Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய சதியில் கொல்லப்பட்ட அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் அவர்களின் 20 ம் ஆண்டு நினைவு.

Featured Replies

உங்கள் கேள்வியை வைத்துப்பார்த்தால்....

புலிகளே செய்தனர்

தவிர்த்திருந்தால்......?

இது புலிகள் இருந்தபோது கேட்கப்பட்டிருக்கவேண்டிய கேள்வியல்லவா? நண்பரே

தற்போது...........?

முதலில் உங்கள் பதில் புரியவில்லை...

இரண்டாவது இதனை புலிகள் தான் செய்தனர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஏனெனில், விசு அவர்கள் புலிகளில் தான் இருந்தார் என்பதும் அவர் ஒரு துரோகி இல்லை என்பதும் எனக்கு தெரியும்.

அது சரி...நீங்கள் என்ன புலிகள் இல்லாமலே போய்விட்டார்கள் என்றா நினைக்கின்றீர்கள்...?

  • Replies 64
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

In mid-1989, Appapillai Amirthalingam, the chief of the Tamil United Liberation Front, once considered close to the LTTE pleaded that the Indian Peace Keeping Force (IPKF) should not leave Sri Lanka until alternate arrangements were made to protect the Tamils. This occurred at a time when the LTTE was bottled up in the jungles of the northern Sri Lanka by the IPKF, heavy IPKF causalities notwithstanding. The LTTE itself had lost a large number of its cadres in its confrontation with the IPKF. Amirthalingam's support for the IPKF, and request for its continuance in Sri Lanka was therefore an act of betrayal in the eyes of Prabhakaran.

ipcs.org

இது அமிர்தலிங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஒரு சான்றுக்காக இணைக்கப்படுகிறது. அமிர்தலிங்கம் எத்துணை அளவுக்கு தமிழ் மக்களை விட இந்திய நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டார் என்பதற்கு. இந்திய படைகளின் கொடுமைகளை மக்கள் அனுபவத்துக் கொண்டிருக்கும் வேளையில் கூட அதற்காக அவர் வருத்தப்படவில்லை. மாறாக இந்திய இராணுவ இருப்போடு தனது அரசியலை பாதுகாக்கவே முனைந்தார்.

அமிர்தலிங்கத்தை அன்று தொலைத்திராவிட்டால் இந்திய இராணுவ வெளியேற்றம்.. 1990 இல் நடத்திருக்கமாட்டாது. இன்னும் பேரழிவுகளை இலங்கைத் தீவு மட்டுமன்றி.. தமிழீழமும் சந்தித்திருக்கும்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரைக்கும் அமிரின் படுகொலை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டியது. அக் கொலையால் தமிழீழத்திற்கான போராட்டத்திற்கு எந்தவிதத்திலும் நன்மை ஏற்பட்டதாக நான் நினக்கவில்லை. அப்படி ஏதேனும் நன்மை ஏற்பட்டிருந்தால் அதனை தெளிவாக எனக்கு விளங்கப் படுத்தினால் நன்றி உடையவனாக இருப்பேன்

:நிழலி

ஆரம்ப காலங்களில் எல்லா தமிழ்இயக்கங்களாலும் தொடர்ந்து புலிகளாலும் கொல்பட்ட அனைத்து சிங்கள இராணுவ வீரர்களின் கொலையும் நிற்சயமாக தவிர்த்திருக்க கூடியவை. அவர்களை கொலை செய்திருப்பதால் தழிழர்களுக்கு எந்த நன்மையும் வந்ததாக நான் நினைக்கவில்லை....... அப்படி ஏதாவது வந்திருக்கும் என்று நீங்கள் நம்பினால் எப்படி என்று விளங்கபடுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும். உங்களை எனது இரு கரம் கூப்பி கேட்கிறேன்.

"கண்டிப்பாக தவிர்த்திருக்க கூடியது......"

Edited by Maruthankerny

  • தொடங்கியவர்

அவர் இறந்ததற்காக என்றைக்குமே புலிகள் மதிப்பளிக்காதபோது, நாம் ஏன் அவர் பற்றிப் போற்ற வேண்டிய தேவை வந்தது? புலிகள் ஒரு கட்டமைப்பாக, போராடும் அமைப்பாக இருந்த காலப்பகுதியில் இதை நீங்கள் செய்திரக்க வேண்டியது தானே?? உங்களின் புலிகள் மீதான அவப்பெயரை நீக்க உதவியாக இருந்திருக்கும்.

