Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பெண்களிடம் ஆண்கள் விரும்புவது/ எதிர்பார்ப்பது"

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதேன் எப்ப பார் பெண்களுக்கு ஆண்களில் பிடித்த விடயம் பற்றித்தான்.. அல்லது பெண்களை எப்படி தாஜா பண்ணுறது.. கூஜா பண்ணுறது பற்றித்தான் ஆராய்ச்சி நடத்திக்கிட்டு இருக்கிறாங்க.

ஆண்களுக்கு பெண்களிடம் பிடித்த விடயங்கள்.. பெண்கள் ஆண்களை தாஜா.. கூஜா பண்ணுற விடயங்கள் பற்றி எழுதிறாங்க இல்லை. ஆண்கள் என்றால் என்ன அவ்வளவு சீப்பான ஆக்களா..???! பெண்களைக் கண்ட உடன வழிஞ்சிக்கிட்டு போற கூட்டம் என்றா நினைக்கிறாங்க..???!

புரியல்லையே எனக்கு...! :D:):D

:D

நேயர் விருப்பத்திற்காக.......

"பெண்களிடம் ஆண்கள் விரும்புவது/ எதிர்பார்ப்பது" :lol:

அண்ணாமார்/ தம்பிமார் அடி பாடு இல்லாம....அவசர படாம உங்கள் கருத்துகளை போட்டு தாக்குங்கோ.... :lol:

Edited by Ilayapillai

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு பாசம்

  • கருத்துக்கள உறவுகள்

அழகு.. அறிவு.. அன்பு.. அரவணைப்பு.. அமைதி.. இந்த ஐந்து குணங்களையும்.. கொண்டுள்ள.. அல்லது தரக்கூடிய பெண்ணை மட்டும் ஒரு ஆணாக நான் விரும்புவேன்..! :lol:

Edited by nedukkalapoovan

அழகு.. அறிவு.. அன்பு.. அரவணைப்பு.. அமைதி.. இந்த ஐந்து குணங்களையும்.. கொண்டுள்ள.. அல்லது தரக்கூடிய பெண்ணை மட்டும் ஒரு ஆணாக நான் விரும்புவேன்..! :lol:

இதில அச்சாப்பிள்ளையாட்டம் உப்பிடி எழுதப்பட்டு இருப்பதன் பின்னால் இருக்கிற மர்மம் என்ன எண்டு எனக்கு தெரியும். :)

  • கருத்துக்கள உறவுகள்

இதில அச்சாப்பிள்ளையாட்டம் உப்பிடி எழுதப்பட்டு இருப்பதன் பின்னால் இருக்கிற மர்மம் என்ன எண்டு எனக்கு தெரியும். :lol:

நானும் பொண்ணு தோடுறேன் என்று நினைக்கிறீங்களோ. அதுதான் இல்லையே. இப்படியான பொண்ணாவது இந்த உலகத்திலையாவது.. அதுதான் துணிந்து சொன்னேன்..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகு.. அறிவு.. அன்பு.. அரவணைப்பு.. அமைதி.. இந்த ஐந்து குணங்களையும்.. கொண்டுள்ள.. அல்லது தரக்கூடிய பெண்ணை மட்டும் ஒரு ஆணாக நான் விரும்புவேன்..! :lol:

:)

ஐயோ நெடுக்கு, இதெல்லாம் தான் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது...

பேசாம நீங்கள் - அ வரிசையை விட்டுட்டு ச வரிசையில ஏதும் " சமையல்/சீதனம்.." என்று கேளுங்கோ... நடக்கிறதுக்கு சாத்தியம் அதிகம்!

நானும் பொண்ணு தோடுறேன் என்று நினைக்கிறீங்களோ. அதுதான் இல்லையே. இப்படியான பொண்ணாவது இந்த உலகத்திலையாவது.. அதுதான் துணிந்து சொன்னேன்..! :lol:

:D

நீங்கள் தேடுறியளோ இல்லையோ - ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் ஒண்டிட்ட மாட்ட தான் போறியள்...

