Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த காலங்களில் நடந்து முடிந்த கசப்பான அரசியல் அனுபவங்களை மறந்து, அரசியல் முரண்பாடுகளை களைந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் -EPDP டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1989 இல் இருந்த நிலை இன்றில்லை. 1989 இல் இன்றைய ஒட்டுக்குழுக்கள் இந்திய ஆதரவில் முழுமையாக இயங்கின. இன்று அவை சிறீலங்கா சிங்களப் பேரனவாத அரசின் சக்திகளாக இயங்குகின்றன. 1989 இல் இந்தியப் படைகளை நம்பி இயங்கியவர்களை அது கைவிட்ட நிலையில் அவர்கள் தமிழ் தேசியத்தின் மீது காட்டிய அக்கறையின் பெயரில் தேசிய தலைவரால் உள்வாங்கப்பட்டனர். தமிழ் தேசியம் தான் அவர்களை மன்னித்து உள்வாங்கியது.

டக்கிளசும்.. சித்தார்த்தனும்.. சங்கரியும்.. கருணாவும் தமது கட்சிகளை கலைத்துவிட்டு தமிழ் தேசியத்தினை முன்னுறுத்தி கூட்டமைப்போடு இணைந்து பணியாற்ற முன்வருவார்கள் என்றால் தேசிய தலைவர் இருந்தால் கூட இதனை வரவேற்பார். நாங்களும் தயக்கமின்றி அவர்களுக்கு ஆதரவு வழங்கலாம்.

ஆனால்... இன்றைய இந்த நிலையில் கூட சிங்கள அரசோடு சேர்ந்தியங்கி மக்களை காட்டிக் கொடுத்துக் கொன்று துன்புறுத்திக் கொண்டிருக்கும் இவர்களை நீங்கள் நம்பச் சொல்வதுதான் எனக்குப் புரியவில்லை..! எந்த அடிப்படையில் இவர்களை மக்கள் நம்ப எதிர்பார்க்கிறீர்கள் என்பதும் புரியவில்லை..! :icon_idea:

ஆயிரத்தில ஒரு வார்த்தை............. எங்கே மக்களுக்கு உதவி செய்யத்தான் உண்மையில் நினைகிறார்கள் என்றால் கூட்டமைப்பில் வந்து இணையட்டும் அனைவரையும் வரவேற்போம். <_< <_< :huh:

Edited by சித்தன்

  • Replies 185
  • Views 13.2k
  • Created
  • Last Reply

1989 இல் இருந்த நிலை இன்றில்லை. 1989 இல் இன்றைய குழுக்கள் இந்திய ஆதரவில் முழுமையாக இயங்கின. இன்று அவை சிறீலங்கா அரசின் சக்தியாக இயங்குகின்றன. 1989 இல் இந்தியப் படைகளை நம்பி இயங்கியவர்களை கைவிடப்பட்ட நிலையில் தமிழ் தேசியத்தின் மீது காட்டிய அக்கறையின் பெயரில் தேசிய தலைவரால் உள்வாங்கப்பட்டனர். தமிழ் தேசியம் தான் அவர்களை மன்னித்து உள்வாங்கியது.

டக்கிளசும்.. சித்தார்த்தனும்.. சங்கரியும்.. கருணாவும் தமது கட்சிகளை கலைத்துவிட்டு தமிழ் தேசியத்தினை முன்னுறுத்தி கூட்டமைப்போடு இணைந்து பணியாற்ற முன்வருவார்கள் என்றால் தேசிய தலைவர் இருந்தால் கூட இதனை வரவேற்பார். நாங்களும் தயக்கமின்றி அவர்களுக்கு ஆதரவு வழங்கலாம்.

ஆனால்... இன்றைய இந்த நிலையில் கூட சிங்கள அரசோடு சேர்ந்தியங்கி மக்களை காட்டிக் கொடுத்துக் கொன்று துன்புறுத்திக் கொண்டிருக்கும் இவர்களை நீங்கள் நம்பச் சொல்வதுதான் எனக்குப் புரியவில்லை..! எந்த அடிப்படையில் இவர்களை மக்கள் நம்ப எதிர்பார்க்கிறீர்கள் என்பதும் புரியவில்லை..! :icon_idea:

இந்தியா வழங்கிய ஆதரவும் இலங்கை வழங்கி வரும் ஆதரவும் தன்னலம் மிக்கதுதான் என்பதை இந்திய ஈழப்போர் காலம் உணர்த்தியது... அப்போதும் சரி இப்போதும் சரி தமிழர் பலர் சேர்ந்து நிண்று புலிகளையும், சிலர் சேர்ந்து நிண்று அரசாங்கத்தையும் பலப்படுத்தினர்.... இந்த சில தமிழர்களை உலகுக்கு பலர் போல காட்டி அரசாங்கம் பிரச்சாரங்களை செய்து பலர் சேர்ந்து நிண்ற தரப்பை குரல் வராது தடுத்தும் வைத்தது..

