka சொன்னது சரி ,இவர் ஒரு comedian

  • தொடங்கியவர்
ஒரு நாடகம் அற்புதமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.மகிந்
  • கருத்துக்கள உறவுகள்

cartd.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

cartd.jpg

மச்சான் கொலைஞரின் படம் என்ன அழகா இருக்கு :huh: ,எண்ட கண்ணே பட்டுடும் போல இருக்கு,நன்றி மச்சான்

  • தொடங்கியவர்

மச்சான் கொலைஞரின் படம் என்ன அழகா இருக்கு :huh: ,எண்ட கண்ணே பட்டுடும் போல இருக்கு,நன்றி மச்சான்

அடக் கடவுளே! நான் அதப்பாத்து இந்த கட்டுமஸ்த்தான உடம்பு நாலோட நிப்பாட்டிகிச்சேன்னு எழுத நெனச்சேன்......

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் , செத்தல் மிளகாய் சுத்திப்போடுங்கோ .......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சான் , செத்தல் மிளகாய் சுத்திப்போடுங்கோ .......

ஓம் மச்சான் :huh: செத்தல் மிளகாய் என்ன பச்சை மிளகாயும் சேர்த்து சுத்தி கொலைஞரின் ................குள்ள(வாய்) தான் போடணும் அப்பத்தான் தெரியும் வலி என்றால் என்னவென்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் நாடகமே காட்டுறார்

Get Flash to see this player.

அடப்பாவிகளா காலைச்சாப்பாட்டை மட்டும் விட்டதற்க்கு பெயர் உண்ணாவிரதமா?

இந்த குள்ளநரித்தனத்தை என்னவென்று சொல்வது

  • கருத்துக்கள உறவுகள்

சிலருடைய முகமூடிகளைக் கிழிக்கும் அNது வேளை, அதை இந்த நேரத்தில் தொடர்ந்து செய்வது பிரியோசனமும் அற்றது. இந்த நேரம் என்பது மிகவும் நெருக்கடியான, மிகவும் கடினமான காலப்பகுதியாகும். அந்த நேரங்களில் ஏன் இதற்காக நேரத்தை வீணடிக்கினக்றீர்கள் உறவுகளே??

இந்திய அரசியல் சாக்கடையில் ஊறினதுகள் எல்லாம் ஈழமக்களின் குருதியில் அரசியல் செய்யிறது தான் வேதனையிலும் வேதனை :unsure:

  • தொடங்கியவர்

என் நாடகமே காட்டுறார்

சேகுவாரா....ஒரு நேர பட்டினிக்கு கிடப்பவர் மாதிரியா இருக்கு, பாவம் பரமேஸ்வரனும் அவரைப் போன்ற எண்ணற்ற தமிழன்களும் தமிழச்சிகளும்.

சிலருடைய முகமூடிகளைக் கிழிக்கும் அNது வேளை, அதை இந்த நேரத்தில் தொடர்ந்து செய்வது பிரியோசனமும் அற்றது. இந்த நேரம் என்பது மிகவும் நெருக்கடியான, மிகவும் கடினமான காலப்பகுதியாகும். அந்த நேரங்களில் ஏன் இதற்காக நேரத்தை வீணடிக்கினக்றீர்கள் உறவுகளே??

இரவெல்லாம் போராட்டத்தில் நின்று கோசம் எழுப்பியதால் என் போன்றோருக்கு இந்த நாடகம் விமர்சனங்களுக்குள்ளாகிறது....

Edited by Sniper

  • கருத்துக்கள உறவுகள்

என் நாடகமே காட்டுறார்

நல்ல நாடகம்.. அந்த இடத்தில நான் நிண்டு இருக்கனும் அம்பிய தூக்கி தலைக்கு மேல போட்டு இருப்பேன்

கலைஞர் போராட்டம் நடத்தும் போதெல்லாம் ரஜபக்ஸ்ச சாதகமாக பதில் அளிக்கிறான்.... அனேகமாக ரஜபக்ஸ என்ன செய்ய போகிறார் என்பதை அறிந்தே கருணாநிதி போராட்டங்களை நடத்துகிறார் என்பது மட்டும் தெளிவாக உள்ளது...

