Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிப் போர் தொடர்பில் நாங்கள் சொன்னதெல்லாம் பொய்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இறுதிவரை நின்று மருத்துவ சேவை வழங்கியதாகச் சொல்லப்படும் 5 டாக்டர்களும் தாம் முன்னர் விட்ட அறிக்கைகள் அனைத்தும் விடுதலைப்புலிகளின் தூண்டுதலால் சொல்லப்பட்ட மிகைப்படுத்திய பொய்கள் என்றும்.. வன்னிப் போரில் ஆஸ்பத்திரிகள் தாக்கப்படவோ பொதுமக்கள் பெருமளவில் தாக்கப்படவோ இல்லை என்றும் சில நூறு பேர் மட்டும் உயிரிழந்திருக்கலாம் என்றும், அதுவும் புலிகள் சுட்டுத்தான் அதிகம் பேர் இறந்தனர் என்றும் இன்று சிறீலங்கா அரச ஏற்பாட்டில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சர்வதேச உள்ளூர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மேற்படி வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

S Lanka medics recant on deaths

The doctors, who are still in detention, said they were threatened by rebels

Five doctors who worked in Sri Lanka's combat zone in the last weeks of the war say they exaggerated figures for civilian casualties.

They did so, they told reporters, because of pressure on them from the Tamil Tiger rebels, who controlled the area where they were working.

Sri Lanka's government declared victory in its war with Tamil Tigers in May.

The five have been in detention since then, but say they have been under no pressure to recant.

The appearance before reporters was an extraordinary event, which took place at the Sri Lankan government's Media Centre for National Security.

The centre is usually a venue for military spokesmen to talk about Sri Lankan war matters.

One by one

The doctors were introduced not by government officials but by a Mr J Yogaraj, who described himself as a freelance journalist.

There are very significant grounds to question whether these statements were voluntary

Amnesty International

He said that two of the doctors belonged to the Tamil Tigers' medical corps, while the other three were government appointees.

One by one they said they had overstated the civilian casualties during interviews with reporters during the fighting because they were told to by the rebels.

Regularly during the war some of the doctors said people had died in shelling which appeared to come from government-controlled territory.

The five doctors remain in government detention.

But in this public recantation, they looked calm and well-groomed, wearing immaculate shirts and ties, even nervously smiling.

One, though, Dr T Varatharajah, had his arm in a sling because, he said, of a shell injury sustained just before the doctors crossed to government-held land on 15 May, three days before the military declared all-out victory.

"Every day the LTTE (Tamil Tigers) people came to the hospital, they gave the list," he said. "This amount got injured, this amount dead, this area shells fell. We had to tell that list. Read it out. The list was wrong, exaggerated number."

Dr V Shanmugarajah said that on one day, some 60 people were killed but they were instructed by the rebels to say 1,000 were dead.

He and his colleagues said they believed a total of 600-700 civilians had been killed, and nearly twice that injured, between the start of January and the end of the war.

United Nations figures for those killed are roughly 10 times higher, while on 12 May the Red Cross said it had evacuated nearly 14,000 sick or wounded people and their relatives since mid-February.

Dr Varatharajah said it was not in fact true that a hospital had been shelled in an incident in early February. The International Committee of the Red Cross and the United Nations, who had staff on the ground, both said that it was, with the ICRC saying nine people had died.

Indeed the doctors now say medical facilities were little damaged overall.

Uncertain future

The medics also said shortages of food and medicine in the war zone arose only because the Tamil Tigers appropriated large quantities.

"Do you now regret giving false information?" one pro-government journalist asked later.

"Yes, of course we regret it," said Dr V Satyamoorthy.

He said there was no pressure being exerted on them; Sri Lanka was a democratic country and they were no longer lying.

But the changed nature of the information they gave is leading some to speculate otherwise.

"There are very significant grounds to question whether these statements were voluntary, and they raise serious concerns whether the doctors were subjected to ill-treatment during weeks of detention," said the human-rights group Amnesty International.

A United Nations spokesman in Sri Lanka said the UN stood by its own statements on casualties.

The doctors' immediate future is uncertain.

Although they say they were speaking under Tamil Tiger pressure, last week a senior presidential aide said they could not be allowed to "go scot-free" as they had been "lying through their teeth".

Last month a minister said they were suspected of "collaboration" with the Tigers and were being investigated on those lines.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8141007.stm

..........

