Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூரண சூரிய கிரகணம்

Featured Replies

பூரண சூரிய கிரகணம் - ஆடி மாதம் 22ஆ‌ம் திகதி புதன்கிழமை 2009

இந்தியச்சுற்றாடலில்

tse2009_global.jpg

ஆடி மாதம் 22ஆ‌ம் திகதி புதன்கிழமை

அ‌திகாலை கிட்டத்தட்ட 5 ம‌ணியில்லிருந்து 7மணி‌வரையில்

மும்பாய் பங்களாதேஸ்ஸை இனைக்கும்மச்சில்

பூரண சூரிய கிரகணம் நிகழ உ‌ள்ளது.

Solar_eclipse_animate_(2009-Jul-22).gif

சூரிய கிரகணம் ஏன்? எப்படி? நிகழகிறது...

IMG6858-1247661779.png

Ce fichier provient de Wikimedia

Finsternis.jpg

இங்கே இயங்கும் படத்தை பார்கலாம்

சூணாமி போன்ற குளப்பங்கள் ஏற்படுமா?

நிகழவிருக்கும் பூரண சூரிய கிரகணத்தின் போது, சந்திரனதும் சூரியனதும் ஈர்பபு விசைகள் ஒன்று சேரவிருக்கன்றன

IMG6858-1247686134.jpg

இவ்விசைகள் ஏற்கனவே வேடித்திருக்கும் இந்திய தெக்தோணிக் தட்டை முதலிலும் ஜாவா தெக்தோணிக் தட்டை பின்பும் ஈர்த்து பாரிய குழப்பங்களை விளைவிக்கக்கூடும்

அதேநேரத்தில், மேலே காட்டப்பட்ட இயங்கு படத்தின் படி இவ்விசையின் மையம் ஜாவாவிலிருந்து (ஜப்பாணுனுக்குகட்ட) வெகுதூரத்தில் தான் செல்கிறது ஆதலால் சுணாமி போன்ற குழப்பங்கள் ஏற்படாது என்றும் கூறலாம்

Edited by ஜெகுமார்

பூமி எனும் பதத்திற்கு பதிலாக நிலம் என்று பயன்படுத்தி இருப்பது சரியா?....

  • தொடங்கியவர்

பூமி எனும் பதத்திற்கு பதிலாக நிலம் என்று பயன்படுத்தி இருப்பது சரியா?....

வணக்கம்,

... விளக்கத்தில் களங்கம் ஏற்படுத்தாத பட்சத்தில் இதில் பாதகமாக எதையும் நான் காணவில்லை... ... தமிழ் சொல்வளம்மிக்கது!

இதோ உங்கள் விருப்பத்தின்படி அந்தப்படம் மாற்றப்பட்டுள்ளது.

உங்கள் கவனத்திற்கு நன்றி.

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சொல் வளம் மிக்கது. அதற்காக வழம் குளப்பம், சந்திரண் சூரியண் ஜப்பாண் என்றெல்லாம் எழுதுவது சரியா என்பது புரியவில்லை. படங்களோடு மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். புரிதலில் எவ்வித பிரச்சனைகளுமில்லை. ஆனாலும் தமிழில் கவனம் செலுத்தாததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை

Edited by karu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கும் பிழை பிடிப்பது சுலபம்.அதுவும் எமது இனத்தில் சொல்லி வேலையில்லை.

ஜெகுமார்! இவ்வளவு ஆக்கபூர்வமான செய்திகளை விவரணத்துடன் யாழில் இணைப்பதற்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

எங்கும் பிழை பிடிப்பது சுலபம்.அதுவும் எமது இனத்தில் சொல்லி வேலையில்லை.

கு.சா....எல்லாவற்றையும் குதர்க்கமாக பார்ப்பதால் எந்த பயனும் உங்களுக்கு ஏற்படாது...

நீங்கள் சொன்னதின் அர்த்தம் எனது பதிலையும் சேர்த்து தான் என்பதால் கூறுகின்றேன். நான் எந்த இடத்திலும் 'நிலம்' என்று பூமியை குறிப்பதை.. முக்கியமாக விஞ்ஞான விளக்கங்களில் காணவில்லை..எனவேதான் நான் பூமிக்கு ஒத்த கருத்தாக நிலம் பயன்படுத்துவது சரியா எனக் கேட்டேன். என் கேள்வியினை புரிந்தமையால் ஜெயக்குமார் தெளிவாக பதில் சொன்னார்...புரியாததால், நீங்கள் குதர்க்கமாக பேசுகின்றீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா....எல்லாவற்றையும் குதர்க்கமாக பார்ப்பதால் எந்த பயனும் உங்களுக்கு ஏற்படாது...

