Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி. வருவதை எதிர்க்கும் புலிகளின் சதிக் கூட்டம் : டிபிஎஸ் ஜெயராஜ் என்ற தமிழ்த்தேசிய விரோதியும் தமிழரது விடுதலைப் போரை......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிபிஎஸ் ஜெயராஜ் என்ற தமிழ்த்தேசிய விரோதியும் தமிழரது விடுதலைப் போரை கொச்சைப்படுத்துவதையே தனது எழுத்துலகக் கடமையாக மேற்கொண்டுவருபவரது ஆக்கம் வேறொருதிரியில் ஆங்கில மொழியில் இணைக்கப்பட்டிருந்தாலும் உதயன் இணைவலையத்தினது தமிழ் மொழிபெயர்ப்பைத் தனியானதொரு திரியில் இணைத்துள்ளேன். உண்மையிலேயே நாம் எமக்கிடையே தெளிவு பெற வேண்டியது அவசியமாக உள்ளது. பல ஊடகர்கள், ஊடகர்களாகவன்றி ஊடக விபச்சாரகர்களாகவே உள்ளனர். எடுத்துக்காட்டுக்காக நாம் குடிப்பதற்காகத் தண்ணியை அடுப்படியில் உள்ள குழாயில் எடுப்போம். ஆனால் மலசலகூடத்திலிருந்து குடிப்பதற்கு எடுப்தில்லை. ஆனால் இரண்டுக்குமான தண்ணீர் ஒரே குழாய் இணைப்பூடாகவே செல்கிறது. எந்தத் தண்ணியைப் பருக வேண்டுமென்பதை நாமே தீர்மானிக்கிறோம்.

கே.பி. வருவதை எதிர்க்கும் புலிகளின் சதிக் கூட்டம்

(30 யூலை 2009, வியாழக்கிழமை 9:50 பி.ப இலங்கை)

தமிழில் ந.வித்தியாதரன்

"தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று அறியப்பட்டு வந்த அரசியல் இராணுவக் கட்டமைப்பின் இயக்கம் இலங்கையின் எல்லைக்குள் பெரும்பாலும் செ யலிழந்துவிட்டது.

புலிகளின் உயர் தலைவர் பிரபாகரனும் சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட அவர்களின் இராணுவத் துருப்பினரும் இப்போது உயிர் வாழ்வோர் மத்தியில் இல்லை. அந்த அமைப்பின் அரசியல் மற்றும் நிர்வாகப் பிரிவுகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஏனைய உறுப்பினர்கள் இலங்கை அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காடுகளில் சிறு குழுக்களாகச் சிக்குண்டுள்ள புலிகள் மட்டும் வாய்ப்பும்இ இடமும் கிடைக்கையில் சிறிய அளவிலான கெரில்லா யுத்தத் தாக்குதல்களை நடத்த முயன்று வருகின்றனர். அவர்களின் தாக்கம் புறக்கணிக்கத்தக்கது.

இதேசமயம்இ மறைந்திருந்து செ யல் நடவடிக்கைகளில் ஈடுபடும் புலிகளின் செ யற்பாட்டாளர்களை நாட்டின் பல பகுதிகளிலும் திட்டமிட்ட வகையில் தேடி வேட்டையாடும் விவகாரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஒழுங்காக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்கள் இந்த விவகாரங்கள் ஊடகங்களுக்கு எட்டாமல் பார்த்துக்கொள்வதிலும் சிரத்தையாக உள்ளனர். இதேபோன்றுஇ இடம்பெயர்ந்த அகதிகளுக்கு மத்தியில் அவர்களின் முகாம்களில் ஒளிந்திருக்கும் புலிகளைக் களைந்தெடுக்கும் நடவடிக்கையும் ஒழுங்காக முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் நடைமுறையில் அழித்தொழிக்கப்பட்டாலும் அதன் வெளிநாட்டுக் கட்டமைப்பு தொடர்ந்தும் ஆபத்தானதாகவே விளங்குகின்றது.