  • கருத்துக்கள உறவுகள்

இன்பத்திலும் துன்பத்திலும் கூட இருப்பவள்.

  • கருத்துக்கள உறவுகள்

:)

ஐயோ நெடுக்கு, இதெல்லாம் தான் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது...

பேசாம நீங்கள் - அ வரிசையை விட்டுட்டு ச வரிசையில ஏதும் " சமையல்/சீதனம்.." என்று கேளுங்கோ... நடக்கிறதுக்கு சாத்தியம் அதிகம்!

எனக்கு சமைக்கத் தெரியும்.. உழைக்கத் தெரியும்.. அதனால் சமையல்.. சீதனம் எல்லாம் ஒரு பெண்ணிடமிருந்து எதிர்பார்ப்பது அவசியமில்லை. அவை அவைக்கு சமைக்க உழைக்க வழி தெரிஞ்சாச் சரி..! :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சமைக்கத் தெரியும்.. உழைக்கத் தெரியும்.. அதனால் சமையல்.. சீதனம் எல்லாம் ஒரு பெண்ணிடமிருந்து எதிர்பார்ப்பது அவசியமில்லை. அவை அவைக்கு சமைக்க உழைக்க வழி தெரிஞ்சாச் சரி..! :):D

அழகு.. அறிவு.. அன்பு.. அரவணைப்பு.. அமைதி - இதெல்லாம் மட்டும் ஆண்களிடம் இல்லை என்றா பெண்களிடம் எதிர்பார்க்கிறியள்?

சீதனமும் சமையலும் எனது தனிப்பட்ட எதிர்பார்ப்பு இல்லை....

எங்கட சனத்தை நக்கல் அடிக்க தான் சொன்னேன்.... :lol:

இருந்தாலும் சீதனம் வாங்கிறவன்...சமைக்க விடுறவன் எல்லாம் - சமைக்க தெரியாம உழைக்க தெரியாம இருக்கிறேல்லை அண்ணா - அவங்கள் பிழைக்க தெரிந்ததால அப்படி!!!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அழகு.. அறிவு.. அன்பு.. அரவணைப்பு.. அமைதி - இதெல்லாம் மட்டும் ஆண்களிடம் இல்லை என்றா பெண்களிடம் எதிர்பார்க்கிறியள்?

இவை எல்லாம் ஆணிடம் இருந்தும் பெண்ணிடம் இல்லை என்றால் அவளால் எப்படி அந்த ஆணைப் புரிந்து கொள்ள முடியும்..!

அழகு இருக்கிறவளுக்குத்தான் ஆணின் அழகை ரசிக்க வரும்.

அறிவு உள்ளவளுக்குத்தான் ஆணை.. உலகை படிக்க வரும்.

அன்பு உள்ளவளுக்குத்தான் ஆண் காட்டும் அன்பை உணர முடியும்.. இல்ல சந்தேகம் தான் படுவினம்.

அரவணைக்கத் தெரிந்தவளுக்குத்தான் ஆணின் அரவணைப்புப் புரியும்.

அமைதி அடையத் தெரிஞ்சவளுக்குத்தான் ஆணின் அமைதி புரியும்...!

இவற்றில் ஒன்று தவறினாக் கூட வாழ்க்கை கஸ்டம் தான்...! அதுதான் நான் இவற்றை கேட்டேன்..! ஆனால் உலகில்.. இவையெல்லாம் அமைந்த பெண் இருப்பது அரிதிலும் அரிது. அதனால் தான் ஆண்கள் அமைதியிழந்து திரிகிறார்கள். கலியாணத்தை வெறுக்கிறார்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும்.அவரவர் ரசனை,தேவைகளைப்பொறுத்து.ஆனால

் கடைசியில் எல்லாரும் எதிர்பார்ப்பது பிச்சை வேண்டாம் நாயை பிடி

என்பதாகத்தான் இருக்கும். :lol:

மிச்ச எல்லாம் சரி - ஆனால் அது என்ன - அழகு உள்ளவள் தான் ஆணின் அழகை ரசிக்க முடியும்?? :lol:

