Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசுக்கு இந்தியா உதவினால்... தனி ஈழம் அமைக்க தமிழர்களுக்கு உதவுவோம்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேவையில்லாத வாக்குவாதங்கள் எதற்குமே உதவாது. தமிழக மக்களுக்கு விழிப்பு உணர்வு ஊட்டுகின்ற விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர மற்றயவர்கள் எல்லோரும் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு வரக்கூடாது என்று சிந்தித்து செயலாற்றுபவர்கள்.ஆகவே தமிழக உறவுகளை எழுச்சி கொள்ள வைக்கும் உறவுகளைத் திட்டாதீர். என்றோ ஒருநாள் தமிழகம் எழுச்சி கொள்ளும் அன்று உலகத் தமிழினத்திற்கு விடிவு பிறக்கும்.

உண்மை !

" தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் " என்ற குறளடிவாயிலாக வள்ளுவர் சுட்டியது நோக்கத்தக்கது.

தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான செயற்றிறன், பங்களிப்பு, பங்குபற்றுதல் என்பது தொடர்பாக நாம் ஒவ்வொருவரும் ஒருமுறை ஆறுதலாக இருந்து ஆறஅமரக், குறிப்பாக ஈழத்தமிழர்களாகிய நாம் சிந்திப்போமாயின் மற்றவரை நோக்கி, நீ என்ன செய்தாய்! என்று கை நீட்டுமுன், ஒன்றுக்கு இரண்டு முறை நாம் என்ன செய்தோம் என்று சிந்திப்போமாயின் இன்னும் கடந்து செல்ல வேண்டியுள்ள கடினமான பாதையில் தெளிவுண்டாகும்.

  • Replies 54
  • Views 3.1k
  • Created
  • Last Reply

சகோதரன்.. எதிரி.. இந்த ரெண்டு பேரிலும் பிழை இருக்கிறது என்றால், சிங்களவன் முதலில் எதிரியின் பிழையையே தூக்கிப்பிடிப்பான். சகோதரப் பிழையை சிறிது ஓரம்கட்டி வைத்து விடுவான், பிறகு பார்த்துக் கொள்ளலாமென்று.! நாமெல்லாம் அப்படியே தலைகீழ்..!

எதிரியையும் சகோதரனையும் ஒரேதட்டில் வைக்கவேண்டியிருக்கிறது...

2005ம் ஆண்டு தொடக்கம் கத்திகொண்டுதிரியிரன்.. உந்த எண்ணம்... தெரிந்துகொண்டு செக்கில் தலையை கொடுப்பது போல எண்டு... இப்ப பாருங்கோ உந்த மாடுகளை நம்பி தலையே இல்லாமல் இருக்கொறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வேலவன் அவர்கட்கு

ஈழத்தமிழராகிய நபம் மிகுந்த வேதனையில் உள்ளோம்

எவரைக்கண்டாலும் ஆத்திரம் வருகிறது

எவர் என்ன சொன்னாலும் ஏற்கமறுக்கிறோம்

சண்டைக்குபோகின்றோம்

வீட்டிலேயே இதுதான் நிலமை

எனவே எமக்கு உரிமையுடையவர்களிடமே தான் எமது கோபத்தைக்காட்டமுடியும்

தமிழ்நாடு எமது அண்ணன் போன்றது

அந்த அண்ணன் எம்மை பாதுகாக்கவில்லை

அதாவது

தமிழ்நாடு எம்மை கைவிட்டது என்பது உண்மை

அதனாலேயே எம்மில் சிலர் தமிழ்நாட்டின்மீது பாய்கின்றனர்

பொறுத்தருள்வீர்

நாம் ஒரு நிலை எடுக்கும்வரை............

நன்றி

எமது கோபம் எமை அழித்த சிங்களவன் மேலும் உதவி செய்த இந்தியா போன்ற நாடுகள் மீதும் தடுக்க முடிந்தும் வேடிக்கை பார்த்த சர்வதேசம் மீதல்லவா திரும்ப வேண்டும்்.