அதை விட முக்கியமாக பிரித்தானியாவில் இத்தனை காலம் இருக்கின்றீர்கள். புலிகள் மீதான தடையை எடுக்க முயற்சித்திருக்கலாமே?? ஏன் அவற்றைச் செய்யாமல் இந்த அற்பத்துக்காக வக்களாத்து வாங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்.

புலிகள் மதிப்பளிக்க வில்லை எண்றால் அவரை புலிகள் துரோகி என்கிறார்கள் என்பதுதான் அர்த்தமா...????

இப்படி புலிகள் மீது அவதூறு போடும் உங்களை போல ஆட்க்கத்தான் புலிகளின் முக்கிய எதிரிகள்...

( நான் என்ன செய்தேன் என்பது எனக்கு நன்கு தெரியும்... அதை உங்களை விட பல மடங்கு அதிகமாகவே செய்தும் இருக்கிறேன்...)

நான் பிரித்தானியாவில் இருப்பதை அறிந்து வைத்து இருந்தீர்கள்... நல்லது நானும் உங்களிடம் திரும்ப ஒரு கேள்வியை கேட்க்க விரும்புகின்றேன்... நீங்கள் கனடா வரும் முன்னம் இருந்த இடத்தில் தமிழீழம் வேண்டும் எண்று கேட்டு ஒரு பொங்குதமிழாவது நடத்தி இருக்கலாமே...

உலகம் எல்லாம் சிங்களவரோடு சேர்ந்து வாழ 10 லட்ச்சம் தமிழர் ஆர்வமாக உள்ளார்கள் எண்று தடைக்கான அறிக்கையிலேயே சொல்லி இருந்தார்களே நீங்கள் ஏன் அப்படி ஒண்றும் இல்லை எண்று சொல்ல முயலவில்லை...?? ( இப்படி பல கேள்விகளை நான் உங்களை நோக்கி கேட்க்க முடியும்)

வழமை போலவே பழங்கதை பேசுவதிலும், பெருமை அடிப்பதிலும் தான் காலத்தைச் செலவளிக்கின்றீர்கள். கேடிசும், விசுவும் தங்களின் ஒவ்வொரு நடமாட்டத்தையும் உங்களுக்கும், மரதங்கேணிக்கும் சொல்லிப் போட்டா திரிந்தவர்கள். ஏதோ உங்களுக்கு டாப்பு மார்க் பண்ணீட்டுத் தான் அவர்கள் திரிந்தார்கள் என்பது ஓவர் பீலா தானே??

இன்றைய தமிழரின் தேவை இவர்களுக்கான வக்களாத்து வாங்குவதல்ல... என்னோரன்ன பணிகள் இருக்கின்றன. மனரீதியாகச் சோர்ந்து போயிருந்த மக்களை ஒன்றிணைப்பது முதல், மீளத் தமிழர் கட்டுமானங்களை ஏற்படுத்துதலாகும். அதில் உங்களின் நேரத்தைச் செலவு செய்தால் அது எவ்வளவு உசத்தி.

காரணம் அதே காலங்களில் அவர்களை எங்களுக்கு தெரியும் என்பதாக கூட இருக்கலாமே... மற்றவரில் குறைகளை பிடிப்பதை நிறுத்தி விட்டு ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய முயலுங்கள்...

நான் செய்வது தவறா இல்லையா என்பதுக்கான இலவசமான ( உங்களால் அதுதான் முடியும்) உங்களின் அறிவுரைகள் எனக்கு நிச்சயமாக தேவையும் இல்லை......

அப்போ, புலிகள் வேறு மக்கள் வேறு என்கின்றீர்களா?? என்னுடைய அடுத்த தலைமுறைக்கு அமிர்தலிங்கம் போன்றவர்களைக் காவிச்செல்ல நான் தயாராக இல்லை...

புலிகள் இவர்களை முழுமனதோடு கொன்றால் கூட அதை ஏற்கின்ற நிலையில் தான் இவரின் செயற்பாடு இருந்திருந்தத.

