Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

GCE O/L பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 69% மானவர்கள் ஆங்கிலத்திலும்,55 %மானோர் விஞ்ஞானத்திலும், 49%மானோர் கணித பாடத்திலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

GCE O/L பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 69% மானவர்கள் ஆங்கிலத்திலும்,55 %மானோர் விஞ்ஞானத்திலும், 49%மானோர் கணித பாடத்திலும் failed . :D:rolleyes:

69% of students who sat for the GCE O/L examination last year had failed in English.49% had failed mathematics and 55% had failed science.

Sources said that 145,140 and 163,725 candidates had failed to obtain at least a simple pass in mathematics and Science, respectively.

About 56,000 had failed Sinhala; it’s 19% as a percentage. 203,845 had failed to obtain a simple pass in English. According to the Examination Department, 295,000 sat the examination conducted last December.

When compared with the previous year’s GCE O/L results, there had been a significant drop in standards. In 2007, 52% had passed mathematics.

Source: lankatruth

கல்வி கற்கக்கூடிய சூழ்நிலை தமிழீழத்திலும் சரி, தெற்கிலும் சரி இல்லை. இதை விட என்னத்தை தான் பெரிதா எதிர்பார்க்கினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

95ஆம் ஆண்டுக்கு முன்பு எம்மவர்கள் படித்து பெற்றதை விட தற்காலங்களில் வருவது மிக மிக குறைவே... காரணம் வயதிற்கேற்ப வளர்த்தி இல்லை. வீட்டில் சீரியல் வெளியில் மொபைல் ஹீரோ ஹொண்டா , ஸ்கூட்டி என்று வாழ்கிறார்கள். இது வந்ததே மேல்...

மட்டக்களப்பில் சாதாரண தரம் எழுதும் மாணவர்களே பிரத்தியேக வகுப்புகளுக்கு இந்த வண்டிகளில் தான் போகின்றார்கள் அவர்களை சொல்லி என்னபயன் பெற்றோரை தான் உதைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

95ஆம் ஆண்டுக்கு முன்பு எம்மவர்கள் படித்து பெற்றதை விட தற்காலங்களில் வருவது மிக மிக குறைவே... காரணம் . வீட்டில் சீரியல் வெளியில் மொபைல் ஹீரோ ஹொண்டா , ஸ்கூட்டி என்று வாழ்கிறார்கள். இது வந்ததே மேல்...

அதே................,நாங்களெல்லாம் அந்தக்காலம் குப்பி விளக்கில படிச்சது மண்ணெண்ணெய் புகை குடிச்சு படிச்சம் நித்தாவும் வராது இப்போதைய பிள்ளைகள் சிலபேர் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை,நல்லது கதைத்தாலும் சண்டைக்கு வருதுகள் என்னத்தை சொல்ல எல்லாம் பட்டு பழுக்கவேனும்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் வாழ்ந்த 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்களில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பரீட்சை எழுத முடியாமல்.. அழிந்து போயிருக்கும் நிலையில்.. இன்னும் பல மாணவர்கள் வதை முகாமில் இருக்கும் நிலையில்.. சிறீலங்கா சிதையாமல்.. சிறக்குமா..! :rolleyes::(

சிறீலங்கா மட்டுமல்ல வசதி படைத்த பிரிட்டன் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட.. விஞ்ஞானம்.. கணிதபாடத்தில் மாணவர்கள் காட்டும் திறன் வெளிப்பாடு குறைந்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் படிக்கும் விடயத்தை பிரயோகித்து ஆராய்ந்து பதில் எழுதும் தன்மை குறைந்திருக்கிறது.

தற்போது வினாத்தாட்களின் வீரியம் குறைந்திருந்தும் மாணவர்கள் சித்திபெறும் தகமை வசதி படைத்த நாடுகளிலேயே குறைந்து வருகிறது. அதேவேளை சுவிஸ்லாந்து போன்ற நாடுகளில் கடும் போட்டிக்கு மத்தியில் தான் மாணவர்கள் உயர்வகுப்புகளில் விஞ்ஞானம் கணிதம் சார்ந்த பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கிறது.

ஆனால் ஒன்று இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிறீலங்கா மாணவர்கள் பரீட்சை எழுதின்.. 98% பாஸாவார்கள். அந்தளவுக்கு இலகுவான வினாத்தாட்களே வழங்கப்படுகின்றன. அண்மையில் பிரித்தானிய அரசே தன்னைத்தானே குற்றம் சுமத்திக் கொண்டது. மாணவர்களின் விஞ்ஞான அறிவு குறைவடைய வினாத்தாட்களின் வலிமையின்மையும் ஒரு காரணம் என்று.

