Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் அடங்காபற்று ஒத்திவைக்கபட்டுள்ளது

Featured Replies

கனடாவில் அடங்காபற்று ஒத்திவைக்கபட்டுள்ளது

நாளை கனடாவில் நடைபெறவிருந்த அடங்காபற்று பிற்போடப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோவில் இன்று நடைபெறவிருந்த அடங்காப்பற்று நிகழ்வு ஒத்திவைப்பு

இது தொடர்பாக கனடியத் தமிழ் மாணவர்களும் கனடியத் தமிழர் சமூகமும் தெரிவித்திருப்பதாவது:

பல தரப்பினரது அவசர வேண்டுகோள்களுக்கு இணங்க ரொறன்ரோவின் நகரின் மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (05.05.09) நடைபெறவிருந்த 'அடங்காப்பற்று' மற்றும் மனிதச்சங்கிலி - 3 ஆகிய நிகழ்வுகள் தற்காலிகமாக பின்போடப்படுகின்றது.

அதேவேளையில் ஒன்ராறியோ மாநில நாடாளுமன்றம், குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெறும் உண்ணாநிலைப் போராட்டம் உறுதியுடன் பாரிய அளவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

எமது தாயக அவலம் தீர்க்கும் வரை என்றும் அடங்காது எமது 'அடங்காப்பற்று'.

'அடங்காப்பற்று' மற்றும் மனிதச்சங்கிலி - 3 ஆகிய நிகழ்வுகளின் மேலதிக விபரங்களை விரைவில் அறியத்தரப்படும்.

இந்த அவசர அறிவித்தலை உடன் எமது தமிழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரும் வேண்டப்படுகின்றனர்.

உறுதியும், ஓர்மமும் கொண்ட ஒற்றுமைப்பட்ட சமூகமாக எமது தாயக அவலம் தீரும்வரை தொடர்ந்தும் முன்னெறுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உறுதியும், ஓர்மமும் கொண்ட ஒற்றுமைப்பட்ட
இதுக்கு வரைவிலக்கணத்தை சம்பந்தப்பட்டவர்கள் முதலில் கண்டு பிடித்து விட்டு இந்த செய்தியை 'ஊடகங்க"ளுக்கு அனுப்பியிருக்கனும்.

இதுக்கு வரைவிலக்கணத்தை சம்பந்தப்பட்டவர்கள் முதலில் கண்டு பிடித்து விட்டு இந்த செய்தியை 'ஊடகங்க"ளுக்கு அனுப்பியிருக்கனும்.

உறுதியும், ஓர்மமும் கொண்ட ஒற்றுமைப்பட்ட என்போரைப் பார்க்கவேண்டுமானால் வழமைபோல இன்றிரவும் 360 university avenue க்கு வரவும்.

எல்லோராலும் கைவிடப்பட்ட சிலர் (நீங்களும் கூட இருக்கலாம்) அங்கே இருக்கின்றனர். அவர்களிடம் கேளுங்கள்.

உங்களுக்கு தெரியாதா? வீரம் பேசுவதிலேயே எமது ஊடகங்களின் நேரம் போகின்றது

Edited by nishanthan

நான் உட்பட எனக்குத் தெரிந்த பலர் இன்று விடுமுறை எடுத்து அடங்காப் பற்று நிகழ்வில் கலந்து கொள்ள இருந்தனர்.. எம் மக்களின் அன்றாடம் உயிர் வாழ்தலே கேள்விக்குள்ளாகி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஒரு நாள் வேலைக்கு விடுமுறை எடுத்து அது வீணா போவது ஒரு கவலை பட வேண்டிய விடயமே அல்ல. ஆனால், இவர்களின் தலை வால் போட்டிக்காகவும், அற்ப சுயலாபத்திற்காகவும் மக்களுடைய போராட்ட உணர்வினை கேலிக்குள்ளாக்கின்றனர். இந்த நிமிடம் வரை இந்த நிகழ்வை ஏன் ஒத்திவைத்தனர் என்பதற்கான எந்தவிதமான தகுந்த விளக்கமும் மக்களுக்கு கொடுக்கப் படவும் இல்லை. நாம் என்ன சொன்னாலும் நீங்கள் கேட்க வேண்டும் என்ற ரீதியில் இவர்களின் தலைமைத்துவ போதை தலைகேறி விட்டதா?

இதை எல்லாம் ஒத்திப் போட்டவர்கள், கடந்த ஞாயிற்றுக் கிழமை கந்தசாமி கோவிலில் பரதநாட்டிய நடன நிகழ்ச்சியினை மட்டும் சிறப்புற நடாத்தி மகிழ்ந்து கொண்டனர். வன்னி மக்களின் துயரத்தின் மத்தியில் இப்படியான ஒரு நிகழ்ச்சி தேவையா என கேட்டு ஏற்கனவே ஒரு முறை ஒத்திவைத்த இந்த நிகழ்ச்சி, எந்த வன்னி மக்கள் படு மோசமான படுகொலையை அனுபவித்து கொண்டிருக்கின்றனரோ அதே காலகட்டத்தில் மீண்டும் கடந்த ஞாயிறன்று (3-May-2009) நடத்தப் பட்டது. ஏன் நடாத்தப் பட்டது என்று கேட்கும் போது அவர்கள் புலிகளின் பாடல்களிற்குத்தான் நடனம் ஆடினார்கள் என்று சப்பைக் கட்டும் கட்டப் பட்டது.