வன்னி மனிதப் பேரவலத்தை மறைக்கும் பொருட்டு சிறீலங்கா அரசு மேற்படி வைத்தியர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் வழங்கி இப்படி சொல்லச் செய்திருக்கலாம் அல்லது வாழ கிடைத்த சந்தர்ப்பத்தை வளமாக்கிக் கொள்ள டாக்டர்கள் என்போரும் உண்மையை குழிதோண்டிப் புதைத்திருக்கலாம்.

எதுஎப்படியோ வன்னியில் புதையுண்டு போன மக்களுக்கு எவரும் எனி எதுவும் செய்யப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனமாகத் தெரிகிறது.

Edited by nedukkalapoovan

கொடுங்கோல் ஆட்சி நடக்கின்றது. உலகம் வேடிக்கை பார்க்கின்றது. 50,000 பேர் என்ன 100,000 பேர் அங்கு செத்து இருந்தால்கூட சர்வதேசம் ஒன்றும் செய்யப்போவது இல்லை. எனவே இந்த மருத்துவர்கள், தங்கள் மனச்சாட்சியை தமதும், தமது உறவுகளினதும் உயிர்களை , வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்வதற்காக அழித்துக்கொண்டது தவறாக தெரியவில்லை. சிங்கள் இனவாதம் மிகத்தெளிவாக இருக்கின்றது. எதிரியாக இருந்தாலும் பாராட்டியாக வேண்டும்! சிறீ லங்காவிற்கும் மகிந்த சிந்தனைக்கும் பாராட்டுக்கள்!

கொடுங்கோல் ஆட்சி நடக்கின்றது. உலகம் வேடிக்கை பார்க்கின்றது. 50,000 பேர் என்ன 100,000 பேர் அங்கு செத்து இருந்தால்கூட சர்வதேசம் ஒன்றும் செய்யப்போவது இல்லை. எனவே இந்த மருத்துவர்கள், தங்கள் மனச்சாட்சியை தமதும், தமது உறவுகளினதும் உயிர்களை , வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்வதற்காக அழித்துக்கொண்டது தவறாக தெரியவில்லை. சிங்கள் இனவாதம் மிகத்தெளிவாக இருக்கின்றது. எதிரியாக இருந்தாலும் பாராட்டியாக வேண்டும்! சிறீ லங்காவிற்கும் மகிந்த சிந்தனைக்கும் பாராட்டுக்கள்!

உண்மைதான் கலைஞன் . சாதாரணமாய் எல்லாருக்கும் தெரியும் வைத்தியர்கள் மிரட்டப்பட்டு இப்படி சொல்கின்றனர் என்று..

ஆனால் உலகத்திற்கு???

கொடுமையான யுத்த சூழ்நிலையிலும் அந்த மருத்துவர்கள் எங்கள் மக்களுக்கு செய்த சேவை மிகப்பெரியது.

கொஞ்சம் பொறுங்கோ. இது ஆரம்பம்தான். த.வி.பு போராளிகள், மூத்த உறுப்பினர்கள் உட்பட சிறீ லங்கா அரசிடம் சரண் அடைந்து இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. அவர்கள் இதேபாணியில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நிறுத்தப்படும்போதுதான் மகிந்தசிந்தனையின் உச்சம் தெரியும். எங்களைவிட சிங்களவன் எங்கு தாக்கினால் எங்கு வலிக்கும் என்று மிகத்தெளிவாக அறிந்து வைத்து இருக்கின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

..........சர்வதேச ஊடக வியலாளர் முன் சொல்ல வைக்கப்பட்டு ....உள்ளார்கள்.

இதை நம்பும் உலகும் .........? சாட்சி இல்லாத சத்தியங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கலைஞன் . சாதாரணமாய் எல்லாருக்கும் தெரியும் வைத்தியர்கள் மிரட்டப்பட்டு இப்படி சொல்கின்றனர் என்று..

ஆனால் உலகத்திற்கு???

இப்ப நான் பேருந்தில் வேலைக்கு வரும் போது, தமிழர் ஒருவர் பிபிசி சொன்னதை நம்பி, புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகத்தான் வைத்தியர்கள் அரசு மீது பொய்யாக குற்றம் சாட்டியதாகச் சொன்னார்கள். இப்படியும் சிங்களவனை நம்பும் தமிழன் இருக்கிறனா என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது.

எந்த ஒரு மதத்தலங்களினதும் ஒரு செங்கல்லுக்குக்கூட சேதமல்லாமல்

ஒருஉயிருக்குக்கூட சேதமில்லாமல்

ஒருவருக்கும் சிறு காயங்கூட ஏற்படாமல்தமது படை வீரர்கள்

போரில் வெற்றி பெற்றதாக ஜனாதிபதி பேட்டி கொடுத்திருந்தார் படித்தீர்களோ?

