Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தோற்றது ஏன்?

Featured Replies

தயா, மக்கள் அப்படிச் செய்கின்றார்கள் என்றால் அவர்கள் ஆயுதம்தூக்கி சாவதற்கு தயாராக இல்லை என்பதுதானே அர்த்தம்? அல்லது புலிகள் என்று தாங்கள் இனம்காணப்படுவது தங்களுக்கு ஆபத்தானது என்பதால்தானே?

இப்போது பிரச்சனை என்ன என்றால் தலைவர், போராளிகள் செய்த தியாகங்களிற்கு இழுக்கு வந்துவிட்டது என்பது அல்ல. மாவீரர்கள் மாவீரர்களே. அவர்கள் போராட்டத்தை இவ்வளவுதூரம் வளர்த்துவிட்டு சென்று இருக்கின்றார்கள். ஆனால்.. இனிப்போகின்ற வழி மாவீரர்களை காரணம்காட்டியே அழிவுப்பாதையாக இருக்ககூடாது.

ஏன் தோல்வி வந்தது என்று ஆராய்வது தோற்றவர்களை வசைபாடுவதற்காக அல்ல. எங்கள் எல்லோருக்கும் மாவீரர்கள் உறவினர்களாக, நண்பர்களாக, அயலவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் ஓர் பெரிய அழிவு ஏற்பட்டால் அந்த அழிவு மீண்டும் எதிர்காலத்தில் வராதபடி சிந்தித்து செயலாற்றவேண்டும். இதற்கு மீள்பார்வை அவசியம். மீள்பார்வை என்று வரும்போது ஒவ்வொரு தவறுகளும் இனம்காணப்பட்டு அந்தத் தவறுகள் எதிர்காலத்தில் மீண்டும் வராதபடி திருத்தம் செய்யப்படவேண்டும்.

தலைவரும் சாதாரண மனிதனே. அவர் மட்டும்போராடி எப்படி தமிழீழம் கிடைக்கும் என்று கருத்து எழுதுகின்றார்கள். அப்படியானால்.. அந்த சாதாரண மனிதன் எப்படி சகல விடயங்களையும் தானே சுயமாக சிந்தித்து செயற்படமுடியும் என்று ஏன் சிந்திக்கின்றார்கள் இல்லை எம்மவர்கள்?

ஓர் நாடாக இருந்தால் ஒரு அரச தலைவராக இருந்தால் அவருக்கு ஆலோசனை கூறுவதற்கு என்று எத்தனை நூறு உளவியல், சமூக விஞ்ஞானிகள், அறிஞர் கூட்டங்கள் இருக்கும் தெரியுமா? ஆனால், தலைவர் சாதாரண மனிதன் அவரால் எல்லாம் செய்யமுடியாது என்று கூறுபவர்கள் தலைவருக்கும் பல்வேறு சிந்தனைகளை, ஆலோசனைகளை கூறுவதற்கு ஆட்கள் தேவை என்பதை ஏன் ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை?

எமது சமூகத்தில் பின்னூட்டங்கள் விரும்பப்படுகின்றனவா? இல்லையே! பின்னூட்டம் சொல்பவர்கள் மாற்றுக் கருத்தாளர்களாகவும், துரோகிகளாகவுமே அல்லவா முத்திரை குத்தப்படுகின்றார்கள்? ஒருவரின் சுயமான கருத்தையே சொல்லமுடியாதவாறு அடக்குமுறை செய்கின்ற எம்மவர் மத்தியில் எப்படி ஒருவன் தன்னை ஓர் புலியாக நினைப்பான்?

மேலே பார்த்தீர்கள்தானே, இங்கு கருத்து கூறும்போது ஒருவருக்கு இரத்த அழுத்தம்கூடி எனது கையை காலை எடுக்கப்போறன் என்று கொடுக்கு கட்டிவிட்டார். இப்படியானவர்கள் மத்தியில் வாழ்கின்ற நாங்கள் எப்படி எங்களை புலிகள் - இது எங்கள் போராட்டம் என்று சொல்லமுடியும்?

Edited by மாப்பிள்ளை

  • Replies 98
  • Views 9.9k
  • Created
  • Last Reply

Bond007, இதில் உள்ள இணைப்பை எனக்கும் அனுப்பியிருந்தார். இதை காவி செல்வது தான் இவர் வேலை. பிரபாகரன் வசை பாடுதல் தான் இவர் வேலை.

இவர் ஓர் துரோகியாக இருக்கலாமோ என்று நானும் சந்தேகப்பட்டு இருந்தேன். அதை உறுதிப்படுத்தியமைக்கு நன்றி. மவனே பொண்டு வாறண்டா பொறு எடுக்கிறன் உனக்கு பெண்டு. :icon_idea:

தயா, மக்கள் அப்படிச் செய்கின்றார்கள் என்றால் அவர்கள் ஆயுதம்தூக்கி சாவதற்கு தயாராக இல்லை என்பதுதானே அர்த்தம்? அல்லது புலிகள் என்று தாங்கள் இனம்காணப்படுவது தங்களுக்கு ஆபத்தானது என்பதால்தானே?

இழப்பு இல்லாமல் வாழ்க்கையில் நீங்கள் எதையும் அடைந்து விடுவதில்லை.... ( உங்களின் உடல் உழைப்பை இழக்காது பணத்தை கூட அடைய முடியாது)

ஒரு இனம் விடுதலை பெற வேண்டும் என்பது அதை தாங்கும் தலைவனுக்கு இருந்தால் மட்டும் போதுமானது அல்ல... அது ஒட்டு மொத்த மக்களின் உணர்விலும் வர வேண்டும்..

தனியே ஒரு தலைவன் பிரபாகரன் தூணாக தாங்கி கஸ்ரங்களை எல்லாம் களைந்து எமக்கு சுதந்திரம் வாங்கி தந்து இருக்க வேண்டும் அல்லது தர வேண்டும் எண்று நினைப்பது கயமை இல்லையா...??? அப்பட்டமான நயவஞ்சகம் இது.. தான் போனாலும் தனக்கு பின்னே தமிழ் மக்கள் வருவார்கள் எனும் நம்பிக்கையில் தான் தலைவர் ஆயுத போரையே தொடங்கினார்...

புலிகள் அமைப்பு எனக்கும் எனது குடும்பத்துக்கும் சுதந்திரம் வாங்கி தந்து இருக்க வேண்டும் எண்று நினைக்க புலிகள் ஒண்றும் நான் சம்பளம் கொடுக்கும் வேலைக்காறர்கள் இல்லையே...???

Edited by தயா

அதைத்தான் நானும் கேட்கின்றேன் தயா. எங்கள் சனம் ஆயுதம் தூக்கி சாவதற்கு தயாராக இருந்ததா? இல்லையே ஓர் குறிப்பிட்ட சதவீதம் தவிர மிகுதியானோர் ஓடித்தப்பத்தானே பார்த்தோம்? அதிலும் இயக்கத்தில் இணைந்தவர்கள் போரினால், சிறீ லங்கா அல்லது இந்திய இராணுவத்தினால் பாதிக்கப்பட்டதன் காரணமாகவே இணைந்துகொண்டார்கள்.

எனவே, சனங்கள் ஆயுதம்மூலம் சுதந்திரத்தை பெற போதிய ஆதரவு தராவிட்டால் அரசியல்ரீதியாக ஏதாவது முயற்சி செய்யவேண்டும்.

தவிர, புலிகளின் நிருவாகத்தின் கீழ் மக்கள் இருந்தார்களே ஒழிய மக்களின் நிருவாகத்தின்கீழ் புலிகள் இருக்கவில்லைதானே? அப்படியானால்.. நிருவகிப்பவன் வேலைக்காரனா? நிருவாகத்தின்கீழ் இருப்பவர்கள் வேலைக்காரர்களா?

புலிகள் அமைப்பு ஏகோபித்த அதிகாரங்களை கொண்ட அரச இயந்திரமாக இருந்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த இயந்திரத்திற்கு மக்கள் ஆதரவு - அந்த இயந்திரம் வேலை செய்வதற்கு எரிபொருள் காணாது என்றால் அந்த எரிபொருளை கொடுக்க மக்கள் முன்வரவில்லை என்றால் அது நிருவாகத்தின் தவறா அல்லது நிருவாகத்தின்கீழ் இருந்தவர்களின் தவறா?

எனது வாதம் என்ன என்றால் மக்கள் எவ்வளவு ஆதரவு தருகின்றார்களோ அதன் அடிப்படையில் முன்பு செயற்படாவிட்டாலும் இனியாவது செயற்படவேண்டும்.

அடியடா பிடியடா என்று நிறைவேற்ற முடியாத பெரிய திட்டங்களை தீட்டிவிட்டு பின்னர் மக்கள் ஆதரவு குறைந்த நிலையில் அழிவைச் சந்திக்கக்கூடாது.

படிப்படியாக முன்னேறலாம்.

இழப்பு இல்லாமல் சுதந்திரம் கிடைக்காது என்பதற்காக தேவையிலாமல் இழப்புக்களை சந்திக்கலாமா?

வன்னியில் இருந்த சனங்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு புலிகளுக்கு இருந்தது. அவர்கள் அந்தப் பொறுப்பில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்று இருகின்றார்கள்?