நீங்கள் சொன்னதின் அர்த்தம் எனது பதிலையும் சேர்த்து தான் என்பதால் கூறுகின்றேன். நான் எந்த இடத்திலும் 'நிலம்' என்று பூமியை குறிப்பதை.. முக்கியமாக விஞ்ஞான விளக்கங்களில் காணவில்லை..எனவேதான் நான் பூமிக்கு ஒத்த கருத்தாக நிலம் பயன்படுத்துவது சரியா எனக் கேட்டேன். என் கேள்வியினை புரிந்தமையால் ஜெயக்குமார் தெளிவாக பதில் சொன்னார்...புரியாததால், நீங்கள் குதர்க்கமாக பேசுகின்றீர்கள்

:lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய செய்திகள் வெறுமனே புரிந்துகொண்டால் போதுமானது என்ற நோக்கில் மட்டும் எழுதப்படுபவையல்ல. தமிழில் அறிவியலை வளர்த்துக்கொள்ள உகந்த பதிவுகளாகவும் பயன்படக்கூடியவை. அந்த வகையில் திரு ஜெயக்குமாரின் கிரகணம் பற்றிய படவிளக்கங்கள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தங்கள் கல்வித் தேவைகளுக்காகவும் பாவிக்கப்படக் கூடியவை.

ஒரு பொதுவான கலைச்சொல் முறைமையின் கீழ் (உ-ம்- பூமி, சுனாமி) தமிழிலும் கவனமெடுத்து இத்தகைய செய்திகளை எமது சமுதாயத்திற்கு திரு ஜெயக்குமாரைப் போன்ற ஆர்வமிக்க அறிவியலாளர்கள் தரவேண்டுமென்று விரும்புவது எம்மைப் போன்றவர்களின் (நிழலியுட்பட) விருப்பாயிருப்பதில் எவ்வித தவறுமில்லையென எண்ணுகிறேன்.

இங்கே குறைகாணும் நோக்கம் எதுவுமில்லை. தமிழின் அறிவியலை மேம்படுத்த அதில் ஈடுபடுவோரைத் தூண்டுவதும், தமிழில் அறிவியல் செய்திகளை அதன் அழகு குன்றாது தருமாறு வேண்டுவதுமே நோக்காகும்.

தமிழில் சொற்கள் மிகவும் தவறாக இளஞ் சந்ததியினரால் தற்போது உச்சரிக்கப்படுவதை அதில் ஆர்வமுள்ள அனைவரும் சுட்டிக்காட்டி வருத்தப்படுகின்றனர். இப்படியே போனால் எதிர்காலத்தில் தமிழ் உருமாறி அழிந்துவிட வாய்ப்புகள் இருப்பதாகப் பலரும் வருத்தப்படுகின்றனர்.

இன்னும் நூறு வருடங்களுக்குள் தமிழ் இல்லாதொழிந்து வேறு ஒரு கலப்பு மொழி உருவாகிவிடும் என்றெல்லாம் யுனெஸ்கோ போன்ற நிறுவனங்கள் எச்சரித்திருக்கின்றன.

அறிவியலில் தமிழை வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பு திரு ஜெயக்குமார் போன்ற ஆர்வமிக்கவர்களிடமே உண்டு. அவரைப்போல மிகவும் கவனமாகப் படங்களைப்போட்டு தமிழில் விஞ்ஞான விளக்கங்களைத் தரும் ஆர்வமுள்ள அனைவரும் தமிழிலும் கவனஞ்செலுத்தினால் எதிர்காலத்தில் தமிழை அதன் இயல்புகுன்றாது பாதுகாக்க ஏதுவாகும். அந்த நோக்கிலேயே சில விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டன.

அதைவிட்டு ஆஹா! ஓஹோ! என்று பாராட்டி முதுகு சொறிந்து விஞ்ஞானச் செய்தியை எழுதியவரையும் தவறாக வழிநடத்தி, சொல்லவேண்டியதைச் சொல்பவர்களையும் இழிவுபடுத்தித் தமது பெருந்தன்மையை வெளிப்படுத்தத் துடிப்பதன் மூலம் எந்தப்பயனும் ஏற்படப் போவதில்லை. அது வளரும் அறிவியற் தமிழுக்குச் செய்யும் தீங்காகவே முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ தேவையில்லாத இடத்திலை வாயை குடுத்திட்டனோ?

ஓ தேவையில்லாத இடத்திலை வாயை குடுத்திட்டனோ?

அதைத்தானே மாமியும் அடிக்கடி சொல்லிறவா?

  • தொடங்கியவர்

வணக்கம் ! வணக்கம் !

கரு சொல்வது சரி, எழுத்துப்பிழைகளை தவிர்க வேண்டும், மிகவும் நன்றி கரு!

