Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியா தமிழ்மக்களின் பாராளுமன்ற முற்றுகைப் போராட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை, தமிழ் இளையோர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இளையவர்களின் கோரிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் ஆக்கபூர்வமான பதில் நடவடிக்கை உடனடியாக எடுக்கத்தவறி வருவதாகவும் கடந்த வார இறுதிப்பகுதியில் அரச படைகளின் தாக்குதல்களில் , மக்கள் உயிரிழப்புக்கள் அதிகமானதையும் கருத்திற் கொண்டு உணர்ச்சிவசப்பட்ட மக்கள் தன்னெழுச்சியாக நேற்றைய தினம் தமது போராட்டத்தினை தீவிரப்படுத்தியிருந்தனர்.

இதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் பாராளுமன்ற நுழைவாயிலின் அருகாமை வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வந்ததால் பிரித்தானிய காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறை கட்டளை பேச்சாளர் மைக்கல் மார்ட்டின் தமது கடுமையான விமர்சனத்தை, முன்வைத்தார். பாராளுமன்ற திடலினை

மீண்டும் முற்றுகையிட்டுள்ள இம்மக்கள், கடந்த ஏப்ரல் மாத ஆரம்பம் முதல், இந்நகர போக்குவரத்தினையும் பாதிப்படைய செய்துள்ளனர். மேலும் மற்ற சமூகத்தினரின் ஜனநாயக கடமைகளையும் செய்யவிடாது இடைநிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக சில பாராளுமன்ற உறுப்பினர்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்பு அமைச்சர் ஜெரல்ட் ஹொவார்த் (Gerald Howarth) தெரிவிக்கையில் 'பிரித்தானிய பாராளுமன்ற சுற்றுவளாகத்தையும், தலைநகரத்தின் நுழைவாயிலையும் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களை அனுமதித்து, அமைதியாக ஏற்றுக்கொள்ள நிச்சயமாக முடியாது. மெட்ரோ போலியன் காவற்துறை உயர் அதிகாரிகள் இது தொடர்பாக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது' என கூறியுள்ளார்.

எனினும் இதற்கு பதில் அளித்துள்ள காவற்துறை கட்டளை அதிகாரி மார்ட்டின், இவ்விடயம் அனுதாபத்திற்குரியது எனவும், எங்களது கடமைகளை முடித்து வீடு திரும்பும் வரை நாமும் இவ் ஆர்ப்பாட்டங்களில் உள்வாங்கப்பட்டிருக்கிறோம், இது மக்கள் ஜனநாயக உரிமையின் ஒரு பகுதி. இவ் ஆர்ப்பாட்டங்கள் பாராளுமன்றத்தினையும், பிரதான வீதிகளையும், மற்றவர்களின் ஜனநாயக கடமைகளையும் இந்தளவு முடக்கிவிடக்கூடும் என்பதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. என தெரிவித்தார்.

தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெரமி கொர்பின் தெரிவிக்கையில், ஜனநாயக வழியில் போராடுவது அவர்களது உரிமை, இதனை கட்டுப்படுத்துவதை விட அவர்களுக்கான உறுதிமொழிகள் அளிக்கப்பட வேண்டும். தங்களுடைய சொந்த தேசத்தில் மக்கள் நிம்மதியாக வீடு திரும்புவதற்காக இத் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை நடாத்திவரும் இம்மக்கள் மீது நாம் அனுதாபம் கொள்ள தவறுவதால் அவர்கள் நம்பிக்கையிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மார்ட்டின் மீண்டும் கூறிகையில் 'எனக்கு தெரிகிறது, என்னுடைய மனநிலை இன்று நல்லதாக இல்லை, ஆனாலும் நான் சொல்லவேண்டியது இதுதான் 'அவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் 50 பேருக்கு சட்டபூர்வமான அனுமதி கொடுத்தோமானால் அது 50 பேரினை மட்டும் தான் குறிக்கும், அதனை விட அதிகமானோரிற்கான சட்ட அனுமதியை அது குறிக்காது. '

இதேவேளை பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் சுழற்சி முறையில் தொடர் உண்னாவிரத போராட்டமும், பரமேஸ்வரனின் வழியில் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

நேற்றுக்காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பாராளுமன்றத்தின் பிரதான வாசலை முடக்கிய தமிழ்மக்களுக்கும், காவற்துறையினருக்குமான போராட்டங்களின் வீடியோப் பதிவினைக் கீழே காணலாம்.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-05-12-08-40-14

Edited by bara

மக்கள் தொடர்சியாக பெரும் எண்ணிக்கையில் தெருவுக்கு இறங்கிபோராடவேண்டிய தேவை இருக்கின்றது. ஒரு நாள்குறிப்பிட்டு அறிவித்தல் கொடுத்து பெரும் விளம்பம் செய்யாத நிலையிலும் இலச்சக்கணக்கில் மக்கள் தெருவக்கு இறங்கும் நிலையில் மக்கள் இருக்கின்றார்கள்.

சிறிய அளவில் ஆர்பாட்டங்கள் செய்யும் போது மக்கள் தொகை குறைகின்றது. ஒவ்வொருவரும் அடுத்தவர் போவார் என்ற சுயகணிப்பில் தமது அன்றாட வேலைகளைக்கவனிக்க சென்று விடுகின்றார்கள்.

ஊடகங்கள் ஆர்பாட்டம், ஊர்வலம் நடந்தால் அந்த இடத்திற்கு சென்று நேர்அஞ்சல் செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு செய்தி சொல்வதற்கு பதிலாக. தெருவில் இறங்கி மக்கள்போராடவேண்டியதன் தேவை தொடர்பாக, தற்போதைய சர்வதேச அரசியல் நகர்வு தொடர்பாக ஆய்வலர்களை இணைத்து கருத்துப்பரிமாற்ற நிகழ்சிகளை நடாத்தி மக்களை அரசியல் விழிப்பு நிலையில் வைத்திருப்பது தேசியம் கதைக்கும் ஊடகங்களின் கடமை.