தமிழர் தரப்பு சர்வதேச அரங்கில் தோற்று போனதுக்கு தமிழர்கள் பிரிந்து நிண்றதுதான் காரணம் என்பதை தெளிவாக விளங்கி கொள்ளவும் முடியும்...

33 வருட போரில் ஈழத்தமிழர்கள் திட்டமிட்ட ரீதியில் சோர்வடைய செய்ய பட்டு இருக்கிறார்கள்... வன்னியில் இருந்த மக்கள் போராட முடியாதவாறு வாழ்வாதாரங்களை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்...

இராணுவ கட்டுப்பாட்டு மக்கள் பலவகையிலும் வதையுண்டு சிதறிப்போய் இருக்கிறார்கள்... மக்கள் யாருக்கும் தொடர்ந்து போராடும் நிலையில் இப்போது இல்லை என்பதுதான் ஜதார்த்தம்...

இந்த மக்களை வளப்படுத்தி பலப்படுத்த செய்யக்கூடியது ஒண்று மட்டும்தான்... அது அரசியல் ரீதியான நடவடிக்கைகள்... இலங்கை அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் சில அரசியல் நகர்வுகள்... அது தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியும்...

உங்களை கேட்டு கொள்வது ஒண்று மட்டும்தான்... நாங்கள் வஞ்சம் தீர்க்கும் நிலையில் இண்று இல்லை... அந்த மக்களை காக்க செய்யவேண்டிய அனைத்தையும் செய்யுங்கள் என்பதுதான்...

( போராளியாக வன்னியில் நிண்று மக்களோடு மக்களாக வவுனியா வந்து சேர்ந்த போராளி ஒருவர் சொன்னார்)... தலைவர் 2007 ம் ஆண்டு போராளிகளை எல்லாரையும் கொஞ்சம் கொஞ்சமாக சந்தித்து உரையாற்றினாராம்... அவர் போராளிகளுக்கு ஒரு விடயதை ஆணித்தரமாக சொன்னாராம்... இதுதான் இறுதிப்போர், 2009 ம் ஆண்டுக்கு பின்னர் ஈழத்தில் போர் நடை பெறாது என்பதுதான் அது... ஒண்று ஈழம் மலர்ந்து இருக்கும் இல்லை நாங்கள் ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்து இருப்போம் எண்று... மக்கள் நீண்ட போரை தாங்கும் சக்தியை இழந்து இருக்கிறார்கள் என்பதாக சொன்னாராம்.... ஆச்சரியப்பட்டு சொன்னார் அந்த((முன்னாள்)) போராளி...

ஆயிரத்தில ஒரு வார்த்தை............. எங்கே மக்களுக்கு உதவி செய்யத்தான் உண்மையில் நினைகிறார்கள் என்றால் கூட்டமைப்பில் வந்து இணையட்டும் அனைவரையும் வரவேற்போம். <_< <_< :huh:

வடபகுதியின் கூட்டமைப்பின் பிரதான முதலமைச்சர் வேட்பாளர் டக்கிளஸ் எண்று ஒரு கதையை அவிட்டு விட்டு இருக்கிறார்களே...??? கேள்விப்பட்டீங்களா...?? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா வழங்கிய ஆதரவும் இலங்கை வழங்கி வரும் ஆதரவும் தன்னலம் மிக்கதுதான் என்பதை இந்திய ஈழப்போர் காலம் உணர்த்தியது... அப்போதும் சரி இப்போதும் சரி தமிழர் பலர் சேர்ந்து நிண்று புலிகளையும், சிலர் சேர்ந்து நிண்று அரசாங்கத்தையும் பலப்படுத்தினர்.... இந்த சில தமிழர்களை உலகுக்கு பலர் போல காட்டி அரசாங்கம் பிரச்சாரங்களை செய்து பலர் சேர்ந்து நிண்ற தரப்பை குரல் வராது தடுத்தும் வைத்தது..