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் மூலங்களை புலிகளின் "எச்சங்கள்" அல்லது "மிச்சங்கள்" என்று வர்ணிக்கும் போக்கு ஊடகங்களின் ஒரு பகுதியிடையே காணப்படுகின்றது. இந்த விவரிப்பு சரியானதல்ல. புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புகள் உறுதியானவையாகவும் எப்போதும் போல திடமானவையாகவுமே உள்ளன. புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் கணிசமான பகுதியினர் மத்தியில் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் ஆதரவையும் செ ல்வாக்கையும் பெற்று அனுபவித்து வருகின்றது.

இத்தகைய பருத்த மூலாதாரம் தம் வசம் இருந்தும் கூடஇ அத்தகைய வளத்தை யதார்த்த பூர்வமான வகையில் பயன் தரக்கூடிய முறையில் பிரயோகிக்கவோஇ களத்துக்குக் கொண்டுவரவோ புலிகள் அல்லது புலிகள் ஆதரவு மூலங்களால் முடியவில்லை. அதற்குப் பிரதான காரணம்இ பிரபாகரனின் மறைவை அடுத்து வெளிநாட்டில் உள்ள புலிகளின் தரப்பில் ஏற்பட்ட ஐக்கியமின்மையே. சு ருக்கமாகக் கூறுவதானால் பிரபாகரனின் பின்னராக விரியும் களத்தில் தலைமை பற்றிய இழுபறியே பிரச்சினையாகும்.

இராணுவப் பின்னடைவுகளின் பின்னர் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுகளே தப்பிப் பிழைத்து எஞ்சியவை என்ற காரணத்தினால், இலட்சியத்தை நோக்கி முன்நகர்வதில் இந்தப் பிரிவுகளின் பொறுப்பு கடப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.

பிரிவுகள் பிளவுகள்அந்தப் பொறுப்பை நிறைவு செ ய்வதற்கு முதலாவதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்போதைய சரியான இக்கட்டான நிலைமை குறித்து நனவு பூர்வமான திறனாய்வும்இ விழிப்புணர்வும் அவசியம்.

இரண்டாவதாக யதார்த்தபூர்வமான, சா த்தியப்பாடான அணுகுமுறை தெரிவுசெ ய்யப்பட்டு பின்பற்றப்படவேண்டும்.மூன்றா

Edited by nochchi

உண்மைகள் வெளிவரத்தான் செய்யும்!!!

ramannaletter.jpg

  • கருத்துக்கள உறவுகள்

nochchi

டிபிஎஸ் ஜெயராஜ் என்ற தமிழ்த்தேசிய விரோதியும் தமிழரது விடுதலைப் போரை கொச்சைப்படுத்துவதையே தனது எழுத்துலகக் கடமையாக மேற்கொண்டுவருபவரது ஆக்கம் வேறொருதிரியில் ஆங்கில மொழியில் இணைக்கப்பட்டிருந்தாலும் உதயன் இணைவலையத்தினது தமிழ் மொழிபெயர்ப்பைத் தனியானதொரு திரியில் இணைத்துள்ளேன். உண்மையிலேயே நாம் எமக்கிடையே தெளிவு பெற வேண்டியது அவசியமாக உள்ளது. பல ஊடகர்கள், ஊடகர்களாகவன்றி ஊடக விபச்சாரகர்களாகவே உள்ளனர். எடுத்துக்காட்டுக்காக நாம் குடிப்பதற்காகத் தண்ணியை அடுப்படியில் உள்ள குழாயில் எடுப்போம். ஆனால் மலசலகூடத்திலிருந்து குடிப்பதற்கு எடுப்தில்லை. ஆனால் இரண்டுக்குமான தண்ணீர் ஒரே குழாய் இணைப்பூடாகவே செல்கிறது. எந்தத் தண்ணியைப் பருக வேண்டுமென்பதை நாமே தீர்மானிக்கிறோம்.

நொச்சிக்கு ஒரு சபாஸ் போடுகிறோம். இன்னும் நான் சொல்வதைக்கேள் நிலைமைக்கு தமிழினத்தை இட்டுச்செல்ல கனவுகாணும் உங்கள் போன்ற தத்துவார்த்திகள் கையில் தமிழ்விதி தத்தளிக்கிறதே!!!!