பிழை விடுது இயற்கை, பிழையை திருத்துவது கடமை.

பிழைகளுக்கான காரணம் பல : கவனயீனம், எழத்துமுறை, தமிழ் கேட்பது குறைவு, ...

கரு எடுத்துக்காட்டும் பிழைகள் எழுத்து முறையால் வரும் பிழைகள் !

தமிழை ரோமெழுத்துக்களால் எழுதும்பொது "ன ண ந - ல ள ழ - த ட - ர ற" என்ற எழுத்துகளை எழுதுவது அவ்வளவு சுலபமானதல்ல

தமிழை எழுத ஆங்கில உச்சரிப்பு தெரிய வேண்டும் !? வெட்கம்! வெட்கம்!

இந் நிலை ஆயிரம் ஆயிரம் தமிழர் அறிவு சிந்தனை பஃகிர்வுகளைத்தடுக்கின்றது.

--------

நிழலி "நிலம் என்று பூமியை குறிப்பதை.. முக்கியமாக விஞ்ஞான விளக்கங்களில் காணவில்லை.." என்று கூறுகறீர்கள்

இதோ இன்று இங்கு கண்டீர்கள் ! ஒரு படத்துடன்!!

யாராவது அதை எங்காவது ஒரு நாள் சொல்லாத படியால் உங்கள் கற்பனையோ சிந்தனையோ தவறானதாகாது !

மேலும்

"பூமி" (boomi) வடமொழிச்சொல்ல "புவி" தான் சரியான சொல் என்கின்றார்கள்!?

...

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

ஓ தேவையில்லாத இடத்திலை வாயை குடுத்திட்டனோ?

விடுங்க கு.சா. தமிழன் என்றாலே அப்படித்தான். ஒரு கொஞ்சம் தெரிஞ்சிட்டா போதும்.. !!!

ஜெயக்குமார்.. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

ஆனால் எனக்கொரு சந்தேகம்..

கிரகணத்தின் போது தோன்றும் நிழல்களை.. கருநிழல் (Umbra).. அயனிழல் (Penumbra) (நீங்கள் கருநிழலை.. நிழல் என்றும்.. அயனிழலை..அரிநிழல் என்றும் குறித்திருக்கிறீர்கள்.. எனக்கு குழப்பமாக இருக்கிறது எது சரியென்று) என்று வகைப்படுத்துவதாக நினைக்கிறேன். எதற்கும் நீங்கள் குறிப்பிட்டதை உறுதிப்படுத்தினீர்கள் என்றால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் எனக்கு இது நல்ல பாடம். ஏனெனில் இரண்டு சொற்களும் முடியும் போது (bra) என்று முடிவதால் எல்லோரும் இலகுவாக பாடமாக்கிக் கொண்டார்கள். எனக்கும் சொல்லித் தந்தாங்க.. எப்படி இலகுவாக பாடமாக்கிறதென்று. ஆனால் அதை இதற்கு மேலும் விபரிப்பது சரியல்ல..!

சுனாமி (சூணாமி) தமிழ் பதங்கள் அல்ல. நேரடி ஆங்கிலப் பதங்கள். கடற்கோள்.. ஆழிப்பேரலை என்பன சரியான தமிழ் பதங்கள் என்று நினைக்கிறேன்..!

வையகம் என்றும் புவியை.. பூமியைச் சொல்வார்கள். புவி தான் தமிழில் அறிவியலில் அதிகம் பாவிக்கப்படும் சொல்...!

அண்ணாமாரே தயவுசெய்து சரியா எழுதிப் போட்டு சண்டையைப் பிடியுங்கோ..! சரியானதை தெரிந்து கொள்வதில் எனக்கு ரெம்ப ஆர்வம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழில் வடமொழிச் சொற்கள் கலக்கப்பட்டுப் பாவனையிலிருப்பதால் மறைமலையடிகள்இ பருதிமாற் கலைஞர் போன்றோரின் தனித்தமிழ் இயக்கம் செயலற்றுப் போய்விட்டது. பாரதியார்இ சுவாமி விபுலானந்தர் போன்றோர் வடமொழிகலந்த மணிப்பிரவாள நடையைக் கையாண்டு இந்தக் கலப்பிற்கு அங்கீகாரம் அளித்துவிட்டனர். அவ்வகையில் தமிழிலும் பூமி என்னும் சொல் எப்போதோ ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. மேலும் புவி என்னும் சொல்லும் பூமியை ஒத்ததாகத் தமிழில் பாவனையிலுள்ளது.