நமது புலம்பெயர் போராட்டங்கள் இங்கு ஓரளவு வெற்றியை ஏற்படுத்தியிருப்பதை நாம் இங்கு காணக் கூடியதாக உள்ளது. குறிப்பாக லண்டன், பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் ஐ.நாவில் இலங்கை பிரச்சனை தொடர்பாக வெளியிட்ட கருத்துகளும் நடவடிக்கைகளும் நம்மை திருப்திப்பட வைக்கிறது. ஆனால் போராட்டம் தொடரவேண்டிய கால கட்டத்தில் தான் தற்Nபுhதைய நிலைமைகள் உள்ளன.

புலம் பெயர் நாட்டில் கடந்த மாதகாலமாக நடை பெற்று வந்த போராட்டம் ஓரளவு வெற்றியை தந்தாலும் தற்போது நடைபெறும் நிகழ்வுகள் இந்த போராட்டத்தின் செயற்பாட்டை மழுங்கடிக்கும் வகையில் செயற்படுகிறது. கடந்த மாதம் நாம் திடீரென தெருவில் இறங்கி போராடியபோது யார் இவர்கள், ஏன் இந்த போரட்டம் என்ற கேள்விகளை கேட்ட ஊடகங்கள் அதற்கான பதிலையும் கொடுத்து நமது போராட்ட நியாயத்தை முன்கொண்டு வந்தார்கள். அதன் பின் தயாகத்தில் நடை பெற்ற நிகழ்வுகள் அதனால் சர்வதேச மட்டத்தில் எழுந்த அதிர்வலைகள் நமது போராட்ட நியாயங்களை வெளிக்கொணர்ந்தது. அதனால் புலம் பெயர் நாட்டு போராட்டங்களை அந்த நாட்டு மக்கள் ஒரு அனுதாபத்துடன் பார்ததுடன் அதற்கு ஆதரவும் தெரிவித்ததார்கள். நாமும் வீதிமறியலை விடுத்து அந்த அந்த நாட்டு மக்களுக்கு இடைஞ்சல் கொடுக்காதவாறு சாத்வீக போராட்டத்தை நடாத்தினோம். தொடரந்து நம்மீது ஒரு அனுதாப அலை அடித்துக்கொண்டே இருந்தது.

ஆனால் நேற்று திடீரென மீண்டும் முற்றுகை போராட்டம் வீதி மறியல் செய்தது மிகவும் அதிர்ச்சியான விளைவுகளை கொடுக்க ஆரம்பித்துள்ளது. நேற்று மதியம் லண்டனில் பிரபலமான ஒரு வானொலியான எல்பீசியில் லண்டன் வாழ் மக்கள் தம் கருத்தை தெரிவித்தனர். அனைவருமே நம் மீது வெறுப்பபை கொட்டியதுடன் நமக்காக ஐநாவில் குரல் கொடுக்கும் ஐரோப்பிய அமைச்சர்களையும் திட்டி தீர்த்தனர். இவ்வளவு நாள் நம்மீது அடித்த அனுதாப அலை எரிச்சலாக மாறி கோபமாக மாறியுள்ளது.

இன்றைய நமது போராட்டங்கள் மூலம் இந்த மக்கள் நம் மீது அனுதாபம் வரவைக்க வேண்டுமே ஒளி ஆத்திரம் வர வைக்க கூடாது. நாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது இருந்த அனுதாபம் இன்று இல்லை. இனியும் நாம் தொர்ந்து அதிரடியாக பொறுப்பற்ற தன்மையில் இறங்கினால் போராட வருபவர்களுக்கும் ஒரு சலிப்பு ஏற்படும். நமது போராட்டம் வெள்ளை, கறுப்பு என நிற பேதம் பாராது அனைவரையும் ஒன்று சேர்த்து போராட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு நாம் செய்யும் ஒரு வழி இங்கு வாழும் மக்களை பாதிக்காது அதே வேளை அவர்களின் மனங்களை கவரும் படி போராட்டம் தொடர வேண்டும்! இது எனது கருத்து மட்டுமல்ல நேற்று வானொலியில் கலந்து கொண்ட பலரினதும் கருத்து கூட!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Blocking the Road's is not going to any good for our struggle any more!!! Rather it will give negative image to Our Struggle...First time we did this because we have to get the media attention and we suceeded in it...Not only we obtained the media attention, but also they begin to understand our struggle to Freedom from the Oppression!!!

NOW what is the purpose for blocking the Westminister Square? By these stupid acts we are doing irrevesable harm to our struggle as well as Tamils all around the world

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா, ஒரு காலத்தில நாங்கள் அமைதி வழியில போராடினாங்க லண்டனில, பல ஆயிரம் பேர் கோசம் போட்டுகொண்டு ஒரு ஓரமா போனாங்க, மனுக்கள் கொடுத்தனாங்க, என்னாச்சு??

பொண்ட் ஐயா, நீங்க சொல்லுறது நியாயமா படுதா?? எல்பிசி ரேடியோவில லண்டன் சனம் கத்துது கதறு எண்டுறீயளே எதுக்காக? ரோட்டை புளக் பன்னி அவர்களுடைய கை, கால் போன்ற உறுப்புக்களை தமிழர்கள் திருடி வித்துப்போட்டாங்கள் எண்டு எண்டதாலையோ? ஐபிசி ரேடியோவில கத்தல்களும் கதறல்களும் கேட்டுகுதே இதற்கு சிறிலங்கன் அரசாங்கம் மட்டும் தான் காரணமா?? பிரித்தானியா செய்த வினை தானே?? யாரை கேட்டு நம் நாட்டுக்குள் வந்தார்கள்? யாரை கேட்டு ஆயுதத்தை பிரயோகித்தார்கள்? யார் இவர்களை அங்கு ஆட்சி செய்ய அனுமதி வழங்கியது? அப்போ நம் நாட்டு மக்கள் என்ன செய்தார்கள்?? நாங்க ஏதோ முழு லண்டனனயும் ஆயுத முனையில கட்டுப்பாட்டுக்க வைச்சிருக்கிறமாதிரி எல்லோ கதை இருக்கு?ஒரு நாள் ரோட்டை மூடியதுக்கே கத்துறாங்களே, இவங்க செய்த தவறுகளால் எமது ஒரு சமுதாயம் (ஜென்றேசன்) வாழ் நாள் முழுவதுமே கால் நடையாக முட்கள் ஊடாகவும், காடுகள் ஊடாகவும் ஆதிவாசிகள் மாதிரி வாழ்க்கை நாடத்துகிறார்களே அவர்களை பற்றி சிந்தியுங்கள். சமூகம் எண்டு இருந்தால் கருத்துக்கள் எதிர் மறைவுகளாக இருக்கத்தான் செய்யும்.