இன்னொரு கேள்வி, இந்த நிகழ்விற்கு கொடுக்கும் முன்னுரிமையும், ஊடக விளம்பரமும் ஏன் சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ள நிகழ்விற்கு கொடுக்கப் படவில்லை? இந்த கவனயீர்ப்பு மட்டூம் எல்லாராலும் கைவிடப் பட்டு இருக்கும் நிலைக்கு என்ன காரணம்?

----------------

பி.கு: தமிழ் தேசிய ஆதரவு சார்பான எல்லா கவனயீர்ப்பு நிகழ்விற்கும் முழு அளவிலான ஊடக ஆதரவை தரும் யாழ் களம், அப்படியான நிகழ்வுகளில் நடாக்கும் சுயலாப கேலிக்கூத்துகளை வெளிக்கொண்டு வருவதிலும் முன்னிற்க வேண்டும் என்று தாழ்மையுடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றோம். என்னுடைய இந்த பதிவை நீக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். தமிழ் தேசிய போராட்டம் எனும் பெயரில் சுயலாபம் ஈட்டும் பேடிகளை இனம் கண்டு ஒதுக்குவதும் கூட தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரமரணம் அடையும் எம் வீர மறவர்களுக்கு செய்யும் ஒரு காணிக்கையாக இருக்கும்

Edited by நிழலி

Canada will not tolerate pro LTTE groups

Canada has said it will not extend any support to pro LTTE groups operating on their soil in the guise of Tamil disapora and has warned that such people will be dealt with severely. Canada’s Minister of International Cooperation, Beverly J. Oda who arrived in the country today for a one day visit said that Canada had de-listed the LTTE in 2006 and therefore would not tolerate any Tiger supporters.

--------------

Ottawa Gives $3 million in Aid to Lanka

Canada's International Co-operation Minister Bev Oda announced $3 million in humanitarian aid to Sri Lanka, but has not received any indication that the government will call a ceasefire, the Canadian media reported today.

The money will help the Red Cross and Doctors Without Borders provide food, medicine and shelter in the strife-torn country.

Oda says she asked the government for a ceasefire and full access for international monitors in the country’s Tamil regions. According to Oda, the Sri Lankan government listened politely, but refused to comment on the ceasefire request.

The government also offered no promises to Oda's request to allow international media into the war zone.

டெயிலிமிரர்.

இப்படி கனடா இரட்டை வேடம் போட நம்மவரிகளின் ஒற்றுமையற்ற செயற்பாடுகளும் காரணமாக இருக்கலாம். :rolleyes::D:(

இதை எல்லாம் ஒத்திப் போட்டவர்கள், கடந்த ஞாயிற்றுக் கிழமை கந்தசாமி கோவிலில் பரதநாட்டிய நடன நிகழ்ச்சியினை மட்டும் சிறப்புற நடாத்தி மகிழ்ந்து கொண்டனர். வன்னி மக்களின் துயரத்தின் மத்தியில் இப்படியான ஒரு நிகழ்ச்சி தேவையா என கேட்டு ஏற்கனவே ஒரு முறை ஒத்திவைத்த இந்த நிகழ்ச்சி, எந்த வன்னி மக்கள் படு மோசமான படுகொலையை அனுபவித்து கொண்டிருக்கின்றனரோ அதே காலகட்டத்தில் மீண்டும் கடந்த ஞாயிறன்று (3-May-2009) நடத்தப் பட்டது. ஏன் நடாத்தப் பட்டது என்று கேட்கும் போது அவர்கள் புலிகளின் பாடல்களிற்குத்தான் நடனம் ஆடினார்கள் என்று சப்பைக் கட்டும் கட்டப் பட்டது.

இந்த நிகழ்வில், கனடா தமிழ் மகளிர் அமைப்பினைச் சேர்ந்தவர்களின் மகள்மாரும் ஆடியிருப்பது தான் துயரம். நடன நிகழ்வு பார்த்து கைதட்டி ஆராவாரம் செய்து உற்சாகப் படுத்தும் நிலையிலா இன்று நாம் இருக்கின்றோம்? அரங்கம் ஒன்றில் மக்களை அழைத்து புலிகளின் பெயரால் (அவர்களின் சம்மதம் இன்றி) இவ் நிகழ்வை நடாத்திய இதே மகளிர் அமைப்பினரைச் சேர்ந்தவர்கள் நாளை எவ்வாறு மக்களை வீதிக்கு இறங்கி போராட வாங்கோ என்று அழைக்கப் போகின்றனர்?