தமிழர் தரப்பு சர்வதேச அரங்கில் தோற்று போனதுக்கு தமிழர்கள் பிரிந்து நிண்றதுதான் காரணம் என்பதை தெளிவாக விளங்கி கொள்ளவும் முடியும்...

33 வருட போரில் ஈழத்தமிழர்கள் திட்டமிட்ட ரீதியில் சோர்வடைய செய்ய பட்டு இருக்கிறார்கள்... வன்னியில் இருந்த மக்கள் போராட முடியாதவாறு வாழ்வாதாரங்களை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்...

இராணுவ கட்டுப்பாட்டு மக்கள் பலவகையிலும் வதையுண்டு சிதறிப்போய் இருக்கிறார்கள்... மக்கள் யாருக்கும் தொடர்ந்து போராடும் நிலையில் இப்போது இல்லை என்பதுதான் ஜதார்த்தம்...

இந்த மக்களை வளப்படுத்தி பலப்படுத்த செய்யக்கூடியது ஒண்று மட்டும்தான்... அது அரசியல் ரீதியான நடவடிக்கைகள்... இலங்கை அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் சில அரசியல் நகர்வுகள்... அது தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியும்...

உங்களை கேட்டு கொள்வது ஒண்று மட்டும்தான்... நாங்கள் வஞ்சம் தீர்க்கும் நிலையில் இண்று இல்லை... அந்த மக்களை காக்க செய்யவேண்டிய அனைத்தையும் செய்யுங்கள் என்பதுதான்...

( போராளியாக வன்னியில் நிண்று மக்களோடு மக்களாக வவுனியா வந்து சேர்ந்த போராளி ஒருவர் சொன்னார்)... தலைவர் 2007 ம் ஆண்டு போராளிகளை எல்லாரையும் கொஞ்சம் கொஞ்சமாக சந்தித்து உரையாற்றினாராம்... அவர் போராளிகளுக்கு ஒரு விடயதை ஆணித்தரமாக சொன்னாராம்... இதுதான் இறுதிப்போர், 2009 ம் ஆண்டுக்கு பின்னர் ஈழத்தில் போர் நடை பெறாது என்பதுதான் அது... ஒண்று ஈழம் மலர்ந்து இருக்கும் இல்லை நாங்கள் ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்து இருப்போம் எண்று... மக்கள் நீண்ட போரை தாங்கும் சக்தியை இழந்து இருக்கிறார்கள் என்பதாக சொன்னாராம்.... ஆச்சரியப்பட்டு சொன்னார் அந்த((முன்னாள்)) போராளி...

வடபகுதியின் கூட்டமைப்பின் பிரதான முதலமைச்சர் வேட்பாளர் டக்கிளஸ் எண்று ஒரு கதையை அவிட்டு விட்டு இருக்கிறார்களே...??? கேள்விப்பட்டீங்களா...?? :icon_idea:

கதைதானே கட்டி விட்டு இருக்கிறார்கள் எனது நிலைப்பாடு இதுதான் கூட்டமைப்பு டக்கிளசோடு இணைவதுக்கும், டக்கிளஸ் கூட்டமைப்போடு இணைவதுக்கும் பெரும்வேறுபாடு இருக்கிறது. இதை இப்படி சொல்லலாம், "பண்றியுடன் சேர்ந்த பசுவும் மலம் தின்னும்" என்பதும் மற்றயது "பூவுடன் சேர்ந்த நாரும் மணம் வீசும்" என்பதும்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது எதிர்கால் வெற்றிடமாக உள்ளது

அதை கண:டவனும் அனுபவிக்கத்துடிக்கின்றான்

இது இயல்பானது

ஆனால் ஆபத்தானது

அதேநேரம் அந்த இடவெளியை நாம் தாண்டியே ஆகவேண்டும்

அதேபோல் எமது போராட்டவரலாறு மிகவும் நீழமானதும் மிகுந்ததியாகங்களைப்புரிந்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றும்படி கூட்டமைப்பு ஒரு கட்சியல்ல. அது ஒரு இணைவு. அங்கு மேலும்சிலர் இணையலாம்.

இதுதான் நடக்க இருக்கிறதை செ.ப. வின் அறிக்கை இன்று உணர்த்துகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் கோட்பாடுளை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தி ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேற் கொள்ளும்.

