Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழப் புற நிலை அரசு

Featured Replies

காலம் தமிழீழப் போராட்டத்தை புலம்பெயர்ந்த மக்களிடம் ஒப்படைத்திருக்கின்றது. உலக நாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களோடு பேசுவதற்கு ஆவலாக இருக்கின்றன.

இன்றைய நிலையில் புலம்பெயர்ந்த நாடுகளில் அரசியற் போராட்டத்தை வழி நடத்த வெளிப்படையாக இயங்கக் கூடிய ஒரு தலைமை தேவைப்படுகின்றது.

தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கே இருந்த எமது அரசு அழிக்கப்பட்டு விட்ட நிலையில், நாம் மர்மத் தலைமைகளின் கீழ் எமது போராட்டத்தை நடத்த முடியாது. ஐரோப்பிய அமெரிக்க அரசுகளோடு வெளிப்படையாக பேசக் கூடிய, மக்களோடு நிற்கின்ற ஒரு தலைமை தேவை.

நாம் "புற நிலை அரசு" (government in exile) ஒன்றை தேர்தல் மூலம் ஜனநாயக வழியில் உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

"தமிழீழப் புற நிலை அரசு" ஒன்றின் உருவாக்கம் சிறிலங்கா அரசுக்கு சிக்கலைக் கொடுக்கும். சில உரிகைளையாவது தமிழர்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். எமது தமிழீழக் கனவையும் அணையாது பாதுகாக்கும்.

இது பற்றிய ஒரு திறந்த விவாதம் தேவை!

Edited by சபேசன்

  • Replies 102
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன்

தலைமை என நீங்கள் தனியொருவரை குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். அவ்வாறும் இருக்க முடியாது. நீங்கள் குறிப்பிட்ட மாதிரியான .. இந்த நாசமாப்போன உலகம் ஏற்கிறமாதிரியான ஏதோ ஒரு நடைமுறையில் ஒரு தலைமை அமைப்பு.. அப்படியும் சொல்லமுடியாது. ஒரு வழிகாட்டல் கட்டமைப்பு தேவைப்படுகிறது.

ஆனால்.. பதவிகளுக்காக நீ நான் என குதறித்தள்ளும் நம் புலம்பெயரிச் செயற்பாட்டாளர்களிடமிருந்து - அவ்வாறானவர்கள் உருவாகுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

புலிகளின் தலைமைச் செயலகம் இறுதிநேர அறிவிப்பொன்றை விடுத்திருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. அல்லது புலிகளில்.. மக்கள் முகங்களில் அறிமுகமான யாரையாவது வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம்.

இன்றைய துயரச் செய்தியை அன்ரன் பாலசிங்கம்சொன்னால் கூட அவர் விலைபோய் விட்டார் என சொல்லும் மனநிலையிலேயே மக்கள் இருக்கிறார்கள். இது உணர்வுதளம் சார்ந்தது. ஜீரணித்து கொள்ளமுடியாதது.

ஒரு அரசியல் கட்டமைப்பொன்றை.. தலைவர் தளபதி என்ற பட்டங்களை விடுத்து கட்டியெழுப்பவேண்டும். அதற்கு களப்பரி + புலமைப்பணி தேவை. முதலில்.. சில கேள்விகளை கேட்டாலே துரோகியென்று விடுவார்கள் என ஒதுங்கிய புலமைப்பணியாளர்களை ஒன்றிணைக்கவேண்டும். அதனிலும் முக்கியம்.. பிரான்சுக்கு இவர் பொறுப்பாளர்.. ஜெர்மனுக்கு இவர் பொறுப்பாளர் என்ன நடைமுறைகளை விட்டொழித்து உலகளாவிய கட்டமைப்பை உருவாக்கவேண்டும்.

அதற்குமுதல்.. நாங்கள் இங்கிருந்து பங்களிப்பு செய்ய.. அங்கே போராளிகள் மீளவும் போராடட்டும் என்ற மொள்ளமாரித்தனப்பேச்சுகளை விட்டொழிக்க வேண்டும். ஏற்றாலும் சரி இல்லையாயினும் சரி.. அங்கே இருக்கிற மக்கள் இனியொரு ஆயுதப்போருக்கு தயார் இல்லை. அந்த மக்களுக்கான அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்வதில் நமது அரசியல்போர் ஆரம்பிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

தமிழீழத்திலே ஒரு நடைமுறை அரசு இயங்கிய காலத்திலேயே புலம்பெயர் நாடுகளில் நாம் மேற்கொண்ட போராட்ட வடிவங்கள் நல்ல பயன்களை தரவில்லை.