இனியாவது ஒரு காலத்தில் ஆயுதப்போராட்டம் ஏற்பட்டால் சனங்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். சனங்களை சாகடிச்சுக்கொண்டு சதைப்பிண்டங்களின் மேல் பிணக்குவியல்களின் மேல் ஏறி நின்று சுதந்திரக்கொடி ஏற்றி சுடுகாட்டில் மக்கள் வாழ்வதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

இங்கு புலிகள் இயக்கம் செயலிழந்து விட்டது என்பதற்காக பலர் கவலைப்படுகின்றார்களே ஒழிய.. மக்கள் அழிவைச் சந்தித்ததற்காக ஒருவரும் கவலைபடக் காண இல்லை.

நாங்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு புலிகளின் தலமை தப்பினால் போதும் சனம் செத்தாலும் பரவாயில்லை என்று நினைப்பது எவ்வளவு நயவஞ்சகமானது தயா?

Edited by மாப்பிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்

1.புலிகள் உலக அரசியல் நீரோட்டத்துக்கு ஏற்ப தம்மை தயார்படுத்தி கொள்ளாமை.

2.மிக நீண்ட காலமாக நடைபெற்ற போராட்டத்தால் மக்கள் பொறுமை இழந்து விட்டார்கள்.

3. மக்கள் அரசியல் மயப்படுத்தப்படாமையால் போராட்டம் பற்றிய பூரண விளக்கமின்மை. உ+மாக புலிகள் தமிழீழத்தை பெற்று தருவார்கள் என்று விட்டு தாம் ஒதுங்கி கொண்டமை.

4. குறிப்பிட்ட சதத்துக்கு மேலான மக்கள் எந்த வித பங்களிப்பும் செய்யாமல் பார்வையாளர்களாக இருந்தமை. இந்த நிலையில் அரசின் படைகளையும் எதிர்கொண்டு அதே நேரம் மக்களையும் காப்பது என்பது சிறிய புலிகளின் படையால் (அரச படையுடன் ஒப்பிடும் போது) மிகவும் கடினமானது.

5. புலிகளின் அசாதாரண இராணுவ வளர்ச்சி வேறு நாடுகளில் உள்ள போராடும் இனங்களுக்கு உ+மாக இருக்க கூடாது என்பதில் மேற்குலகம் மிகவும் நரித்தந்திரமாக செயற்பட்டது. செயற்படுகிறது.

6.போராட்டம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை எமக்கு நேச சக்திகளாக எந்த நாட்டையும் உருவாக்கவில்லை. ஒரு விடுதலை இயக்கம் கூட எம்மை இனம் காணவில்லை.

7.வெளிநாடுகளில் வாழும் நாம் கடைசி 3 மாதகாலமாக செய்த வெகுஜன போராட்டங்களை கடந்த 30 வருடத்தில் செய்யாமை.(ஆங்காங்கே சில பொங்கு தமிழ் நிகழ்வுகள் தவிர)

8.இந்தியா தொடக்கம் மேற்குலக நாடுகள் எம்மை பயங்கரவாதிகள் பட்டியலில் இட்டமை.

9. ஏனைய இயக்கங்களும் , புலிகளில் இருந்து பிரிந்தவர்களும் அரசுடன் சேர்ந்து புலிகளையும் தமிழ் மக்களையும் காட்டி கொடுத்தமை.

10. அரசின் பொய் பிரச்சாரத்துக்கு மேற்குலக ஊடகங்கள் ஒத்து ஊதியமை. எம்மில் பலர் வெளிநாடுகளில் இருந்தும் ஒரு ஊடகத்தை ஆரம்பித்து ( அல்ஜஜீரா போல்) அரசின் பொய் முகத்தை கிழிக்க முயலாமை.

11.எமது ஊடகங்கள் வீர வசனம் பேசி மக்களை உசுப்பேத்தியமை.

12. விமான எதிர்ப்பு ஏவுகணைகள் , இன்னும் பல அதி நவீன ஆயுதங்கள் புலிகளுக்கு கிடைக்காமல் போனது. இதனால் வி.புலிகள் பல தற்கொலை தாக்குதல்கள் மேற்கொண்டு அரச படைகளை நிர்மூலமாக்க வேண்டி இருந்தது. இதனால் மிக மிக சிறந்த போராளிகளை இழக்க நேரிட்டது.

13.புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பிரச்சார ரீதியாகவோ, பண ரீதியாகவோ பங்களிக்காமல் வி.போராட்டத்தை பிரபாகரனை ஜேம்ஸ் பொண்டாகவும், விடுதலை போராட்டத்தை ஜேம்ஸ் பொண்ட் எல்லாம் செய்து நல்ல முடிவை கொடுப்பார் என சுயநலவாதிகளாக செயற்பட்டமை.

14.வி.புலிகளை சாட்டி பணத்தை சேர்த்து தமது பாக்கட்டுக்களில் போட்டவர்கள்.போடுகிறவர்கள்.

15.ஓட்டு மொத்த தமிழ் போராளிகளை புலிகளால் உள்வாங்காமல் போனது. விடுதலைக்காக போராட புறப்பட்ட போராளிகளை நிச்சயமாக புலிகள் உள்வாங்கி இருக்க வேண்டும்.தமிழர்களுக்கு எதிரான தலைமைகள் தானாகவே காணாமல் போயிருக்கும்.

16."பலாலி அடிக்க போறாக்களாம், தள்ளாடி அடிக்க போறாங்களாம் என்று அரச படைகளுக்கு மறைமுகமாக உதவியமை.

17.சிங்கள அரசின் தமிழர்களுக்கு எதிரான பிரச்சார போரில் தமிழ் மக்கள் தமக்கு தெரிந்தும் தெரியாமலும் பங்கெடுத்து வி.புலிகளை வி.போராளிகளில் இருந்து பயங்கரவாதிகளாக மேற்குலக்குக்கு காட்டியமை.

18.அரசியல் தெளிவின்மையால் போராளிகள் பிரதேசவாதம் , தமிழ் மக்களையே துன்புறுத்தல் என்ற சிறு வட்டத்துக்குள் அடக்கப்பட்டமை.

19.வி.புலிகள் பயங்கரவாதிகள் என்ற நிலைக்கு பல நாடுகளால் முத்திரை குத்தப்பட்ட பின்னரும் அதற்கு எதிராக வெகுஜன ரீதியாக போராடி வி.புலிகளை வி.போராளிகளாக நிறுவ வெளிநாடுகளில் வாழும் மக்களால் போராட முடியாமை.

20.தமிழ் நாட்டின் சுயநலவாத அரசியல் வாதிகள்.

21.தமிழ் நாட்டு ஊடகங்கள் எமது அவலங்களை தமிழ் நாடு மக்களுக்கு வெளிப்படுத்தாமை.

22.சோனியா தமது கணவரின் இறப்புக்கு ஓட்டு மொத்த தமிழ் மக்களை பழிவாங்கியமை.

23.தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் ஈழ தமிழர்களின் போராட்டத்தை தமது அரசியல் வாழ்வுக்காக பயன்படுத்தியமை.இறுதியில் காலை வாரியமை. உ+ம்: திருமாவளவன்

24. யாழ் களம் உட்பட பல தளங்களில் தாம் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் என்று கூறி விட்டு தருணம் பார்த்து நச்சு செய்திகளை, கருத்துக்களை வழங்கி மக்களை குழப்புபவர்கள்.குறிப்பாக யாழைல் பல காலம் கருத்து எழுதாமல் இருந்து விட்டு திடீரென நஞ்சை அள்ளி விதைப்பவர்கள், புதிதாக தாம் இணைபவர்கள் போல இணையும் பல பழைய உறுப்பினர்கள் தருணம் பார்த்து தமது துரோகத்தனங்களை காட்ட முயல்கிறார்கள்.

யாவும் அறிவோம். மழைக்கால் இருட்டு என்றாலும் மந்தி கொப்பிழக்க பாயாது.

Edited by nunavilan

மேல நீங்கள் சொன்ன காரணங்கள் எல்லாம் reasonableஆய் இருக்கிது நுணாவிலான். ஆனால் இது மாத்திரம் விளங்க இல்லை.

மரக்கால் இருட்டு என்றாலும் மந்தி கொப்பிழக்க பாயாது.

  • கருத்துக்கள உறவுகள்

மரக்கால் இருட்டு என்றாலும் மந்தி கொப்பிழக்க பாயாது.

என்றால் உண்மையான உணர்வுள்ள மக்கள் எதற்கும் அடிமையாக மாட்டார்கள் என்ற தொனியில் கூறியுள்ளேன்.

நாங்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகிச்சே எங்கட ஒற்றுமையின்மையை வெளிப்படுத்துறம். எங்கட மக்களின் அவலங்களையும்,

துயரங்களையும் நிறுத்த முயலாம அல்லது அதுக்கான வழிவகைகள பற்றி

விவாதிக்காம புலியள் தோற்றுவிட்டினமாம் அதுக்கு யார்யார் காரணம் எண்டு

அலம்பிக்கொண்டு இருந்தா அவலப்படுகிற மக்களுக்கு செய்யிற மிகப்பெரிய

துரோகம். இப்ப உடனடித் தேவை அதுதான்.

[b]புத்தரின் போதனைகளில் அசோகருக்கு அதிகம் பிடித்தது இதுதான்: 'ஒரு யுத்தத்தில் தோற்றவர்களை விட வென்றவர்கள்தான் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்!'

ஆனா இங்க யுத்தத்தில் தோற்றவர்களும் (போராட்டத்தில அல்ல அது தொடரும்) அதே நிலமையில?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுனாவிலான் தயா ,சுகன் ,மாப்பிள்ளை கருத்துக்கள் நன்றாக உள்ளன /ஆக்கபூர்வமான ஆய்வுகள் தேவை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிளை சொல்வதை நான் இப்படி புரிந்து கொள்கிறேன்..