ஆனால் யாழ்க்கள உறவுகளோ விடுதலைப்புலிகளையும் தலைமையையும் தமிழ்உணர்வாளர்களையும் திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாாறு நாம் எமக்குள் அடிபடும் நேரத்தை பயன்படுத்தி எதிரி தனது போர்க்குற்றங்களை மறைத்து எஞ்சியுள்ள உறவுகளையும் அழித்துவிடுவான்.

யாழ்களத்தில் இதுநாள்வரைக்கும் ஒரு ஆரோக்கியமான கருத்துப்பகிர்வு நாம் என்ன செய்யவேண்டும் எவ்வாறு அழிவிலிருந்து மீள்வது எம்மை அழித்தவர்களை எவ்வாறு தண்டிப்பது என்பது தொடர்பில் இடம்பெறவில்லை. எமக்குள் நாமே துரோகிகளையும் எதிரிகளையும்் உருவாக்கியபடி தொடாந்தும் புலிகளது தலையில் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு விழாக்களையும் கொண்டாட்டங்களையும் தொடர்கின்றோம். அவலங்களால் வெதும்பி ஏதாவது செய்யத்துடிக்கும் தமிழக உணர்வாளர்களை கொச்சைப்்படுத்துகின்றோம்.

வேலவன் அவர்கட்கு

ஈழத்தமிழராகிய நபம் மிகுந்த வேதனையில் உள்ளோம்

எவரைக்கண்டாலும் ஆத்திரம் வருகிறது

எவர் என்ன சொன்னாலும் ஏற்கமறுக்கிறோம்

சண்டைக்குபோகின்றோம்

வீட்டிலேயே இதுதான் நிலமை

எனவே எமக்கு உரிமையுடையவர்களிடமே தான் எமது கோபத்தைக்காட்டமுடியும்

தமிழ்நாடு எமது அண்ணன் போன்றது

அந்த அண்ணன் எம்மை பாதுகாக்கவில்லை

அதாவது

தமிழ்நாடு எம்மை கைவிட்டது என்பது உண்மை

அதனாலேயே எம்மில் சிலர் தமிழ்நாட்டின்மீது பாய்கின்றனர்

பொறுத்தருள்வீர்

நாம் ஒரு நிலை எடுக்கும்வரை............

நன்றி

உங்களை தமிழக தமிழர்களை திட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை... நானே தமிழக மக்களை இன்னொரு இணையதளத்தில் மிக மிக கேவலமாக தரக்குறைவாக விமர்சித்துள்ளேன்..

ஆனால் நான் விமர்சித்தது பணத்திற்கு விலை போன தமிழக மக்களை மட்டுமே.... அவர்கள் பிறப்பு பற்றி கூட தரக்குறைவாக விமர்சித்து இருந்த்தேன்...

ஆனால் யாழில் சிலர் உண்மையான தமிழுணர்வாளர்களை (சீமான் போன்றோர்) விமர்சிக்கின்றனர் அதை மட்டுமே நான் இங்கே எதிர்க்கிறேன்.....

நீங்கள் மட்டுமல்ல நாங்களும் மிகுந்த துன்பத்தில் இருக்கிறோம்... உங்களால் அதை புரிந்து கொள்ள முடியுமா தெரியவில்லை...... எனது தந்தையும், தாயும் ஈழச்செய்திகள் அறிந்து நோய்வாய்ப்பட்டனர்... தந்தையின் நிலை கவலைக்கிடமானது... வீடே பல நாட்கள் துக்க வீடு போல் இருந்தது.

நான் ஈழப்போர் துவங்கி மக்கள் துன்புற தொடங்கிய நாளில் இருந்து திரைப்படங்கள் பார்ப்பதையும் ,மற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தேன்..