போராட்ட வடிவங்களை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்க வேண்டும்.

புறநிலை அரசு என்று நான் சொல்வது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களினால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதகளை கொண்ட ஒரு கட்டமைப்பு. இந்தக் கட்டமைப்பு அதாவது தமிழீழப் புறநிலை அரசின் பாராளுமன்றம் ஒரு தலைமைக் குழுவை உருவாக்கி, அதனூடாக உலக சமுதாயத்துடன் பேசும்.

தமிழீழத்தில் வாழும் மக்களை போராடச் சொல்லி இனி நாம் கோர வேண்டாம். அது இரக்கமற்றதாக இருக்கும். நாம் போராடுவோம்.

எமது பொருளாதார வளத்தை புறநிலை அரசின் ஊடாக ஒருமுகப்படுத்துவோம். லொபி செய்கின்ற நிறுவனங்களை பணிக்கு அமர்த்துவோம்.

"தமிழீழம் உயிரோடு இருக்கின்றது" என்ற செய்தியை உலகுக்கு அழுத்தமாகச் சொல்லிக் கொண்டிருப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வாறான ஒரு அரசிசியற் செயற்திட்டத்தை அதற்கான கட்டமைப்பு வழிகளை செல்லும்பாதையை - முடிய அறைகளுக்குள் செய்யாமல் திறந்த நிலையில் பேசவேண்டும். ஆர்வமுள்ள அனைவரும்.. எதிர் நேர் வழிகளில் கருத்துக்களை சொல்லட்டும். உரையாடட்டும். சிங்கள அரசின் கூலிகளாக அல்லாது - அதே நேரம் புலிகளின் வழிகளை அல்லது புலம்பெயர் செயற்பாடுகளை காரசாரமாக விவாதித்த பலர் இருக்கிறார்கள். (ஆனால் வேண்டாத நேரங்களில் பேசினார்கள். சிலசமயங்களில் பின்னடைவுகளை ஏற்படுத்தினார்கள்) அவர்களை பேச விடுவோம். எதவாயினும் உரையாடட்டும். சிங்கள அரசின் நலன்களைப்பேண பேசுபவர்கள் குறித்து கணக்கெடுக்கத் தேவையில்லை.

மக்களை குழப்பத்துக்கு உட்படுத்தாத வகையில் - சந்தேகங்களை தோற்றுவிக்காத வகையில் - எல்லோரையும் இணைத்து செல்லும் வகையில் - புலமைப்பணியும் களப்பணியும் சார்ந்து - வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.

அதற்கு முன்னைய தவறுகளை திறந்த நிலையில் உரையாட விவாதிக்க முன்வரவேண்டும். அத்தவறுகளில் இருந்து... சரியான பாதை கட்டமைக்கப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதியபாதையில் எமது கொள்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

தன்னலமில்லாத, விலைபோகாத, தமிழ் தேசியத்த்தையும் ,தேசத்தையும் நேசிக்கின்ற இன உணர்வாளர்கள் இப்பணியைமுன்னெடுக்கமுடியும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வாறான ஒரு அரசிசியற் செயற்திட்டத்தை அதற்கான கட்டமைப்பு வழிகளை செல்லும்பாதையை - முடிய அறைகளுக்குள் செய்யாமல் திறந்த நிலையில் பேசவேண்டும். ஆர்வமுள்ள அனைவரும்.. எதிர் நேர் வழிகளில் கருத்துக்களை சொல்லட்டும். உரையாடட்டும். சிங்கள அரசின் கூலிகளாக அல்லாது - அதே நேரம் புலிகளின் வழிகளை அல்லது புலம்பெயர் செயற்பாடுகளை காரசாரமாக விவாதித்த பலர் இருக்கிறார்கள். (ஆனால் வேண்டாத நேரங்களில் பேசினார்கள். சிலசமயங்களில் பின்னடைவுகளை ஏற்படுத்தினார்கள்) அவர்களை பேச விடுவோம். எதவாயினும் உரையாடட்டும். சிங்கள அரசின் நலன்களைப்பேண பேசுபவர்கள் குறித்து கணக்கெடுக்கத் தேவையில்லை.