இந்தப்போராட்டம் மக்களுக்காக...

ஆனால் அந்தமாதிரியான ஒரு மக்களுக்கான போராட்டத்தில்.. மக்களுடைய ஆதரவு இல்லையென்றால்..

பிறகெதற்கு அந்தப்போராட்டம்..

(ஈழ மொத்தசனத்தொகையில் ஆயுதம் ஏந்தியவர்கள்.. ஒன்றரை வீதமும் வரார்.. ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் 25 வீதம். ஆக உணர்ந்து கொள்ளுங்கள். ஆயுதப்போராட்டத்திற்கு நாம் எந்தளவு தயாராயிருந்தோம் என்று..? )

ஆக.. மக்கள் தயாரில்லாத ஒரு போராட்டத்தை.. ஏன் புலிகள் நடாத்த வேண்டும்.. ?

எங்களுக்கு ஒரு பழக்கமிருக்கு.. அதெங்கட சமூக மனநிலையா இருக்கலாம். ஒராளிட்ட பொறுப்பை கொடுத்திட்டு.. தள்ளிநின்று விளைச்சலைப்பாக்கிறது.. இது காணியை குத்தகைக்கு கொடுக்கப்பயன்படலாமே தவிர.. போராட்டத்திற்கு அல்ல..

என்னளவில்.. தலைவர்.. இந்தமாதிரியான மக்களின்.. தயாரற்ற மனநிலையை இடையில் புரிந்து கொண்டு.. இந்த சனத்தை நம்பி எதையும் செய்யேலாது என்பதை உணர்ந்து.. இடையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டுபோயிருந்தால் கூட

அவரில் குறை காண ஏதுமிருந்திருக்காது.

புலிகள் தோற்கவில்லை .

ஏன் ஈழத்தமிழரின் விடுதலை தோற்றது என்று கேளுங்கள்?

இதற்கு விடை ஒவ்வொரு தமிழர் மனதில் இருந்தும் வரும்.

அதைத்தான் நானும் கேட்கின்றேன் தயா. எங்கள் சனம் ஆயுதம் தூக்கி சாவதற்கு தயாராக இருந்ததா? இல்லையே ஓர் குறிப்பிட்ட சதவீதம் தவிர மிகுதியானோர் ஓடித்தப்பத்தானே பார்த்தோம்? அதிலும் இயக்கத்தில் இணைந்தவர்கள் போரினால், சிறீ லங்கா அல்லது இந்திய இராணுவத்தினால் பாதிக்கப்பட்டதன் காரணமாகவே இணைந்துகொண்டார்கள்.

எனவே, சனங்கள் ஆயுதம்மூலம் சுதந்திரத்தை பெற போதிய ஆதரவு தராவிட்டால் அரசியல்ரீதியாக ஏதாவது முயற்சி செய்யவேண்டும்.

............

................

நாங்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு புலிகளின் தலமை தப்பினால் போதும் சனம் செத்தாலும் பரவாயில்லை என்று நினைப்பது எவ்வளவு நயவஞ்சகமானது தயா?

ஆயுதம் தூக்க தயார் இல்லாத இனம் எண்றால், அந்த இனம் அந்த ஆயுத போராட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து இருக்க வேண்டும்... புலிகள் ஒண்றும் தான் தோண்றிகளாக வளர்ந்து விடவில்லை...

ஆயுத போராட்டத்துக்கு மக்கள் ஆதரவை கொடுக்கவில்லை எண்றால் இந்திய இராணுவம் வந்து துன்புறுத்திய காலங்களிலேயே புலிகளை முற்று முழுதாக அழிக்க பட்டு இருக்க வேண்டும்... ஆனால் அப்படி நிகழவில்லை... மக்கள் ஒரு அரை குறையான மன நிலையில் இருந்து காட்டியும் கொடுத்தார்கள் , சாப்பாடும் கொடுத்து காப்பாற்றினார்கள்...

புலிகள் என்பவர்கள் யாரும் வானத்தில் இருந்து குதித்து வந்துவிடவில்லை.. தமிழன் யாரோ பெத்த பிள்ளைகள்தான் புலிகள்... புலிகளுக்கு, தங்களுக்கு பின்னே தமிழர்கள் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கையை தமிழர் கொடுத்து கெடுத்ததை நயவஞ்சகமாக நீங்கள் பார்க்கவில்லை போலும்...

புலிகள் வான் தாக்குதல் நடத்தினால் மகிழ்ந்து போவதுக்கு மட்டும் தமிழனாக இருந்த பலர், போர் கடுமையாக வந்த போது ஓடி பதுங்கி ஆதரவை கொடுக்க முன் வர வில்லையே...

தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் எங்களுக்கு தமிழீழம் வேண்டும் எண்று பொங்கு தமிழ் நடத்தி புலிகளுக்குமாக சேர்த்துதானே செய்திகளை கொடுத்தார்கள்... அப்படி செய்திகளை திரண்டு சொன்னவர்கள் அவர்களின் பின்னல் நிக்க மாட்டோம் எனும் செய்தியை சொல்ல பொங்குதமிழ் நிகள்வுகளை நடாத்தாமல், அங்கு போகமல் விட்டு இருக்கலேமே... அதை புலிகள் புரிந்து கொள்ளாமலா போய் இருப்பார்கள்...

இப்படி எல்லாவகை நயவஞ்சகத்தையும் புலிகளை நோக்கி காட்டிய தமிழர்கள் தாங்கள் தப்பித்து கொள்வதுக்காக புலிகளை பலியாக்குவதை எப்படி நல்ல செயலாக கொள்ள முடிகிறது உங்களால்...??

தமிழரை காப்பது புலிகள் தங்களின் கடமையாக கொண்டு இருந்தார்கள்... ஆனால் அவர்களுக்கு துன்பம் வரும் போது அவர்களை காப்பதும் உதவுவதும் தமிழரின் கடமை இல்லை என்பது போலவும் மக்கள் மட்டுமே காக்க பட வேண்டியவர்கள் என்பது போலவும் நீங்கள் சொல்வது நியாயமானதா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்

தங்களது 24 காரணங்களும் உண்மைதான்

தொடர்ந்து எழுதுங்கள்

எமக்குள் இப்படியான கருத்துக்களை ஆராய்வது இன்றைய காலத்தின் கட்டாயம்

புலிகள் தோற்கவில்லை .

ஏன் ஈழத்தமிழரின் விடுதலை தோற்றது என்று கேளுங்கள்?

இதற்கு விடை ஒவ்வொரு தமிழர் மனதில் இருந்தும் வரும்.

இதற்கு விடையை சொல்ல பலருக்கும் அவமானமாக இருக்கலாம்... ஆதலால் புலிகள், தமிழ் மக்கள் எண்று பிரிவினை பேசுகிறார்கள்... புலிகளின் தோல்வி புலிகள் போர், புலிகளின் பிள்ளைகள், புலிகளின் தளபதிகள், புலிகளின் குடும்பம் இப்படிதான் பலரும் அழைக்கிறார்கள், அழைத்தார்கள்.....

அது எங்களின் தலைமை, எங்களின் தளபதிகள், எங்களின் பிள்ளைகள் எனும் எண்ணம் தமிழனுக்கு ஏற்பட்டு இருக்க இல்லை... அப்படி இருந்து இருந்தால் நாங்கள் எப்போதோ விடுதலை அடைய முயன்று இருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு விடையை சொல்ல பலருக்கும் அவமானமாக இருக்கலாம்... ஆதலால் புலிகள், தமிழ் மக்கள் எண்று பிரிவினை பேசுகிறார்கள்... புலிகளின் தோல்வி புலிகள் போர், புலிகளின் பிள்ளைகள், புலிகளின் தளபதிகள், புலிகளின் குடும்பம் இப்படிதான் பலரும் அழைக்கிறார்கள், அழைத்தார்கள்.....

அது எங்களின் தலைமை, எங்களின் தளபதிகள், எங்களின் பிள்ளைகள் எனும் எண்ணம் தமிழனுக்கு ஏற்பட்டு இருக்க இல்லை... அப்படி இருந்து இருந்தால் நாங்கள் எப்போதோ விடுதலை அடைய முயன்று இருக்கலாம்...

உண்மைதான்

எங்கட பெடியள் என்ற பதம் ஆரம்பத்தில் இருந்தது

அது எப்போ மாற ஆரம்பித்தது????

அதனையும் ஆராய்வது நல்லது..

இப்போ வதைமுகாம்களில் வாடும் தமிழனை மீட்க என்ன செய்யலாம் என்று ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு....

புலிகள் ஏன் தோற்றார்கள் என்ற ஆராய்ச்சி தேவையற்றது.....

புலிகள் தோற்க வெளி நாடு களில் வாழும் நீங்களும் முக்கிய காரணம்....

இந்தப்போராட்டம் மக்களுக்காக...

ஆனால் அந்தமாதிரியான ஒரு மக்களுக்கான போராட்டத்தில்.. மக்களுடைய ஆதரவு இல்லையென்றால்..

பிறகெதற்கு அந்தப்போராட்டம்..

(ஈழ மொத்தசனத்தொகையில் ஆயுதம் ஏந்தியவர்கள்.. ஒன்றரை வீதமும் வரார்.. ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் 25 வீதம். ஆக உணர்ந்து கொள்ளுங்கள். ஆயுதப்போராட்டத்திற்கு நாம் எந்தளவு தயாராயிருந்தோம் என்று..? )

ஆக.. மக்கள் தயாரில்லாத ஒரு போராட்டத்தை.. ஏன் புலிகள் நடாத்த வேண்டும்.. ?