நாங்களும் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை..... எங்களுக்கே இந்த நிலை என்றால் உங்கள் துக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.... ஆனாலும் துக்கத்தை மனதில் புதைத்து விட்டு செயலாற்ற வேண்டிய தருணத்தில் சோர்ந்து கிடப்பது எதிரிக்குத்தான் லாபம்!

Edited by வேலவன்

எமது கோபம் எமை அழித்த சிங்களவன் மேலும் உதவி செய்த இந்தியா போன்ற நாடுகள் மீதும் தடுக்க முடிந்தும் வேடிக்கை பார்த்த சர்வதேசம் மீதல்லவா திரும்ப வேண்டும்

உங்களுக்கு மண்டையில் என்ன ******யா இருக்கு.... போரை நடத்தியது இந்தியா.. சர்வதேசத்தை பேரம் பேசி விலக்கிவைத்தது இந்தியா.. இந்தியா இந்தியா இந்தியா... மற்றும் தமிழ்நாட்டவர்களை சொல்லி குறையில்லை தொண்ணூறு கோடி பேரும் சேர்ந்து தீக்குளித்தாலும் ஒரு நாயும் திரும்பிக்கூட பார்க்கப்போவதில்லை.

எம்மிலையே 80% மெல் அக்கரையில்லை.. சுதந்திரமும் மண்ணங்கட்டியும்.

Edited by Panangkai

உறைக்கும்

ஆனால் உண்மை இதுதான்

ஆணித்தரமான கருத்து

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை தமிழக தமிழர்களை திட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை... நானே தமிழக மக்களை இன்னொரு இணையதளத்தில் மிக மிக கேவலமாக தரக்குறைவாக விமர்சித்துள்ளேன்..

ஆனால் நான் விமர்சித்தது பணத்திற்கு விலை போன தமிழக மக்களை மட்டுமே.... அவர்கள் பிறப்பு பற்றி கூட தரக்குறைவாக விமர்சித்து இருந்த்தேன்...

ஆனால் யாழில் சிலர் உண்மையான தமிழுணர்வாளர்களை (சீமான் போன்றோர்) விமர்சிக்கின்றனர் அதை மட்டுமே நான் இங்கே எதிர்க்கிறேன்.....

எனது கருத்தும் இதுதான். கோபத்திலும் வருத்ததிலும் திட்டும்போது யார் உங்களுக்கு கைகொடுக்க வருகிறர்களோ அவர்களையே தட்டிவிடுகிறீர்களென சொன்னால் இங்கே புரிவதில்லை. ஈழதவர்களின் துயரங்களும் வலிகளும் புரிந்துகொண்டு திட்டுவதை கேட்டு தலைகுனிந்துகொள்ள வேண்டியதுதான்..ஏனெனில் காலத்தில் தேவையானவற்றை செய்யாமல் பிணங்களாய். ஊமைகளாய் அதிகாரத்தை மறுபடியும் இழிநாய்களுக்கு கொடுத்து விக்கித்து நின்றவர்கள் நம் தமிழகத் தமிழர்கள்...காலன்!

தமிழக தமிழர்கள் கையென்ன.. விரலே கொடுக்கவில்லை... ஈழதமிழர்கள் அதை தட்டவும்மில்லை..

உங்களுக்கு உண்மையான உனர்விருந்தால்... உங்கள் தாய் தமிழ்நாட்டில் நாய் மாதிரி.. ச்சே.. நாயைவிட கேவலமாய், அடிமைகளாய், மனித சுதந்திரம் மறுக்கப்பட்ட கீழினமாய், வருஷக்கணக்கில், இலச்சகணக்கில், அடைத்து வக்கப்பட்டிருக்கும் ஈழதமிழர்களுக்கு ஒரு வழி பன்னுங்கள்....