மக்களை குழப்பத்துக்கு உட்படுத்தாத வகையில் - சந்தேகங்களை தோற்றுவிக்காத வகையில் - எல்லோரையும் இணைத்து செல்லும் வகையில் - புலமைப்பணியும் களப்பணியும் சார்ந்து - வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.

அதற்கு முன்னைய தவறுகளை திறந்த நிலையில் உரையாட விவாதிக்க முன்வரவேண்டும். அத்தவறுகளில் இருந்து... சரியான பாதை கட்டமைக்கப்பட வேண்டும்

காவடி அண்ணா அவர்களின் இரு கருத்துக்களுடனும் ஒத்துப்போகிறேன் இன்றைய நிலையில் திறந்த ஒரு விவாதம் மேற்கொள்ளப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலமைத்துவமே வேண்டும். இப்படி ஒரு நிலை ஏற்படும் போது மாற்றுக்கருத்தாளர்களும் சரி தமிழீழ ஆதரவாளர்களும் சரி ஓரணியில் திரண்டு செயற்படக்கூடிய சாத்தியப்பாடுகளே அதிகம் அத்துடன் சிலர் புலி எதிர்ப்பு என்று சொன்னார்களே தவிர தமிழ் மக்களுக்கு எதிர்ப்பு என்றோ அல்லது தமிழர்களுக்கு ஒரு தீர்வைப்பெற்றுக் கொடுக்கவே விரும்புவதாகவே சொல்கிறார்கள் அத்தோடு ஆரம்பகாலங்களில் எல்லா அமைப்புகளும் தமிழீழம் என்ற ஒன்றுக்காக தான் போராடியவர்கள் ஆனால் காலச்சூழல் மற்றும் புறக்காரணிகளால் பலர் சோரம் போனது உண்மையே...தவறுகள் திருத்தப்பட்டு அனைவரும் ஒரே அணியில் திரழும் சாத்தியங்களும் உண்டு.

அனைவரையும் அரவணைத்து ஒரேகுடையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்தால் எதுவுமே சாத்தியம் தான்.

  • தொடங்கியவர்

புறநிலை அரசின் பாராளுமன்றத்தில் அனைத்துத் தரப்பும் இடம் பெற வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் நாடுகளில் தேர்தல் நடத்தி வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கலாம். மாற்று இயக்கங்களை சேர்ந்தவர்களும் மக்களின் வாக்குகளைப் பெற்று வரலாம்.

அனைத்து தரப்பையும் உள்ளடக்கி ஒரு புறநிலை அரசை உருவாக்கி, அதனூடாக அனைவருடனும் பேசுவோம்.

சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது, தமிழீழப் புறநிலை அரசுக்கு ஐநா சபையில் பார்வையாளர் அந்தஸ்தை பெறுவது, தமிழீத்தில் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது, லொபி நிறுவனங்களின் மூலம் பரப்புரை மேற்கொள்வது, அனைத்துத் தமிழர்களையும் உள்ளடக்கும் போராட்டங்களை நடத்துவது.....

இப்படி பல நோக்கங்களையும், வேலைத் திட்டங்களையும் உள்ளடக்கியபடி இந்த புறநிலை அரசை உருவாக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலகேள்விகள்

1. பிரதிநிதிகளை எந்த அடிப்படையில் மக்கள் தேர்வு செய்வார்கள்.. ? (அதாவது அவர்களின் கருத்துகள் அடிப்படையிலா...வேலைத்திட்டங்

  • தொடங்கியவர்

காவடி,

தற்பொழுது உள்ள குழப்பத்தை விட கட்சியரசியல் ஒன்றும் தீங்கானது இல்லை. தமிழீழப் புறநிலை அரசின் பாராளுமன்றத்திற்குள் வருவதன் ஊடாக தமிழீழத்தை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதன் பின்பு அவர்கள் தமிழீழம் எப்படி அமைய வேண்டும் என்பதில் கொண்டிருக்கும் கருத்து வேறுபாடுகள் எம்மை பாதிக்கப் போவது இல்லை.

அனைவரையும் இணைத்துச் செல்வதுதான் இதில் உள்ள முக்கிய விடயம்.