அண்ணா - அழகாய் இருந்தால் ஆரும் ரசிக்கலாம்.... :D

உங்கட ரசனைக்கேற்ற வடிவான மனுசி வேணும் என்று எதிர் பார்க்கிறது பிழை இல்லை - ஆனால் அவள் வடிவா இருந்தால் தான் என்னை ரசிப்பாள் என்றது - உங்களுக்கே ஓவராய் தெரியேல்லையா?!!! :)

பொதுவாக ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும்.அவரவர் ரசனை,தேவைகளைப்பொறுத்து.ஆனால

் கடைசியில் எல்லாரும் எதிர்பார்ப்பது பிச்சை வேண்டாம் நாயை பிடி

என்பதாகத்தான் இருக்கும். :D

:D

  • கருத்துக்கள உறவுகள்

:D

மிச்ச எல்லாம் சரி - ஆனால் அது என்ன - அழகு உள்ளவள் தான் ஆணின் அழகை ரசிக்க முடியும்?? :)

அண்ணா - அழகாய் இருந்தால் ஆரும் ரசிக்கலாம்.... :D

உங்கட ரசனைக்கேற்ற வடிவான மனுசி வேணும் என்று எதிர் பார்க்கிறது பிழை இல்லை - ஆனால் அவள் வடிவா இருந்தால் தான் என்னை ரசிப்பாள் என்றது - உங்களுக்கே ஓவராய் தெரியேல்லையா?!!! :lol:

எனக்குத் தெரிஞ்ச ஒரு அண்ணா. அவர் கான்சம்மான ஆள். ஆனால் அவருக்கு வாய்ச்சது ஒரு மாதிரி. அது தன்னையும் அழகு படுத்திக்காது. அவரின்ர அழகையும் ரசிக்காது. அப்புறம் என்ன கொஞ்ச நாளில அந்த அண்ணாவும் அந்த பொண்ணிட நிலைமைக்குப் போயிட்டார். இத்தனைக்கும் கலியாணம் கட்டும் வரை அவரின் பெற்றோரை அவர் தன்னை அழகு படுத்திறதுக்கு படுத்திய பாடுகளை நான் அறிவேன். சாதாரண சேட் போடமாட்டார். அந்த குறிப்பிட்ட ரேட் மார்க் உள்ள சேட்தான் போடுவார். புதுப் புது மோட்டார் சைக்கிள் வேணும். இப்படி இன்னோரென்ன. இறுதியில்.. என்ன ஆச்சு...???! அதுவும் அவரின்ர மச்சாள் என்று கட்டிக் கொண்டார்.

வேணாம் ஐயா அப்படி ஒரு நிலை.. எந்த ஆணுக்கும். பாவங்கள். ஆண்களுக்குள்ளும் எத்தனை சின்னச் சின்ன ஆசைகள்..! எவா கவனிக்கிறா அதை. தங்கட சின்னச் சின்ன ஆசைகளை தான் ஆண்கள் கவனிக்கனும் என்பதே அநேக பெண்டிரின் நிலை..! ஏன் இந்த சுயநலம். அல்லது பெண்களை இப்படியாக இந்த உலகம் வளர்க்குதா..???!

மாறனும்.. இந்த உலகம் மாறனும்.. இல்ல மாத்தனும்..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவை எல்லாம் ஆணிடம் இருந்தும் பெண்ணிடம் இல்லை என்றால் அவளால் எப்படி அந்த ஆணைப் புரிந்து கொள்ள முடியும்..!

அழகு இருக்கிறவளுக்குத்தான் ஆணின் அழகை ரசிக்க வரும்.

அறிவு உள்ளவளுக்குத்தான் ஆணை.. உலகை படிக்க வரும்.

அன்பு உள்ளவளுக்குத்தான் ஆண் காட்டும் அன்பை உணர முடியும்.. இல்ல சந்தேகம் தான் படுவினம்.

அரவணைக்கத் தெரிந்தவளுக்குத்தான் ஆணின் அரவணைப்புப் புரியும்.

அமைதி அடையத் தெரிஞ்சவளுக்குத்தான் ஆணின் அமைதி புரியும்...!