  • கருத்துக்கள உறவுகள்

Canada will not tolerate pro LTTE groups

Canada has said it will not extend any support to pro LTTE groups operating on their soil in the guise of Tamil disapora and has warned that such people will be dealt with severely. Canada’s Minister of International Cooperation, Beverly J. Oda who arrived in the country today for a one day visit said that Canada had de-listed the LTTE in 2006 and therefore would not tolerate any Tiger supporters.

இலங்கையை போர் நிறுத்தம் செய்யச்சொல்லிக் கேட்டிருப்பினம். அதுக்கு கனடாவில் புலி ஆதரவாளர்களை முதலில் கட்டுப்படுத்து எண்டு சிங்களவன் சொல்லியிருப்பான். அதுக்கு இவவும் ஏதாவ்து சொல்லியிருப்பா. ஆனால் உண்மையில இப்பிடிச் சொன்னாவோ தெரியாது. ஏனெண்டால் கூகிள் செய்து பார்த்ததில டெய்லி மிரரில் மட்டும் தான் இது வந்திருக்கு..! :(:rolleyes:

கனேடிய அரசமைப்புச் சட்டத்தில உள்ள அடிப்படைக் கூறுகளில் இரண்டு, பேச்சுச் சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்று கூடும் உரிமை. இங்கே நடப்பது இந்த இரண்டும்தான். யாரும் புலிகளுக்கு காசு சேர்க்கவில்லை. கனேடிய அரசால்கூட இந்த கவன ஈர்ப்பு நிகழ்வுகளைத் தடுக்க முடியாது என்பதுதான் யதார்த்தம்.

இதைவிட முக்கியமாக, ஒட்டாவாவில் சில மாதங்களுக்கு முன்னர் பேருந்து ஊழியர்கள் வாரக்கணக்காக வேலைநிறுத்தம் செய்து நகரத்தையே நிலைகுலைய வைத்தார்கள். அவற்றுக்கு மாற்றீடு செய்யக்கூட திராணியற்ற அரசாகத்தான் இந்த அரசு இருந்திருக்கிறது. இவ‌ர்க‌ளாவ‌து த‌டுத்து நிறுத்திற‌தாவ‌து.

இன்றைய மனித சங்கிலி நிறுத்தப்பட்டதற்கு காரணம் வேறு ஏதாவதாகத்தான் இருக்க வேண்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு கேள்வி, இந்த நிகழ்விற்கு கொடுக்கும் முன்னுரிமையும், ஊடக விளம்பரமும் ஏன் சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ள நிகழ்விற்கு கொடுக்கப் படவில்லை? இந்த கவனயீர்ப்பு மட்டூம் எல்லாராலும் கைவிடப் பட்டு இருக்கும் நிலைக்கு என்ன காரணம்?

கனடிய தமிழ் ஊடகங்கலிடமே இக்கேள்வியை கேட்டு விடுங்கள் , நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

நான் உட்பட எனக்குத் தெரிந்த பலர் இன்று விடுமுறை எடுத்து அடங்காப் பற்று நிகழ்வில் கலந்து கொள்ள இருந்தனர்.. எம் மக்களின் அன்றாடம் உயிர் வாழ்தலே கேள்விக்குள்ளாகி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஒரு நாள் வேலைக்கு விடுமுறை எடுத்து அது வீணா போவது ஒரு கவலை பட வேண்டிய விடயமே அல்ல. ஆனால், இவர்களின் தலை வால் போட்டிக்காகவும், அற்ப சுயலாபத்திற்காகவும் மக்களுடைய போராட்ட உணர்வினை கேலிக்குள்ளாக்கின்றனர். இந்த நிமிடம் வரை இந்த நிகழ்வை ஏன் ஒத்திவைத்தனர் என்பதற்கான எந்தவிதமான தகுந்த விளக்கமும் மக்களுக்கு கொடுக்கப் படவும் இல்லை. நாம் என்ன சொன்னாலும் நீங்கள் கேட்க வேண்டும் என்ற ரீதியில் இவர்களின் தலைமைத்துவ போதை தலைகேறி விட்டதா?

இதை எல்லாம் ஒத்திப் போட்டவர்கள், கடந்த ஞாயிற்றுக் கிழமை கந்தசாமி கோவிலில் பரதநாட்டிய நடன நிகழ்ச்சியினை மட்டும் சிறப்புற நடாத்தி மகிழ்ந்து கொண்டனர். வன்னி மக்களின் துயரத்தின் மத்தியில் இப்படியான ஒரு நிகழ்ச்சி தேவையா என கேட்டு ஏற்கனவே ஒரு முறை ஒத்திவைத்த இந்த நிகழ்ச்சி, எந்த வன்னி மக்கள் படு மோசமான படுகொலையை அனுபவித்து கொண்டிருக்கின்றனரோ அதே காலகட்டத்தில் மீண்டும் கடந்த ஞாயிறன்று (3-May-2009) நடத்தப் பட்டது. ஏன் நடாத்தப் பட்டது என்று கேட்கும் போது அவர்கள் புலிகளின் பாடல்களிற்குத்தான் நடனம் ஆடினார்கள் என்று சப்பைக் கட்டும் கட்டப் பட்டது.