மர்ம மனிதர்களிடம் உள்ள தமிழீழப் போராட்டம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை. தேசியத் தலைவர் மீது உண்மையான பற்று உள்ளவர்கள் இந்தக் கோரிக்கையை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

சபேசன் காவடி ஆகியோரின் கோரிக்கை அவசரமாக அவசியமாகச் செய்யப்பட வேண்டியது.ஆனால் இதை யார் செய்வது?

இதைச் செய்வதற்கு பொருளாதார அடிப்படை என்ன? நாம் எல்லாம் தனி மனிதர்கள்.இருக்கின்ற கட்டமைப்பிலாயே இது சாத்தியம் ஆகும்.ஆகவே மக்கள் இந்தக் கட்டமைபுக்களில் உள்ளவர்களை நோக்கியே போராட வேண்டி உள்ளது.அத்தோடு என்னைப்பொறுத்தவரை புலத்தில் பல போராட்டங்களை முன் நின்று நடாத்திய இளைய சமுதாயமே இதற்க்கு தகுந்தவர்கள் .அவர்களிடமே உண்மையான போராடும் குணமும் உள்ளது.இதனை பி டி எப், சி டி சி போன்ற அமைப்புக்கள் ஒன்றாவாதன் மூலம் சாத்தியப்படுதலாமா? அதோடு பல த தே கூ பாரளுமன்ற உறுப்பினர்கள் இன்று புலத்தில் உள்ளார்கள்.இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்வர்கள்.இவ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கருத்து,

அனைவரும் ஒன்றினைக்க வேண்டும்.

நம்மில் தமிழர் என்ற ஒரு ஓற்றுமை மட்டுமே மேலொங்க வேண்டும்.

சிந்தனை செய்ய கூடிய கருத்து

மேலும் சில யோசனைகள், நாம் முன் நோக்கிச் செல்வதாயின் எம்மை நாமே சுய விமரிசனம் செய்ய வேண்டும்.யாழ்க் களத்தையே இதற்கு நாம் உபயோகிக்கலாம் என்று படுகிறது.

நாம் சர்வதேச ரீதியாக என்ன பிழைகளை விட்டுள்ளோம்?

நாம் இந்த உலகால் ஏன் தனித்து விடப்பட்டோம்?

எவரையும் சாராது நாம் போராடியது தந்திரோபாய ரீதியாகத் தவறானதா?

சீனாவும் இந்தியாவும் எவ்வாறு தமது முரண்பாடுகளை மறந்து தமிழர் போராட்டத்துக்கு எதிராக ஓர் அணியில் நிற்கின்றன?

தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ் உணர்வு என்பது என்ன? ஏன் தமிழகத்தால் ஒன்றும் செய்ய முடியாமால் உள்ளது?

நமது இனி வரும் செயற்பாடுகள் இவ்வாறான கேள்விகளில் இருந்தே ஆரயப்பட வேண்டியவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும் சில யோசனைகள், நாம் முன் நோக்கிச் செல்வதாயின் எம்மை நாமே சுய விமரிசனம் செய்ய வேண்டும்.யாழ்க் களத்தையே இதற்கு நாம் உபயோகிக்கலாம் என்று படுகிறது.

நாம் சர்வதேச ரீதியாக என்ன பிழைகளை விட்டுள்ளோம்?

நாம் இந்த உலகால் ஏன் தனித்து விடப்பட்டோம்?

எவரையும் சாராது நாம் போராடியது தந்திரோபாய ரீதியாகத் தவறானதா?

சீனாவும் இந்தியாவும் எவ்வாறு தமது முரண்பாடுகளை மறந்து தமிழர் போராட்டத்துக்கு எதிராக ஓர் அணியில் நிற்கின்றன?

தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ் உணர்வு என்பது என்ன? ஏன் தமிழகத்தால் ஒன்றும் செய்ய முடியாமால் உள்ளது?

நமது இனி வரும் செயற்பாடுகள் இவ்வாறான கேள்விகளில் இருந்தே ஆரயப்பட வேண்டியவை.