இவற்றில் ஒன்று தவறினாக் கூட வாழ்க்கை கஸ்டம் தான்...! அதுதான் நான் இவற்றை கேட்டேன்..! ஆனால் உலகில்.. இவையெல்லாம் அமைந்த பெண் இருப்பது அரிதிலும் அரிது. அதனால் தான் ஆண்கள் அமைதியிழந்து திரிகிறார்கள். கலியாணத்தை வெறுக்கிறார்கள்..! :lol:

மேற்சொன்ன குறிப்புகளுடன் பெண்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். ஆனால் என்ன- இதோட சேர்த்து நாலு வேற குணமும் இருக்கும்....அந்த குணங்கள் கெட்டது என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவற்றை அனுசரித்து போகும் மனம் ஆண்களிடம் இல்லாததால் - அல்லது பிழை மட்டும் பிடிப்பதால் (those who see the glass as half-EMPTY) பெண்களில் இருக்கும் நல்ல குணங்களை இனம் காண முடியாமற் போகும் ஆண்களும் உண்டு!

:lol:

இருக்கும்.. ஆனால் இவை சிறிய அளவில் மற்றவை பெரிய அளவில். அவர்களுக்கே தெரியாம இருக்கும்.. எப்படி அன்பை வெளிப்படுத்திறது.. இனங்காண்பது என்று. அப்படியான பெண்களை என்ன செய்யுறது. கட்டிக்கிட்டு மாரடிக்க வேண்டியதுதான். அதிலும்.. பேசாமல் சிவனே என்றிருக்கலாம்..! :):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குத் தெரிஞ்ச ஒரு அண்ணா. அவர் கான்சம்மான ஆள். ஆனால் அவருக்கு வாய்ச்சது ஒரு மாதிரி. அது தன்னையும் அழகு படுத்திக்காது. அவரின்ர அழகையும் ரசிக்காது. அப்புறம் என்ன கொஞ்ச நாளில அந்த அண்ணாவும் அந்த பொண்ணிட நிலைமைக்குப் போயிட்டார். இத்தனைக்கும் கலியாணம் கட்டும் வரை அவரின் பெற்றோரை அவர் தன்னை அழகு படுத்திறதுக்கு படுத்திய பாடுகளை நான் அறிவேன். சாதாரண சேட் போடமாட்டார். அந்த குறிப்பிட்ட ரேட் மார்க் உள்ள சேட்தான் போடுவார். புதுப் புது மோட்டார் சைக்கிள் வேணும். இப்படி இன்னோரென்ன. இறுதியில்.. என்ன ஆச்சு...???! அதுவும் அவரின்ர மச்சாள் என்று கட்டிக் கொண்டார்.

வேணாம் ஐயா அப்படி ஒரு நிலை.. எந்த ஆணுக்கும். பாவங்கள். ஆண்களுக்குள்ளும் எத்தனை சின்னச் சின்ன ஆசைகள்..! எவா கவனிக்கிறா அதை. தங்கட சின்னச் சின்ன ஆசைகளை தான் ஆண்கள் கவனிக்கனும் என்பதே அநேக பெண்டிரின் நிலை..! ஏன் இந்த சுயநலம். அல்லது பெண்களை இப்படியாக இந்த உலகம் வளர்க்குதா..???!

மாறனும்.. இந்த உலகம் மாறனும்.. இல்ல மாத்தனும்..! :D

ஐயோ பாவம் அந்த மனுசி.....

இவருக்கு பெரிய கலர்ஸ் காட்ட தெரியும் என்றால் - அவவையும் இவர் அல்லோ மாத்தி எடுத்திருக்க வேணும்......

brainwash பண்ணற கெட்டித்தனம் அவரவரில் இருக்கு.... :lol:

அழகானவள் என்றதும் ரசனையுள்ளவள் என்றதும் ஒண்டா :) ? ... ரசனையுள்ளவள் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தாலும் - தன்னை அழகாய் காட்டி கொள்ள கூடியவளாய் இருப்பாள்..