எங்களுக்கு உண்மையான உணர்விருப்பதால் தான் இன்னமும் குரல் கொடுக்கிறோம் பனங்காய். ஆனால் இந்தக்குரல்கள் வலிமையற்றதாய் பலவீனாமக இருப்பதால் தான் காரியம் சாதிக்க இயலவில்லை. இந்த பலவீனக்குரலுக்கு பலகாரணிகள் இருக்கிறது. பெரும்பாலும் அரசியல் பின்னனியுடையது. எந்தக்கட்சியும் உண்மையான உணர்வுடன் எங்களின் ஆதங்கத்தை ஒற்றுமையுடன் அணுகவில்லை. அகதிகள் முகாம்களின் நிலைமையும் அப்படியே, அவற்றை இப்போது பேசி துயருற்றிக்கும் உங்கள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச விரும்பவில்லை. மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தமிழர்கள் கையென்ன.. விரலே கொடுக்கவில்லை... ஈழதமிழர்கள் அதை தட்டவும்மில்லை..

உங்களுக்கு உண்மையான உனர்விருந்தால்... உங்கள் தாய் தமிழ்நாட்டில் நாய் மாதிரி.. ச்சே.. நாயைவிட கேவலமாய், அடிமைகளாய், மனித சுதந்திரம் மறுக்கப்பட்ட கீழினமாய், வருஷக்கணக்கில், இலச்சகணக்கில், அடைத்து வக்கப்பட்டிருக்கும் ஈழதமிழர்களுக்கு ஒரு வழி பன்னுங்கள்....

இதே கேள்வியை உங்களிடம் கேட்கின்றேன். ஈழத்தவனுக்காக ஈழத்தைச் சேர்ந்த நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஒன்று சொல்லுங்கள். தமிழக மக்களிடம் கேள்வி கேட்கலாம்... அவர்களை விட உங்களுக்குத் தானே உரிமை கூட. அப்படியான சூழ்நிலையில் வவுனியா முகாம்களில் வாடுகின்ற மக்களுக்காக ஏதுவுமே நீங்கள் செய்யவில்லை. அவர்களைப் பற்றிக் கேள்வி கேட்க எவ்வாறு உரிமை உண்டு.

கேவலம் கெட்ட சில அரசியல்வாதிகளுக்காக எல்லோரையும் தூசிப்பது, மிகப்பெரும் தவறு.. அந்தத் தகுதி எந்த புலம்பெயர்ந்த எவனுக்கும் கிடையாது... தாய்நாட்டில் மக்கள் துன்பப்படும்போது, கைவிட்டு ஓடிவந்த துரோகம் செய்தவர்கள்...

முதலில் தமிழக உறவுகளை மதிக்கப் பழகுங்கள். அவர்களின் அன்பைப் புரிந்து கொள்ளுங்கள்...

ஒரு பத்து மில்லியன் ரூபாயும் இரண்டு சகோதரங்களும்... நம்பாட்டி வேலையை பாத்துட்டு போய்யா....

மூகாம்களில் இருக்கும் ஆக்களை காப்பத்தகூடியவர்கள் யாரும்மில்லை... யராலும் முடியாது.. அவர்கள் கதி அவ்வளவுதான்.

கேவலம் கெட்ட சில அரசியல்வாதிகளுக்காக எல்லோரையும் தூசிப்பது, மிகப்பெரும் தவறு.. அந்தத் தகுதி எந்த புலம்பெயர்ந்த எவனுக்கும் கிடையாது... தாய்நாட்டில் மக்கள் துன்பப்படும்போது, கைவிட்டு ஓடிவந்த துரோகம் செய்தவர்கள்...

நாம் தூஷிப்பது வாக்கு போட்ட தமிழகத்தவர்களை. மற்றும் நாம் ஊரை வீட்டு வெளிக்கிடபடியாதான் இவ்வளவுகாலம் விடுதலைக்கு முயற்சி செய்தோம். இல்லட்டி எண்பதுகளிலேயே அழிஞ்சு போயிருபோம்.துரோகம் செய்வது நீங்கள்தான் தமிழகதமிழரை போதையில் வைத்திருக்கும் ஒரு நடிகரின் படத்தை உங்கள் அவதாரய் போட்டிருக்கும் உங்கள் எண்ணம் எங்களுக்கு தெரியும்.