தமிழர்களுக்கிடையிலான பிரிவு -

சிங்களவனைப் பலப்படுத்தியதுதான் இதுநாள்வரை கண்ட உண்மை. மேலும்மேலும் அவனைப்பலப்படுத்தாமல் -

இணக்கங்களினூடும் நெகிழ்வினூடும் சிங்களவன் இன்று ஒருதரப்பாக நிற்பதுபோல தமிழரும் ஒருதரப்பாக நிற்க முயலுவோம். அதற்குரிய வகையில் பேசுவோம். ஆகக்குறைந்து அதற்கு முயன்று பார்ப்போம்.

இது பகிடிக்கு..

சபேசனின் நேற்றைய எச்சரிக்கையைத் தொடர்ந்து :) இன்று பத்மநாதனும் - பிரித்தானிய பேரவையும் அவசரஅவசரமாக அறிக்கை விட்டிருக்கிறார்கள். ...... (சீரியஸாக எடுக்காதீங்கப்பா.. )

Edited by காவடி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் கோட்பாடுளை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தி ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேற் கொள்ளும். - பத்மநாதன்

டக்கிளசும்.. சித்தார்த்தனும்.. சங்கரியும்.. கருணாவும் தமது கட்சிகளை கலைத்துவிட்டு தமிழ் தேசியத்தினை முன்னுறுத்தி கூட்டமைப்போடு இணைந்து பணியாற்ற முன்வருவார்கள் என்றால் தேசிய தலைவர் இருந்தால் கூட இதனை வரவேற்பார். நாங்களும் தயக்கமின்றி அவர்களுக்கு ஆதரவு வழங்கலாம். - நெடுக்காலபோவன் ஆகிய எனது கருத்து.

பத்மநாதனின் கருத்து எமது நிலைப்பாடுகளோடு பெரிதும் ஒத்திசைவதைக் காணலாம். இதுவே தேசிய தலைவரின் நிலைப்பாடாகவும் கூட இருக்கும்.. இன்றைய நிலையில்..! :)

Edited by nedukkalapoovan

அறிக்கைகள் தொடர்ச்சிய வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளசும்.. சித்தார்த்தனும்.. சங்கரியும்.. கருணாவும் தமது கட்சிகளை கலைத்துவிட்டு தமிழ் தேசியத்தினை முன்னுறுத்தி கூட்டமைப்போடு இணைந்து பணியாற்ற முன்வருவார்கள் என்றால் தேசிய தலைவர் இருந்தால் கூட இதனை வரவேற்பார். நாங்களும் தயக்கமின்றி அவர்களுக்கு ஆதரவு வழங்கலாம். - நெடுக்காலபோவன் ஆகிய எனது கருத்து.

எதிர்பார்ப்பதற்கும்

வேண்டுவதற்கும்

கேட்பதற்கும்

கிடைப்பதற்கும்....

ஒரு அளவு உள்ளது

ஒரு வரமுறையுள்ளது

காவடி,

நீங்கள் பகிடியாக சொல்லலாம். ஆனால் இங்கே நடக்கின்ற விவாதம் பலருக்கு பல செய்திகளை சொல்லியிருக்கிறது.

ஜீவா இங்கே டக்ளஸின் அறிக்கையை இணைத்ததும் நான் ஒரு கருத்தை எழுதினேன். மற்றவர்களும் தமது கருத்தை எழுதினார்கள்.

புலம்பெயர் நாடுகளில் ஒற்றுமையான முறையில் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அரசியற் போராட்டங்கள் நடைபெறவில்லை என்றால், எமது மக்கள் வேறு வழிகளில் செல்வதற்கு முற்படுவார்கள் என்ற செய்தியை இந்த விவாதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

உணர்த்த வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கின் கருத்துதான் எனதும். டெலோ புளட் ஈபிஆர்எல்எப் ஈபிடிபி கூட்டணி ஈபிடிபியென அனைவரும்.. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்து அதில் இணைவது நல்லதே..

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் கருத்துதான் எனதும். டெலோ புளட் ஈபிஆர்எல்எப் ஈபிடிபி கூட்டணி ஈபிடிபியென அனைவரும்.. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்து அதில் இணைவது நல்லதே..

எனக்கு அதுசரிவரும் என்று தோன்றவில்லை

எல்லாம் எல்லாத்தோடும் ஒட்டாது

அப்படி ஒட்டி உள்ளதையும் இழப்பதைவிட........