இல்லையோ? :lol:

அப்ப நீங்கள் ஏன் அழகானவளை தேடுறியள்? ரசனையோட ஒண்டு காணும் தானே?!! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம் அந்த மனுசி.....

இவருக்கு பெரிய கலர்ஸ் காட்ட தெரியும் என்றால் - அவவையும் இவர் அல்லோ மாத்தி எடுத்திருக்க வேணும்......

brainwash பண்ணற கெட்டித்தனம் அவரவரில் இருக்கு.... :lol:

அழகானவள் என்றதும் ரசனையுள்ளவள் என்றதும் ஒண்டா :lol: ? ... ரசனையுள்ளவள் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தாலும் - தன்னை அழகாய் காட்டி கொள்ள கூடியவளாய் இருப்பாள்..

இல்லையோ? :D

அப்ப நீங்கள் ஏன் அழகானவளை தேடுறியள்? ரசனையோட ஒண்டு காணும் தானே?!! :D

மூளைச் சலவை செய்து ஒருவரை மாற்றுவதிலும்... அவரா உணர்ந்து மாறும் போது அதில் இயல்புத்தன்மை அதிகம் இருக்கும். உங்களுக்காக மாறுவதைக் காட்டிலும் தனக்காக அத்தோடு உங்களுக்காக மாறும் தன்மை இன்னும் அழகானதா இயல்பானதா அமையும் என்று நினைக்கிறன்.

அழகானவள் எல்லாம் ரசனையுள்ளவள் என்றில்லை. ஆனால் தனது அழகை ரசிக்கத் தெரிந்தவளுக்கு பிறரின் அழகையும் ரசிக்க வரும் என்றே சொல்கிறேன். தனது அழகையே ரசிகத் தெரியாத ஆனால் அடுத்தவரைக் கவர அழகாய் இருப்பவர்களே இன்று உலகில் அதிகம். அது ஆபத்தானது. போலித்தனமானது..!

நான் அழகை பெண்களிடத்தில் விட இயற்கையில் அதிகம் ரசிக்கிறேன். ஆனால் அழகான எதனையும் ரசிக்கத் தவறமாட்டேன். அது பெண்ணாக இருக்கட்டும் பொருளாக இருக்கட்டும். ஆனால் எட்ட இருந்து ரசிப்பேன். ரசிப்பதில் தவறில்லை. அடுத்தவரின் அழகை.. அடைய நினைப்பதுதான் தவறு..! :D:)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூளைச் சலவை செய்து ஒருவரை மாற்றுவதிலும்... அவரா உணர்ந்து மாறும் போது அதில் இயல்புத்தன்மை அதிகம் இருக்கும். உங்களுக்காக மாறுவதைக் காட்டிலும் தனக்காக அத்தோடு உங்களுக்காக மாறும் தன்மை இன்னும் அழகானதா இயல்பானதா அமையும் என்று நினைக்கிறன்.

அழகானவள் எல்லாம் ரசனையுள்ளவள் என்றில்லை. ஆனால் தனது அழகை ரசிக்கத் தெரிந்தவளுக்கு பிறரின் அழகையும் ரசிக்க வரும் என்றே சொல்கிறேன். தனது அழகையே ரசிகத் தெரியாத ஆனால் அடுத்தவரைக் கவர அழகாய் இருப்பவர்களே இன்று உலகில் அதிகம். அது ஆபத்தானது. போலித்தனமானது..!

நான் அழகை பெண்களிடத்தில் விட இயற்கையில் அதிகம் ரசிக்கிறேன். ஆனால் அழகான எதனையும் ரசிக்கத் தவறமாட்டேன். அது பெண்ணாக இருக்கட்டும் பொருளாக இருக்கட்டும். ஆனால் எட்ட இருந்து ரசிப்பேன். ரசிப்பதில் தவறில்லை. அடுத்தவரின் அழகை.. அடைய நினைப்பதுதான் தவறு..! :):lol:

செய்யற மூளை சலவை வேலையை சீராய் செய்தால் அது எனக்காக மாறுதா தனக்காக மாறுதா என்று அவருக்கே அல்ல - எனக்கே தெரியாது இருக்கும்!!!!