முதலில் தமிழக உறவுகளை மதிக்கப் பழகுங்கள். அவர்களின் அன்பைப் புரிந்து கொள்ளுங்கள்...

சும்மா சவுண்டு விட்டு கொண்டிருக்கமல் தமிழ்நாடிலையே இருக்கும் எம் மக்களுக்கு எதாவது செய்யலாம்.. இது என்னவெண்டா பெருச்சாளியே போக காணோம், இதுல விளக்குமாறுவேற :D

இதே கேள்வியை உங்களிடம் கேட்கின்றேன். ஈழத்தவனுக்காக ஈழத்தைச் சேர்ந்த நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஒன்று சொல்லுங்கள். தமிழக மக்களிடம் கேள்வி கேட்கலாம்... அவர்களை விட உங்களுக்குத் தானே உரிமை கூட. அப்படியான சூழ்நிலையில் வவுனியா முகாம்களில் வாடுகின்ற மக்களுக்காக ஏதுவுமே நீங்கள் செய்யவில்லை. அவர்களைப் பற்றிக் கேள்வி கேட்க எவ்வாறு உரிமை உண்டு.

நாங்களும்தான் கத்தி பார்க்கிற்றம் எநத நாடும் கேட்கவில்லை. ஆனால் தமிழகம் நினைத்தால் நாளையே அந்த மக்கள் சொந்த இடத்திற்கு போக கூடிய பலன் வரும். தமிழ்நாடு அசைந்தால் இந்திய மத்திய அரசு அசையும். ஆனால் தமிழக அரசை அசைக்க தமிழக மக்கள் இன்னும் தயாராக வில்லை. கருநாநிதி சிறைமக்கள்பற்றி இன்றுவரை ஒரு வார்த்தை கூட தமிழக மக்களிடம் கதைக்கவில்லை, பத்திரிகையாளரிடம் பேசவில்லை பிறகு மத்திய அரசுக்கு என்ன கவலை.

தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான செயற்றிறன், பங்களிப்பு, பங்குபற்றுதல் என்பது தொடர்பாக நாம் ஒவ்வொருவரும் ஒருமுறை ஆறுதலாக இருந்து ஆறஅமரக், குறிப்பாக ஈழத்தமிழர்களாகிய நாம் சிந்திப்போமாயின் மற்றவரை நோக்கி, நீ என்ன செய்தாய்! என்று கை நீட்டுமுன், ஒன்றுக்கு இரண்டு முறை நாம் என்ன செய்தோம் என்று சிந்திப்போமாயின் இன்னும் கடந்து செல்ல வேண்டியுள்ள கடினமான பாதையில் தெளிவுண்டாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தூஷிப்பது வாக்கு போட்ட தமிழகத்தவர்களை.

சும்மா சவுண்டு விட்டு கொண்டிருக்கமல் தமிழ்நாடிலையே இருக்கும் எம் மக்களுக்கு எதாவது செய்யலாம்..

பனங்காய்.. உங்கட ஆதங்கம் விளங்குது.. ஆனால் இப்பிடி யோசிச்சுப் பாருங்கோவன்.

இங்க யாழ்களத்தில இருக்கிற தமிழ் உறவுகளில முக்கியமா செந்தில், வேலவன், ராஜவன்னியன், சீனிவாசன் எல்லாரும் கனத்த இன உணர்வுடன்தான் இருக்கினம். ஆனால் இந்த நாலுபேர் போய் தமிழக முகாம்களில இருக்கிற ஈழ அகதிகளை மேம்படுத்த முடியும் எண்டு நினைக்கிறீங்களா?