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள்.நல்ல கருத்து ,முயன்று விடைதேடினால் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் இளையோர்கள் நல்ல வழிகாட்டுதலுடன் இதனைச் செய்யமுடியும். அதற்கு முன்பாக மர்மமனிதர்களை மக்கள் முன் தோன்றச் சொல்லுவோம். அது யாராக இருந்தாலும். அல்லது.. நமக்கு இதுநாள்வரை அறிமுகமற்ற நம் உணர்வுத்தளங்களில் உட்செல்லாதிருந்த வேறவரையும் புறக்கணித்து - எம்மாலேயே கட்டிவளர்க்கப்பட்ட புலிகள் இயக்கத்தை நாமே கலைத்து விடுவோம். மன்னிக்கவும் நடக்கும் நிகழ்வுகள் அவ்வாறான துயர முடிவையே எடுக்க வைக்கின்றன. களத்திற்கு வெளியே புலிகள் எனும் அடையாளத்தோடு எஞ்சியவர்கள் பிரிந்து நிற்கிறார்கள் எனத் தெரிகிறது. இந்த பிரிவிற்கு அதிகாரப்போட்டி என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? முன்பு தலைவர் இருக்குமிடம் சென்றோம். இனி எங்கே செல்வது...

அதற்கு நல்லவழி தற்போது இருப்பிலிருக்கிற இயக்கத்தை கலைத்துவிட்டு - புதிய கட்டமைப்பை உருவாக்குதே.. புலமைப்பணி ஆற்றக்கூடியவர்கள், ஏற்கனவே வேறு வழிகளில் பிரபலமாக இருந்து உலகத்தோடு பேசக்கூடியவர்கள் இவர்களை தெரிந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு MIA தமிழில் எங்கும் கதைத்தாக நான் கேள்விப்படவில்லை எமது நியாயம்குறித்து.. ஆனால் அவர் பல அமெரிக்க பிரித்தானிய தொலைக்காட்சிகளில் ஈழத்தமிழர் நியாயத்தை உரத்துகூறியிருக்கிறார். இதுதான் நமது தேவை. இவரைப்போல அமைப்புகள் சாராது உதிரிகளாக செயற்படுவோர்.. பலர் இருக்கிறார்கள். அவர்களை ஒன்றிணைப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதொண்டும் புதிசில்ல எண்டு நினைக்கிறன்..... புதுசா தொடங்கத் தேவையில்லையெண்டும் நினைக்கிறன். ......... தமிழீழ புறநிலை அரசுக்கான அடிதள வேலையள் ஏற்கனவே தொடங்கிட்டுது. பிரான்சில மக்கள பிரதிநிதித்துவ படுத்துற அமைப்புக்கள ஒருங்கிணைச்சு தமிழீழக் கோரிக்கைக்கான வாக்கெடுப்பு நடந்தது அறிஞ்சிருப்பியள்................... அதின்ர அடுத்த கட்டமா நோர்வேயில மக்களே நேரடியா வாக்களிக்கிற முறைய வைச்சு இயக்க அரசியல் கருத்து வேறுபாடுகளில்லாம எல்லாரையும் இணைச்ச ஒரு நிகழ்வொண்டு நடந்தது.............. இது புறநிலை அரசுக்கான முதற்கட்ட வேலையா தொடங்கினதெண்டு நான் அறிஞ்சனான்............... நோர்வேல நடந்தது ஒரு முன்மாதிரியான நிகழ்வூ--------------- பிரித்தானியாலயும் நடக்க வெளிக்கிட்டு கடைசில தலைவற்ற செய்தியளோட எல்லாம் அமுங்கிப் போட்டுது... இப்ப அத அங்க கட்டாயம் செய்யோணும்........ எல்லாத்தையும் திடீரெண்டு உருவாக்கேலா.......... குறுக்குவழில எல்லாத்தையும் செய்யலாமெண்டு நினைச்சு இருக்கிறதையும் கோட்டைவிடாம........... ஒவ்வொரு கட்ட வளர்ச்சியா இதுகள செய்யிறது நல்லது..................... முதல்ல தமிழாக்கள் வாழுற எல்லா நாடுகளிலயும் இந்த வாக்கெடுப்ப நடத்தி முடிச்சு..... பிறகு பிரதிநிதியள தேர்ந்தெடுத்து......... அவையள கொண்டு புறநிலை அரசை அமைக்கலாம்............... உதுக்கு பிரித்தானிய அமெரிக்க அரசுகளின்ர ஆதரவு கட்டாயம் கிடைக்கும்................... கிடைக்காட்டியும் உபத்திரபவம் செய்யாமல் இருப்பினம்............. ஏற்கனவே உந்த வேலைத்திட்டம் தொடங்கிட்டதால அதுக்கு ஆதரவா மக்களை தயார்படுத்த வேண்டியது தான் ஊடகங்களின்ர கடமையா இருக்கும்................................ :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டி.. அப்படியாயின் நல்லது..