:lol:

சுத்தி சுத்தி சுப்பர்ட சுடலைக்க தான் பழயபடி போகுது கதை - அடைய நினைப்பது பிழையா? அல்லது அந்த நினைப்பை செயற்படுத்துவது பிழையா?!

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தி சுத்தி சுப்பர்ட சுடலைக்க தான் பழயபடி போகுது கதை - அடைய நினைப்பது பிழையா? அல்லது அந்த நினைப்பை செயற்படுத்துவது பிழையா?!

அழகை ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டால் அடைய மனசு முனையாது. அழகை சொந்தங் கொண்டாட நினைச்சால் தான்.. மனசு அடைய.. அதைச் செயற்படுத்த கட்டளை போடும்..!

கண்காட்சியகத்தில் ஒரு அழகிய ஓவியம். ரசனைக்கு மட்டுமே. தொட்டு பார்க்க ஆசைப்பட்டால்.. கைபடக் கூடாது கைபட்டால் தண்டனை என்ற வரிகளை எழுதி வைச்சுத்தான் மனசுகளைக் கட்டிப்போட வேண்டி இருக்குது..! அதற்காக கை தொட வைக்கிற அளவுக்கு ஓவியம் வரைந்தது ஓவியரின் தவறல்ல. அவர் தனது திறமையை.. ரசனையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதை ரசிப்பதை விடுத்து.. கை போட வெளிக்கிடுறது.. தப்புத்தானே..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகை ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டால் அடைய மனசு முனையாது. அழகை சொந்தங் கொண்டாட நினைச்சால் தான்.. மனசு அடைய.. அதைச் செயற்படுத்த கட்டளை போடும்..!

கண்காட்சியகத்தில் ஒரு அழகிய ஓவியம். ரசனைக்கு மட்டுமே. தொட்டு பார்க்க ஆசைப்பட்டால்.. கைபடக் கூடாது கைபட்டால் தண்டனை என்ற வரிகளை எழுதி வைச்சுத்தான் மனசுகளைக் கட்டிப்போட வேண்டி இருக்குது..! அதற்காக கை தொட வைக்கிற அளவுக்கு ஓவியம் வரைந்தது ஓவியரின் தவறல்ல. அவர் தனது திறமையை.. ரசனையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதை ரசிப்பதை விடுத்து.. கை போட வெளிக்கிடுறது.. தப்புத்தானே..! :D

:D

சும்மா அழகான ஓவியங்களை பார்த்து ரசிக்கிறதுக்கு மட்டும் என்றால் கண்காட்சிக்கு போட்டு போட்டு வரலாம்....மிக பிடித்த ஒரு ஓவியத்தை வாங்கி - அட்லீஸ்ட் அந்த ஓவியத்தின் பிரதியை வாங்கி வீடு சுவரில் மாட்டி வைத்திருந்தால் தவறு இல்லை. உங்களுக்கு பிடித்ததொன்று அமையும் - எதிர்பாராத நேரத்தில்....உங்கட கொள்கைகளில் இருந்து நீங்கள் மாற தேவை இல்லை - இந்த பாழாய் போன வாழ்க்கை அதை செய்யும்.... அது விதி!! :)

அண்ணா- சொல்றன் என்று குறை நினைக்க கூடாது! மாரடிக்கிறது என்றது நீங்கள் இந்த யாழ் களத்தில தாராளமாய் வஞ்சகம் இல்லாம- :D அவல் சாப்பிற மாதிரி- செய்கிற ஆள் தானே?!!! பிறகேன் பொம்பிளையளுக்கு பயப்பிடுறியள்?!! :lol:

இருந்திட்டு - நீங்கள் ஒருவேளை நெடுக்காலபோவாளோ என்று நினைக்க தோணும்... :lol:

இருந்தாலும் தப்பில்லை... :D

quote name='nedukkalapoovan' date='Jul 18 2009, 05:28 AM' post='530071']

அழகு.. அறிவு.. அன்பு.. அரவணைப்பு.. அமைதி.. இந்த ஐந்து குணங்களையும்.. கொண்டுள்ள.. அல்லது தரக்கூடிய பெண்ணை மட்டும் ஒரு ஆணாக நான் விரும்புவேன்..! :lol:

