Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தமை பிரபாகரன் விட்ட தவறு: அகாசி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாசி இலங்கை வந்தால் போகும் போது எதையாவது சொல்லவேண்டும். "இது சம்பிரதாயம்." ஆனால் சொல்லும் சொல்லு தமக்கு சாதகமானதாக இருக்க வேண்டும் "இது அரசியல்." அது யாருக்கு சொல்கிறொம் எங்கிருந்து சொல்கிறோம் ஏன் சொல்கிறோம் என்பதை ஆராய்ந்து சொல்லுதல். "இது தந்திரோபாயம்". (இடம் பொருள் அறிந்து. திருவள்ளுவர்) இதுதானே நடந்துள்ளது இது மிகவும் சாதாரணமான விடயம் இதற்கு ஏன் நீங்கள் கடிபடுகின்றீகள்..... இது கொஞ்சம் அசாதரணமாக எனக்கு படுகின்றது.

நோர்வே அமெரிக்க கூட்டு சமாதான களத்தில் குதித்தது. தெற்காசியாவில் ஒரு சாதகமான தளத்தை அமைப்தற்காகவே. அத்தோடு இந்தியாவையும் கொஞ்சம் எட்டிபார்க்க வசதியாகவும் இருக்கும் என்பதனாலேயே. காரணமும் நன்று காலமும் நன்று..... ஆனால் ஏற்கனவே அடிபட்ட நோர்வேயை இறக்கியது அடிமுட்டாள்தனம். அர்ஜன்டீனா பாலஸ்தீனம் கிழக்குதீமோர் ஆகிய இடங்களில் தனது சொந்த முகத்தை கடைசி நேரத்தில் மறைக்க முடியாது போன நோர்வேயை அரசியல் என்ற சொல்லை கேள்விபட்டவனே இந்த உலகத்தில் நம்ப மாட்டான் என்பது திண்ணம் ஆக அரசியலை நடத்துபவர்கள் எப்படி நம்புவார்கள்? ஆனாலும் குறித்த நேரத்தில் சாமதான தூதனாக அமெரிக்காவிற்கு வேறு ஆள் கிடைக்காது போனது அமெரிக்காவின் துர்ரதிஸ்டம். அல்லது தொலைக்கு பார்வையில் உள்ள சிறிய ஓட்டை என்றும் கொள்ளலாம். ஆனால் சந்திரமண்டலத்தில் இலத்திரனியல் கடை திறப்போமா என்றாலும் ஓம் என்று ஒடிவர கூடியது ஜப்பான் என்பது அமெரிக்கா என்ன அறிவுள்ள ஆட்டுக்கும் தெரியும். அதுதான் ஈழத்து புலிகளை வளைக்க ஜப்பான் பொருளதவுயுடன் வந்து இறங்கியது. யார் வந்தாலும் தனக்கு பாதகமே ஸ்ரீலங்காவை எப்படியாவது தனது மடிக்குள் கட்டிவிட வேண்டும் என்பது இந்தியாவின் எந்த நேரமும் உள்ள நிலை ஆனால் அதற்கு சிங்களம் தயாரக இல்லை என்பதும் இந்தியா அறிந்ததே. நோர்வே வரும்போதும் போகும் போதும் இந்தியாவிற்கு போய் சென்றாலும் இந்தியாவிற்கு நன்கே தெரியும் இவர் சும்மா ஆடுபவர் ஆட்டுபவர் அமெரிக்கர் என்பது. ஆக சுற்றி வளைத்து பத்திரிகைகளில் எல்லாம் தலையங்ககளை நிரப்பி தமது நகர்வுகளை ராஜதந்திரம் அரசியல் சித்தார்த்தம் என்றெல்லாம் மேடை கட்டி அவ்வப்போது விட்ட அறிக்கைகள் எல்லாம் நாம் அறிந்ததே. உதாரணத்திற்கு ஞாபகத்தை திருப்ப வேண்டும் என்றால் ஒன்று மட்டும் போதுமானது. ஐரோப்பிய யூனியன் புலிகள் மீது தடைவிதிக்கும் என்று முன்னாள் அமெரிக்க தூதுவர் பிளேக் கொழும்பில் ரணில் கூடிய கூட்டத்தில் பேசுகின்றார் இரு வாரங்களின் பின்பு தடை வருகிறது. வந்த இடம்தான் ஐரோப்பா இருந்து வந்த இடம் அமெரிக்கா என்பது யாபரும் அறிந்ததே. ஆனால் ஆரவாரமில்லாது தனது வேலையை தந்திரமாக முடித்தது இந்த காலத்தில் உண்மையிலேயே வென்றவனும் சென்றவனும் சீனாதான். அடி தந்தவன் என்றாலும் பாரட்டியே ஆகவேண்டும். திருவள்ளுவரின் இடம் பொருள் காலம் அறிந்து என்ற கோட்பாட்டை அப்படியே பின்பற்றி பின்கதவால் வந்து இப்போது முன்கதவில் நிற்கின்றான். அதுதான் எல்லோருக்கும் சங்கடம். ஐநாவில் ஸ்ரீலங்காவிற்பு எதிராக மனிதநேய கூட்டங்கள் வழக்கிற்கு வாக்கெடுப்பெல்லாம். சீனாவில் உள்ள கடுப்பே தவிர தமிழர்களில் சிங்களவனுக்கு உள்ள அக்கறை கூட எந்த நாய்க்கும் இல்லை என்பதை. நான் எழுதலாம் ஆனால் பெரும்பாண்மையான ஈழதமிழர்களை நம்ப வைப்பது என்பது கடினம் காரணம் அவர்களே தற்போதைய உலக அரசியல் சிர்த்தாந்திகள். ஆப்கானிஸ்தானிலேயே பயங்கரவாதத்தை கிள்ளியேறிய முடியவல்லையே அப்படியிருக்க புலிகளை எப்படி கிள்ளுவது என்பதில் அமெரிக்காவிற்கு நிற்சயமாக சந்தேகம் இருந்தது. ஆனால் அது சீனாவிற்கு அறவே இருக்கவில்லை என்பதை தவிர பொருளாதார சந்தை தந்திரோபாய இராணுவ அணுகுமுறை என்பதற்கு கால அவகாசமும் தேவை ஆனால். அடி என்றால் அடுத்த வினாடியும் முடியும் என்பதும் உண்மை. ஆகவே அமெரிக்க நோர்வே ஜப்பான் கூட்டுக்கு ரணில் தேவைபட்டார்..... சீனாவிற்கு மகிந்த தேவைபட்டார். இதில் அடிவேண்ட வேண்டிய எமக்கு???? மகிந்தவை புலிகள் தேர்ந்தது என்பது 21ம் நுற்றாண்டின் அரசியல் உன்னதம். இதை உரியவர்கள் புரிந்துகொள்வார்கள்......... புலிகளிடம் இப்படியொரு அரசியல் நகர்வை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது....... காலம் பொருள் இடம் அறிந்து ...... என்பதை சீனாவை தவிர இங்கு செய்தது புலிகள் மட்டுமே. யார் யார் வந்தாலும் .... போர் நடக்கவேண்டியதும் தீர்வு அமைய வேண்டியதும் இலங்கை என்ற சிறிய நிலப்பரப்புக்குள்தான் இது மகிந்த என்ற மந்திக்கு இப்போது புரிய வைக்க முடியாது.... ஆனால் ரணில் இதை நன்றாக புரிந்திருந்தான் அல்லது புரியவைக்கப்பட்டிருந்தான். ஈராக்கில் இருந்து வெளியேறி ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய சூழலில் அமெரிக்கவுடன் கூடிய நேசநாட்டு படைகளுக்கே உள்ளதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது ஆகாசியின் கருத்தை மீண்டும் வாசித்தால் அண்ணா என்ன சொல்கின்றார் என்பது புரியும். புலிகளை சாடினால்தான் கொழும்பில் வாயே திறக்கலாம் தவிர தற்போதைய சூழலில் புலிகளை சாடுவதால் எந்த நஸ்டமுமில்லை. ஆனாலும் அமெரிக்கா அடக்கி வாசிக்கின்றதே......?? பழம்தின்று கொட்டை போட்டவன் என்று ஊரிலே சொல்வார்கள் இல்லையா....... ஆழம் அறிந்து காலை விட வேண்டும் என்றும் சொல்வார்கள். அது இனி நடப்பவைளகில்தான் உள்ளது.

