Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் ஆபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையிலான முனைப்புகளை மேற்கொள்ளுங்கள் ஓப்ரா வின்பெரியிடம் மாயா கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையிலான முனைப்புகளை மேற்கொள்ளுங்கள் ‐ ஓப்ரா வின்பெரியிடம் மாயா கோரிக்கை:

miaophara.jpg

இலங்கையில் ஆபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையிலான முனைப்புகளை மேற்கொள்ளுமாறு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானியாவைச் சேர்ந்த ஆங்கிலப் பாடகியான மாயா அருள்பிரகாஷம், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனரான ஓப்ரா வின்பெரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில்; இந்த கோரிக்கையை மாயா விடுத்துள்ளார்.

இலங்கை விமானப்படையினர் இந்த வாரத்தில் தமிழர்களின் வீடுகள், முகாம்கள் மீது குண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த மாயா, ஒப்ராவின் கைகளை இறுக்கப் பற்றி பிடித்துவாறு இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாயா அருள்பிரகாஷம், கிரேமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன், டைம்ஸ் சஞ்சிகையின் கருத்துக் கணிப்பு இந்த வாரத்தில் மிகவும் பிரபலமான 100 பேரில் ஒருவர் எனத் தெரிவு செய்துள்ளது.

இலங்கையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மக்கள் ஆபத்தில் உள்ளனர். எனினும் தனது பிரபலத்தைக் கொண்டு இதனை முன்னெடுக்க முடியும் என தான் கருதவில்லை எனவும் இலங்கையில் தமிழர்களின் நிலைமைகளை ஊடகங்கள் மூலம் வெளிச்சத்து கொண்டு வரவேண்டும் எனவும் மாயா குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் முகாம்கள் தொடர்பாகவும் தயவு செய்து நீங்கள் எதையாவது செய்ய வேண்டும் எனவும் மாயா, ஒப்ராவிடம் கேட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....=9318&cat=1

எதை சிங்களம் தடுத்ததோ அதை சாதித்துவிட்டாய்! எனதன்புத்தங்கையே!வரலாற்று நாயகியாக உருவெடுத்திருக்கும் உன்னை எண்ணி ஆனந்தக்கண்ணீர் சொரிகிறேன். நீ அமெரிக்காவினுள் பிரவேசிக்க எவ்வளவு பாடுபட்டோம் அது வீண்போகவில்லை இது ஒவ்வொரு தமிழனின் அடிமேல் அடி,இத்துடன் ஒபாமா நிர்வாகத்திற்கும் நன்றி! உன்பணி தொடரட்டும்,

MIAOprah_o1.jpg

http://tamilnet.com/art.html?catid=13&artid=29292

MIA draws Oprah's attention to Sri Lanka bombing of safe zone

Oscar and Grammy award nominee, Eezham born music phenom, Maya Arulpragasam (MIA), after meeting the popular talk-show host Oprah Winfrey at a gala at Lincoln Center in celebration of the most influential people list the Time magazine produced, drew Oprah's attention to Sri Lanka Government's bombing of civilian camps inside the safe zone in MIA's face book.

  • கருத்துக்கள உறவுகள்

மாதங்கிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து முன்னெடுத்து வெற்றியடைய , சாதிக்க வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன்.

இறையருள் உன் மீது இருக்கட்டும் .......மகளே வென்று வா ......

எங்கள் மனமார்த்த நண்றிகள். உங்கள் குரல் இன்னும் ஒங்கி ஒழிக்கட்டும்.

சகோதரி மாயா விற்கு எமது மனமார்ந்த நன்றிகள். தமிழினம் பெருமைகளுக்குள்ளும் புகழுக்குள்ளும் அடங்கிப் போகின்ற இனமல்ல என்பதனை எடுத்தியம்புவதாய் இருக்கின்றது இவளுடைய தன்னிகரற்ற செயல்கள்.

தன் இனத்துக்காய் தன் மக்களுக்காய் இவள் செய்பவை நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இவள் பணி இன்னும் இன்னும் தொடர வேண்டும்.

அதற்கு நம் தமிழர் அனைவரினதும் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி மாயா அவர்களே! திறமையால் சிகரங்களைத் தொட்டுஇ உணர்வால் தமிழோடு ஒன்றித்திருந்துஇ எம்மினத்தின் துயரமதைத் தொலைதூரம் கொண்டு சென்ற எங்கள் சகோதரியே இதயபூர்வமாக வாழ்த்துகிறோம். தொடர்க நின் பணி இடர் களைந்து எம்மினம் வாழட்டுமே.

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாயாவுக்கு நன்றிகள் இன்னும் தொடர எனது மனப்புர்வமான வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விமானப்படையினர் இந்த வாரத்தில் தமிழர்களின் வீடுகள், முகாம்கள் மீது குண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த மாயா, ஒப்ராவின் கைகளை இறுக்கப் பற்றி பிடித்துவாறு இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாயா அருள்பிரகாஷம், கிரேமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன், டைம்ஸ் சஞ்சிகையின் கருத்துக் கணிப்பு இந்த வாரத்தில் மிகவும் பிரபலமான 100 பேரில் ஒருவர் எனத் தெரிவு செய்துள்ளது.

வாழ்த்துக்கள் மாயா ,

நீங்கள் புகழின் உச்சிக்கு சென்றபோதும் , தாய்நாட்டை மறக்காமல் இருப்பது தமிழ்த்தாய் செய்த புண்ணியம் .

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி சகோதரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.