தொடர்ந்து ரோட்டுக்களை முடக்கவேண்டும், இந்த நிலைக்கு எம் இனத்தை ஆளாக்கிய பிரித்தானியா உள்ளிட்ட சில முக்கிய நாடுகளை தலையிட்டு முன்னர் செய்த தவறுகளுக்கு எதாவது பரிகாரம் செய்யவேண்டும். :lol:

மிஞ்சி இருக்கும் எம் இனத்தை காக்க காது இருந்தும் செவிடர்களாக, கண் இருந்தும் குறுடர்களாக எந்த எந்த வழிகளில் போராட முடியும் அந்த வழிகளில் நாம் போராடவேண்டும், ஒரு வேளை இந்த நிலை இந்த வெள்ளையர்களுக்கு இருந்து இருந்தால் அவர்கள் ஆயுதம் தூக்கியே நம் நாட்டில் போராடி இருப்பார்கள்.

Edited by Danklas

டக்கிளஸ் அவர்களுக்கு!

பழைய கதை கதைப்பதால் ஒரு பிரியோசனமும் இல்லை! பிரித்தானியர்கள் நட்டை விட்டு போகும் போது நம்மடை சேர் பொன் ராமநாதன் போன்றர்கள் விட்ட தவறுகளும் அன்றைய தமிழ் தலைமைகளும் விட்ட பிழைகளையும் நான் இங்குகுறிப்பிட முடியும். அது மட்டுமல்ல இன்று இந்த பிரச்சனைக்கு யார் யார் காரணமோ அவர்கள் எல்லாரையும் பகைக்க வெளிக்கிட்டால் உலக நாடே பகையாகிவிடும். என்ன வளம் எங்களிடம் உள்ளது அவர்கள் கதைக்க? எண்ணையிருந்தாலும் வந்து நிண்டுருப்பாங்கள்.

நான் சொல்ல வந்த விடயம் இதுதான்! இங்கு வாழும் மக்களுக்கு அசொளகரியம் ஏற்படாத வகையில் அவர்கள் நமக்கு ஆதரவளிக்கும் வகையில் நாம் போராட வேண்டும்.

ஒரு விடயம் பதில் சொல்லவும். அண்மையில் காஸா மீது இஸ்ரவேல் தாக்கியபோது இங்கு நடைபெற்ற போராட்டத்தில் வெறும் பலஸ்தீனியர்கள் மட்டும் பங்கு பற்றவில்லை மாறாக வெள்ளையின மக்களும் கறுப்பின மக்களும் அனைத்து சமூகங்களும் பங்கு பற்றியயிருந்தது.

நமது போராட்டங்களுக்கு அவர்கள் ஏன் வருவதில்லை? அதை பற்றி நாம் சிந்தித்ததுண்டா? நாம் இந்த நாடடின் சனத்தொகையில் ஒரு துரும்பு! நமது போராட்டங்களை அவர்கள் முடக்க நினைத்தால் வடிவாக முடக்க முடியும்! கறுப்பர்களின் போராட்டங்களை எப்படி இங்கு அடக்கியவர்கள் என்பது பிறிகஸ்ரன் கலவரத்தை நினைவுகூர்ந்தால் தெரியும்! நாம் செய்ய வேண்டியது போராட்டமே தவிர வெறும் ஆர்ப்பாட்டம் அல்ல!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய கதை கதைப்பதால் ஒரு பிரியோசனமும் இல்லை! பிரித்தானியர்கள் நட்டை விட்டு போகும் போது நம்மடை சேர் பொன் ராமநாதன் போன்றர்கள் விட்ட தவறுகளும் அன்றைய தமிழ் தலைமைகளும் விட்ட பிழைகளையும் நான் இங்குகுறிப்பிட முடியும். அது மட்டுமல்ல இன்று இந்த பிரச்சனைக்கு யார் யார் காரணமோ அவர்கள் எல்லாரையும் பகைக்க வெளிக்கிட்டால் உலக நாடே பகையாகிவிடும். என்ன வளம் எங்களிடம் உள்ளது அவர்கள் கதைக்க? எண்ணையிருந்தாலும் வந்து நிண்டுருப்பாங்கள்.

நான் சொல்ல வந்த விடயம் இதுதான்! இங்கு வாழும் மக்களுக்கு அசொளகரியம் ஏற்படாத வகையில் அவர்கள் நமக்கு ஆதரவளிக்கும் வகையில் நாம் போராட வேண்டும்.

ஒரு விடயம் பதில் சொல்லவும். அண்மையில் காஸா மீது இஸ்ரவேல் தாக்கியபோது இங்கு நடைபெற்ற போராட்டத்தில் வெறும் பலஸ்தீனியர்கள் மட்டும் பங்கு பற்றவில்லை மாறாக வெள்ளையின மக்களும் கறுப்பின மக்களும் அனைத்து சமூகங்களும் பங்கு பற்றியயிருந்தது.

நமது போராட்டங்களுக்கு அவர்கள் ஏன் வருவதில்லை? அதை பற்றி நாம் சிந்தித்ததுண்டா? நாம் இந்த நாடடின் சனத்தொகையில் ஒரு துரும்பு! நமது போராட்டங்களை அவர்கள் முடக்க நினைத்தால் வடிவாக முடக்க முடியும்! கறுப்பர்களின் போராட்டங்களை எப்படி இங்கு அடக்கியவர்கள் என்பது பிறிகஸ்ரன் கலவரத்தை நினைவுகூர்ந்தால் தெரியும்! நாம் செய்ய வேண்டியது போராட்டமே தவிர வெறும் ஆர்ப்பாட்டம் அல்ல!

இங்கு பாராளுமன்றத்தின் முன் பல வாரம் பட்டினி கிடந்த பரமேஸ்வரன் முதல் போராட்டத்துக்கு பச்சை குழந்தைகளுடன் வந்து நின்று கத்தினவர்களை ஒரு மாதத்திற்கு மேல் பார்த்து அனுதாப பட்டது காணும்.....