சுனாமி போன்ற ஜப்பானியச் சொற்களையும்இ ஜப்பான் போன்ற ஆங்கிலச் சொற்களையும் நாம் பெரும்பாலோர் உச்சரிக்கும் ஆங்கில முறைமையிலேயே தமிழிலும் எழுதி வருகிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கூறலாமென்றால் தமிழில் அத்தகைய சொற்களை உள்வாங்கி எமது சொல்வளத்தைப் பெருக்குவதில் ஒரு ஒழுங்குமுறை அற்றுப்போய்விடும்.

தமிழில் பாவனையிலுள்ள பாமினி அல்லது அதையொத்த தொகுதி எழுத்துக்களில் தட்டச்சு செய்யும்போது உச்சரிப்புக் குறைபாடுகள் வருவதில்லை. தமிழ் உச்சரிப்பை நீங்கள் (திரு ஜெகுமார்!) ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்வதாற்தான் உங்களது சொற்கள் பிழையான உச்சரிப்போடு பதிவாகின்றன.

இத்தகைய முறையை சிலர் உருவாக்கிவிட்டார்கள். தமிழில் நேரடியாகவே தட்டச்சு செய்யக் கூடியதாக இப்போது விசைப்பலகைகள் வந்துவிட்டன. ஆகவே மிக இலகுவாகத் தட்டச்சுச் செய்யமுடிகின்றது. ஆங்கில விசைப்பலகையில் தமிழைத் தட்டுச்சு செய்யப்பயில்வதும் சிரமமானதல்ல. விரைவில் பழக்கமாகிவிடும். நான் அப்படித்தான் செய்கிறேன். கடும் விரைவாகச் செய்யமுடியாவிட்டாலும் எனது தேவைகளை அது நிறைவேற்றுகின்றது. நீங்களும் (திரு ஜெயக்குமார்!) முயன்று பாருங்கள். விரைவில் பழகிவிடுவீர்கள். உங்களால் நல்ல பல ஆக்கங்களும் தமிழில் கிடைக்கும்.

நெடுக்கால பாய்ந்து விழுந்து முதுகு சொறிவோர் கவனத்திற்கு! நான் வழமைபோல குறைகளைச் சுட்டிக்காட்டும் இழிவுக்குணங்கொண்ட தமிழனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். தங்கள் பெருந்தன்மை மிக்க பாராட்டும் பண்பாடு வாழ்க. தங்களால் தமிள் வாள்க.

Edited by karu

  • தொடங்கியவர்

Nedukkalapoovan, i m not a pandit, ok here we go ...

ஆலபனைகள் இன்றி நேரடியாக ...

"அரிநிழலில் நிற்காதே, வருத்தம் வரப்போகுது" என்று எனது பாட்டி அடிக்கடி கூறுவார்...

இக்கூற்றில்லிருந்து நான் இன்று விழங்கிக்கொள்வதாவது : அரை நிழல் --> அரிநிழல் =பாதி நிழல்

எனக்கு அகநாணூறை விளங்கிக்கொளும் ஆற்றலில்லை,

கீழ் காணும் இரண்டு வரிகளையும் யாராவது, அரிநிழல் என்ற சொல்லைப்பொறுத்தவைரயில் ஆய்ந்து தீர்ப்புக்கூற முடியுமானால் ... ?

யங்கல் யானை நீர்நசைக்கு அலமரச்,. சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல். ..

அலங்கல் உலவை அரிநிழல் அசைஇத், திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை, அரம்தின் ஊசித் திரள்நுதி அன்ன, திண்ணிலை எயிற்ற செந்நாய் ...

- அகநானுறு

கருநிழல் ? யாரவது வெள்ளையோ அல்லது சிவப்பு நிழலை எப்போதாவது கண்டீர்களா?!

அயனிழல் *?!§... ?

"ஆங்கிலத்தில் எனக்கு இது நல்ல பாடம். ஏனெனில் இரண்டு சொற்களும் முடியும் போது (bra) என்று முடிவதால் எல்லோரும் இலகுவாக பாடமாக்கிக் கொண்டார்கள்"

in tamil too!! (நிழல்), அரி(நிழல்) !!! so ?

சுனாமி (சூணாமி) தமிழ் பதங்கள் அல்ல பிழையான ஆங்கில உருபெயர்பு ! ஏன் பிழையானது? என்ன பிழையை தருகிறது?

Tsunami யின் சரியான உருபெயர்பு ஸுனாமி --> மீள் உருபெயர்பு sunami --> கூகிளில் தேடினால் கிடைக்கும் பெறுபேறு இங்கே பார்க

Tsunami யின் பிழையன உருபெயர்பு சுனாமி --> மீள் உருபெயர்பு chunami --> கூகிளில் தேடினால் கிடைக்கும் பெறுபேறு இங்கே பார்க

அன்நிய சொலுருபெயர்பை நிர்நயிக்கும் பொதுவான கோட்பாடுகளை உருவாக்க வேண்டியது அவசியம் !