அதுமட்டுமன்றி கணிப்பொறிகள் மற்றும் கணணிகள் வந்த பின்னர்.. மூளைக்கு எங்க வேலை. கணிப்பொறி மற்றும் கணணி எல்லோ படிக்குது. :(:D

அடுத்தது ஆசிரியர்கள். சும்மா ஆயுதம் தூக்கினவன் அஸ்ரப்பின்ர அடியாட்கள் எல்லாம் அமைச்சராகி.. அவன் எல்லாம் தகமை அற்ற ஆட்களை ஆசிரியர்களாக்கி வைச்சிருக்காங்க. பிரேமதாச போன்ற ஆட்கள்.. தொண்டர் ஆசிரியர் என்று எடுத்து வைச்சவையின் நீண்ட கால விளைவின் பயனே இவை..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதே................,நாங்களெல்லாம் அந்தக்காலம் குப்பி விளக்கில படிச்சது மண்ணெண்ணெய் புகை குடிச்சு படிச்சம் நித்தாவும் வராது இப்போதைய பிள்ளைகள் சிலபேர் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை,நல்லது கதைத்தாலும் சண்டைக்கு வருதுகள் என்னத்தை சொல்ல எல்லாம் பட்டு பழுக்கவேனும்

குடும்பத்துக்கு 10 / 15 சொந்தங்கள் வெளிநாட்டில இருக்குது. அப்படி இருக்கேக்க... 1995 ம் ஆண்டு நிலவரமா இருக்கும். தோட்டக்கார சுப்பண்ணையே (இந்தச் சுப்பண்ண இல்ல.. எங்கட யாழ்ப்பாணச் சுப்பண்ணையச் சொல்லுறன்) லண்டனில பியர் கானோட இருக்கேக்க.. அவரின்ர மகள் லண்டனில பி எம் டபிள்யு ஓடேக்க.. ஊரில உள்ள அவரின்ர அக்கா மகள் ஆகக் குறைஞ்சது ஸ்கூட்டி ஓட வேண்டாமோ..??! :(

அடிப்படையில் எம்மவர்கள் பலர் வெளிநாடுகளுக்கு பொருளாதார அகதிகளாக வந்தார்களே அன்றி தேசத்தின் பாலான விடுதலையின் மீது அதன் போராட்டத்தின் மீது கொண்ட வேட்கையால் அல்ல..! இது தான் உண்மை. இதை பலர் வெளிப்படையாக ஏற்கத்தயாராக இல்லை. ஏனென்றால் அவரவரின் குட்டுகள் வெளிப்பட்டிட்டும் என்று..! :rolleyes::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவேண்டும் நண்பரே... ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் குறைசொல்லவேண்டாம்.

பிள்ளைகள் ஓரிடமாக இருந்து புத்தகத்தினை படித்தாலே விசேட சித்தி பெற்றிடமுடியும். திறமைச்சித்திக்கு தான் சற்று பிரயத்தனமும் ஆசிரியர்களின் உதவியும் அவசியம்...

முன்பு 7 மணிக்கு பிறகு வேறு நாதியில்லை. அரிக்கன் லாம்பும் புத்தகமும் தான் நமது பொழுது போக்கு... இப்போது அவ்வாறில்லை...

படிப்பு விடயத்தினை அரசியல் மற்றும் நாட்டுப்பிரச்சனையுடன் ஒப்பிடவேண்டாம்... மிக மிக மோசமான நிலையிலும் அகில இலங்கை ரீதியில் முன்னிலை வகித்தவர்கள் தமிழர்கள் என்பதை மறக்கவேண்டாம்... (வன்னி மாணவர்கள் இதற்கு விதிவிலக்கு. காரணம் அவர்களால் படிக்கவே முடியாத நிலை... வன்னி தவிர்ந்தவர்களுக்கு நான் கூறியது சாலவே பொருந்தும்)

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் எம்மவர்கள் பலர் வெளிநாடுகளுக்கு பொருளாதார அகதிகளாக வந்தார்களே அன்றி தேசத்தின் பாலான விடுதலையின் மீது அதன் போராட்டத்தின் மீது கொண்ட வேட்கையால் அல்ல..! இது தான் உண்மை

உந்த நாட்டு பிரச்சனை இல்லாட்டி நான் இங்க வந்திருக்கமாட்டன் ....நல்ல உத்தியோகம்...பெரிய வீடு ...கார் வசதி எல்லாம் இருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் சாதாரண தரம் எழுதும் மாணவர்களே பிரத்தியேக வகுப்புகளுக்கு இந்த வண்டிகளில் தான் போகின்றார்கள் அவர்களை சொல்லி என்னபயன் பெற்றோரை தான் உதைக்கவேண்டும்.

அதேதான் தீபன்

இருந்தாலும் படிக்க வேண்டும் என்று அக்கறையுள்ள குழந்தை எப்படியாவது படித்தேயாகும்

ஆனால் இப்போது படிக்க செல்கின்றார்களா என்பது எனக்கு சந்தேகமே சோ காட்டுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது வரும் பரீட்சை முடிவுகளை பார்த்து

அந்த காலத்தில் ஒரு விளக்கில் வட்டமாக இருந்து படித்தும் பரீட்சையில் நல்ல பெறுபேறுகள் எடுத்தும் தமிழன் என்ற காரணத்தால் வேலை கிடைக்கவில்லை பல பேருக்கு :rolleyes:

உண்மை தான் ஒரு மண்ணெண்ணை விளக்கை வைத்து அதை சுற்றி இருந்து படிப்பதும் காத்தடிக்கும் போது யார் முதலில் அணையாமல் கைவைத்து பிடித்துக்கொள்வது என்ற போட்டி வேறு அதற்குள்.பேப்பறை சுற்றி அதே விளக்கில் பற்றவைத்து சுருட்டடிப்பது அதை அம்மாவிடம் போட்டுக் கொடுப்பது அதற்கு அடி வேறு விழும்.படித்துக்கொண்டிருக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.