  • Replies 70
  • Views 6.1k
  • Created
  • Last Reply

யாழ் இணையம் ஒரு நடுநிலையான ஊடகம். இங்கு யாரும் தமது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

தமிழ்த்தேசியம்,புலிகளைப் பற்றி மட்டும் தான் செய்திகளை,கருத்துக்களை போட வேண்டும் என்கிறீர்களா ?

கருணாவும் டக்லஸும் கருத்தெழுதலாமா ??? அப்படியானால் இனி தேனீ ஈ பீ என்றவற்றின் பீக்களையும் இங்கு கொட்டலாமா ??

புது விளக்குமாறு நன்றாகக் கூட்டும் ஜீவா இவை எல்லாம் பல காலமாக பலர் எழுதி ஓய்ந்ததை நீங்கள் தூசு தட்டுகின்றீர்கள்

இன்று பல தளங்கள் பல வகையான கருத்துக்களுடன் வருகின்றன பல மக்கள் சகல இணையங்களையும் பார்க்கிறார்கள். சரி பிழையை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களிடமே..

அதைத் தான் நானும் சொல்கின்றேன் நீங்கள் எல்லாம் விவாதம் என்ற பெயரில் விதண்டாவதம் செய்து ஏதோ நிருபித்து மக்களுக்கு காட்ட முற்படுவதேன் அது மட்டுமல்லாமல் தலைப்பிலிருந்து திசைமாற்றி மக்கோனாவிற்கு கொண்டு போய் விடுகின்றீர்கள்

மக்களிட ம் விடுங்கள்

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வோம் அதை விடுத்து யாழை குறை கூறுவது நல்லதல்ல. icon_idea.gif

இன்னும் குண்டுச்சட்டியிலை குதிரை ஓட்டச் சொல்கிறீர்களா?

மூன்று பக்கம் தாண்டிய இந்த தலைப்பிற்கும் இவர்கள் எழுதுவதற்கும் என்ன சம்பந்தம் இது கால காலமாகவே இங்கு நடப்பது

இதுக்கு முதல் எப்படி இருந்தோம் என்பதல்ல இப்ப எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம்

இது வரைக்கும் வாலாட்டியவர்கள் எல்லாம் இப்போ தலையே ஆட்டுகின்றார்கள் புலிகள் இல்லை என்றவுடன்

அதுவும் தயா, முன்னால் வாரிசு என்று சொல்லிக்கொண்டு ஆட்டுகின்றார் இது போலத்தான் வழுதி , புழுதி என்று பலர் இப்போ ஆரம்பித்துவிட்டார்கள்

முன்னரிலும் பார்க்க இப்போது அதிகமாகவே யாழில் புலி எதிர்ப்பும் நக்கலும் நையாண்டிகளும்

உங்கள் இந்திய விசுவாசம் பொங்கி வழிகின்றது

இது இப்போது எழுதில் இருந்து நான் சொல்ல வரவில்லை நீங்கள் இந்தப் புறக்கணிப்பில் எழுதியதை திரும்பிப் பார்த்தால் தெரியும்

நீங்கள் புலியாக இருந்தாக சொன்ன 90 இருந்து புலிகள் தமிழ்சினிமாவை தமிழீழத்தில் புறக்கணித்திருந்தார்கள் அது சினிமாத் துறைனருக்கு நட்டத்தை ஏற்படுத்துவதற்காகவா ??? அல்லது அவர்களை எதிர்ப்பதற்காகவா ??? அல்லவே அதற்கு வேறு காரணம் இருந்தது மக்களின் உணர்வலைகளை திசை திருப்பாமல் இருப்பதற்காக

தயா புலி என்று சொல்லிக்கொண்டு உங்கள் கருத்தை திணிக்காதீர்கள் , பழிதீர்க்க முற்படாதீர்கள்

மீண்டும் பழையவற்றை சொல்லி திசை திருப்ப வேண்டாம் வேண்டுமானால் அந்த தலைப்புக்கு சென்று எழுதுங்கள்

இப்போது தலைப்பு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தமை பிரபாகரன் விட்ட தவறு: அகாசி இது பற்றி விவாதியுங்கள்

மருதங்கேணி நன்றி

போர் நடக்கவேண்டியதும் தீர்வு அமைய வேண்டியதும் இலங்கை என்ற சிறிய நிலப்பரப்புக்குள்தான்

இது தலைவருக்கு நன்றாக தெரிந்திருக்கின்றது யார் ஆட்சிக்கு வந்தாலும் போரும் போரின் முடிவும் புலிகளின் அழிவும் தலைவருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றது

தலைவருடன் உரையாடிய புலம்பெயர் மக்களுக்கு தாம் காட்டுக்கு போவோம் என்று சொல்லியிருக்கின்றார் எனக்கு ஒரு போராளி நாம் வேற்று இன இராணுவத்துடன் மோதப்போகின்றோம் என்று தலைவர் சொன்னவர் என்று இவை எல்லாம் மகிந்தவின் வரவிற்கு முதல் சொல்லப்பட்டவை

இதில் ரணிலா மகிந்தாவா என்று பார்த்தால்

மகிந்தா சண்டியன் ரணில் சாணக்கியன்

ரணில் வந்திருந்தாலும் போர் வந்திருக்கும் இந்த உலகின் துணையோடு புலிகள் அழிக்கப்பட்டிருப்பார்கள் ஆனால் இப்போதுள்ள முரண்பாடுகள் எவையும் இல்ல்லாதிருந்திருக்கும் எல்லோரையும் எப்படி சேர்த்து அழித்தார்களோ அப்படியே எல்லோரும் சிறிலங்காவில் காலூன்றியுமிருப்பார்கள்

தமிழ்மக்களைப் பற்றி யாரும் முதலைக் கண்ணிரும் விட்டிருக்கமாட்டார்கள் இப்போது அதற்காகவாவது இருக்கின்றார்கள்

இந்த முதலைக் கண்ணீரை தமிழ்மக்களுக்கு சாதகமாக மாற்றவேண்டிய சாணக்கியம் இப்போ தேவை ??

அது எப்படி ???? யார் செய்யப்போகின்றார்கள் ???

முகாமில் இருப்பவர்களை சாதாரண வாழ்வுக்கு திரும்பச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள் ஆனால் எப்படி என்று ஒருவரும் சொல்வதில்லை ????