--------------------

இது வரை காலமும் அமிர்தலிங்கம் பற்றி வாய் திறக்காமல் இருந்து கொண்டு, இப்போது நீங்கள் காட்டுகின்ற கரிசனை, இவ்வளவு காலமும் புலிகள் தான் உங்களைத் தடுத்து வந்தார்கள் என்ற ஒரு விம்பத்தையும் ஏற்படுத்துகின்றது என்பதையும் நினைவூட்டுகின்றேன்

உங்களின் அடுத்த தலை முறைக்கு நீங்கள் விடுதலை உணர்வை கூட கொண்டு செல்ல தயார் இல்லாதவர் என்பது கூட தெரிந்து கொள்ள முடிகிறது...

அடுத்த தலை முறைக்கு புலிகளால் பல தலைவர்கள் கொல்ல பட்டார்கள் எனும் எண்ணப்பாட்டை கூட விட்டு போக நீங்கள் தயங்காதது அதை தெளிவாக்கு கிறது....

நீங்கள் VHP யினர் செய்த தொண்டுகளை பற்றியும், கோயில் குளங்கள் பற்றியும் பேசுவதே சாலச்சிறந்தது....

அவருக்கு நினைவு கொண்டாடுவதே ஆராத்தி தானே

20 ம் ஆண்டு நிறைவிலாவது அரசியல் வாதிகளை புலிகள் கொல்ல இல்லை என்பதை தெளிவு படுத்த முயலுங்கள்.... சிரைச்சால் மொட்டை, வளர்தால் குடும்பி எனும் உங்களது தத்துவங்கள் எதுக்கும் உதவாது....

  • தொடங்கியவர்

முதலில் உங்கள் பதில் புரியவில்லை...

இரண்டாவது இதனை புலிகள் தான் செய்தனர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஏனெனில், விசு அவர்கள் புலிகளில் தான் இருந்தார் என்பதும் அவர் ஒரு துரோகி இல்லை என்பதும் எனக்கு தெரியும்.

அது சரி...நீங்கள் என்ன புலிகள் இல்லாமலே போய்விட்டார்கள் என்றா நினைக்கின்றீர்கள்...?

1992 ம் ஆண்டு வரைக்கும் ஒட்டப்பட்டு இருந்த சுவர் ஒட்டிகள் உங்களுக்கு ஒருவேளை சொன்ன சேதிகள் அப்படி இருக்கலாம்... ஆனால் 1994 ம் ஆண்டு மாத்தையாவின் கைதுக்கு பின்னர் நடந்த நிகழ்வுகளை நீங்கள் அறிந்து இருக்க வேண்டியதும் அவசியம்...

  • கருத்துக்கள உறவுகள்

20 ம் ஆண்டு நிறைவிலாவது அரசியல் வாதிகளை புலிகள் கொல்ல இல்லை என்பதை தெளிவு படுத்த முயலுங்கள்.... சிரைச்சால் மொட்டை, வளர்தால் குடும்பி எனும் உங்களது தத்துவங்கள் எதுக்கும் உதவாது....

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கொலையில் தமக்குத் தொடர்பில்லை என்பதை விடுதலைப்புலிகள் அப்பவே சொல்லிவிட்டனர். ஆனால் அவர்கள் தான் கொன்றார்கள் என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பது அப்பாப்பிள்ளையின் வாரிசுகளும்.. புலியெதிர்ப்பு அரசியல் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களும்.

புலிகள் ஒரு தடவை சொன்னால் போதாதா. ஆயிரம் தடவை சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா..??!

எனது தனிப்பட்ட கருத்து அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை போட்டதும்.. துரையப்பாவைப் போட்டதும் அந்தந்த அரசியல் சூழலில் தேவையான நடவடிக்கைகளே. ஏனெனில் இவர்கள் மக்களுக்கான அரசியலைச் செய்யாது மக்களின் அழிவில் அரசியலை செய்ய முற்பட்டவர்கள்..!

இவர்கள் எல்லாம் அரசியல் கருத்து வேறுபாடுகளை தலைக்கனங்களை ஒதுக்கிவிட்டு.. விடுதலைப்புலிகளோடு ஆரம்பத்திலேயே ஒருங்கிணைந்து செயற்பட்டிருந்தால்.. இன்று தமிழீழக் கொடி ஐநாவில் பறந்து கொண்டிருக்கும். அவங்கள் பொடியள்.. என்ன தெரியும்.. நான் லோப் படிச்ச.. பெரிய தலை. என்று இந்தப் புண்ணாக்குகள் அளந்து திரிஞ்சவை அளவு கணக்கற்றவை. இவர்களின் மட்டம் தட்டுதலும்.. தற்பெருமையும்.. இனத்தின் தேவைகளை பற்றிக் கவலைப்பட வைக்கவில்லை. தமது வெள்ளை வேட்டி ஜிப்பா பற்றியே கவலைப்பட வைத்தன.