காவடி இது இன்னமும் சற்று ஆழமாய் சிந்திக்கவேண்டிய கருத்து. மக்கள் ஆயுதம் தூக்கி சாவதற்கு பின் நின்றார்களே தவிர அரசியல் ரீதியான போராட்டத்திற்கு அமோக ஆதரவு கொடுத்தார்கள்.

திலீபன் அண்ணா அன்று நல்லூர் வீதியில் தன்னை வருத்திக்கொண்டு இருந்தபோது அலை அலையாக மக்கள்கூட்டம் மோதியது. ஆனால்.. அதே மக்கள் கூட்டம் ஆயுதம் ஏந்துவதற்கு மட்டும் முன்வரவில்லை.

அண்மைக் காலங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் இலட்சம் இலட்சமாக மக்கள்கூட்டம் அலைமோதியது. ஆனால்... கொஞ்சம் சட்டத்தை மீறி வீதிகளை மறித்து போராட்டம் சற்று வன்முறை ரீதியாக மாறியதும் சனங்களின் வருகை குறைந்துவிட்டது.

இதில் இருந்து தெரிவது என்ன? எங்கள் சனம் - அதாவது நாங்கள் ஓர் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே எங்களை வருத்திக்கொள்ள, குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே riskஎடுத்துக்கொள்ள ஆயத்தமாய் இருக்கின்றோம்.

எனவே, இப்படியான மனநிலையை புலிகள் அறிந்து அதற்கு ஏற்றபடி போராட்ட வடிவங்களை மாற்றி இருக்கலாம். ஆனால் கடைசியில் நடந்தது என்ன?

30 வருடங்கள் போராடி கடைசி அழிவு நடக்கின்றநேரத்திலேயே புலிகள்கூட ஆயுதப்போராட்டத்தைவிட மக்கள் வீதிகளுக்கு இறங்கி செய்கின்ற போராட்டம் எவ்வளவு வலிமையானது என்பதை அறிந்துகொண்டார்கள். கடைசியில் சூசை அண்ணா தனது கடைசி அறிவிப்பில் என்ன சொல்லி இருந்தார்? இது எதைக்குறிக்கின்றது? எங்களால் ஆயுதங்கள் மூலம் ஒன்றும் செய்யமுடியவில்லை. நீங்கள் அகிம்சை வழியில் போராடி எங்களை மக்களை காப்பாற்றுங்கள் என்பதே. அதாவது வெறும் ஆயுதம் ரீதியான போராட்டத்தைவிட மக்களின் அகிம்சை போராட்டம் வலிமையானது என்பதை உணர்வதற்கு 30 வருடங்கள் எடுத்து இருக்கின்றது.

மக்கள் எதற்கு அதிக ஆதரவு தருகின்றார்களோ அதன் வழியில் போராட்டத்தை மேற்கொள்வதே முழு மக்கள் சக்தியும் பயன்படுத்தப்படுவதற்கு உதவும். புலிகள் இவ்வளவு காலங்களில் எப்போதாவது மக்களின் அபிப்பிராயம் கேட்டு கருத்துக்கணிப்பு வைத்து இருக்கின்றார்களா? ஏன் இல்லை? புலிகள் தங்கள் வழியில் மக்கள் வரவேண்டும் என்று நினைத்தார்களே ஒழிய மக்களின் விருப்பம் அறிந்து செயற்படவில்லை, மக்களின் விருப்பத்தை அறிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை.

அப்படியானால் நீங்கள் கேட்கலாம். அப்ப ஏன் நீங்கள் இவ்வளவு காலமும் புலிகளுக்கு ஆதரவு கொடுத்து ஆகா ஓகோ என்று பாராட்டி கருத்துக்கள் எல்லாம் சொன்னீங்கள் என்று.

இதை எப்படி விளக்கலாம் என்றால் உறவு நிலை. பக்கத்துவீட்டுக்காரன் சரியாக ஒரு விசயத்தை செய்தாலும் அவன் எதிரியாக இருக்கின்ற ஒரு நிலையில ஆனால்.. ஒரு வீட்டுக்குள்ள இருக்கின்ற என்ற அண்ணன் தவறாக ஒருவிடயம் செய்தாலும்.. இப்படியான சூழ்நிலையில நான் எப்பவும் என்ற அண்ணன் பக்கம்தான் நிப்பன். ஏன் என்றால் அவன் பிழை செய்தாலும் அவன் எனக்கு அண்ணன். பக்கத்துவீட்டுக்காரன் யாரோ முன்பின் தெரியாதவன்.

ஆனால்.. இப்போது வாய்திறந்து விமர்சனம் செய்யவேண்டி இருக்கின்றது. ஏன் என்றால் நாளைக்கு இப்போது நடந்ததைவிடவும் மோசமான அழிவுகள் எங்களுக்கு வரக்கூடாது. இப்போது எடுக்கப்படுகின்ற பிழையான முடிவுகளால் பாதிக்கப்பட்டு அழிவைச் சந்திக்கப்போவது இன்னும் 30 வருடங்களின் பின்னர் வாழப்போகும் எங்கள் குழந்தைகள் என்பதை கவனத்தில எடுக்கவேண்டி இருக்கிது.

மக்கள் புலிகளுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அதை மக்களின் மனநிலை அறிந்து அதற்கு ஏற்றவகையில் புலிகள் சரியாக பயன்படுத்திக்கொள்ள செயற்பட தவறிவிட்டார்கள்.

இனியாவது மக்களுக்கு இருக்கின்ற Limitationsஐ அறிந்து அதன் அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும். தாங்கள் - தனிநபர்கள் - தங்கள் குடும்பம் ஆயுதம் தூக்கிறது என்பது பெரும்பான்மை தமிழ் மக்களின் Limitationsக்கு அப்பால்பட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஆனால்.. இல்லையென்று நீங்கள் ஆயுதபோராட்டமே முடிவு என்று தீர்மானித்தால் - பெரும்பான்மை தமிழ்மக்களின் ஆதரவை பெறமுடியும் (மேலே கூறிய உறவுநிலையின் அடிப்படையில்). ஆனால் பெரும்பான்மை தமிழ்மக்களின் பங்களிப்பை பெறமுடியாது. அதாவது அவர்கள் - தனிநபர்கள் தாங்கள் ஆயுதம் ஏந்தி சாவதற்கு முன்வரமாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் ஆயுதம் ஏந்தி சாகும்போது ஆதரவு கொடுப்பார்கள்.

தமிழரை காப்பது புலிகள் தங்களின் கடமையாக கொண்டு இருந்தார்கள்... ஆனால் அவர்களுக்கு துன்பம் வரும் போது அவர்களை காப்பதும் உதவுவதும் தமிழரின் கடமை இல்லை என்பது போலவும் மக்கள் மட்டுமே காக்க பட வேண்டியவர்கள் என்பது போலவும் நீங்கள் சொல்வது நியாயமானதா...??

அதாவது புலிகளை எப்படி காப்பாற்றி இருக்கலாம் என்று சொல்லுறீங்கள்? சர்வதேச ஊடகங்கள் அனைத்துமே தாயக மக்களை புலிகள் மனிதக்கேடயங்களாக வைத்து இருக்கின்றார்கள் என்று அப்போது சொன்னார்கள். நாங்கள் மக்களை காப்பாற்ற தெருவில் இறங்கினோமே தவிர புலிகளை காப்பாற்ற தெருவில் இறங்கி போராட்டம் செய்யவில்லை. அப்படி செய்து இருந்தால் சர்வதேசம் கைகொட்டி சிரித்து இருக்கும். ஏன் என்றால் புலிகள் ஆயுதங்கள் மூலம் கடைசிவரை தங்களை காப்பாற்றிக்கொள்வார்கள் என்று நாங்கள் எல்லோரும் நம்பி இருந்தோம்.

ஆனால்... பக்கத்துவீட்டு பெடியனுக்கு அடிச்சுப்போட்டு பிறகு அவன் எங்களுக்கு அடிக்கவர நாங்கள் எங்கண்ட அம்மாவிண்ட சீலைக்கு பின்னால ஓடிப்போய் ஒளியிறமாதிரி ஆயுதம்தூக்கி அடிபட்டுப்போட்டு கடைசியில மக்களுக்கு பின்னால போய் மக்களோட மக்களாய் நிலை எடுக்கிறது என்றால் பிறகு இந்த ஆயுதப்போராட்டம் மூலம் புலிகளால் சாதிக்கப்பட்டது என்ன?

கடைசிவரை.. இளந்திரையன் அண்ணாவிட்ட அறிக்கையிலும்... நடேசன் அண்ணாவிட்ட அறிக்கையிலும் கூட நாங்கள் ஆயுதங்களை கைவிடமுடியாது, இந்த ஆயுதங்களே எங்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு என்று புலிகள் கூறி இருந்தார்கள். ஆனால் மக்களை காப்பாற்ற முடியாதுபோனாலும் அந்த ஆயுதங்கள் மூலம் அவர்களால் தங்களைக்கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் வரலாறு.

இதற்கு விடையை சொல்ல பலருக்கும் அவமானமாக இருக்கலாம்... ஆதலால் புலிகள், தமிழ் மக்கள் எண்று பிரிவினை பேசுகிறார்கள்... புலிகளின் தோல்வி புலிகள் போர், புலிகளின் பிள்ளைகள், புலிகளின் தளபதிகள், புலிகளின் குடும்பம் இப்படிதான் பலரும் அழைக்கிறார்கள், அழைத்தார்கள்.....