டி.பி.எஸ் எழுதியதை மொழிபெயர்த்துள்ளவர் தமிழீழவிடுதலையின் பால் தன்னை முழுமையான ஈடுபடுத்தி சிறைசென்று வந்த ஊடகர் வித்தியாதரன். உங்கள் மொழிப்படி வித்தியாதரனும் தேசிய விரோதியாகவே காணப்படுகிறாரா ?

தண்ணீர் குடிப்பதற்கு எந்த வழி உகந்தது என்பதை தண்ணீர் குடிக்க விரும்புவரே தீர்மானிக்க முடியும். உங்கள் வீட்டில் குசினியில் மட்டும் நல்ல குடிதண்ணீர் வருவதால் நீங்கள் அதையே குடிதண்ணீராக உபயோகிக்கலாம். யார் எதை தீர்மானிக்க வேண்டும் என்பதற்கான அளவு கோல்களை எடுத்து நீட்டும் உங்கள் புலத்துப்புலிவீரத்தை இனியாகிலும் தள்ளி வையுங்கோ.

உலகத்தால் பெரும்பாலன ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஊடகனின் எழுத்தை எல்லாரும் வாசிக்கட்டும். தெளிவுபெறட்டும். ஆனால் இவர் தேசியவாதி தேசியவிரோதியென்ற பதங்களால் ஆட்களை முத்திரையிடும் உங்கள் யேர்மனிக்குள் குறித்த நகருக்குள் மட்டும் குறுநில ஆட்சி செய்யும் நீங்கள் முடிவு செய்யாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனய்யா இந்த மாதிரியான ஒரு நெருக்கடியும் அவலமும் நிறைந்த சூழலிலும் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்சித்தே காலத்தை கடத்த நினைக்கிறிர்கள் ?? இது ஒரு தனி மனிதனின் கருத்து அவர் சொல்வதை கேட்பதும் கேட்க்காமல் விடுவதும் அவரவர் விருப்பம் ...

DBS சொல்லுறார் விருப்பம் எண்டால் கேளுங்கள் இல்லாவிட்டால் உங்களுக்கு சரி என்ற வழியில் போய்க்கொண்டே இருங்கள் அந்த வழி எங்களுக்கும் சரியென்று பட்டால் உங்கள் பின்னால் நாமும் வருவோம் ....மிகத் தாழ்மையான வேண்டுகோள் அன்பர்களே !!!

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியிருப்பினும் டிபிஎஸ் மக்களால் சந்தேகப்படவேண்டியவர், இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கனடா வாழ் தமிழ் மக்களினால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர்.

இவரினால் வெளியிடப்பட்ட மஞ்சரி என்ற பெயரையுடைய தமிழ் பத்திரிகை அனைத்து வியாபாரிகளினாலும் புறக்கணிக்கப்பட்டிருந்தன.

சில இடங்களில் வாகனத்துடன் சேர்த்தே தீயிடப்பட்டன. இவை யாவற்றிற்குமுரிய காரனம் தமிழ் இனத்திற்கெதிராக இவரினால் மேற்கொள்ளப்பட்ட விமர்சனம் என்பதாகும்.

டி.பி.எஸ் எழுதியதை மொழிபெயர்த்துள்ளவர் தமிழீழவிடுதலையின் பால் தன்னை முழுமையான ஈடுபடுத்தி சிறைசென்று வந்த ஊடகர் வித்தியாதரன். உங்கள் மொழிப்படி வித்தியாதரனும் தேசிய விரோதியாகவே காணப்படுகிறாரா ?