நானூறு பேர் செத்த நேரம் சாலையை மறித்து தான் போன மாதம் போராட்டம் தொடங்கினது.....

இன்று நாளுக்கு ஆயிரத்திற்கும் மேல் செத்து மடியும் போது - நாம் அமைதியாக ஐ.நா சபைஇடமும் இந்த நாட்டு அரசியல்வாதிகளிடமும் குசுகுசுத்து கெஞ்ச ஏலாது!!

இப்படி தான் அதிரடியாக இறங்கி ஆர்பாட்டம் நடத்த வேண்டும்.....

- எமது ஈழ விடுதலை போராட்டத்திற்கு ஒரு ஆதரவு......

- எமது விடுதலை இயக்கத்திற்கு விதித்த தடையை விலக்கி அதற்கு ஏற்ற அங்கீகாரம்.....

- தங்கட சீலைக்குள்ளால இருந்து அல்ல...நாமே சேர்த்த வணங்கா மண் பொருட்களை எண்டாலும் தங்கட விமானங்களை கொண்டு பட்டினியையும் போஸ்போரஸ் குண்டையும் கண்டு துவண்டு போய் இருக்கும் எஞ்சிய உயிர்களுக்காக இவர்கள் வழங்கலாம்....

வல்லரசுகள் என்று உள்ளவர்களுக்கு இது மூன்றும் தன்னும் செய்ய முடியாது என்றால்...இவர்களுக்கு நாம் உழைத்து வரி கட்டியே கரியாய் போவது மட்டும் தான் மிச்சம்.....

இங்கு இருந்தாலும் எமது உலகம் ஈழம், அங்கு இருப்பது எமது ரத்த உறவுகள்....

வெள்ளைகாரனுக்கு இடைஞ்சல் என்று நாம் விலத்தி ஒதுங்கி இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கு....அது இது அல்ல!

பாலஸ்தீன் இஸ்ரயேல் பிரச்னை முக்கியமாக மதம் சம்மந்த பட்ட பிரச்சனையாக பலரால் உள்வாங்க பட்ட விடயம்.....யூதர்களும், முஸ்லிம்களும் ஆயிரத்து ஐநூறு வருடமாக முரண் பட்டு கொண்டு இருக்கிறார்கள்....முஸ்லிம்கள் பலஸ்தீனத்தில் மட்டும் இல்லை - எல்லா இனத்திலும் உள்ளார்கள்....அத்துடன் யூதர்களுக்காக அமெரிக்காவும் பாலஸதீனர்களுக்காக வலிமை வளமை வாய்ந்த மத்திய கிழக்கு முதன்மை நாடுகள் பலரும் ஆதரவு வெளிப்படையாக வழங்குவதால் அவர்களின் போராட்டம் உலகமெங்கும் வெளிச்சம்....

அதை உலகம் பார்த்து, பக்கம் சார்ந்து, பாராட்டி வளர்க்கிறது....

எமதோ இன விடுதலை போராட்டம்...அதுவும் ஒரு சின்ன நாட்டின் சிறுபான்மை இனமாம்...எமக்காக குரல் குடுப்பதற்கு கூட இந்திய தமிழர்களை வேண்டி தான் நிக்கும் ஒரு நிலை....

இதில் இப்படி செய்வது தான் இவர்களுக்கு இடைஞ்சல் இல்லை - என்று போட்டு நோகாமல் செய்வதற்கு இது உத்தியோக பூர்வமற்ற ராஜ தந்திர கலந்துரையாடல் இல்லை.....

மடிந்து விழும் உறவுகளை எடுத்து புதைக்க வழியில்லாது - எஞ்சி இருக்கும் ஊசலாடும் உயிர்களை மீட்க நினைக்கும் அவல நேரம்...அதற்காக எடுக்கும் அவசர போராட்டம்.....

இதில் வெள்ளைகாரனுக்கு அனுதாபம் எம்மில் வர வேணும் என்றால் எமது அவலத்தை போராட்டத்திற்கு போக முடியாத நாம் வேலை இடங்களில், வெளி இடங்களில் எடுத்து சொல்லுவோம் - எமது உன்ன்மை அவல நிலை அங்கு எவ்வாறு இருக்கிறது.... அதனால் நாம் இங்கு செய்யும் போராட்டத்தின் நோக்கம் என்ன என்று விளக்கி சொல்லலாம்.....

போராட்டம் வெற்றி பெற - எமது கருத்திற்கு எதிர் பட வரும் பிரதி வாதங்களுக்கு பதில் சொல்வதும் ஒரு தேவை தானே!!!

அதை செய்யலாம் அனால் அன்பாய் எல்லாம் போராட்டம் நடத்த ஏலாது!!!!!!!!!!!!!!! :unsure:

Edited by Ilayapillai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
<_<

Edited by Ilayapillai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனியும் நாம் தொர்ந்து அதிரடியாக பொறுப்பற்ற தன்மையில் இறங்கினால் போராட வருபவர்களுக்கும் ஒரு சலிப்பு ஏற்படும். நமது போராட்டம் வெள்ளை, கறுப்பு என நிற பேதம் பாராது அனைவரையும் ஒன்று சேர்த்து போராட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு நாம் செய்யும் ஒரு வழி இங்கு வாழும் மக்களை பாதிக்காது அதே வேளை அவர்களின் மனங்களை கவரும் படி போராட்டம் தொடர வேண்டும்! இது எனது கருத்து மட்டுமல்ல நேற்று வானொலியில் கலந்து கொண்ட பலரினதும் கருத்து கூட!!!!

முருகதாஸ் தன்னை எரித்தது காணாதா? பரமேஸ்வரன் உண்ணா நிலை போராட்டம் செய்தது காணாதா?? கிட்டடியில் கேள்வி பட்டேன் - தமிழ் அண்ணாமார் கொஞ்ச பேர் ரத்த தான நிலையங்களுக்கு சென்று தங்கள் ரத்தத்தை குடுத்து விட்டு எமது ஈழ மக்கள் நிலைமை, எமது போராட்டம் என்பதை பற்றி விளக்கமும் துண்டு பிரசுரங்களும் குடுத்து விட்டு வந்தார்கள் இங்கென்று....

