Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரணத்திற்கு பிறகு என்ன? அறியும் ஆவலில் தற்கொலை செய்த பொறியியலாளர்

Featured Replies

மரணத்திற்கு பிறகு என்ன? அறியும் ஆவலில் தற்கொலை செய்த பொறியியலாளர்

[19 - June - 2009] [Font Size - A - A - A]

காதலில் தோல்வி, பரீட்சையில் சித்தியடையத் தவறியமை, நிதி நெருக்கடி அல்லது நஷ்டம் மற்றும் மன அழுத்தங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக உலகளாவிய ரீதியில் தற்கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மரணத்தின் பின்னால் என்ன நடக்கிறதென்பதை அறிந்து கொள்வதற்காக இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த 26 வயதுடைய மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பெங்களூரின் ஐ.பி.எம். (I.B.M.) தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றும் பிரதீப்குமார் கொந்கார் என்பவரே மரணத்திற்கு பின்னாலுள்ள மர்மத்தை அறிந்து கொள்வதற்காக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கிங்பிஷர் விமானம் மூலம் நேற்று முன்தினம் புதன்கிழமை ஹைதராபாத்தை வந்தடைந்த பிரதீப்குமார், காச்சிகுடா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள ஸ்ரீ சியாம் மந்திரில் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஸ்ரீ சியாம் மந்திர் ஆலய நிர்வாகத்தினரால் பிரதீப்பின் தற்கொலை முயற்சி தொடர்பாக காலை 10 மணியளவில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் ஆலயத்தை அண்மித்த அதேநேரம், பிரதீப்குமாரின் உயிர் பிரிந்தது.

இந்நிலையில், பிரதீப்பின் கையடக்கத் தொலைபேசியில் சேமிக்கப்பட்டிருந்த தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி அவரின் மரணம் தொடர்பாக சகோதரிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

பிரதீப்பின் சகோதரி உடனடியாக தனது கணவர் சந்தேதோஷிற்கு இது தொடர்பாக அறிவிக்கவே சந்தோஷ் பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று பிரதீப்பின் உடலை அடையாளம் காட்டியுள்ளார்.

தனது தற்கொலை முயற்சி தொடர்பாக மைத்துநர் சந்தோஷிற்கும் கர்நாடகா பொலிஸாருக்கும் காலை 9.35 மணியளவில் பிரதீப்பால் ஈமெயில் அனுப்பப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை தனது அலுவலகத்திற்கு சென்றிருந்த சந்தோஷ் "தற்கொலை குறிப்பு' எனும் தலைப்பில் பிரதீப்பால் அனுப்பப்பட்டிருந்த ஈமெயிலைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிரதீப்பால் அனுப்பப்பட்ட ஈமெயிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

எனது மரணத்திற்கு எவரும் பொறுப்பில்லை. அத்துடன் எவரும் என்னை வற்புறுத்தவும் இல்லை. மரணத்திற்குப் பின்னர் என்ன நடக்கின்றது என்பதை அறியும் ஆவலிலேயே நான் இத்தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

நான் ஒரு கோழை அல்ல. நான் நினைத்த வழியில் எனது வாழ்வை முடித்துக் கொள்ள தீர்மானித்துள்ளேன்.

அம்மா, அப்பா... உங்கள் எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். எனது கடைமை அனைத்தையும் என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

என்னால் நேசிக்கப்பட்ட அனைவரும் என்னை நேசித்த அனைவரும் நலமுடன் வாழ வேண்டுகின்றேன்.

எந்த நாளும் என்னால் அணு அணுவாக மரணிக்க முடியாத நிலையிலேயே இவ்வாறானதொரு முடிவை நான் மேற்கொண்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.

எனது சிதையுடன் என்னால் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் எரித்து விடுங்கள். சுயநலமுடைய இந்த உலகிலிருந்து நான் விடை பெறுகின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மரணத்தின் பின்னால் பிரதீப் எதைக் காணப் போகிறார் என்பதே அடுத்த கேள்வியாகும்'.

[Thinakkural]

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்திற்கு பிறகு என்ன? அறியும் ஆவலில் தற்கொலை செய்த பொறியியலாளர்

------

அம்மா, அப்பா... உங்கள் எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். எனது கடைமை அனைத்தையும் என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

------

இந்தப் பயலை பொறியியலாளாராக படிக்க வைத்த , அந்தப் பெற்றோர் அனுதாபத்துக்குரியவர்கள் .

சின்னப்புள்ள தனமா இருக்கு :blink:

நாட்டிற்காக செத்தாலும் ஒரு மருவாத இருக்கும்............. :icon_idea:

இவரைப் போன்றோர் நாட்டிற்கே அவமானம்

சுய நலம் கண்டால் பொது நலம் செய்து மக்களுக்கு உணர்த்த வேண்டும்

ஒரு வேளை ஆவியா வந்துடுவானோ?? :icon_idea:

இது மனவியாதி வெறொன்றுமில்லை.