இலட்சக்கணக்கில இருக்கிற எங்களாலயே வன்னிச் சனங்களைக் காப்பாற்ற ஏலாது எண்டு நீங்கள் சொல்லேக்குள்ள இந்த நாலுபேர் மட்டும் தமிழகத்தில என்ன செய்ய முடியும்? அவர்களும் அவர்களால முடிஞ்ச பிரச்சார வேலைகளைச் செஞ்சு கொண்டுதான் இருக்கினம்.

நாங்கள் எதை எழுதினாலும் அதின்ர நோக்கம் என்ன என்பது முக்கியமான ஒன்று. நீங்கள் இங்க தமிழக வாக்காளர்களை திட்டி எழுதிறது அந்த வாக்காளர்களின் காதைச் சென்றடையும் எண்டால் பரவாயில்லை. ஆனால் அது இந்த நாலு அப்பாவி ஜீவன்களின் காதைத்தான் சென்று அடைந்துகொண்டு இருக்கு..! :D

நாளைக்கு இவையளும் துண்டை உதறிப் போட்டுக்கொண்டு போகலாம்..! நீங்கள் சொல்லுவீங்கள் போனால் போகட்டுமே எண்டு..! ஆனால் அது ஒரு ஆக்கபூர்வமான சிந்தனையா இருக்காது பனங்காய்.

உங்களுக்கு புரிகிறதோ இல்லையோ....

யாழ்ப்பாணத்திலும், திரிகோணமலையிலும் உள்ள மக்களின் நிலை எப்படியோ தமிழகத்தில் உணர்வுள்ளவர்கள் நிலையும் அது தான்.... அவர்கள் ஒற்றுமையாக வீதியில் இறங்கி போராடினால் சிங்கள அரக்க அரசு ஒன்று இளைஞர்களை கொல்லும் ..அல்லது வழக்குகள் சிறை என அலைக்கழிக்கும்...

அதே நிலை தான் தமிழக உணர்வுள்ள மக்களுக்கும்.

தமிழகத்தில் ஈழத்து மக்களுக்கு ஆதரவாக தனியாக துண்டு பிரசுரங்கள் கொடுத்துப்பாருங்கள், அடுத்த நாள் க்யூ பிரிவு ஆட்கள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள் பிறகு ... பொய் வழக்கு.... நீதிமன்றம் என அவன் நிம்மதியே தொலைந்து போகும்.. எத்தனை அப்பாவிகள் ஜெலட்டின் வைத்திருந்தனர் ... புலிகளுக்கு ஆயுதம் கடத்தினர் என வழக்கு போடப்பட்டு இன்னமும் சிறையில் உள்ளனர் என்று தெரியுமா???

கலைஞரை விமர்சித்து சி.டிக்களை தயாரித்து பரப்புரை செய்ய விநியோகித்த தமிழர்கள் நிலை என்ன என்று தெரியுமா...

உணர்ச்சி வசத்தால் ராணுவ வண்டியை தாக்கி தேசியபாதுகாப்பு சட்டத்தில் உள்ளே போனவர்கள் லட்ச லட்சமாக சம்பாதிப்பவர்கள் அல்லர் ஆனால் அவர்கள் இழந்தவை எவ்வளவோ....

அவர்கள் அதற்காக வருந்தவில்லை!

நீங்கள் என்ன தான் எங்களை தூற்றினாலும் எங்கள் தமிழுணர்வு சாகாது.... எங்கள் கடமையை தொடர்ந்து ஆற்றுவோம் அவற்றை வெளிப்படையாக சொல்லவும் மாட்டோம்!

நாங்கள் எல்லாம் செத்துப்போனாலும் இந்தியா மகிழுமே தவிர வருந்தாது.... (இது ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் பொருந்த்தும்,)

தமிழகத்தில் புரட்சி, மக்கள் போராட்டம்,ஆயுத போராட்டம் என்று வந்தாலும் இந்தியா தன் ராணுவ அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு தமிழகத்தை நிர்மூலமாக்க நினைக்குமேயன்றி......