இன்னொரு கேள்வி, இந்த நிகழ்விற்கு கொடுக்கும் முன்னுரிமையும், ஊடக விளம்பரமும் ஏன் சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ள நிகழ்விற்கு கொடுக்கப் படவில்லை? இந்த கவனயீர்ப்பு மட்டூம் எல்லாராலும் கைவிடப் பட்டு இருக்கும் நிலைக்கு என்ன காரணம்?

----------------

பி.கு: தமிழ் தேசிய ஆதரவு சார்பான எல்லா கவனயீர்ப்பு நிகழ்விற்கும் முழு அளவிலான ஊடக ஆதரவை தரும் யாழ் களம், அப்படியான நிகழ்வுகளில் நடாக்கும் சுயலாப கேலிக்கூத்துகளை வெளிக்கொண்டு வருவதிலும் முன்னிற்க வேண்டும் என்று தாழ்மையுடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றோம். என்னுடைய இந்த பதிவை நீக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். தமிழ் தேசிய போராட்டம் எனும் பெயரில் சுயலாபம் ஈட்டும் பேடிகளை இனம் கண்டு ஒதுக்குவதும் கூட தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரமரணம் அடையும் எம் வீர மறவர்களுக்கு செய்யும் ஒரு காணிக்கையாக இருக்கும்

இந்த நிகழ்வில், கனடா தமிழ் மகளிர் அமைப்பினைச் சேர்ந்தவர்களின் மகள்மாரும் ஆடியிருப்பது தான் துயரம். நடன நிகழ்வு பார்த்து கைதட்டி ஆராவாரம் செய்து உற்சாகப் படுத்தும் நிலையிலா இன்று நாம் இருக்கின்றோம்? அரங்கம் ஒன்றில் மக்களை அழைத்து புலிகளின் பெயரால் (அவர்களின் சம்மதம் இன்றி) இவ் நிகழ்வை நடாத்திய இதே மகளிர் அமைப்பினரைச் சேர்ந்தவர்கள் நாளை எவ்வாறு மக்களை வீதிக்கு இறங்கி போராட வாங்கோ என்று அழைக்கப் போகின்றனர்?

???????? :o :o :o :o

  • கருத்துக்கள உறவுகள்

???????? :o :o :o :o

மகளிர் அமைப்பைப் பற்றி நிழலி எழுதும்போதே நினைச்சன். வல்வை அக்கா வருவா எண்டு..! :D

  • கருத்துக்கள உறவுகள்

சக பதிவாளர் , நண்பர் நிழலி அவர்களது ஆதங்கம் தான் எனதும் .......எனது பிள்ளைகளை இன்று அனுப்ப இருந்தேன் .ஒருவர் வேலையில்சொல்லி விடுப்பும் எடுத்து இருந்தார். இரவு தொலைகாட்சி செய்தியை பார்த்து ........அதிர்ச்சி அடைந்தேன் ......தமிழர் மனங்கள் மாறவேண்டும் .காலத்தின் தேவையை உணர்ந்து நடக்கவேண்டும் தமிழர் சிந்திக்க வேண்டும் . இன்னும் தமிழர் சிலர் திருந்தவில்லை........என்பது கசப்பான உண்மை .

வன்னியில் என்ன விளையாட்டுப்போட்டியா நடக்குது?

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் அமைப்பைப் பற்றி நிழலி எழுதும்போதே நினைச்சன். வல்வை அக்கா வருவா எண்டு..! :o

கொள்ளுப்பேராண்டி ரொம்ப நொந்து போயிருக்கேன் நக்கல் வேண்டாமே....

நிழலி எழுதிய அரங்க நிகழ்வு பற்றி எனக்கும் சில விடயங்கள் தெரியும். ஏனெனில் எனது மகளும் அந்நடன நிகழ்வில் நடனமாடுவதற்குப் பயிற்றப்பட்டு இருந்தார். கடந்த 10 ந்தேதி ஏப்ரல் மாதம் நிகழ இருந்த இந்நிகழ்வு தாயகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் இனப்படுகொலைகளைக் கண்டித்து இங்கு நடாத்தப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்காக பிற்போடப்பட்டது. ஆனால்...

கொள்ளுப்பேராண்டி ரொம்ப நொந்து போயிருக்கேன் நக்கல் வேண்டாமே....