அழகு.. அறிவு.. அன்பு.. அரவணைப்பு.. அமைதி.. இந்த ஐந்து குணங்களையும்.. கொண்டுள்ள.. அல்லது தரக்கூடிய பெண்ணை மட்டும் ஒரு ஆணாக நான் விரும்புவேன்..! :lol:

நானும் பொண்ணு தோடுறேன் என்று நினைக்கிறீங்களோ. அதுதான் இல்லையே. இப்படியான பொண்ணாவது இந்த உலகத்திலையாவது.. அதுதான் துணிந்து சொன்னேன்..! :)

அப்பிடி எண்டால் உங்கடை அம்மாவில இந்த ஐஞ்சு அம்சங்களும் இல்லையோ? கடைசியில பாத்தீங்களோ கவிட்டுப்போட்டீங்கள். பெண் எண்டுறது மூன்றாவது மனிதராக இருக்கவேணும் எண்டு மட்டும் இல்லைத்தானே. அது அம்மாவாகவோ அக்காவாகவோகூட இருக்கலாம் தானே? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா- சொல்றன் என்று குறை நினைக்க கூடாது! மாரடிக்கிறது என்றது நீங்கள் இந்த யாழ் களத்தில தாராளமாய் வஞ்சகம் இல்லாம- biggrin.gif அவல் சாப்பிற மாதிரி- செய்கிற ஆள் தானே?!!! பிறகேன் பொம்பிளையளுக்கு பயப்பிடுறியள்?!!

நானாவது பொம்பிளையளுக்கு பயப்பபிடுறதாவது. வேணும் என்றால் நல்லா தர்க்கச் சண்டை பிடிப்பன். அதுக்கே அவங்க தாக்குப் பிடிக்கமாட்டாங்க. அதனால இப்ப எல்லாம் மெளனமாகிடுறது நல்லம் என்று முடிவு கட்டிட்டன்..! வீணா தர்க்கிக்கப் போய் வீணா கெட்டவனுன்னு பெயர் வாங்க்கிறதிலும்.. பேசாம இருந்து அவதானிக்கிறது மேல்..! :):D

அப்பிடி எண்டால் உங்கடை அம்மாவில இந்த ஐஞ்சு அம்சங்களும் இல்லையோ? கடைசியில பாத்தீங்களோ கவிட்டுப்போட்டீங்கள். பெண் எண்டுறது மூன்றாவது மனிதராக இருக்கவேணும் எண்டு மட்டும் இல்லைத்தானே. அது அம்மாவாகவோ அக்காவாகவோகூட இருக்கலாம் தானே? :D

அம்மா எனக்கு உயிர் தந்து உடல் தந்தவள். அவள் தான் நானே. எப்படி அவளிடம் போய் அழகை எதிர்பார்க்கிறது. என்னிடம் உள்ளதே அவள் தந்த அழகு தானே.

அக்கா.. தங்கை.. அதுகள் என்னோட கருவில் கூட வளராத பாவத்தைத் தவிர வேறென்ன செய்ததுகள். அதுகள அழகூட்டி அறிவூட்டி.. அரவணைத்து.. அமைதிப்படுத்தி.. அன்பு காட்டி வளர்க்க வேண்டிய தம்பி அல்லது அண்ணன் நான்.

ஆனால் வாழ்க்கைத் துணை என்பது எங்கையோ பிறந்து எங்கையோ வளர்ந்து உங்களிடம் வாறது அல்லது நீங்கள் கொண்டு வந்து சேர்ப்பது. அதனிடம்.. அழகு.. அறிவு.. அரவணைப்பு.. அமைதி.. அன்பு.. இதை எதிர்பார்ப்பது தவறல்ல. ஏன்னா எமக்குத் தெரியாது.. அவரின் பின்னணி..! :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கைத் துணை என்பது எங்கையோ பிறந்து எங்கையோ வளர்ந்து உங்களிடம் வாறது அல்லது நீங்கள் கொண்டு வந்து சேர்ப்பது. அதனிடம்.. அழகு.. அறிவு.. அரவணைப்பு.. அமைதி.. அன்பு.. இதை எதிர்பார்ப்பது தவறல்ல. ஏன்னா எமக்குத் தெரியாது.. அவரின் பின்னணி..! :lol::D