அது எங்களின் தலைமை, எங்களின் தளபதிகள், எங்களின் பிள்ளைகள் எனும் எண்ணம் தமிழனுக்கு ஏற்பட்டு இருக்க இல்லை... அப்படி இருந்து இருந்தால் நாங்கள் எப்போதோ விடுதலை அடைய முயன்று இருக்கலாம்...

இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன தயா. குகதாசன் அண்ணா சொல்லியபடி இவை விரிவாக ஆராயப்படவேண்டும். நான் நேற்றுக்கூட இதுபற்றி ஓர் தனி இழை யாழில் தொடங்கலாமா என்று பார்த்தேன்.

இதற்கான காரணங்களில் முக்கிய காரணமாக நான் நினைப்பது... புலிகளின் உத்தியோகபூர்வ ஆதரவாளர்கள் என்று தங்களை இனம்காட்டிக்கொள்கின்ற பலர் சாதாரண தமிழ்மக்களிற்கும் புலிகளுக்கும் இடையில் இடைவெளியை தோற்றுவித்து விட்டார்கள்.

பலர் போராட்டங்களில் இருந்து விலகி இருந்தமைக்கு, விலகிச் சென்றமைக்கு புலிகளைவிட புலிகளின் செயல்களைவிட தங்களை புலிகளின் உத்தியோகபூர்வ ஆதரவாளர்களாக இனம்காட்டிக்கொண்ட பலரின் செயற்பாடுகளே காரணம்.

இந்த புலி ஆதரவாளர்கள் புலிகளை மக்களில் இருந்து பிரிக்கின்ற தங்கள் கைங்கரியத்தில் வெற்றி பெற்று இருக்கின்றார்கள். பலர் இதை வேண்டும் என்று செய்தார்கள் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால்... அவர்கள் தங்களை அறியாமல் செய்கின்ற பல தவறுகள் புலிகளையும் மக்களையும் பிரித்து இடைவெளிகளை உருவாக்கி இருக்கின்றது.

பல புலி ஆதரவாளர்களுக்கு சாதாரண மக்கள் தங்கள் அமைப்பினுள் பொறுப்புக்களினுள் வருவது பிடிக்காது. அதற்கு விடவும் மாட்டார்கள். அவர்கள் ஒர் வட்டத்தை கீறி அந்த வட்டத்திற்கு வெளியில் வைத்தே சாதாரண மக்களுடன் dealபண்ணுவார்கள். இதற்கு நல்லதொரு காரணமாக இவர்கள் சொல்வது கண்டவனையும் நம்ப ஏலாது என்பது.

ஆனால்... உங்களுக்கு சாதாரண மக்களை நம்பமுடியாமல் இருந்தால்.. சாதாரண மக்கள் உங்கள் நம்பிக்கைக்கு இல்லாதவர்கள் அவர்கள் ஒதுக்கி வைக்கப்படவேண்டியவர்கள் என்று நீங்கள் நினைத்தால்.. அப்படிச் செய்துவிட்டு பின்னர் சாதாரண மக்கள் தங்களை புலிகளாக நினைக்கவில்லை இது எங்கள் போராட்டம் என்று நினைக்கவில்லை என்று கவலைப்படுவது எவ்வளவு வேடிக்கையானது.

மேலே நீங்கள் ஓர் கருத்தை பார்த்து இருப்பீர்கள். அங்கு ஒருவர் எனது கையை உடைப்பன் காலை உடைப்பன் என்று அறிக்கைவிட்டு இருக்கிறார். ஏன் என்றால் அவரது அண்ணனை பற்றி நான் கூடாமல் சொல்லிவிட்டேனாம். அவரது அண்ணனுக்கு நான் சேறுபூசி விட்டேனாம். ஆனால் இவர் ஏன் அவரது அண்ணன் எனக்கும் அண்ணன் என்பதை அவரது மனதில் ஏற்றுக்கொள்கின்றார் இல்லை? அவர் ஏன் என்னைபிரித்துப் பார்க்கின்றார்? இவருக்கு என்னைப்பற்றி என்ன தெரியும்?

அதாவது புலி ஆதரவாளர்கள் என்று தங்களை இனம்காட்டிகொள்கின்ற பலர் சாதாரண தமிழ்மக்களை தங்களில் இருந்து பிரித்துப் பார்க்கின்றார்கள். தங்கள் வட்டத்தினுள் மற்றவர்கள் வருவது இவர்களுக்கு பிடிக்காது. இப்படியான நிலையில் நாங்கள் மட்டும் எங்களை அவர்களுடன் மற்றும் புலிகளுடன் சேர்த்துப் பார்க்கவேண்டும் ஒட்டிவைத்துப் பார்க்கவேண்டும் - இது எங்கள் போராட்டம் என்று நினைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு வேடிக்கையானது!

மேலே நான் கூறியது ஓர் உதாரணம் மாத்திரமே. இந்த உதாரணம் எங்கள் மத்தியிலேயே - இப்போதே - அதுவும் இந்த யாழ் களத்திலேயே - இந்த திரியிலேயே நடந்துகொண்டு இருக்கின்றது. இந்தக்கேவலத்தில மக்களும் புலிகளும் ஒன்று என்று சொன்னால் எந்த மடையன் ஆமாம் சாமி என்று சொல்லுவான்? :icon_idea:

Edited by மாப்பிள்ளை

அதாவது புலிகளை எப்படி காப்பாற்றி இருக்கலாம் என்று சொல்லுறீங்கள்? சர்வதேச ஊடகங்கள் அனைத்துமே தாயக மக்களை புலிகள் மனிதக்கேடயங்களாக வைத்து இருக்கின்றார்கள் என்று அப்போது சொன்னார்கள். நாங்கள் மக்களை காப்பாற்ற தெருவில் இறங்கினோமே தவிர புலிகளை காப்பாற்ற தெருவில் இறங்கி போராட்டம் செய்யவில்லை. அப்படி செய்து இருந்தால் சர்வதேசம் கைகொட்டி சிரித்து இருக்கும். ஏன் என்றால் புலிகள் ஆயுதங்கள் மூலம் கடைசிவரை தங்களை காப்பாற்றிக்கொள்வார்கள் என்று நாங்கள் எல்லோரும் நம்பி இருந்தோம்.

ஆனால்... பக்கத்துவீட்டு பெடியனுக்கு அடிச்சுப்போட்டு பிறகு அவன் எங்களுக்கு அடிக்கவர நாங்கள் எங்கண்ட அம்மாவிண்ட சீலைக்கு பின்னால ஓடிப்போய் ஒளியிறமாதிரி ஆயுதம்தூக்கி அடிபட்டுப்போட்டு கடைசியில மக்களுக்கு பின்னால போய் மக்களோட மக்களாய் நிலை எடுக்கிறது என்றால் பிறகு இந்த ஆயுதப்போராட்டம் மூலம் புலிகளால் சாதிக்கப்பட்டது என்ன?

கடைசிவரை.. இளந்திரையன் அண்ணாவிட்ட அறிக்கையிலும்... நடேசன் அண்ணாவிட்ட அறிக்கையிலும் கூட நாங்கள் ஆயுதங்களை கைவிடமுடியாது, இந்த ஆயுதங்களே எங்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு என்று புலிகள் கூறி இருந்தார்கள். ஆனால் மக்களை காப்பாற்ற முடியாதுபோனாலும் அந்த ஆயுதங்கள் மூலம் அவர்களால் தங்களைக்கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் வரலாறு.

பாருங்கோ இப்பவும் உங்களுக்கையும் ஒரு பிரிவினை வாதி எட்டிப்பாக்கிறார்...

புலிகள் வேறு தமிழர் வேறு எனும் கோட்பாட்டை நீங்கள் நீக்காத நிலை கடைசி வரைக்கும் நீடித்தது என்பதை இப்போதும் உறுதிப்படுத்துகிறீர்கள்...

எல்லாருக்கும் புரிய வேண்டிய கோட்பாடு எண்ற ஒண்று இருக்கிறது... அதாவது மிரட்டுகிறவனிடம் கெஞ்சலாம், அடிக்கிறவனிடம் கூட கெஞ்சலாம்... ஆனால் இனப்படுகொலை செய்பவனிடம் கெஞ்ச முடியுமா....??? ஆயுத போராட்டம் வேண்டுமா வேண்டாமா என்பதை இதுதான் தீர்மானிக்கிறது...

புலிகள் ஆயுதம் துக்கியவர்கள் தான்.. அவர்கள் தங்களின் குடும்ப நலனுக்காக தூக்கவில்லை... ஒட்டு மொத்த தமிழருக்காகவும்தான் தூக்கினார்கள்... அந்த ஆயுதத்தை கீழே போடும் முடிவை எடுக்க வைக்கும் வண்ணம் சிங்களவன் நல்லவனாக இருக்க வில்லை...

ஆனால் சர்வதேசம் புலிகள் மீது அழுத்தங்களை பிரயோகிக்காதவாறு தமிழ் மக்களால் நடவடிக்கைகளை எடுத்து இருக்க முடியும்... ஒரு நல்லெண்ணத்தை தமிழர்களால் கட்டி எழுப்பியும் இருக்க முடியும்... இதை கடைசி நேரத்தில் கிழம்பி போராட்டங்கள், இராச தந்திர நடவடிக்கைகள் எல்லாம் செய்ததை போல இன்னும் பலநாள் முன்னர் செய்து இருந்து இருக்கலாம்... குறைந்தது மாவிலாறு நோக்கிய இராணுவ முன்னேற்றத்தின் போது... இல்லை போர் நிறுத்தத்தை இலங்கை படைகள் முறித்து கொண்ட போதாவது...