நாளையும் இந்த வெள்ளை வேட்டிகள் எம்மத்தியில் தலையெடுத்து.. மீண்டும்.. எமது சந்ததிகளை அடிமைகளாகக் கூறி விற்க அனுமதிப்பதை விட இறந்த இந்த மனிதரல்லா.. ஜென்மங்கள்.. மறக்கப்படுவதே நன்று..! :D

The LTTE of course denied their involvement in the killing of Amirthalingam.

ipcs.org

(உண்மையில் அமிர்தலிங்கத்தைச் சுட்டுக் கொன்றது விசுவு.. அறிவு.. அலோசியஸ் தான் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. அவர்கள் விடுதலைப்புலிகள் என்று அடையாளம் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்.. அமிர்தலிங்கத்தின் கொலையில் சம்பந்தப் படுத்தப்பட்டிருக்கலாம். இதன் மூலம் பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டிருக்கலாம். விடுதலைப்புலிகள் பழியைச் சுமப்பதற்காக மாவீரர்களாக அந்தப் போராளிகளை புறக்கணிக்க முடியாது. அந்த வகையில் அவர்கள் மாவீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கலாம்.

விடுதலைப்புலிகளின் மாவீரர் பட்டியலில் இல்லாத போதும்.. ஒற்றைக் கண் சிவராசனும்.. தாணுவும் இன்னும் புலிகள் என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மாவீரர் பட்டியலில் வரவில்லை என்பதற்காக புலிகள் இல்லை என்றா தீர்மானிக்கிறார்கள்..???!)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இவர்கள் எல்லாம் அரசியல் கருத்து வேறுபாடுகளை தலைக்கனங்களை ஒதுக்கிவிட்டு.. விடுதலைப்புலிகளோடு ஆரம்பத்திலேயே ஒருங்கிணைந்து செயற்பட்டிருந்தால்.. இன்று தமிழீழக் கொடி ஐநாவில் பறந்து கொண்டிருக்கும். அவங்கள் பொடியள்.. என்ன தெரியும்.. நான் லோப் படிச்ச.. பெரிய தலை. என்று இந்தப் புண்ணாக்குகள் அளந்து திரிஞ்சவை அளவு கணக்கற்றவை. இவர்களின் மட்டம் தட்டுதலும்.. தற்பெருமையும்.. இனத்தின் தேவைகளை பற்றிக் கவலைப்பட வைக்கவில்லை. தமது வெள்ளை வேட்டி ஜிப்பா பற்றியே கவலைப்பட வைத்தன

முக்கியமாக துரையப்பாவை கூட புலிகள் தங்கள் சுட்டதாக சொன்னதில்லை... துரையப்பாவை சுட்டதாக EPRLF குழுவும், TELO வினரும் மாறி மாறி சொல்லிக்கொள்வார்கள்....

தமிழ் பொலீஸ் அதிகாரிகள், இயக்க உறுப்பினர்களை காட்டி க் கொடுத்த தமிழ் அதிகாரிகள் எண்று யாரையும் புலிகள் விட்டு வைத்ததும் இல்லை...

அதை வெளிப்படையாக சொல்ல புலிகள் தயங்கியதும் இல்லை...

போர் உக்கிரமாக நடந்த கடைசி காலத்தின் போது தமிழ் நாட்டு சட்ட சபையில் கலைஞர் கருணா நிதி பேசுகிறார்... பேசும் போது சொல்கிறார்.... சகோதர படுகொலைகளையும் , தமிழ் அரசியல் தலைவர்களான அமிர்தலிங்கம் போண்றோரும் கொல்லப்பட்டதுக்கு காரணமான புலிகள் மீது எனக்கு எந்த அனுதாபமும் கிடையாது எண்று.... இதை சொல்லிய கலைஞருக்கு இந்த கொலைகளின் காரண கர்த்தாக்கள் யார் என்பது நன்கு தெரியும்... ஆனால் சொல்கிறார்... காரணம் மக்களுக்கு உண்மை தெரியாது...