இந்த கட்டுரை மூலம் டிபி எஸ் அல்லது மொழி பெயர்த்த வித்தியாதரன் அல்லது இவற்றை படித்து குழம்பும் மக்கள் எவரும் தேசிய விரோதிகள் ஆவது ஆகாமல் விடுவது ஒரு புறமிருக்கட்டும் தமிழ்த்தேசியமே ஜனநாயகத்துக்கு விரோதமாக இருக்கும் நிலையில் இருந்து மாற்றம் பெறவில்லை என்பதே உண்மை. நாம் அனைவரும் தேசிய விரோதிகள் பட்டியலுக்குள் அடங்குகின்றோம். இதற்குள் அவன் விரோதி இவன் விரோதி என்று எம்மை நாமே ஏன் ஏமாற்ற வேண்டும்?

எமக்குள் நாமே குத்துப்படுதல் விமர்சித்தல் ஆய்வுகள் செய்தல் வெறுத்தல் அனைத்தும் நிகழ்கின்றது. போட்டிகள் தலைவிரித்தாடுகின்றது. இந்த நிலையில் தமிழனுக்கு பொது எதிரியையும் தமிழனை அடிமைப்படுத்தியவனையும் காணாமல் விட்டு விடுகின்றோம். எமக்கு முக்கியம் எமக்குள் குத்துப்பட்டு ஏதோ ஒன்றை பெற முயல்வதே ஆகும். நாம் அவ்வாறு காலாகலம் பழக்கப்பட்டு விட்டோம். தீர்வுகள் அற்றதும் குறிக்கோள் அற்றதுமான விமர்சனங்கள் விண்ணாணங்கள் அடயாளம் தேடல்கள் அதிகாரப்போட்டிகள் என எமக்குள்ளாகவே நாம் இயங்குவோம். எமது பிரச்சனைகளின் தொடக்கமும் முடிவும் நாமாக இருக்கின்றோம். எமது அழிவுகளை நாமே தீர்மானிக்கின்றோம். அதை சிங்களவன் ஊடாகச் செய்விக்கின்றோம். எமக்கு நாமே சொந்தச் செலவில் சூனியம் வைக்கின்றோம். இதில் இருந்து ஈழத்தமிழனாய் பிறந்த அனைவரும் விடுபட்டு தமிழனாக சிங்களவனது ஒடுக்கு முறையை எதிராக சுட்டுவிரலை நீட்டும் போதே நாம் தேசியவாதிகள் அல்லது மானுடர்கள் அதுவரை எமது கொடி கோடாரிக்காம்புச் சின்னத்திலானதே.

இவரினால் வெளியிடப்பட்ட மஞ்சரி என்ற பெயரையுடைய தமிழ் பத்திரிகை .......சில இடங்களில் வாகனத்துடன் சேர்த்தே தீயிடப்பட்டன.

ஏன் அழிந்தோம் இன்று தான் தெரிகிறது!!!! கதைத்தவன் துரோகி... எழுதியவன் துரோகி.... பாதிக்கப்பட்டவன் துரோகி....சரி, பிழை சொன்னவன் துரோகி.......எல்லாவற்றுக்கும் மேலாக புலத்தில் எம் மக்களை காக்க வழங்கிய பணத்தில் இராஜபோகம் அனுபவிக்கும் பூசாரிகளுக்கு பிடிக்காதவர்கள்/அவர்களின் வாழ்வுக்கு குடுக்கே நிற்பவர்கள் எல்லோரும் துரோகிகள்!!! தொடருக ததேயின் பன்முகப்பட்ட துரோகிகள் பட்டங்கள்!!!!

எது எப்படியிருப்பினும் டிபிஎஸ் மக்களால் சந்தேகப்படவேண்டியவர், இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கனடா வாழ் தமிழ் மக்களினால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர்.

டி.பி.எஸ், ததே ஊடகங்களில் வந்து அரசியல் ஆய்வுகள் செய்து கனகாலமில்லை!! முன்பு ஆதரவாளர், பின் துரோகியாக்கி, பின் ஆதரவாளராக்கி GTV, TT எல்லாவற்றிலும் சக்கைபோடு போட்டார். பின்பு சரி, பிழை கூடச் சொல்லத் தொடங்க மீண்டும் துரோகியாக்கி விட்டோம்!!!