இது இப்போது எழுதில் இருந்து நான் சொல்ல வரவில்லை நீங்கள் இந்தப் புறக்கணிப்பில் எழுதியதை திரும்பிப் பார்த்தால் தெரியும்

நீங்கள் புலியாக இருந்தாக சொன்ன 90 இருந்து புலிகள் தமிழ்சினிமாவை தமிழீழத்தில் புறக்கணித்திருந்தார்கள் அது சினிமாத் துறைனருக்கு நட்டத்தை ஏற்படுத்துவதற்காகவா ??? அல்லது அவர்களை எதிர்ப்பதற்காகவா ??? அல்லவே அதற்கு வேறு காரணம் இருந்தது மக்களின் உணர்வலைகளை திசை திருப்பாமல் இருப்பதற்காக

தயா புலி என்று சொல்லிக்கொண்டு உங்கள் கருத்தை திணிக்காதீர்கள் , பழிதீர்க்க முற்படாதீர்கள்

மீண்டும் பழையவற்றை சொல்லி திசை திருப்ப வேண்டாம் வேண்டுமானால் அந்த தலைப்புக்கு சென்று எழுதுங்கள்

இப்போது தலைப்பு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தமை பிரபாகரன் விட்ட தவறு: அகாசி இது பற்றி விவாதியுங்கள்

புலிகள் 90 களில் யாழ் பாணம் விடு பட்டதின் பின்னர் 1996ம் ஆண்டு அதே தமிழ் சினிமாவை வன்னியில் திரயரங்குகள் திறந்து மக்களுக்கு காண்பித்தது உங்களின் அறிவுக்கு எட்ட வில்லை என்பது புரிகிறது... ( புலிகளின் பாண்டியன் பல்பொருள் வாணிபத்தினரால் பல திரையரங்குகள் திறக்க பட்டு இருந்தன)

வன்னியில் தனியார்கள் கூட திரயரங்குகள் திறந்து வைத்திருந்ததை முதலில் வன்னியில் வசித்த யாரையாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...

புலிகள் தடை செய்தது தமிழ் சினிமாவில் வந்த அருவெருக்க தக்க காட்ச்சிகளைத்தான்....

உங்களின் சிறுமை தனம் மட்டும் வெளிச்சமாகின்றது... முடிந்தால் சிங்கள புலனாய்வாளர்களின் செயல் பாடுகளுக்கு செயற் திறனை கூட்டாமல் இருக்க முயலுங்கள்... முடியாவிட்டால் மற்றவனுக்கு அறிவுரை சொல்வதையாவது நிப்பாட்டுங்கள்...

தயா

புலிகள் 90 களில் யாழ் பாணம் விடு பட முன்னர்

நடந்தவைகளைத் தான் நான் சுட்டிக்காட்டினேன் அப்போது தணிக்கை செய்து வெளியிடவில்லை ஒரு திரையரங்கில் யாழில் ஆங்கில சண்டைப்படங்கள் கூட விட்டிருந்தார்கள் தமிழில் மொழிபெயர்த்து , அதற்காக புலிகள் தொடர்ச்சியாக செய்தார்கள் என்று உங்கள் சிற்றறிவுக்கு பட்டிருக்கின்றது

இதை ஒரு சம்பவமாக குறிப்பிட்டதற்கு காரணம் புறக்கணிப்பு என்பதில் நீங்கள் காட்டிய இந்திய விசுவாசத்தை தமிழர் நலணாக சித்தரிக்க முற்பட்டதற்காக

புலிகள் தடை செய்தது தமிழ் சினிமாவில் வந்த அருவெருக்க தக்க காட்ச்சிகளைத்தான்....

இவை புலிகள் தமிழ் சினிமாவை அனுமதித்த பின்னர் நடந்தவை

உங்களின் சிறுமை தனம் மட்டும் வெளிச்சமாகின்றது... முடிந்தால் சிங்கள புலனாய்வாளர்களின் செயல் பாடுகளுக்கு செயற் திறனை கூட்டாமல் இருக்க முயலுங்கள்... முடியாவிட்டால் மற்றவனுக்கு அறிவுரை சொல்வதையாவது நிப்பாட்டுங்கள்...

மீண்டும் மீண்டும் தேவையில்லாதவற்றை கிழறி விடுவது யார் ??? நீங்களா??? நானா ???

தலைப்பை விடுத்து தனி மனிதர்களைத் திருத்த முற்படுவது யார் ??? அதுவும் நான் புலி , கிலி என்று தம்பட்டம் அடித்து பிதற்றுவது யார் ???

தவிர இந்த புறக்கணிப்புக்கள் எல்லாம் யாழில் கருத்துகணிப்புக்கு விடப்பட்ட பின்னர் தான் அமுல்படுத்தப்பட்டதா ???

உண்மையைச் சொல்லப்போனால் அஜிதின் கோவனத்தையோ சூர்யாவின் ஜட்டியை ஓ கூட புறக்கணிக்க முடியாத லாயக்கற்றவர்கள் தான் நீங்கள்

புலிகள் எதிரியையோ துரோகிகளையோ தூற்றி வசைபாடுபவர்கள் அல்ல

இதை முதலில் நீங்கள் செய்யுங்கள்

உங்களைத் திருத்தினால் சமூகம் தானாகவே திருந்தும்

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எதிரியையோ துரோகளையோ தூற்றி வசைபாடுபவர்கள் அல்ல

இந்தக்கருத்துக்கு வலுச்சேர்க்கவிரும்புகின்றே

Edited by விசுகு

தயா

புலிகள் 90 களில் யாழ் பாணம் விடு பட முன்னர்

நடந்தவைகளைத் தான் நான் சுட்டிக்காட்டினேன் அப்போது தணிக்கை செய்து வெளியிடவில்லை ஒரு திரையரங்கில் யாழில் ஆங்கில சண்டைப்படங்கள் கூட விட்டிருந்தார்கள் தமிழில் மொழிபெயர்த்து , அதற்காக புலிகள் தொடர்ச்சியாக செய்தார்கள் என்று உங்கள் சிற்றறிவுக்கு பட்டிருக்கின்றது

இதை ஒரு சம்பவமாக குறிப்பிட்டதற்கு காரணம் புறக்கணிப்பு என்பதில் நீங்கள் காட்டிய இந்திய விசுவாசத்தை தமிழர் நலணாக சித்தரிக்க முற்பட்டதற்காக

மீண்டும் மீண்டு பொய்களை அவிள்த்து விடுகிறீர்... புலிகள் தமிழ் படங்களை எப்போதும் தடை செய்ய இல்லை... பொய்யான தகவல்களை பரப்ப்பாதீர்... (இவற்றைதான் நிறுத்த சொல்கிறேன்)

ஒரு காலத்தில் யாழில் மின்சாரம் இல்லாத காலத்தில் வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் எண்று 40 பரல்கள் மண்ணெண்ணை தான் இலங்கை படைகளால் நாள் ஒண்றுக்கு அனுமதிக்க பட்டது... இரவு வேளைகளில் விளக்கு எரிப்பதுக்கு, விவசாயம் செய்ய வாகனங்களுக்கு எல்லாமாக இவை அந்த மக்களுக்கு போதுமானதாக இல்லை... அந்த காலப்பகுதியில் ஜெனரேட்டர்கள் வைத்து ரூ 1000/= க்கு இந்த சினிமாவை சிலர் வியாபார ரீதியில் காட்டி கொண்டு இருந்தார்கள்... நாள் ஒண்றுக்கு குறைந்தது 100 இடங்களில் மக்களுக்காக படங்கள் திரையிடப்பட்டன... அதுக்காக 200 லீற்றருக்கும் மேல் மண்ணெண்ணை வீணடிக்க பட்டது தனால்தான் சினிமாவை ஜெனரேட்டர்கள் மூலம் காட்டுவதை புலிகள் தடை செய்தனர்...