இதெல்லாம் வெள்ளைகாரனுக்கு அசௌகரியமாக இருக்கவில்லை அதனால் ஓம் சரி என்று போட்டு இருந்திட்டான்..... ஒரு ரோட்டை அடைத்தது இவ்வளவு கண்டனத்திற்கு உரியதாமா? அப்ப அதை தான் தொடர்ந்து செய்ய வேணும்!!!

சலிப்படைந்து என்றாலும் அரியண்டம் தாங்க ஏலாம எமது கோரிக்கைகளை ஏற்று அதை செயல் படுத்தட்டும்.....

இன நிற பேதம் பார்த்து விட்டுட்டு வரவில்லை....சிலர் வெளிநாட்டு நண்பர்களை கூட்டி கொண்டு தான் வந்தார்கள்.....பலர் கூட்டி கொண்டு வராததற்கு காரணம் - சரி, நான் கூட்டி கொண்டு வராததற்கு காரணம்- சிறுபான்மை இனமாய் இருந்தாலும் நமது இனத்திற்காய் நாம் என்ன செய்கிறோம் என்று அடுத்தவனுக்கு காட்ட வேணும் முதல்... எமது நிலையை நாம் தக்க வைத்து கொண்டு தான் அடுத்தவனை உதவிக்கு கூப்பிட முடியும், அவன் தனிப்பட்ட மனிதனாய் இருப்பதனால்....

போராட்டத்தின் விலாசம் - தமிழ் ஈழ மக்களாய் இருப்பதை தான் விரும்புகிறேன்..

ஆதரவு குரல் அடுத்தவர் எழுப்பலாம்.....ஆனால் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்த அன்றில் இருந்து வெள்ளை கருப்பு மஞ்சள் பிரவுன் நிலம் பச்சை நாவல் என்று கலந்தடிட்சு இருந்தம் என்றால் - இந்த போராட்டம் ஈழ தமிழரின் சிவத்த புலி கொடியுடன் நடந்தது என்று பார்க்கிறவர்களுக்கு தெரியாது போய் இருக்க கூடும்...

என்னை பொறுத்த வரை நண்பர்கள் சக ஊழியர்கள் என்று தெரிந்த பிற இனத்தவரிடம் எல்லாம் இந்த வருட தொடக்கத்தில் இருந்து ஈழ பிரச்சனையை பற்றியே முழுக்க முழுக்க விளக்கி வருகிறேன்.....

கனடாவில் இருந்து இரு கனேடிய நண்பர்கள் நேற்று தானகவே மினஞ்சல் அனுப்பி இருந்தார்கள் - சாலை மறியல் போராட்டத்தையும் ஈழ நிலைமையும் அதன் மூலம் அறிந்து கொண்டவுடன்!

இதை எம்மவர் போராட்டத்தை ஊக்குவிப்பதாக தான் எடுக்க முடியும்...அதனால் தான் அவர்கள் குறிப்பிட்டு இருந்ததை அப்படியே வெட்டி ஒட்டுகிறேன்...

1) "there was a big protest in TO again today. The Tamil community sat down (literally!!) on one of the major highways and shut down traffic. Very effective!! - it's all over the news - MP's are talking and all! Glad to see it!"

2) "really sorry to hear what's happening in your homeland. There is definitely a lot more media coverage on Sri Lanka, and it's not looking good. I do hope that the world sympathizes with the Tamils and the UN will do what's right. Definitely the Tamils around the world are getting everyone's attention. I'm sure you're doing your bit. Just read in Toronto, the mass demonstration stretched onto our major highway and closed it off. refusing to budge until our Federal govt engages in dialogue. good for them. I hope and pray that you have the strength to make it through day by day. Keep me posted whenever you can."

கனடாவில் நடந்த எமது சாலை மறியல் போராட்டம் அவர்களை பாதித்து இருந்தாலும், அவர்களின் கவனத்தையும் அது ஈர்த்து, எமது வேறொன்றும் இயலா நிர்பந்தத்தையும் விளக்கி இருக்கு.....அதனால் விளங்க கூடியவர்கள் விளங்கி கொள்ளுவார்கள்...விளங்காதவர்க

ஆத்திரக்காரணுக்கு புத்தி மட்டு என்ற பழமொழியில் அர்தம் உள்ளது என்பது இப்போது நடைபெறும் விடயங்களில் தெரிகிறது. அண்மையில் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் நடை பெறும் போராட்டம் பற்றி கூறுகையில் ஒரு விடயத்தை தெளிவாக கூறியிருந்தனர். அந்த அந்த நாட்டு சட்ட வரையறைக்குட்பட்டு உங்கள் போராட்டங்களை நடாத்த அவர்கள் வேண்டியிருந்தார்கள்.

இங்கு வெறுமனே கருத்து பேசி நேரம் வீணடிக்க விரும்பவில்லை, ஆனால் ஒரு விடயம். லண்டன் பொலீஸ் நமது போராட்டத்தை அடக்க நினைத்தால் அவர்களுக்கு சில மணித்துளிகள் போதும் நமது குரலை நசுக்குவதற்கு. ஆயிரக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்களுக்குள் நடைபெறும் பாரிய கலகங்களை அடக்கும் இந்த பொலீசாருக்கு நமது போராட்டத்தை அடக்க அனுபவமும் உள்ளது. ஆனால் நமது போராட்ட நியாயம் புரிந்து நமக்கு ப+ரண ஒத்துளைப்பு தருகிறார்கள். அதை நாம் மதிக்க வேண்டும். நமது போராட்டம் தொடர வேண்டும் ஆனால் அது இநத நாட்டு சட்ட வரையறைக்குள் இருந்தால் தான் அதற்கு மதிப்பு. இல்லை இன்றும் நேற்றும் நமது போராட்டத்தை அவ்கள் கொச்சைப்படுத்தியது தொடரும்! புரிந்தால் சரி!