நிழலி எழுதிய அரங்க நிகழ்வு பற்றி எனக்கும் சில விடயங்கள் தெரியும். ஏனெனில் எனது மகளும் அந்நடன நிகழ்வில் நடனமாடுவதற்குப் பயிற்றப்பட்டு இருந்தார். கடந்த 10 ந்தேதி ஏப்ரல் மாதம் நிகழ இருந்த இந்நிகழ்வு தாயகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் இனப்படுகொலைகளைக் கண்டித்து இங்கு நடாத்தப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்காக பிற்போடப்பட்டது ஆனால்

அடடா...இப்ப வன்னியில் இனப்படுகொலைகள் எல்லாம் முடிவுக்கு வந்துட்டுது என்று யாரும் சொல்லவேயில்லை...வன்னிச் சனமும் எல்லா ஈழ மக்களும் நிம்மதியான, சுதந்திரமான வாழ்க்கையை அடைந்து விட்டனர் என்றா பரதநாட்டிய நிகழ்வை நடாத்தினார்கள்? அதனால் தானா அடங்காப் பற்றையும் ஒத்தி வைத்தார்கள் (நிறுத்தினார்கள்)?

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

ஆ....? நிழலி சிறிது பொறுங்கள்

நீங்கள் எப்படி கனடா மகளிர் அமைப்பை இதற்குள் இழுக்கலாம்? உதாரணம் காட்ட முடியமா?

ஆ....? நிழலி சிறிது பொறுங்கள்

நீங்கள் எப்படி கனடா மகளிர் அமைப்பை இதற்குள் இழுக்கலாம்? உதாரணம் காட்ட முடியமா?

உங்களின் ( மகளிர் அமைப்பின்) மார்க்கம் பொறுப்பாளரின் மகளும் இதில் நாட்டியம் ஆடினார். கேட்டுப் பாருங்கள் அவரிடம். நாகரீகம் கருதி பெயரை தரவில்லை இங்கு. அதே போல் இந்த நிகழ்வின் ஒழுங்கமைப்பாளரான 'ச..அக்கா' என்று செல்லமாக அழைக்கப் படுபவரையும் எனக்கு நன்கு தெரியும்... புலிகளின் பெயரால் அவர்களின் எந்தவிதமான சம்மதமும் இன்றி நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தியரல்லவா அவர்

Edited by நிழலி

'ச அக்கா என்றதால உடனே சகாரா அக்கா என்று தவறாக நினைக்கவேண்டாம். இது வேறு 'ச அக்கா'

அடுத்ததாக பிற்போட பட்ட யுவன் சங்கர்ராஜா நிகழ்ச்சியும் நடக்கும்...நாங்களும் மந்தைகள் போல அள்ளுப்படுக்கொண்டு போய் அவுத்து போட்டுட்டு ஆடுற நடிகைகளை பார்த்து விசிலடிக்கலாம்...மக்களை வரவைக்க அந்த நடிகைகளை தாயக விடுதலை காணங்களுக்கு ஆட வைத்தாலும் வைப்பார்கள் ஏற்பாட்டாளர்கள்.

கடைசியில புலிகள் பேரை சொல்லி அனைவரும் வயிறு வளர்க்கலாம்....வன்னி சனம் முழுவதும் முல்லைதீவில மண்ணோடு மண்ணா போகட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிற்போட பட்டத்துக்கு முக்கிய காரணம்.... யூனிவர்சிட்டி அவேநியுவில கவனயீர்ப்பு

நடத்தபோய் காவல் துறைக்கு வீரம் காட்டியதன் விளைவு..

எங்கை பொய் நிண்டாலும் எங்கடை மக்கள் ஒண்டை புரிஞ்சு கொள்ள வேணும் ...நாங்கள் இங்க வீரம் காட்ட வரேல்லை.....எவ்வளவுக்கு புத்திசாலித்தனமா செயற்படுகிரோமோ அவ்வளவுக்கு நல்லது...எங்கடை முக்கிய குறிக்கோள் அங்கை சாகிற மக்களும் , தேசிய உரிமையும்தான்...

இது இந்திய இல்லை மறியல் செய்த உடனை பலன் கிடைக்கும் எண்டு....

கடந்த காலங்களில இருந்த எவ்வளவு நல்ல பெயர் சில விசமத்தன்மான் முன்னெடுப்புக்களால் போட்டு உடைக்கப்பட்டுள்ளது ..அதோடை ஒருவர் ஒண்டை முன்னெடுக்கும் பொது குறை சொல்லுறதை விட்டிட்டு நீங்களே போய் நிண்டு செய்யவேணும்..இல்லாட்டி ஊரட ஒத்து போகவேணும்...

அதை விட்டிட்டு

எங்கள் உணர்சிகளை காட்ட இது நேரம் அல்ல... அதைவிட இப்ப எங்களுக்குள்ள அடிபட்டு கொண்டு இருந்தம் எண்டா நேரம் பார்த்து எத்ரி அடிப்பான்..

மக்களே...இனி எது எங்க நடந்தாலும் தயவு செய்து உங்கடை உணர்சிகளை கொஞ்சம் அடக்கி .... புத்தியோட நடக்க பாருங்கூ.... வேற்றின மக்களோட முறாள் எடுத்து ...யாரோடை கவனத்தை ஈர்க்கபோரம்??

ஊடகங்களில வரவேணும் என்டிரதுக்காக கண்டதை எல்லாம் செய்ய வேண்டாம்...