குறிப்பு:- தடை செய்தது சினிமாவுக்காக ஜெனரேட்டர்களே தவிர சினிமா அல்ல ...

மீண்டும் மீண்டும் தேவையில்லாதவற்றை கிழறி விடுவது யார் ??? நீங்களா??? நானா ???

தலைப்பை விடுத்து தனி மனிதர்களைத் திருத்த முற்படுவது யார் ??? அதுவும் நான் புலி , கிலி என்று தம்பட்டம் அடித்து பிதற்றுவது யார் ???

தவிர இந்த புறக்கணிப்புக்கள் எல்லாம் யாழில் கருத்துகணிப்புக்கு விடப்பட்ட பின்னர் தான் அமுல்படுத்தப்பட்டதா ???

உண்மையைச் சொல்லப்போனால் அஜிதின் கோவனத்தையோ சூர்யாவின் ஜட்டியை ஓ கூட புறக்கணிக்க முடியாத லாயக்கற்றவர்கள் தான் நீங்கள்

புலிகள் எதிரியையோ துரோகிகளையோ தூற்றி வசைபாடுபவர்கள் அல்ல

இதை முதலில் நீங்கள் செய்யுங்கள்

உங்களைத் திருத்தினால் சமூகம் தானாகவே திருந்தும்

யாழ்களத்தையும் , தனி நபர்களையும் சீண்டியது தாங்கள் தான்... நான் அல்ல...

புலிகள் யாரையும் வசை பாடியவர்கள் அல்ல... ஆனால் மக்களை தேவை இல்லாது குழப்பியவர்களை அனுமதித்ததும் இல்லை...

உங்களின் கிளிப்பிள்ளை வரவில்லை என்ற ஆதங்கமா அகாசி

ஏன் அகாசி நீங்கள் எல்லாம் அள்ளிக் கொடுத்தும் உங்களை கணக்கெடுக்கவில்லை என்ற ஆதங்கமா

ஆடு நனைகின்றது என்று ஓநாய்கள் எல்லாம் அழத் தொடங்கிவிட்டன

ஆனாலும் அகாசி பரவாயில்லை

இவருக்கு முன்பே பல தமிழ் ஓநாய்கள் அழத் தொடங்கிவிட்டனவே வழுதி புழுதி என்று சொல்லிக்கொண்டு

ஆனாலும் இவர்கள் முகமூடிக்குள் இருந்து கொண்டு செய்வது ஏன் ???

உங்கள் சுய முகத்தோடு சுய பெயரோடு இப்படியான புழுதிகளை வாரி இறைத்தால் எல்லோரும் அறிந்து கொள்வார்களே நீங்கள் யார் என்று ???

அதிலும் யாழில் சொல்லத் தேவையில்லை

யாழ் இணையம் இப்போது ஓநாய்களின் சரணாலயம் ஆகி விட்டது

யாழ் களத்தில் வந்து வசை பாடியவர் தாங்கள் தானே....

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாவும் டக்லஸும் கருத்தெழுதலாமா ??? அப்படியானால் இனி தேனீ ஈ பீ என்றவற்றின் பீக்களையும் இங்கு கொட்டலாமா ??

நிச்சயமாக எழுதலாம். அவர்கள் செய்த துரோகங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவேனும

சிங்கள அரசு விரும்புவதை இங்கே பலர் நன்றாகவே செய்கிறீர்கள். கொழும்புத் தமிழர்கள், கனடாத் தமிழர்கள் என்று உங்களுக்குள் மோதிக் கொள்கிறீர்கள்.

தமிழர்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக நாம் நீண்ட பரப்புரைகளை மேற்கொண்டோம். பிரதேச, சாதிய, மத வேறுபாடுகள் இன்றி தமிழர் என்ற உணர்வு வருவதற்கு குரல் கொடுத்தோம்.

தமிழர் பண்பாட்டை பற்றிய கருத்தாடல்களை செய்தோம். தமிழர்கள் "தமிழ் தேசியம்" என்பதை சரியாக உணர்ந்து கொள்வதற்கு எம்மால் ஆன முயற்சிகளை செய்தோம்.

தான் கஸ்ரப்பட்டு உழைத்து வீடு கட்டி விட்டு, அதற்கு சாந்தி செய்பவனையும், சங்கு புதைப்பவனையும், தன்னுடைய கடவுளை வேறு மொழியில் வழிபடுவனையும், ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கத் தெரியாதவனையும், தன்னுடைய எதிரியின் தயாரிப்புகளை காசு கொடுத்து வாங்குபவனையும் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் ஒரு இனம் ஆயிரம் பிரபாகரன்கள் தலைமை தாங்கினாலும் உலகை எதிர்த்து வெல்ல முடியாது என்பதனால் இந்த முட்டாள்தனங்களை எதிர்த்து நாம் நிறையப் பேசினோம். இனியும் பேசுவோம்.

ஆகாசி போன்றவர்களின் கதையை விடுவோம். ரணில் வந்திருந்தாலும் இதே நிலைதான். இன்றைக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் வகித்த பாத்திரத்தை மேற்கு நாடுகள் வகித்திருக்கும்.

நாம் எம்மை முதலில் உணர்ந்து கொள்வோம். எமது பண்பாட்டை, எமது மொழியை உணர்ந்து கொள்வோம். தமிழ் தேசியத்தை வளர்ப்போம்.

சிங்கள அரசு விரும்புவதை இங்கே பலர் நன்றாகவே செய்கிறீர்கள். கொழும்புத் தமிழர்கள், கனடாத் தமிழர்கள் என்று உங்களுக்குள் மோதிக் கொள்கிறீர்கள்.

தமிழர்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக நாம் நீண்ட பரப்புரைகளை மேற்கொண்டோம். பிரதேச, சாதிய, மத வேறுபாடுகள் இன்றி தமிழர் என்ற உணர்வு வருவதற்கு குரல் கொடுத்தோம்.

தமிழர் பண்பாட்டை பற்றிய கருத்தாடல்களை செய்தோம். தமிழர்கள் "தமிழ் தேசியம்" என்பதை சரியாக உணர்ந்து கொள்வதற்கு எம்மால் ஆன முயற்சிகளை செய்தோம்.

எனக்கு தெரிய தமிழ் தேசியத்தை திசை திருப்ப முயண்ற பலர் இருக்கிறார்கள் அவர்களில் தாங்களும் ஒருவர்...

தாங்கள் செய்தது என்ன...??

  • சமஸ்கிருதம் படித்த பிராமணர்களை ஒடுக்க முயண்றீர்கள்...
  • கோயில்களை உடைக்க முயன்றீர்கள்....
  • சமதர்ம தமிழீழம் எனும் கோட்ப்பாட்டுக்கு சமாந்தரமாக திராவிட தேசியத்தை போட்டீர்கள்...
  • புத்த மதத்தை முன்னிறுத்தினீர்கள்..
  • ஐரோப்பிய பெரியார் இயக்கம் என்பவற்றை முன்னிறுத்தி குழப்பங்களை அதிகரித்தீர்கள்...
  • இன்னும் பல குழறுபடிகளை செய்ய முனைந்தீர்கள்...

இவை எல்லாம் தமிழர் தேசியத்தை பலப்படுத்த எண்று தாங்கள் சொல்வது தமிழன் தனக்குள் அடிபடுவதை தூண்டிவிடும் உங்கள் செயலை நீங்கள் இனியும் நிறுத்த போவது இல்லை என்பதை பறை சாற்றுகிறது...