இந்த கொலைகளுக்கு எல்லாம் காரணமான RAW வின் முகத்தை அம்பல படுத்த வேண்டியது புலிகள்தான்... ஆனால் எல்லா பொறுப்பையும் புலிகளிடம் கொடுத்து விட்டு நாங்கள் எல்லாம் என்னததை புடுங்கிறது , வேற வேலைகள் என்னத்தை செய்யிறது எனும் கேள்வியும் எழுகிறதே...????

முதல் பக்கதில் தலைவர் அவர்களின் செவ்வியை இணைத்து இருந்தேன்... மீண்டும் இணைக்கிறேன்.. நேரம் கிடைத்தால் பாருங்கள்...

TELO சிறீ சபரத்தினம் பற்றியும் சொல்கிறார்..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக துரையப்பாவை கூட புலிகள் தங்கள் சுட்டதாக சொன்னதில்லை... துரையப்பாவை சுட்டதாக EPRLF குழுவும், TELO வினரும் மாறி மாறி சொல்லிக்கொள்வார்கள்....

தமிழ் பொலீஸ் அதிகாரிகள், இயக்க உறுப்பினர்களை காட்டி க் கொடுத்த தமிழ் அதிகாரிகள் எண்று யாரையும் புலிகள் விட்டு வைத்ததும் இல்லை...

அதை வெளிப்படையாக சொல்ல புலிகள் தயங்கியதும் இல்லை...

துரையப்பாவையோ அல்லது அமிர்தலிங்கத்தையோ அல்லது நீலன் திருச்செல்வத்தையோ நான் விடுதலைப்புலிகள் தான் கொன்றார்கள் என்று இங்கு உரிமை கோர எனது பதிவுகளை இடவில்லை. அது எமக்கு வேண்டாத வேலை. விடுதலைப்புலிகளுக்குத் தெரியும்.. எதை சொல்லனும்.. எதைச் சொல்லக் கூடாது என்று. நான் புலிகளின் பிரதிநிதியாக என்னைக் காட்டிக் கொண்டு அறிக்கை விட்டுக் கொண்டிருக்க முடியாது. அது விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டவர்களின் விடயம். அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

ஒரு பொது மகனாக துரையப்பா கொலையோ.. அமிர்தலிங்கம் கொலையோ.. நீலன் கொலையோ.. கதிர்காமர் கொலையோ என்னை பாதிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் மக்களின் நலனை கருத்தில் எடுத்துச் செயற்படத் தவறியதோடு மக்களின் துயரில் அரசியல் செய்ய முற்பட்டவர்கள். அதனால் தண்டிக்கப்பட்டார்கள். தண்டித்தவர்கள் எவராகவும் இருக்கட்டும். அது றோவாகட்டும்.. சி ஐ ஏ ஆகட்டும்.. சி ஐ டி ஆகட்டும். அதுவல்ல பிரச்சனை.

கருணாநிதி சொல்லிட்டார் என்பதற்காக புலிகள் வந்து நாங்கள் இதைச் செய்யவில்லை அதைச் செய்யவில்லை என்று நிறுவிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கருணாநிதியின் அறிக்கைக்கு மாவீரர் நடேசன் அண்ணா பதிலும் கொடுத்து விட்டார். நீங்கள் ஏன் அதனை இன்னும் இன்னும் புலிகள் பெயரால் மறுப்பதாக காட்டிக் கொள்ள முனைகிறீர்கள்..??! என்பதுதான் எனக்குப் புரியவில்லை..!

கருணாநிதி வை கோ புலிகளுடன் சேர்ந்து தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தான் சொன்னார்.. அதற்காக வைகோவை கட்சியில் இருந்து கூட வெளியேற்றினார். அதோடு அக்குற்றச்சாட்டை அடக்கிவிட்டார்.