அப்படி எதுவும் செய்யாது இப்போது புலிகள் ஆயுதம் தூக்கியது தவறு என்பது சரியானது இல்லை...

புலிகளை பொறுத்த வரை அவர்களின் நோக்கத்தில் குறியான சுத்ந்திரத்தை அடைய ஆயுதம் தவிர வேறு வளி இருக்க இல்லை... இந்த ஆயுதம் தவிர்ந்த வேறு வளிகளில் பிச்சை எடுப்பதுக்கு புலிகளோ அல்லது தேசிய தலைவரோ தேவையும் இல்லை...

இதில் தமிழர்கள் உணரவேண்டிய உண்மை என்ன எனில் சிங்களவர்கள் தமிழர்களுக்கு அடக்கு முறையை தவிர வேறு எதையும் தரப்போவது இல்லை... இதை உணர்ந்து கொள்ள தமிழர்களுக்கு இன்னும் நீண்ட நாள் ஆக வேண்டியதில்லை...

**** வேண்டுமானால் இதையும் குறித்து வைத்து கொள்ளுங்கள்.. இன்னும் சில காலத்தில் புலிகள் சிங்களவனிடம் தேவை இல்லாது போராடி தோற்று போனதால்தான் சிங்களவன் தமிழருக்கு ஒண்றும் கொடுக்க முன் வருகிறான் இல்லை எண்று எம்மவர்கள் சொல்வார்கள்... ***

ஆக மொத்தம் எல்லா தமிழருக்கும் பழி போட யாராவது தேவைப்படுகிறார்கள்... தங்களின் தவறுகளை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக திருத்திக் கொள்ள தயாராக இல்லை...

Edited by தயா

தமிழர் மீதான ஒடுக்குமுறையில் இருந்தே ஆயுதப்போராட்டாம் பரிணமித்தது.அது புலிகளாக உருவெடுத்தது.

ஆகவே ஆயுதப் போராட்டாம் என்பது அடக்குமுறைக்கு எதிரான ஒன்றாகவே எழுந்தது.அந்த அடக்குமுறை முடியாதவரையும் ஆயுதப்போரட்டத்திற்கான தேவை இருந்து கொண்டே இருக்கும்.அது புலிகளாகவோ இல்லை வேறு ஒரு வடிவமாகவோ இருக்கலாம்.தற்போது ஆயுதப்போராட்டதிற்கான் ஏது நிலைகல் வெளிக்கிழம்பாமால் மிகக் கொடூரமான அடக்குறை இருக்கும் நிலையில் ஆயுதப் போராட்டாம் ஏற்படாது என்று சொல்ல முடியாது.ஆயுதப் போராட்டாம் அடக்குமுறைக்குள்ளாகும் மக்களிடம் இருந்தே வரும்.மகிந்தவோ இந்தியாவோ இதை உணர்ந்து மக்கள் மீதான் அடக்குறைகளைக் குறைத்து அரசியல் ரீதியாக இந்தப் பிரச்சினையை அணுகினால் ஆயுதப்போராட்டாம் எழுவதற்கான சாத்தியக் கூறுகள் அற்று விடும்.

இதில் மகிந்த செய்யப்போவாது கூடிய வரையில் தமிழர்களை தாய் நிலத்தில் இருந்து அகற்றுவதே.திட்டமிட்ட குடியேற்றம்.பொருளாதார் அபிவிருத்தி என்னும் பெயரில் தமிழர்களை சார்ந்து நிற்கச் செய்வது.இந்த நிலை படிப்படியாக தமிழரின் விகிதாசாரத்தைக் குறைத்து ஈற்றில் சிறிலங்காவை ஒரு சிங்களத் தேசமாக மாற்றும்.

ஈற்றில் புலம் பெயர்ந்த தமிழர்கள் பூர்வீக நாட்டை இழந்தாவர்களாக அந்த அந்த நாடுகளில் குடியுரிமைகளுடன் அடுத்த சந்ததி கரைந்து விடும்.

ஈழத் தமிழர் என்னும் அடையாளம் பாடப்புதகங்களில் சில வேளை இருக்கலாம்.புலிகள் என்பவர்கள் இதனை மாற்ற முயற்ச்சித்தனர்.ஆனால் அவர்களால் தமிழர்களை ஒன்று படுத்திப்போராட முடியாது போயிற்று என்று வரலாறு எழுதும்.தூர நோக்கற்ற தமிழர்களைக் இவ்வாறு மற்றவர்களைக் குற்றம் சாட்டியே அழிந்தார்கள் என்று வரலாறு எழுதப்படும்.

மற்றவர்களை விமர்சிக்கும் முன் நாம் ஒவ்வொருவரும் எங்களையே விமர்சிதுக் கொள்வோம். நாம் எம்மால் முடிந்தவரையில் பங்களிப்பு ஆற்றி இருக்கிறோமா? நாம் எந்தவரையில் பங்களிப்பு ஆற்றி இருக்கலாம். நாம் ஏன் ஆற்றவில்லை.அதற்கான் தேவை எமக்கு இல்லையா?

புலம் பெயர்ந்த அனைவருமே எமது சுய தேவைக்காகவே புலம் பெயர்ந்தோம்.எம்மால் போராட முடியாது என்பதாலையே புலம் பெயர்ந்தோம்.இல்லை இது எங்கள் தேசம் நாங்கள் போராடுவோம் என்று சொன்னவர்களின் வீரத்தைக் கண்டோம்,தொலை நோக்கைப் புரிந்து கொண்டோம்.அதனால் ஆதரவு தந்தோம்.அதற்கப்பால் இங்கு வீராப்புப்பேசும் எவரும் ஆயுதம் தாங்கிப் போராடப் போவதில்லை.

அதற்கான தேவையும் எவருக்கும் இல்லை.அதே நேரதில் ஆயுத தாங்கியவர்களை விமர்சிக்கும் அருகதையும் எமக்கு இல்லை.அங்கு நின்ற மக்களுக்கே அந்த அருகதை இருக்கிறது.

மக்கள் போராடத் தாயாரில்லாத எந்தப் போராட்டாமும் வெற்றி பெறாது.தங்களது பூர்விக தேசம் அழிவதை விரும்பாது போனால் தமது பரம்பரை தமிழர் என்னும் அடையாளத்தை இழக்க விரும்பாது போனால் புலத் தமிழர்கள் போராடலாம்.

அந்தப் போராட்டத்திற்கான வடிவமே புற நிலை அரசு.அதற்கு ஆதரவு கொடுங்கள்.ஆயுதப் போராட்டம் வேண்டுமா இல்லையா என்பதை களத்தில் உள்ள மக்களிடம் விட்டு விடுங்கள்.அவர்கள் தீர்மானிக்கட்டும்.

புலத்தில் உள்ள பொறுப்பளார்கள் மக்களின் மனக்களைப் புரிந்து கொள்ளாமால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் செயற்படுவராகில் அவர்கள் அந்தக் குறுகிய வட்டத்துடனையே முடங்கி விடுவார்கள்.இல்லை நாங்கள் பரந்து பட்ட மக்களையும் உள் வாங்கி போராட வேண்டும் என்று நினைக்கிறவர்கள் அதனைச் செயுங்கள்.மக்கள் உங்களை நோக்கி அணிதிரழுவார்கள்.எந்தச் செயற்பாடும் அற்றி வெறும் விமர்சனமே செய்து கொண்டிருப்பவர்கள் புலத்தில் இருக்கும் மாற்றுக் கருத்தாளர் மாதிரி விமரிசனமே தொழிலாக ,பல்லி சொல்வதைப்போல் இது சரி வராது அது சரி வராது என்று சொல்லிக் கொண்டு செத்துப்போங்கள்.

புலிகள் தோற்றது ஏன்??????.......

........ ஆரம்பத்தில் இன ஒடுக்குமுறைக்கு எதிரான போர் என்று தொடங்கி ...... இனத்துரோகிகளுக்கு எதிரான போரையும் சேர்த்து ............சகோதர யுத்தத்தையும் தொடக்கி ....... சமூக விரோதிகளுக்கு எதிரான யுத்தத்தையும் இணைத்து ......... இடையில் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான யுத்தம், சாதீயத்துக்கு எதிரான யுத்தம், பண முதலைகளுக்கு எதிரான யுத்தம், இப்படி பலதுக்கும் எதிராக யுத்தத்தை விஸ்தரித்து ..... கதைத்தவன், பிழை கூறியவன், சரி சொன்னவன் எல்லாருக்கும் எதிரான யுத்தைத்தையும் பிரகடனப்படுத்தியும் ...... அயல்நாடான இந்தியாவுக்கு எதிராக யுத்தத்தையும் இணைத்து .... பின் இந்திய பார்ப்பணியத்தையும் இணைத்து .... மதங்களுக்குள்ளும் யுத்தத்தை தொடக்கி ...... பிரதேசவாத யுத்தத்தையும் உள்நுளைத்து .......உள்ள அயல்நாடுகள் .. உலக வல்லரசுகள் ......... என்ன என்னத்துக்கு எதிராக போரை ஆரம்பிக்கலாமோ அனைத்துக்கும் எதிராக போர்ப்பிரகடனம் செய்து விட்டு ...... இறுதியில் ஆரம்பித்ததையும் முடிக்கவோ மட்டுமல்லாமல் தொடரவும் முடியாமல் ..... தற்கொலை செய்து கொண்டோம்!!!!!!!!!