இதைத்தான் சிங்களவன் உண்மையில் விரும்புகிறான்.... ஹிந்து ராமுக்கு அடுத்ததாக தங்களுக்கு ஒரு பட்டம் சிங்களவன் நிச்சயம் தருவான்...

தான் கஸ்ரப்பட்டு உழைத்து வீடு கட்டி விட்டு, அதற்கு சாந்தி செய்பவனையும், சங்கு புதைப்பவனையும், தன்னுடைய கடவுளை வேறு மொழியில் வழிபடுவனையும், ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கத் தெரியாதவனையும், தன்னுடைய எதிரியின் தயாரிப்புகளை காசு கொடுத்து வாங்குபவனையும் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் ஒரு இனம் ஆயிரம் பிரபாகரன்கள் தலைமை தாங்கினாலும் உலகை எதிர்த்து வெல்ல முடியாது என்பதனால் இந்த முட்டாள்தனங்களை எதிர்த்து நாம் நிறையப் பேசினோம். இனியும் பேசுவோம்.

தமிழன் தமிழனிடன் கேள்வி கேட்க்கும் நிலை பிழையானது அல்ல... ஆனால் அதுக்கான காலத்தை தாங்கள் உணர்ந்து இருந்தீர்களா...???

சிங்களவனிடம் இல்லாத சாதியம் தமிழனிடம் இல்லை.. சிங்களவர்கள் இண்றும் மற்றவர்களின் காலில் விழுந்து வணங்கும் பிற்போக்கு வழக்கம் இல்லாதவர்களும் இல்லை... அப்படியான பல பிற்போக்கான கருத்துக்கள் உள்ள சிங்களவன்தான் தமிழன் எண்று வரும் போது சிங்கள தேசியத்துக்காய் கிளர்ந்து எழுந்தான்...

இதே போல தான் இண்றும் மிகவும் பிற்போக்கான யூதர்கள்தான் இண்று பல கோடி மத்திய கிழக்கு மக்களின் கெட்ட கனவாக இருக்கிறார்கள்...

மக்களை ஒற்றுமை படுத்துங்கள் உங்களின் வரலாற்று கடமையை செய்யுங்கள் எண்றால் பெரியாருக்கு கொடி பிடிக்கிறீர்கள்...

இதுதான் தமிழனின் சாபக்கேடு...

நாம் எம்மை முதலில் உணர்ந்து கொள்வோம். எமது பண்பாட்டை, எமது மொழியை உணர்ந்து கொள்வோம். தமிழ் தேசியத்தை வளர்ப்போம்.

அண்ணை நீங்கள் எப்ப உணர்த்தி எப்ப விடிவு கிட்டுறது...???

முதலிலை நீங்கள் யார் உங்களின் துரோகங்கள் எப்படியானவை எண்டதை தமிழருக்கு புரிய வையுங்கள்... விடிவு கிடைக்க ஏதாவது வளி கிடைக்கலாம்.... ( அதை செய்ய நான் இனியும் பின் நிற்க்க போவதும் இல்லை)

உங்களுக்கு ஒரு உண்மை கதை ஒண்டை சொல்ல வேணும்...

முல்லைதீவு முகாம் தகர்க்கும் திட்டம் போடும் நேரம் ஆனையிறவுக்கான வேவுப்பணி முடிந்து இருந்தது... அப்போது ஆனையிறவின் பணியாற்றிய போராளிகளுக்கு கட்டளை தளபதி ஒருவர் வேறு ஒரு தளம் மீது தாக்குதல் திட்டம் தலைவரால் உறுதிப்படுத்த பட்டு விட்டது அது ஆரப்பிக்க பட்டால் உதவிக்கு கொக்கு தொடுவார் மண்கிண்டி மலை பகுதியில் இருந்து இராணுவம் முன்னேற்றம் நடந்த கூடும் ஆகவே நீங்கள் எல்லாம் அங்க போய் அவதானிப்பிலை ஈடு பட வேண்டும் எண்று கட்டளை இடுகிறார்...

அதிலை நிண்ட பெடியள் ஆர்வ கோளாறிலை கேக்கினம்.. அண்ணை ஏன் இரண்டு முகாமையும் ஒரே நேரம் அடிக்கலாம் தானே அதுக்கு பிறகு ஏன் இது... அவர் ஒரு வறட்ச்சின சிரிப்போடை சொல்லுறார்... அடிக்கலாம் தான் ஆனால் எங்களுக்கு அவ்வளவு ஆள் பலம் போதாது...

ஏன் அண்ணை பெடியள் சேருவது போதாதோ போராளிகள் கேட்க்க... சனம் எல்லாம் பாஸ் வேணும் எண்டு புதுக்குடியிருப்பிலையும் , மல்லாவியிலையும் நிக்குது எண்று சொல்லி சிரித்த படி செண்று விடுகிறார்... போராட்டத்தை விட்டு தப்பி ஓடி கொண்டு இருந்த மக்களுக்காக தான் இந்த போராட்டம்..

:icon_idea:

இப்படி களமுனையிலை நிக்கும் போராளியிடம் போய் அந்த சனம் பெரியார் வளியில் சாதியத்தையும் கோயில்களையும், ஐயரையும் ஒளித்து போட்டுதான் உங்களோடை வந்து சேர்ந்து போராடுவார்களாம் எண்டு போய் அப்போது அவர்களிடம் யாரும் சொல்ல இல்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதாவது இங்குள்ள கருத்துக்களை உற்று நோக்கும் போது தமிழனின் அத்தியாவசிய தேவையானது:

கோவணம்

தட்டுவம்

பிளா

சிரட்டை

குடில்

காவோலை

பன்னாடை

விறகு

கங்குமட்டை

சாணகம்

மடம்

அன்னதானம்

கோம்பை

மாட்டுவண்டில்

வாழ்க வளர்க :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாலை நேரம் இமையமலை அடிவாரத்தில் அமர்ந்திருந்த ஒரு புத்த துறவி இயற்கையை இரசித்த வண்ணம் இருந்தார் அவரது கவனத்தை கவர்ந்தது ஒரு மரக்கிளையில் பனி படிந்து படிந்து மரக்கிளை வளைந்து இன்னும் சிறிது பனி படிந்தால் அதன் பாரம் தாங்காமல் அந்த மரக்கிளை உடைந்து போகப்போகிறறது பனி மேலும் படிந்தது கிளை சிறிது மேலும் மடிந்து தன் மேல் இருந்த பனி எல்லாத்தையும் நிலத்தில் கொட்டிவிட்டு அந்த கிளை நிமிர்ந்தது அந்த துறவி சிறிது எதிபாராத அந்த இயற்கை நிகழ்வே "யூடோ " எனப்படும் தற்காப்புகலை தோன்றக்காரணமான இயற்கை நிகழ்வு.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் 200000 மேற்பட்ட பில்லிப்பீன்ஸ்,கொரிய,சீனப்பெ

ண்களை ஜப்பான் தனது இராணுவத்தேவைக்காக (வசதி பெண்கள்) நாச மாக்கிய ஆக்கிரமிப்பாளரின் கொடுமையை அமெரிக்காவின் அணுகுண்டு அவலம் முடி மறைத்து விட்டது 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய அவலம் அது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலம் வன்னிப்டுகொலை,அதற்கு துணை போனவர்கள் தம்மைக்காக்க இவ்வாறு கூறுவது ஒன்றும் அதிசயம் இல்லை.