எமது தேசிய தலைவர் கைத்து செய்ய பட்டு விடுவார் எண்று கலைஞரும் இராஜபஸ்ச குடும்பம் போல நம்பினார் என்பதுதானே உண்மை... இலங்கையில் போரை நடத்துவது காங்கிரசும், திமுக தலைமையும்தானே...??

உண்மை..

கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென படையினருக்கு அரசு உத்தரவிட்ட சில மணி நேரத்தில் விமானங்கள் குண்டு தாக்குதல்: விடுதலைப்புலிகள்

தமிழர்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல் போன்றவை நடத்தப்பட மாட்டாது என்று இலங்கை அரசும். இராணுவமும் வாக்குறுதி அளித்த சில மணி நேரங்களிலேயே அது மீறப்பட்டு, 2 போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில், 2 போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் சமாதானச் செயலக பணிப்பாளர் புலித்தேவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்இ இன்று பிற்பகல் 12.50 மணியளவில் (போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்திருப்பதாக கூறி கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்த நேரம் 12.30 மணி) முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் உள்ள இடங்களைக் குறி வைத்து இரண்டு போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.

அதேபோல, 1.10 மணிக்கு இன்னொரு முறை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல்களை நடத்த மாட்டோம் என அறிவித்த இலங்கை அரசு அதை மீறும் வகையிலும், உலக சமுதாயத்தையும், குறிப்பாக தமிழக மக்களையும் ஏமாற்றும் வகையில் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

மேலும். பாதுகாப்பு வலயப் பகுதியில். இலங்கை இராணுவம் தொடர்ந்து எறிகணைகளை வீசித் தாக்கி வருகின்றன. வலைஞர்மடப் பகுதியிலும் தாக்குதல் தொடருகிறது என்று கூறியுள்ளார்.

நன்றி : தமிழ்வின்

http://img90.imageshack.us/my.php?image=cartoon.gif

தமிழக கோமாளி அரசியல் வாதி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கேவளம் கெட்டவன் தமிழ் இனத்தில இருக்கிறான் என்று நினைக்க..மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கொலைஞரின் உண்ணாவிரதத்தை இணைத்து போர் நிறத்த செய்தி வேண்டுமென்றே கொலைஞர் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

hmespl_61031740904.jpg

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயாவுக்கு காட்டிய நாடகம் ........நன்றாக தான் நடித்தீர்கள். ராஜ பட்ஸ் இன் நடிப்பு இன்னும் பிரமாதம்....எத்தனை நாள் தான் ஏமாறுவாய் இந்த நாடிலே .....

  • கருத்துக்கள உறவுகள்

இதோட போய் சேர்ந்திருப்பார் எண்டு நினைச்சன். தப்பிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

hmespl_61031740904.jpg

இந்த படத்தை பாக்க கிழடு என்னவோ யோசிக்கிற மாரி இருக்கு.. :unsure:

தன்ர நாடகத்தை பற்றித் தான் யோசிக்கிறாரோ :unsure:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

i181.jpg

சென்னை, ஏப்.27:

தொலைக்காட்சிகளில் காலைச் செய்திகளைப் பார்த்த தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது, அந்தச் செய்தி.

'இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி முதலமைச்சர் கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதம்.'

காலதாமதமான உச்சபட்ச முயற்சி என்றாலும், தி.மு.க. தலைவரின் முனைப்பைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று மக்களில் ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர். 'எல்லாம் முடிந்துவிட்டதே. இப்போது இது தேவையா?' என்ற ஏமாற்றம் கலந்த கோபக்குரல் மற்றொரு புறம்.

சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று (ஏப்.27) அதிகாலை 6.10 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய கருணாநிதி, "இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் மகிழ்ச்சியான தகவல் வரும் என நேற்று இரவு வரை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் எந்தத் தகவலும் வரவில்லை. விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்து விட்டனர். ஆனால், அதை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சே, பல தமிழர்களின் உயிர்களை பலியாக்கி இருக்கிறார். அவர்களோடு சேர்த்து என் உயிரையும் பலி கொடுக்கிறேன். என்னுடன் திமுகவினர் யாரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். நான் மட்டுமே இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ள விரும்புகிறேன்," என்றார்.