அதோடே...யாராவது நாட்டியம் ஆடினா என்ன..கூத்து காட்டி என்ன..அவர்களை புறம் தள்ளிவிட்டு நாங்கள் என்ன செய்யவேணுமோ அதை செய்வம்...

எவ்வளவு கனேடிய ஊடகங்களில எவ்வளவு கீழ்த்தரமா எங்களை பற்றி எழுதிறான்?? எத்தினைபேர் அதுக்கு பதில் எலுதிரம்??? பினூட்டம் இல்லாமல் செய்தியாவே எழுத வேளிகிடேக்க நாங்கள் இங்கை எங்கடை ஊடகங்களுக்கு எடுத்து தொலைபேசியில வீரம் பேசுறதோ, அவியலை குறை சொல்லுரத்தோ ஒரு சததுக்க்க்கு பிரயோசனம் இல்லத்தை வேலை...

உங்களுக்கு ஆங்கிலம் தெரியாட்டி..உங்கடை பிள்ளையளுக்கு தமிழில சொல்லு அதை ஆங்கிலத்தில போடா சொல்லுங்கோ...இப்ப நாங்கள் செய்ய கூடிய ஒரே கவன ஈர்ப்பு ஊடகங்கள் ஊடகாத்தான் முடியும்...அதுக்கு நீங்கள் வேலைக்கு விடுப்பும் எடுக்க தேவையில்லை...

முடிவாக...நிதானம் வேண்டும்...புத்திசாலித்தனம் வேண்டும்...யோசிச்ச்ச்சு நடப்பம்....

லோயர்,

அடங்காப் பற்றை ஒத்திவைத்ததன் காரணம் காவல்துறையினர் தான் என்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. காவல் துறையின் அனுமதி பெறாமல் இவர்கள் இத்தனை ஏற்பாடுகளையும் செய்தார்கள் என்பதை நம்பவே முடியாது..... சரி, அது தான் காரணம் என்றால் மக்கள் எல்லாரையும் உண்ணாவிரதம் இருக்கும் குயின்ஸ் பார்கிற்கு வரச்சொல்லி இருக்கலாம் தானே? ஏன் அவர்களால் அப்படி அறிவிக்க முடியவில்லை? ஏனெனில்...அவர்களுக்கு பிடித்தமானவர் அல்ல அங்கு உண்ணாவிரதம் இருப்பது... யார் பெரியவர் என்ற பாழாய்ப் போன போட்டி எண்ணங்களும் சுயலாப நோக்கான குறுகிய எண்னங்களும் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட தடுத்தன. அப்படி அறிவித்து இருந்தால் உண்ணாவிரத போராட்டமே பெரும் ஆதரவினை பெற்று வெற்றிகரமானதாக அமைந்திருக்கும்

காவல் துறைதான் காரணம் எனில் அதனை வெளிப்படையாக தமிழ் மக்களுக்கு அறிவிப்பதில் என்ன நட்டம் வந்தது இவர்களுக்கு? அப்படி அறிவிப்பது, பொலிசுடன் விரும்பத்தகாத பிரச்சனைகளை ஏற்படுத்த முனையும் பேர்வழிகள் பற்றிய நல்ல விழிப்பை மக்களுக்கு ஏற்படுத்தகூடிய சந்தர்ப்பமாக அல்லவா இருக்கும்?

நடன நிகழ்வை குறிப்பிட வேண்டி வந்ததன் காரணம், இத்தகைய பேர்வழிகளின் முகத்திரையை கிழிப்பதற்காகவே. தமிழ் தேசியத்தின் பெயரால், தமக்கு லாபம் வராத விடயங்களை எதிர்த்து கொண்டு, தமக்கு லாபம் வரக்கூடிய வகைகளை செய்யும் இந்த பேர்வழிகளினால்தான் எம் போராட்டம் பல்லாண்டுகளாக நீடித்து கொண்டு ஈற்றில் ஒட்டுமொத்த வன்னி மக்களிற்கும் சவக்குழிகளை கிண்டிக் கொண்டூ இருக்கின்றது. இத்தகைய பேர்வழிகளை பற்றி மக்களிற்கான ஊடகங்களில் எழுதுவதை ஏன் விமர்சிக்க முயல்கின்றீர்கள். ஒற்றுமை என்பது போலிப் பேர்வழிகளினுடனும் ஒத்துப் போவது அல்ல. இத்தகைய பேர்வழிகளின் ஆட்டம் இன்னும் தொடருமாயின் கனடா எங்கும் இவர்களின் முகத்திரையை கிழிக்கும் போஸ்ரர்களை வெகு விரைவில் காணலாம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