தமிழக மக்களுக்காக ...ஈழத்தமிழினத்தை க்காக்க முன்வராது

தமிழகத்தில் புரட்சி, மக்கள் போராட்டம்,ஆயுத போராட்டம் என்று வந்தாலும் இந்தியா தன் ராணுவ அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு தமிழகத்தை நிர்மூலமாக்க நினைக்குமேயன்றி......

நான் நினைக்கவில்லை.. நிச்சயம் இந்தியா இறங்கிவரும்.. ஆனால் இறங்கவேண்டிய தேவை தமிழ்நாட்டுக்கு இல்லை.. நாம் ஒருகாலத்தில் மலையக தமிழர்களை எப்படி கணக்கில் எடுக்கவில்லையோ அதேமாதிரிதான் இதுவும்.. கோடியில் ஒண்டு ரெண்டுதான் குரல் கொடுக்கும்.. மத்ததுகளுக்கு அந்த தேவை இல்லை.. ஒருகாலத்தில் அந்ததேவையை புலிகள் ஏற்படுத்தியிருக்கலாம்..

எம்மை விட பிரபாகரனுக்கு நல்ல தெரிந்திருக்கும் இந்தியாதான் வில்லு எண்டு... :D

Edited by Panangkai

தமிழக உறவுகளை கை நீட்டி குறை சொல்லும் அளவிற்க்கு

இங்கு யாருக்கும் எள்ளளவும் தகுதியில்லை...........................

நம் தவறை முதலில் திருத்திக்கொள்வோம்,,,,,,,,,,,,,,,,,,

தமிழக உறவுகளை கை நீட்டி குறை சொல்லும் அளவிற்க்கு

இங்கு யாருக்கும் எள்ளளவும் தகுதியில்லை...........................

நம் தவறை முதலில் திருத்திக்கொள்வோம்,,,,,,,,,,,,,,,,,,

குறை சொல்லவும் தகுதி தேவையோ?எந்த பழ்கலைகழகத்தில பட்டம் எடுத்திருக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மைக்கால தமிழீழ அழிவிற்கெல்லாம் இந்தியாதான் காரணமென்பது யாவருக்கும் தெரிந்த விடயம்.

இதில் தமிழ்நாட்டு அரசுக்கும் முக்கிய பங்கு உண்டு.

இறுதிகட்டத்தில் கூட நாடகமாடி ஈழத்தமிழரை அழிக்க துணை போனது தமிழக அரசு.

வன்னியில் வீதிவீதியாக எம்மவர் குற்றுயிராக துடிதுடித்துக்கொண்டிருந்த போது போர் முடிவுக்கு வந்துவிட்டது என அறிவித்ததும் தமிழக அரசுதான்.

இதற்கு பின்னரரும் யார் உங்களை நம்புவார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே கேள்வியை உங்களிடம் கேட்கின்றேன். ஈழத்தவனுக்காக ஈழத்தைச் சேர்ந்த நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஒன்று சொல்லுங்கள்.

இப்படியான கேள்வியை ஒருசிலர் பலரிடம் திருப்பித்திருப்பி கேட்டபடியால்த்தான் இன்று பல விடயங்களுக்கு பதிலே இல்லாமல் தமிழீழம் பூச்சியத்தில் இன்று இருக்கின்றது?

இப்படியான கேள்வியை ஒருசிலர் பலரிடம் திருப்பித்திருப்பி கேட்டபடியால்த்தான் இன்று பல விடயங்களுக்கு பதிலே இல்லாமல் தமிழீழம் பூச்சியத்தில் இன்று இருக்கின்றது?