நாரதர் உங்கள் கருத்து கவனிக்கத் தக்கது. புறநிலை அரசு என்ற நிலைப்பாட்டை விமர்சிக்கும் போக்கு என்னிடம் உள்ளது. இது குறித்து நான் சொல்ல வருவது ஒன்றுதான் தற்போது அவலப்படும் மக்களின் மறுவாழ்வு பாதுகாப்புக்காக மனிதாபிமான அடிப்படையில் குரல்கொடுக்கும் ஒரு அமைப்பே பின்னாளில் புற நிலை அரசு என்ற கோட்பாட்டுக்குள் நகர முடியும். இதையே முன்னரும் நான் எழுதியுள்ளேன். இதற்கு என்னால் உணரப்படும் காரணம் தாயகத்தில் நடைமுறையில் இருந்த நிழல் அரசு நிஜமாக முடியாமல் போனதற்கு பிரதான காரணம் மக்களின் வெளியேற்றமே. இதில் குறிப்பாக இனம்காணப்படவேண்டியது புலம்பெயர்வு. இந்தப் புலம்பெயர்ந்த மக்களின் வாழ்வு ஏனைய மக்களுக்கு காட்டிய தவறான பாதை. அதன் பிறகே இந்த மக்கள் வெளியேற்றத்தில் சிங்கள அடக்குமுறை பிரதான பங்கை வகிக்கின்றது. ஒரு நிழல் அரசு கலைவதற்கு புலம்பெயர் வாழ் மக்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பால் பிரதான காரணமாக இருக்கின்றோம். இந்த விடயத்தை கருத்தில் கொள்ளாது மீளவும் நிழல் அரசு போல் புற நிலை அரசு என்று அரசு என்ற கருதுகோளில் காலூன்றுகின்றோம். ஒரு அரசு அமைவதற்கான அத்திவாரத்தை தகர்த்தவர்கள் நாங்கள். மீளவும் புறநிலை அரசு என்று ஒரு நிறுவனமய சிந்தனையில் எம்மை உள் நுளைக்க முற்படுகின்றோம். இது எமது மக்களின் தேவைகளுக்கான போராட்ட வடிவம் அன்று மாறக அரசு குறித்த எமது பெரு விருப்பம். இதை சரிவர புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போதைய காலகட்டத்தில் ஒரு தனியரசு குறித்து சிந்திக்கும் நிலையில் தாயக மக்கள் இல்லை. அது குறித்த அவர்களது சத்தி உறிஞ்சப்பட்டுவிட்டது. இதை செய்தது சிங்களம் மட்டும் இல்லை எமது புலம் பெயர் வாழ்வின் தவறான வழிகாட்டலும் எமக்குள் இருந்த முரண்பாடுகளும் ஒற்றுமை இன்மையும் ஆகும். தாயகத்தில் வாழும் மக்களுக்கே தனியரசுக்கான தேவை இருக்கின்றது. அவர்களுடைய தேவையுடன் எமது தனி அரசு குறித்த விருப்பத்தை இணைக்கவேண்டுமே தவிர புறம்பாக இயங்க முடியாது. தேவையை அடிப்படையாக வைத்து அதற்காக பெறுதல் என்ற முயற்சியே வலிமையுடன் வெற்றி பெறும். எனவே தயாக மக்களை பாதுகாத்து மீள சக்தி உடையவர்களாக்கி பயணிக்கச் செய்வது என்பதே முதற்படி. அவர்களுடன் இணைந்து பயணிப்பது எமது பணியாக இருக்கவேண்டும். நாம் புறநிலை அரசாக நிறுவி அதன் ஊடாக தயாகமக்களுக்காக போராட முற்படுவதாக சொல்கின்றோம் ஆனால் தாயக மக்களுக்களின் மறுவாழ்வுக்காக போராடி அவர்களுடன் இணைந்து ஒரு அரசை நிறுவுவது குறித்து முன்நகர்வதே எனது கருத்து அமைகின்றது. இது தவிர்ந்த எமது அவசரம் தாயக மக்களை என்னும் சிங்களம் வடிவமற்று சிதைப்பதற்கு வழிகோலும். பின்னர் இங்குள்ள புறநிலை அரசும் நிழல் அரசுபோல் கலைந்து போகும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எமது அவசரங்களால் என்றைக்கும் மீள முடியாத சூனியத்துக்குள் ஒரு துளி நம்பிக்கையும் அற்றதாக ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வு தள்ளப்படும் அபயாம் இருக்கின்றது. நாம் அரசு என்று அமைத்து சிங்களவனை சற்று அச்சுறுத்தி ஆசுவாசப்பட முடியும் அதே நேரம் அதை நிஜமாக்குவதற்கான அத்திவாரத்தை சிங்களவன் சுத்தமாக துடைத்தளித்துவிடுவான். எப்போதும் எந்த ஒரு முனைப்புக்கும் தயகத்தில் வாழும் மக்களே அத்திவாரம். அதை பாதுகப்பதின் ஊடாகவே எந்த ஒரு எதிர்காலம் குறித்தும் நாம் சிந்திக்க முடியும்.

நாம் சற்றுக்காலம் மக்களின் அவலங்கள் குறித்து அரசு என்ற அலட்டல் இன்றி போராடமுடியும். அந்தக்காலகட்டத்தில் முடிந்தளவு எமது முரண்பாடுகளை களையவும் மீள தாயகம் நகர்வதற்கான கருத்தை விதைக்கவும் முடியும். இன்று விடுதலப்புலிகளின் தொடர்ச்சியாகவே புறநிலை அரசு வெளிப்படுகின்றது. அதே நேரம் புலிகள் குறித்த சர்வதேச நிலைப்பாட்டில் மாற்றம் என்னும் ஏற்படவில்லை. அரசு என்ற நிறுவன மயச் சிந்தனையின் ஊடாக மக்களுக்காக போராடக்கூடிய எந்தவித சாதகமான சூழலும் இப்போது இல்லை. இந்நிலையில் அவசரம் ஏன்? மனிதாபினமான மறுவாழ்வு பாதுகாப்புக் குறித்து போராடும் ஒரு அமைப்பை பொதுவாக நிறுவி போராட்டத்தை தொடர்ந்து அந்த அமைப்பு காலப்போக்கில் புறநிலை அரசாக மாறும் போது எமக்கு சாதகமான பல விடயங்களை நாம் ஏற்படுத்த முடியும். புறநிலை அரசை எதிர்ப்பது விமர்சிப்பது என்பதுக்கு அப்பால் ஒரு அச்சப்பாட்டின் அடிப்படையிலேயே எனது கருத்து அமைகின்றது.

அதாவது புலி ஆதரவாளர்கள் என்று தங்களை இனம்காட்டிகொள்கின்ற பலர் சாதாரண தமிழ்மக்களை தங்களில் இருந்து பிரித்துப் பார்க்கின்றார்கள். தங்கள் வட்டத்தினுள் மற்றவர்கள் வருவது இவர்களுக்கு பிடிக்காது. இப்படியான நிலையில் நாங்கள் மட்டும் எங்களை அவர்களுடன் மற்றும் புலிகளுடன் சேர்த்துப் பார்க்கவேண்டும் ஒட்டிவைத்துப் பார்க்கவேண்டும் - இது எங்கள் போராட்டம் என்று நினைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு வேடிக்கையானது!

மேலே நான் கூறியது ஓர் உதாரணம் மாத்திரமே. இந்த உதாரணம் எங்கள் மத்தியிலேயே - இப்போதே - அதுவும் இந்த யாழ் களத்திலேயே - இந்த திரியிலேயே நடந்துகொண்டு இருக்கின்றது. இந்தக்கேவலத்தில மக்களும் புலிகளும் ஒன்று என்று சொன்னால் எந்த மடையன் ஆமாம் சாமி என்று சொல்லுவான்? :icon_idea:

அப்படியும் சொல்வதுக்கு இல்லை...

(புலிகள் என்பதை விட வெளியில் பார்க்கலாமே.. )

அண்மையில் நடந்ததயே உதாரணமாக சொல்ல முடியும்... பிரித்தானிய தமிழர் பேரவையினர் "வணங்கா மண்" கப்பலுக்கு பொருட்கள் சேர்க்கும் நடவடிக்கைக்கு ஆள் உதவி வேண்டும் எண்று கேட்டார்கள்... கேட்டார்கள் என்பதை விட கொஞ்சினார்கள் எண்று சொல்வது உண்மையாக இருக்கும்... ஒரு நூறு பேரை கேட்டார்கள் எண்றால் ஒரு 5 பேர் கூட உதவ போய் இருக்க வில்லை என்பதுதான் உண்மையாக இருந்தது...

இதை யாழில் உறுப்பினர்கள் வணங்காமண்ணுக்கு வேலை செய்தவர்கள், உதவியவர்களிடமே கேட்டு உறுதிப்படுத்தி கொள்ள முடியுமே...!!

இப்படி தேவையான நடவடிக்கைகளுக்கே சொந்த வேலைகளை விட்டு பலர் உதவ முன் வரவில்லை... இப்படி இருக்கும் போது புலிகளின் உதவியாளர்களாகவா வேலை செய்யவா அலைமோதி இருப்பார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஆசியின்றி தமிழீழம் இல்லை. இதில் புலிகள் போராடினால் என்ன.. புலம்பெயர் தமிழன் போய் ஆயுதத்தைத் தூக்கினால் என்ன..! தமிழீழத்தைத் திறக்கும் சாவி தமிழகத்தில்தான் உண்டு என்று தெரியாமலா சொன்னார்கள்?

புலிகளும் மற்ற குழுக்களும் ஆயுதத்தைத் தூக்கியதற்கு யார் காரணம்? இந்தியாதானே? பிறகு எப்படி புலிகள் மேல் பழி போடப்படுகின்றது?