தலைவர் பிரபாகரன் அவர்கள், புலம் பெயர் நாடுகள் எங்கும் போராட்டத்தினை இளையோர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கேற்றால் போல் இளையோர்கள் அணிதிரண்டு வருவதை பிடிக்காத ஒரு கூட்டம் தான் இந்த பிரச்சனைகளை ஏற்படுத்து கின்றது. ஏனெனில், இளையோரின் தன்னலமற்ற அணிதிரள்வினால் தம் தமிழ் தேசியத்தின் பெயரால் செய்யும் வயிற்றுப் பிழைப்புக்கு பங்கம் வந்துவிடும் என்ற பயம். அத்தகையவர்கள் தான் ஒரு நூறு பேரை வைத்து கொண்டு செய்ய சாத்தியமே இல்லாத சாலை மறியலை செய்ய முயன்று காவல்துறையினருடன் இளையோர்களை மல்லுக் கட்ட வைத்து அவர்களின் அணிதிரள்வின் மீது சேறு பூசினர்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் ( மகளிர் அமைப்பின்) மார்க்கம் பொறுப்பாளரின் மகளும் இதில் நாட்டியம் ஆடினார். கேட்டுப் பாருங்கள் அவரிடம். நாகரீகம் கருதி பெயரை தரவில்லை இங்கு. அதே போல் இந்த நிகழ்வின் ஒழுங்கமைப்பாளரான 'ச..அக்கா' என்று செல்லமாக அழைக்கப் படுபவரையும் எனக்கு நன்கு தெரியும்... புலிகளின் பெயரால் அவர்களின் எந்தவிதமான சம்மதமும் இன்றி நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தியரல்லவா அவர்

நிழலி இந்த நிகழ்வில் எனது மகளும் எனக்குத் தெரிந்த மகளிர் அமைப்பைச் சார்ந்த இன்னொருவர் மகளும் மற்றும் ஒரு மிகுந்த தாயகப்பற்றாளர் ஒருவருடைய மகளும் இந்த விடுதலைச் சிட்டுகள் நிகழ்வில் மற்றைய மாணவர்களுடன் நடனம் ஆடுவதாக இருந்தது. முதற்தடவை பிற்போடச் சொல்லியபோது அந்நடனவகுப்பில் பயிலும் மாணவர்களுடைய பெற்றோர்கள் (கிட்டத்தட்ட 10) எங்களுக்கு எதிரியானதோடு எம்மை மிகுந்த விமர்சனத்திற்கும் உள்ளாக்கி வேதனைப்படுத்தியிருந்தனர். தொடர்ந்து எனக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை நடன ஆசிரியரோடு சம்பந்தப்பட்டவர் அழைத்து எது என்ன ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை மாலை விடுதலைச்சிட்டுகள் என்ற நிகழ்வு நடைபெற்றுத்தான் ஆகும் என்றபோது எனது கருத்தாக நான் எதையும் கூறவில்லை. இவர்கள் வேறு ஒரு கலைஞர் கூறினார் நாங்கள் நிகழ்வுகளைப் பிற்போட முடியாது நடாத்தத்தான் வேண்டும் என்பதாக என்னிடம் கூறினார். (தாயகக்கலைஞர்) நான் அக்கலைஞரிடம் தொடர்பு கொண்டபோது அக்கலைஞர் பதறினார். தேவையில்லாமல் தனது பெயரை இவர்கள் பயன்படுத்துவதாகக் கூறினார். அத்தோடு நான் மேற்கொண்டு இதற்குள் அபிப்பிராயம் கதைக்கும் நிலையைக் கைவிட்டுவிட்டேன். இந்த நடன ஆசிரியை மிகுந்த திறமைசாலி வயதில் இளையவர். என்னைப் பொறுத்தவரை இவர் வளர்க்கப்படவேண்டிய கலைப் பொக்கிசம். ஆனால் அவருக்குத் தாயகம் பற்றிய விடயத்தில் சில தவறான அணுகுமுறையை யாரோ திணித்திருக்கிறார்கள். காலத்தின் தேவையறிந்து இந்நிகழ்வைத் இவர் தவிர்த்திருக்கலாம் அல்லது பிற்போட்டிருக்கலாம். இங்கு இதைப்பற்றிய பதிவு வரும்வரை இந்நிகழ்வு நடாத்தப்பட்டதை நான் அறிந்திருக்கவில்லை. ஏனெனில் நாங்கள் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் முழுமையாக எம்மை ஈடுபடுத்தியிருந்தோம். இப்போதுதான் இதனைப்பற்றி விசாரித்ததில் இந்நிகழ்வில் எனது மகள் உட்பட மகளிர் அமைப்பைச்சேர்ந்த எனது நண்பியின் மகளும் தவிர்க்கப்பட்டிருந்தார். அத்தோடு இந்நிகழ்வு இப்போதைக்கு வேண்டாம் என்று உறுதியாக்க் கூறிய அந்தத் தாயக நேசிப்பாளரின் மகளும் தவிர்க்கப்பட்டிருந்தார். ஆக 10 பெற்றோரின் ஆசைக்காக இந்நிகழ்வு தாயகத்தில் அவலப்படும் மக்களுக்காக என்பதன் பெயரால் அரங்கேறியுள்ளது.