இன்று எதிரி பலமாகத்தோன்றினாலும் அதே பலத்தை அவனது பலவீனமாக்க நாம் என்ன செய்யலாம்?

இன்று எதிரி பலமாகத்தோன்றினாலும் அதே பலத்தை அவனது பலவீனமாக்க நாம் என்ன செய்யலாம் ???????

தயா,

நீங்கள் மிகத் தவறான புரிதலோடு இருக்கின்றீர்கள்.

தமிழர்கள் சிங்களவர்களை ஒடுக்க முயன்றார்கள், விகாரைகளை இடிக்க முயன்றார்கள், இந்து மதத்தை முன்னிறுத்தினார்கள்.... இப்படி சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ, அப்படியே உங்களின் கருத்தும் தவறானது.

ஒரு அந்நிய மொழியை கற்பது வேறு. ஆனால் சம்பந்தமே இல்லாமல் அதை தன்னுடைய வழிபாட்டு மொழியாகவும் சடங்குக்கான மொழியாக ஒரு இனம் கொண்டிருந்தால், அது ஒரு தனித்துவமான பண்பாட்டைக் கொண்ட இனம் இல்லை. இந்த உணர்வைக் கொண்டிருக்காத ஒரு இனத்திடம் தேசிய உணர்வு என்பதும் இருக்காது.

தமிழர்களிடம் தேசிய உணர்வு இருந்தது இல்லை. புலிகள் மீதான பற்று மாத்திரமே இருந்தது. இன்றைக்கு புலிகள் இல்லையென்றதும் நடக்கின்ற இத்தனை குழப்பங்களுக்கும் "தமிழர்" என்ற உணர்வும் "தேசியம்" குறித்த புரிதலும் இல்லாததே காரணம்.

நாம் தமிழ் தேசியம் பற்றியே பேசினோம். தமிழர்களை தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி வலியுறுத்தினோம்.

கோயில்களை இடிக்கச் சொல்லவில்லை. புதிய கோயில்களை கட்டுவதை எதிர்த்தோம். கோயில்கள் மூலம் சிங்கள அரசு செய்த குளறுபடிகள் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

விடுதலைப் புலிகளின் தோல்விக்கு காரணமாக ஆய்வாளர்களை சிலர் முட்டாள்தனமாக குற்றம்சாட்டுவது போன்று, நீங்கள் தமிழ்தேசியவாதிகளை குற்றம்சாட்டுகிறீர்கள்.

நீங்கள் பெரும் மன உளைச்சலில் இருக்கின்றீர்கள். யாரையாவது எமது தோல்விக்கு காரணமாக சொல்ல வேண்டும் என்று அவசரப்படுகிறீர்கள். எமது தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது, பெரும் ஆத்திரத்தில் இருக்கும் நீங்கள், அதை யார் மீது கொட்டலாம் என்று அலைகிறீர்கள்.

கவனித்துப் பாருங்கள். தமிழர்களின் தோல்விக்கு இந்துப் பார்ப்பனர்கள்தான் காரணம் என்று நாம் இதுவரை எழுதுவில்லை. நாம் நிதானமாக இருக்கின்றோம். வடக்கின் வசந்தத்தை செய்து கொடுப்பதற்கும் ஒரு இந்துப் பார்ப்பான்தான் வந்து நிற்கிறான். ஆயினும் நாம் சற்றுப் பொறுமை காக்கிறோம்.

நீங்களும் நிதானமாக இருங்கள்! உங்கள் மனநிலை புரிகின்றது. இது ஒரு மனச் சிக்கல். இன்றைய நிலை பலருக்கு இந்த மனச் சிக்கலை உருவாக்கியிருக்கின்றது. ஆகாசி பற்றிய தலைப்பில் கொழும்புத் தமிழரும், பெரியாரும் வரத் தேவையில்லை. ஆனால் வருகிறது என்றால் அதற்கு தமிழர்களின் குழப்பம்தான் காரணம்.

தயவு செய்து சிந்திக்கவும்.

முக்கிய குறிப்பு: பத்து நாட்களில் எனக்கு தேர்வு வருவதால், அதிகம் எழுத முடியாத நிலையில் இருக்கின்றேன். தேர்வு முடிந்ததும் என்னுடைய தளத்திலும், யாழிலும் முன்பை விட அதிகம் எழுதுவேன். நன்றி

தயா,

நீங்கள் மிகத் தவறான புரிதலோடு இருக்கின்றீர்கள்.

தமிழர்கள் சிங்களவர்களை ஒடுக்க முயன்றார்கள், விகாரைகளை இடிக்க முயன்றார்கள், இந்து மதத்தை முன்னிறுத்தினார்கள்.... இப்படி சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ, அப்படியே உங்களின் கருத்தும் தவறானது.

தமிழர்கள் ... அதுவும் விடுதலைப்புலிகள் தலையெடுத்ததின் பின்னர் தமிழர் விடுதலை என்பதை தவிர வேறு எதற்கும் முன்னுரிமை முன்னிலை படுத்தல்கள் நிகள்ந்தது கிடையாது.... அதேபோலதான் திராவி கொள்கைகளும் முன்னிலை கிடைத்தது இல்லை ... (அதுவும் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் எனும் இரண்டு மதத்தினர் ஒற்றுமையை குலைக்கும் எதையும் புலிகள் அனுமதித்ததும் இல்லை... )

தமிழர் சிங்களவருக்கு எதிரான விடுதலை... என்பதே கொள்கையாக இருந்தது... அதுவும் சமதர்ம தமிழீழம் (சோசலீசம் எனும் கொள்கைக்கு அண்மையாக) எனும் வரையறைக்குள்...

ஒரு அந்நிய மொழியை கற்பது வேறு. ஆனால் சம்பந்தமே இல்லாமல் அதை தன்னுடைய வழிபாட்டு மொழியாகவும் சடங்குக்கான மொழியாக ஒரு இனம் கொண்டிருந்தால், அது ஒரு தனித்துவமான பண்பாட்டைக் கொண்ட இனம் இல்லை. இந்த உணர்வைக் கொண்டிருக்காத ஒரு இனத்திடம் தேசிய உணர்வு என்பதும் இருக்காது.

தமிழர்களிடம் தேசிய உணர்வு இருந்தது இல்லை. புலிகள் மீதான பற்று மாத்திரமே இருந்தது. இன்றைக்கு புலிகள் இல்லையென்றதும் நடக்கின்ற இத்தனை குழப்பங்களுக்கும் "தமிழர்" என்ற உணர்வும் "தேசியம்" குறித்த புரிதலும் இல்லாததே காரணம்..

போராட போகாதவை எங்கட சனம்.... ஆனால் எங்கட ஆக்களுக்கு தாங்கள் ஏதொ வல்லரசுகள் எண்ட எண்ணத்துக்கு மட்டும் குறைவு இல்லை...

நாங்கள் சமஸ்கிருத்தை புறக்கணிக்க சொல்லி மக்களை கேட்ட உடன் மக்கள் கேட்ப்பார்களா அல்லது ஒரு அரசு ... தமிழீழ அரசு போல ஒண்று ஒரு சட்ட மூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றினால் கேட்ப்பார்களா என்பதை கூட அறியாமலா காலம் தள்ளுகிறீர்கள்....

ஆட்டை அறுத்து போட்டு அதை அறுக்கலாம் எண்டால் இல்லை , அதை அறுத்தால்தான் ஆடு ஆடாமல் நிக்கும் எண்டுறீயள்....