இன்றையநிலை மேல்.......

கூட்டமைப்பு பிளவுபட்டுப் போய் நிற்கின்றது. ஐந்து பேர் வரை மகிந்தவின் கட்சியில் இணையப் போகின்றார்கள். கூட்டமைப்பின் எதிர்காலம் மிகப் பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது.

கூட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு எமது அரசியல் நகர்வுகளை அமைக்க முடியாத நிலையில் நிற்கின்றோம்.

வன்னியில் இருக்கும் மக்களின் நிலையைக் காட்டி பல வேலைகள் நடக்குது. சிலர் காசு சேர்க்கிறார்களாம். சிலர் இப்போது இந்த வேலைகளும் ஆரம்பித்திருக்கிறார்கள். யாரையும் முத்திரை குத்தாமல் இந்த அறிக்கை வெளி வந்த பின்னணி பற்றி மட்டும் எனக்கு சில கருத்துகள் உண்டு:

1. கண் பார்வை மங்கி வரும் டக்கிளசுக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் புலம் பெயர் வாசிகள். இப்போது புலம் பெயர் தமிழர்களிடையே இருக்கும் இடைவெளியை நன்றாக எடுத்துச் சொல்லியிருப்பார்கள் இந்த ஆலோசகர்கள். "கேப்பில கிடா வெட்டுற வேலை" சில கிடாக்கள் மாட்டுப் பட்டும் விட்டன.

2. மூன்று லட்சம் மக்களைக் காக்க இந்த அறைகூவல் என்கிறார்கள். இதே மூன்று லட்சம் மக்கள் வன்னிக் கொலைக் களத்தில் இருந்த போது ஒரு பிரிட்டிஷ் பா.உ "சொந்த மக்களையே குண்டு வீசிக் கொல்லும் ஒரே அரசு சிறி லங்கா" என்று சொன்ன போது " அது உண்மையல்ல" என்று மறுத்தார் டக்ளஸ். இது பல வருடங்கள் முன்பு நடந்ததல்ல, சில வாரங்கள் முன்பு நடந்தது! இந்த வெளிப் படையான உண்மை கூடத் தெரியாத அல்லது தெரியாதது போல நடிக்கும் ஒருவர் மக்களைக் காக்கும் பணிக்கு தலைமை தாங்கப் போவதாக அறிக்கை விட்டால் அதை நாங்கள் நம்பும் அளவுக்கு தலைவர்களுக்காக அலையும் பேர்வழிகளாக ஆகி விட்டோம்.

3. சரி. மக்கள் நிலை கருதி மறப்போம் மன்னிப்போம். இப்போது இந்த மக்களை வதை முகாம்களில் இருந்து விடுவிக்கும் வேலைக்கு புலம் பெயர் தமிழ் மக்கள் எதற்கு டக்ளசுக்குத் தேவை? காசு கொடுக்கவா? அல்லது புலம் பெயர் மண்ணில் போராட்டம் செய்யவா? அரசின் ஆதரவாளருக்கு எதற்கு மக்கள்? சிறி லங்காவின் அரசியல் கூத்துகள் பற்றி அறியாதவர்களா நாங்கள்?

4. ஆனால் ஒரு விஷயத்திற்காக புலம் பெயர் மக்கள் டக்கிளசுக்கு (அவர் பின்னாலிருக்கும் சிங்கள அரசுக்கும்) தேவை.புலம் பெயர் மக்கள் டக்ளசை ஆதரித்தால் தமிழர்களுக்கு நாம் ஜனநாயக வழித் தீர்வைக் கொடுத்து விட்டோம் என்று சிங்களவன் சொல்லும் போது அதற்கு poster boy ஆக டக்ளஸ் பயன் படுவார்.(டக்ளஸ் ஜனநாயக ஒளியாக இருப்பார் என்று நம்புவோர் தீவகத்தில் நடந்த பாலியல் வல்லுறவுகளையும், நடேசன் போன்றோரின் கொடூரமான கொலைகளையும் நினைவு மீட்டிப் பார்க்க வேண்டுகிறேன்!)