சின்னப்புள்ள தனமா இருக்கு :blink:

நாட்டிற்காக செத்தாலும் ஒரு மருவாத இருக்கும்............. :icon_idea:

இவரைப் போன்றோர் நாட்டிற்கே அவமானம்

சுய நலம் கண்டால் பொது நலம் செய்து மக்களுக்கு உணர்த்த வேண்டும்

ஒரு வேளை ஆவியா வந்துடுவானோ?? :icon_idea:

ஆவியாவது மண்ணாங்கட்டியாவது , எந்தக்காலத்தில் நாம் வாழ்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடக்கடவுளே இப்படியுமா :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது கூடுதலாக படித்தனால் ஏற்பட்ட மனோ தத்துவரீதியான பாதிப்பாக இருக்கலாம்.Phiscaly mental disorder. :icon_idea:

பிரியமுடன்:யாயினி கனா.

ஆவியாவது மண்ணாங்கட்டியாவது , எந்தக்காலத்தில் நாம் வாழ்கிறோம்.

நாம் கற்காலத்தில் வாழ்கிறோம்

உதாரணம்............: சிங்களவன்கள்

மேலும் ஆவியைப் பார்த்து ப.....ய.....ம் ஒன்னும்.... இ.....ல்.....லை................... :icon_idea:

லூசு பய

சரியாக சொன்னீங்க , அதுக்கு மாற்றுப் பெயர்தான் மன நோய்.

மடப்பயலே.......

பிரதீப்பால் அனுப்பப்பட்ட ஈமெயிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

எனது மரணத்திற்கு எவரும் பொறுப்பில்லை. அத்துடன் எவரும் என்னை வற்புறுத்தவும் இல்லை. மரணத்திற்குப் பின்னர் என்ன நடக்கின்றது என்பதை அறியும் ஆவலிலேயே நான் இத்தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

நான் ஒரு கோழை அல்ல. நான் நினைத்த வழியில் எனது வாழ்வை முடித்துக் கொள்ள தீர்மானித்துள்ளேன்.

அம்மா, அப்பா... உங்கள் எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். எனது கடைமை அனைத்தையும் என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

என்னால் நேசிக்கப்பட்ட அனைவரும் என்னை நேசித்த அனைவரும் நலமுடன் வாழ வேண்டுகின்றேன்.

எந்த நாளும் என்னால் அணு அணுவாக மரணிக்க முடியாத நிலையிலேயே இவ்வாறானதொரு முடிவை நான் மேற்கொண்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.

எனது சிதையுடன் என்னால் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் எரித்து விடுங்கள். சுயநலமுடைய இந்த உலகிலிருந்து நான் விடை பெறுகின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்த அந்த முகம் அறியாத நண்பன் தெளிவாகத்தான் இருந்து இருக்கிறார். இதில் மடத்தனமாக என்ன இருக்கின்றது என்று தெரியவில்லை.

குறிப்பாக அவர் எழுதிய கீழ் உள்ள வரிகளைப் பாருங்கள்:

என்னால் நேசிக்கப்பட்ட அனைவரும் என்னை நேசித்த அனைவரும் நலமுடன் வாழ வேண்டுகின்றேன்.

சுயநலமுடைய இந்த உலகிலிருந்து நான் விடை பெறுகின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெண்டல் என்று சொல்லப்படுபவர்களால் தெளிவாக சிந்திக்க முடியுமா? முத்துக்குமார் அவர்களும்தான் தற்கொலை செய்தார். கரும்புலிகளும்தான் தற்கொலை செய்கின்றார்கள். உயிரை மாய்ப்பதற்கான நோக்கங்கள் வேறாக இருந்தாலும்.. அவரவரைப் பொறுத்தமட்டில் தெளிவுடனேயே உயிரை மாய்த்துக்கொள்கின்றார்கள்.

எங்களுக்கு வாழ்வதில் ஆசை, விருப்பம், பிடிப்பு இருக்கும்போது வாழவிரும்புகின்றோம். இதனால் தற்கொலை செய்பவர்கள் கோழைகளாகவும், புத்தி பேதலித்தவர்களாகவும் தெரியலாம். ஆனால்.. வாழ்வதில் ஆசை, விருப்பம், பிடிப்பு ஏற்படாதபோது... நாங்களும் இப்படியான முடிவுகளை எடுக்கலாம். ஒவ்வொருத்தரின் விருப்பம், தேர்வு.

வாழ்வதில் ஆசை, விருப்பம், பிடிப்பு ஏற்படாதபோது... நாங்களும் இப்படியான முடிவுகளை எடுக்கலாம். ஒவ்வொருத்தரின் விருப்பம், தேர்வு.