தமிழீழ போராட்டத்துக்கு மக்களின் பங்களிப்பு போத வில்லை, மக்களிடம் போராட்ட குணம் போதவில்லை எனும் காலம் எப்போதும் மாறி இருக்க இல்லை... அதுக்கு எல்லாம் சமஸ்கிருதமும் பிராமணரும்தான் காரணம் எண்டுவீர்களா...??

மக்களின் போராட்ட குணம் மங்கியதுக்கு எந்த வகையிலும் ( குறிப்பாக இந்து) மதம் காரணம் இல்லை... அப்படி மதம் எண்று பார்த்தால் கிறிஸ்தவர்கள் மட்டும் முழுமயாக போராடி இருப்பார்கள்... அப்படி எதுவும் தெரியவில்லையே...??

நாம் தமிழ் தேசியம் பற்றியே பேசினோம். தமிழர்களை தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி வலியுறுத்தினோம்.

கோயில்களை இடிக்கச் சொல்லவில்லை. புதிய கோயில்களை கட்டுவதை எதிர்த்தோம். கோயில்கள் மூலம் சிங்கள அரசு செய்த குளறுபடிகள் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

விடுதலைப் புலிகளின் தோல்விக்கு காரணமாக ஆய்வாளர்களை சிலர் முட்டாள்தனமாக குற்றம்சாட்டுவது போன்று, நீங்கள் தமிழ்தேசியவாதிகளை குற்றம்சாட்டுகிறீர்கள்.

நீங்கள் பெரும் மன உளைச்சலில் இருக்கின்றீர்கள். யாரையாவது எமது தோல்விக்கு காரணமாக சொல்ல வேண்டும் என்று அவசரப்படுகிறீர்கள். எமது தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது, பெரும் ஆத்திரத்தில் இருக்கும் நீங்கள், அதை யார் மீது கொட்டலாம் என்று அலைகிறீர்கள்..

உங்களை நீங்கள் திராவிட வாதியாக அழைத்து கொண்டதுதான் உண்மையே தவிர தமிழ் தேசிய வாதியாக எண்றும் இல்லை...

எனக்கு மன உலைச்சல்தான்... அதில் எனக்கும் கூட சந்தேகம் இல்லை....

போராடாமல் பதுங்கிய இனத்துக்கு சிங்களத்தின் கொடுமைய்களை களையும் வளிகளை ஆராய்ந்த வர்கள் மீது வெறித்தனமாக , சொல்லாடல்கள் ஆடி விட்டு , பார்ப்பானை கொல்லுவோம் எண்று மறு திசையில் திசை திருப்பியவர்கள் சரியானவர்களா..?

தமிழர் தமிழர் விடுதலை பற்றி பத்திகள் எழுதியவர்கள் தோல்விக்கு காரணம் எண்றால் ... தமிழர் விடுதலைக்கு சம்பந்தமே இல்லாத பெரியாரை பற்றி , புத்தாண்டை பற்றி எழுதிய குழப்பவாதிகள் காரணம் இல்லையா...??

உங்களின் நோக்கம் ஒண்றுதான் அது விளம்பரம்...

கவனித்துப் பாருங்கள். தமிழர்களின் தோல்விக்கு இந்துப் பார்ப்பனர்கள்தான் காரணம் என்று நாம் இதுவரை எழுதுவில்லை. நாம் நிதானமாக இருக்கின்றோம். வடக்கின் வசந்தத்தை செய்து கொடுப்பதற்கும் ஒரு இந்துப் பார்ப்பான்தான் வந்து நிற்கிறான். ஆயினும் நாம் சற்றுப் பொறுமை காக்கிறோம்.

நீங்களும் நிதானமாக இருங்கள்! உங்கள் மனநிலை புரிகின்றது. இது ஒரு மனச் சிக்கல். இன்றைய நிலை பலருக்கு இந்த மனச் சிக்கலை உருவாக்கியிருக்கின்றது. ஆகாசி பற்றிய தலைப்பில் கொழும்புத் தமிழரும், பெரியாரும் வரத் தேவையில்லை. ஆனால் வருகிறது என்றால் அதற்கு தமிழர்களின் குழப்பம்தான் காரணம்.

தயவு செய்து சிந்திக்கவும்

இப்பவும் சிந்தித்து பார்க்கிறேன்... தேவிபுரத்தில் வன்னிச்சனம் எல்லாம் அடை பட்டு இருக்கும் போது ஐயோ எங்கட உறவுகளை காக்க வேணும் எண்று எல்லா தமிழரும் அழுத நிலையிலை தங்களால் உருவாக்க பட்ட தமிழரின் புதுவருடம் சித்திரையா, தையா எனும் கொழும்பெடுத்த குழப்பங்கள்தான் நினைவில் வருகின்றன...

2007 ம் ஆண்டு தலைவர் ஆள் சேர்ப்ப்பை கட்டாயமாக்கிய போதே ஒண்று தெளிவாக புரிந்தது தலைவர் தனது கடைசியான முடிவை எடுத்து விட்டார் என்பது... அவ்வளவுக்கு நீங்கள் யாரும் உதவ முன் வர வில்லை... போராட தயாராகாத இனம் ஒண்று இவ்வளவு கேவலமான நிலைக்கு போனது எண்று விளிக்க கூடாது எண்று சொல்லும் தகுதியை போராடாத எந்த தமிழனும் கொண்டு இருக்க இல்லை...

தமிழர்களின் இண்றைய இந்த இழி நிலைக்கு காரணம் மூண்று விதமான தமிழர்கள்... அதில் தாங்களும் அடக்கம்... ( வேறு எந்த வெளிநாடு சக்திகளும் காரணம் இல்லை)

  1. போராட முன் வராமல் தன்னையும் தன் உறவுகளையும் காத்து ஓடி ஒளிந்தவர்கள்...
  2. போராடாத தங்ளின் இயலாமையை மறைத்து வேறு வளிகளை மக்களுக்கு காட்டுகின்றோன் எண்று குழப்பி அடித்தவர்கள்...
  3. சிங்களத்தோடு கூடி நிண்று தனது உறவுகளுக்காக ஒப்பாரி கூட வைக்க தயங்கிய தமிழர்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

போராட முன் வராமல் தன்னையும் தன் உறவுகளையும் காத்து ஓடி ஒளிந்தவர்கள்...

போராடாத தங்ளின் இயலாமையை மறைத்து வேறு வளிகளை மக்களுக்கு காட்டுகின்றோன் எண்று குழப்பி அடித்தவர்கள்...

சிங்களத்தோடு கூடி நிண்று தனது உறவுகளுக்காக ஒப்பாரி கூட வைக்க தயங்கிய தமிழர்கள்...