இந்த அறுவை தாங்கேலாம ஒதிங்கினவை கனபேர்.... இதுவும் ஒரு வித பரப்புரை யுத்தம் போலதான்.. வெண்டிட்டினம். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேலும் தனி ஈழம் என்பது கனவுதான்

தனி ஈழம் கிடைப்பதால் ஈழத்தமிழர்கள் வேண்டுமானால் மிகுந்த சந்தோஷப்படலாம்

தனி ஈழம் கிடைத்தவுடன் அறிக்கையிலே தமிழக தமிழர்களுக்கு நன்றி மட்டும் சொல்லி,

தமிழக தமிழர்களுக்கு என்ன துன்பம் வந்தாலும் தனி ஈழம் இறையாண்மையுள்ள நாடு அதனால் இன்னொரு இறையாண்மையுள்ள இந்தியாவில் தலையிட முடியாது என்று சொல்லிவிடலாம்

தனி ஈழம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தமிழக தமிழனின் நிலை என்றுமே மாறிவிடப்போவதில்லை

ஓரிரு தமிழுணர்வாளர்களுக்கு வேண்டுமானால் ஈழத்திலிருந்து அழைப்பு வந்து அங்கே பேசிவிட்டு பொற்கிழி வாங்கிக்கொண்டு வரலாம்

சாதாரண தமிழக மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை

எப்போது தனி ஈழத்தில் தமிழக தமிழர்களுக்கு பங்கு இல்லையோ அப்போதே அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும் பெரிதாக இருக்க வேண்டியதில்லை

ஆகையால் இனிமேலும் ஈழம் என்ற சொல்லை விட்டுவிட்டு

மொத்த தமிழர்களுக்குமான ஒரு நாடு என்ற பாதையில் சிந்தித்தால் மட்டுமே தமிழர்களுக்கு விடிவு உண்டு

தேசியத்தலைவரும் தொடக்க காலத்தில் இப்படியான எண்ணத்தைத்தான் கொண்டிருந்தார்.

சிற்சில நிர்ப்பந்தங்கள் காரணமாக அதை விட வேண்டிய சூழல் எழுந்தது

மலையக தமிழர்,இந்திய தமிழர்,கிழக்கு, வடக்கு, மலேசிய தமிழர் என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் தமிழர் என்ற சொல்லால் ஒன்றுபட்டு

நடந்த சம்பவங்களில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றே - ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான விடுதலை என்ற பார்வையில் சிந்தித்தால் மட்டுமே இனிமேல் ஏதேனும் செய்யலாம்

இதைவிடுத்து இன்னமும் ஈழம் என்று முழங்கிக்கொண்டிருப்பதில் யாருக்குமே எந்த பயனும் இல்லை

புலிகள் அமைப்பும் மற்ற தமிழர் அமைப்பும், தமிழக தமிழர்களையும் ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டிய தருணம்

இது முடியாதென்றால், ஈழத்தமிழர் இலங்கை அரசாங்கத்துடன் கைகொர்த்துகொண்டு இந்தியாவினை பழிவாங்கும் சிற்சில செயல்களில் வேண்டுமானால் ஈடுபடலாம்

புலம்பெயர் ஈழ தமிழர்கள் ,புலம்பெயர் தமிழக தமிழர்களுடன் உறவை மேம்படுத்த வேண்டும்

பிரிவினையை விடுத்து தமிழர் என்ற ஒட்டு மொத்த அடையாளமாக கவனிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் இலங்கை அரசாங்கத்துடன் கைகொர்த்துகொண்டு இந்தியாவினை பழிவாங்கும் சிற்சில செயல்களில் வேண்டுமானால் ஈடுபடலாம்

இக்கருத்து பலரிடமும் காணப்படுகிறது

மலையுடன் தலையை மோதும் வேலைதான்

ஆனால்...........???

ஏற்கனவே மோதி நொந்துபோய் உள்ளோம் ,மீண்டும் முயற்சி செய்து பார்கலாம்....யானையின் தும்பிக்கயுக்குள்ள எறும்பு போய் யானைக்கு அலுப்புகொடுப்பதுபோல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.