ஜப்பானியரை போல தமிழரும் கடந்த கால்ஙகளில் பாரிய கடற் கொந்தளிப்புகளைக் கண்டார்கள் ஆகஃவே பழைய ஏடுகழளில் தேடிப்பாருங்கள் வேறு சொற்களிருக்கின்றனவா என்று ?...

(பாரிய) கடற் கொந்தளிப்பு = ஸுனாமி, சுனாமி (சூணாமி), கடற்கோள், ஆழிப்பேரலை ...

...

"வையகம் என்றும் புவியை.. பூமியைச் சொல்வார்கள். புவி தான் தமிழில் அறிவியலில் அதிகம் பாவிக்கப்படும் சொல்...!"

ஞாயிறு, திங்கள் ... சனி ... என்றழைத்தோம் ஆனால் நிலத்திற்கு மட்டும் பூமி (boomi) என்ற வடசொல்லை உபயோகிக்கிறோம் ஏன்?

...

நல்ல வெள்ளிக்கிழமை!

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

tse2009_global.jpg

Solar_eclipse_animate_(2009-Jul-22).gif

சூரிய கிரகணம் ஏன்? எப்படி? நிகழகிறது...

IMG6858-1247661779.png

Ce fichier provient de Wikimedia

Finsternis.jpg

பாம்பு எங்கே ...... ?

சூரிய கிரகணத்தின் போது ராகு காலம் வரும் .

அதே நேரம் சந்திரகிரகணும் வந்தால் மகா ஆபத்து .

ஒரு பாம்பால் சந்திரனையோ .... சூரியனையோ ஒரு முறை தான் விழுங்க முடியும் .

இரண்டையும் ஒன்றாக விழுங்கினால் பாம்புக்கு .... தொண்டையில் விக்கி .... விக்கல் வந்து விடும் .

  • தொடங்கியவர்

பாம்பு எங்கே ...... ?

சூரிய கிரகணத்தின் போது ராகு காலம் வரும் .

அதே நேரம் சந்திரகிரகணும் வந்தால் மகா ஆபத்து .

ஒரு பாம்பால் சந்திரனையோ .... சூரியனையோ ஒரு முறை தான் விழுங்க முடியும் .

இரண்டையும் ஒன்றாக விழுங்கினால் பாம்புக்கு .... தொண்டையில் விக்கி .... விக்கல் வந்து விடும் .

ஏன் என்ன பாவம் செய்தீர்கள்?

சந்திர கிரகணம் பவுர்ணமியின்போதும் சூரிய கிரகணம் அமாவாசையின் போதும் நிகழும். அத்துடன் 22டாம் திகதி வருவது சூரியகிரகணம்!

ஆனால் 05/08/09 23:00மணி போல் வருகிறது சந்திர கிரகணம், பாவம் செய்தவர்களுக்கு ராகு தோஷம் ஏற்படும் இதனால் அந்த ராகு பாம்பு அவரை பிடித்து முடமாக்க முயற்சிக்கும், ஆனால் கடவுளைப்பிரார்தித்தால், இந்த ராகு தோஷம் நீங்கும் என வடக்குப்புராணக்கதை கூறுகிறது!!

ஆனால் தமிழ் கடவுள் விருப்பு வெறுப்பற்றவர் !? ஹம்...

பாம்பின் வயிற்றில் சந்திரன் ?

IMG6858-1247874392.jpg

இந்த ஆண்டு இரண்டு சூரிய கிரகணமும் இரண்டு சந்திர கிரகணமும் ஏற்படுகின்றன.

கிரகண இலங்கை நேரம் (கிட்டத்தட்ட)

சூரிய கிரகணம் 22.07.2009 (ஆடி மாதம் 6-ந் தேதி), காலை 5.30மணிக்கு தொடங்கி, 7.15 மணிக்கு முடிகிறது.

சந்திரகிரகணம் 05.08.2009 (ஆடி 20-ந்தேதி), காலை 06.00-க்கு தொடங்கி, காலை 9.17-க்கு முடிகிறது. !!

சந்திரகிரகணம் 31.12.2009 (மார்கழி 16-ந்தேதி), இரவு 12.20-க்கு தொடங்கி, இரவு 1.25-க்கு முடிகிறது.

சூரிய கிரகணம் 15.01.2010 ( தை மாதம் 2-ந் தேதி) பகல் 11.20 மணிக்கு தொடங்கி மாலை 3.15 மணிக்கு முடிகிறது.

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என்ன பாவம் செய்தீர்கள்?

------

------

நான் தமிழனாய் பிறந்தது தான் பாவம் என நினைக்கின்றேன் .