அத்தனையும் உண்மை

இத்துடன் நானும் ஒன்றைச்சேர்க்கின்றேன்

தன் வீட்டுக்கதவை சிங்களம் தட்டி நுழையும்வரை சிங்களவன் ரொம்ப நல்லவன் என நினைக்கும் தமிழர்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

பனிப்போரிற்கு முன்னர் காலனித்து நோக்கோடு வலிய நாடுகள் பக்கத்து நாடுகளை கைபற்றி அதன் வளங்களை சுரண்டி வந்தனர் பனிப்போரின் பின்னர் மாக்ஸிய சிந்தாந்ததை அடிப்படையாககொண்டு தோற்றம் பெற்ற இரண்டாவது நாடுகளின் அணியே தென்னமரிக்க கண்டத்தில் பல சுதந்திர அரசுகள் உருவாகக்காரணமாக இருந்தது அவ்வாறான வாய்பு நிலை இப்போது இல்லை அத்துடன் உலகை சுரண்டும் உலக முதலாளிகள் மட்டுமல்லாமல் இரண்டாவது அணிகூட எமக்கெதிராகவுள்ளது,

எப்போதும் பலமானவர்கள் பலம் குறைந்தவர்கள் மீது அடக்கு முறையை பிரயோகிப்பது வழமையே அவ்வகையில் தமிழர்களான நாங்கள் எப்போதும் பலவீனமாகவே காணப்பட்டுளோம்(இலங்கையின் சுதந்திரத்தின் பின்) எமக்குரிய தேசிய அடையாளம் இருக்கும் வரை அது நிகழும் எதிர்காலத்தில் பொஸ்னியாவில் நிகழ்ந்த ஒரு இனச்சுத்திகரிப்புக்கு ஒவ்வான இனச்சுத்திகரிப்பை சிங்களம் தமிழர்களின் மேல் ஏவி விடலாம் அதற்கான அறிகுறிகள்

1, 50 சதவீதமான இராணுவ அதிகரிப்பு வன்னியை மையமாகக்கொண்டு இராணுவ இயந்திர நகர்வு

2,தமிழ் ஆடவர்களை வதை முகாம்களில் இடுவதிலும் கொல்வதிலும் சிங்களம் காட்டும் ஆர்வம்

3, நடந்து முடிந்த படுகொலையிற்கு இந்தியா உட்பட உலகம் கொடுத்த அங்கீகாரம்

இதனை முறையடிக்க நாம் என்ன செய்யலாம்?

இவை எல்லாமே தமிழர்களின் உணர்வின்மையால் ஏற்பட்டது... அதையாராலும் மறுக்க முடியாது... யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றிய போது புலிகள் ஓடி விட்டார்கள் எண்று ஏளனம் செய்தவர்கள் ஒரு புறம்.. மிகுதியானவர்கள் எல்லாம் வருத்தப்பட்டார்களே அண்றி போராட முன்வந்தவர்கள் மிக குறைவானவர்கள்... இதில் பலர் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் அடங்கி வாழ தலைப்பட்டனர்... அதிலும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்து சிங்களவரோடு சேர்ந்து வாழ தலைப்பட்டனர்... இவை எல்லாமே சர்வதேசத்தின் கண்களுக்கு தமிழரின் போராட்டத்தை அடக்க கூடிய நல்ல சமிக்கையைதான் கொடுத்தது....

தங்களது விடிவில் தமிழருக்கு இல்லாத அக்கறைய ஏன் சர்வதேசம் கொண்டு இருக்க வேண்டும் எனும் கேள்வியும் எழுகிறதே...??

சர்வதேச அளவில் புலிகள் கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார்கள், சிறுவர்களை ஆள் சேர்த்தார்கள் எனும் குற்றச்சாட்டுகள் கூட வயது வந்தவர்கள் போராட போய் இருந்தால் ஏற்பட்டு இருக்காது...

போராட முன் வராத இனம் மற்றவர் மீது குறை படுவது சரி இல்லை அண்ணை...

உண்மைதான்

தொடர்ந்து எழுதுங்கள்

உண்மை கசக்கவே செய்யும்

இருப்பினும் அதை நாம் எதிர் கொள்ளாவிடில்.............???

நான் இதில் எழுதப்பட்டுள்ள கருத்துக்களை இரண்டு நாட்களாக வாசித்துக்கொண்டு வருகின்றேன். நிருவாகம் ஏன் பல கருத்துக்களை தூக்கியது என்று தெரியவில்லை. கருத்துக்களை தூக்குவது தாயக போராட்டத்திற்கு வலுச்சேர்க்கப்போவது இல்லை. இங்கு எழுதப்பட்ட கருத்துக்களை வாசித்தபோது பல விடயங்களை அறியமுடிந்தது.

முக்கியமாக, தயா கூறுகின்றதுபோல் த.வி.பு.அமைப்பிற்கு மக்கள் பூரண ஆதரவு கொடுக்காத விடயம் தெளிவாகத் தெரிந்தது. இது விரிவாக ஆராயப்படவேண்டிய விடயம். ஆதரவு கிடைக்கவில்லை என்றால் ஏன் அப்படி நடந்தது. முழு மக்கள் சக்தியை பயன்படுத்த வித்தியாசமாக என்ன செய்து இருக்கலாம் என்று பலவிதமான விசயங்களை சிந்தித்து பார்க்கவேண்டும்.

சபேசன் கூறியதுபோல மீள்பார்வை மிகவும் நிச்சயம் அவசியம். பரிபூரணமீள்பார்வை இனிச் செல்லப்போகின்ற பாதை சரியானதாகவும், அழிவுகள் அற்றதானதாகவும் சகல தரப்பினரையும் உள்வாங்கியதாகவும், விரைவில் ஓர் விடிவை பெற்றுக்கொள்வதற்கு உரம் ஊட்டுவதற்கும் உதவும். மீள்பார்வை என்பது செத்தபிணத்தை ஆராய்ச்சி செய்வது அல்ல. ஆனால்.. தாயக மக்களின் உயிர்வாழ்வுகள் பிணக்குவியல்களாக இருந்து சீரழிவதை தவிர்ப்பதற்கு உதவும்.

நெல்லையன் பணப் பங்களிப்பு பற்றி ஓர் கருத்து கூறி இருந்தார். இதுபொய் என்று கூறுவதற்கு இல்லை. அவர் சிறிது காரமாக எழுதி இருந்தாலும் பொய் சொல்லவில்லை என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் மக்களின் உரிமைபோருக்கெதிராக 2005 காலப்பகுதியில் இந்தியாவுடன் ஓர் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட முயன்று தமிழக கட்சிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது இருப்பினும் அவர்களுக்கிடயே ஒப்பந்த சரத்திலுள்ள விடயங்கள் உத்தியோக பூர்வமற்ற முறையில் இணங்கப்பட்டிருந்தது. புலிகளை அழித்து விட்டதாகக்கூறும் இலங்கை என்ன நோக்கத்திற்காக சீனாவுடன் ஒரு பாதுகாப்பு நட்புறவு ஒப்பந்தம் செய்ய அவசரப்படுகிறது?

ஏற்கனவே கட்டுப்பாடற்ற வர்த்தகக்கொள்கையின் மூலம் நாட்டை விற்று விட்டார்கள், இலங்கை இறைமை என்று ஒன்று இருப்பதாகவே தெரிய வில்லை கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை வெற்றிகரமாக அமுல் படுத்திய சிங்கப்பூர் கூட தனது இறமையை இப்படி விற்கவில்லை .

உலக முதலாளிகளால் சுரண்டப்படும் இலங்கை மக்களை வெகுகாலத்திற்கு இந்த போர் வெற்றி பிரமை நீடிக்காது.

இலங்கை அரசியலில் இரு துருவங்கள் உண்டு இது வெளியுறவுக்கொள்கயில் பாதிப்பு செலுத்தும் விடயம்.

இப்பொதைய உலக ஒழுங்கையே இலங்கை மாற்றியமைத்துவிட்டதாக கூறுவது வெறும் பகல் கனவு. இப்போதுதான் இலங்கை கிடுக்குப்பிடியில் மாட்டியுள்ளது இதை எவ்வாறு தமிழர்க்கு சாதகமாக மாற்றுவது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.