சட்டப்படி குற்றம் ,தற்கொலை செய்யிறது அவரின் ஜனநாயக உரிமை யாக்கும் :unsure: ,65 வயதில் தற்கொலை செய்தவர்களும் உண்டு :unsure:

Edited by Jil

இங்கு போய் பாருங்கள். http://en.wikipedia.org/wiki/Golden_Gate_Bridge இதை Golden Gate Bridge என்று கூறுவார்கள். தற்கொலைக்கு மிகவும் பிரபலம் பெற்ற இடம். இது அமெரிக்காவில் இருக்கின்றது. ஆட்கள் வாடகை வாகனங்களில்கூட வந்து கங்கையில் காசியில் நேர்த்திவைத்து குளிப்பதுபோல் இங்கு வந்து குதிப்பார்களாம்.

இதைப்பற்றிய ஓர் ஆவணப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன். அதில் குறிப்பிட்ட பாளத்தில் ரகசியமாக பல கமராக்களை பொருத்தி சுமார் மூன்று மாதங்கள் தகவல்களை பெற்று காட்சிப்படுத்தி இருந்தார்கள். ஆட்கள் தற்கொலை செய்வதை எல்லாம் காட்டினார்கள். பார்த்தபோது மிகவும் வேதனையாக இருந்தது.

எப்படி நடந்து வருகின்றார்கள், பிறகு எப்படி பாளத்தில் ஏறுகின்றார்கள், பின் எப்படி குதிக்கின்றார்கள் என்று எல்லாம் காட்டினார்கள். குதிக்கும்போது ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான பாணியை கையாண்டு இருக்கின்றார்கள்.

ஒருவர் சிலுவையை குறிசெய்து பிரார்த்தனை செய்தபின் குதிக்கின்றார். இன்னொருவர் நேராக பார்க்காமல் பின்பக்கமாக குதிக்கின்றார். இன்னொருவர் குதிக்கும்போது காவல்துறையால் கைதுசெய்யப்படுகின்றார். இப்படி விதம் விதமான சம்பவங்கள்.

golden-gate-bridge-picture.jpg

Edited by மாப்பிள்ளை

மாப்பிள்ளை நீங்கள் சொல்லும் கருத்து சரியானதாக எனக்கும் படுகிறது

பாவம் இந்த நபர் மன உளைச்சல் நோய்க்குள் அகப்பட்டுள்ளவர் போல தெரிகிறது

இன்றய இயந்திர உலகில் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் இதற்குள் அகப்பட்டு

தவித்துக் கொண்டிருக்கிறார்கள்...... அவரின் ஆத்மா சாந்தி அடைய கல்லாகவே

மாறி விட்ட கடவுளை வேண்டுவோம்!!!!!!!

அப்பாடா ஒரு பெண்ணின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டு விட்டது. இப்படியான மென் வல்லுனர்களை கட்டித்தான் எத்தனை பெண்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்

மரணத்திற்கு பிறகு என்ன நடைபெறுகிறது என்பதை இப்போது பிரதீப் கண்டுபிடித்துவிட்டார். ஆனால் அதை இந்த முட்டாள் உலகத்திற்கு சொல்லி ஏன் நேரத்தை விரையமாக்வேண்டும என்று எண்ணி விரைவாக புதிய உலகத்திற்கே போய்விட்டார்!

- வெளியுலக புலனாய்வு அமைப்பின் சார்பில் சாணக்கியன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆராய்ச்சி கூடிப்போச்சுது.

  • கருத்துக்கள உறவுகள்

சரி விடுங்கோப்பா ஏதோ நடந்தது நடந்து போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

'சாணக்கியன்' 'ஸமரணத்திற்கு பிறகு என்ன நடைபெறுகிறது என்பதை இப்போது பிரதீப் கண்டுபிடித்துவிட்டார். ஆனால் அதை இந்த முட்டாள் உலகத்திற்கு சொல்லி ஏன் நேரத்தை விரையமாக்வேண்டும என்று எண்ணி விரைவாக புதிய உலகத்திற்கே போய்விட்டார்!

- வெளியுலக புலனாய்வு அமைப்பின் சார்பில் சாணக்கியன்.

நீங்கள் இந்த அறிக்கையை விடுவதால்.. எங்களால் உறுதியக கூறமுடியகின்றது வெளியுலகிலேயும் சொந்த தாயை கற்பழிக்கவிட்டு அதில் எதிரி போடும் எச்சத்தை நக்கி வாழும் கொழும்புவாழ் கைகூலிகள் அங்கும் இருக்கிறார்கள் என்பதை. ஒட்டுண்ணிகளும் சொந்த இனத்தை விற்று பிழைக்கும் மிருகங்களும் அங்குமிருப்பது கடவுள் இல்லையா என்ற கேள்வியை மேலும் வலுச்சேர்கின்றது. அங்கே அவர்கள் இல்லாவிடில் உங்களுக்கு புலனாய்வை அங்கே நீறுவ வேண்டிய கட்டாயம் இருந்திருக்காதே?????

Edited by Maruthankerny

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.