  • தொடங்கியவர்

நான் தமிழனாய் பிறந்தது தான் பாவம் என நினைக்கின்றேன் .

அதை பரிசோதிப்பதற்கோர் அரிய சந்தர்பம் 05/08/09 23:00மணி போல் வருகிறது! தவறவிடாதீர்கள்

கிரகணத்தின் பலன்

நாட்டில் சாத்துக்கள் (சாமியார்கள்) பற்றிய தவறான கருத்துக்கள் உண்டாகும்.

ஆயுதம் ஏந்திய வீரர்களுக்கு அதனை பிரயோகிக்கும் நிலை ஏற்படும்.

பயிர் விளைச்சல் இருந்தாலும் விலை குறையாத நிலை உண்டாகும்.

மேலுமறிய

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

கருநிழல் ? யாரவது வெள்ளையோ அல்லது சிவப்பு நிழலை எப்போதாவது கண்டீர்களா?!

அயனிழல் *?!§... ?

என்ன நக்கலா..

நிழல் என்றாலே நிழல் தான். அப்புறம் என்ன.. அரி.. இப்படி நானும் பதிலுக்கு முட்டாள் தனமாகக் கேட்கலாம்.

கருநிழல் என்பது நிழலில் மையப்பகுதியில் ஏற்படும் Darkness பற்றி சொல்லப்படுகிறது. அதனைச் சுற்றிய சுற்றயல் நிழல் Darkness குறைவு என்பதால்.. அதன் அயனிழல் என்று குறிப்பதாக நினைக்கிறேன். பாடசாலையில் இப்படிக் குறித்துப் படித்த ஞாபகம்..! :lol:

அதைவிட்டிட்டு.. கருநிழல்.. வெள்ளை நிழல்.. சிவப்பு நிழல் என்று.. என்ன நக்கலோ. வேண்டாம். அப்புறம்.. நான் நக்கலடிக்க வெளிக்கிட்டன்.. இந்தப் பதிவை.. தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலையே வரும். :)

------------

கீழ்ப்படி செய்தியில் கருநிழல் என்ற பதம் இந்திய கோளரங்கச் செயலர் ஒருவரால் கூட பாவிக்கப்பட்டுள்ளது. அரிநிழல் என்ற பதம் பாவிக்கப்படவில்லை..!

இன்று நள்ளிரவு 11.35 மணிக்குத் தொடங்கி நாளை காலை 1.10 மணி வரை பகுதி சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம். இதுகுறித்து சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குனர் ப.ஐயம்பெருமாள் கூறியதாவது:-

சூரியன்-பூமி-சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரகிரகணம் நிகழ்கிறது. இன்று (7-ந் தேதி) நள்ளிரவு 11.35 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி காலை 1.10 மணி வரை பகுதி சந்திரகிரகணம் நிகழ உள்ளது.

அப்போது, சந்திரனின் ஒரு சிறு பகுதியில் பூமியின் கருநிழல் படிந்து செல்லும். இது பகுதி சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

வானில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த அற்புதம் நிகழ்வின்போது, பூமியின் கருநிழல் சந்திரனின் 19 சதவீத பகுதியை அதிகபட்ச கிரகணத்தின் போது மறைக்கும். இந்த சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். அப்படிப் பார்ப்பதால் எந்த பாதிப்பும் வராது.

ஆசியா கண்டத்தில் உள்ள அனைவரும் இந்த சந்திரகிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும். இந்தியா முழுவதும் நன்றாகத் தெரியும்.

செப்டம்பர் மாதத்தில் 2 கிரகணங்கள் வருகின்றன. செப்டம்பர் 7-ந் தேதி சந்திரகிரகணமும், 22-ந் தேதி கங்கண சூரிய கிரகணமும் வருகின்றன. கங்கண சூரியகிரகணம் இந்தியாவில் தெரியாது. இந்த கிரகணத்தின்போது சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்காது. அந்த நேரத்தில் சூரியனின் வெளிப்பகுதி ஒரு வளையம் போல கண்ணுக்கு புலனாகும். எனவே தான், இதனை கங்கண சூரிய கிரகணம் என்று சொல்கிறார்கள். இவëவாறு ஐயம்பெருமாள் கூறினார்.

http://ilakku.com/?p=731

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி (சூணாமி) தமிழ் பதங்கள் அல்ல பிழையான ஆங்கில உருபெயர்பு ! ஏன் பிழையானது? என்ன பிழையை தருகிறது?