உண்மையில் அப்படி ஒரு சதி பின்னப்பட்டிருப்பின்.. கருணாநிதி வைகோவை நீதிமன்றில் நிறுத்தி தண்டிச்சிருக்கலாமே. வைகோ வோடு சேர்ந்து சதி செய்த புலிகளை இனங்காட்டி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை. அவருக்கே தெரியும் தான் சொன்னது உண்மையில்லை என்று. கருணாநிதி சொல்லிட்டார் என்பதற்காக நீங்கள் வருத்தப்பட்டு புலிகள் மீது கறைகள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு அவற்றை நீக்க முற்படிகிறதாகக் காட்டிக் கொண்டு துரோகி அமிர்தலிங்கத்துக்கு புத்துயிர் கொடுக்க முனைவதாகவே எனக்குப் படுகிறது..! :D

இதற்காக நான் உங்களை தவறாக எண்ணுவதாகக் கருதக் கூடாது. உங்கள் கருத்துக்கள் அப்படியான ஒரு திசையிலும் பார்க்கத் தூண்டுகின்றது என்பதையே குறிப்பிட விரும்புகின்றேன்..! :rolleyes::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்

இங்கு எழுதுபவர்கள் அனைவரும் தேசவிரும்பிகள்

தயவுசெய்து

கைபட்டால் குற்றம்

கால் பட்டால் குற்றம் என்ற பாதையில் விமர்சனங்களை வைப்பதை நிறுத்தி

ஆரோக்கியமான

அவசியமான பாதை நோக்கி மாற்றுங்கள்

நன்றி

  • தொடங்கியவர்

கருணாநிதி சொல்லிட்டார் என்பதற்காக புலிகள் வந்து நாங்கள் இதைச் செய்யவில்லை அதைச் செய்யவில்லை என்று நிறுவிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கருணாநிதியின் அறிக்கைக்கு மாவீரர் நடேசன் அண்ணா பதிலும் கொடுத்து விட்டார். நீங்கள் ஏன் அதனை இன்னும் இன்னும் புலிகள் பெயரால் மறுப்பதாக காட்டிக் கொள்ள முனைகிறீர்கள்..??! என்பதுதான் எனக்குப் புரியவில்லை..!

நடேசன் அண்ணா ஆதாரங்களோடு காலம் வரும் போது யார் செய்தார்கள் என்பதை நிரூபிப்போம் எண்றுதானே சொன்னார்.... இப்போ அந்த ஆதாரங்களை எங்கை போய் தேடுவது...??

  • கருத்துக்கள உறவுகள்

நடேசன் அண்ணா ஆதாரங்களோடு காலம் வரும் போது யார் செய்தார்கள் என்பதை நிரூபிப்போம் எண்றுதானே சொன்னார்.... இப்போ அந்த ஆதாரங்களை எங்கை போய் தேடுவது...??

ஏன் இப்படி எழுதுகின்றீர்கள்

எவரையாவது மடக்கவேணும் என்பதற்காக தயவு செய்து எழுதவேண்டாம்

  • தொடங்கியவர்

ஏன் இப்படி எழுதுகின்றீர்கள்

எவரையாவது மடக்கவேணும் என்பதற்காக தயவு செய்து எழுதவேண்டாம்

அதிலை என்ன தவறு... உணமையைதானே எழுதினேன்...

வீடியோ ஆதாரங்கள், விசாரணை அறிக்கைகள் எல்லாம் எங்கை போய் தேடலாம் எண்று நீங்களோ அப்ப சொல்லுங்கோ...

என்னைப் பொறுத்தவரைக்கும் அமிரின் படுகொலை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டியது. அக் கொலையால் தமிழீழத்திற்கான போராட்டத்திற்கு எந்தவிதத்திலும் நன்மை ஏற்பட்டதாக நான் நினக்கவில்லை. அப்படி ஏதேனும் நன்மை ஏற்பட்டிருந்தால் அதனை தெளிவாக எனக்கு விளங்கப் படுத்தினால் நன்றி உடையவனாக இருப்பேன்

:நிழலி

சில மாதங்களுக்கு முன்னம் ஒரு திருமணத்துக்கு இங்கு சென்றிருந்தேன். நான் ஒரு மூலையில் உட்காந்திருந்தால் ... மறுமூலையில் ... சில ததேகூ பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தவர் ... ஒருவரை பார்த்த உடன் நெஞ்சு சற்று கனத்தது ... அப்போது இந்திய இராணுவ காலம், யாழுக்கு என் தந்தையுடன் வந்து வந்து விட்டு, திரும்பிப் போகும் போது வவுனியாவில் பஸ் மறிக்கப்பட்டு, இளையவர்கள் இறக்கப்படுகின்றனர். என்னையும் இறக்க, என் தந்தை, "தம்பி எனக்கு ஒரே மகன், நானும் இருதய வருத்தக்காரன் .. விட்டுவிடுங்கள் தயவுசெய்து" ... பதிலாக ."அப்படியோ அப்ப ... கொண்டு போய் தட்டி விடுங்கள்" என்று பதில் வந்தது. அப்பதிலைச் சொன்னது வேறு யாருமல்ல, அக்கல்யாணத்துக்கு வந்துருந்த இன்றைய ததேயின் தூணான .. இன்றைய பாராளுமன்ற உரூப்பினர் ஒருவர். ... அக்காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கிய துரோகிகள் ஒன்றாக வர்ணிக்கப்பட்டவர்தான் ... இன்றைய ததேயின் தூணான இப் பாஉ !!!!!