ஆனால் டி.பி.எஸ் ஆதரவாளனோ, துரோகியோ என்பதை விட ..... இங்கு அவரால் கூறப்பட்டதெல்லாம் உண்மையே!! உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை!!! ........ நன்றிகள் டி.பி.எஸ்!!!!!

எடுத்துக்காட்டுக்காக நாம் குடிப்பதற்காகத் தண்ணியை அடுப்படியில் உள்ள குழாயில் எடுப்போம். ஆனால் மலசலகூடத்திலிருந்து குடிப்பதற்கு எடுப்தில்லை. ஆனால் இரண்டுக்குமான தண்ணீர் ஒரே குழாய் இணைப்பூடாகவே செல்கிறது. எந்தத் தண்ணியைப் பருக வேண்டுமென்பதை நாமே தீர்மானிக்கிறோம்.

எனது உறவினர் ஒருவர் கெமிக்கல் இஞ்சினியர். அவர் இங்கு தேம்ஸ் வோட்டரில் வேலை செய்கிறார். அவர் ஒரு நாள் கூறினார் .... நாங்கள் கக்கா, மூத்தா, ... செய்த கழிவு நீரெல்லாம் ... பிரித்தெடுக்கப்பட்டு ... சுத்திகரிக்கப்பட்டு ... தேம்ஸ் நதியில் விடப்படுகிறதாம்!! மீண்டும் தேம்ஸ் நதியில் இருந்துதான் நாம் குடிப்பதற்குமான நீர் எடுக்கப்படுகிறது ... அதனை மீண்டும் சுத்திகரித்து ... எமது வீட்டு குளாய்களில் ... நாம் பருக!! இது இங்கு மட்டுமல்ல எல்லா மேலைத்தேய நாடுகளிலும்!!

.. மொத்தத்தில் மலசலகூடங்களில் இருந்து எடுத்ததை ............ குடிக்கிறோம்!!!!!

Edited by Nellaiyan

இங்கு பிரித்தானியாவில் இயங்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன், றூட் ரவி, மற்றும் அங்கு மகிந்தவுடன் இருக்கும் இளம்பருதி ஆகியோர் மிக நெருங்கிய உறவினர்களாம்!!! ஒரே குடும்ப திருமனமுறை உறவென்று கூறுகிறார்கள், தெரியவில்லை!!

சுரேன் சுரேந்திரன் மற்றும் றூட் ரவிக்கு தற்போது இளம்பருதியா, ததேயா முக்கியமாக தெரியும் தற்போது??????? பதில் காண்பது கொஞ்சம் சிக்கல்தான் தற்போதைக்கு!!!

கருத்து எழுதுகிறவனும் துரோகியா?துரோகி விரோதி இந்த இரண்டையும் தவிர வேற வார்த்தை தமிழ் அரசியலில் இல்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே இதனை இணைத்ததன் நோக்கமானது, இன்று தமிழ்த் தேசியம் மீதான நெருக்கடியிலும் இன்பங்காணும் ஊடகர்கள் தொடர்பான அறிதலுக்காகவும், என்னைப் போன்ற ஆங்கிலம் தெரியாதவர்களுக்காகவுமேயன்ற

Edited by nochchi

இனி உருப்படும் எண்டு நினைக்கேல்ல!!!!! உரியவர்கள் இல்லாட்டி உப்படித்தான்..........

எப்பவுமே ஒரு நெருக்கடி வரும் போது உள்விவகார குழப்பம் வரும். அதுஇயல்பானது.

சும்மா நாலு பெயர் தெரிந்தவுடன் அதை வைத்து கட்டுரை எழுதவது எல்லா ஊடக விபச்சரிகளுக்கும் ஒரு பொழுது போக்கு.

யெயராஜ ஒரு போது தமிழ்தேசிய ஊடகங்களில் வந்ததில்லை. றோவின் கீழ் செயற்படும் பி.பி.சி தமிழில் தான் புலிகளின் அழிவை சந்தோசமாக வர்ணணை செய்தவர்.

இலண்டினில இருக்கிற ஒருதன் இந்த ஊர்க்காரன் இந்த சா-----க்காரன் எல்லா சொத்தையும் சேர்க்க நிற்கினம் எண்டு கட்டுரை எழுதுகிறான்.