Tsunami யின் சரியான உருபெயர்பு ஸுனாமி --> மீள் உருபெயர்பு sunami --> கூகிளில் தேடினால் கிடைக்கும் பெறுபேறு இங்கே பார்க

Tsunami யின் பிழையன உருபெயர்பு சுனாமி --> மீள் உருபெயர்பு chunami --> கூகிளில் தேடினால் கிடைக்கும் பெறுபேறு இங்கே பார்க

ஜப்பானியரை போல தமிழரும் கடந்த கால்ஙகளில் பாரிய கடற் கொந்தளிப்புகளைக் கண்டார்கள் ஆகஃவே பழைய ஏடுகழளில் தேடிப்பாருங்கள் வேறு சொற்களிருக்கின்றனவா என்று ?...

(பாரிய) கடற் கொந்தளிப்பு = ஸுனாமி, சுனாமி (சூணாமி), கடற்கோள், ஆழிப்பேரலை ...

...

"வையகம் என்றும் புவியை.. பூமியைச் சொல்வார்கள். புவி தான் தமிழில் அறிவியலில் அதிகம் பாவிக்கப்படும் சொல்...!"

ஞாயிறு, திங்கள் ... சனி ... என்றழைத்தோம் ஆனால் நிலத்திற்கு மட்டும் பூமி (boomi) என்ற வடசொல்லை உபயோகிக்கிறோம் ஏன்?

...

நல்ல வெள்ளிக்கிழமை!

சுனாமிக்கு கடற்கொந்தளிப்பு அல்ல அர்த்தம். கடற்கோள்.. ஆழிப்பேரலையே சரியாக அமையக் கூடிய காரணப்பதங்கள். கடல் கொந்தளிப்பு என்பது சாதாரணமாக சந்திரனின் ஈர்ப்பு மற்றும் புயற்சின்னங்கள் சார்ந்து ஏற்படக் கூடிய வற்றுப் பெருக்கோடு சம்பந்தப்பட்டது. அந்த கடலலைகளுக்கும் கடற்கோள் காரணமாக ஏற்படும் ஆழிப்பேரலைகளுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது.

அதனால் கடற்கொந்தளிப்பு என்பதை ஆழிப்பேரலையாக ஏற்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆழிப்பேரலையின் அலை தன்மை.. சாதாரண கடற்கொந்தளிப்பு அலைகளினதும் வேறுபட்டது. அந்த வேறுபாட்டை பதத்தில் புகுத்த வேண்டியது அவசியம்..!

ஆட்டுக்கும் மாட்டுக்கும் நாலு கால் என்பதற்காக மாட்டை ஆடு எனலாமா..???! :lol:

  • தொடங்கியவர்

IMG6858-1248192800.png

IMG6858-1248192850.png

  • தொடங்கியவர்

சுனாமிக்கு கடற்கொந்தளிப்பு அல்ல அர்த்தம். கடற்கோள்.. ஆழிப்பேரலையே சரியாக அமையக் கூடிய காரணப்பதங்கள். கடல் கொந்தளிப்பு என்பது சாதாரணமாக சந்திரனின் ஈர்ப்பு மற்றும் புயற்சின்னங்கள் சார்ந்து ஏற்படக் கூடிய வற்றுப் பெருக்கோடு சம்பந்தப்பட்டது. அந்த கடலலைகளுக்கும் கடற்கோள் காரணமாக ஏற்படும் ஆழிப்பேரலைகளுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது.

அதனால் கடற்கொந்தளிப்பு என்பதை ஆழிப்பேரலையாக ஏற்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆழிப்பேரலையின் அலை தன்மை.. சாதாரண கடற்கொந்தளிப்பு அலைகளினதும் வேறுபட்டது. அந்த வேறுபாட்டை பதத்தில் புகுத்த வேண்டியது அவசியம்..!

ஆட்டுக்கும் மாட்டுக்கும் நாலு கால் என்பதற்காக மாட்டை ஆடு எனலாமா..???! :icon_idea:

துறைமுகம் (விழுங்கும்) அலை

ஜப்பானிய மொழியில் 津 (த்சு) துறைமுகத்தையும் 波 (னாமி) அலையையும் குறிக்கும்

பென்னாம் பெரிய உப்புத்தடாகமும் (கடல்!) வானில் சுழன்றுகொண்டு சுற்றும் உருண்டை திண்மமும் (கோள்!)

ஒரு போதும் வட்டமாக உருளும் (ஆழி) பேரிய (பேர்) அலைகளுக்கு சமனாகாது !!.

மேலும்,

உலக மொழிகள் அனைத்தும் ஸுனாமி என்றுதான் இந்நிகழ்வை அழைக்கின்றன, அத்துடன் இச்சொல் எங்கள் கட்டுமரம் என்ற சொல்லைப் போல உலகம் விளங்கும் சொல்லாகியுள்ளது ஆஃகவே தமிழிலும் அபடியே அழைப்பதை விடுத்து தொல்காப்பியரையும் நாயன்மார்களையும் போல் தமிழில் யாரிற்கும்(1) விளங்காத வகையில் எழுதி, தமிழை ஒரு இறந்த மொழியாக்குவது ஏன்.