அதேவேளை அந்தமுயற்சிகளுக்கு களத்திற்குவெளியேயான அதிகாரபூர்வ குரல்தரவல்ல அதிகாரிகளாக தம்மை பிரகடனப்படுத்தியோரின் ஆசிகள் என்ன..? உண்டா.. ? அவர்களை சில சமயங்களில் மீற வேண்டியிருந்தால் அது நடைமுறைச் சாத்தியமா

நல்ல கருத்துக்கள் உற‌வுக‌ளே.

ஆர‌ம்ப‌த்திலேயே முழுதான‌ ஒரு புற‌நிலை அர‌சை உருவாக்க‌ வேண்டும் என்றில்லை.

முத‌ல் க‌ட்டமாக‌ ஒவ்வொரு நாட்டிலும் உள்ள‌ எம‌து நாட்டுப் ப‌ற்றாள‌ர்க‌ள், இன‌ப்ப‌ற்றாள‌ர்க‌ள், சமூக சேவையாளர்கள், போராட்ட‌ ஆர்வ‌லர்க‌ளிடையே ஒருங்கிணைந்து செய‌ற்ப‌ட‌ வேண்டிய‌ கால‌த்தின் தேவையை உண‌ர்த்துவ‌து.

க‌ன‌பேர் வேணும் எண்டு இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் கொஞ்ச‌ கொஞ்ச‌ பேர் சேர்ந்து த‌மிழ‌ர் உள்ள‌ எல்லா நாடுக‌ளிற்கிடையேயும் ஒரு வ‌லைப்பின்ன‌லை ஆர‌ம்ப‌த்தில உருவாக்குவோம்.

ஆர‌ம்ப‌த்திலேயே செய‌ற்பாட்டிற்குரிய‌ சில‌ அடிப்ப‌டைக் கொள்கைக‌ளை வ‌குத்துக் கொள்ள‌ வேண்டும். உ+ம்:

1. த‌ல‌மை என்று ஒன்றில்லை. ( ஈரோஸ் போன்று )

2. அர‌சிய‌ற் ச‌க்தி தான் நோக்க‌ம்.

3. ஜ‌ன‌னாய‌க‌ம் தான் ஆயுத‌ம். etc. etc...

அடுத்த‌ க‌ட்ட‌மாக‌ ஒவ்வொரு நாட்டு ரீமும் அந்த‌ந்த‌ நாட்டு த‌மிழ‌ரை இணைத்து வ‌ள‌ர்ந்து கொள்ள‌ வேண்டும்.

கால‌ப் போக்கில் ஈழ‌த்தில் உள்ள‌ எம்முடைய‌ உற‌வுக‌ளையும் இணைத்து ஒரு ப‌ல‌மிக்க‌ அர‌சிய‌ற் ச‌க்தியாக‌ வ‌ள‌ர‌லாம்.

எல்லோருகும் நன்றிகள்,

நீண்ட ஒரு இடைவெளிக்குப்பிறகு இப்படியான ஒரு ஆக்கபூர்வமான ஆய்வினை வரவேற்கிறேன். இது பற்றி அண்மையில் ஒரு ஆபிரிக்க நாட்டு நன்பரும் கேட்டிருந்தார் ஏன் இதுவ்ரை தமிழர் இப்படி ஒரு முடிவையும் எடுக்க வில்லை என்று? இது தான் இறைய காலத்தின் தேவை.

சர்வதேசத்தின் கதவை தட்டித்திறக்க நாம் வீதில் இறங்கினோம், இதனால் எந்தப்பலனுமில்லை என்று தோன்றினாலும் இதன் மூலம் பல சர்வதேச அரங்கிலும் எமது கோரிக்கைகளை ஓங்கி ஒலித்திருக்கின்றது. இதுவே ஒரு உந்து சக்தியாகக்கூட நாம் பாவிக்கலாம்

பூனைக்குட்டியார் சொன்னமாதிரி நோர்வேயில் ஒரு மாதிரித்தேர்தல் நடந்து முடிந்துள்ளதுதான் ஆனாலும் இதில் இருந்து எவ்வாறு பிரதி நிதிகளை தெரிந்கெடுப்பது?

தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிகளும் அமைப்பும் சர்வதேச சனநாயக விழுமியங்களுக்குள் அமைந்திருக்க வேண்டும்.

அனைத்துத் தரப்பும் இடம்பெறவேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் செயற்பாட்டு ரீதியாக (உதாரணமாக ஆயதமேந்தி தமிழர்களை கடத்துகிற கொலைசெய்கிற தமிழர்கள் ) தமிழின விரோதப்போக்கை கடைப்பிடிப்பவர்களை விடுத்து -

கருத்தியல் ரீதியாக.. புலிகளையும் சரி புலம்பெயர் தமிழரின்போராட்டத்தையும் சரி மிகக் கடுமையாக விமர்சித்தவர்களை கேள்விகள் எழுப்பியோரையும் ஒற்றைச் சொல்லில் துரோகியென பொட்டிட்டவர்கள் நாங்கள். மீளவும் அவை தொடராது.. அவர்களால் செயற்பாட்டு ரீதியில் தமிழனத்திற்கு எதிராக சிங்களத்தோடு சேர்ந்து பணிசெய்ய முடியாதவர்கள் அவ்வாறான எண்ணம் கொண்டவர்களல்ல என்பதை உறுதிசெய்து உணர்ந்து - அவர்களை பொதுத்தளங்களில் பேசவிடுவோம். பேசட்டும்.உரையாடட்டும். எனக்குதெரிய சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து குரலிட்ட பலர் புலிகளையும் கடுமையாக விமர்சித்தார்கள். யதார்த்தத்தின் அடிப்படையில் இடைநடுவில் அவர்களின் கோரிக்கைகளை செவிசாய்க்கமுடியாத நடைமுறையதார்த்தம் அப்போதிருந்தது. அதனால் இலகுவான வழியாக அவர்களை ஒதுக்கி வைத்தோம்.

இப்போது மீளவும் புதிய அடிப்படையில் தொடங்க விருப்புற்றிருப்பதால் - அவர்களை அழையுங்கள். எந்தவித மனக்கசப்பும் இன்றி வெற்று மனநிலையில் அவர்களை எதிர்கொள்வோம். கேள்விகள் கேட்போம். நாமும் பேசுவோம்..

ஒரு பரந்த தெளிவான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நாம் செயற்பட வேண்டியிருக்கிறது. அதனை அதிகாரங்களின் கட்டுப்பாடின்றி திறந்தநிலையில் உருவாக்குவோம். கட்டுப்படுத்த நினைக்கிற புதிய அதிகாரங்களை புறக்கணிப்போம்.

தற்போதைய நிலையில் தமிழ் மக்களின் அவலங்களை எடுத்துச் சொல்வதற்கும் இவை குறித்து சர்வதேச நாடுகளுடனும் தொண்டு அமைப்புக்களுடனும் பேசுவதற்கும் புலம் பெயர் சூழலில் ஒரு அமைப்பு அவசியமாகிறது. அது ஜனநாயக முறையில தேர்ந்தெடுக்கப்பட்டதாய் இருந்தால் அதற்கான மதிப்பு மேலும் அதிகரிக்கும். இதற்கு சபேசன் சொன்னது போன்ற ஒரு அமைப்பு மிகவும் உபயோகமாயிருக்கும்.

புலம்பெயர் தமிழர் வாழ்கின்ற நாடுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாய் புத்திஜீவிகள். இளையோர்ஈ தமிழீழத்திற்காக தீவிர செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அனைவரையும் உள்ளடக்கியதாய் இந்த அமைப்பு இருக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுபவர்களுடன் மற்றுமு; சில நியமன அங்கத்தவர்களையும் உள்ளடக்கியதாய் இருந்தால் நல்லது.

பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்ற போதிலும் இது குறித்து விவாதித்து விரைவில் அமைக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

எதிர்க்கருத்துடையவவர்களென தள்ளிவையாது அவர்களையும் இணைத்து அவர்களையு எமக்கு ஆதரவாக மாற்றுவதே சாணக்கியம். இதில் தமிமக்களின் கோரிக்கைகளுக்கு சார்பானவர்களையும் சேர்த்துக்கொள்ளக்கூடிய முறையில் அமைதல் நல்லது, அல்லது உரியமுறையில் அவர்களையும் உள்வாங்கவேண்டும். உதாரணாம் சிறிலங்கா இடதுசரிக்கட்சிகள் நடுநிலை அமைப்புக்கள். இது இலங்கைக்கு வெளியிலும் இருப்பது நல்லது.