5.அறிக்கையில் கவனிக்க வேண்டிய ஒரு சொல் "நாம்" என்பதாகும். "நாம் போராடினோம்" என்கிறார். டக்ளஸ் ரசிகர்கள் இதை எப்படி மறந்தார்கள்? எங்கே டக்ளஸ் போராடினார் தமிழர்களுக்காக? பல்லாயிரம் தமிழர்களுக்கு அரச துறை வேலை வாய்ப்பு எடுத்துக் கொடுத்ததாக சிலர் சொல்கிறார்கள். எல்லாம் முறைப்படி நடக்கும் ஒரு நாட்டில் தகுதி உள்ளவன் விண்ணப்பித்தால் வேலை கிடைக்க வேணும். ஊழலில் ஊறிய சிறி லங்காவில் தகுதியை தூக்கிப் போட்டு விட்டு மந்திரியின் சிபார்சுக்கு வேலை கிடைக்கிறது. இந்த ஊழல் இயந்திரத்தை டக்ளஸ் பயன் படுத்த சிறி லங்கா அனுமதித்தது என்பது தானே உண்மை? இதை எப்படி "டக்ளஸ் போராடினார்" என்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் தமிழ்க்கூட்டமைப்பை பொறுத்தவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது இன்னும் அவர்கள் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர் தவிர இவர்கள் ஒரு மதிலாவது கட்டினார்களா என்பது மக்களுக்கு தான் வெளிச்சம். தமிழ்க்கூட்டமைப்பின் சொல்லை தமிழ்மக்களை தவிர வேறுயாரும் கருத்தில் எடுப்பதாக

தெரியவில்லை.

ஏன் மற்றவர்கள் தமிழ்மக்களுக்கு மாடமாளிகை கட்டித் தந்தவர்களா??

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு பிளவுபட்டுப் போய் நிற்கின்றது. ஐந்து பேர் வரை மகிந்தவின் கட்சியில் இணையப் போகின்றார்கள். கூட்டமைப்பின் எதிர்காலம் மிகப் பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது.

கூட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு எமது அரசியல் நகர்வுகளை அமைக்க முடியாத நிலையில் நிற்கின்றோம்.

இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்

அவசரப்பட்டு எழுதவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து யாரை தமிழர் ஆதரிக்க முடியும் எனும் தர்க்கத்தை கிழப்பி விடாதீர்கள்.... டக்கிளசோ , சித்தார்த்தனோ தமிழருக்கு உதவி செய்ய முன்வந்தால் தடுப்பதுக்கு யாருக்கும் உரிமை கிடையாது... அவர்கள் தொடர்ந்தும் தமிழர்களுக்கு கெடுதல் செய்யாது இருப்பதுக்காகவாவது நாங்கள் அடக்கி வாசிக்க தான் வேண்டும்...

எல்லாத்தையும் காலம் தான் தீர்மானிக்கும்... இவ்வளவு ஏன்..? எங்களை பற்றிய செய்திகளை வெளியிடாமல் புறக்கணித்த சண் ரீவியை யும் , அதன் தயாரிப்புக்களையும் புறக்கணிக்க யாழுக்கை வேண்டிய பலர் டக்கிளஸ் தேவானந்தாவை இப்போ ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்கள்...

மாற்றம்கள் நிகழும் என்பதுக்கு இது நல்ல எடுத்துக்காட்டு இல்லையா...??

செ. பத்மநாதன் அண்ணா பல தமிழ் அமைப்புக்களை உள்வாங்கி ஒரு இணைந்த தலைமையை உருவாக்கும் வேலைகளில் இறங்கி இருப்பதாகவும் அது பற்றிய விபரங்களை விரைவில் வெளியிடுவதாகவும் சொல்லி இருக்கிறார்.... ஆகவே அதுவரை பொறுத்து இருங்கள்...

டக்ளஸ் தனித்து நின்று அந்தச் செயற்பாட்டைச் செய்கின்றாரா என்றால் அதுவுமில்லை. சிறிலங்கா அரசோடு தான் நின்று செய்கின்றது. அது போல புளோட்காரர் வவுனியாவில் இடம்பெயர்ந்து வந்த பெண்களைப் பலவந்தப்படுத்துவதாகச் செய்திகள் வருகின்றது. 16 வயதுச் சிறுமி ஒருத்தி சமீபத்தில் கொல்லப்பட்டிருந்தார்.