(1) - இடையன், மதவிலே குந்தியிருக்கும் சின்னத்தம்பி, ஊர்ரோரத்திலே வசிக்கும் பையன், தோட்டத்தில் கொழுந்தெடுக்கும் தொழிலாளி, ...

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

IMG6858-1248192800.png

IMG6858-1248192850.png

ஆக நிழல் அல்ல என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். அது அடர்நிழல்.. மற்றையது அரிநிழல் என்றாக வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

நான் நினைக்கிறேன்.. அடர்நிழலையே கருநிழல் என்றும் அழைக்கின்றனர். அரிநிழலையே அயனிழல் என்றும் அழைக்கின்றனர். அவை தவறல்ல. ஆனால் கருநிழலை.. அடர்நிழலை.. நிழல் என்பது தவறு..!

சுனாமி... ஆழிப்பேரலை என்பது சரி என்றே நினைக்கிறேன்.

ஆழி.. கடல்

பேரலை.. வழமையான அலைகளை விட பெரிய அலை..!

தமிழில் புதுச் சொற்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இன்றேல் தமிழ் மொழி நவீன அறிவியல் தோற்றுவிக்கும் புதிய சொல்லாடல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையே உருவாகும்.

ஆளாளுக்கு விரும்பின படி எழுதிக் கொண்டிருந்தால்.. மொழி வளம் பெறாது.. மாறாக வழக்கொழியும்..! :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

சுனாமி... ஆழிப்பேரலை என்பது சரி என்றே நினைக்கிறேன்.

ஆழி.. கடல் பேரலை.. வழமையான அலைகளை விட பெரிய அலை..!

ஆழி என்றால் நேரடியாக கடல் அல்ல அருத்தம்! சூழ்ந்த, வட்டமான, உருளும், சுழரும், ... என்பதே அருத்தம்

நான் நினைக்கிறேன்.. அடர்நிழலையே கருநிழல் என்றும் அழைக்கின்றனர். அரிநிழலையே அயனிழல் என்றும் அழைக்கின்றனர். அவை தவறல்ல. ஆனால் கருநிழலை.. அடர்நிழலை.. நிழல் என்பது தவறு..!

ஆனால் கருநிழல்...

உம்ககு நாக்காலடிக்க விரும்பாதலால் கூறவில்லை ...

முட்டையின் கருவில் ஒரு சிசு அந்த சிசுவிற்கொருநிழல் கருநிழலா !

நீர் சொல்லலும் கருநிழல் வந்து கரிநிழல் அல்லது கறுநிழலாக்ததான் இருக்க வேண்டும் ?

தமிழில் புதுச் சொற்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இன்றேல் தமிழ் மொழி நவீன அறிவியல் தோற்றுவிக்கும் புதிய சொல்லாடல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையே உருவாகும்.

ஆளாளுக்கு விரும்பின படி எழுதிக் கொண்டிருந்தால்.. மொழி வளம் பெறாது.. மாறாக வழக்கொழியும்..! :icon_idea:

தவறு பெரியதவறு!!

சொல்லை யாரும்மாக்கக்கூடியதாக விடவேண்டும், சரியான எல்லோரிற்கும் விழங்கக்கூடிய சொல்லு தானாகவே நீண்டகாலம் வாழுந்து வழர்ந்து பலவேறு இணைப்புச்சொற்களையும் தரும்...

ஆக நிழல் அல்ல என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். அது அடர்நிழல்.. மற்றையது அரிநிழல் என்றாக வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

நான் கூறவில்லை ஒரு பண்டிதர் கூறுகிறார் ...

முதலில் அகநிழல் புறநிழல் என்றார் கிரகணப்படத்தை பர்துவிட்டு

பின்ப பந்தினதும் பாட்டியின் மரத்தின் படத்தையும் சித்தரித்ததால்

அடர்நிழல் என்றும் அரிநிழல் என்றும் கூறினார்! ...

தமிழ் சொற்கள் ஆங்கில்த்தில் போல வறண்ட வரையறுப்புகு உட்படாதது, உட்படுத்தமுடியாது, நாங்கள் கார்டீசியர்(1) அல்ல !

(1) வைச்சா குடும்பி அடிச்சா மொட்டை

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசயம் தெரிந்தவர்கள் விவாதிக்கும்போது சுவாரசியமாகவும் பல தகவல்களை அறியக்கூடியதாகவும் உள்ளது.

இருந்தாலும் ஒருவரை "நீர்" என விளிப்பது படித்தவர்களுக்கு அழகல்ல.

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.