இன்னுமொரு பாஉ ..... அவர் இந்திய இராணுவ காலங்களில் விடுதலைப் புலிகள் என்று பிடிக்கப்பட்ட பலருக்கு யாழ் சுபாஸ் விடுதியில் வைத்து குதத்தினுள் தும்புத்தடி இடித்தவர்!! இவரும் ஒரு முக்கிய துரோகியாக ... ஆனால் இன்றோ இவரும் இன்னொரு தூண்!!!!!

இன்னுமொருவர் .... தலை சிறந்த பத்திரிகையாளர் ... மாமனிதருமானார்!!! ஆனால் பழையவைகள் ...???

இங்கு லண்டனில் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னால் புளொட், ஈபி.ஆர்.எல்.எப், ... இப்படி பலர் ... முன்னாளில் தேடப்பட்டவர்கள் .... எம்மக்களின் அவலங்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் .....

இப்படி ஒன்று, இரண்டு பேரல்ல ... நூற்றுக்கணக்கானவர்கள் என்ன ஆயிரக்கணக்காணவர்கள் மாறவில்லையா?????? ததே உடன் இணையவில்லையா??

இன்று ததே உடன் இணைந்திருக்கும் சிலர் செய்ததை விடவா அமிர்தலிங்கம் செய்து விட்டார்!!! இங்கு அமிர்தலிங்கம் ஒன்றும் தெரியாத பிராணி என வக்காலத்து வாங்க வரவில்லை!! இந்த அமிர்தலிங்கமே, எமது சகோதர படுகொலைகளின் தந்தையாவார்!! என்பது மறுக்க முடியாத உண்மை!!!

அமிர்தலிங்கத்தின் படுகொலையில் புலிகளுக்கு சம்பந்தம் இல்லவே இல்லை!!!

ஆனால் இச்சகோதர படுகொலைகள் ... எம்மினம் அழிய இன்னொரு காரனமாகி விட்டது!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று ஒரு அமிர்தலிங்கம்

இன்று பல அமிர்தலிங்கங்கள்

இவரும் தேர்தல் காலங்களில் "அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்தில்தான்" என வாக்குறுதி கொடுத்து பாமரமக்களை ஏமாற்றியவர்.

  • தொடங்கியவர்

சில மாதங்களுக்கு முன்னம் ஒரு திருமணத்துக்கு இங்கு சென்றிருந்தேன். நான் ஒரு மூலையில் உட்காந்திருந்தால் ... மறுமூலையில் ... சில ததேகூ பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தவர் ... ஒருவரை பார்த்த உடன் நெஞ்சு சற்று கனத்தது ... அப்போது இந்திய இராணுவ காலம், யாழுக்கு என் தந்தையுடன் வந்து வந்து விட்டு, திரும்பிப் போகும் போது வவுனியாவில் பஸ் மறிக்கப்பட்டு, இளையவர்கள் இறக்கப்படுகின்றனர். என்னையும் இறக்க, என் தந்தை, "தம்பி எனக்கு ஒரே மகன், நானும் இருதய வருத்தக்காரன் .. விட்டுவிடுங்கள் தயவுசெய்து" ... பதிலாக ."அப்படியோ அப்ப ... கொண்டு போய் தட்டி விடுங்கள்" என்று பதில் வந்தது. அப்பதிலைச் சொன்னது வேறு யாருமல்ல, அக்கல்யாணத்துக்கு வந்துருந்த இன்றைய ததேயின் தூணான .. இன்றைய பாராளுமன்ற உரூப்பினர் ஒருவர். ... அக்காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கிய துரோகிகள் ஒன்றாக வர்ணிக்கப்பட்டவர்தான் ... இன்றைய ததேயின் தூணான இப் பாஉ !!!!!