இப்படியே எல்லாரையும் பிரிச்சு தெண்டிச்சு அழிச்சு போடுங்கோ.

நல்லகாலம் ஒரு நாலு பேர் தான் இணையவலை செய்தி நோயாளராக இருப்பது. எல்லாரும் கணணி செய்தி வாசிக்க வெளிக்கிட்டா தமிழன் எப்பவோ போராட்டத்தை அழித்திருப்பான்

யெயராஜ ஒரு போது தமிழ்தேசிய ஊடகங்களில் வந்ததில்லை. றோவின் கீழ் செயற்படும் பி.பி.சி தமிழில் தான் புலிகளின் அழிவை சந்தோசமாக வர்ணணை செய்தவர்.

அப்பு, TVi செய்திக்கண்ணோட்டம் தொடர்ந்து பார்த்தனீர்களோ தெரியாது, யுத்த நிறுத்தம் அறிவித்த உடன் DBS, TVi இல் கொடி கட்டிப் பறந்ததும், அந்நிகழ்ச்சியை TTN தொடர்ந்து ஒலிபரப்பாகியதும் மறந்து விட முடியாது!! .... பின் திடீரென துரோகியாக்கப்பட்டு விட்டார்!!!

எப்பவுமே ஒரு நெருக்கடி வரும் போது உள்விவகார குழப்பம் வரும். அதுஇயல்பானது.

இது நெருக்கடி இல்லை, எம்மக்களை நாமே அழித்து, தற்கொலையும் இறுதியாக எம்தலைவர்கள் செய்து கொண்டார்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்தக்கட்டுரையைப்படித்தபோத

இல்லை நான் அறிந்த வரையில் இந்த இவர் ஒரு போதும் தமிழ் தேசிய ஊடகங்களில் பங்குபற்றியதில்லை. ரி.ரி.ன் ல் வந்ததில்லை

இவர் சிவராமுடன் சிங்கள பத்திரிகைகளில் பத்தி எழுதி வந்தவர். இவரது சுலோகம் எப்பவும் புலி எதிர்ப்புத்தான்.

அறிந்தவரை பி.பி.சி தமிழோசைதான் சந்தர்ப்பம் கொடுத்தது....

அப்படி நாம் அழிக்கவில்லை தற்கொலையும் இல்லை போராட்டம் வல்லரசுகளால் முடக்கப்பட்டு விட்டது., தோல்வி ,பின்னடைவு ஏற்கத்தான் வேண்டும்

எத்தனயோ விடுதலைகள் வழியில் நிற்கின்றன, நாங்கள் மாத்திரம் விதிவிலக்கல்ல.

குர்திஸ்தான் தலைவன் சிறையில் , ஆச்சே பிரதேசம் அப்படியே நிற்கின்றது.

Edited by நேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அழிந்தோம் இன்று தான் தெரிகிறது!!!! கதைத்தவன் துரோகி... எழுதியவன் துரோகி.... பாதிக்கப்பட்டவன் துரோகி....சரி, பிழை சொன்னவன் துரோகி.......எல்லாவற்றுக்கும் மேலாக புலத்தில் எம் மக்களை காக்க வழங்கிய பணத்தில் இராஜபோகம் அனுபவிக்கும் பூசாரிகளுக்கு பிடிக்காதவர்கள்/அவர்களின் வாழ்வுக்கு குடுக்கே நிற்பவர்கள் எல்லோரும் துரோகிகள்!!! தொடருக ததேயின் பன்முகப்பட்ட துரோகிகள் பட்டங்கள்!!!!

வசதி குறைந்தவனின் புரட்சியை வசதிகூடியவன் வீழ்த்த பயன்படுத்தும் ஆயுதங்ககளில் பணமும் ஒன்றுதான்.