சகோதரச் சண்டைக்கு யார் காரணம்? தமிழனைப் பிரித்து சூதாட்டம் ஆடிய இந்திய ஆளும்வர்க்கம்தானே? பிறகு எப்படி புலிகள் மேல் பழி போடப்படுகின்றது?

இந்திய வல்லாதிக்கம் என்றுமே தமிழீழ மலர்ச்சிக்கு வழிவிடாது என்று அறிந்து மேற்குலக நாடுகளை உள்நுழைக்க முயன்றார்கள் புலிகள்..! அத்திட்டத்தை உடைத்து சுக்குநூறாக்கியது 2004 இல் பதவிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு..! இதிலும் புலிகளில் பிழை பிடிக்கிறீர்கள்..!

சரி.. இந்தியாவை வழிக்குக் கொண்டுவர தமிழக ஆதரவைத்திரட்ட சிடி முதற்கொண்டு பல்வகையில் முயற்சித்தார்கள் புலிகள்..! கட்சி அரசியலில் கட்டுண்டு கிடந்த தமிழகம் ஓரணியில் திரளாது பிழையான சமிக்கைகளை இந்திய ஆளும்வர்க்கத்துக்குக் கொடுத்துவிட்டது..!

சவப்பெட்டியில் இறுதி ஆணியாக தோற்கும் என கணிக்கப்பட்ட திமுக-‍காங்கிரஸ் அணி வெற்றி பெற்று தமிழகம் ஈழத்தின் பக்கம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது..!

இப்போது எங்கிருந்து வரும் ஈழம்?

மீண்டும் சொல்கிறேன்..! ஈழத்தமிழன் ஒரு செல்லாக் காசு..! அவனைத் திரும்பிப் பார்க்க எவனுக்குமே நேரமில்லை..! அதற்கான தேவையும் இருந்ததில்லை..! புலிகளின் தோற்றத்துக்குப் பின்னர் இரண்டு நாய்களாவது திரும்பிப் பார்த்தன‌..! இன்று அதுவும் இல்லை..!

இப்போது ஈழ‌ விடிவு ஏற்பட இந்த இரண்டு சூழ்நிலைகளில் ஏதாவது ஒன்றாவது ஏற்படுதல் வேண்டும்..!

1) தமிழக அரசியல் வலுவானதும் இதயசுத்தியுடனுமான ஈழப் போராட்ட சார்புநிலைக்குச் செல்லுதல்..! அதன்மூலம் இந்திய ஆளும் வர்க்கத்தில் மாற்றங்களைக் கொண்டுவருதல்..

2) புறநிலைக் காரணிகளால் அதிசயமாக இந்திய வெளியுறவுக்கொள்கைகளில் தானாகவே மாற்றங்கள் ஏற்படுதல்.

இதையெல்லாம் விட்டுவிட்டு புலிகளிலும் புலத்தமிழரிடத்தும், புலம்பெயர் தமிழரிடத்தும் பிழைகளை நோண்டிக்கொண்டிருத்தல் வீணே கால‌ விரயம் செய்யும் செயல் என்பது என் கருத்து.

தயா, இங்கு நாங்கள் கருத்துக்களை பகிர்வது யார் மீதாவது பழிபோடுவதற்காக அல்ல. இனிவரும் பாதை அழிவுகள் குறைவானதாய் அல்லது அற்றதாய் இருப்பதற்கு முன்பு செயற்பட்டதைவிட வித்தியாசமாக எப்படி செயற்படலாம், வித்தியாசமாக என்ன செய்யலாம் என்பது பற்றியது.

பலருக்கு புலிகளைப்பற்றி ஏதாவது விமர்சனம் சொன்னதும் பத்திக்கொண்டு வருகின்றது. ஆனால் அவர்களுக்கு தாயக, புலம்பெயர் மக்களை யாராவது எப்படி திட்டினாலும் கவலை இல்லை. நானாக இருந்தாலும் சரி, நீங்களாக இருந்தாலும் சரி எந்தப்பெரிய மகாராசனாக இருந்தாலும் சரி எங்கள் எல்லோருக்குமே பின்னூட்டல்கள் தேவைப்படுகின்றது. தவறான ஒன்றை மற்றவர்களுக்கு சரி சரி நல்லது நல்லது ஆகா ஓகோ என்று முகஸ்துதிக்காக அல்லது பயம் காரணமாக அல்லது மனஸ்தாபப்படுவதை தவிர்ப்பதற்காக ஊக்கப்படுத்தினால் அது தற்காலிகமாக எங்களுக்கு நிம்மதியை மகிழ்ச்சியை தந்தாலும் நீண்டகாலநோக்கில் பாரிய அழிவையே ஏற்படுத்தும்.

சிங்களவன் அடக்குமுறை செய்தான், செய்துகொண்டு இருக்கின்றான், செய்வான். ஆனால்.. இந்த அடக்குமுறையை ஆயுதரீதியாக மட்டுமே வெல்லமுடியும் என்று நீங்கள் எப்படி சொல்லமுடியும்? ஏன் அரசியல் ரீதியாக வெல்லமுடியாது என்பதை ஏன் மறுக்கின்றீர்கள்? யாராவது feasibility studies செய்து பார்த்து இருக்கிறீங்களா? நாங்கள் மட்டும் கெட்டிக்காரர், எங்களுக்கு மட்டும் அடிபடத்தெரியும். சிங்களவன் என்ன மாங்காய் மடையனா? ஆயுதரீதியாக இப்போது கடைசியில் நடைபெற்று இருப்பது என்ன?

சரி, நீங்கள் சொல்வதன்படி ஆயுதரீதியான போராட்டமே ஒரே தீர்வாக இருந்தால்.. அதற்கு மக்கள் தயாராக இருக்கின்றார்களா? ஆயுதம் ஏந்தி போராடி சாவதற்கு? பெரும்பான்மை தமிழ் மக்கள் பங்களிப்பு செய்யமுடியாத ஓர் வேலைத்திட்டத்தை எப்படி செயற்படுத்தமுடியும்?

நடந்தது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இனியாவது பெரும்பான்மை தமிழ்மக்கள் தங்கள் சக்திக்கு எப்படியான ஆதரவை தருகின்றார்களோ அதன் அடிப்படையில் போராட்டத்தை தொடரலாம். மக்கள் ஆயுதம் ஏந்தி சாவதற்கு முன்வராவிட்டால் அந்த யோசனையை தவிர்ப்பது தவிர வேறு வழி இல்லை. எனது தனிப்பட்ட அபிப்பிராயத்தை சொன்னால்.. என்னால் ஆயுதம் ஏந்திப்போராடி சாகமுடியாது. ஒருகாலத்தில் நான் திருமணம் செய்து பிள்ளைகள் வரும்போது அவர்கள் ஆயுதப்போராட்டத்தில் இணைய விரும்பினால் அதற்கு ஆதரவு கொடுப்பேனா என்பதும்கூட சந்தேகமே. ஆனால்.. ஆயுதம் தவிர்ந்த இதர போராட்டங்கள் என்றால் நான் நிச்சயம் எனது பங்களிப்பை கொடுப்பேன். எனது பிள்ளைகளும் அப்படியான போராட்டங்களிற்கு செல்வதை ஊக்குவிப்பேன். இதுதான் எனது நிலைப்பாடு.

ஒரே மனநிலையில் இருப்பவர்களால் ஒன்றுபட்டவர்களாக இருக்கமுடியும். ஆயுதம் தூக்கி போராடி சாகவேண்டும் என்று நினைப்பவர்களும் ஆயுதம் தூக்கி போராடி சாவதற்கு முன்வராதவர்களும் ஒரே மனநிலையில் இருப்பவர்களாக கொள்ளப்பட முடியாது. புலிகள் மக்கள் என்பது உண்மை. ஆனால் புலிகள் மட்டுமே மக்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். புலிகள் அல்லாத மக்கள் அதாவது புலிகள்போல் போராடி சாவதற்கு முன்வராத மக்களும் இருக்கின்றார்கள். மேலும், இந்த இரண்டாவது வகையிலேயே பெரும்பான்மை தமிழ்மக்கள் அடங்குகின்றார்கள். எனவே, புலிகளாகியுள்ள மக்களும் புலிகள் அல்லாத மக்களும் ஒன்று என்று கூறுவது மிகவும் தவறானது.

Edited by மாப்பிள்ளை

அதே நேரத்தில் ஆயுத தாங்கியவர்களை விமர்சிக்கும் அருகதையும் எமக்கு இல்லை.அங்கு நின்ற மக்களுக்கே அந்த அருகதை இருக்கிறது.

ஆஹா. அப்படி என்றால் ஏன் அங்கு இருந்து ஐயோ எங்களை காப்பாற்றுங்கோ என்று கூச்சல் போடுறீங்களாம்? உங்களுக்கு உங்கள் அலுவலுகளுக்கு மட்டும், உங்கள் தேவைகளுக்கு மட்டும் புலம்பெயர் மக்கள் வேண்டும். ஆனால் அவர்கள் விமர்சனம் மட்டும் செய்யக்கூடாது. அதாவது பொத்திக்கொண்டு அங்கிருந்து என்ன சொல்லப்படுகின்றதோ அதை இங்கு இருக்கும் மக்கள் செய்யவேண்டும்? இதைத்தானே சொல்லுறீங்கள் நாரதர்? புலிகள் தோல்வியை சந்தித்தமைக்கு முக்கிய ஓர் காரணங்களில் இதுவும் ஒன்று!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.