இன்னுமொரு பாஉ ..... அவர் இந்திய இராணுவ காலங்களில் விடுதலைப் புலிகள் என்று பிடிக்கப்பட்ட பலருக்கு யாழ் சுபாஸ் விடுதியில் வைத்து குதத்தினுள் தும்புத்தடி இடித்தவர்!! இவரும் ஒரு முக்கிய துரோகியாக ... ஆனால் இன்றோ இவரும் இன்னொரு தூண்!!!!!

முற்றிலும் உண்மை...

EPRLF இனரின் இன்னும் ஒருவர் யாரோ ஒருவர் அவர்களை பார்த்து EP காறர் எண்று சொல்லி போட்டார்கள் எண்று வாயுக்குள் கத்தி விட்டு கிளித்தவர்... ( கிளி பட்டவர் எனக்கு பழக்கமானவர் தான்)

புலிகள் மக்களுக்கும் தங்களுக்கும் அழிவுக்கும், வேலைகளுக்கு தடையாக இருக்கும் போது ஒருவரை சுட்டு இருக்கலாம்... நான் மறுக்க இல்லை.. ஆனால் வஞ்சம் வைத்து காலம் கடந்து யாரையும் கொலை செய்வது இல்லை...

இன்னுமொருவர் .... தலை சிறந்த பத்திரிகையாளர் ... மாமனிதருமானார்!!! ஆனால் பழையவைகள் ...???

இங்கு லண்டனில் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னால் புளொட், ஈபி.ஆர்.எல்.எப், ... இப்படி பலர் ... முன்னாளில் தேடப்பட்டவர்கள் .... எம்மக்களின் அவலங்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் .....

இப்படி ஒன்று, இரண்டு பேரல்ல ... நூற்றுக்கணக்கானவர்கள் என்ன ஆயிரக்கணக்காணவர்கள் மாறவில்லையா?????? ததே உடன் இணையவில்லையா??

இன்று ததே உடன் இணைந்திருக்கும் சிலர் செய்ததை விடவா அமிர்தலிங்கம் செய்து விட்டார்!!! இங்கு அமிர்தலிங்கம் ஒன்றும் தெரியாத பிராணி என வக்காலத்து வாங்க வரவில்லை!! இந்த அமிர்தலிங்கமே, எமது சகோதர படுகொலைகளின் தந்தையாவார்!! என்பது மறுக்க முடியாத உண்மை!!!

அமிர்தலிங்கத்தின் படுகொலையில் புலிகளுக்கு சம்பந்தம் இல்லவே இல்லை!!!

ஆனால் இச்சகோதர படுகொலைகள் ... எம்மினம் அழிய இன்னொரு காரனமாகி விட்டது!!!

சகோதரப்படுகொலைகள் எண்று நீங்கள் இலகுவாக சொல்லி விட்டீர்கள்... ஆனால் சந்தர்ப்பங்களும் சூழலும் கூட சில சமயங்களில் கடினமான முடிவை எடுக்க வைத்து விடுவதை மறுக்க முடியாது இல்லையா....

உதாரணத்துக்கு நீங்கள் ஒரு விடுதலை போராளியாக இருப்பீர்களானால் உங்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு..??? நீங்கள் யாரை தலைவராக நம்புகிறீர்களோ அவர்கள் தானே...??

அப்படி பார்க்கும் போது ஒரு போராளியை பிடித்து செண்று மிருகத்தனமாக தாக்குவது, வருமானத்துக்காக நடத்திய கடைகளை , பண்ணைகளை சூறை ஆடுவது, முகாம்களை விட்டு வெளீயே கண்டால் சுட்டு விடுவோம் எண்று எச்சரிப்பது எண்று, எல்லா வற்றையும் சிலர் வேண்டும் எண்றே ( நேரடியாக சொன்னால் RAW ன் திட்டங்களுக்கு அமைய) செய்யும் போது அவைகளை தாண்டி நம்பிவந்த போராளிகளையும் காப்பாற்றி , போராட்டத்தை கொண்டு செல்லும் பொறுப்பு தலைவருக்கு இருக்கும் தானே...??

அப்படி பார்க்கும் போது ஒரு போராட்ட குழு எனும் தலைவரின் முடிவுக்கு வேறு கருத்துக்கு இடம் இல்லை...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.