சரிபிழை சொல்லவும் ஒரு தகுதி வேண்டும் அது இல்லாமல்ச் சொன்னனல் பணத்திற்கு சோரம் போன நிலை என்று எண்ணுதலில் தவறேதும் இல்லல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DSP இன் எழுத்து எப்போது தம்ழன் நன்மயை நோக்கி இருந்திருக்கின்றது.

காகம் இருக்க பனம் பழம் வீழந்தது என்று எழுதுதல் ஒன்றும் கடினமானதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நெருக்கடி இல்லை, எம்மக்களை நாமே அழித்து, தற்கொலையும் இறுதியாக எம்தலைவர்கள் செய்து கொண்டார்கள்!!!

நாங்கள் சிங்களவனுடன் எவ்வளவு சந்தோசமாகவும் அன்னியோன்னினயமாகவும் இருந்தோம் இந்த வேணாப் போன விடுதலைப் போராட்டத்தை தொடக்கி தமிழன் சொரிலன்காவில் நாசமாப் போனது தான் மிச்சம் ...சிங்களவன் எங்களை எவ்வளவு மரியாதையாக , சந்தோசமாக வைத்திருந்தான் வைத்திருக்கிறான் ....இந்த நாசமாப் போனவங்கள் வந்து எங்கட தலையில மன்ன அள்ளிப் போட்டிடாங்கள் .....

Edited by thivas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினம் உருப்பட சந்தர்ப்பம் இல்லை. டி.பி.எஸ் தொடங்கி யாரும் உருப்பட மாட்டார்கள், டி.பி.எஸ் முன்னாள் உலகத்தமிழர் இயக்க பத்திரிகை ஆசிரியர் என்பது தமிழ் தேசியத்துக்காக ஊடகப்பணியாற்றியவர் என்பது மறுக்க முடியாத உண்மை எனினும், பிற்காலத்தில் சில தனிப்பட்ட காரணங்களுக்காக தமிழீழ விடுதலைப்புலிகளையும், தமிழீழ தேசிய போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் செயற்ப்பட்டதன் காரணமாக மக்கள் மத்தியில் மாற்றுக்கருத்தாளர் என்ற ரீதியில் பார்க்கப்ட்டவர்.

ஆனாலும் அவரின் கருத்துக்கள் முழுமைக்கு உண்மையாக இருக்க சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. பிள்ளையான் குழு, கருணா குழு மற்றும் இலங்கை அரச வட்டாரங்களுடன் இவருக்கு நெருங்கி தொடர்புகள் இருப்பதை அவரே சில சந்தர்பங்களில் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவரால் கனடாவில் செயற்பாட்டாளர்களுடன் ஏற்ப்பட்ட முரண்பாடுகளை விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை மேற்ககொண்டு தீர்த்துக்கொள்ள முடியாமல் புலிகளுக்கு எதிரான தமிழ் தேசியத்துக்கு எதிரான பத்திரிகையை ஆரம்பித்தார். அப்பத்திரிகையை மக்கள் நிராகரித்த போது, அது கனேடிய புலிகள் செய்தது என்றார். இத்தனைக்கு இவர் பற்றிய விபரங்களோ, இவர் பத்திரிகை பற்றிய தகவல்களோ நாட்டுக்கு தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.

இதன் பின்னர் பி.பி.சி போன்ற சர்வதேச ஊடகங்களில் அடிபடத்தொடங்கி... இலங்கையில் சில ஊடகங்களுக்கும் எழுதி வந்தார். நடுநிலமை என்ற பெயரில் அவர் விடுதலைப்போரை சாடத் தயங்கியதில்லை. ஆய்வு என்ற பெயரில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை திணத்தார்.

அதற்காய் அவரின் ஊடக திறமை மீது எனக்கு துளியளவும் சந்தேகமில்லை. சிவராம் போன்ற ஒரு ஆய்வாளர். இன்னும் சொல்லப் போனால் சிவராமுக்கு நிகரான ஒரு ஆய்வாளர். ஆனால் சந்தர்ப சூழல் அவரை விடுதலைப் போராட்டத்துக்கு எதிரியாக்கி விட்டிருந்தது.