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்திரக்காரணுக்கு புத்தி மட்டு என்ற பழமொழியில் அர்தம் உள்ளது என்பது இப்போது நடைபெறும் விடயங்களில் தெரிகிறது. அண்மையில் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் நடை பெறும் போராட்டம் பற்றி கூறுகையில் ஒரு விடயத்தை தெளிவாக கூறியிருந்தனர். அந்த அந்த நாட்டு சட்ட வரையறைக்குட்பட்டு உங்கள் போராட்டங்களை நடாத்த அவர்கள் வேண்டியிருந்தார்கள்.

இங்கு வெறுமனே கருத்து பேசி நேரம் வீணடிக்க விரும்பவில்லை, ஆனால் ஒரு விடயம். லண்டன் பொலீஸ் நமது போராட்டத்தை அடக்க நினைத்தால் அவர்களுக்கு சில மணித்துளிகள் போதும் நமது குரலை நசுக்குவதற்கு. ஆயிரக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்களுக்குள் நடைபெறும் பாரிய கலகங்களை அடக்கும் இந்த பொலீசாருக்கு நமது போராட்டத்தை அடக்க அனுபவமும் உள்ளது. ஆனால் நமது போராட்ட நியாயம் புரிந்து நமக்கு ப+ரண ஒத்துளைப்பு தருகிறார்கள். அதை நாம் மதிக்க வேண்டும். நமது போராட்டம் தொடர வேண்டும் ஆனால் அது இநத நாட்டு சட்ட வரையறைக்குள் இருந்தால் தான் அதற்கு மதிப்பு. இல்லை இன்றும் நேற்றும் நமது போராட்டத்தை அவ்கள் கொச்சைப்படுத்தியது தொடரும்! புரிந்தால் சரி!

பொண்ட்.. நீங்கள் சொல்வதில் மிகுந்த அர்த்தம் பொதிந்துள்ளது..! ஆனால் நடைமுறைக்கும் எமது அவசரத்துக்கும் சாலையோர கவன ஈர்ப்புகள் மட்டுமே போதாது. தெரு மறிப்பின் மூலம் நன்மையோ தீமையோ, பெரும்பான்மை சமூகத்திடம் எமது பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு விட்டது. இனிமேல் அவர்களுக்கு விழிப்பூட்டல் செய்யவேண்டியது நமது கடமை.

இதற்கு முன் மூன்று மாதங்களாக நாங்கள் தெரு ஓரங்களில் நின்று கோசங்களைப் போட்டபோது, வெள்ளைகள் காரின் உள் இருந்தபடியே வேற்றி என்று இரண்டு விரல்களைக் காட்டிச் சென்றதுதான் மிச்சம். அவர்கள் எமது பிரச்சினையை அதற்குமேல் கருத்தில் எடுத்தார்களா என்றால் இல்லை. அவர்களுக்கு அவர்களுடைய பிரச்சினை.

இதை வைத்துத்தான் அரசுகளும் எமது உயிர்களுடன் விளையாடுகின்றன. தங்கள் ஓட்டுக்களுக்குச் சேதாரம் வராத வரைக்கும் அவர்கள் ஊமைக் கோட்டான்கள்தான். இப்போது அரக்கப் பறக்க அறிக்கை விடுகினம். ஏன்? பல வெள்ளைகள் நகர மேயரையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் காய்ச்சி எடுத்திருக்கிறார்கள். இப்ப அரசியல்வாதிகளுக்குத்தான் திண்டாட்டம்.

லண்டனைப்பற்றித் தெரியவில்லை ஆனால் கனடாவில் அமைதியான ஒன்றுகூடல்களைத் தடுக்க முடியாது. சாலை மறியல் வன்முறை அல்ல. காரை உடைத்தால்தான் வன்முறை.

மற்றையது, இணையத்தளங்களில் வெள்ளைகள் போல் வந்து எமது போராட்டங்களுக்கு எதிராகக் கருத்து எழுதும் பல குரங்குகள் சிங்கள பண்டாக்கள். இவர்கள் குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்ண்டுக்கு பிரித்தானிய பொலிஸ் என்ன தந்து கதைக்கவிட்டவங்க??

நேற்று நடந்திச்சே வீதி மறிப்பு போராட்டம் அதிலே நடைபெற்ற ஒரு சில விபரங்கள், வெளியில் வராதவை, நேரடியாக சம்பந்தப்பட்டவர் மூலம் கேட்டறிந்தது....

நேற்று காலை சாலையை மறியல் செய்து எமது எதிர்ப்பை தெரிவித்தது யாவரும் அறிந்ததே, இதனால் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் காரசாரமான விவாதங்கள், சல சலப்புக்கள் நடந்தது உண்மை,

பிரித்தானிய பொலீஸார் எனது நண்பரை நேற்று கைது செய்தார்கள், காரணம்...............

காலையில் ரோட்டை புளக் பன்னி மறியல் செய்ய முயன்ற 600க்கு மேற்பட்டவர்களில் எனது அந்த நண்பரும் ஒருவர், பொலிசார் பலர் மீது தடியடி பிரயோகம் செய்து அவர்களை பின் தள்ளும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்த பொழுது எனது நண்பரும் அதற்கு அகப்பட்டு கொண்டார், இதுவரையும் அவர் செய்தது கோசம் அதாவது வழமையாக போடும் கோசத்தை எழுப்பியவாறு அதில் நிற்கும்பொழுது அவருக்கு முன்னால் நின்ற பொலிஸ்காரர் அவரை பின்னுக்கு தள்ளி உள்ளார், எதிர்பாராத சமயத்தில் தள்ளியதானால் எனது நண்பர் நிலத்திலே விழுந்துவிட்டார், சுதாரித்து எழும்பி அந்த பொலிசாரை நோக்கி ''why did u push me'' என்று கேட்டதும் அந்த பொலிஸார் எனது நண்பர் வைத்திருந்த பாக் (hand bag) பறிக்க முயற்சி செய்யும் பொழுது இருவருக்கும் இழுபறி (அருகில் ஏனனய பொலிசார் ஏனைய மாணவர்கள் மக்களுடன் இதே மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்) பட்டுகொண்டு இருக்கும் பொழுது அதனை அவாதானித்த வேறு இரண்டு பொலிஸார் எனது நண்பரை வலுக்கட்டாயமாக அவரை தூக்கி வண்டியில் ஏற்றி ஸ்ரேசனுக்கு கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள், இவரை போல ப.உ. சிவாஜிலிங்கம் உட்ப்டட மேலும் 30க்கு மேற்றபட்டவர்களை கைது செய்துகொண்டு சென்றார்கள், அங்கே அவர்களுகென ஒவ்வொரு சொலிஸ்ரரை வரவழைத்து பின்னர் அவர்களை விடுவித்தார்கள், அதுவும் அடுத்த நாள் காலையில். விடும்பொழுது ஒரு நிபந்தனையில் விடுவித்தார்கள் என்ன நிபந்தனை என்றால் வரும் செப்ரம்பர் 22ம் திகதி வரை westminister square சுற்றி 2 மைல்களுக்குள் அவர்களை மீண்டும் கண்டாள் அவரை கைது செய்து சிறையில் அடைப்போம் என்ற நிபந்தனை.