தலைவரின் கட்டளை... உரிமையோடு மீறல்!

'தலைவர் உண்ணாவிரதம் இருக்க, நாங்கள் சும்மா இருப்பதா?' என்றபடி, தலைவர் கருணாநிதியின் அன்புக் கட்டளை மீறப்பட்டது. மதுரையில் மு.க.அழகிரி தலைமையிலும், திருச்சியில் கே.என்.நேரு தலைமையிலும், திருவாரூரில் அமைச்சர் மதிவாணன் தலைமையிலும், புதுக்கோட்டையில் மத்திய அமைச்சர் ரகுபதி தலைமையிலும் என தமிழகத்தின் முக்கிய இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள் தலைமையிலும் தொண்டர்கள் பலர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எவ்வித செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்று கருணாநிதி கேட்டுக் கொண்ட போதிலும், உண்ணாவிரதப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட பொள்ளாச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை பேருந்து நிறுத்தம், கடைகள் அடைப்பு என ஆங்காங்கே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் வகையில் சம்பவங்கள் பதிவாகத்தான் செய்தன.

முடிவுக்கு வந்த உண்ணாவிரதம்!

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த தமிழக முதலமைச்சர், "ஈழத்தில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்கிறேன்," உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார்.

நண்பகல் 12.30...

தி.மு.க. நிர்வாகிகளும், பல்வேறு கட்சித் தலைவர்களும் வருகை தந்து கருணாநிதியின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தவண்ணம் இருந்த நிலையில், மதியம் 12.30 மணியளவில் சேல்பேசியில் தகவல் ஒன்று வந்தது. அதைத் தொடர்ந்து ஓர் அறிக்கையை வாசித்தார் கருணாநிதி.

"இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று காலை நடந்தது. அதில், போரை நிறுத்திக் கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இலங்கையில் ராணுவத்தினர் எவ்வித தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடமால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணப்பணிகள் மேற்கொள்வர் என்ற அதிகாரப்பூர்வ தகவல், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மூலம் கிடைத்துள்ளது," என்றார் கருணாநிதி.

இதைத் தொடர்ந்து, போரை நிறுத்த வேண்டும் என்ற தனது வலியுறுத்தல் நிறைவேற்றப்பட்டு விட்டதால், இந்த வெற்றிகரமான உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக கூறிய கருணாநிதி, 12.40 மணிக்கு அண்ணா நினைவிடத்தில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இலங்கையில் போர் நிறுத்தமா?!

காலவரையற்ற போராட்டத்தை மேற்கொண்ட முதலமைச்சர் கருணாநிதி, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதாக தகவல் வந்துள்ளதாகக் கூறி, தொண்டர்களின் கரகோஷத்துக்கிடையே தனது ஆறரை மணி நேர உண்ணா நோன்பை முடித்துக் கொண்டார்.

அதன்பின், தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் செய்திகள் வெளியாக, இலங்கை அரசு தரப்பு செய்திகளை பலரும் நாடியவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

இலங்கை அதிபர் ராஜபக்சே அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "போர் நடவடிக்கைகள் அவற்றின் முடிவை எட்டியிருப்பதாக இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கனரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை பயன்படுத்துவதையும் ஆகாயமார்க்கமான தாக்குதல்களை மேற்கொள்வதையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினர் பணயமாக வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளோடு தங்களது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்வதோடு, பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மிகுந்த முன்னுரிமை வழங்குவர்," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் முழுமையான போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்பது உறுதியானது!

தொடரும் தாக்குதல்!