இப்படியான நாசங்கெட்ட பிறப்புக்களைத் தலைமையாகக் கொண்டு என்ன புடுங்கப் போகின்றோம்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து புறநிலையரசு, புண்ணாக்கு, ஆயுதம் தூக்கிப் புடுங்குவோம் என்று சவால் விடுவதும், பிற்பாடு ஒன்றுமே தெரியாத மாதிரி ஓடி முடங்குவதும் தெரியாத ஒன்றல்ல.

சமீபத்தில் தமிழ்க்கூட்டமைப்பு தமிழர் பலத்தை ஒரே சக்தியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த நாய்கள் வரல்ல... இந்த நாய்களுக்குப் பதவி முக்கியம்.

விடுதலைப் புலிகளின் செய்தி என்னவென்று அறியாமல் எச் செயலும் செய்திட முடியாது. முடிவெடுப்பது அங்குள்ள உறவுகளாக இருக்கலாம். அவர்கள் 3ம் ஆட்களல்ல, அவர்களுக்குப் பொருத்தமான முடிவைக் கொடுக்க வேண்டியதும் எங்களின் பொறுப்பு!

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸும் மகிந்தவும் தமிழரைப்பொறுத்தவரை ஒன்று தான் என்ன ஒராள் பேரளவில் தமிழர் மற்றால் சிங்களவன், டக்ளஸை விட மகிந்த பரவாயில்லை எனெண்டா சாட்சிக்காரணின் காலில் விழுவதை விட சண்டைகாரனின் விழுந்து மக்களை காப்பாற்றலாமே!

ஒரு ஊரில் ஓர் எழை வியாபாரி இருந்தானாம் அவனது ஒரே சொத்தாக இருந்தது அவனது கழுதைதான் அதிலேயே தனது பொருடகளை சந்தைக்கு கொண்டு செல்வான்,ஒரு நாள் அவனது கழுதை இல்லாமல் தனது தோளில் பொருட்களை சுமந்து கொண்டு மிகவும் ஆனந்தமாக சந்தைக்கு சென்றான் அவனைப்பார்த்தவர்கள் எங்கே உனது கழுதை என்று கேடனர், அதற்கு அவன் அது காணாமல் போய் விட்டது என்றான் உன்னிடமுள்ள ஒரே சொத்தையே தொலைத்து விட்டு சந்தோசமாயிருக்கிறாயே எனக்கேட்டனர் அதற்கு அவன் கழுதையோடு சேர்ந்து நான் காணாமல் போகாமல் தப்பி விட்டேன் என்ற சந்தோசம் தான் என்றானாம்.

அன்பான உறவுகளே உங்கள் ஆதங்கம் புரிகிறது நாம் அவசரப்படு அடுப்புச்சட்டியில் இருக்கும் எம்மக்களை அடுப்பிற்குள் தள்ளி விடாமல் காப்போம்.

தமிழ் மக்க்ளின் தற்போதைய பிரதினிதிகள் தமிழ் தேசிய கூடமைப்பினரே அவர்களை பலப்படுத்துவதே நமது கடமை

"உனது நல்ல நண்பனை உனது கடினமான காலகட்டத்தில் காணுவாய்"

எமது மக்களின் இன்னல்களை நீக்குவதற்காக குரல் கொடுத்து அதற்காக சில பாராளுமன்ற உறுப்பினர்கள தம்முயிரையும் கொடுத்துள்ளனர், ஆனால் இந்த டக்ளஸ் என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்ப்பொதைய எமது மக்களின் இன்றைய நிலையை மாற்ற என்ன நடவடிக்கை இதுவரை எடுத்துள்ளார்?

கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாத ஐயர் வானம் ஏறி வைகுந்தத்தை முதலில் காட்டட்டும் நாம் எல்லோரும் அவரின் பின்னால் செல்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான உறவுகளே உங்கள் ஆதங்கம் புரிகிறது நாம் அவசரப்படு அடுப்புச்சட்டியில் இருக்கும் எம்மக்களை அடுப்பிற்குள் தள்ளி விடாமல் காப்போம்.