பொலிஸார் இப்பொழுது சீண்டிவிட்டு மாட்டிவிட்டு எமது இப்படியான போராட்டங்களை மழுங்கடிப்பதற்கு முயற்சிகள் செய்துகொண்டு இருக்கிறார்கள், மக்கள் அதிகமாக காணப்படும் பொழுது எமது தேசிய கொடியை பறிப்பதை தவிர்க்கிறார்கள், இதிலிருந்து ஒன்றை புரிந்துகொள்ளுங்கள், அகிம்சை, அமைதி, என்ற சொற்களுக்குரிய மரியாதை என்றோ காணாமல் போய்விட்டது. தீவிரவாதிகளின் கொடி அதை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்று மக்கள் குறைவாக நிற்கும் நேரத்தில் வலுக்காட்டாயமாக புடுங்கும் எருமைகள் எதற்காக மக்கள் அதிகமாக நிற்கும் பொழுது மெளனமாக இருக்கின்றார்கள்? மக்கள் போராட்டத்துக்கு சக்தி அதிகம்,

MR BOND சொல்லுறமாதிரி சினிமாவில் வரும் காட்சிகளை மனதில் வைத்து அமைதி, அகிம்சை போராட்டத்தை பாராளுமன்ற சதுர்க்கத்துக்கு வெளியே உள்ள மைதானத்தில் நடாத்திகொண்டு இருந்தேமயானால் 4 பக்கமும் வரியல்களால் அடைத்துவிட்டு (அதைத்தான் அங்கே செய்துவைத்திருக்கிறார்கள்) ஆடு, மாட்டை அடைத்து வைத்திருப்பது போல வெளியில் இருந்து பார்ப்பர்வகளுக்கு இருக்கின்றது.

பொண்ட் அப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்வமானால் என்னம் 3,4 மாதத்திற்கு மட்டுமில்லை, எமது இனம் வன்னிய்ல் அழியும் வரை எம் மீது பிரித்தானியா மக்கள் அளவுக்கு அதிகமாக (வடிவேல் சொல்லுறமாதிரி எவ்வளவு அடித்தாலும் உவன் தாங்குறாண்டா உவன் ரொம்ப நல்லவண்டா எண்டமாதிரி) எம் மீது பாசத்தை பொழிவார்கள்.

Edited by Danklas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆத்திரக்காரணுக்கு புத்தி மட்டு என்ற பழமொழியில் அர்தம் உள்ளது என்பது இப்போது நடைபெறும் விடயங்களில் தெரிகிறது. அண்மையில் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் நடை பெறும் போராட்டம் பற்றி கூறுகையில் ஒரு விடயத்தை தெளிவாக கூறியிருந்தனர். அந்த அந்த நாட்டு சட்ட வரையறைக்குட்பட்டு உங்கள் போராட்டங்களை நடாத்த அவர்கள் வேண்டியிருந்தார்கள்.

இங்கு வெறுமனே கருத்து பேசி நேரம் வீணடிக்க விரும்பவில்லை, ஆனால் ஒரு விடயம். லண்டன் பொலீஸ் நமது போராட்டத்தை அடக்க நினைத்தால் அவர்களுக்கு சில மணித்துளிகள் போதும் நமது குரலை நசுக்குவதற்கு. ஆயிரக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்களுக்குள் நடைபெறும் பாரிய கலகங்களை அடக்கும் இந்த பொலீசாருக்கு நமது போராட்டத்தை அடக்க அனுபவமும் உள்ளது. ஆனால் நமது போராட்ட நியாயம் புரிந்து நமக்கு ப+ரண ஒத்துளைப்பு தருகிறார்கள். அதை நாம் மதிக்க வேண்டும். நமது போராட்டம் தொடர வேண்டும் ஆனால் அது இநத நாட்டு சட்ட வரையறைக்குள் இருந்தால் தான் அதற்கு மதிப்பு. இல்லை இன்றும் நேற்றும் நமது போராட்டத்தை அவ்கள் கொச்சைப்படுத்தியது தொடரும்! புரிந்தால் சரி!

ஏற்று கொள்கிறேன் தங்கள் கருத்தையும் ஓரளவிற்கு...

அதே நேரம், தாங்களும் மறுக்க முடியாது - அதே விடுதலை இயக்கம் சொல்லியதும் சொல்வதும் - போராட்டங்களின் வடிவங்கள் மாறும், இலக்கு மாறாது என்று!

வடிவங்கள் இடைக்கிட சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது, மாற்ற வேண்டியது கட்டாயம்! இல்லாது விட்டால் தான் இவர்கள் சலித்து போகிறார்கள்...

அன்றாடம் செய்யவில்லை நாம் சட்டவிரோத போராட்டம்....

உதைபந்தாட்ட ரசிகர்கள் மது போதையில், தங்கள் அணி தோற்றால் பண்ணும் அராஜகம் இல்லை - இன்று நாம் நடத்தும் போராட்டம்...போலீசாருக்கு அனுபவம் இல்லை என்று யாரும் நினைக்கவில்லை.... போராட்டத்தின் தார்ப்பரியத்தை அவர்களும் விளங்கி கொள்வார்கள், விளங்கி கொள்ள வேணும்.... இருப்பினும் தங்கள் கடமைகளை செய்கிறார்கள்.....அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் அரசாங்கத்திற்கு தான் எமது அழுத்தம்....