(வேறு ஓர் இணையத்தில் வாசித்தேன் கொண்டு வந்து ஒட்டநினைத்தேன்...பிரையோசனமில

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு .....பஸ்சில் உங்களோடு வந்தவர தமிழ் அல்ல ............ரமில் ஆக இருக்கலாம் பல வருடங்களுக்குமுன் புலம்பெயர்ந்து இருப்பார். தற்போதைய ஆழ .... நீளம் தெரியாதவராக் இருக்கலாம் எனது உறவுகள் லண்டனில் இருக்கினம் முப்பத்தைந்து வருட முன் போனவர்கள் ஒரு தமிழ் நியூஸ் கேட் ப தில்லை. இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு சமாதான காலத்தில் வரும் ..............டூரிஸ்டுகள். ?இப்படி பல பேர்.........என்னத்தை சொல்ல ?

வன்னியில் இறுதிவரை நின்று மருத்துவ சேவை வழங்கியதாகச் சொல்லப்படும் 5 டாக்டர்களும்

இப்படி நாம் குறிப்பிட ஆரம்பித்தமை தான் சிங்களத்தின் வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு .....பஸ்சில் உங்களோடு வந்தவர தமிழ் அல்ல ............ரமில் ஆக இருக்கலாம் பல வருடங்களுக்குமுன் புலம்பெயர்ந்து இருப்பார். தற்போதைய ஆழ .... நீளம் தெரியாதவராக் இருக்கலாம் எனது உறவுகள் லண்டனில் இருக்கினம் முப்பத்தைந்து வருட முன் போனவர்கள் ஒரு தமிழ் நியூஸ் கேட் ப தில்லை. இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு சமாதான காலத்தில் வரும் ..............டூரிஸ்டுகள். ?இப்படி பல பேர்.........என்னத்தை சொல்ல ?

தாயகத்தை விட்டு வந்து 5 , 6 வருடங்கள் தான் ஆகிறது. நான் நினைக்கிறேன். அவர் வாசிப்பது புலி எதிர்ப்பு ஊடகங்களின் பொய்ச்செய்திகளைத் தான் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பல சர்வதேச ஊடகங்களில் இச்செய்தி வந்திருக்கின்றன.

http://in.reuters.com/article/southAsiaNew...lBrandChannel=0

http://www.miamiherald.com/news/world/AP/story/1132758.html

உயிர் அச்சுறுத்தல் என்பது வன்னியில் இறுதி வரை இருந்த போது வராமலா இருந்தது

சித்திரவதை உயிர் அச்சுறுத்தலிலும் கொடுமையானது

இவை எல்லாம் தெரிந்தது தானே சிங்களம் முதல் தடவையாகவா இப்படிச் செய்கின்றது

இறுதி வரை எம்மக்களுக்கு சேவை செய்த அவர்களின் சேவையை நாம் மதிக்க வேண்டும் அவர்கள் அதை உண்மையுடன் தான் செய்திருக்கின்றார்கள்

இந்த படுகொலையை சிறிலங்காவை வைத்து செய்ததது இந்த மேற்குலமும் தானே அவர்களிடம் நீதி நேர்மையை எப்படி எதிர்பார்க்கின்றீர்கள்

சிறிலங்கா மேற்குலகிற்கு அடிபணியும் வரை தான் தமிழர்படுகொலை துருப்புச் சீட்டாக தேவை அதன் பின்னர் தூக்கி எறிந்து விட்டு புலிகள் தான் செய்தார்கள் என்று சொல்லுவார்கள்

சிறிலங்கா வல்லரசுகளை உபயோகித்ததை விட இவை தான் சிறிலங்காவை உபயோகித்து தமது வஞ்சகத்தை தீர்த்திருக்கின்றார்கள்

சிறிலங்கா ஒரு நாள் இவர்களை சுண்டு விரலை காட்டி காட்டிக்கொடுக்கத் தான் போகின்றது

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் பிடியிலிருக்கும் வைத்தியர்களிடம் , உண்மையாக அங்கு நடந்தவற்றை கூறுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு .

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு மாத காலத்தில் 700 வரையான சடலங்களே தற்காலிக வைத்தியசாலைகளுக்கு எடுத்துவரப்பட்டன

வீரகேசரி நாளேடு - வன்னியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நான்கு மாத கால இறுதிப் போரில் சுமார் 700 பொதுமக்களின் சடலங்கள் பாதுகாப்பு வலயத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அரச மருத்துவமனைகளுக்கு எடுத்துவரப்பட்டன.

இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் சுமார் 1,300 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர் என்று யுத்தகாலத்தின் போது வன்னியில் செயற்பட்ட அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றிய ஐந்து வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கத்தால் பொதுமக்களுக்காக வன்னிக்கு அனுப்பப்பட்ட மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தும் ஏக காலத்தில் –எமக்குக் கிடைக்கப்பெற்றன. எனினும், அவற்றை விடுதலைப் புலிகள் தமது உபயோகத்திற்காக எடுத்துக்கொண்டதால் அவை மக்களுக்கு உரிய முறையில் சென்றடையவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள்.

தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இந்த வைத்தியர்கள் ஐவரும் மேற்கண்டவாறு கூறினர்.

யுத்தக் காலத்தின்போது வன்னியில் செயற்பட்ட அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றி பின்னர் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுவரும் டாக்டர்களான சிவபாலன், சண்முகராஜா, வரதராஜா, ரங்கநாதன் சத்தியமூர்த்தி, பள்ளவன் இளஞ்செழியன் ஆகியோரே இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்:

இதன்போது தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:

புலிகளுடனான இறுதிக் கட்டப் போரில் படையினர் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து நாம் வழங்கிய தகவல்கள் முற்றிலும் மாறுப்பட்டவை.

விடுதலைப் புலிகளின் வற்புறுத்தல்களின் பேரிலேயே நாம் இவ்வாறாக முற்றிலும் மாறுப்பட்ட தகவல்களை வழங்க நேரிட்டது. விடுதலைப் புலிகள் ஆயுததாரிகள். அவர்களால் எந்நிலையிலும் எமக்கு மரண அச்சுறுத்தல் இருந்தது. அத்துடன், அங்கிருந்த ஏனைய வைத்தியர்கள் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்திருந்தனர்.

இதேவேளை, படையினர் நடத்திய ஷெல் தாக்குதல்களில் வைத்தியசாலைகள் சேதமடைந்ததாக வெளியான தகவல்களும் பொய்யானவை. ஒரேயொரு தடவை முள்ளவாய்க்கால் வைத்தியசாலைக்கு சுமார் 100 மீற்றர் தொலைவில் படையினர் ஷெல் எறிகணை ஒன்று விழுந்து வெடித்தது.

பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலைகளை அண்மித்து விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த முகாம்களை இலக்கு வைத்தே இந்த ஷெல் வீச்சு நடத்தப்பட்டிருக்கலாம். இந்த தாக்குதலையடுத்து இது தொடர்பில் நாம் உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அறிவித்தோம். ஆனால், அதன் பின்னர் எந்தவொரு தாக்குதல்களும் இடம்பெறவில்லை.

படையினரின் ஷெல் தாக்குதல்களில் வைத்தியசாலைகள் சேதமடைந்ததாக கூறுமாறு விடுதலைப் புலிகள் எம்மை வற்புறுத்தினர். இவ்வாறாக வைத்தியசாலைகளின் மீது ஷெல்கள் விழுந்தது என்று சர்வதேச ரீதியில் பிரசாரத்தை ஏற்படுத்தினால் அது போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வழிசமைக்கும் என்று அவர்கள் எம்மை கட்டாயப்படுத்தி கேட்டுக் கொண்டனர்.

அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட மருந்துப் பொருட்களை யுத்த காலத்தில் நாம் எட்டு தடவை பெற்றுக்கொண்டோம். இறுதியாக 3 கப்பல்கள் மூலம் மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இருப்பினும் இவற்றில் பெரும்பாலானவை காயமடைந்த புலி உறுப்பினர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவே போய்ச் சேர்ந்தன.

*******

இராணுவத்தின் பிடியிலிருக்கும் வைத்தியர்களிடம் , உண்மையாக அங்கு நடந்தவற்றை கூறுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு .

சிங்கள அரசின் கொடுமைகள் காரணமாக அவர்கள் பொய்யான தகவல்களை சொல்ல நிர்பந்திக்கப்பட்டாலும்... எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத வன்னி போர்களத்தின் கடைசி காலகட்டங்களில் பல உயிர்களை காப்பாற்றிய மற்றும் தங்களால் இயன்றளவு காப்பாற்ற முயற்சித்த இந்த மருத்துவர்கள் நிஜ உலகின் உண்மையான நாயகர்கள் (HEROS). தமிழ் சமூகம் இவர்களது சேவையை எந்த காலகட்டத்திலும் மறந்துவிட கூடாது

மருத்துவர்களின் சேவையை பாராட்டுவோம்...இனித்தானே புலிகள் இல்லை பிறகு என்ன புலி கடிச்சா என்ன, புலிபாஞ்சாத்தான் என்ன...சிறிலங்காவில மழை பெய்யாவிட்டலும் புலிதான் காரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களின் உயிர் மட்டுமல்ல... அவர்களின் குடும்பத்தினர் , மனைவி, பிள்ளைகுட்டிகளின் உயிர்களும் அவர்களின் அறிக்கையிலே தங்கியுள்ளது என்பதை அவர்களுக்கு நினைவுறித்தி தானே அனுப்பி இருப்பார்கள் ஊடகவியலாலர் மகாநாட்டிக்கு.......

யுத்த சூழலில் அவர்களின் சேவை அளப்பரியது. எனக்குத்தெரிந்து போராளிகளுக்கு ஒப்பான சேவை.

அவர்களை வதைத்துத்தான் இப்படி சொல்லத்தூண்டியுள்ளார்கள், இதை ஆசிய மனிதவுரிமை அமைப்பும் ஏன் சில வெளிநாட்டு

ஊடகங்களும் இதன் பின் புலத்தை வெளிப்படுத்துன்றன. இருந்தாலும் சிங்களவன் தான் பிடிச்ச முயலுக்கு மூன்றுகாலெறுதான் இருப்பான்.

புலிகளின் பெயரைச்சொல்லி எத்தினையோ பெயர்கள் எல்லாம் வசதியான ஆடம்பரமான வாழ்க்கையை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

இன்னும் சிலர் முடிநதளவுக்கு கறக்கின்றார்கள். இந்த மருத்துவர்கள் இப்படிச்சொல்லி சித்திரவதையில் இருந்து விடுபட்டு உயிர் வாழ்வதில்

என்ன பிழை?

அவர்கள் செய்த தொண்டுக்கு சிங்களவன் கொடுத்த தண்டனையை பாக்கக்கூட யாரும் வரவில்லை, எந்த நாடும் தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் அவர்களை அவர்கள் காப்பாற்ற அவர்களால் முடிந்ததை செய்துள்ளார்கள். இதை விமர்சிப்பதற்கு யாருக்கு தகுதி இருக்கு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய் பொய் பொய்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்த சூழலில் அவர்களின் சேவை அளப்பரியது. எனக்குத்தெரிந்து போராளிகளுக்கு ஒப்பான சேவை.

அவர்களை வதைத்துத்தான் இப்படி சொல்லத்தூண்டியுள்ளார்கள், இதை ஆசிய மனிதவுரிமை அமைப்பும் ஏன் சில வெளிநாட்டு

ஊடகங்களும் இதன் பின் புலத்தை வெளிப்படுத்துன்றன. இருந்தாலும் சிங்களவன் தான் பிடிச்ச முயலுக்கு மூன்றுகாலெறுதான் இருப்பான்.

புலிகளின் பெயரைச்சொல்லி எத்தினையோ பெயர்கள் எல்லாம் வசதியான ஆடம்பரமான வாழ்க்கையை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

இன்னும் சிலர் முடிநதளவுக்கு கறக்கின்றார்கள். இந்த மருத்துவர்கள் இப்படிச்சொல்லி சித்திரவதையில் இருந்து விடுபட்டு உயிர் வாழ்வதில்

என்ன பிழை?

அவர்கள் செய்த தொண்டுக்கு சிங்களவன் கொடுத்த தண்டனையை பாக்கக்கூட யாரும் வரவில்லை, எந்த நாடும் தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் அவர்களை அவர்கள் காப்பாற்ற அவர்களால் முடிந்ததை செய்துள்ளார்கள். இதை விமர்சிப்பதற்கு யாருக்கு தகுதி இருக்கு?