தமிழ் மக்க்ளின் தற்போதைய பிரதினிதிகள் தமிழ் தேசிய கூடமைப்பினரே அவர்களை பலப்படுத்துவதே நமது கடமை

"உனது நல்ல நண்பனை உனது கடினமான காலகட்டத்தில் காணுவாய்"

எமது மக்களின் இன்னல்களை நீக்குவதற்காக குரல் கொடுத்து அதற்காக சில பாராளுமன்ற உறுப்பினர்கள தம்முயிரையும் கொடுத்துள்ளனர்இ

[b]ஆனால் இந்த டக்ளஸ் என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்ப்பொதைய எமது மக்களின் இன்றைய நிலையை மாற்ற என்ன நடவடிக்கை இதுவரை எடுத்துள்ளார்?கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாத ஐயர் வானம் ஏறி வைகுந்தத்தை முதலில் காட்டட்டும் நாம் எல்லோரும் அவரின் பின்னால் செல்வோம்

இதுதான் என் கருத்தும்

நன்றி

அங்குள்ள மக்கள் டக்கிளஸ் ஆதரவை உதவியை நிவாரணத்தை பெறட்டும் . விடுதலிப்புலிகள் இருந்த காலத்திலும் டக்கிளஸ் யாழ்ப்பாணத்தில் மக்கள்ளை மேய்ச்சவன் தானே. அதுக்கு ஏன் புலம் பெயர் நாங்கள் முண்டு கொடுக்கனும் டக்கிளஸ்க்கு.

எங்கள் வேலை அரசியல் தீர்வுக்கான எம்மக்களுக்கு தார்மீக ஆதரவு .

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் கருத்துதான் எனதும். டெலோ புளட் ஈபிஆர்எல்எப் ஈபிடிபி கூட்டணி ஈபிடிபியென அனைவரும்.. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்து அதில் இணைவது நல்லதே..

இது மகிந்தவின் நிகழ்ச்சி நிரலுக்கு ( சிந்தனை ) ஒத்து வராதே ....... :)

Edited by தமிழ் சிறி

சரி இவ்வளவும் ஆராய்ததன் அடிப்படையில் மேலே கருத்தாடல் செய்தவர்களின் கருத்துக்களை மூன்றுவிதமாக பிரிக்க முடிகின்றது.

தாயக மக்களின் அவலங்களைபோக்க தேவானந்தாவின் உதவியை பெறவிரும்புவோர்:

ஜீவா

காவடி

சபேசன்

வந்தியத்தேவன்

கலைஞன்

நிழலி

சாந்தி

பொண்ட்

ATOZ

புதியசமாதானம்

தாயக மக்களின் அவலங்களை நீக்கவேனும் தேவானந்தாவின் உதவியை நாட விரும்பாதோர்:

முற்போக்கு சிந்தனையாளன்

வினித்

பனங்காய்

தராக்கி

மேகன்

நெல்லையன்

ரதி

வசிசுதா

ரகுநாதன்

அரசி

குட்டி

நெடுக்காலபோவான்

தேவன்

srtipi

சித்தன்

பருத்தியன்

ஜஸ்டின்

நேசன்

நான் அடிமையில்லை

மீரா

இதுவரை மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளிலும் அடங்காதவர்கள்:

சூறாவளி

வல்வைமைந்தன்

தூயவன்

நுணாவிலான்

பல்லவன்

குமாரசாமி

விசிவா

ஆக மொத்தத்தில் புலம்பெயர் தமிழர்கள் தற்போது கருத்தியல் ரீதியாக ஆகக்குறைந்தது யாழ் களத்தில் பிரிந்து நிற்கின்றோம் என்பதே தற்போதைய உண்மை. இந்தக் கருத்தியல் வேறுபாடு நம்மிடையே முன்பைவிட அதிகரித்து இருப்பதையும் காணமுடிகின்றது.

மிகவும் கஷ்டப்பட்டு பிரித்துள்ளீர்கள்.

இதிலிருந்து, தங்களின் நோக்கம் தெளிவாகவே புரிகின்றது.

யாழ் உறவுகளே!

நம்மைப் பிரிப்பவர்களும், நம் உரிமைகளைப் பறிப்பவர்களும் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள்.

சதிவலைகளுக்குள் தாங்கள் விழுந்தது மட்டுமல்லாமல், நம் அனைவரையும் இழுத்து வீழ்த்துவதற்கு அலைகின்றார்கள்.

அவதானம்! எச்சரிக்கை!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

மிகவும் அவதானம்தேவை

இனியொருபோதும் ஏமாறா திடம் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

மிகவும் அவதானம்தேவை

இனியொருபோதும் ஏமாறா திடம் வேண்டும்

அது எப்படி? அதனை யார் முன்னெடுப்பது ? ஏன் நாம் இப்படி நிற்கிறோம்? எமக்கென ஒரு தேசம் வேண்டாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.