உதை பந்தாட்ட கலவரங்களுடன் எமது நிலையை ஒப்பிட்டு தயவு செய்து பனையால விழுந்தவனை மாடேறி உளக்கினது போல ஆக்க வேண்டாம்...

சும்மா வம்பிற்கு நாம் சாலை மறிக்கவில்லையே.....

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் பொலிசாருக்கு தொல்லை கொடுக்கவில்லை.பிரித்தானிய அரசின் மெத்தனப் போக்கே பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையே முறுகலைத் தோற்றவித்திருக்கிறது.மக்கள் ஒவ்வொரு நாளும் வீதி மறியல் செய்வதில்லை.தாயகத்தில் பெரும் அழிவு ஏற்படும் போதே மக்கள் கொந்தளிக்கிறார்கள்.தமிழர்கள

பொன்ண்டுக்கு பிரித்தானிய பொலிஸ் என்ன தந்து கதைக்கவிட்டவங்க??

இப்படியான எழுத்துக்கள் போன்றனவற்றால் தான், எமது இன்றைய நிலை .....

நேற்றைய தினம் நானும் இவ்வார்ப்பாட்டத்துக்கு சென்றிருந்தேன். அங்கிருந்து வந்த உடனேயே இதனை எழுத முற்பட்டேன். எமது போராட்டாங்கள் வெறுப்படைய வைக்கும் படி செல்லக்கூட்டாது. நேற்றைய தினம் LBC வானொலியை கேட்டவர்களுக்கு பொண்டின் எழுத்துக்கள் புரிந்திருக்கும். எமது போராட்டாங்களுக்கு ஆதரவாக கருத்துக் கூறி வந்த அறிவிப்பாளரே ஒரு கட்டத்தில் ... "எமது அனுதாபங்களை இவர்கள் இழக்கப் போகிறார்கள்" .... என்று குறிப்பிட்டார். சில போராட்டாங்கள் அடையாள எதிர்ப்பைக் காட்ட நடத்தப்படத்தான் வேண்டும். அதே அளவுக்கு மிஞ்சினால் .....!!!

நேற்று இலங்கை அரசின் இவவழிப்புக்கு எதிராக பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு முன் தொடங்கி ... இந்திய தூதரகம் ... சீனத்தூதரகம் .... வியட்நாம் தூதரகம் .... நாளை ரஷ்ய தூதரகம் .............. திசை தெரியாமல் செல்கின்றதா????????

Edited by Nellaiyan

....எனினும் இதற்கு பதில் அளித்துள்ள காவற்துறை கட்டளை அதிகாரி மார்ட்டின், இவ்விடயம் அனுதாபத்திற்குரியது எனவும், எங்களது கடமைகளை முடித்து வீடு திரும்பும் வரை நாமும் இவ் ஆர்ப்பாட்டங்களில் உள்வாங்கப்பட்டிருக்கிறோம், இது மக்கள் ஜனநாயக உரிமையின் ஒரு பகுதி. இவ் ஆர்ப்பாட்டங்கள் பாராளுமன்றத்தினையும், பிரதான வீதிகளையும், மற்றவர்களின் ஜனநாயக கடமைகளையும் இந்தளவு முடக்கிவிடக்கூடும் என்பதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. என தெரிவித்தார்.

தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெரமி கொர்பின் தெரிவிக்கையில், ஜனநாயக வழியில் போராடுவது அவர்களது உரிமை, இதனை கட்டுப்படுத்துவதை விட அவர்களுக்கான உறுதிமொழிகள் அளிக்கப்பட வேண்டும். தங்களுடைய சொந்த தேசத்தில் மக்கள் நிம்மதியாக வீடு திரும்புவதற்காக இத் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை நடாத்திவரும் இம்மக்கள் மீது நாம் அனுதாபம் கொள்ள தவறுவதால் அவர்கள் நம்பிக்கையிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மார்ட்டின் மீண்டும் கூறிகையில் 'எனக்கு தெரிகிறது, என்னுடைய மனநிலை இன்று நல்லதாக இல்லை, ஆனாலும் நான் சொல்லவேண்டியது இதுதான் 'அவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது......

எம்மினத்தின் உரிமையை பதவியிலிருக்கும் சில பெரும்புள்ளிகளே உணர்ந்து கொள்ளும் நிலை உருவாகும் போது, எமக்குள்ளேயே கருத்துவேறுபாடுகளை வளர்த்து ஆதரவளிக்கும் பொதுமக்களின் ஒற்றுமையையும் குற்றம் சொல்லாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் பாராளுமன்றத்திற்கு முன்னால் இருந்து அமைதியாக இருந்தே போராட்டம் நடத்தினர் பிரித்தானியா அரசும் மக்களும் கண்டு கொள்ளாததால் தான் மக்கள் வீதிக்கு இறங்க வேண்டி வந்தது.பிரித்தானியா அரசினதும் மக்களினதும் நினைப்பு தமிழ் மக்கள் ஏதோ வேலையில்லாமல் இருப்பவர்கள் தங்கடபாட்டில் வந்து ஏதோ அமைதியாக ஒரு மூலையில் இருந்து கத்திப் போட்டுப் போகட்டும் என்று ஒரு மாதத்திற்கு மேலாக அந்த மூலையில் இருந்து கத்தியும் அவர்கள் காதில் ஏறாததால் தான் வீதி மதிப்பு போராட்டத்தில் மக்கள் இறங்கினர் உடனே அது பிரித்தானியாவில் முக்கிய செய்தியாக போய் விட்டது.பத்திரிகைகளில் கூட வன்னியில் முதல் நாள் இத்தனை மக்கள் கொல்லப் பட்டதால் தான் மக்கள் வீதிக்கு இறங்கினர் என போட்டு இருந்தது.இப்படி இடைக்கிடையே செய்வதன் மூலம் அவர்களின் இயல்பு நிலை பாதிக்கப்படும் போது தான் அவர்கள் எங்கள் பிரச்சனையை விரைவாக தீர்த்து வைக்கப் பார்ப்பார்கள் என்பது என் கருத்து.

நெல்லையன் இலங்கைக்கு உதவும் தூதரங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதில் என்ன தப்பு? தனிய பாராளுமன்றத்திற்கு முன்னால் இருந்து கத்தினால் போதும் என்பதா உங்கள் கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.