நிழலி நீங்கள் ஒருவருக்காக ஒட்டுமொத்த மகளிர் அமைப்பை குற்றஞ்சாட்டாதீர்கள். மார்க்கம் பொறுப்பாளர் இதில் இணைந்திருந்தார் என்பதற்காக இந்நிகழ்வை மகளிர் அமைப்பும் இணைந்து நடாத்தியது என்று தயவுசெய்து எவரும் கருதவேண்டாம். இந்நிகழ்வில் சம்பந்தப்பட்டவரை அமைப்பு ரீதியாகக் கருதாமல் பெற்றோர் என்ற ரீதியில் கணக்கெடுத்தலே நல்லது.

இந்நடனநிகழ்வு நடைபெற்றபோது இங்கு எங்களைப்போன்றவர்கள் இத்தாக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் இருந்தோம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=57627

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்லவது உண்மையதான் . எதனையும் நான் மறுப்பதற்கில்லை. அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால நடந்த கவனயீர்ப்பு முற்றிலும் வேறு கோணத்துக்கு தள்ளப்பட்டு விட்டது என்பது உண்மை....

இளையோர் இதில் தலையிட்டு எல்லாவற்றியும் சாதகமாக்கு பணிகளில் ஈடுப்ட்டுளார்கள்...

"காவல் துறைதான் காரணம் எனில் அதனை வெளிப்படையாக தமிழ் மக்களுக்கு அறிவிப்பதில் என்ன நட்டம் வந்தது இவர்களுக்கு? அப்படி அறிவிப்பது, பொலிசுடன் விரும்பத்தகாத பிரச்சனைகளை ஏற்படுத்த முனையும் பேர்வழிகள் பற்றிய நல்ல விழிப்பை மக்களுக்கு ஏற்படுத்தகூடிய சந்தர்ப்பமாக அல்லவா இருக்கும்? "

நீங்கள் அந்த காவல் துறை அதிகாரி வழங்கிய பேட்டியை கவனிபீர்லேயானால் அதுபற்றிய விடயங்கள் மறைமுகமாக சொல்ல படுன்கின்றன..

  • கருத்துக்கள உறவுகள்

இதில வாற கருத்துக்களைப் பார்த்தா எல்லாரும் சேர்ந்துதான் நாட்டியம் போட வெளிக்கிட்டிருக்கினம். அதற்குள்ள ஒரு குழு முந்திட்டுது. மகளிர் அமைப்புக்கள்.. இந்த நாட்டியம் மூலம்.. எமக்கு விடுதலை பெற்றுத் தரும் என்றால்.. நல்லாப் போடட்டும் விடுங்கள். மகளிர் அமைப்புக்கள் வன்னியில் இராணுவம் அடைத்து வைத்துள்ள மகளிரை இந்த நாட்டியங்களை ஆடிக் காப்பாற்றும் என்றால் நல்லா போடட்டும் விடுங்கள்.

இதில் பகிரப்படும் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் இப்படி ஒரு நிகழ்வை நடத்த (தாயகச் சூழலையும் பெரிதுபடுத்தாமல்.. இரண்டு தாயகப் பாடலுக்கு ஆடிட்டு.. அப்புறம் சினிமாவுக்கு ஆடுறதுதானே.. தாயகப்பற்று.! ம்ம்.. நல்லா வேசம் போடுறாங்க.. எப்பதான் கழன்று கொட்டுனப் போகுதோ..??! ) எல்லோரும் துணை போயிருக்கினம்.. சிலர் முந்திக் கொண்டுட்டினம்.. சிலர் தங்களில பிழை வந்திடக் கூடாது என்று நினைக்கினம்.

எவரும் வன்னியில் தென் தமிழீழத்தில் மகளிரின் நிலைக்காக வருந்துவதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு ஏன் ஒரு மகளிர் அமைப்பு. நாட்டியம் போடவா..???! :o :o :D

வன்னியில் பெண்கள் இராணுவ விலங்குகளுக்கு இரையாகிறார்கள். தெந்தமிழீழத்தில் சிறுமிகள் கூலிகளுக்கு இரையாகிறார்கள்.. இவற்றை உலகின் கண்களின் முன்னிறுத்த எவரும் இல்லை.. ஆனால் நாட்டியம் போட மட்டும்.. ஆயிரத்தெட்டு மகளிர் அமைப்புக்கள். பெண்ணியம்.. பொடியியம் பேச மட்டும் கூட்டம் போடுவார்கள். குடுமியா.. சவரி முடியா பெண்களுக்கு வசதி என்று ஆராய்ச்சி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால்.. ஆமிக்காரன்.. செய்யிற கொடுமையை உலகின் கண்களின் முன்னிறுத்த ஆக்களில்ல.. குங்குமப் பொட்டுக்கும்.. தாலிக்கும் விடுதலை வாங்க பலர் வரிஞ்சு கட்டிக் கொண்டு பக்கம் பக்கமாக எழுத இருக்கிறார்கள்..! ஆனால் ஊரில் வதை முகாம்களுக்குள் கிடக்கும் பெண்களுக்கு விடுதலை கேட்க யாரும் இல்லை..! இவர்கள் மகளிரா.. ஏன் மனிதரா..???! :o :o :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.