இதை மட்டும்மில்லை அங்கிருந்து யார் என்ன அறிக்கை விட்டாலும் அதனை விமர்சிப்பதில் எமக்கு எந்த அருகதையும் கிடையாது.....அவர்களின் இருப்பிடம் அப்படி. இன்னும் சொல்லப்போனால் இவர்களை அவன் வெளியிலே விடமாட்டான் இப்போதைக்கு. அவனுக்கு தெரியும் இவர்கள் வெளியில் இருந்தால் எப்படியாவது எப்போதாவது உண்மை வெளியில் வரும் என்பது... எனவே உறவுகள் எப்படியாவது அவர்களை உங்கே அழைத்துக்கொள்ளுங்கள். இன்னும் இதை விட மோசமான அறிக்கைகள் வரலாம்..... அவற்றை செய்தியாக வாசித்து விட்டு இருக்கவேண்டியதுதான்.

யுத்த சூழலில் அவர்களின் சேவை அளப்பரியது. எனக்குத்தெரிந்து போராளிகளுக்கு ஒப்பான சேவை.

இன்னும் சிலர் முடிநதளவுக்கு கறக்கின்றார்கள். இந்த மருத்துவர்கள் இப்படிச்சொல்லி சித்திரவதையில் இருந்து விடுபட்டு உயிர் வாழ்வதில்

என்ன பிழை?

. இதை விமர்சிப்பதற்கு யாருக்கு தகுதி இருக்கு?

.எந்த பிழையும் இல்லை இதற்குமேலும் ஏதாவது சொல்லி வெளியே வரமுயற்சிக்கலாம்

எந்த குருவிக்கும் தகுதியில்லை

ஆம் மேற்குறிப்பிடப்பட்டபடி செய்திகள் வெளியாகியுள்ளமை உண்மையே. த.வி.பு.களின் வீரதீரமிக்க சமர்களிலும் ஊடகப் போர்களிலும் சிதைந்து போயுள்ள சிங்களம் தன் சிங்கக் கனவை சீராக்கப் படாத பாடு பட்டு வருகிறதென்பது இவ்வாறான செய்திகளிலிருந்து புலனாகின்றது. இவர்கள் புலித் தலைமைகளே தமக்குச் சார்பாகக் கதைக்கின்றன என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேற்குறிப்பிட்ட வைத்தியர்கள் அரச பணியாளர்களாகவே இருந்தும் தமிழ்ப் பகுதிகளில் போர் நடக்குமிடங்களில் இருந்து கொண்டு பணியாற்றிச் சேவை புரிந்தவர்கள். அவர்களின் சீரிய அச் சேவைகள் பாராட்டுகளுக்கும், மதிப்புக்கும், வணக்கங்களுக்குமுரியவை. தற்போது அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தலைப்பட்டிருக்கின்றமை தவிர்க்கமுடியாத காலத்தின் கட்டாயமாகி உள்ளமை புரிகின்றது.

பகை

அது வரும்

வெற்றி கொள்ளும்

பறையும் சாற்றும்

அமைதி கொள்

ஆற்றுகை அளி

ஆறுவது புலனல்ல

அயராது புகையெழுப்பிய

புலியாயுதமே ஈண்டு

வேளை வரும்

வெளியேறு வீறுகொண்டு

வேட்டையது வேலையாக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனாலும் அவர்களை அவ்வாறு சொல்ல வைக்க ஒண்டரை மாத கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது...

எவ்வளவு துன்புறுத்தி இருப்பார்களோ இந்தகாலப்பகுதியில்??? வேதனையாக இருக்கிறது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரா குறிப்பிட்டதுபோல் இவ்வளவு நீண்டநாட்கள் அவர்களை பலவழிகளாலும் துன்புறுத்தியே இவ்வாறுசொல்ல வைத்துள்ளார்கள். எங்களுக்குத்தொரிகிறது ஆனால் சர்வதேசத்திற்கு? முன்பு புதுமாத்தளன் வைத்தியசாலையில் நின்று எம்மக்களுக்கு சேவைசெய்தபோது வெளிவந்த ஒளிப்பதிவுகளையும் நாம்பலமுறை பார்த்துள்ளோம். அந்தக்குண்டு மழைக்குள் இருந்தமுகமலர்ச்சி துடிப்பு... நேற்றைய ஒளிப்பதிவைப்பார்த்தால் தெரியும் அவர்களின் இக்கட்டானநிலை. எனவே அந்த மருத்துவத்தெய்வங்களில் நாம் சந்தேகம்கொள்ளக்கூடாது.

அரசி

The doctors were introduced not by government officials but by a Mr J Yogaraj, who described himself as a freelance journalist.

யாருங்கோ இந்த யோகராசா? இவருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டு அங்கு போனாரோ இல்லாட்டிக்கு தேசிய அபிமானியோ.. யார் கண்டது? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.