இங்கு அவர் பதிந்த கட்டுரை பலர் சொல்வது போல உண்மைகள் இருந்தாலும், அதில் 70 வீதமான ஊடக பாணி கலக்கப்ட்டிருக்கின்றது. விடுதலைப்புலிகளது உள்விகாரங்கள் ஒருகாலத்தில் வெளித்தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது பன்முகப்படுத்தப்பட்ட செற்ப்பாடுகளால் அவை வெளியில் தெரிகின்றது. இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பனிப்போர் சாதாரணமாக விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்டம் நோக்கி உன்னிப்பாக அவதானிக்கும் ஒவ்வொரு குடி மகனுக்கும் தெரியும்.

ஆனால் இங்கு பெயர்களை வெளியிட்டு குழப்பத்தை உருவாக்க முயல்கின்றார் டி.பிஎஸ். அதில் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது யாழை பார்க்கும் போது தெரிகின்றது.

யாருக்காவது தமிழ்த் தேசியத்தின் மீது சீரிய அக்கறை இருந்தால்....

உங்கள் உங்கள் நாடுகளில் யார் மீது என்ன குற்றச்சாட்டு என்று யாழில் ஒரு கோவை தயாரிக்க தயாரா? அதை வெளியிடவேண்டிய தேவை இல்லை. அதை பன்முகப்படுத்தப்பட்டிருக்க

அதன் விளைவாகவே, இற்றைவரை பிரபாகரனுக்கோ, புலிகளின் ஏனைய சிரேஷ்ட தலைவர்களுக்கோ வணக்க மரியாதை செ ய்யும் பகிரங்க நிகழ்வுகள் ஏதும் இடம்பெறவில்லை. மரணித்த மாவீரர்களைப் பூஜித்து, அதி உச்ச கௌவரம் அளிக்கும் விதத்தில் "மாவீரர் தினத்தை" அனுஷ்டிக்கும் ஓர் இயக்கத்தில்தான் இப்படி நடந்துள்ளது.

Edited by Bond007

K.P வெளியால வரும் வரை K.Pயை தலைமையாக கொண்ட தொடக்கம் என்பது இல்லை..

100% நிச்சயம்...

இது ஒரு மாற்றுகருத்துக்கு இடமற்ற கூற்று. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் தமிழர்கள் இறந்துகொண்டு இருக்கும் போது, புலம் பெயர்ந்தவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி சிங்களவர்களுக்காக வக்காலத்து வாங்கிய 'டிபிஎஸ் ஜெயராஜ்' செவ்வி தமிழ் ஓசையில் ஒலிபரப்பானது.

இப்பொழுது, எங்கள் செயல்பாடுகள் வதை முகாம்களில், சிறைகளில் உள்ள மக்களின் குரல்களாக இருக்க வேண்டியது.

மீனவர்களின் மீன்கள் கடலில் சிங்களவர்களால் பறி முதல் செய்யபடுகிறது. தமிழர்களின் மீன்களின் விலை, சிங்கள மொத்த வியாபாரிகளினால் தான் தீர்மானிக்கபடுகிறது.

தமிழர்களை காப்பாற்ற யாருமில்லாததாள், சிங்களவர்களின் கொடுமைகள் அதிகரிக்கின்றது. இதனை திரும்ப திரும்ப நாங்கள் தான் உலகின் எல்லாப்பகுதிகளுக்கும் எடுத்துச்சொல்லி நியாயம் கேட்க வேண்டும்.

ஆதாரங்களுடன் அனுப்பப்படும் மின்னச்சல், கடிதங்கள் வெற்றியளிக்கும் என்று நம்முகிறேன்.

K.P வெளியால வரும் வரை K.Pயை தலைமையாக கொண்ட தொடக்கம் என்பது இல்லை..

100% நிச்சயம்...

இது ஒரு மாற்றுகருத்துக்கு இடமற்ற கூற்று. :lol:

பலமான மனிதர்களை விட பலமான கட்டமைப்புத்தான் இண்றைய தேவை

மீண்டும் ஒழிச்சு பிடிச்சு விளையாட்டு தொடங்கப்போறம் போல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.