இதை லாபி அமைப்பாக கருதினாலும் சரிதான்.

மேலும் சில யோசனைகள், நாம் முன் நோக்கிச் செல்வதாயின் எம்மை நாமே சுய விமரிசனம் செய்ய வேண்டும்.யாழ்க் களத்தையே இதற்கு நாம் உபயோகிக்கலாம் என்று படுகிறது.

சாத்தியமில்லை...

1) மோகன் வெளிப்படையான கருத்துப்பகிர்விற்கு முன்வராமல், கருத்துக்களை தன்னிச்சையாக நீக்கும்வரை!

3) விடுதலைபுலிகள், தமிழீழம், தமிழ்தேசியம் என்ற வரையறைகளுக்கு அப்பால் செல்லும் களவிதிகளுக்கு உட்பட்ட உரையாடல்களை அனுமதிக்காதவரை!

  • கருத்துக்கள உறவுகள்

முன்னை நாள் போராளிகள் பலர் பல நாடுகளில் வாழ்கிறார்கள்.( துரோகிகள் அல்ல). அவர்களையும் உள்வாங்குதல் மேலும் வலுவூட்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஏன் குறிப்பிடுகிறேன் எனில் பல நாட்டு அமைப்புகளின் தொடர்புகள் இவர்களுக்கு இன்னும் உண்டு என்ற வகையில் நாம் புதிதாக தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் பார்க்க இவர்கள் மூலம் எமது செயற்பாட்டை இலகுவாக்கலாம்.

  • தொடங்கியவர்

இங்கே சொல்லப்பட்டது போன்று தமிழீழப் புறநிலை அரசு பற்றிய கருத்து பல ஆண்டுகளுக்கு முன்னரேயே சிலரால் முன் வைக்கப்பட்டது. லோரன்ஸ் திலகர் இருந்த காலத்தில் இதைப் பற்றி சிலர் பேசியிருக்கின்றார்கள் என்று அறிகின்றேன்.

ஆனால் அப்பொழுது ஒரு பிரச்சனை இருந்தது. பொதுவாக புறநிலை அரசு என்பது தன்னுடைய சொந்த தாயகத்தில் இயங்க முடியாத நிலை ஏற்படுகின்ற பொழுதே உருவாக்கம் பெறுகின்றது.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஹிட்லரின் ஆக்கிரமிப்பில் சிக்குண்ட பல நாடுகள் தமது அரசுகளை வெளிநாட்டில் வைத்திருந்தன. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளின் புறநிலை அரசுகள் அப்பொழுது பிரித்தானியாவில் இருந்தன.

அதன் பின்பு ஸ்பானியாவில் சர்வாதிகார ஆட்சி சட்டத்திற்கு புறம்பாக ஏற்படுத்தப்பட்ட பொழுது ஸ்பானிய அரசு பிரான்ஸ் மண்ணில் இயங்கியது. சீனாவால் தீபத் ஆக்கிரமிக்கப்பட்ட பொழுது அதனுடைய புறநிலை அரசு தலாய்லாமாவால் இந்தியாவில் உருவாக்கப்பட்டது.

எமது அரசு இதுவரை தாயகத்தில் இயங்கி வந்தது. அதனால் புறநிலை அரசு தேவைப்படவில்லை. ஒரு நாட்டிற்கு இரண்டு அரசுகள் தேவையில்லை என்பதனால் இதற்கு முன்பு தமிழீழத்திற்கான புறநிலை அரசு பற்றிய கருத்துகள் பலரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது நியாயமும் கூட.

ஆனால் இன்று எமது அரசு தாயகத்தில் இயங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே எமது அரசை புறநிலையில் அமைப்பதற்கான தேவை இயல்பாக எழுகின்றது.

பொதுவாக தாயகத்தில் யார் அரசை நடத்தினார்களோ, அவர்களே புறநிலை அரசையும் நடத்துவதுதான் வழமை. ஆனால் இன்றைய நிலை உங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்த நிலையில் ஒரு தலைமையை ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவையும் எழுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.