தமிழர்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல் போன்றவை நடத்தப்பட மாட்டாது என்று இலங்கை அரசும், ராணுவமும் வாக்குறுதி அளித்த சில மணி நேரங்களிலேயே அது மீறப்பட்டு, 2 போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அமைதிச் செயலக இயக்குநர் புலிதேவன் கூறுகையில், "இன்று பிற்பகல் 12.50 மணியளவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் உள்ள இடங்களைக் குறி வைத்து இரண்டு போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. அதேபோல, 1.10 மணிக்கு இன்னொரு முறை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல்களை நடத்த மாட்டோம் என அறிவித்த இலங்கை அரசு அதை மீறும் வகையிலும், உலக சமுதாயத்தையும், குறிப்பாக தமிழக மக்களையும் ஏமாற்றும் வகையில் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு வளையப் பகுதியில் இலங்கை ராணுவம் தொடர்ந்து எறிகணைகளை வீசித் தாக்கி வருகின்றன. வலைஞர்மடப் பகுதியிலும் தாக்குதல் தொடருகிறது," அவர் கூறியுள்ளதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறுதலளிக்காத நிகழ்வுகள்!

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட பிறகும், இலங்கையில் இன்னும் போர் நிறுத்தம் முழுமையாக அமல்படுத்தப்படாதது, தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, உண்ணாவிரதத்தைக் கைவிட்ட முதலமைச்சர் கருணாநிதிக்கே கவலையளித்திருக்கும்.

அண்மைக்காலமாகவே இலங்கைத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. பெரும் பின்னடைவைச் சந்தித்திருப்பது வெளிப்படையாக தெரிந்ததே.

'கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலேயே, தாம் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அரசை வலியுறுத்தும் நடவடிக்கையோடு, ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வோம் என்று தி.மு.க. நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், சில நிர்பந்தங்கள்(!) காரணமாக அப்படியொரு முடிவை தலைமையால் எடுக்க முடியாமல் போனது.

அதைத் தொடர்ந்து, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட தி.மு.க. மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களையும், காங்கிரஸ் அரசு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இதனால், அக்கட்சி மீது மக்களிடையே அதிருப்தி நிலவியது. தி.மு.க.வின் ஒவ்வொரு முயற்சியிலும் அந்த அதிருப்தி அதிகரித்ததே தவிர, கொஞ்சமும் நற்பெயரை ஈட்டித்தரவில்லை.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.வை புரட்டி எடுக்கின்றன.

தனித் தமிழ் ஈழம் தான் தீர்வு என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பேச்சு, தமிழக அரசியலலில் சலசலப்பை ஏற்படுத்த, அந்த நிலைப்பாட்டால் தமது கட்சிக்கு எதிரான அலை மேலும் மிகுதியாக வீசுமோ என்ற அச்சத்திலேயே கருணாநிதி உண்ணாவிரத திட்டத்தை செயல்படுத்தினார்,' என்று அரசியல் நோக்கர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இன்றைய உண்ணாவிரத போராட்டமும் முடிவும் கூட, இலங்கைத் தமிழரைக் காப்பாற்றுவதற்கு உகந்ததொரு முயற்சியாக இல்லாமல் போய்விட்டதால், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஆறுதலற்ற நிகழ்வாக இருந்திருக்கக் கூடும்.

மற்றொரு வகையில், தேர்தலை மையமாகக் கொண்டே இன்றைய உண்ணாவிரத நாடகமும் அரங்கேறியிருப்பதாக எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டையும் மக்களால் நம்பாமல் இருக்க முடியாத நிலை.

அண்மையில் நடந்து முடிந்த பொது வேலைநிறுத்தப் போராட்டத்தைப் போலவே, இந்த ஆறரை மணிநேர உண்ணாவிரதப் போராட்டமும் மக்களுக்கு தி.மு.க. தலைமை மீது அதிருப்தியை அதிகரிக்கச் செய்யும் ஓர் ஆறுதலளிக்காத நிகழ்வாகவே ஆகியுள்ளது என்பது நடுநிலையாளர்களின் கருத்து!

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

எறிந்த இடத்திற்கே மோசம் வந்ததுபோல்.....

கல் மீண்டும் கலைஞரின் மேல் எமக்கிருந்த கொஞ்ச நம்பிக்கையையும் பாழடித்துவிட்டது

இனி

கலைஞர்தமிழீழ தமிழக உறவுகளின் நன்மதிப்பை பெறுவது என்பது.....???

ஆயிரம் கோடிபெறும் கேள்வி இது....

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியைக் கேவலமாகப் பேசுவதால் ஏதாவது சாதித்து விட்டீர்களா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.