பின்னணி தெரியாததால- கூட பிரச்சனையா - இல்லை வந்தால் பிறகு நிகழும் மாற்றங்களால கூட பிரச்சனையா..... :)

இதுவரை எப்படி இருந்தது, இப்ப எப்படி இருக்குது என்பதை வைத்து தான் "பின்னணி" மதிப்பிடலாம்..... ஆனால் அந்த கணிப்பீடு சரியாக இருந்தாலும்- காலப்போக்கில் மாறலாம்....நினைத்தது போல இனி இருக்கும் என்பது - இருந்து பார்த்து அறிந்து வெருள வேண்டிய விடயம் :D !!!

நானாவது பொம்பிளையளுக்கு பயப்பபிடுறதாவது. வேணும் என்றால் நல்லா தர்க்கச் சண்டை பிடிப்பன். அதுக்கே அவங்க தாக்குப் பிடிக்கமாட்டாங்க. அதனால இப்ப எல்லாம் மெளனமாகிடுறது நல்லம் என்று முடிவு கட்டிட்டன்..! வீணா தர்க்கிக்கப் போய் வீணா கெட்டவனுன்னு பெயர் வாங்க்கிறதிலும்.. பேசாம இருந்து அவதானிக்கிறது மேல்..! :D :D

:D:lol: சரி இருந்து அவதானிப்பம் - மற்ற ஆக்கள் என்ன சொல்லினம் - ஆண்கள் பெண்களிடம் எதை எதிர்பாற்கினம் என்பதை பற்றி... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் எம் வாழ்க்கையில் பல முறைகளில் (அம்மா சகோதரி மனைவி மகள் )இணைந்துள்ளாள்.

ஒவ்வொரு நிலையிலும் பெண்கள் ஆண்களிடம் விரும்புவது/ எதிர்பார்ப்பது வெவ்வேறானவையாகும்.

இவ் உறவுகளில் கூடுதலாக மனைவி என்ற உறவைப்பற்றியே பலர் கருத்துக்களை கூறுகின்றார்கள்.

தான் நல்லதொரு மனிதனாக மற்றவர்களிற்கு முன்மாதிரியாக வாழமுற்படும் ஆண் நல்லதொரு புரிந்துணர்வு கொண்ட பெண்ணையே எதிர்பார்பாப்பான்.

எனக்கு தெரிந்த பெண்ணின் கணவன் நீ எப்போதும் தமிழருக்குரிய கலாசாரத்துடனே வாழவேண்டும் எனக்கூறுவார் ஆனால் அவரது நடவடிக்கை யாவும் மேல்நாடு.

உலகம் இப்போது போகின்ற போக்கு.

பெண் எம் வாழ்க்கையில் பல முறைகளில் (அம்மா சகோதரி மனைவி மகள் )இணைந்துள்ளாள்.

ஒவ்வொரு நிலையிலும் பெண்கள் ஆண்களிடம் விரும்புவது/ எதிர்பார்ப்பது வெவ்வேறானவையாகும்.

இவ் உறவுகளில் கூடுதலாக மனைவி என்ற உறவைப்பற்றியே பலர் கருத்துக்களை கூறுகின்றார்கள்.

தான் நல்லதொரு மனிதனாக மற்றவர்களிற்கு முன்மாதிரியாக வாழமுற்படும் ஆண் நல்லதொரு புரிந்துணர்வு கொண்ட பெண்ணையே எதிர்பார்ப்பான்.

எனக்கு தெரிந்த பெண்ணின் கணவன் நீ எப்போதும் தமிழருக்குரிய கலாசாரத்துடனே வாழவேண்டும் எனக்கூறுவார் ஆனால் அவரது நடவடிக்கை யாவும் மேல்நாடு.

உலகம் இப்போது போகின்ற போக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.